கொல்லான் புலால் மறுத்தானைக் கை கூப்பி
எல்லா உயிரும் தொழும்.
உயிர்க் கொலை செய்யாமலும், புலால் உண்ணாமலும் ஒழுக்கம் காப்பவனை எல்லோரும் கை குவித்து வணங்குவர்.இவ்விரண்டு அறங்களும் இருந்தால் அவர்களை தேவர்களும் தொழுவர்.
உலகம் முழுவதற்கும் இக் குறளை நடைமுறைப் படுத்த இயலாது. ஆர்டிக் பிரதேசத்தில் வாழும் எஸ்கிமோக்களுக்கு புலால் உணவைத் தவிர வேறு மார்க்கம் கிடையாது. பிறகு அவர்கள் எவ்வாறு உயிர் வாழ்வது?கடற்கரை ஓரம் வாழும் மீனவர்கள் தங்கள் தொழிலையும் விட வேண்டி வரும். அடுத்து நம் நாட்டில் காய்கறிகளையே உண்டு வாழும் ஒரு குறிப்பிட்டசமூகத்தாரை எந்த உயிரும் கை கூப்பி தொழுததை நாம் பார்க்க முடியவில்லை.
தன் ஊன் பெருக்கற்குத் தான்பிறிதூன் உண்பானை
எங்ஙனம் ஆளும் அருள்.
தனது உடம்பை வளர்ப்பதற்கு பிற உயிர்களை கொன்று சாப்பிடும் இயல்புடையோன் எங்ஙனம் அருளாட்சி செய்ய முடியும்? உடம்பை வளர்க்க புலால் தேவையில்லை. சைவ உணவே சிறந்தது என்பது கருத்து.
சைவம் சாப்பிட்டவர்கள் எல்லாம் அருளாட்சி செய்ததாக நாம் வரலாறுகளில் பார்க்க முடியவில்லை.அறிவியல் முடிவின் படி காயகறிகளுக்கும் உயிர் இருப்பதை நாம் ஒத்துக் கொண்டிருக்கிறோம். பிறகு மனிதன் எதைத்தான் சாப்பிடுவது? மான்,ஆடு,மாடு போன்ற மிருகங்களை புலி, சிங்கம் போன்றவை அடித்து சாப்பிடாமல் விட்டால் அவைகளின் எண்ணிக்கை பல மடங்கு பெருகிகாடுகள் அழியும் அபாயமும் உண்டு. புலால் உணவில் தான் புரோட்டீன் போன்ற சத்துக்கள் உள்ளதாகவும் அறிகிறோம். அனைத்து மனிதர்களும் சைவம் சாப்பிட ஆரம்பித்து விட்டால் காய்கறிகளின் விலை தாறுமாறாக ஏறி விடும் அபாயமும் உண்டு. எனவே இந்தக் குறளும் இந்த அதிகாரத்தில் புலால் உண்ணுதலுக்கு எதிராக வருகிற குறள்களும் உலகத்தார் அனைவருக்கும் நடைமுறைப் படுத்த இயலாதவைகளாகும்.
கல்லாதான் சொல்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதான் பெண்கமுற் றற்று.
படிப்பு சிறிதும் இல்லாத அறிவிலி ஒரு சபையில் பேச விரும்புவது, மார்புகள் இல்லாத ஒரு பெண் காதலை விரும்புவது போன்றதாம். அவள் விருப்பம் நிறைவேறாது.
பெண்களை இதை விட கீழாக இழிவு படுத்த முடியாது. அறிவாளிக்கு உதாரணம் சொல்ல உலகில் எத்தனையோ இருக்க புனிதமான பெண்களின் மார்பு தானா வள்ளுவருக்கு கிடைத்தது?ஹார்மோன்கள் அதிகம் சுரக்காதவர்களுக்கு மார்பு சிறிதாக இருப்பது இயற்கை. இதனால் அந்தப் பெண் இல்லறத்துக்கு தகுதி இல்லாதவள் என்றாகி விடுமா? இந்தக் கருத்தும் என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மண்ணும்
திங்களை பாம்பு கொணடற்று
'நான் என் காதலரை கண்டது ஒரு நாள்தான். அதனால்உண்டான உணர்வோ, நிலாவை பாம்பு கவ்வியது போல் எங்கும் பரவியுள்ளது.
அறிவியல் வளராத காலத்தில் சொல்லப் பட்ட ஒரு கதையை கேட்டு விட்டு உதாரணத்திற்கு சந்திர கிரகணத்தை எடுத்தெழுதியுள்ளார். பாம்பு சந்திரனை விழுங்கியதால்தான் சந்திர கிரகணம் ஏற்படுகிறது என்ற கருத்து தற்போதய அறிவியலோடு மோதக் கூடிய கருத்தாகும்.
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ள தும்மினீர் என்று
'நான் தும்மினேன் வழக்கம் போல் அவள் வாழ்த்தினாள். அங்ஙனம் வாழ்த்தியவளே தன் கருத்தை மாற்றிக் கொண்டு உம் காதலியருள் யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்.
தும்மல் என்பது உடம்பில் ஏற்படும் அலர்ஜியினால் வருவது. யாரோ நம்மை நினைப்பதால் தான் இந்த தும்மல் வருகிறது என்பது மூடப் பழக்கங்களை ஊக்குவிப்பதாகும். பெண்கள் எதற்கெடுத்தாலும் சந்தேகம் கொள்ளக் கூடியவர்கள் என்ற எண்ணத்தையும் இந்த குறள் ஏற்படுத்துகிறது.
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள்.
'இப்பிறப்பில் நாம் ஒரு போதும் பிரிய மாட்டோம் என்று கூறினேனாக. மறு பிறப்பில் பிரிந்து போவேன் என்று சொன்னதாகக் கருதித் தன் கண்கள் நிறையக் கண்ணீரை பெருக்கி விட்டாள்.
புராணங்களில் சொல்லப் பட்ட மறு பிறவி கதைகளை நம்பி இக் குறளில் மறு பிறவி என்று ஒன்று உண்டு என்று வள்ளுவர் சொல்ல வருகிறார். இந்த குறளிலும் எனக்கு உடன் பாடு இல்லை.
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு
ஒருவன் ஒருத்தியை மணந்து இல்லறம் நடத்துவதன் நோக்கமே, வரும் விருந்தினரை வரவேற்று உபசரிப்பதற்க்காகவே ஆகும். விருந்தோம்பல் ஒரு அறமாகவே கருதப்படும்.
விருந்தினரை உபசரிப்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் ஒருவன் மனைவியை அடைவதன் நோக்கமே விருந்தினரை உபசரிப்பதற்காகத்தான் என்ற வாதத்தை எவரும் ஒத்துக் கொள்ளார். இந்த குறளின் கருத்திலும் நான் மாறுபடுகிறேன்.
இது போன்று எழுதுவதால் திருக்குறளை நான் குறைத்து மதிப்பிடுவதாக யாரும் நினைக்க வேண்டாம். இந்திய இலக்கியங்களிலேயே ராமாயணம், பகவத் கீதை, சிலப்பதிகாரம் போன்ற நூல்களையெல்லாம் விட மிக உயர்ந்த தரத்தில் வைக்கப் பட வேண்டியது திருக்குறள் என்பது என் எண்ணம். அதுவும் திருவள்ளுவர் தந்த திருக்குறள் தமிழில் உள்ளதால் தமிழன் என்ற முறையில் பெருமையும் அடைகிறேன்.
'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Showing posts with label தமிழகம். Show all posts
Showing posts with label தமிழகம். Show all posts
Sunday, March 12, 2017
Monday, January 11, 2016
என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது - இடிந்தகரை


என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது...
இடிந்தகரை முதல் மணப்பாடு வரைஎன்னமோ நடக்குது, மர்மமா இருக்குது...
இடிந்தகரை முதல் மணப்பாடு வரையிலான கடற்கரை எங்கும் நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரை ஒதுங்கியிருக்கின்றன, அல்லது இறந்து கிடக்கின்றன. கூடங்குளம் அணுஉலைப் பகுதியில் ஏராளமான காவல் துறையினர், துணை இராணுவத்தினர் குவிக்கப்படுகின்றனர். நேற்று (சனவரி 11) இரவு முழுவதும் கூடங்குளம் பகுதியில் சிறியரக விமானங்கள் பறந்த வண்ணமிருந்தன. அணுஉலையில் சில பரிசோதனைகள் நடப்பதாக நேற்று செய்திகள் வந்தன. அங்கே என்னவோ குழப்பம் நடக்கிறது. ஆனால் அதிகாரவர்க்கம் வழக்கம்போல அமைதிகாக்கிறது, அல்லது மூடிமறைக்க முனைகிறது.
பேய்க்கு வாழ்க்கைப்பட்டோரே, பிணம் தின்ன பழகிக் கொள்ளுங்கள். இதுதான் நமக்கு வாழ்க்கை இனிமேல்!
கூடங்குளம் அணுஉலைத் தலைவர் சுந்தர் அய்யா அவர்களே, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகமே, தமிழ் நாட்டின் மாநில அரசே, இந்திய ஒன்றிய அரசே எப்போது பேசுவீர்கள்? நாங்களும் செத்த பிறகா?
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
இடிந்தகரை
(படங்கள்: செந்தூர்குமார்)
s.p. உதய குமார்.கூடங்குளம்.
Sunday, December 06, 2015
அடாத மழையிலும் விடாது செயல்பட்ட டாஸ்மாக்:

