Followers

Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Sunday, January 24, 2016

பொங்கல் பற்றி ஷோபா சக்தியின் அருமையான அலசல்!

பொங்கல் பற்றி ஷோபா சக்தியின் அருமையான அலசல்!வெளியே தமிழ்த்துவம் உள்ளே இந்துத்துவம்...

Posted by Nazeer Ahamed on Sunday, January 24, 2016

பொங்கல் பற்றி ஷோபா சக்தியின் அருமையான அலசல்!

வெளியே தமிழ்த்துவம் உள்ளே இந்துத்துவம்

2009 ஜனவரி ‘த சண்டே இந்தியன்’ இதழில் ‘தைப்பொங்கல் அனைத்துத் தமிழர்களின் விழா கிடையாது, அதுவொரு இந்து மதப் பண்டிகையே’ என நான் ஒரு கட்டுரை எழுதியபோது பெரியளவில் எதிர்வினைகள் ஏதும் எழவில்லை. இம்முறை பொங்கலையொட்டி அதே கருத்தை நான் சமூக வலைத்தளங்களில் சொன்னபோது கன்னா பின்னாவென்று எதிர்வினைகள் கிளம்பலாயின. வழமைபோலவே ‘இது தமிழர்களைக் கூறுபோடும் முயற்சி’ என்றும் பல எதிர்வினையாளர்கள் சொல்லத் தயங்கவில்லை. அண்மைக்காலங்களில் ஆங்காங்கே கிளம்பும் ‘முப்பாட்டன் முருகன்’ போன்ற தமிழ்த்துவ எழுச்சிகள் இந்த எதிர்வினைகள் எனப் புரிந்துகொள்ள வேண்டியதுதான்.

இன்றைக்கு முப்பது வருடங்களிற்கு முன்புவரை இந்துகளைத் தவிர்ந்த ஏனைய மதத்தவர்கள் தைப் பொங்கல் கொண்டாடியதேயில்லை. முப்பது வருடங்களிற்கு உள்ளாக மிகச் சில கத்தோலிக்க ஆலயங்களில் மட்டுமே பொங்கலிடும் வழக்கம் நுழைந்திருக்கிறது. ஏனைய கிறிஸ்தவப் பிரிவுகளின் ஆலயங்களில் பொங்கலிடும் வழக்கம் இன்றுமில்லை. மசூதிகளிலும் பொங்கிப் படைக்கும் வழக்கமில்லை. இந்துகளைத் தவிர்த்த ஏனைய தமிழ்பேசும் மதத்தவர்கள் இன்றுவரை தங்களது வீடுகளில் பொங்கலைக் கொண்டாடுவதில்லை. அவ்வாறானால் இதை எவ்வாறு தமிழர்களின் பொது விழா என அழைக்கமுடியும்?

இன்றைக்கு ஓர் நூற்றாண்டுக்கு முன்புவரை தமிழ்ச் சமூகத்தில் தலித்துகளின் உரிமைகளும் நிலமைகளும் எவ்வாறிருந்தன என்பது எல்லோரும் அறிந்ததே. கோயிலிற்குள் நுழைய முடியாது, கோயில்களில் தேங்காய் உடைக்க முடியாது, பொதுக் குளங்களில் குளிக்க முடியாது, தண்ணீர் அள்ள முடியாது, நிலம் வைத்திருக்க உரிமையில்லை, பொது வழிகளில் நடமாடக்கூடாது, மேற்சட்டை அணிய முடியாது, தாலி கட்ட உரிமையில்லை, அவ்வளவு ஏன் சில பிரிவினருக்கு வீட்டில் பாயாசம் சமைக்கக் கூட உரிமையில்லை. அவ்வாறெனில் இந்த மக்கள் உண்மையில் பொங்கலைக் கொண்டாட வாய்ப்புகள் இருந்தனவா? பிற சாதித் தமிழர்களோடு பொங்கலைப் பகிர்ந்துண்டு களித்தார்களா? இல்லையெனில், வரலாற்றுரீதியாக இதுவொரு சாதி இந்துகளின் பண்டிகையே தவிர ஒட்டுமொத்தத் தமிழர்களின் பண்டிகை அல்ல.

எந்த நேரத்தில் வரலாறு என்ற பெயரை உச்சரித்தேனோ தெரியாது, பொங்கல் பிரியர்கள் பொங்கல் தமிழர்களின் ஆதி விழாவே என நிறுவுவதற்காக, சங்க காலம்வரை ஆதாரங்களைத் தேடிச் சென்றார்கள். அகநானூறில் ஆதாரம் இருக்கிறது என்றார்கள், புறநானூறில் ‘புரூவ்’ இருக்கிறது என்றார்கள். ஆனால் யாரும் இதுவரை உருப்படியாக ஓர் ஆதாரத்தைக் கூடக் காட்டியதில்லை. தை முதல் நாளில், தமிழர்கள் பொங்கல் விழா எடுத்தார்கள் என்பதற்கு எந்த இலக்கியத்திலிருந்தும் அவர்களால் ஆதாரங்களைக் காட்ட முடியவில்லை. எனவே, பழந்தமிழ் இலக்கியங்களில் காணக்கிடைக்கும், விவசாயத்திற்கு மழை அருளிய இந்திரனுக்கு புதியவற்றைப் பொங்கலிட்டு வழிபடும் ‘இந்திரவிழா’வின் எச்சமா இன்றைய பொங்கல் என நான் கேட்க வேண்டியிருந்தது.

தை முதல் நாளில் பொங்கலிடுவதின் காரணம், தாற்பரியம் மற்றும் வரலாறு குறித்து மிகத் தெளிவான குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன. தேடுதலில் ஆர்வமுள்ளவர்களிற்காக இணையம் முழுவதும் கட்டுரைகளும் ஆதாரங்களும் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றின் சாரங்களைத் தொகுத்துக்கொள்ளலாம்:

தை முதல் நாளில் சூரியனிற்கு பொங்கலிடும் வழக்கத்தின் அடிப்படை ‘மகர சங்கராந்தி’ ஆகும். புவி சூரியனைச் சுற்றி வந்தாலும், இந்துமத சாஸ்திரங்கள் பன்னிரெண்டு இராசிகளாகப் பிரிக்கப்பட்ட வான்வெளியில் சூரியன் நகர்வதாகக் கருதுகின்றன. இந்த நகர்வில் சூரியன் வடக்கு நோக்கித் தனது பயணத்தை திருப்புகின்ற நாள் -மகர இராசியினுள் பிரவேசிக்கும் நாள் – மகர சங்கராந்தி எனப்படுகிறது. சமஸ்கிருதத்தில் ‘சங்கரமண’ எனில் நகரத் தொடங்கு எனப் பொருள். இதுவே இந்நாளில் இந்துகள் சூரியனிற்குப் படையலிட்டு எடுக்கும் விழா ‘சங்கராந்தி’ என அழைக்கப்பட காரணமாயிற்று. பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் கும்பமேளா, மகர சங்கராந்தி அன்று தொடங்குகிறது. இந்த நாளில்தான் இன்றுவரை தைப் பொங்கலும் கொண்டாடப்படுகிறது. அதனால்தான் இந்துப் பஞ்சாங்கக் கணிப்புக்கு ஏற்றவாறு பொங்கல் விழாவும் ஓர் ஆண்டில் சனவரி 15ம் நாளும் இன்னொரு ஆண்டில் சனவரி 14ம் நாளும் கொண்டாடப்படுகின்றது. இந்த வருடம் பொங்கல் 14ம் தேதியா அல்லது 15ம் தேதியா எனத் தீர்மானிப்பது இராசிபலனும் சோதிடர்களும்தானே தவிர தமிழரின் வரலாறு அதைத் தீர்மானிப்பதில்லை.

இல்லை, இந்தப் பஞ்சாங்கத்திற்கும் தமிழர்களின் பொங்கலிற்கும் தொடர்பில்லையெனில் ஏன் பொங்கல் விழா ஒரு நிலையான நாளில் அல்லாமல் 14 – 15 என மாறி மாறிக் கொண்டாடப்படுகின்றது என நான் கேட்பேனா மாட்டேனா? இன்றுவரை தமிழ் பஞ்சாங்கக் கலண்டர்கள் இந் நாட்களைச் ‘சங்கராந்திப் பொங்கல்’ என்றே குறிப்பிடுகின்றன.

இந்த நாளை ஏதோ தமிழர்கள் மட்டும்தான் கொண்டாடுவதாகவும் இது தமிழர்களிற்கே உரித்தான விழாவாகவும் நினைத்துவிட வேண்டியதில்லை. இதே நாளை மகர ஜோதி, லோரி , உத்தராயண், மகர சங்கராந்தி அல்லது சங்கராந்தி என்று இந்தியா முழுவதிலுமுள்ள இந்துகள் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடுகிறார்கள்.

மூடத்தனமான இராசிபலன் கணிதத்தை முன்வைத்துக் கொண்டாடப்படும் விழாவையும், அந்நாளில் சூரியனையும் நெருப்பையும் வணங்கிக் கற்கால வழமையைத் தொடர்வதையும், தமிழர்களின் விழாவென ஏந்தித் தாங்குவதையும் எவ்வாறு புரிந்துகொள்ளவது? வேறொரு சரியான காரணம் எனக்குச் சொல்லப்படாதவரை இதைத் தமிழ்த்துவ முகமூடிக்குள் உறைந்திருக்கும் இந்துத்துவம் என்று மட்டுமே என்னால் சொல்ல முடிகிறது.

இந்துக்களின் கொண்டாட்டமாக இருந்துவந்த இந்த விழா எந்தக் கட்டத்தில் தமிழர்களின் விழாவென்ற குரலைப் பெறுகிறது? சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் மறைமலையடிகள் போன்றவர்கள் இந்தக் குரலை ஒலித்தாலும் இதை ஓங்கி ஒலித்தவர் தந்தை பெரியார்.

