'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Tuesday, February 17, 2015
"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே" - தமிழ் பருக
'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்த குடி தமிழினம்' என்று அண்ணாவும் கலைஞரும் பொறி தெரிக்க பேசும் போது 'ஆ....' வென்று ஆச்சரியத்தில் வாய் பிளந்திருப்போம் நாம். இந்த பாடலை நாம் விளங்கியது சரிதானா என்பதை இந்த பதிவில் பார்போம்.
'பிள்ளையாண்டான் ரீல் உட்றான். கல் தோன்றி மண் தோன்றிய பிறகுதானே மனிதன் தோன்றினான். இவாள் மாத்தி யோசிக்கிறாளே! ஏண்டா அம்பி இந்த பொய்க் கதையை கேளேன்டா' என்று வட மொழி ஆர்வலர்கள் தமிழர்களை கலாய்பதுண்டு.
இந்த பாடலை மேலோட்டமாக பார்துதான் இது வரை அர்த்தம் புரிந்து வந்துள்ளோம். இனி சற்று விரிவாக இதன் விளக்கத்தைப் பார்போம். பழந் தமிழ் பாடலை பார்போம்....
பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் - கையகலக்
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றி மூத்த குடி!
-புறப்பொருள் வெண்பா மாலை - கரந்தைப் படலம் 35 | குடிநிலை
கல் என்ற சொல்லுக்கு மலை என்ற பொருளும் உண்டு. மண் என்ற சொல்லுக்கு வயல் என்ற பொருளும் உண்டு. இதற்கு திருக்குறளிலும் மற்ற சங்கத் தமிழ் பாடல்களிலும் ஆதாரங்களைக் காணலாம்.
இனி இந்த பாடலின் பொருளை நேரிடையாகப் பார்போம்.
பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்? = பொய்கள் அகன்று என்றும் புகழ் பரவுவது உலகில் ஒன்றும் ஆச்சரியமில்லை.
வையகம் போர்த்த, = பூமியைப் போர்த்தி இருந்த நீரின் ஒழுங்கு நிலை அகன்று
வயங்கு ஒலி நீர் - கையகல = மலைகள், மற்றும் இதர பூமியின் வளங்கள், ஒவ்வொன்றாய்த் தோன்றின!
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே = அவ்வாறு நீரின் ஒழுங்கு நிலை விலகி ... வளங்கள் தோன்றி, வயல் வெளி நாகரிகம் தோன்றிய காலத்துக்கு முன்பே....
வாளோடு முன் தோன்றி மூத்த குடி! = ஆயுதங்களோடு காடு மலைகளில் சுற்றித் திரிந்து வாழ்க்கை நடத்தியவன் இந்த தமிழன்.
இதுதான் இந்த பாடலின் நேரிடையான பொருள்.
இனி இந்த பாடலின் கருத்தை உரை நடையாகப் பார்போம்.
பொய்கள் அகன்று அதனால் புகழ் பரவுவது என்பது உலகில் ஆச்சரியமான ஒரு செய்தியே அல்ல. மலைகளிலிருந்து கற்கள் கீழே விழுந்து அவை சுக்கு நூறாக உடைந்து கூழாங்கற்களாகி மேலும் சிறு கற்களாக மாறி அதில் மழை நீர் கலந்து மிருதுவாகி மண்ணாக மாறுகிறது. அதன் பிறகுதான் அந்த இடம் விவசாய நிலமாக மாறுகிறது. இவ்வாறு மலைகளின் கற்கள் இடம் பெயர்ந்து விவசாய நிலமாக மாறி அங்கு பயிர்களை மனிதன் விளைவிக்கும் முன்பே தமிழன் இந்த உலகில் இருந்துள்ளான். காடுகளில் இலை தழைகளையும் மிருகங்களையும் அடித்து சாப்பிட்டு வந்த அந்த கற்காலத்திய தொன்மையான மனிதனின் நாகரிகமே தமிழனின் நாகரிகம் என்கிறது இந்த பாடல். அதாவது உலகில் முதன் முதலில் தோன்றிய பல நாகரிகங்களில் மிக தொன்மையானது தமிழனின் நாகரிகம். மிக பழமையானது தமிழ் மொழி என்ற செய்தியை இந்த பாடல் நமக்கு சொல்கிறது.
இதனையே சற்று உல்டாவாக்கி நமது அரசியல் தலைவர்கள் 'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்த குடி' என்று சொல்லி வந்தனர். நாமும் இது வரை அதுதான் உண்மையான பொருள் என்று நம்பி வந்தோம். ஆனால் தற்போது இந்த பாடலின் உண்மையான அர்த்தத்தை விளங்கிக் கொண்டோம்.
இனி வட மொழி ஆர்வலர் யாரும் 'ஏண்டா அபிஷ்டு! ரீல் உட்றதே உங்க ஆளுங்களுக்கு பொழப்பாடா?' என்று நக்கலடித்தால்
'ஓய்.... யாருங்காணும் ரீல் உட்றது? பாடலை தவறாக விளங்கிக் கொண்டது உம்முடைய தவறுதானே' என்று இந்த பதிவின் விளக்கத்தை கொடுத்து விடுங்கள். தமிழன் சிந்திக்க ஆரம்பித்து விட்டான் என்று இடத்தை காலி பண்ணி விடுவார் அந்த வட மொழி ஆர்வலர். :-)
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
இப்படி கேள்வி கேட்பதால், நீ தமிழனா என்று கூறவேண்டாம். தன்னிலை விளக்கம் கேட்டால், இப்படி கேட்பவர்களுக்கு பதில் கூற முடியும்.
இதில் தமிழன் என்று எங்கு வருகிறது.
மூத்த குடி என்றுதானே வருகிறது.
இப்படி கேள்வி கேட்பதால், நீ தமிழனா என்று கூறவேண்டாம். தன்னிலை விளக்கம் கேட்டால், இப்படி கேட்பவர்களுக்கு பதில் கூற முடியும்.
இதில் தமிழன் என்று எங்கு வருகிறது.
மூத்த குடி என்றுதானே வருகிறது.
Who said this quote
Who said this quote
வள்ளுவம் பெருந்தகை
புறப்பொருள் வெண்பா மாலை கறந்தை திணை(ஆநிரை மீட்பு):
அதாவது பகையினர் கவர்ந்து (வெட்சி திணை)சென்ற மாட்டுக் கூட்டத்தை மீட்க செல்லும் (கரந்தை திணை) மக்களின் (குடியின்) பெருமை உரைக்கும் செய்யுள்.
jalappiralayam nova kalathil pomimuluvatum thannerinal moolgiathu nova pelail
iurunthar Jalam vatriyathu boat malaiin meal iruntathu
thurai (man) (kal) thontriyathu 222oruntarnishjalappiralayam
ஐயனாரிதனார்
நல்ல தகவல்.
Post a Comment