தலைநகரில் பெய்த அதிகனமழையால் இன்றுவரை மக்கள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்த அடாத மழையிலும் விடாது செயல்பட்ட டாஸ்மாக்கால் உதவிக்கரம் நீட்டிய தன்னார்வலர்கள் அடைந்த இன்னல்கள் சொல்லில் அடங்காதது.
ஆம், அவ்வாறு 'குடி' மகன்களால் தொந்தரவுக்குள்ளான பெண்கள் சிலர் தங்களது துயர அனுபவங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். வைரலாக பரவி வரும் இந்த செய்தி டாஸ்மாக்க்குக்கு கடும் கண்டனைத்தை குவித்து வருகிறது.
வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்க மேற்கு மாம்பலம் பகுதிக்குச் சென்ற விஷேஷ் உன்னி கூறும்போது, "நிவாரணப் பொருட்களை வாங்க வந்தவர்களில் பலரும் போதையில் இருந்தது எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது" என்றார்.
இதேபோல், மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் ஒருவர் கூறும்போது, "தி.நகர் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்பதற்காக சென்றிருந்தோம். அப்போது ஒருவர் தண்ணீரில் குதித்து நீந்திச் சென்றார். நடந்து செல்லும் அளவிலேயே தண்ணீர் இருந்தது. ஆனாலும், குடிபோதையில் இருந்ததால் அவர் அவ்வாறு செய்தார். அச்சம்பவம் வேதனையளித்தது. பேரிடர் சூழலிலும் எப்படி போதையில் இருக்கிறார்கள் என்று வருந்தினோம்" என்றார்.
இவ்வாறாக சென்னை முழுவதுமே பல்வேறு பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் இடைவிடாமல் இயங்கிவந்ததாக நகர மக்கள் வருத்தம் தெரிவித்தனர்.
மின் விநியோகம் இல்லாத நிலையிலும்கூட மெழுகுவர்த்தி வைத்துக் கொண்டு டாஸ்மாக் கடைகளில் விற்பனை நடந்துள்ளது.
இது குறித்து சேஞ்ச் இந்தியா தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் நாராயணன் கூறும்போது, "மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் குறைந்தது இரண்டு மாதங்களாவது டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என அரசுக்கு நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம். அவ்வாறாக டாஸ்மாக்கை மூடாமல் எவ்வளவு நிவாரணப் பொருட்கள் வழங்கினாலும் அவற்றால் எப்பயனும் இல்லை" என்றார்.
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
07-12-2015
Sunday, November 29, 2015
'நாங்கள் இஸ்லாம் ஆனவர்கள்'
2000 வது ஆண்டு பிறந்தவுடன் "மில்லியணம் " என்று கொண்டாடினார்கள். நிருபர் ஒருவர் நோபிள் விருது பெற்ற அமார்த்திய சென்னிடம் முதல் ஆயிரமாவது ஆண்டில் நடந்த முக்கியமான நிகழ்வு என்ன ? என்று கேட்டிருக்கிறார்.
"இந்தியாவிற்கு இஸ்லாம் அறிமுகமானது தான் "என்றார் அவர்
அரேபிய மணல் வெளிகளில் அதற்கு முன்பும் மக்கள் வாழ்ந்தார்கள் .அவர்களுக்கு என்று ஒரு சமூக அமைப்பை வைத்திருந்தார்கள். உலக நாடுகள் பலவற்றோடு தொடர்பு கொண்டார்கள். பண்ட ,பண்பாட்டு பரிமாற்றங்கள் நடத்தினார்கள் .தமிழகத்தோடும் தொடர்பு கொண்டிருந்தார்கள்.
தமிழகத்தின் கிழக்கு கடற்கரைகளில் தாங்கள் கொண்டுவந்த பொருட்களை அப்போதைய அரசர்களின் அனுமதியோடு "கிட்டங்கிகளை" அமைத்து வர்த்தகம் புரிந்தார்கள். வர்த்தகர்கள் முறைவைத்து தங்கள் நாடு சென்று வருவார்கள். அவர்களில் சிலர் இங்கேயே தங்கி பண்டங்களை பாதுகாப்பார்கள்.
நுற்றாண்டுகளாக இவை நடை பெற்றன . கிட்டங்கிகள் இருந்த இடங்கள் குடி இருப்புகளாகி அவர்கள் இந்தமண்ணொடு கலந்து வாழ்ந்தார்கள்.ராமநாத புறத்தில் இருக்கும் "கீழக்கறை " உதாரணம்
அப்போது தான் அரேபிய நாட்டில் ஒரு முக்கிய நிகழ்வு நடந்தது. "நபிகள்" நாயகம் அவதரித்து, இனக்குழுக்களிடையே ஒருமையை வளர்க்க புதிய மார்க்கமாக "இஸ்லாம் " (அமைதி )என்ற பாதையை கொடுத்தார்கள். மிகவும் இளமையான இந்த மார்க்கம் தன்னுள் பல முற்போக்கான கொள்கைகளை கொண்டதாக இருந்தது.
அரேபியாவில் எற்பட்ட மாற்றம் அரேபிய வியாபாரிகள் மூலம் இங்கும் பரவியது.
கிட்டங்கிகளீலும் குடி இருப்புகளிலும் வாழ்ந்தவர்களும். தங்களையும் மாற்றிக் கொண்டார்கள்.
"கீழக்கறை" யில் வாழும் முஸ்லீம்கள் இன்றும் தங்களை "இஸ்லாமானவர்கள் " என்றுதான் அழைத்துக் கொள்கிறார்கள் .
அந்த கிழட்டு ஆச்சார்யாவும் , இளைஞர் ராஜ்தாக்கரெயும் இவர்களை பாகிஸ்தானுக்கு போகச் சொல்கிறார்களே ?
நியாயமா ???
-KASHYAPAN
Served as a Sub-Editor with 'Theekkathir' a leading Tamil Daily, and also a monthly called 'Semmalar' for over thirty five years.
"இந்தியாவிற்கு இஸ்லாம் அறிமுகமானது தான் "என்றார் அவர்
அரேபிய மணல் வெளிகளில் அதற்கு முன்பும் மக்கள் வாழ்ந்தார்கள் .அவர்களுக்கு என்று ஒரு சமூக அமைப்பை வைத்திருந்தார்கள். உலக நாடுகள் பலவற்றோடு தொடர்பு கொண்டார்கள். பண்ட ,பண்பாட்டு பரிமாற்றங்கள் நடத்தினார்கள் .தமிழகத்தோடும் தொடர்பு கொண்டிருந்தார்கள்.
தமிழகத்தின் கிழக்கு கடற்கரைகளில் தாங்கள் கொண்டுவந்த பொருட்களை அப்போதைய அரசர்களின் அனுமதியோடு "கிட்டங்கிகளை" அமைத்து வர்த்தகம் புரிந்தார்கள். வர்த்தகர்கள் முறைவைத்து தங்கள் நாடு சென்று வருவார்கள். அவர்களில் சிலர் இங்கேயே தங்கி பண்டங்களை பாதுகாப்பார்கள்.
நுற்றாண்டுகளாக இவை நடை பெற்றன . கிட்டங்கிகள் இருந்த இடங்கள் குடி இருப்புகளாகி அவர்கள் இந்தமண்ணொடு கலந்து வாழ்ந்தார்கள்.ராமநாத புறத்தில் இருக்கும் "கீழக்கறை " உதாரணம்
அப்போது தான் அரேபிய நாட்டில் ஒரு முக்கிய நிகழ்வு நடந்தது. "நபிகள்" நாயகம் அவதரித்து, இனக்குழுக்களிடையே ஒருமையை வளர்க்க புதிய மார்க்கமாக "இஸ்லாம் " (அமைதி )என்ற பாதையை கொடுத்தார்கள். மிகவும் இளமையான இந்த மார்க்கம் தன்னுள் பல முற்போக்கான கொள்கைகளை கொண்டதாக இருந்தது.
அரேபியாவில் எற்பட்ட மாற்றம் அரேபிய வியாபாரிகள் மூலம் இங்கும் பரவியது.
கிட்டங்கிகளீலும் குடி இருப்புகளிலும் வாழ்ந்தவர்களும். தங்களையும் மாற்றிக் கொண்டார்கள்.
"கீழக்கறை" யில் வாழும் முஸ்லீம்கள் இன்றும் தங்களை "இஸ்லாமானவர்கள் " என்றுதான் அழைத்துக் கொள்கிறார்கள் .
அந்த கிழட்டு ஆச்சார்யாவும் , இளைஞர் ராஜ்தாக்கரெயும் இவர்களை பாகிஸ்தானுக்கு போகச் சொல்கிறார்களே ?
நியாயமா ???
-KASHYAPAN
Served as a Sub-Editor with 'Theekkathir' a leading Tamil Daily, and also a monthly called 'Semmalar' for over thirty five years.
Saturday, November 21, 2015
தமிழகத்துக்கு உவைசியின் மனிதாபிமான உதவி!

AIMIM ன் தலைவர் அசாசுத்தீன் உவைசி தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களது பங்காக 9.5 லட்சம் ரூபாயை அர்பணித்துள்ளார்.
வளரட்டும் மனித நேயப் பணி....
Saturday, October 24, 2015
ஆரிய ஆர்.எஸ்.எஸின் சதிகளும் தமிழக சவால்களும்!