அவர் விடுதலை இதழில் (30.01.1959) இவ்வாறு எழுதினார்:

“தமிழனுக்குக் கடவுள், சமயம், சமய நூல், வரலாற்றுச் சுவடி, இலக்கியம் முதலியவை என்று சொல்ல எதுவும் காண மிகமிகக் கஷ்டமாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில், தமிழர் விழா என்பதாக நான் எதைச் சொல்ல முடியும்? ஏதாவது ஒன்று வேண்டுமே? அதை நாம் கற்பிப்பது என்பதும், எளிதில் ஆகக்கூடியவை அல்லவே என்று கருதிப் பொங்கல் பண்டிகை என்பதைத் தமிழன் விழாவாகக் கொண்டாடலாம் என்று முப்பதுஆண்டுகளுக்கு முன் நான் கூறினேன்.”

இங்கே பெரியார் பொங்கல் விழாவை தமிழ் மரபு , தொன்மை என்றெல்லாம் ஏதும் சொன்னாரில்லை. “ஏதாவது ஒன்று வேண்டுமே” என்பதற்காக தீபாவளியைக் காட்டிலும் சமயத்தன்மை குறைவாகக் காணப்படுகிறது என அவர் மதிப்பிட்ட பொங்கல் பண்டிகையைத் தமிழர் விழாவாகப் பரிந்துரைக்கிறார்.

அதேவேளையில் “நான் சொல்கிறேன் என்பதால் நம்பாமல் உங்கள் பகுத்தறிவால் நான் சொல்வதை ஆராய்ச்சி செய்து நல்லதை ஏற்று அல்லாததைத் தள்ளிவிடுங்கள்” என எப்போதும் உரைத்தவரும் பெரியார்தான். இருபத்தோராம் நூற்றாண்டில், இந்து சமயக் காலக்கணிதத்திற்கு உட்பட்டு சமஸ்கிருதமொழியில் பயன்பாடுள்ள ஒரு மடத்தனமான சாஸ்திரத்தை தமிழர் விழாவென நாங்கள் தூக்கிப்பிடிக்கத்தான் வேண்டுமா? சூரியன் தனுவை விட்டு மகர ராசிக்கு நகர்ந்தால் நமக்கென்ன மக்களே! அதுக்கெல்லாமா நாங்கள் விழா எடுக்க முடியும்!

தமிழர்களில் ஒரு பகுதியினர் மட்டுமே இந்து சமயக் காலக் கணித சாஸ்த்திரத்தின்படிக்குக் கொண்டாடும் ஒரு விழாவை ஒட்டுமொத்தத் தமிழர்களின் விழாவாக, ஏனைய மதத்தவர்கள் மீதும் எல்லாத் தமிழர்கள் மீதும் திணிக்கும் செயல் தமிழ்த்துவமா இல்லை இந்துத்துவமா?

சமூக வலைத்தளங்களில் மூர்க்கத்தோடு இயங்கும் இந்துத்துவ சக்திகளை நம்மால் எளிதாக அடையாளம் கண்டுவிட முடியும். ஆனால் நசிந்து நசிந்து “யார் என்ன செய்தாலும் என்ன… எனக்குப் பொங்கல் தின்னக் கிடைத்தால் சரிதான்” என்று மறைமுகமாக முட்டுக்கொடுப்பவர்கள்தான் ஆபாசமானவர்கள். இது வெறுமனே பொங்குதல், தின்னுதல் என்றளவில் நிற்கமட்டும் நமக்கென்ன பிரச்சினை. ஆனால் இதையொரு தமிழ் பண்பாட்டுப் பொது அடையாளமாக வலியத் திணிக்க முற்படும்போதுதான் நாம் மறுத்துப் பேச வேண்டியிருக்கிறது.

பொங்கல் விழாவால் தமிழர்களை ஒன்றிணைப்பதை, நான் கேள்விகேட்டுக் குழப்பிவிடுகிறேன் என்றுகூட ஒரு பொங்கல் பிரியர் எழுதியிருந்ததைப் பார்த்தேன். அய்யா! நீங்கள் சொல்வது போல தமிழர்கள் பல்லாயிரம் வருடங்களாகப் பொங்கலைச் சேர்ந்து கொண்டாடிவருகிறார்களென்றால் என்ன மயிருக்கு இந்தக் கணம்வரை சாதியாகப் பிரிந்துகிடக்கிறார்கள் எனக் கேட்கிறேன். தமிழர்களை வெறுமனே புக்கை, சுண்டல் கொடுத்து இணைக்கலாமென்றா நீங்கள் நினைக்கிறீர்கள்?

கிளிப்பிள்ளைக்குச் சொல்வதுபோல திருப்பித் திருப்பிச் சொன்னால், இப்போது தமிழர் ஆண்டென அழைக்கப்படும் பிரபவ-விபவ என்னும் அறுபது ஆண்டுகள் வட்டம் இந்துக் காலக் கணித முறையை (சக சம்வாட் ) அடிப்படையாகக்கொண்ட ஆண்டுவட்டம். இந்தக் காலக் கணித முறையில் இராசி சக்கரத்தில் தனு இராசியிலிருந்து மகர இராசிக்குள் சூரியன்நுழையும் நாளே தை மாதத்தின் முதல்நாள் ஆகிறது. இந்த நாள் நிலையானதல்ல. இராசிபலன் கணிப்பிற்கேற்ப முன்னும்பின்னுமாக மாறும். இந்த நாட்களில்தான், சோதிடர்கள் குறிக்கும் பஞ்சாங்க தினங்களில்தான் நீங்கள் சூரியனிற்குப் பொங்கல் இடுவீர்களானால் இது இந்து சாஸ்திர வகைப்பட்டதே ஒழிய இது ஒருபோதும் தமிழ்த்துவ விழாவாகாது.

சாஸ்திரங்களென்று சொன்னேன். “அதனால் இப்ப என்ன வந்தது?” என்று ஒரு சிறங்கைப் பொங்கல் உண்ட மிதப்பில் கேட்காதீர்கள். கீழே அண்ணல் அம்பேத்கர் சொல்வதைக் கவனியுங்கள்:

“நீங்கள் வீழ்த்த வேண்டிய எதிரி சாதியைக் கடைப்பிடிக்கும் மக்களல்ல. சாதிகளின் மதமான இந்து மதத்தை மக்களுக்குக் கற்றுத் தந்திருக்கிற சாத்திரங்களே உங்களின் பயங்கர எதிரி!”

-ஷோபா சக்தி
பிரபல எழுத்தாளர்

Saturday, November 21, 2015

உருது பேசும் முஸ்லிம்கள் தமிழர்கள் இல்லை.. - சீமான்

உருது பேசும் முஸ்லிம்கள் தமிழர்கள் இல்லை.. - சீமான்

யார் தமிழர் யார் தமிழர் இல்லi என்று பிரித்துக்காட்டும் உரிமையை சீமானுக்கு வழங்கியது யார்?

சீமானுக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்றே நினைக்கிறேன். உருது பேசும் முஸ்லிம்கள் முன்பு பட்டாண் என்ற ஊரில் மதக் கலவரம் வெடித்த போது தமிழகத்தில் வந்து குடியேறியர்கள். எனவேதான் பட்டாணி என்று அவர்களை சொல்வது வழக்கம். மொகலாயர் ஆட்சியில் மேலும் பல உருது முஸ்லிம்கள் தொழில் காரணமாக இடம் பெயர்ந்து தமிழகத்திலேயே தங்கி விட்டனர். பல தலைமுறைகளாக தமிழகத்தில் இருந்து இந்த மண்ணின் மைந்தனாகவே மாறி விட்டவர்களை 'தமிழர்கள் அல்ல' என்று இனம் பிரிப்பது எதற்காக?

இவரது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகன் மலையாளிதானே... பிரபாகரனின் தாய் தந்தை கேரள மலையாளிகள் என்பது அனைவருக்கும் தெரியுமே? ஒரு மலையாளிக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்று சீமான் என்றாவது கேட்டதுண்டா?

முதல்வர் ஜெயலலிதா கர்நாடகாவை சேர்ந்தவர். கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் தமிழகத்தை எப்படி ஆளலாம் என்று சீமான் என்றாவது கேட்டதுண்டா?

வை.கோபால்சாமியின் பூர்வீகமும் தெலுங்கு என்று சொல்கின்றனரே? அவரை பார்த்து இந்த கேள்வியைக் கேட்டாரா சீமான்?

பார்பனர்களின் தாய் மொழி சமஸ்கிரதம். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பஞ்சம் பிழைக்க தமிழகத்தில் குடியேறியர்கள். இன்று தமிழையும் நன்றாக படித்து இந்த மண்ணுக்கு உரியவர்கள் ஆகி விட்டனர். பார்பனர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்ல சீமானுக்கு தைரியம் வருமா?

கருணாநிதி, மற்றும் விஜயகாந்த் முன்னோர்களை எடுத்துப் பார்த்தால் தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர்கள் என்கின்றனர். கலைஞரையும், விஜயகாந்தையும் தமிழர்கள் இல்லை என்று சொல்ல சீமானுக்கு தைரியம் வருமா?

மொழி என்பது மனிதன் இன்னொரு மனிதனோடு உரையாட உறவாட இறைவனால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு. அதனை ஆக்கபூர்வமாக சிந்தித்து தமிழ் மொழியை எவ்வாறு மேலும் சிறப்பாக்கலாம் என்று சிந்திக்க வேண்டும். உலக மக்கள் அனைவரையும் நேசிக்க வேண்டும்.

'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்பது நமது முன்னோர் வாக்கல்லவா?

மொழிப் பற்று இருக்கலாம்: அதுவே மொழி வெறியாக மாறினால் சீமானைப் போல் உளருவாயன்களாக திரிய வேண்டியதுதான்.

ஒரு முறை புசைலா என்ற சஹாபி பெண்மணி நபி அவர்களிடம் வந்து "இறைத்தூதரே நான் என் சமூகத்தை நேசிப்பது இன வெறியா" என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள் "தன் சமூகத்தை ஒருவன் நேசிப்பது இன வெறி அல்ல. மாறாக தன் சமூகத்தை சார்ந்தவன் வரம்பு மீறி அநீதியை செய்யும்போது அவன் செய்வது தவறு என்று தெரிந்தும் அவன் தன் சமூகத்தைச் சார்ந்தவன் என்பதற்காக அவனுக்கு உதவினால் அதுவே இனவெறி" என்றார்கள்.

- நூல்: அஹ்மத்

Friday, July 10, 2015

சாதித் தீ பரவும் களம் ஆகிறதா கொங்கு மண்டலம்?