மத்தியில் இப்போது பாஜக அரசு ஆட்சி நடத்தினாலும் அவர்களை எல்லா துறைகளிலும் இயக்கும் இயங்குசக்தியாக இருப்பது ஆர்.எஸ்.எஸ்தான் என்பது அரசியல் தெரிந்த சாதரணமானவர்களுக்கும் தெரிந்த செய்தி. ஆனால் இந்த மதவெறிக் கும்பலான ஆர்.எஸ்.எஸ்சின் நோக்கத்தை அறிந்து கொண்டால் தான் அவர்களின் எதிர்கால சதிதிட்டமென்ன என்பன போன்ற பலவற்றைப் புரிந்து கொள்ளமுடியும்.
இந்த மதவெறிக் கும்பல் அடுத்த இலக்காக வைத்திருப்பது அடுத்த வருடத்தில் நடைபெறப்போகும் இரு மாநிலத் தேர்தல்கள் தான். அதில் ஒன்று மேற்கு வங்காளம், மற்றொன்று தமிழகம். இந்த சூழ்நிலையில் இவர்களின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள உதவும் வண்ணம் இந்த சிறியக் கட்டுரையை எழுதுகிறோம். இதுவே முழுமையானது அல்ல.
முதலில் ஆர்.எஸ்.எஸின் நோக்கத்தை தெரிந்து கொண்டால் தான் அதன் இன்றைய செயல்பாடுகளை எளிதில் புரிந்து கொள்ள முடியும். அதாவது இந்தியா இந்துக்களின் நாடு என்றும், இங்கு வாழும் அனைவரும் இந்துக்களே என்றுகூறி மத அடிப்படைவாதத்தையும், சிறுபான்மையினர் மற்றும் தேசிய இனங்களை சேர்ந்தவர்களுக்கு எதிரான முழக்கத்தையும் முன்வைத்து, 1925ல் ஆர்.எஸ்.எஸ் உதயமாகிறது. அன்றிலிருந்து தனது அடிப்படைவாதத்திற்கு வலுவூட்ட பல்வேறு மதக்கலவரங்களையும், கொலைகளையும் செய்து வருகிறது. அதன் உச்சம் தான் கோட்சே என்பவனை வைத்து காந்தியை சுட்டுக் கொன்றது.
இப்படி கொடூரமான செயலை செய்த ஆர்.எஸ்.எஸ் இயக்கமானது இதுவரை நான்கு முறை இந்தியாவில் பயங்கரவாத அமைப்பாக தடை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் இனிமேல் இதுபோல் நடந்து கொள்ள மாட்டோமென்று மன்னிப்பு கேட்டு தடையை நீக்கியிருக்கிறார்கள். இப்படி ஒரு மோசமான இயக்கமான ஆர்.எஸ்.எஸின் பிடியில் தான் இந்தியா சிக்குண்டுள்ளது. இவர்களின் கருத்துகளை வலுவூட்ட கிடைக்கும் சந்தர்ப்பங்களை எல்லாம் பயன்படுத்திக் கொள்ளும். அப்படிப்பட்ட சூழல் தான் இப்போது இருக்கிறது என்பதை உணர்ந்து தான் மோடியை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
மோடி வருகையும் ஆர்.எஸ்.எஸின் திட்டமும்:
கடந்த ஜீலை’2013 அன்று மஹாராட்டிராவிலுள்ள அமராவதி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் ஆரிய இனவெறி கொண்ட ஆர்.எஸ்.எஸ்சின் கூட்டம் நடைபெற்றது. அதில் நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கான தேவை ஏற்பட்டிருக்கிறது. இதுதான் சிறந்த நேரம் ஆர்.எஸ்.எஸின் துணையுடன் பாஜகவை ஆட்சியில் ஏற்றி நமது கொள்கைகளை நாடெங்கும் கொண்டு செல்வோமென்று மேற்கு வங்கம் மற்றும் ஓரிசாவைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் பேசினார்கள்.
அதன் விளைவே இளம் வயதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ்சின் நீண்ட கால உறுப்பினரும், குஜராத்தில் அப்பாவி இஸ்லாமியர்களைப் படுகொலை செய்த மோடியை சீனியரான அத்வானியை ஓரம்கட்டி பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கிறார்கள். பெரிய பெரிய கார்ப்ரேட் முதலாளிகளும் மோடியைக் கொண்டுவர கோடிக்கணக்கான ரூபாய் கொடுக்க, விளம்பரங்கள் மூலமே 26 மே 2014ல் ஆட்சியை பிடிக்கிறது மோடி தலைமையிலான பாஜக அரசு.
பாஜகவில் ஆர்.எஸ்.எஸின் ஆட்கள்:
பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே ஆரிய இனவெறி ஆர்.எஸ்.எஸின் வேலை தொடங்குகிறது. அதாவது மோடியின் அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளில் நீண்ட காலமாக ஆர்.எஸ்.எஸில் இருந்த ஏழு பேருக்கு அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்படுகிறது. அதில் முக்கியமானவர் வெளியுறவுத் துறை அமைச்சர் இராஜ்நாத் சிங். இவர்தான் நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்கு தடை கொண்டுவர வேண்டுமென்று தொடர்ந்து பேசிக்கொண்டு வருகிறார்.
மேலும் அந்த கட்சியில் தலைவராக அமித் ஷாவை கொண்டு வருகிறார்கள். இவர் ஒரு அதிதீவிரமான ஆர்.எஸ்.எஸ்காரர். அதுபோக கட்சியில் தற்போது பொதுச் செயலாராக இருக்கும் ஐந்துபேர்களில் மூன்று பேர் (ராம் மாதவ், ராம் லால் மற்றும் முரளிதரராவ்) ஆர்.எஸ்.எஸினால் நேரடியாக பாஜகவுக்கு அனுப்பப்பட்டவர்கள். மீதமுள்ள இரண்டு பேர் (புபேந்திர யாதவ் மற்றும் சரோஜ் பாண்டே) ஆர்.எஸ்.எஸிடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். இதுபோக இதுவரை இல்லாத நடைமுறையாக அமித் ஷா நான்கு இணைச் செயலாளர்களை நியமிக்கிறார். அவர்கள் நால்வரும் ஆர்.எஸ்.எஸைச் சேர்ந்தவர்கள்.
மேலும் நாட்டின் மிக முக்கிய பொறுப்புகளான பண்பாடு, கலாச்சாரம், கல்வி முதலியனவற்றுக்கும் ஆர்.எஸ்.எஸின் ஆட்களே நியமிக்கப்படுகிறார்கள். உதாரணமாக
1. ஆர்.எஸ்.எஸ் ஊறுப்பினரான கஜேந்திர சவுகான் இந்தியாவின் திரைப்படம் மற்றும் தொலைகாட்சி இயக்குனரகத்தின் தலைவராகிறார்.
2. ஆர்.எஸ்.எஸ் பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியரான பல்தேவ்சர்மா தேசிய புத்தக அறக்கட்டளைக்கு தலைவராகிறார்.
3. ஆர்.எஸ்.எஸ் ஊழியராக இருக்கின்ற இந்தர் மோகன் காபபி என்பவர் பல்கலைக்கழக மானியக்குழுவின் உறுப்பினராகிறார்.
4. இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் குழுவின் தலைவராக ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான ஓய்.சுதர்சன ராவ் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இப்படி நாடு முழுவதையும் தனது கட்டுபாட்டுக்குள் கொண்டுவர ஆர்.எஸ்.எஸ் அதி தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கிறது.
ஆர்.எஸ்.எஸின் தற்போதைய செயல்திட்டங்கள்
ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை இந்தியாவெங்கும் பரப்ப, அதிகாரம் தனது கைகளில் இருக்கும் இந்த நேரம் தான் சரியானது என்று முடிவெடுத்து எந்தெந்த மாநிலங்களெல்லாம் தனக்கு செல்வாக்கு இல்லையோ, அங்கே மத அடிப்படை வாதத்தையும் போலி மோதல்களையும் உருவாக்கி அதன்மூலம் தனது செல்வாக்கை நிலைநிறுத்த தற்போது தீவிரமாக முயற்சி செய்கிறது. இதை தற்போது நடந்து கொண்டிருக்கும் பீகார் தேர்தலைப் பார்த்தாலே நமக்குப் புரியும்.
2014ல் உத்ரபிரதேசத்தில் அமித் ஷாவை தலைவராகக்கொண்டு ஆர்.எஸ்.எஸின் காவி தொண்டர்களும், பாஜகயினரும் சேர்ந்து தேர்தலை சந்தித்தனர். இதில் இதுவரை இல்லாத அளவுக்கு பாஜக 71 இடங்களை கைப்பற்றியது. அதேபோல அடுத்தடுத்து நடக்கும் எல்லா மாநிலத் தேர்தலைகளையும் குறி வைத்திருக்கிறது. அதில் தற்போது முதலில் இருப்பது பீகார், அடுத்து மேற்கு வங்காளம் மற்றும் தமிழகம் தான்.
உத்திரப்பிரதேசத்தில் ஒவ்வொரு ஆர்.எஸ்.எஸ் தொண்டனும் 100 பேரையாவது பாஜகவுக்கு வாக்களிக்க வைக்க வேண்டுமென்றும், மேலும் அந்த 100 பேருக்கும் தான் ஒரு இந்து என்றும், சிறுபான்மையினர் நமக்கு எதிரிகள் என்றும் நம்ப வைக்க வேண்டும் என்பது தான் அயோக்கியன் அமித் ஷாவின் தேர்தல் வியூகம். அதன்படியேதான் தற்போது மேற்கு வங்காளத்திலும் தமிழகத்திலும் தனது வேலையை ஆர்.எஸ்.எஸ் செய்கிறது.
ஆர்.எஸ்.எஸின் செயல்திட்டமும் மேற்குவங்கம் மற்றும் தமிழகம் ஓப்பீடும்
மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு இரண்டும் மத அடிப்படை வாதத்தை மிகத் தீவிரமாக எதிர்க்கும் மாநிலங்கள். அதிலும் குறிப்பாக தமிழகம் இவர்களின் புரட்டுக்களை இராண்டாயிரம் ஆண்டுகளாக எதிர்த்து வந்தவர்கள். மேற்கு வங்காளம் கம்யூனிச சித்தாந்தத்தையும், தமிழகம் பகுத்தறிவு சித்தாந்தத்தையும் கொண்ட மாநிலங்கள்.
இந்தச் சூழலில் மேற்கு வங்காளத் தேர்தல் குறித்து விவாதிக்க ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டங்கள் இந்த வருடத்தில் மட்டும் 5 முறை நடந்துள்ளது. கடந்த முறை 2011ல் நடந்த தேர்தல்களில் மொத்தமிருக்கிற 290 இடங்களில் ஒரு இடம் கூட பாஜக வெல்லவில்லை என்பதை மாற்ற வேண்டுமென்று மோடி விரும்புகிறார் என்று அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமித் ஷா பேசியிருக்கிறார். மேலும் இங்கு யார் தலைவராக வேண்டுமென்று ஆர்.எஸ்.எஸ்சே முடிவு எடுத்துக் கொள்ளலாமென்றும் ஓப்புதல் அளித்திருக்கிறார் அமித் ஷா. மேலும் மேற்கு வங்காளத்தில் ஆர்.எஸ்.எஸ் காலூன்றுவதன் மூலம் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியை முழுவதையும் மற்றும் சீனா எல்லையோரத்தையும் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று ஆர்.எஸ்.எஸ் பேசியிருக்கிறது. இதனை பாஜகவின் மூத்த தலைவரான சித்தார்த் நாத் சிங் தனது பேட்டி ஒன்றில் அறிவித்தார்.
இதனையடுத்து மேற்குவங்காளத்தில் கடந்த ஏப்ரலில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக போட்டியிட்டது,. முதன்முறையாக அந்தத் தேர்தலில் அனைத்து உள்ளாட்சி பொறுப்புகளுக்கும் ஆளை நிறுத்தி தனது இருப்பை தக்கவைத்துக் கொண்டது. அந்த தேர்தலில் குறைந்தளவு வெற்றியை பெற்ற போதிலும் அதாவது மொத்தமிருந்த 1943 இடங்களில் வெறும் 16லிருந்து 74 இடங்களையே பெற்றிருந்தது. இருந்தாலும் எங்களுக்கும் மேற்கு வங்காளத்தில் அனைத்து இடங்களிலும் வேட்பாளர்களை நிற்கவைக்க ஆட்கள் இருக்கிறார்கள்; நாங்களும் கம்யூனிஸ்ட்கள் மற்றும் மம்தா பேனர்ஜியின் கட்சிக்கு இணையாக இங்கு இருக்கிறோமென்று மக்கள் மனதில் நிலைநிறுத்தியது. அடுத்ததாக அது கையில் எடுத்தது மதச்சண்டைகள்.
மேற்கு வங்கத்தைப் பொருத்தவரை 1971ல் வங்கதேசம் தனிநாடாகப் பிரிந்த போது உருவான இந்து முஸ்லீம் பிரச்சனைகளை தவிர, அங்கு அதன் பிறகு பெரிதாக மதச்சண்டைகள் உருவாகவில்லை. ஆனால் இன்று தொடர்ச்சியாக அங்கு மதச்சண்டைகளை உருவாக்கும் விதமாக தொடர்ந்து பேசி சிறுபான்மையினருக்கு எதிரான அணி திரட்டலை செய்து வருகிறது ஆர்.எஸ்.எஸ்.
இதுதான் தமிழகத்திலும் நடந்தது/நடக்கிறது. சற்று யோசித்துப் பார்த்தால் கடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டது அது பெற்ற இடங்கள் கார்ப்ரேசன் கவுன்சிலர் 4, முனிசிபால்டி சேர்மன் 2, முனிசிபால்டி கவுன்சிலர் 37, பாஞ்சாயத்து தலைவர் 13 மற்றும் வார்டு மெம்பர் 181 பேர் என மொத்தம் 237 இடங்களை கைப்பற்றி, திமுக, அதிமுகவுக்கு அடுத்து மூன்றாவது பெரிய கட்சியாக தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டது. அதன் மூலம் ஒரு பெரிய கூட்டணியை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்படுத்தி பாஜக என்ற கட்சியை மாற்று கட்சியாக முன்னிலைப்படுத்தியது.
மேலும் தனக்கு வேண்டிய உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு சிறந்த நிர்வாகத்திற்கான மத்திய அரசின் விருதுக்கு பரிந்துரைத்து, அதன் மூலம் கிராமம் தோறும் தமிழகத்தில் காலூன்றுகிற ஒரு முயற்சியையும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக செய்கிறது.
இது ஒருபுறமென்றால் மறுபுறம் முன்னைவிட வீரியமாக அவ்வப்போது மாட்டிறைச்சிக்கு தடை, இடஓதுக்கீடுக்கு எதிரான முழக்கங்கள், பகவத் கீதையை புனித நூலாக அறிவிக்க வேண்டுமென்று புதுப்புது சர்சைகளைக் கிளப்பி அதன் மூலம் மக்கள் மனநிலையையும் முற்போக்கு இயக்கங்களின் மனநிலையையும் எடை போடுகிறது. மேலும் தனக்கு சாதகமான ஆட்களை காட்சி ஊடகங்களில் வைத்துக் கொண்டு ஆர்.எஸ்.எஸின் கருத்துகளை மக்கள் கருத்தாக மாற்றும் வேலையும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதையும் சிலர் ‘நாமெல்லாம் இந்துக்கள் தானே, ஆர்.எஸ்.எஸ் வளர்ந்தால் நல்லது தானே’ என்று நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் வேறுயில்லை. ஏனென்றால் ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படும்போது பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி சொன்னது ’சிங்களவர்களுக்கும் எங்களுக்கும் ஆரிய உறவு’ என்று. அப்படியானல் தமிழர்கள் யார்? அவர்களுக்குத் தெளிவாக தெரிந்திருக்கிறது தமிழர்கள் வேறு; இந்துக்கள் வேறு என்று. ஆனால் இங்கு தான் சிலர் ‘என் பெயர் கோபலாகிருஷ்ணன்’ என்று 16வயதினிலே சப்பாணி மாதிரி சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவன் தமிழர்களை எதிரியாகவே பார்க்கிறான்/பார்ப்பான்.
ஒருவேளை இந்தியாவெங்கும் ஆர்.எஸ்.எஸ் காலூன்றுகிறதென்றால் அது ஒடுக்கப்பட்ட மக்கள் தேசிய இனமக்கள் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு எதிராகவே இருக்கும். இதை ஆர்.எஸ்.எஸ் தலைவர் பாயாஜி ஜோசி சமீபத்தில் தனது பேட்டியில் சொல்லியிருக்கிறார். அதாவது “இந்துஸ்தான் என்பது இந்துக்கள் வாழும் இடம். எனவே இங்கு வாழும் அனைவருமே இயற்கையாகவே இந்துக்கள் தான். இதனை மறுப்பவர்கள் இங்கு இருக்கத் தேவையில்லை” என்ற பகிரங்க மிரட்டலை விடுத்திருக்கிறார்.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு என்று வெளியுலகை நம்ப வைத்துக்கொண்டு அதற்கு வேட்டுவைக்கும் அனைத்து வேலைகளையும் செய்யும் இந்த ஆரிய இனவெறி ஆர்.எஸ்.எஸ் கும்பலையும் அதன் அரசியல் வடிவமான பாஜகவையும் மக்கள் புரிந்துகொண்டு புறக்கணிக்க வேண்டும். இதனை தமிழர்களாகிய நாம் தொடங்கி வைப்போம்.
- சு.கி.கொண்டல், மே 17 இயக்கம்
எழுத்தாளர்: சு.கி.கொண்டல்
தாய்ப் பிரிவு: சமூகம் - இலக்கியம்
பிரிவு: கட்டுரைகள்
வெளியிடப்பட்டது: 19 அக்டோபர் 2015
Friday, October 09, 2015
கோகுல்ராஜ் கொலையில் ஜாமீனில் வந்துள்ளவர்களுக்கு கோவிலில் மரியாதை!


தலித் இனத்தை சேர்ந்த கோகுல்ராஜ் ஒரு கவுணடர் சாதி பெண்ணை காதலித்ததற்காக வெட்டிக் கொல்லப்பட்டு ரயில்வே தண்டவாளத்தில் வீசப்பட்டதை நாம் மறந்திருக்க முடியாது.
இந்த கொலையில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு சில இளைஞர்கள் தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ளனர். அந்த வீர இளைஞர்களுக்கு மாலை மரியாதை எல்லாம் கோவிலில் வைத்து செய்யப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இன்னும் இவர்களுக்கு ஊர் மத்தியில் சிலை வைக்காததுதான் பாக்கி. :-)
'இப்பல்லாம் யார் சார் சாதி பாக்குறா?' என்று அப்பாவித்தனமாகவும் மேலும் விஷமத்தனமாகவும் கேட்டு முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க நினைக்கும் ராம் நிவாஸ், அன்புராஜ் போன்ற இந்துத்வாவாதிகளுக்கு இந்த பதிவு சமர்பணம்.
Friday, September 25, 2015
மேலப் பாயைத்தில் நடந்த பெருநாள் தொழுகை!



கடந்த 30 வருடங்களில் தமிழகத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத மன மாற்றம். ஏகத்துவ வாதிகள் 30 வருடங்களுக்கு முன்பு ஊருக்கு 2 பேர் மூன்று பேர் இருந்தனர். தர்ஹா வணங்கிகளால் மிரட்டப்பட்டு ஊர் விலக்கமும் செய்யப்பட்டனர். ஆனால் இன்று தமிழகத்திலேயே அதிக அளவில் மக்கள் பெருநாள் தொழுகைக்கு குழுமும் இடமாக மேலப் பாளையம் மாறிப் போயுள்ளது. தமிழகத்தின் ஒவ்வொரு ஊர்களிலும் ஏகத்துவ வாதிகளின் திடல் தொழுகையை நோக்கி மக்கள் வந்த வண்ணம் உள்'ளனர்.
மக்கள் ஆதரவு அதிகமானால் வழக்கமாக வரும் பெருமையும் கர்வமும் ஏகத்துவ வாதிகளை அண்டாது எந்ந நிலையிலும் இறைவனை போற்றி புகழக் கூடியவர்களாக ஏகத்துவ வாதிகளை இறைவன் மாற்றுவானாக!
எல்லா புகழும் இறைவனுக்கே!
Tuesday, September 08, 2015
தஞ்சை பாபநாசத்தில் புதிய பள்ளி வாசல் திறப்பு!



இறைவனை மட்டுமே வணங்கி வழிபடக் கூடிய தவ்ஹீத் மர்கஸ் இன்ஷா அல்லாஹ் 19-09-2015 அன்று பாபநாசத்தில் திறக்கப்பட உள்ளது. இந்த பள்ளி உருவாவதற்கு அல்லும் பகலும் உழைத்த நல்லுள்ளங்களின் உழைப்பை இறைவன் ஏற்றுக் கொண்டு தக்க கூலியை வழங்குவானாக!
இந்த பள்ளியில் மவ்லூது ஓதப்படாது: தட்டு தாயத்துகள் மந்திரித்து கொடுக்கப்பட மாட்டாது: நாகூர் ஆண்டவர், முஹைதின் ஆண்டவர்களுக்கெல்லாம் இங்கு ஃபாத்திஹா ஓதப்பட மாட்டாது. வரதட்சணை வாங்கும் திருமணங்கள் இந்த பள்ளியில் நடத்தப்பட மாட்டாது: மொத்தத்தில் அன்று நபிகள் நாயகம் காலத்தில் இறை இல்லங்கள் எவ்வாறு செயல்பட்டதோ அதே போன்று இந்த பள்ளியும் இன்ஷா அல்லாஹ் இயங்கும்.
Sunday, September 06, 2015
கிருஷ்ண ஜெயந்தி விழாவில் நடந்த கொடூரக் கொலை!


வேலூர்: வேலூரில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் அதிமுக பிரமுகரைத் தாக்கிய ரவுடி அடித்துக் கொலை செய்யப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. அங்கு பாதுகாப்பிற்காக சுமார் 400 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வேலூர் அதிமுக பிரமுகரும், மாநகராட்சி முன்னாள் கவுன்சிலருமான ஜி.ஜி.ரவியின் தம்பி ஜி.ஜி.ரமேஷ். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி கொல்லப்பட்டார். இக்கொலை தொடர்பாக, வேலூர் சத்துவாச்சேரியை சேர்ந்த பிரபல ரவுடி மகா என்ற மகாலிங்கம் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட ரவுடி மகா மீது பல்வேறு கொலை மற்றும் வழிப்பறி வழக்குகளும் இருந்ததால், வேலூர் மற்றும் கடலூர் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த மகா தலைமறைவானார். மேலும் ஜி.ஜி.ரமேஷ் கொலையால் மகாவுக்கும், ஜி.ஜி.ரமேஷுக்குமான பகை மேலும் அதிகரித்தது, ரமேஷைப் போலவே ரவியையும் கொலை செய்ய மகா திட்டமிட்டு வந்தார். இந்நிலையில், வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் நேற்றிரவு கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் ஜி.ஜி.ரவி கலந்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த மகா, இந்த விழாவில் ரவியைக் கொல்ல திட்டமிட்டார்.
இதையடுத்து தனது கூட்டாளி குப்பன் மற்றும் மேலும் 2 பேருடன் காவி உடையில் விழா நடைபெற்ற இடத்திற்கு சென்றுள்ளார் மகா. அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை ஆடைகளுக்குள் மறைத்து வைத்து பக்தர்கள் போல கூட்டத்திற்குள் நின்றபடியே ரவியைக் கண்காணித்துள்ளனர். கிருஷ்ண ஜெயந்தி விழா முடிந்து தோட்டப்பாளையத்தில் உள்ள தாரகேஸ்வரர் கோவிலுக்கு ஜி.ஜி.ரவி மற்றும் அவரது ஆட்கள் இரவு 8.40 மணியளவில் வந்தனர். அவரை பின்தொடர்ந்து வந்த மகா, தாரகேஸ்வரர் கோவில் தெருவில் ஜி.ஜி.ரவி தனியாக நடந்து சென்ற போது அவரை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் கழுத்து, முகத்தில் ரவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜி.ஜி.ரவியின் ஆட்கள் சுமார் 30 பேர் மகாவை துரத்திக் கொண்டு ஓடினர். காட்பாடி சாலையில் பேருந்து ஒன்று குறுக்கே வந்ததால், ரவியின் ஆட்களிடம் சிக்கினார் மகா.
மகாவை சுற்றி வளைத்த கும்பல் கம்பு, இரும்பு கம்பியால் மகாவின் கை, கால்களில் அடித்துள்ளனர். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த மகாவின் தலையில் பெரிய கல்லை தூக்கி போட்டுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ரவுடி மகா துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் அக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. தகவல் அறிந்து விரைந்து வந்த வேலூர் சரக டி.ஐ.ஜி. தமிழ்ச்சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு செந்தில் குமாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்கள். மகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே காயம் அடைந்த ஜி.ஜி.ரவி சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். இந்த சம்பவங்களால் வேலூரில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. காட்பாடி சாலை, காந்திரோடு, மெயின் பஜார், ஆற்காடு சாலை, தனியார் மருத்துவமனை, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. அந்த பகுதியில் 400-க்கும் மேற்பட்ட அதிரடி படை போலீசார் குவிக்கப்பட்டனர். அதிமுக பிரமுகரின் ஆட்களால் ரவுடி கொடூரமாக நடு ரோட்டில் வைத்துக் கொலை செய்யப்பட்டது வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரவியின் மகன்கள், தம்பி கைது: இந்தக் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார், ஜி.ஜி.ரவியின் மகன்கள் தமிழ்மணி,கோகுல், ரவியின் தம்பி செல்வம், அவரது மகன்கள் ரஞ்சித், கார்த்தி, சஞ்சீவ் மற்றும் உறவினர் சிலம்பரசன் ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.
தகவல் உதவி
tamil.oneindia
06-09-2015
படங்கள்: வாட்ஸ்ஆப்
Saturday, August 29, 2015
ராமகோபாலனுக்கு வந்த மிரட்டல் கடிதம்!

இராம கோபாலனுக்கு வந்த மிரட்டல் கடிதம் இது தான். இதில் என்ன ஒரு விஷேசம் என்றால் இந்த கடிதத்தை எழுதி அதன் மூலம் பதட்டத்தை உருவாக்க நினைத்த ராம கோபாலனுக்கு நினைத்த காரியம் கை கூடவில்லை.
10 வயது இஸ்லாமிய சிறுவனை கூப்பிட்டு 'அல்லாஹ்வுக்கு குழந்தைகள் இருக்கா?' என்று கேட்டால் 'இல்லை... தவறான தகவல்' என்று அழகாக சொல்லி விடுவான். ஆனால் ராம கோபாலன் ஏற்பாடு செய்த நபருக்கு இந்த உண்மை தெரியாமல் 'இப்படிக்கு அல்லாவின் பிள்ளைகள்' என்று போட்டு வசமாக மாட்டிக் கொண்டுள்ளார். மேலும் கடிதம் தொடங்கும் போது 786 என்று போடும் பழக்கம் பெரும்பாலான இஸ்லாமியர்களிடம் 20, 25 வருடங்களுக்கு முன்பு இருந்தது. ஏகத்துவ சிந்தனை அதிகம் வந்தவுடன் 786 என்று போடும் வழக்கத்தையும் விட்டு விட்டனர். அடுத்து இஸ்லாமியர்கள் இறைவனை 'அல்லாஹ்' என்றுதான் அழைப்பார்கள். ஆனால் இங்கு இரண்டு இடத்திலும் 'அல்லா' என்று மொட்டையாக வருகிறது. இதை எல்லாம் விளங்கிக் கொள்ளாமல் அரை குறையை விட்டு எழுத வைத்து ராம கோபாலன் காமெடி பண்ணிக் கொண்டிருக்கிறார்.
தமிழகத்தில் எந்த வகையிலாவது அண்ணன் தம்பிகளாக பழகி வரும் இந்து மற்றும் இஸ்லாமியர்களை பிரிக்க பல திட்டங்களை தீட்டுகிறார். எல்லாமே மண்ணைக் கவ்வுகிறது. இந்து மதத்தின் மேல் உண்மையிலேயே பற்றும் பாசமும் இருந்தால் விழுப்புரத்திற்கு சென்று வன்னியர்களையும் தலித்களையும் சேர்த்து வைக்க பாடுபட்டிருக்க வேண்டும். அந்த இடத்தை எட்டியாவது பார்த்தாரா?
இஸ்லாமியர்களை இந்துக்களாக மதம் மாற்றவும் பல திட்டங்களை தீட்டுகிறார். அவ்வாறு மதம் மாறினால் அவர்களை பார்பன சாதியில் சேர்த்துக் கொள்ள இராம கோபாலன் தயாரா? சங்கராச்சாரிகள் அனுமதிதான் கொடுப்பார்களா? மனுநீதிதான் அதற்கு அனுமதி கொடுக்குமா? பார்பன மேலாதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ள இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறீர்கள்? இது கணிணி யுகம். நீங்கள் எந்த சதித் திட்டம் திட்டினாலும் அடுத்த நிமிடமே இணையம் மூலம் முழு உலகுக்கும் தெரிய ஆரம்பித்து விடும்.
எனவே இனியாவது இஸ்லாத்தை அழிக்க நினைக்காமல் இந்து மதத்தில் புரையோடிப் போயுள்ள சாதி வேற்றுமைகளை களைய பாடுபடுங்கள். உங்கள் வயதுக்கேற்ற வேலைகளில் ஈடுபடுங்கள் என்றும் அன்பாக சொல்லி வைக்கிறோம்.
Tuesday, June 30, 2015
ஆம்பூர் கலவரத்தின் உண்மையான பிண்ணனி என்ன?