ஓர் ஆதிக்க சமூகத்துக்கும் தலித் சமூகத்துக்கும் இடையே பிரச்சினை என்றால் அது தமிழகத்தின் தென் பகுதியிலேயேதான் நடந்திருக்க வேண்டும் என அறியப்பட்டு வந்த காலம் மலையேறிவிட்டது.

இதுநாள்வரை இருந்த அந்த கண்ணோட்டத்தை பொய்க்கச் செய்துள்ளது, அண்மையில் தலித் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவமும், எழுத்தாள்ர் பெருமாள் முருகன் எழுத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட சம்பவமும்.

மேற்கு மண்டலத்தில் நடந்த இந்த இரண்டு சம்பவங்களும், தமிழகத்தின் அப்பிராந்தியம் சாதியம் சுடச்சுட பொங்கும் மையமாக உருவெடுத்து வருகிறது என்பதை உணர்த்துவதாக உள்ளது.

1990-களில் நடந்த சாதிச் சண்டைகளை யாரும் மறந்திருக்க முடியாது. அதன் எதிரொலியாக அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு, அனைத்து பொது போக்குவரத்துக் கழகங்கள், அரசாங்க சாலைகள், அரசு கட்டிடங்களுக்கும் சாதித் தலைவர்கள் பெயரை பயன்படுத்துவதற்கு தடை விதித்தது. சாதியின் பெயரில் பிளவு ஏற்படுவதை தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டது.

என்றாலும், இதுமட்டுமே சாதிய அடக்குமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடாது அல்லவா? அப்படித்தான், கொங்கு மண்டலத்தில் அரங்கேறும் சாதிய அடக்குமுறைகள் இவ்விவகாரத்தில் தென் மாவட்டங்களை பின்னுக்குத் தள்ளியுள்ளது.

பெருமாள் முருகனுக்கு என்ன நேர்ந்தது. அவரை சொந்த மண்ணில் இருந்து வெளியேற எது உந்தியது? சில சாதி அமைப்புகளால் பெருமாள் முருகனின் மாதொருபாகன் எதிர்க்கப்பட்டது எதற்காக? கோகுல்ராஜ் என்ற தலித் இளைஞர் கொல்லப்பட்டதன் பின்னணி என்ன? இதற்கான பதில்கள் கொங்கு மண்டலத்தில் சாதியத்தின் தாக்கத்தை விளக்கும்.

இவற்றுக்கெல்லாம் பலம் சேர்ப்பதுபோல், சாதி அமைப்புகள், சமூக வலைத்தளங்கள் தங்களது வகுப்புவாத தர்க்கங்களை பெரும் பிரிவினரிடம் எடுத்துச் செல்ல வெகு நேர்த்தியாக பயன்படுத்திக் கொள்கின்றன.

கொங்கு மண்டலத்தின் சாதியம் குறித்து எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை கூறும்போது, "கொங்கு மண்டலம் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் அது தோற்றப்பிழை. கொங்கு மண்டலத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சிலநேரங்களில் சத்தமில்லாமலும், பல நேரங்களில் மிகுந்த வன்மத்துடன் இத்தகைய கொடுமைகள் நடக்கின்றன. பெருமாள் முருகனின் புறக்கணிப்பும், கோகுல்ராஜின் படுகொலையும் போதும் ஆதிக்க சாதியினரின் எண்ண ஓட்டத்தை எடுத்துரைக்க" எனத் தெரிவித்துள்ளார்.

அறியப்படாத அருந்ததியர்...

தலித் சமூகத்தின் இரு பெரும் பிரிவினரான பள்ளர், பறையர் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் அதிகளவில் இருக்கின்றனர். கல்வியும், நிலமும் பள்ளர்களுக்கு ஒரு விதத்தில் சமூக அந்தஸ்தை அளித்திருக்கிறது என்றால், வடக்குப் பகுதியில் சில தலித் தலைவர்களால் பறையர் இனத்தவர் அரசியல் அடையாளம் பெற்றுள்ளனர்.

ஆனால், இவர்கள் இருவருக்கும் கிடைத்த இந்த அடையாளம்கூட அருந்ததியர் இனத்தவருக்கு கிடைக்கவில்லை. அருந்ததி இனத்தவர்கள் இன்னமும் இச்சமூகத்தினரால் அறியப்படவில்லை. அருந்ததி இனத்தவர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அருந்ததி இனத்தவரை இழிவுபடுத்தும் சொலவடைகள் கொங்கு மண்டலத்தில் பரவலாக, சர்வ சாதாரணமாக காணப்படுகின்றன.

அருந்ததி இனத்தவர் புறக்கணிப்பு குறித்து எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை கூறும்போது, "கோகுல்ராஜ் கொலை வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலையீடு அரசின் கவனத்தை ஈர்த்தது. ஆனால், கோகுல்ராஜூக்கு ஏற்பட்ட நிலை கொங்கு மண்டலத்தில் அருந்ததி இனத்தைச் சேர்ந்த இளைஞருக்கு ஏற்பட்டிருந்ததால், விவகாரம் இதே அளவிளான வீச்சை பெற்றிருக்கும் என்று என்னால் அறுதியிட்டுச் சொல்லமுடியாது" எனக் கூறியுள்ளார்.

அதேவேளையில் கொங்கு மண்டலத்தின் போக்கு குறித்து இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களுள் ஒருவரான கே.சுப்பராயன் கூறும்போது, "கொங்கு மண்டலத்தை தென் மண்டலத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பது சரியாகாது. கொங்கு மண்டலத்தில், அண்மைகாலமாக உருவாகிவரும் சாதிய அடக்குமுறைகளுக்கு சில சாதிய சக்திகள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள எடுக்கும் முயற்சிகளே காரணம்" என்றார்.

மேலும் அவர் கூறும்போது "ஏஐடியுசி தொழிற்சங்கத்துடன் இணைந்த பிராமண, தலித் தோழர்கள் கொங்கு மண்டல ஜவுளி தொழிற்சாலைகளில் பாகுபடின்றி பழகுவதையும், சமமாக அமர்ந்து உணவு உட்கொள்வதையும் நான் பார்த்திருக்கிறேன். உழைக்கும் வர்க்கத்தினரிடம் எந்த பாகுபாடும் இல்லை.

ஆனால், உழைக்கும் வர்க்கத்தினரின் ஒற்றுமை பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதாயம் சேர்க்காது என்பதால் அவர்களே உழைக்கும் வர்க்கத்தினர் மத்தியில் வகுப்புவாதத்தை தூண்டுகின்றனர். மாஞ்சோலை, வால்பாறை டீ எஸ்டேட் தொழிலாளர்கள் நலனுக்காக குரல் கொடுத்தது கம்யூனிஸ்டுகளே. ஆனால், காலப்போக்கில் அரசியல் அடையாளத்துக்கான வேட்கை தொழிலாளர்கள் சாதி சார்ந்த யூனியனில் இணைத்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளியிருக்கிறது" எனக் கூறியுள்ளார்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
09-07-2015

Saturday, June 27, 2015

"பூச்சாண்டி" யாருக்காவது காட்டியிருக்கிறீர்களா?



அக்காலத்தில் சமணர்கள், உடலில் திருநீறையும், நாமமும் இட்டுக்கொள்ளும் வைதீகர்களை "பூசிய ஆண்டிகள்" என கூறி அவர்களை கண்ணால் பார்த்தாலும் பாவம், அவர்களின் குரலை கேட்டாலும் பாவம் என்ற பொருள்படும் "கண்டு முட்டு, கேட்டு முட்டு" என்ற ஒருவகை பயம் கலந்த சொல்லாடலை உபயோகித்து வந்தனர். அந்த அளவு வைதீகத்தை போதித்தவர்களின் செயல்கள் கர்ண கொடூரமாக இருந்தது. உடலில் திருநீறு பூசிய சிவனடியார்களையும், நாமம் பூசிய வைணவ தாசர்களையும் வீதியில் கண்டால் சமணர்கள் உடனே தங்கள் வீட்டின் வாசல்கதவை பூட்டி உள்ளே ஒளிந்து கொள்வார்களாம். அவர்கள் போன பின்னே கதவை திறந்து வெளிவருவார்களாம். அந்த அளவு தெய்வங்களின் பெயரால் சமணர்கள் கொடுமையை அனுபவித்திருக்கிறார்கள்.

சமணர்கள் தங்கள் வீட்டு பெண்களையும், குழந்தைகளையும் அச்சுறுத்த "பூசிய ஆண்டிகளை" காட்ட வைத்து விடுவேன் என்று கூறுவார்களாம்.

பூச்சாண்டி காட்டுதல் என்ற பிரயோகம் "பூசிய ஆண்டி"களை காட்டுவதான சமணர் காலத்திய அச்சுறுத்தலின் பிற்கால திரிபாகும். அடுத்தமுறை பூச்சாண்டி காட்டாதே என்று கூறுமுன் எதிராளி ஒரு சமணரா என்று உறுதி செய்து கொள்ளவும் ! :-) எங்கள் ஊரிலும் சிறு குழந்தைகளை பயமுறுத்த 'பூச்சாண்டியிடம்' பிடித்துக் கொடுத்து விடுவேன் என்று அன்னையர்கள் தங்கள் குழந்தைகளை மிரட்டுவதை இன்றும் காணலாம்.

கோயிலில் தமிழில்லை - புரட்சிக் கவிஞன் பாரதிதாசன்



தமிழன் தமிழக கோயிற் கடவுளுக்கு அருச்சனை செய்விக்கச் செல்லுகின்றான். கருவறைக்கு இப்புறமே நிற்கின்றான். அருச்சகன் அருச்சனைக்குக் கூலி கேட்கின்றான். தமிழ் பெரியார் ஒருவர் குறுக்கிட்டுத் தமிழனுக்கு அறிவுறுத்துகிறார்.

பெரியார்:

சிவனாரை வழிபடத் திருக்கோயி லிற்புகுந்ததால்
இவன் வழிமறித்து நில்லென்றான் நில்லென்றான்

தமிழன்: இவனே கருவறைக்குள் இருக்கத் தகுந்தவனாம்
எட்டி இருந்துசேதி சொல்லென்றான் சொல்லென்றான்...

பெரியார்:
கருவறைக்குள் இவன்தான் கால் வைக்க வேண்டும்
என்றால் சரியான காரணமும் வேண்டுமே வேண்டுமே?

தமிழன்:
சுரர்களில் பூசுரனாம் நாமெல்லாம் சூத்திரராம்
சூத்திரன் தாழ்ந்தவனாம் யாண்டுமே! யாண்டுமே!!

பெரியார்: தேவனும் இவனானால் தேவருல கிருக்கப்
பூவுல கைச்சுரண்டல் ஆகுமா? ஆகுமா?

தமிழன்:
பூவுல கைக்காக்கப் புறப்பட்ட பேர்வழிகள்
சுரண்டாவிட்டால் பொழுதுபோகுமா? போகுமா?

பெரியார்: அப்பனுக் கருச்சனை அவன்தானே செய்ய வேண்டும்?
அருச்சனை நீபுரிந்தால் தீமையா? தீமையா?

தமிழன்: அருச்சனை தமிழாலே அய்யய்யோ நடத்தினால்
அப்பன் கதை முடிந்து போமையா! போமையா!!

பெரியார்:
தமிழ்ஒலி யால்செவித் தகடுகிழியும் சிவம்
நமக்கெதற் காந்தம்பி இவ்விடம்? இவ்விடம்?

தமிழன்: சமக்ருதம் செத்தும் அதன் பேரையும் சாகடித்தால்
நமக்கெல்லாம் வாழ்விடம் எவ்விடம்? எவ்விடம்?

பெரியார்:
தமிழைக் கெடுக்க வந்த வடமொழி மறைவதால்
நமக்கொரு கேடுமில்லை நல்லதே நல்லதே.

தமிழன்:
சமக்ருதம் தேவமொழி தமிழுக்கும் தாய்மொழி
தமிழரைக் காத்திடவும் வல்லதே! வல்லதே!

பெரியார்: தாய்மொழி தனிமொழி உலகத்தின் தாய்மொழி
சமக்ருதம் கலப்பட நஞ்சப்பா! நஞ்சப்பா!
சுமந்தபொய் மூட்டையும் சும்மாடும் பறந்திடத்
தூயோர் பறக்கடித்த பஞ்சப்பா! பஞ்சப்பா!

குயில் 9.8.1960 (தமிழுக்கும் அமுதென்று பேர், பக்கம் 103 -104)


Tuesday, May 26, 2015

ஏகன் அனேகன் இறைவனடி போற்றி - திருவாசம்‬

திரு சென்னி மலை!

//ஏகன் அனேகன் இறைவனடி போற்றி,
---‪#‎திருவாசம்‬
திருவாசக சித்தர் அண்ணன் Nazeer Ahamed இங்கு வந்து இந்த பாடல்களுக்கு நபிவழி விளக்கம் அளிப்பார் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது,//

“திருவாசகத்தில் “ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க” என்று ஒரு வாக்கியம் இருக்கு. அதில் ஏகன் என்றால் ஓர் ஆள், அனேகன் என்றால் பல ரூபங்களில் இருக்கும் ஒரே ஆள் என்று அர்த்தம்.

ஒரு மனிதனுக்குள்ளே குடும்ப சூழலில் பல எண்ணங்கள் வருவதைப் பார்க்கிறோம். அன்பு, பணிவு, அடக்கம், கோபம், தாபம், நெகிழ்வு, காமம் ஊடல் என்று பல தன்மைகளை இந்த மனிதன் எடுக்கிறான். ஆனால் அந்த மனிதன் ஒருவன்தான்.

அதே போல் இறைவனானவன் தனது அடியார்களைப் பார்த்து சந்தோஷமடைகிறான், சிலரைப் பார்த்து சிரிக்கிறான், இன்னும் பலரைப் பார்த்து கோபப்படுகிறான். குணங்கள் மனிதர்களின் செயல்களைப் பார்த்து மாறுகிறதே யொழிய அந்த இறைவன் ஒருவன்தான். ஒரு இறைவன்தான் மனிதர்களுக்கேற்ப பல தன்மைகளை பெறுகிறான்.

இந்த இறைவனின் தன்மைகள் 99 ஐத்தான் நான் போன பதிவில் குர்ஆனிலிருந்து எடுத்து பதிவிட்டேன். நபிகள் நாயகமும் குர்ஆனும் எதைச் சொல்கிறதோ அதனைத்தான் தேவாரமும் கூறுகிறது. இந்து மதமும் இதே போல் இறைவனின் தன்மைகளை பட்டியலிடுகிறது. அனால் சென்னி மலை போன்றோர் இதனை தவறாக விளங்கிக் கொண்டு அந்த இறைவன் ஒருவனல்ல... பலவாக பிரிந்து விட்டான் என்ற கற்பனையில் உள்ளனர். ஆக்குவதற்கு ஒரு கடவுளும், அழிப்பதற்கு ஒரு கடவுளும், காப்பதற்கு ஒரு கடவுளுமாக எண்ணற்ற கடவுள்களை கற்பனையில் உருவாக்கி விட்;டனர். அவர்களுக்கு உண்மையை விளக்கி நேர் வழியில் கொண்டு வருவது நம்மவர்களின் கடமை. அதனைத்தான் இந்த பதிவும் சொல்கிறது.

'கடவுள்களைப் பூமியிலிருந்து இவர்கள் தயாரிக்கிறார்களா? இவர்கள் கூறும் அந்த கடவுள்கள் உயிர் கொடுத்து எழுப்புவார்களா?'

'வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் அனைத்தும் சீரழிந்திருக்கும். அவர்கள் கூறுவதை விட்டும் அர்ஷூக்கு அதிபதியான அல்லாஹ் தூயவன்'

-குர்ஆன் 21: 21,22

Monday, May 25, 2015

தேவாரம் - கல்லைக் கட்டிக்கொண்டு கரை சேர.....

தேவாரம் - கல்லைக் கட்டிக்கொண்டு கரை சேர

நமச்சிவாய பதிகத்தில் முதல் பாடல்...

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக்
கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற்
பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே.

பொருள்:

சொற்றுணை = சொல் + துணை = சொல்லுக்கு துணையான

வேதியன் = வேதங்களுக்கு தலைவனான

சோதி = சோதி வடிவாய் உள்ளவன்

வானவன் = வானத்தில் உள்ளவன்

பொற்றுணைத் = பொன் போன்ற துணை உள்ள

திருந்தடி = திருவடி

பொருந்தக் கைதொழக் = மனமும், கையும் அவன் திருவடியில் பொருந்துமாறு கை தொழ

கற்றுணைப் பூட்டியோர் = கல்லைக் கட்டி

கடலிற் பாய்ச்சினும் = கடலில் தூக்கி போட்டாலும்

நற்றுணை யாவது = நல்ல துணையாவது

நமச்சி வாயவே. = நமச்சிவாய என்ற அந்த நாமமே

----------------------------------------------------

கடல் என்றால் இந்தப் பிறவி பெருங்கடல். இந்த பிறவி கடலை சும்மா நீந்தி கடப்பதே கடினம், இதில் கல்லை வேறு கட்டிக்கொண்டு எப்படி நீந்துவது?

கல்லுனா எது ? உறவுகள், பந்த பாசங்கள், ஆசைகள், கோபம், தாபம் போன்ற மன மாசுகள் ... இத்தனை கல்லை கட்டி கொண்டு இந்த பிறவிப் பெருங்கடலை எப்படி நீந்தி கரை சேருவது?

இறைவனின் திரு நாமம் இருந்தால், அந்த கற்கள் கூட தெப்பமாய் மாறி சுகமாக கரை சேர முடியும்.

திருநாவுக்கரசர் இறைவனின் உதவியைப் பற்றி இவ்வாறு பாடியிருக்க நமது தமிழகத்தில் இந்த பாடல் சம்பந்தமாக ஒரு வரலாற்று நிகழ்வையும் சொல்வர். அதனையும் பார்ப்போம்.

திரு நாவுக்கரசர் சைவ சமயத்திற்கு மாறியதால், சமணர்கள் மிகுந்த சினம் கொண்டனர். அவர்கள், அரசனிடம் சொல்லி நாவுக்கரசருக்கு தாங்கொண்ணா துன்பங்களை தந்தனர்.

அதில் ஒன்று நாவுக்கரசரை கல்லில் கட்டி கடலில் தூக்கி எரியச் செய்தது.

அப்படி கடலில் போட்டவுடன், அவர் இறைவனை நினைத்து உள்ளம் உருகி நமச்சிவாயப் பதிகம் பாடினார்.

அவரை கட்டியிருந்த கல் தெப்பமாய் மிதந்தது. அதில் ஏறி கரை சேர்ந்தார்.

இது நடந்தது கடலூருக்கு அருகில் தேவனாம் பட்டினம் என்ற கடற்கரையில்.

இன்றும் அங்கு "கரையேற விட்ட குப்பம்" என்று ஒரு இடம் உண்டு. அப்பர் கரையேறிய இடம்.

இது உண்மையான வரலாறா? அல்லது சமணர்களை மட்டம் தட்ட சைவ சமயத்தவர் செய்த கட்டுக் கதையா என்பது இன்றும் விவாதத்தில் உள்ளது. இதே கதையை மையமாக வைத்து தான் கமலஹாசனும் தசாவதாரம் படத்தின் மூலமாக இந்த கதையை எடுத்தாண்டிருப்பார்.


இந்த தேவாரப் பாடல் இறைவனுக்கு இலக்கணமாக எதனைச் சொல்கிறதோ அதனையேதான் இஸ்லாமும் இறைவனுக்கு இலக்கணமாக வைக்கிறது. ஆதிகால தமிழர்கள் இறைவனைப் பற்றிய புரிதலில் மிகத் தெளிவுடனேயே இருந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

--------------------------------------------------------------


'உங்களுக்காக எனக்கு கொடுத்து அனுப்பப்பட்டதை இறை வேதத்தை உங்களுக்கு எடுத்துச் சொல்லி விட்டேன். நீங்கள் புறக்கணித்தால் உங்களையன்றி வேறு சமுதாயத்தை அவன் உங்களுக்குப் பகரமாக ஏற்படுத்துவான். அவனுக்கு நீங்கள் எந்தத் தீங்கும் தர முடியாது. என் இறைவன் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவன்'

-குர்ஆன் 11:57

மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற அபிசீனிய அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் அவரது சொல்லைக் கேட்டு நடங்கள். அவருக்குக் கீழ்ப்படியுங்கள்!

(ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

Saturday, May 23, 2015

விருத்த சேதனம் பண்ணும் விழாவிலும் கூத்தாடிகள்!



ஆண்கள் தங்களின் பிறப்பு உறுப்பில் உள்ள நுனித் தோலை வெட்டி விடுவதற்கு விருத்த சேதனம் என்று சொல்கிறோம். இதனை இஸ்லாமியர்கள் அனைவரும் கண்டிப்பாக செய்வர். நபிகள் நாயகம் இதனை அனைவரும் செய்து கொள்ளுங்கள் என்று கட்டளையிட்டுள்ளனர். எப்படி ஆண்கள் தாடி வைப்பது ஒரு நபி வழியோ அது போல் சுன்னத் என்று அறியப்படும் இந்த விருத்த சேதனம் ஒரு நபி வழி. இதனை செய்து கொள்வதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் தாம்பத்ய வாழ்வும் சிறப்பாக இருக்கும் என்பது மருத்துவ அறிஞர்களின் ஒரு மித்த கருத்தாகும்.

இந்த ஒரு நிகழ்வை இன்றும் சில மார்க்கம் அறியாத இஸ்லாமியர் வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர். இதே போன்ற நபி வழியான தாடி வைத்துக் கொள்வதற்கு டிஜிடல் போர்டு யாரும் வைப்பதில்லை. எல்லோரையும் அழைத்து விருந்து பரிமாறுவதில்லை. மாலைகள் அணிவித்து அழகு பார்பதில்லை. வசதியற்ற பெற்றோர் கடன்களை வாங்கியாவது விருத்த சேதன நிகழ்வை விமரிசையாக கொண்டாடும் கொடுமையை பார்க்கிறோம். மேலும் சிலர் கூத்தாடிகளை முக்கியத்துவப்படுத்திபோ ஸ்டர்களும் அடிக்கின்றனர். ஒரு சில வீடுகளில் சினிமா பாட்டுக் கச்சேரியும் நடக்கும்.

இதற்கு செலவிடும் தொகையை ஒரு ஏழை மாணவனின் படிப்பு செலவுக்கு தரக் கூடாதா? வீடில்லாமல் எத்தனையோ குடும்பங்கள் பிளாட்பாரங்களில் காலம் தள்ளுகின்றனரே! அவர்களுக்கு ஒரு குடிசை அமைத்துக் கொடுக்கக் கூடாதா?

வசதியுள்ளவர்கள் பணத்தை இது போன்று ஆடம்பர களியாட்டங்களில் செலவழித்தால் இறைவனின் சாபம் உண்டாகும் என்பதை ஏனோ இவர்கள் உணர்வதில்லை. மார்க்க அறிஞர்கள் என்ற பெயரில் இதற்கும் சென்று ஃபாத்திஹா ஓதி விட்டு விருந்தும் சாப்பிட்டு வருபவர்களை நினைத்தால் அழுவதா சிரிப்பதா என்றும் தெரியவில்லை.

ஒரு முறை சவுதியின் ரியாத் நகரில் 57 வயது மதிக்கத்தக்க ஒரு இந்து நண்பர் எங்களிடம்......

'இஸ்லாமிய கொள்கை எனக்கு பிடித்துள்ளது. இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளேன். ஆனால் இந்த விருத்த சேதனம் என்ற சுன்னத் செய்வதில் எனக்கு பயமாக உள்ளது. அதுதான் எனக்கு தடை' என்றார்.

'விருத்த சேதனம் என்பது தாடி வைப்பது போன்று நபி அவர்கள் வலியுறுத்திய ஒரு நடைமுறை. தாடி வைக்காமல் எத்தனையோ முஸ்லிம்கள் இல்லையா? எனவே நீங்கள் விரும்பா விட்டால் விருத்த சேதனம் பண்ணித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இஸ்லாத்தில் இல்லை. 60 வயதை நெருங்கி விட்ட உங்களுக்கு இனி விருத்த சேதனம் செய்தும் பயன் இல்லை. எனவே இஸ்லாத்தை ஏற்பதற்கு இது ஒரு தடை இல்லை' என்பதை விளக்கினோம்.

நாங்கள் சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டு பிறகு பலரிடம் விசாரித்துத் தெரிந்து கொண்டு இஸ்லாத்தை அந்த சகோதரர் ஏற்றார். தற்போது தனது குடும்பத்தவரையும் இஸ்லாத்தை ஏற்க வைத்துள்ளார்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

‪‎நரி‬ ‪‎குறவர்‬ ‪‎சமுதாயத்திற்க்கும்‬ சென்றடைகிறது சத்திய மார்க்கம்

‪‎

நரி‬ ‪‎குறவர்‬ ‪‎சமுதாயத்திற்க்கும்‬ சென்றடைகிறது சத்திய மார்க்கம்

‎TNTJ‬ ‪‎நாகை‬ #‎வடக்கு‬ மாவட்டம் சார்பாக ‪‎செம்பனார்‬கோவில் என்ற ஊரில் 22/05/2015 அன்று நரி குறவர்கள் வசித்து வரும் பகுதிக்கு சென்று அந்த மக்களை அழைத்து " ‎கடவுள் ‎என்றால்‬ யார்? ", " கடவுளுக்கான இலக்கணம் ‎என்ன‬? ", " அவனை ‎வணங்குவதனால்‬ என்ன பயன்? " & "மனிதன்‪ ‎தோன்றிய‬ வரலாறு" என்ற செய்திகளை அம்மக்களுக்கு விளக்கமாக கூறப்பட்டது.மேலும் இஸ்லாம் நமக்கு வழிகாட்டும் குடும்பவியல் பற்றி பேசும் பொழுது ஆங்காங்கே இருந்த பெண்கள் தங்கள் குழந்தைகளோடு ஆர்வமாக அருகில் வந்து நமது உரையை கேட்டனர்.
இறுதியாக இஸ்லாத்தை பற்றிய சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும் தாராளமாக நீங்கள் கேட்கலாம் என்று சொல்லப்பட்டது.அதற்கு அம்மக்கள் நீங்கள் கூறிய கடவுள் கொள்கை தெளிவாக புரிந்தது என்று கூறினார்கள்.

மேலும் எங்கள் மக்கள் அதிகம் வாழும் அரசூர் ஜே.ஜே.நகர் என்ற பகுதிக்கு வந்து இது போன்ற விளக்கத்தை தரும்படி நமது ஜமாஅத்தினர்க்கு அன்பான அழைப்பையும் விடுத்தனர்.இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக வருகிறோம் என்று கூறி அவர்களிடமிருந்து விடைபெற்றனர்

இஸ்லாமிய மார்க்கத்தை யார் வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ளலாம் என்பதற்கு இது ஒரு சான்று , ‪#‎தீண்டாமை‬என்ற மனோஇச்சையை தூக்கி எறிந்த ஒரே ‪#‎மார்க்கம்‬இஸ்லாம் மட்டுமே !!! , அல்லாஹூ அக்பர் , விரைவில் அல்லாஹ் இவர்களுக்கு நேர்வழி தருவானாக!!!

49:13. மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளை களாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால், உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலென்று பெருமை பாராட்டிக் கொள்வதற் கில்லை.) எனினும், உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ, அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந் தவனும் நன்கு தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.

குறிப்பு:- இவ்வாறான தாவா பணியை அனைத்து கிளைகளும்.,அனைத்து இயக்கங்களும் செய்தால்.,நன்றாக அமையும்.

-Muhammad Siddiq Ibn Kalifullah

Friday, May 22, 2015

இஸ்லாம், கிருத்தவம், இந்து மூன்றுமே இந்த மண்ணுக்கு அந்நியம்தானே!



திரு ஹானஸ்ட் மேன்!

//இந்துமதம் இன்று படுபாதாலத்தை நோக்கி சென்றுகொண்டிருப்பது என்பது உண்மையே. உங்கள் வருத்தம் கலப்பு ஏதுமற்ற உண்மையானது. அது உங்கள் உள்ளத்தின் அடி ஆழத்திலிருந்து வருகிறது என்பது எனக்கு நன்றாக தெரிகிறது. இப்படி இந்து மதத்தின்மீது அளவுகடந்த பக்திகொண்ட நீர் அதை தடுத்து நிறுத்த உங்களின் செயல் எதுவும் வேண்டாம் atleast உங்களின் ஆக்கப்பூர்வ கருத்துக்களை இங்கே சொல்லலாமே! அதற்கு மாறாக ”””’அந்நிய””” மதத்தவர்களின் கொள்கைகளுக்கு ஜால்ரா போடுவதுதான் எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. அவர்கள் உங்களை பாராட்டுவதும் நீங்கள் அவர்களை ஆஹா ஓஹோ போற்றுவதும் கொஞ்சமும் சகிக்கவில்லை//

ஆர்எஸ்எஸின் போதனைகள் உங்களின் மனதில் எந்த அளவு அழுக்கை விதைத்திருக்கிறது என்பதை உங்கள் எழுத்தே காட்டிக் கொடுக்கிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற கணியன் பூங்குன்றனாரின் பரந்த எண்ணத்துக்கு எப்போது வரப் போகிறீர்கள். இந்துத்வாவின் குறுகிற மன ஓட்டத்தை எப்போது கைவிடப் போகிறீர்கள்?