உளவுத்துறையின் அலட்சியமும் போலீஸாரின் மெத்தனப் போக்கும் ஆம்பூர் கலவரத்துக்கு காரணமாகிவிட்டது என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றம்சாட்டுகின்றனர். பிரச்சினைக்கு முக்கிய காரணமான இளம் பெண்ணை கண்டுபிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது.
ஆம்பூர் புதுமனை பகுதியைச் சேர்ந்தவர் ஷமீல் அஹ்மது (26). பள்ளிகொண்டா போலீஸார் தாக்கியதாகக் கூறி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 26-ம் தேதி ஷமீல் அஹ்மது உயிரிழந்தார். இதற்கு, காரணமான ஆய்வாளர் மார்டீன் பிரேம்ராஜை கைது செய்ய வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் கடந்த சனிக்கிழமை இரவு ஆம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் அடித்து நெறுக்கப்பட்டன, தனியார் மருத் துவமனைகள், கடைகள் சேதப் படுத்தப்பட்டன. வாகனங்களுக்கு தீ வைப்பு, போலீஸார் மீது கல்வீச்சு என ஆம்பூர் நகரம் திடீரென கலவர பகுதியாக மாறியது. போலீஸார் தடியடி நடத்தி நிலைமையைக் கட்டுப்படுத்தினர். இதன் காரணமாக சுமார் 5 மணி நேரம் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. கலவர சம்பவம் தொடர்பாக 6 தனித் தனி வழக்குகளில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப் பட்டனர்.
இளம்பெண்ணின் நிலை என்ன?
பிரச்சினைக்கு காரணமாக கூறப்படும் மாயமான இளம் பெண்ணின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை. அது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பவித்ரா (26). இவரது கணவர் பழனி. 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. ஆம்பூர் தோல் தொழிற்சாலையில் வேலை செய்தார். அப்போது, ஷமீலுடன் பவித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சில மாதத்துக்கு முன்பு வேலையில் இருந்து ஷமீல் நின்றுவிட்டார். திருமணமான அவர், தனது குடும்பத்தை ஆம்பூரில் விட்டுவிட்டு ஈரோட்டுக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.
கடந்த மே மாதம் 24-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய பவித்ரா, ஈரோட்டில் உள்ள ஷமீலி டம் சென்றுவிட்டார். மறுநாள் (25-ம் தேதி) பவித்ராவை காணவில்லை என்று பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் பழனி புகார் கொடுத்தார்.
ஜூன் மாதம் 2-வது வாரத்தில் பழனியின் செல்போனில் தொடர்புகொண்ட ஷமீல், பவித்ராவை பேருந்தில் ஊருக்கு அனுப்பிவைக்கிறேன். அவரிடம் எதுவும் கேட்க வேண்டாம் என கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டார். அதன் பிறகு அவரது எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. பவித்ரா வும் வீடு வந்து சேரவில்லை. இந்த தகவலின் அடிப்படையில் தான் ஷமீலை விசாரணைக் காக போலீஸார் அழைத்தனர். விசாரணையின் போது, பவித்ரா குறித்த தகவலை தெரிவிக்க ஷமீல் மறுத்துவிட்டார்’’ என்றனர்.
காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமாரி கூறும்போது, ‘‘பவித்ரா மாயமான வழக்கு குறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்படும்’’ என்றார்.
தடையை மீறி போராட்டம்
இந்நிலையில் இந்திய தேசிய லீக் கட்சியின் நிறுவன தலைவர் தடா ரஹீம் மற்றும் நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், ஆம்பூர் கலவரத்தில் தொடர்புடைய உமராபாத்தைச் சேர்ந்த மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 7 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்ட மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.
உளவுத்துறை செயலிழப்பு?
உளவுத்துறை விழிப்புடன் இருந்திருந்தால் ஆம்பூரில் கலவரம் நடைபெறாமல் தடுத்திருக்கலாம் என பொதுமக்கள் தெரிவிக்கின் றனர். சென்னை அரசு பொது மருத்துவமனையில் ஷமீல் அஹ்மது உயிரிழந்தவுடன், ஆம்பூரில் குறிப்பிட்ட சில அமைப்பினர் ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர். அவற்றை உளவுத்துறை கண்காணிக்காமல் விட்டுவிட்டதாக புகார் எழுந்துள் ளது. ஆம்பூர் டவுன் காவல் நிலையத்தை முற்றுகையிடப் போவதாக தகவல் கசிந்தும், அதை தடுக்க உளவுத் துறை யினர் தவறிவிட்டனர் எனக் கூறப் படுகிறது. வன்முறை சம்பவம் நடந்து முடிந்த பின்னரே ஆம்பூரில் தடைச்சட்டம் போடப்பட்டது. இதை முன்கூட்டியே செய்திருந்தால், பெரிய இழப்பு ஏற்பட்டிருக்காது.
ஆம்பூர் வன்முறைக்கு உளவுத் துறை செயலிழந்து போனதும், போலீஸாரின் மெத்தனப் போக் குமே காரணம் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆம்பூரில் தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது. இருப்பி னும் வடக்கு மண்டல ஐஜி மஞ்சுநாதா தலைமையில், 4 மாவட்ட போலீஸார் ஆம்பூரில் முகாமிட்டுள்ளனர்.
கைதிகளுக்கு பிரியாணி
ஆம்பூர் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் 30 பேர், வேலூர் பாஸ்டல் சிறையில் 7 பேர், கடலூர் மத்திய சிறையில் 32 பேர், சேலம் மத்திய சிறையில் 26 பேர் என மொத்தம் 95 பேர் நேற்று அதிகாலை அடைக்கப்பட்டனர்.
வழக்கமாக சிறையில் கைதிகளை அடைக்கும் முன்பாக அவர்களுக்கு போலீஸார் உணவு வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பது விதிமுறை. அதன்படி, வேலூரில் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட 37 பேருக்கும் உணவு வழங்க போலீஸார் தயாராகினர். அப்போது, கைது செய்யப்பட்டவர்கள் ரம்ஜான் நோன்பில் இருப்பதால், தாங்கள் ஏற்பாடு செய்யும் பிரியாணியை சாப்பிட அனுமதிக்க வேண்டும் என போலீஸாரிடம் கோரிக்கை வைத்தனர். இதனை போலீஸார் ஏற்றனர்.
அதேநேரம், முக்கிய விசேஷ நாட்கள் தவிர மற்ற நாட்களில் சிறைக்குள் பிரியாணி சாப்பிட அனுமதி இல்லை. எனவே, வேலூரைச் சேர்ந்த சிலர் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்த பிரியாணி 37 பேருக்கும் சிறை வாசல் வளாகத்தில் பரிமாறப்பட்டது. பிரியாணி சாப்பிட்ட பின்னர் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்
தகவல் உதவி
தமிழ்இந்து நாளிதழ்
30-06-2015
ஷமில் அஹமதின் மரணம் ஒரு பெண்ணால் நிகழ்ந்துள்ளது தெரிய வருகிறது. அவரை இதற்காக கைது செய்து பின்பு விசாரணையில் அடித்து உதைத்து மரணம் வரை காவல் துறை இட்டுச் சென்றது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சம்பந்தப்பட்ட காவல் துறையை சேர்ந்தவர் கண்டிப்பாக கைது செய்து தண்டனை தரப்பட வேண்டியவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால் இந்த மரணத்தைக் காரணமாக்கி பொதுச் சொத்துக்களை அழித்தொழிப்பது எந்த வகை நியாயமோ தெரியவில்லை. தனிப்பட்ட ஷமீல் அஹமத் மாற்று மதத்தைச் சார்ந்த அதுவும் திருமணமாகி குழந்தை உள்ள ஒரு பெண்ணை காதலித்து அவரை தான் இருக்கும் ஊருக்கு வர வழைத்தது தவறில்லையா? இது பின்னால் பிரச்னையாகும் என்பது அவருக்கு தெரியாதா? இவருக்காக இஸ்லாமிய சமூகத்தை சார்ந்தவர்கள் நூற்றுக்கணக்கான பேர் சிறைவாசம் அனுபவிப்பது சரிதானா என்பதை யோசிக்க வேண்டும்.
இந்துத்வா வாதிகளின் திட்டமிட்ட கொலை: அல்லது வெலை வாய்ப்பு, இட ஒதுக்கீடு போன்ற வாழ்வாதார பிரச்னைகளில் இஸ்லாமியர்கள் ஒன்றுபட்டு வென்றெடுக்க வெண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதே நேரம் பெண் பிரச்னை, திருட்டு, கொலை போன்ற தவறுகளில் ஈடுபடுவோரை சாதி மதம் பாராது கண்டிக்கும் மனோபாவம் நம் அனைவருக்கும் வந்தாலே நமது சமூகத்தில் குற்றங்கள் பெரும்பாலும் குறைய ஆரம்பித்து விடும்.
Thursday, June 18, 2015
வாஞ்சி நாதன் ஐயருக்கு இன்று பிறந்த தினமாம்!

ஆஷ்துரை Vs வாஞ்சிநாதன்....
ஆஷ்துரை திருநெல்வேலி ஆட்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் அனைத்து சாதியினரையும் சமமாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்....!
அவரது அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் சாதிபாகுபாடு இல்லாமல் ஒரே இடத்தில் மதிய உணவு உண்ணவேண்டும் என்றும் ஒரே குடத்தில் தண்ணீர் அருந்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்..!
அவர் செய்த மகத்தான சாதனை , குற்றால அருவியில் தெய்வங்களும் , தெய்வத்திற்க்கு அடுத்தபடியான பிராமணர்களுமே குளிக்க முடியும், ஏனைய சாதியைச் சார்ந்த யாரும் குளிக்க கூடாது என்றிருந்த மரபை உடைத்து அனைவரும் குளிக்கலாம் என்று உத்தரவிட்டவர் ஆஷ்...!
இதுபோன்ற சமூக சீர்திருத்தங்களை உத்தரவிட்டது மட்டுமில்லாது தானே முன்னின்று நட்த்தவும் செய்தார்...!
அவரின் இந்த செயல்களால் ஆத்திரமடைந்த வாஞ்சிநாதன் “பாரத மாதா சங்கம் “ என்ற பெயரில் பிராமண இளைஞர்களையும்...! வெள்ளாளர் இளைஞர்களையும் ( அக்காலத்தில் பிராமணர்களுக்கு தாங்கள் தான் இணையானவர்கள் என்று காட்டிக்கொள்ள அவர்களைப்போலவே நடந்துக்கொண்ட இனம்!) சேர்த்துக்கொண்டு ஆஷ் செய்த சீர்திருத்தங்களை எதிர்க்க ஆரம்பித்தனர்..!
ஆஷ் தொடர்ந்து சாதியிலான வேறுபாட்டை எதிர்த்து வந்தார்..!
பிரசவ வேதனையால் துடித்துக் கொண்டிருந்த அருந்த்தி சமுதாயத்தைச் சேர்ந்த பெண், பிராமணர்கள் வசிக்கும் தெரு வழியாக மருத்துவமனைக்கு போக வேண்டியதிருந்தது. அவர்களை பிராமணர்கள் உள்ளே விட மறுத்தனர்...?
அப்போது அவ்வழியாக வண்டியில் வந்த ஆஷ்துரையும் அவரது மனைவியும் அந்தப்பெண்னை அவர்கள் வண்டியிலேயே ஏற்றி பிராமணர் தெரு வழியாக சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்..!
அவரின் இந்த செயல்களால் பிராமண குலத்திற்க்கு இழுக்கு நேர்ந்ததாக பாரத மாதா சங்கத்தினர் கருதினர்...?
அதனால் ஆஷை கொன்றுவிட தீர்மானித்தனர். அதன்படியே வாஞ்சிநாதன் மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷை சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான்..!
அவன் சட்டைப் பையில் இருந்த கடித்தின் மூலம் அந்த சங்க உறுப்பினர்களின் ஆதிக்க சாதி வெறி தெரிகிறது.
வார்த்தை மாறாமல் அக்கடிதம் அப்படியே :
“ ஆங்கில சத்துருக்கன் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு ,அழியாத சனாதன தர்மத்தை காலால் மிதித்து துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேச சத்துருவாகிய ஆங்கிலேயரைத் துரத்தி தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன்,சிவாஜி,கிருஷ்ணன்,குரு கோவிந்தர்,அர்ஜுன்ன் முதலியோர் இருண்ட்க தேசத்தில் கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரும் முயற்சி நடந்து வருகிறது. அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனையே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதனைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையோனாகிய நான் இன்று இச் செய்கை செய்தேன். இது தான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை”.
இப்படிக்கு,
R. வாஞ்சி ஜயர்.
நியாயமாப் பார்த்தா தீண்டாமையை எதிர்த்து போராடி அதில் ஒரு சாதிவெறி பிடித்த மனிதனால் உயிர் இழந்த ஆங்கிலேய பிரபுவுக்கு நாம் அஞ்சலிதான் செலுத்த வேண்டும்.
ஆதாரம்: அருந்ததியர் வாழும் வரலாறு .
ஆசிரியர் : மாற்கு.
Wednesday, June 17, 2015
இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே!

இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே!
- ரமலான் தொடர் சொற்பொழிவு - 2015
உரை : பி.ஜைனுல் ஆபிதீன்
வஹீ அல்லாததை பின்பற்றுவது வழிகேட்டில் சேர்க்குமா?
மத்ஹபு சட்டங்களை பின்பற்றுவது மார்க்கமாகுமா?
ஸலஃபுக் கொள்கை சரியானதா?
சஹாபாக்களுக்கு வஹீ வருமா? அவர்களை பின்பற்றலாமா?
சஹாபாக்களை பின்பற்றுவது வழிகேடா?
முன்னோர்கள் வழியில் சென்றால் நரகமா?
இமாம்கள் சொன்னால் அது இறைவனின் வழிகாட்டுதல் ஆகிவிடுமா?
குர்ஆனுக்கு முரண்படுவதாகச் சொல்லி ஹதீஸ்களை மறுக்கலாமா?
அப்படி முரண்படக்கூடிய செய்திகளை மறுத்து நாம் காஃபிராகிவிட்டோமா?.
நாம் அறிவுக்கு முரண்படுவதாகச் சொல்லி ஹதீஸ்களை மறுக்கின்றோமா?
திருக்குர் ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை மறுத்தது நாம் மட்டும் தானா?
இவ்வாறு மறுப்பதன் மூலம் மனோஇச்சையை பின்பற்றுகிறோமா?
இவ்விஷயத்தில் மத்ஹபு இமாம்களின் நிலை என்ன?
மற்ற மார்க்க அறிஞர்களின் நிலை என்ன?
ஹதீஸ் கலையில் இவ்விதி உண்டா?
திருக்குர்ஆனோடு முரண்படக்கூடிய செய்திகளுக்கு விபரீதமான வியாக்கியானங்கள் கொடுத்து உண்மையிலேயே அந்த செய்திகளை மறுப்பவர்கள் யார்?
சஹாபாக்களால் மறுக்கப்பட்ட செய்திகள் அறிஞர்களால் மறுக்கப்பட்ட செய்திகள் வஹீச் செய்திக்கு முரணான கட்டுக்கதைகளை மறுக்க காரணங்கள் என்ன?
அத்தகைய முரண்படக்கூடிய செய்திகளின் பட்டியல் என்ன?
அதற்கான விளக்கங்கள் என்ன?
உள்ளிட்ட செய்திகளுக்கு விளக்கமளிக்கும் உரை :
தலைப்பு : இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே!
ரமலான் மாதம் முழுவதும்....
ஆன்லைன் பீஜே (onlinepj.com) இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றது.
நேரம் : இரவு 10.00மணி முதல் 11மணி வரை இன்ஷா அல்லாஹ்...
Saturday, June 06, 2015
இந்து கடவுள் மாரி அம்மன் சமூக விரோதிகளால் அவமதிப்பு!