அந்நிய மதம் என்று இஸ்லாம் கிருத்தவத்தை மட்டும் ஏன் சொல்ல வேண்டும். இந்து மதம் தமிழனுக்கு அந்நிய மதம்தானே! ஆரிய படையெடுப்புக்கு முன்பு இந்து மதமோ, சமஸ்கிருதமோ தமிழன் அறியாதவைகள்தானே! ராமன், சீதை வாழ்ந்த பெரும்பாலான பகுதிகள் இன்று தாலிபான்கள் கையில் அல்லவா உள்ளது? மொகலாயர் ஆட்சிக்கு முன்பு சேர, சோழ, பாண்டிய, பல்லவ நாடுகள் என்று தமிழகமே நான்கு நாடுகளாகவல்லவா பிரிந்து கிடந்தது? இஸ்லாமியருமு;(மொகலாயரும்), கிருத்தவரும் (ஆங்கிலேயர்) இல்லை என்றால் அகண்ட பாரத் ஏது? எனவே இந்து, கிருத்தவம், இஸ்லாம் என்ற இந்த மூன்று மதங்களும் இந்த நாட்டுக்கு அந்நியமே! மூன்றையும் ஒரே தரத்தில் வைத்தே பார்க்க வேண்டும்.

//அவர் இந்தியனாக இருப்பதில் நமக்கு ஒருவித ஆட்சபனையும் இல்லை. ஆனால் அவர் ”அந்நிய” மதமான இஸ்லாமியராக இருப்பதும் இந்துக்களை கிண்டலடிப்பதும் எனக்கு பிடிக்கவில்லை.//

இன்று இஸ்லாமியராக இருந்தாலும் ஒரு காலத்தில் எனது முன்னோர்களும் இந்துக்கள்தானே. தனது பூர்வீக மதம் முகவரி இழந்து பொய்க் கொண்டிருக்கிறதே என்ற ஆதங்கத்தில் வரும் வார்த்தைகளே அவை. எடுத்துச் சொல்லும் குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சியுங்களேன்.

//தன்னை பெற்ற தாய் நோய்வாய் பட்டால் .அவளை குணபடுத்த முயற்சிக்கவேண்டுமே அன்றி அவளை ஒதுக்கிவிட்டு எதிர் வீட்டு (இன்னொருத்தனின்) அம்மாதான் எனக்கு அம்மா என்று கூறுவது சரியா (((அதாவது இந்து மதத்தில் தவறுகள் இருந்தால் அதை திருத்த முயல்வதற்கு பதிலாக ”அந்நிய” மதம்தான் சிறந்த மதம் அதுதான் இனி என் மதம் என்று கூறுவது போல) நான் கூறுவது தவறா என்று உங்களுக்கு free time கிடைக்கும்போது ஆற அமர சிந்தித்து பாருங்கள். நல்ல ஒரு விடை கிடைக்கும்.//

அதையே தான் நானும் சொல்கிறேன். தமிழனுக்கு ஆரிய மதமான இந்து மதம் பூர்வீக மதம் அல்ல. சந்தர்ப்ப வசத்தால் சில குழந்தைகள் மாற்றாந்தாய் அல்லது செவிலித்தாய் பராமரிப்பில் வளருவதில்லையா? அது போல்தான் ஆரிய படையெடுப்பால் இன்று தமிழனின் தொன்மையான வழிபாட்டு முறைகள் மறைக்கப்பட்டு ஆரிய வழிபாடுகள் முன் நிறுத்தப்பட்டன. கோவிலில் இருந்த தமிழ் வழிபாட்டு முறை நீக்கப்பட்டு சமஸ்கிரதம் வலிந்து உள்ளே புகுத்தப்பட்டது. ஆட்சியாளர்கள் ஆரிய மயமாக்கலுக்கு உறுதுணையாக இருந்ததால் இது இலகுவாக சாத்தியப்பட்டது. அது இன்று வரை தொடர்கிறது. சிதம்பரம் நடராஜர் கோவிலினுள் தமிழை கொண்டு போக ஆறுமுக சாமி இன்று வரை என்ன பாடுபடுகிறார் என்பதை நமது காலத்திலேயே பார்த்தோம்.

தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் என்ன கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாலும் ஆள்வோர்களால் கண்டு கொள்ளப்படுவதில்லை. கர்நாடகாவில் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது எந்த அதிர்வலைகளையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் காஷ்மீரில் ஒரு பண்டிட் கொடுமைபடுத்தப்பட்டால் இந்திய அரசியல்வாதிகளும், இந்திய பத்திரிக்கைகளும், ஆளும் வர்க்கமும் கொதித்தெழுகின்றன. அந்த குடும்பத்தையே டெல்லிக்கு அழைத்து வந்து சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறது. அவர்களின் குழந்தைக்கு படிப்பு முதலான அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகிறது. காஷ்மீரில் இருந்ததைக் காட்டிலும் பல மடங்கு வசதிகளோடு தங்க வைக்கப்படுகின்றனர். ஆட்சியில் இருப்பது காங்கிரஸ் ஆனாலும், பிஜேபி ஆனாலும், கம்யூனிஸ்டுகள் ஆனாலும் இதுதான் நிலை. ஏனெனில் எல்லா கட்சிகளிலுமே அந்த கட்சிகளை ஆட்டுவிக்கும் அதிகார மையத்தில் பார்பனர்களே இருப்பர்.

தனக்கு பிறக்காத ஒரு குழந்தையை ஒரு மாற்றாந்தாய் எப்படி நடத்துகிறாளோ அது போல்தான் இந்து மதத்தில் தமிழர்களும், தமிழ் மொழியும் நடத்தப்படுகிறது. தமிழையும், தமிழர்களையும் அவனது சொந்த தாயிடத்தில் ஒப்படைத்து விடுங்கள். பிரச்னை தீர்ந்து விடும். திருக்குறள், திரு மந்த்ரம், திருவாசம், போன்ற தமிழ் நூல்கள் இழந்த பெருமையை மீண்டும் பெறட்டும். வர்ணாசிரமத்தை போதிக்கும் ராமாயணமும், மஹா பாரதமும், அதற்கு விளக்கவுரையாக அமைந்த மனு தர்மமும் அவர்களின் சொந்த நாட்டுக்கே செல்லட்டும்.

Wednesday, May 20, 2015

அரபியில மட்டும்தான் கடவுள் பெயர் வைப்பீங்களா?

//முனுசாமி மாடசாமியெல்லாம் லிஸ்ட்ல இல்லீங்களா???

அரபில மட்டுந்தான் பெயர் இருக்கா???// Ram Nivas

நமது இந்து நண்பர்கள் 'அல்லாஹ்' என்ற பெயர் அரபுகளுக்கு மட்டும் சொந்தமானது என்ற எண்ணத்தில் உள்ளனர். முஹமது நபி அரபியராக இருந்ததால் 'அல்லாஹ்' என்ற பெயர் முஸ்லிம்களிடத்தில் அதிகம் புழக்கத்தில் உள்ள பெயராக இருக்கிறது. அதனையே இறைவன் என்றோ கடவுள் என்றோ நாம் கூறினாலும் அகிலம் அனைத்தையும் பரிபாலிக்கும் அந்த ஏக இறைவனையே குறிக்கும். குர்ஆன் கூறும் அதே இறைவனை குறிப்பதாகவே இருக்கும். முகமது நபி தமிழராக பிறந்திருந்தால் குர்ஆன் தமிழிலேயே இறங்கியிருக்கும். எனவே இங்கு மொழிக்கு முக்கியத்துவம் இல்லை. அது கொடுக்கும் பொருளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

'இறைவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்.'
-குர்ஆன் 7:180

'அல்லாஹ் என்று அழையுங்கள். ரஹ்மான் என்று அழையுங்கள். நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன.' என்று முஹம்மதே! கூறுவீராக!'
-குர்ஆன் 17:110

'ஏக இறைவனையே ஞானிகள் பல பெயர்கள் கொண்டு அழைக்கின்றனர்'
-ரிக்வேதம 1:164:46


இறைவன் எத்தகைய ஆற்றலுடையவன் அவன் என்னவெல்லாம் செய்கிறான் என்பதை அந்த தன்மைகளை குர்ஆன் ஆங்காங்கே எடுத்துச் சொல்கிறது. அது போன்ற இறைவனின் ஆற்றல் 99 இடங்களில் குர்ஆனில் வருகிறது. அந்த பட்டியலை நாம் கீழே பார்போம்.

01 யா ஸபூர்--பொறுமையாளனே.............
02 யா ரஹ்மான் _அளவற்ற அருளாளனே.......
03 யா ரஹீம்-நிகரற்ற அன்புடையோனே........
04 யா மலிக் – மன்னன் ஆனவனே............
05 யா குத்தூஸ் - பரிசுத்தமானவனே...........
06 யா ஸலாம் – சாந்தி அளிப்பவனே........
07 யா முஃமின் – அபயம் அளிப்பவனே.........
08 யா முஹைமினு – பாதுகாவலனே..............
09 யா அஜீஸ் – யாவற்றையும் மிகைத்தவனே.........
10 யா ஜப்பார் – அதிகாரம் மிக்கவனே.......
11 யா முத்தகப்பிர் - பெருமையுள்ளவனே..........
12 யா காலிக் – சிருஷ்டியாளனே..............
13 யா Bபாரிவு – ஆத்மாவை அமைப்போனே...............
14 யா முஸவ்விரு – உருவமைப்பவனே........
15 யா Gகஃப்பார் – பிழை பொறுப்பவனே.....
16 யா கஹ்ஹார் – அடக்கி ஆள்பவனே..........
17 யா வஹ்ஹாப் - பெருங்கொடையாளனே..........
18 யா ரஜ்ஜாக் – ரிஜ்க் அளிப்பவனே.......
19 யா ஃபத்தாஹ் – வெற்றி அளிப்பவனே...........
20 யா அளீம் – யாவும் அறிந்தவனே...........
21 யா காபிள் – கைவசப்படுத்துபவனே................
22 யா பாஸித் – தாராளமாக கொடுப்பவனே................
23 யா ஹாfபிள் – தாழச் செய்பவனே...................
24 யா ராஃபிஉ – உயர்த்துபவனே.................
25 யா முஇஸ்ஸு – மேன்மையடைய செய்பவனே...............
26 யா முதில்லு – இழிவடைய செய்பவனே.............
27 யா ஸமீஉ – யாவையும் கேட்பவனே................
28 யா பஸீர் – யாவையும் பார்ப்பவனே......................
29 யா ஹகம் – தீர்ப்பு செய்வோனே................
30 யா அத்ல் – நீதி செய்வோனே.............
31 யா லத்தீப் - இரக்கமுடையோனே............
32 யா ஃகபீர் – யாவற்றையும் உணர்ந்தவனே...............
33 யா ஹலீம் - அமைதியானவனே.................
34 யா அழீம் – மகத்துவமுள்ளவனே...............
35 யா Gகஃபூர் – பாவம் தீர்ப்பவனே...............
36 யா ஷக்கூர் – நன்றி பாராட்டுபவனே..............
37 யா அலிய்யு – உன்னதமானவனே...............
38 யா கபீர் – பெரியவனே...............
39 யா ஹfஈலு - பேணிக்காப்பவனே..............
40 யா முகீத்து – பழிப்போனே.................
41 யா ஹஸீபு – கணக்கு கேட்பவன்..................
42 யா ஜலீல் – மாண்பு மிக்கவனே...................
43 யா கரீம் – கொடை கொடுப்பவனே...................
44 யா ரக்கீப் – கண்காணிப்பவனே.................
45 யா முஜீப் – முறையீட்டை ஏற்பவனே......................
46 யா வாஸிவு – எங்கும் நிலவுபவனே...............
47 யா ஹக்கீம் - நுண்ணறிவுடையோனே................
48 யா வதூத் – உள்ளன்பு மிக்கவனே................
49 யா மஜீத் – தலைமை தாங்குபவனே..................
50 யா பாஇத் – தட்டி எழுப்புபவனே....................
51 யா ஷஹீத் - சாட்சியுடையோனே...............
52 யா ஹக் – சத்தியமானவனே..........................
53 யா வக்கீல் – பொறுப்பு ஏற்பவனே...................
54 யா கவிய்யு – வல்லமை மிக்கவனே...............
55 யா மத்தீன் – உறுதியானவனே...............
56 யா வலிய்யு – கிருபை செய்பவனே.................
57 யா ஹமீத் – புகழுக்கு உரியவனே...............
58 யா முஹ்ஸி – தீர்க்கமாய் தெரிந்தவனே.....................
59 யா முப்திவு – ஆதியில் அறிந்தவனே................
60 யா முஈத் – இறுதியில் மீட்டுக் கொள்பவனே..................
61 யா முஹ்யி - உயிர்ப்பிப்பவனே......................
62 யா முமீத் – மரணிக்கச் செய்வோனே..............
63 யா ஹய்யு – நித்திய ஜீவியானவனே................
64 யா கையூம் – என்றும் நிலைத்தவனே................
65 யா வாஜித் - கண்டுபிடிப்பவனே.................
66 யா மாஜித் – தலைமை வகிப்பவனே...............
67 யா வாஹித் - தனித்தவனே......................
68 யா அஹத் – ஒருமைக்குரியவனே.....................
69 யா ஸமத் - தேவைகளற்றவனே.................
70 யா காதிர் – ஆற்றல் உள்ளவனே........................
71 யா முக்ததிர் – ஆற்றல் பெறச் செய்பவனே.....................
72 யா முகத்திமு – முன்னேற செய்பவனே.....................
73 யா முஅக்கிர் – பின் தங்கச் செய்பவனே.........................
74 யா அவ்வல் – ஆரம்பமானவனே..................
75 யா ஆகிர் – இறுதியானவனே.......................
76 யா ழாஹிர் – ஆரம்பமானவனே..................
77 யா பாத்தின் - முடிவற்றவனே............
78 யா வாலிய் – அதிகாரப் பொறுப்புள்ளவனே................
79 யா முத்தஆலி – உயர் பதவியுள்ளவனே.................
80 யா பர்ரு – நன்றியளிப்பவனே.............
81 யா தவ்வாப் – பச்சாதாபிகளை மீட்பவனே.................
82 யா முன்தகிம் – பழிவாங்குபவனே...............
83 யா அஃபுவ்வு - சகிப்பவனே..............
84 யா ரவூஃபு – இரக்க சிந்தையுள்ளவனே..............
85 யா மாலிக்கில் முல்க் – அரசாட்சிக்கு உரியவனே................
86 துல்ஜலாலி வல் இக்ராம் – புகழ்,சிறப்பு உள்ளவனே...............
87 யா முக்ஸித் – நியாயம் செய்பவனே................
88 யா ஜாமிஉ – சகலமும் பொதிந்தவனே........................
89 யா Gகனிய்யு - தேவைகளற்றவனே................
90 யா முஃனிய் – தேவையற்றவனாக ஆக்குவோனே...................
91 யா மானிஉ – துன்பம் தடுப்பவனே...............
92 யா ளார்ரு – துன்பம் அடைய செய்பவனே.................
93 யா நாஃபிஉ - பயனளிப்பவனே....................
94 யா நூரு – ஒளி மயமானவனே.................
95 யா ஹாதீ – நேர்வழி செலுத்துபவனே.............
96 யா பதீஉ – புதுமை செய்வோனே................
97 யா பாக்கீ – நிலையாக இருப்பவனே.............
98 யா வாரிஸ் – உரிமையாளனே.....................
99 யா ரஷீத் – நேர்வழிலிருப்பவனே............ ...

ஏக இறைவனின் இந்த தன்மைகளை தவறாக புரிந்து கொண்ட நமது இந்து மக்கள் ஒவ்வொரு தன்மையையும் ஒரு கடவுளாக மாற்றி விட்டனர். படைத்தல், காத்தல், அழித்தல் என்ற அந்த ஏக இறைவனின் தன்மைக்கு பல உருவங்களை கொடுத்து தனி கடவுள்களாகவே ஆக்கி விட்டனர். அந்த கடவுள்களை வணங்கியவர்களையும் தனித் தனி சாதிகளாகவும் பிரித்து விட்டனர். ஆனால் பழந்தமிழர்களில் பலர் ஏக இறைவனின் அந்த தன்மைகளை விளங்கியே வைத்திருந்தனர். அவற்றையும் நாம் கீழே பார்போம். குர்ஆன் கூறக் கூடிய இறைவனின் தன்மைகளை நமது தமிழ் நூல்களும் பட்டியலிடுவதை இனி காண்போம்.

"என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி" !!!

ஓம் அப்பா போற்றி
ஓம் அரனே போற்றி
ஓம் அரசே போற்றி
ஓம் அமுதே போற்றி
ஓம் அழகே போற்றி
ஓம் அத்தா போற்றி
ஓம் அற்புதா போற்றி
ஓம் அறிவா போற்றி
ஓம் அம்பலா போற்றி
ஓம் அரியோய் போற்றி

ஓம் அருந்தவா போற்றி
ஓம் அணுவே போற்றி
ஓம் அண்டா போற்றி
ஓம் ஆதியே போற்றி
ஓம் ஆறங்கா போற்றி
ஓம் ஆரமுதே போற்றி
ஓம் ஆரணா போற்றி
ஓம் ஆண்டவா போற்றி
ஓம் ஆலவாயா போற்றி
ஓம் ஆரூரா போற்றி

ஓம் இறைவா போற்றி
ஓம் இடபா போற்றி
ஓம் இன்பா போற்றி
ஓம் ஈசா போற்றி
ஓம் உடையாப் போற்றி
ஓம் உணர்வே போற்றி
ஓம் உயிரே போற்றி
ஓம் ஊழியே போற்றி
ஓம் எண்ணே போற்றி
ஓம் எழுத்தே போற்றி

ஓம் எண்குணா போற்றி
ஓம் எழிலா போற்றி
ஓம் எளியா போற்றி
ஓம் ஏகா போற்றி
ஓம் ஏழிசையே போற்றி
ஓம் ஏறூர்ந்தா போற்றி
ஓம் ஐயா போற்றி
ஓம் ஒருவா போற்றி
ஓம் ஒப்பிலா போற்றி
ஓம் ஒளியே போற்றி

ஓம் ஒலியே போற்றி
ஓம் ஓங்காரா போற்றி
ஓம் கடம்பா போற்றி
ஓம் கதிரே போற்றி
ஓம் கதியே போற்றி
ஓம் கனியே போற்றி
ஓம் கலையே போற்றி
ஓம் காருண்யா போற்றி
ஓம் குறியே போற்றி
ஓம் குருவே போற்றி

ஓம் குணமே போற்றி
ஓம் கூத்தா போற்றி
ஓம் சடையா போற்றி
ஓம் சங்கரா போற்றி
ஓம் சதுரா போற்றி
ஓம் சதாசிவா போற்றி
ஓம் சிவமே போற்றி
ஓம் சிறமே போற்றி
ஓம் சித்தா போற்றி
ஓம் சீரா போற்றி

ஓம் சுடரே போற்றி
ஓம் சுந்தரா போற்றி
ஓம் செல்வா போற்றி
ஓம் செங்கணா போற்றி
ஓம் செம்பொனா போற்றி
ஓம் சொல்லே போற்றி
ஓம் ஞாயிறே போற்றி
ஓம் தமிழே போற்றி
ஓம் தத்துவா போற்றி
ஓம் தலைவா போற்றி

ஓம் தந்தையே போற்றி
ஓம் தாயுமானாய் போற்றி
ஓம் தாண்டவா போற்றி
ஓம் திங்களே போற்றி
ஓம் திசையே போற்றி
ஓம் திரிசூலா போற்றி
ஓம் துணையே போற்றி
ஓம் தெளிவே போற்றி
ஓம் தேவதேவே போற்றி
ஓம் தோழா போற்றி

ஓம் நமச்சிவாய போற்றி
ஓம் நண்பா போற்றி
ஓம் நஞ்சுண்டா போற்றி
ஓம் நான்மறையா போற்றி
ஓம் நிறைவே போற்றி
ஓம் நினைவே போற்றி
ஓம் நீலகண்டா போற்றி
ஓம் நெறியே போற்றி
ஓம் பண்ணே போற்றி
ஓம் பித்தா போற்றி

ஓம் புனிதா போற்றி
ஓம் புராணா போற்றி
ஓம் பெரியோய் போற்றி
ஓம் பொருளே போற்றி
ஓம் பொங்கரவா போற்றி
ஓம் மணியே போற்றி
ஓம் மதிசூடியே போற்றி
ஓம் மருந்தே போற்றி
ஓம் மலையே போற்றி
ஓம் மஞ்சா போற்றி

ஓம் மணாளா போற்றி
ஓம் மெய்யே போற்றி
ஓம் முகிலே போற்றி
ஓம் முத்தா போற்றி
ஓம் முதல்வா போற்றி
ஓம் வாழ்வே போற்றி
ஓம் வைப்பே போற்றி
ஓம் நீலகண்டா போற்றி


'ஏக இறைவனையே ஞானிகள் பல பெயர்கள் கொண்டு அழைக்கின்றனர்'
-ரிக்வேதம 1:164:46

Friday, May 15, 2015

கோரம் - அகோரம் உண்மையான பொருள் என்ன?