தமிழர்களால் மழைக்கடவுள் என்று வணங்கப்படும் மாரிஅம்மன் மீது கால் வைத்து அவமரியாதை செய்யும் இந்த சமூக விரோத செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.
இது திராவிடர் கழகம் செய்ததா? அல்லது திராவிடர் கழகத்தின் பெயரை கெடுக்க எடுத்த முயற்சியா என்பதை காவல் துறை தீர விசாரித்து உண்மையை கண்டறிய வேண்டும்.
இஸ்லாத்திலும் தர்ஹா வணக்கம் என்பது குர்ஆன் தடை செய்த ஒன்று. அதனை பிரசாரத்தின் மூலமாகத்தான் மக்களிடம் நாங்கள் கொண்டு செல்கிறோம். யாரும் தர்ஹாக்களை இடிக்க செல்வதில்லை. வணங்கும் அந்த மக்களே உண்மையை உணர்ந்து ஒரு நாள் அந்த தர்ஹாக்களை இடித்து விட்டு கல்வி சாலைகளையோ, இறை இல்லங்களையோ, முதியோர் விடுதிகளையோ அமைப்பார்கள். அது போல் மூடப் பழக்கங்கள் சிறிது சிறிதாக குறைய ஆரம்பிக்கும். ஒருவர் புனிதமாக வணங்கும் ஒரு பொருளை இவ்வாறு அவமதிப்பதை நான் வன்மையாக மீண்டும் கண்டிக்கிறேன்.
Monday, May 25, 2015
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - மும்பையில்



சமாதி வணங்கிகளிடமிருந்து தினந்தோறும்
எத்தனை வசவுகள்....
மத்ஹப் என்ற சாதி வெறியர்களிடமிருந்து
எத்தனை அவதூறுகள்...
காதிரிய்யா ஷாதுலியா நக்ஷபந்திகளிடமிருந்து
எத்தனை திட்டுக்கள்....
மவ்லூது, கத்தம், ஃபாத்திஹா என்று மார்க்கத்தை
விலைபேசிய மார்க்க அறிஞர்களிடமிருந்துதான்
எத்தனை பொய் செய்திகள்.. அவதூறுகள்...
அத்தனையையும் குர்ஆன், மற்றும் நபி வழிகளின் துணை கொண்டு அனைவரையும் மண்டியிட வைத்து விட்டு இன்று மும்பையிலுள்ள மாற்றுமத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை சொல்ல புறப்பட்டு விட்டார் பிஜெ.
இறைவன் இவருக்கு மேலும் உடல் நலத்தையும அறிவில் விசாலத்தையும் கொடுத்து தமிழக மக்களுக்கு மட்டுமல்லாமல் உலக இஸ்லாமியர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாக திகழ அந்த ஏக இறைவனை இறைஞ்சுகிறேன்.
'நீங்கள் நம்பிக்கை கொண்ட பிறகு உங்களை இறை மறுப்போராக மாற்றிட வேதம் கொடுக்கப்பட்டோரில் பெருமபாலோர் ஆசைப்படுகின்றனர். உண்மை அவர்களுக்குத் தெளிவான பின்பு அவர்களிடம் ஏற்பட்ட பொறாமையே இதற்குக் காரணம். அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை அவர்களைப் பொருட்படுத்தாது அலட்சியப் படுத்தி விடுங்கள். அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்'
-குர்ஆன்: 2;109
Saturday, May 23, 2015
குருவானவர் எப்படி இருக்க வேண்டும்? – திருமந்திரம்

குருவானவர் எப்படி இருக்க வேண்டும்? –திருமந்திரம்
//சுவனப்பிரியன்!
இந்துக்களாகிய நாங்கள் எ்ங்கள் மதத்தை நவீனப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். அகோரிகளைப்பற்றி எழுதும் நேரத்தில் தாயுமானவர் திருமந்திரம் பற்றி எழுதுங்களேன்! குப்பைகளைப் பற்றி எழுதுவானேன்.// - டாக்டர் அன்பு ராஜ்
டாக்டர் அன்பு ராஜின் விருப்பத்திற்கினங்க இன்று திருமந்த்ரம் என்ன சொல்கிறது என்று பார்போம்.
நித்தியானந்தா, பிரேமானந்தா, சாய்பாபா என்று வரிசையாக பல இந்து ஆன்மீக தலைவர்களை குருக்களை நமது காலங்களிலேயே பார்த்து வருகிறோம்.
குரு என்பவர் மட்டுமே இறை உபதேசம் பண்ண இயலும். குரு இறை நிலையை உணர்ந்தால் மட்டுமே தன்னுடைய சிஷ்யனுக்கு உண்மையை உபதேசிக்க இயலும். அதனால் தான் திருமூலர்:
குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடுங் குழிவிழுமாறே – 1680 , திருமந்திரம்
வேடதாரிகளை விட்டுவிடுங்கள் அவர்கள் குருட்டு வழியினர். குருடனுக்கு குருடன் வழி காட்டினால் இருவரும் வீழ்ந்து அழிவர்." என்கிறார் திருமூலர்..
சிஷ்யனும் ஏதும் அறியா குருடன். அவன் பின்பற்றும் குருவும் ஏதும் அறியா குருடன். இருவருமே கருத்துக் குருடர்கள். இந்த இரண்டு குருடுகளும் ஒன்றாகி ஒருவருக்கொருவர் வழி காட்டினால் முடிவில் தவறான பாதைக்கு சென்று வீழ்ந்து அழிவர் என்று இந்த பாடல் நமக்கு உணர்த்துகிறது.
கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக
உள்ள பொருளுடல் ஆவியுடன் ஈக
எள்ளத் தனையும் இடைவிடாதே நின்று
தெள்ளி யறியச் சிவபதந்தானே.
1693 : -திருமந்திரம் 6ம் தந்திரம்
விளக்கம்:
குருவாக ஒருவனை அவசரப்பட்டுத் தேர்ந்தெடுக்கலாகாது. மிக நன்றாக யோசித்துத் தெளிந்த பின்னரே ஒருவனைக் குருவாகக் அடைதல் வேண்டும். அப்படிப் பெறப்படும் குருவானவன் நல்லவனாய், நாம் அறியாதவற்றை அறிந்தவனாய், நமக்கு அவற்றை எடுத்துச் சொல்பவனாய், நம்மை நன்னெறிப்படுத்துவனாய், குற்றமில்லாதவனாய், நமக்குப் பிறவிப் பயன் கொடுப்பவனாய் அமைதல் வேண்டும்.
திருமந்திரத்தின் இந்த இரண்டு பாடல்களும் நமக்கு குருவாக எப்படிப்பட்டவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உணர்த்துகிறது. மேலே சொன்ன திரு மூலரின் பாடல் முகமது நபிக்குப் பொருந்தி வருவதை எண்ணி வியக்கிறோம். ஒரு இறைத்தூதர் எப்படி இருக்க வேண்டும். எப்படி வாழ வேண்டும். என்ன விஷேச சக்திகளை பெற்றிருக்க வேண்டும் என்று திரு மூலர் அழகாக இந்த பாடலில் வர்ணிக்கிறார். நமது தமிழ் மொழிக்கு வந்த இறைத் தூதரின் இலக்கணங்கள் இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்று தமிழில் இறங்கிய இறை வேதம் பட்டியலிட்டிருக்கலாம். அதையே திரு மூலர் தனது பாடலில் எடுத்தாண்டிருக்கிறார் என்று நான் எண்ணுகிறேன்.
-----------------------------------------------------------
முகமது நபி அவர்களுக்கு ஆடு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்பொழுது உணவுகள் குறைவாக இருந்த காலம். தமது குடும்பத்தாரிடம் 'இந்த ஆட்டை சமையுங்கள்' என்று கூறினார்கள். பெரிய பாத்திரம் ஒன்று இருந்தது. அதில் அந்த உணவு வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. உணவு கிடைக்காத தோழர்கள் எல்லாம் அழைக்கப்பட்டனர். முகமது நபி அவர்களும் அவர்களுடன் அமர்ந்து கொண்டனர். உணவுத் தட்டைச் சுற்றி அனைவரும் அமர்ந்து சாப்பிடலானார்கள். கூட்டம் அதிகமாக இருந்ததால் முகமது நபி அவர்கள் மண்டியிட்டு அமர்ந்து மற்றவர்களுக்கு இடம் கொடுத்தார்கள். அப்போது ஒரு கிராமவாசி 'என்ன இப்படி உட்கார்ந்திருக்கிறீர்கள்?' என்று கேட்டார். அதற்கு நபி அவர்கள் 'இறைவன் என்னை அடக்கு முறை செய்பவனாகவும் மமதை பிடித்தவனாகவும் ஆக்கவில்லை. பெருந்தன்மை மிக்க அடியானாகவே ஆக்கியுள்ளான்.' என்று விடையளித்தார்.
-ஆதாரம் -அபுதாவுத் 3773, பைஹகீ 14430
பலரும் அமர்ந்து சாப்பிடும் ஒரு தட்டில் மேல் நிலையில் உள்ளவர்கள் ஒன்றாக சாப்பிடுவதை கவுரவக் குறைவாகவே கருதுவார்கள். மேலும் அன்றைய சமூக அமைப்பில் மண்டியிட்டு அமர்வது தாழ்த்தப்பட்டவர்களுக்கான பழக்கமாக இருந்தது. இதனால்தான் அந்த கிராமவாசி கூட அமர்ந்ததை குறை காண்கிறார். தாம் ஒரு ஆட்சியாளர் என்றோ மதத்தின் தலைவர் என்றோ, வீட்டின் உரிமையாளர் என்றோ முகமது நபி அவர்கள் நினைக்கவில்லை. மற்றவர்களைப் போல் பசித்திருக்க்க் கூடிய ஒரு மனிதனாக மட்டும் தான் தம்மை முன்னிறுத்துகிறார்கள். இப்படி ஒரு பண்பான ஆட்சியாளரை நாம் பார்த்திருக்கிறோமா?
ஒரு மனிதர் முதன் முதலாக முகமது நபி அவர்களைச் சந்திக்க வருகிறார். பொதுவாக மன்னர்கள் முன்னிலையில் உடலை வளைத்து பவ்யமாக குடி மக்கள் நிற்பதுதான் அன்றைய வழக்கம. முகமது நபியையும் அதுபோல் நினைத்துக் கொண்டு உடல் நடுங்கி பய பக்தியுடன் வந்தார். 'சாதாரணமாக இருப்பீராக! உலர்ந்த இறைச்சியைச் சாப்பிட்டு வந்த குறைஷிக் குலத்துப் பெண்ணுடைய மகன்தான் நான்.' என்று கூறி அவரை சகஜ நிலைககு கொண்டு வந்தார்கள்.
-நூல் இப்னுமாஜா 3303.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நமது தமிழ்நாட்டு முதல்வர் மேடையில் பேசும் போது மற்ற அமைச்சர்கள் நின்று கொண்டிருப்பதை பார்க்கிறோம். முதல்வரின் கால்களில் விழுவதையும் பார்க்கிறோம். அதுவும் இந்த இருபதாம் நூற்றாண்டில். ஆனால் முகமது நபியோ ஒரு மன்னர். அதிலும் மதத் தலைவர் தனது குடிமக்களிடம் எவ்வளவு அன்யோன்யமாக பழகியிருக்கிறார்கள் என்பதை இந்த சம்பவம் விளக்குகிறது.
தரையில் எதுவும் விரிக்காமல் அமர்வார்கள். தரையில் அமர்ந்து சாப்பிடுவார்கள். ஆட்டில் தாமே பால் கறப்பார்கள். அடிமைகள் அளிக்கும் விருந்தையும் ஏற்பார்கள்.
-தப்ரானி 12494
அகழ் யுத்தத்தின் போது முகமது நபி அவர்களும் மக்களுடன் சேர்ந்து அகழ் வெட்டினார்கள். மண் சுமந்தார்கள். முகமது நபி அவர்களின் வயிற்றை மண் மறைத்தது.
-புகாரி 2837, 3034,4101
முகமது நபி அவர்கள் மதினா வந்தவுடன் பள்ளிவாசலைக் கட்டிய போது அவர்களும் மக்களோடு சேர்ந்து கல் சுமந்தார்கள்.
-புகாரி 3906
இப்படி எந்த வேலையிலும் பின் வாங்காமல் மக்களோடு மக்களாக ஒன்றரக் கலந்திருந்ததுதான் முகமது நபி அவர்களின் வாழ்க்கையாக இருந்தது. எனவே இன்று வரை அவரது புகழ் மேலும் மேலும் எட்டுத் திக்கும் பரவிக் கொண்டிருக்கிறது. ஒரு இறைத்தூதர், ஒரு குரு எவ்வாறு தனது மக்களுக்கு இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாக முகமது நபி அவர்கள் திகழ்ந்து வருகிறார.
Labels:
இந்தியா,
இஸ்லாம்,
தமிழகம்,
தமிழர்கள்,
திரு மந்திரம்
Monday, May 11, 2015
நடைபாதையில் சிறு நீர் கழிப்பதை தடுக்க.....

நமது பக்கத்து நாடான பங்களாதேஷில் ஒரு முக்கியமான மார்க்கெட் பகுதியின் சுவற்றில் சிறு நீர் கழிப்பதை வழக்கமாக சிலர் கொண்டிருந்தனர். மார்க்கெட் நிர்வாகம் பல முறை எச்சரிக்கை போர்டுகளை வைத்தும் ஒரு பலனுமில்லை. இது போன்ற பிரச்னை பல இடங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுத்தும் ஒரு பயனும் ஏற்படவில்லை. அப்போது மத விவகாரங்களைக் கவனித்து வரும் ஒரு அதிகாரி சிறந்த யோசனை ஒன்றை சொன்னார். அதாவது 'இங்கு சிறுநீர் கழிப்பது தடை செய்யப்பட்டள்ளது' என்ற வாசகத்தை அந்த சுவற்றில் அரபி மொழியில் எழுதி வைத்து விடுவது என்ற யோசனையே அது.
உலகின் பெரும்பாலான முஸ்லிம்கள் குர்ஆன் அரபி மொழியில் இறங்கியதால் அந்த மொழிக்கு தன்னையறியாமல் ஒரு மரியாதையை கொடுப்பர்.(ஆனால் இஸ்லாமிய பார்வையில் தேவ மொழி என்று ஒன்று இல்லை. உலக மொழிகள் அனைத்தையும் இறைவனே படைத்ததாக குர்ஆன் கூறுகிறது) இதனை விளங்கிய அதிகாரி இவ்வாறு வாசகங்களை மக்கள் சிறுநீர் கழிக்கும் இடங்களில் எழுதி வைத்து விடச் சொன்னார். அன்வர் ஹீசைன் என்ற அரசு அதிகாரி இது பற்றி கூறும் போது 'அரபு மொழியில் எழுதி வைத்தவுடன் அது சிறந்த பலனை எங்களுக்குக் கொடுத்தது. அந்த இடங்கள் தற்போது மிகவும் தூய்மையாக உள்ளன. பல நாட்களாக எங்களுக்கு இருந்த பிரச்னையும் தீர்ந்தது' என்கிறார். :-)
நம் நாட்டில் பெரும் பஸ் நிறுத்தங்களில் நுழையும் போதே மூக்கைப் பிடித்துக் கொண்டுதான் நுழைகிறோம். குளிர் சாதனங்களோடு அமைந்த நிழற்குடைகளை வைக்கும் அரசாங்கம் சிறந்த கழிப்பிடங்களை கட்டி வைப்பதில்லை. சிறுநீர் கழிக்கும் இடங்களில் தண்ணீர் ஊற்றுவதற்கான வசதிகளையும் செய்து தருவதில்லை. அந்த இடங்கள் உப்பு படிந்து பார்க்கவே அறுவறுப்பாக உள்ளது. நாற்றமும் சகிக்கவில்லை. ஆண்களாவது பரவாயில்லை. பெண்கள் பாடு இன்னும் திண்டாட்டம். சிலர் சுத்தம் கருதி வெளியூர் சென்றால் கழிவறைகளை உபயோகிக்காமல் வீட்டில் வந்தே தங்களின் இயற்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.
தற்போது பாஜக அமைச்சர் நிதின் கட்கரி தனது சிறுநீரை சேமித்து செடிகளுக்கு ஊற்றி சிறந்த விளைச்சலை பெற்றதாக கூறியுள்ளார். எனவே அரசு இது போன்ற சிறுநீர்கள் வீணாகாமல் சேமித்து வைக்க ஒரு அமைச்சகத்தை உருவாக்க வேண்டும். அல்லது பங்களாதேஷைப் போன்று மக்கள் புனிதமாகக் கருதுபவர்களின் படங்களை பொது இடங்களில் வைத்து விட்டால் பொது இடங்களில் சிறு நீர் கழிப்பதாவது குறையும்.
தகவல் உதவி
சவுதிகெஜட்
07-04-2015
http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentid=20150507242953
Saturday, May 09, 2015
வழுத்தூரில் 'மஸ்ஜித் தவ்ஹீத்' புதிய பள்ளி வாசல் திறப்பு!




சென்ற வெள்ளிக்கிழமை எனது இளைய மகனின் நண்பன் 'வழுத்தூரில் தவ்ஹீத் பள்ளி' திறப்பு விழா! அவசியம் வந்து விடு' என்று சொல்ல 'நீங்களும் வருகிறீர்களா?' என்று என் மகன் கேட்க.... நானும் சரி என்று சொன்னேன். 12 மணிக்கு இரு சக்கர வாகனத்தில் இருவரும் புறப்படுவதாக எற்பாடு.
இடையில் எனது மகனின் வெறோரு நண்பன் போன் செய்து 'டேய்... வழுத்தூரில் எல்லாம் புது பள்ளி திறப்பு கிடையாது. கண்டியூரில்தான் புது பள்ளி திறக்கிறார்கள்' என்று குட்டையை குழப்பிவிட என் மகனோ சரியாக விசாரிக்காமல் என்னையும் அழைத்துக் கொண்டு கண்டியூர் நோக்கி புறப்பட்டார். அங்கும் ஒரு புது பள்ளி திறப்பு விழா நடந்து கொண்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தால் 'முஹைதீன் ஆண்டவர்கள் புதிய பள்ளி வாசல் திறப்பு விழா' என்ற அலங்கார பந்தல் எங்களை வரவேற்றது. ஆஹா.... இடம் மாறி வந்து விட்டோம் என்று அப்போதே நினைத்தேன்.
"இன்னும் அல்லாஹ்வுடைய பள்ளிகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, அவற்றை பாழாக்க முயல்பவனை விட பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனின்றி பள்ளிவாயிகளில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள். இவர்களுக்கு இவ்வுலக வாழ்விலும் இழிவு உண்டு. மறுமையில் இவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு." (2:114)
என்ற இறை வசனத்தை விளங்காமல் கண்டியூர் ஜமாத் 'முஹைதீன் ஆண்டவர்' என்று அந்த பள்ளிக்கு பெயரிட்டுள்ளனர். ஆக்ரோஷமாக உரையாற்றிக் கொண்டிருந்த ஏ.கே.அப்துல் ரஹ்மானும் இதனைக் கண்டிக்கவில்லை. எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் மரணித்து மண்ணோடு மண்ணாகி விட்ட ஒரு இறையடியாரின் பெயரை இறைவனுக்கு மட்டுமே உபயோகப்படுத்தும் 'ஆண்டவர்' என்ற அடை மொழியையும் சேர்த்து எந்த ஆதாரத்தின் அடிப்படையில் வைத்தார்கள் என்று விளங்கவில்லை. இறைவன் இந்த ஜமாத்துக்கு நேர் வழி காட்டுவானாக!
என் மகன் என்னிடம் மெதுவாக 'அப்பா.... தவறான இடத்துக்கு வந்து விட்டோம் என்று நினைக்கிறேன்' என்றார் மெதுவாக....
'உன் நண்பனிடம் இன்னொரு முறை சரியாக கேள்' என்று நான் சொல்ல உடன் செல் போனில் தனது நண்பனோடு தொடர்பு கொண்டார்.
'டேய் என்னடா... இது சுன்னத் ஜமாத் பள்ளி திறப்பு விழா..... கண்டியூர்ல நிக்கிறேன்டா... என் அப்பாவையும் அழைத்து வந்திருக்கேன்டா...'
'உன்னை எங்கடா போகச் சொன்னேன்? ... கண்டியூர் ஏண்டா போனே... தவ்ஹீத் பள்ளி திறப்பு விழா வழுத்தூர்லடா...' என்று என் மகனின் நண்பன் கலாய்க்க என் மகனுக்கோ ஏக டென்ஷன். 'வெளியூர் கிளம்புவதற்கு முன் ஒரு முறைக்கு இரண்டு முறை நன்றாக விசாரிக்கக் கூடாதா?' என்று கடிந்து கொண்டேன்.
வந்தது வந்து விட்டோம். இங்கேயே தொழுது விடலாம் என்று நினைத்தால் 'முஹைதீன் அண்டவர் பள்ளிவாசல்' போர்டு ஞாபகம் வரவே அங்கு தொழ மனமில்லாமல் 'சரி... புறப்படு வழுத்தூருக்கு செல்வோம்' என்றேன். கண்டியூரில் இருந்து கிளம்பும் போது மணி 12:45. வழுத்தூரில் இடத்தை விசாரித்துக் கொண்டு சரியாக சென்று விட்டோம். மேல வழுத்தூரிலிருந்து மாங்குடி செல்லும் வழியில் பல வீடுகளுக்கு மத்தியில் அழகிய தோற்றத்தில் 'மஸ்ஜித் அத் தவ்ஹீத்' கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. ஜூம்ஆ பேருரை மிகச் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. நாங்கள் சென்று 15 நிமிடத்தில் தொழுகையும் ஆரம்பமானது. புதிய பள்ளியில் தொழுது விட்டு அங்கிருந்து வீடு கிளம்பினோம்.
-----------------------------------------------------------------
வழுத்தூரைப் பொருத்த வரையில் அங்கு ஆரம்பம் முதலே தவ்ஹீத் கொள்கைகளுக்கு மிக அதிக எதிர்ப்பு இருந்தது. மார்க்கத்துக்கு முரணான 'கொடி சீலை' என்ற ஒரு நிகழ்வை வருடா வருடம் மிக விமரிசையாக கொண்டாடுவார்கள். அங்குள்ள பள்ளி வாசலுக்கு 'முஹைதீன் ஆண்டவர் பள்ளி வாசல்' என்று பெயர் வைத்திருப்பார்கள். அஷ் ஷைகு ஷா என்ற பெயரில் பெரிய தர்ஹா ஒன்று ரோட்டோரத்திலேயே இருக்கும். அது மட்டும் அல்லாமல் சிறு சிறு தர்ஹாக்களும் உண்டு. :-) இவ்வாறு குர்ஆன் காட்டித் தராத செயல்களை செய்வதில் அதிக அக்கறை காட்டுவர். எனவே ஆரம்ப காலங்களில் தவ்ஹீத் பிரசாரத்துக்கு மிகப் பெரிய எதிர்ப்பு இருந்தது. எங்கெல்லாம் ஏகத்துவ கொள்கையை அதிகம் எதிர்க்கிறார்களோ அங்கெல்லாம் இறைவன் தவ்ஹீதை வெகு சீக்கிரத்தில் வளர்க்கிறான். இதற்கு நாகூர் ஒரு சிறந்த உதாரணம். இன்று வழுத்தூரில் கம்பீரமாக தவ்ஹீத் கொள்கைகளை பறை சாற்ற ஒரு பள்ளி எழுப்பப்பட்டு விட்டது. இதற்காக உடலாலும் பொருளாலும் தங்கள் பங்களிப்பை அளித்த அனைத்து மக்களுக்கும் இறைவன் மேலும் அபிவிருத்தியை நல்குவானாக!
தனியாக இவ்வாறு தனிப் பள்ளி கட்டிக் கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. நமது ஊர் பள்ளியிலேயே அந்த மக்களை திருத்த முயல வேண்டும். அந்த நாள் கை கூடி வரும் போது இவ்வாறு தனிப் பள்ளி கட்டிக் கொண்டு செல்லும் வழக்கமும் ஒழியும். அத்தகைய நாட்களை இறைவன் நம் தமிழகத்தில் வெகு சீக்கிரத்தில் ஏற்படுத்துவானாக!
Labels:
இஸ்லாம்,
தமிழகம்,
தமிழர்கள்,
தர்ஹா,
தவ்ஹீத் எழுச்சி
Thursday, May 07, 2015
இஸ்லாத்தை நான் ஏன் விட வேண்டும்?
இஸ்லாத்தை நான் ஏன் விட வேண்டும்?
//என் மனதில் மதமே இல்லை. இல்லாத மதத்தை எப்படி தூக்கி எறிவது.// -சுப்பு ராஜா
//உங்க நலஞ்சிணுங்கியையும் அப்படியே மதத்தை தூக்கி ஓரமா வச்சிட்டு வா சகோதரான்னு
Nazeer Ahamed -ஐ கூப்பிடுங்க பார்ப்போம்.....// - ram nivas
அதாவது சுப்பு ராஜா தனது மதத்தின் மேல் உள்ள வெறுப்பால் நாத்திகராக உள்ளார். அதே போல் நஜீர் அஹமதாகிய நானும் இஸ்லாத்தை உதறி விட்டு வருமாறு கேட்கச் சொல்கிறார் ராம் நிவாஸ்.
முதலில் சில அடிப்படைகளை புரிந்து கொள்ள வேண்டும்.
சுப்புராஜா போன்ற எண்ணற்ற இந்து இளைஞர்கள் தமிழகத்தில் நாத்திகர்களாக மாறியது ஏன்? ஒரு நாத்திக கட்சியே ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் அளவுக்கு வளர்ச்சி கண்டது ஏன்? தனது சொந்த மதத்தையே கிண்லடித்து பிரசாரம் பண்ணும் நிர்பந்தத்தை உண்டாக்கியது யார்? அதற்கான காரணத்தை சற்று அலசுவோம்.
பண்டைய தமிழகம் அறிவிலும் ஆற்றலிலும், தெய்வ வழிபாடுகளிலும் மிகச் சிறந்த இடத்தைப் பெற்றிருந்தது. திருக்குறள், திரு மந்த்ரம் போன்ற காலத்தால் அழியாத இலக்கியங்களும் சமய நூல்களும் தமிழனின் பெருமையை இன்றும் பறை சாற்றி வருகின்றன.
ஆனால் சில சதிகளின் காரணமாக ஆரியர்கள் நமது நாட்டுக்கு படையெடுத்தனர். பூர்வ குடிகளான திராவிடர்களை வஞ்சகத்தால் வீழத்தினர். ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றினர். அரசர்களையும் தங்கள் அடிமைகளாக்கினர். தமிழர்களின் பண்பாட்டையும் கலாசாரத்தையும் வேத நூல்களையும் திட்டமிட்டு அழித்தனர். அவ்வாறு அழித்ததோடு அல்லாமல் தங்களின் மொழியை தேவ மொழியாக பெரும்பான்மை மக்களின் மனதில் ஏற்றினர். தங்களின் வேதங்களையும் திராவிடர்களின் தலையில் கட்டினர். அனைவரையும் இந்து மதம் என்ற ஒரு கோட்டுக்குள் கொண்டு வந்து மனிதர்களை நான்கு வர்ணங்களாக பிரித்தனர்.
உழைக்காமல் வயிறு வளர்க்கும் தாங்கள் உயர் சாதி என்றும் உழைக்கும் மற்ற மூன்று வர்ணத்தார் தாழ்ந்த சாதிகள் என்றும் மேலும் ஆதி திராவிடர்களை சூத்திரர்கள் என்ற இழி நிலைக்கு தள்ளியும் சட்டங்களை மனுவின் உதவியால் எழுதிக் கொண்டனர். எதிர்த்தவர்களை சாமி குத்தம் என்று அடக்கினர். மேலும் எதிர்த்தவர்களை கொலையும் செய்தனர். எதிர்க்க வழியில்லாமல் திராவிடர்களும் கடந்த 3000 வருடங்களாக ஆரியர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர். அது இன்று வரை தொடர்கிறது.
மனிதனை பிறப்பால் பிரத்தாளும் இந்த வiர்ணாசிரம கொடுமையை எதிர்த்து பல மக்கள் கிருத்தவர்களாகவும், இஸ்லாமியர்களாகவும் மதம் மாறினர். எஞ்சியுள்ள மக்கள் தங்களின் பெற்றோரின் மதத்தை விட்டு விட மனமில்லாமல் நாத்திகர்களாகவும், பகுத்தறிவாதிகளாகவும் மாறியுள்ளனர்.
எனது முன்னோர்கள் இஸ்லாத்தை ஆய்வு செய்து வரவில்லை. வர்ணாசிரம கொடுமையிலிருந்து தப்பிப்பதற்காக இஸ்லாத்தை ஏற்றனர். ஆனால் எடுத்த முடிவோ மிகச் சரியான முடிவு. இன்று என்னை யாரும் நான்கு வர்ணத்துக்குள் அடைக்க முடியாது. இஸ்லாத்துக்குள் யாரையும் யாரும் திருமணம் செய்து கொள்ளலாம். கோவிலில் ஒரு குறிப்பிட்ட சாதிதான் நுழைய முடியும் என்று இஸ்லாத்தில் யாரும் என்னை தடுக்க முடியாது.
தேர் இழுப்பதில் எந்த சாதிக்கு முன்னுரிமை என்ற பஞ்சாயத்தில் வட மாவட்டங்களில் தேவர், வன்னியர், தாழ்த்தப்பட்ட மக்கள் என்று நேற்று கூட கலவரம் வெடித்துள்ளது. வருடா வருடம் இந்த பஞ்சாயத்துதான். இதை எல்லாம் பார்த்து தான் சுப்பு ராஜா, s kaarthikeyan போன்ற நடுநிலைவாதிகள் மதத்தை வெறுத்து பகுத்தறிவாதிகளாக மாறுகின்றனர். ஒரு சிலர் இஸ்லாத்தையும் ஏற்றுக் கொள்கின்றனர்.
எனவே இஸ்லாத்தை விட்டு விடச் சொல்லி என்னை வற்புறுத்துவதற்கு பதில் இந்து மதத்தில் உள்ள குறைகளை களைய முயற்சிக்கச் சொல்லி உங்கள் இந்துத்வா தலைவர்களிடம் ஆலோசனைகளை சென்னி மலை ram nivas போன்றவர்கள் வைப்பது நல்லது. அது ஒன்று தான் இந்து மதத்தின் அழிவை கொஞ்சமாவது காப்பாற்றும்.
செய்வீர்களா? ....... நீங்கள் செய்வீர்களா?
//என் மனதில் மதமே இல்லை. இல்லாத மதத்தை எப்படி தூக்கி எறிவது.// -சுப்பு ராஜா
//உங்க நலஞ்சிணுங்கியையும் அப்படியே மதத்தை தூக்கி ஓரமா வச்சிட்டு வா சகோதரான்னு
Nazeer Ahamed -ஐ கூப்பிடுங்க பார்ப்போம்.....// - ram nivas
அதாவது சுப்பு ராஜா தனது மதத்தின் மேல் உள்ள வெறுப்பால் நாத்திகராக உள்ளார். அதே போல் நஜீர் அஹமதாகிய நானும் இஸ்லாத்தை உதறி விட்டு வருமாறு கேட்கச் சொல்கிறார் ராம் நிவாஸ்.
முதலில் சில அடிப்படைகளை புரிந்து கொள்ள வேண்டும்.
சுப்புராஜா போன்ற எண்ணற்ற இந்து இளைஞர்கள் தமிழகத்தில் நாத்திகர்களாக மாறியது ஏன்? ஒரு நாத்திக கட்சியே ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் அளவுக்கு வளர்ச்சி கண்டது ஏன்? தனது சொந்த மதத்தையே கிண்லடித்து பிரசாரம் பண்ணும் நிர்பந்தத்தை உண்டாக்கியது யார்? அதற்கான காரணத்தை சற்று அலசுவோம்.
பண்டைய தமிழகம் அறிவிலும் ஆற்றலிலும், தெய்வ வழிபாடுகளிலும் மிகச் சிறந்த இடத்தைப் பெற்றிருந்தது. திருக்குறள், திரு மந்த்ரம் போன்ற காலத்தால் அழியாத இலக்கியங்களும் சமய நூல்களும் தமிழனின் பெருமையை இன்றும் பறை சாற்றி வருகின்றன.
ஆனால் சில சதிகளின் காரணமாக ஆரியர்கள் நமது நாட்டுக்கு படையெடுத்தனர். பூர்வ குடிகளான திராவிடர்களை வஞ்சகத்தால் வீழத்தினர். ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றினர். அரசர்களையும் தங்கள் அடிமைகளாக்கினர். தமிழர்களின் பண்பாட்டையும் கலாசாரத்தையும் வேத நூல்களையும் திட்டமிட்டு அழித்தனர். அவ்வாறு அழித்ததோடு அல்லாமல் தங்களின் மொழியை தேவ மொழியாக பெரும்பான்மை மக்களின் மனதில் ஏற்றினர். தங்களின் வேதங்களையும் திராவிடர்களின் தலையில் கட்டினர். அனைவரையும் இந்து மதம் என்ற ஒரு கோட்டுக்குள் கொண்டு வந்து மனிதர்களை நான்கு வர்ணங்களாக பிரித்தனர்.
உழைக்காமல் வயிறு வளர்க்கும் தாங்கள் உயர் சாதி என்றும் உழைக்கும் மற்ற மூன்று வர்ணத்தார் தாழ்ந்த சாதிகள் என்றும் மேலும் ஆதி திராவிடர்களை சூத்திரர்கள் என்ற இழி நிலைக்கு தள்ளியும் சட்டங்களை மனுவின் உதவியால் எழுதிக் கொண்டனர். எதிர்த்தவர்களை சாமி குத்தம் என்று அடக்கினர். மேலும் எதிர்த்தவர்களை கொலையும் செய்தனர். எதிர்க்க வழியில்லாமல் திராவிடர்களும் கடந்த 3000 வருடங்களாக ஆரியர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர். அது இன்று வரை தொடர்கிறது.
மனிதனை பிறப்பால் பிரத்தாளும் இந்த வiர்ணாசிரம கொடுமையை எதிர்த்து பல மக்கள் கிருத்தவர்களாகவும், இஸ்லாமியர்களாகவும் மதம் மாறினர். எஞ்சியுள்ள மக்கள் தங்களின் பெற்றோரின் மதத்தை விட்டு விட மனமில்லாமல் நாத்திகர்களாகவும், பகுத்தறிவாதிகளாகவும் மாறியுள்ளனர்.
எனது முன்னோர்கள் இஸ்லாத்தை ஆய்வு செய்து வரவில்லை. வர்ணாசிரம கொடுமையிலிருந்து தப்பிப்பதற்காக இஸ்லாத்தை ஏற்றனர். ஆனால் எடுத்த முடிவோ மிகச் சரியான முடிவு. இன்று என்னை யாரும் நான்கு வர்ணத்துக்குள் அடைக்க முடியாது. இஸ்லாத்துக்குள் யாரையும் யாரும் திருமணம் செய்து கொள்ளலாம். கோவிலில் ஒரு குறிப்பிட்ட சாதிதான் நுழைய முடியும் என்று இஸ்லாத்தில் யாரும் என்னை தடுக்க முடியாது.
தேர் இழுப்பதில் எந்த சாதிக்கு முன்னுரிமை என்ற பஞ்சாயத்தில் வட மாவட்டங்களில் தேவர், வன்னியர், தாழ்த்தப்பட்ட மக்கள் என்று நேற்று கூட கலவரம் வெடித்துள்ளது. வருடா வருடம் இந்த பஞ்சாயத்துதான். இதை எல்லாம் பார்த்து தான் சுப்பு ராஜா, s kaarthikeyan போன்ற நடுநிலைவாதிகள் மதத்தை வெறுத்து பகுத்தறிவாதிகளாக மாறுகின்றனர். ஒரு சிலர் இஸ்லாத்தையும் ஏற்றுக் கொள்கின்றனர்.
எனவே இஸ்லாத்தை விட்டு விடச் சொல்லி என்னை வற்புறுத்துவதற்கு பதில் இந்து மதத்தில் உள்ள குறைகளை களைய முயற்சிக்கச் சொல்லி உங்கள் இந்துத்வா தலைவர்களிடம் ஆலோசனைகளை சென்னி மலை ram nivas போன்றவர்கள் வைப்பது நல்லது. அது ஒன்று தான் இந்து மதத்தின் அழிவை கொஞ்சமாவது காப்பாற்றும்.
செய்வீர்களா? ....... நீங்கள் செய்வீர்களா?
Subscribe to:
Posts (Atom)