கோரம் - அகோரம் உண்மையான பொருள் என்ன?

//சுத்தம் - அசுத்தம்
சாதாரணம் - அசாதாரணம்
பாக்கியம் - அபாக்கியம்
கோர வாழ்வு - அகோர வாழ்வு
அப்படியே வரிசையாக
அர்த்தம் சொல்லிட்டு வாங்க,
தாய்மொழியோ தகறாரு
இதுல எங்க அடுத்தவங்க
மதத்தை பற்றி புரிஞ்சிக்க போறீங்க???
ஒருவேளை உங்க தாய்மொழி
தமிழ் இல்லையா??????//

பிணந்தின்று தினமும் கஞ்சா அடித்து உருண்டு கிடக்கும் அகோரிகளை காப்பாற்றப் போய் தமிழ் மொழிக்கும் ஆப்பு வைக்க ஆரம்பித்தாகி விட்டதா?

முதலில் கோரம், அகோரம் என்ற இந்த வார்த்தைகள் தமிழ் வார்த்தைகளே அல்ல. இது வட மொழிச் சொல். இதற்கு தமிழின் முக்கிய தளங்கள் என்ன அர்த்தம் தருகின்றன என்று பார்போம்.


அகோரம், பெயர்ச்சொல்.
1. அழகின்மை, கொடுமை, வெறுக்கத்தக்க, சரியில்லாதவை. [1]
2. உக்கிரம், ஞானம், உஷ்ணம். [2]

http://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

------------------------------------------------------------------------

அகோரம்:

மிக்க கொடுமை, வெப்பம், சிவனின் ஐந்து முகத்தில் ஒன்று, ஞானம்
http://www.valaitamil.com/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D--tamil-dictionary60742.html

-------------------------------------------------------------------------

அன்பிற்கினிய நண்பர் செம்மலுக்கு
வணக்கம்
கோரம், அகோரம் பற்றிய தங்கள் குறிப்பைக் கண்டேன்.
தாங்கள் குறிப்பிட்டது சரியே -
இவை இரண்டுமே வடமொழிச் சொற்கள்!
கோரம் = கொடுமையான, அஞ்சத்தக்க, அருவெறுப்பான ...
அகோரம் = அதிகக் கொடுமையான, மிகவும் அஞ்சத்தக்க, மிக அருவெறுப்பான ...

அகோரம் என்பதைப் பெயராகக் கொண்டவர்கள் உண்டு. இங்கே பிரான்சில் உள்ள கோயில் குருக்கள் ஒருவர் பெயர் அகோரமூர்த்தி. சதாசிவ உருவில் இருக்கும் சிவனுக்கு அகோரமூர்த்தி என்று பெயர்.

சிவனுக்கு ஐந்து தலைகள் (முகங்கள்) :தத்புருஷம், அகோரம், வாமம், சத்யோஜாதம், ஈசானம்.
பிரமனுக்கும் ஐந்து தலைகள் இருந்தனவாம்.
ஒருமுறை, பார்வதி தேவி, தன கணவன் என்று எண்ணித் தவறுதலாகப் பிரமன் பக்கத்தில் அமர்ந்துவிட்டாளாம். அதைக் கண்டு விளக்கம் கேட்ட சிவனுக்குப் பார்வதி, "பிரமனுக்கும் ஐந்து தலை ; உங்களுக்கும் ஐந்து தலை வேறுபாடு தெரியவில்லை" எனச் சமாளிக்கச் சிவன் சினந்து பிரமாவின் தலைகளில் ஒன்றைக் கொய்துவிட்டாராம். அன்று முதல் பிரமா, நான்முகராக வலம் வரத் தொடங்கினார்.

"அற்ற தலை போக அறாத தலை நான்கினையும்
பற்றித் திருகிப் பறியேனோ..." என வரும் ஒளவையாரின் பாடலில் இக்கதை பொதிந்துள்ளது.

பறித்த பிரமனின் தலை (மண்டையோடு?) சிவனின் கையிலேயே ஒட்டிக்கொண்டதாம். பிரமன் தலையைக் கொய்தலால் சிவனுக்கு பிரம அத்தி தோசம் பிடித்ததாம்.

இவை புராணக் கதைகள்.

https://groups.google.com/forum/#!topic/tamil_ulagam/0CLSOJ4azZ8

---------------------------------------------------------------


இப்போது அகோரிகளுக்கு உண்மையான அர்த்தம் என்ன என்பதை விளங்கிக் கொண்டீர்களா? இதில் எனக்கு வேறு அட்வைஸ் பண்ணுகிறீர்கள்? நீங்கள் தமிழனா என்று ஒரு கேள்வி வேறு கேட்கிறீர்கள்? :-)

சென்னி மலை உண்மையில் தமிழனா என்ற சந்தேகம் எனக்கு வருகிறது. உங்களின் தாய் மொழி தெலுங்காகவோ, கன்னடமாகவோ இருக்க வாய்ப்புள்ளது. எதுவாக இருந்தாலும் இனி எதையும் யாரையும் விமரிசிக்கும் போது உண்மை என்ன என்பதை விளங்கி பதிவிடவும்.

எனது தாய் மொழி தமிழ். இனத்தால் திராவிடன், தேசத்தால் இந்தியன், மார்க்கத்தால் இஸ்லாமியன்.

உங்களின் தாய் மொழி தமிழ்தானா? சென்னி மலை?

வர்ட்டா.......... :-)

Monday, April 13, 2015

தமிழரின் வருடப் பிறப்பு சித்திரை மாதமா அல்லது தை மாதமா?



தைபிறந்துவிட்டால் தமிழ்ப் புத்தாண்டு மலர்ந்துவிடும்.

தமிழ்ப் புத்தாண்டு என்பது தைப்பொங்கல் என்று கொண்டாடப்படும் தைப்பிறப்பா அல்லது சித்திரை வருடப்பிறப்பு என்று சொல்கிறோமே அதுவா என்கின்ற மயக்கம் இன்னும் தமிழ்மக்களிடையே இருக்கிறது. சரிவரத் தெரியாத மக்களிடம் இருப்பது மயக்கம். சரியெதுவெனத் தெரிந்த தமிழர்கள்கூட சரியானதைப் பின்பற்றாமல் விடுவதற்குக் காரணம் வழக்கம். அதனை மாற்றுவதா என்கின்ற தயக்கம்.

இத்தனைக்கும் சித்திரையைப் புத்தாண்டாகக் கொள்ளுகின்ற வழக்கம் தமிழர்களிடையே தொன்றுதொட்டு இருந்துவந்த தொன்றல்ல. பண்டைத் தமிழகத்திலே இருந்த பண்பாடுமல்ல. தொன்மைமிகு சைவசமயத்தோடு தோன்றியதும் அல்ல. ஆரியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு இடைக்காலத்தில் நம்மை இறுகப் பற்றிக்கொண்ட எண்ணற்ற மூடநம்பிக்கைகளைப் போலவே ஏற்பட்டுவிட்ட ஒரு பழக்கம் இது.

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே சொல்லாலும் பொருளாலும் சுவை மிகுந்த இலக்கியங்களைக் கொண்டிருந்த செந்தமிழ் மொழியைப் பேசிய மக்கள் ஈடு இணையற்ற பண்பாட்டுக்குச் சொந்தக்காரர்களாயிருந்தார்கள். அவர்கள் அறிவியல் முதிர்ச்சியால் அகிலத்திற்கே வழிகாட்டியவர்கள் விண்ணையும் மண்ணையும் ஆராய்ந்து வியப்புமிக்க நூல்களை ஆக்கியவர்கள் வானிலைக்கணக்கீட்டு வல்லமையால் கோள்களின் அசைவுகளைக் குறியீடு செய்தவர்கள். நட்சத்திரங்களையும் அவற்றின் நடமாட்டங்களையும் அவற்றின் பலாபலன்களையும் மிகத் துல்லியமாக ஆராய்ந்து கணித்தவர்கள். உலகுக்குப் பயன்தரும் முடிவுகளை அளித்தவர்கள். அவர்கள்தான் கதிரவனின் ஒளியினால்தான் பயிர்கள் வளர்கின்றன என்றும் காய்க்கின்றன என்றும் கண்டுபிடித்தவர்கள்.

அதனால்தான் களனி விளைந்து கதிரைப் பறித்ததும் தமது புத்தாண்டுப் பிறப்பன்றே முதன் முதலில் அந்தக் கதிரவனுக்கு நன்றி செலுத்தினார்கள். புதுப்பானையில் பொங்கலிட்டுப் படைத்து வணங்கினார்கள். சிந்துவெளி நாகரிகக் காலத்திற்கு முந்தியிருந்தே இந்தப் புத்தாண்டும்ää பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்பட்டு வந்தமையை அறிவியல்பூர்வமான ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன.

சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானூறில் பொங்கல் பற்றிய குறிப்பொன்று காணப்படுகின்றது.

சாந்த விறகின் உவித்த புன்கம்
கூதளங் கவினிய குளவி முன்றில்
செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும்

என்று புறநானூற்றில் 168 ஆவதாக இடம்பெறுகின்ற பாடலிலே கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் என்ற புலவர் புதிர் உண்ணுகின்ற செய்தியைப் பதிவுசெய்துள்ளார். புதிதாகக் கறந்து நுரையெழும்பும் தீம் பாலிலே புத்தரிசியையிட்டு சந்தனக்கட்டைகளை விறகாகக் கொண்டு அடுப்பெரித்து ஆக்கிய பொங்கலைப் பலரோடு பகிர்ந்து உண்ணுகின்ற வழக்கத்தை அழகாகச் சொல்கின்றார் புலவர்.

அத்தகைய தொன்மைச் சிறப்பு வாய்ந்த பொங்கல் பண்டிகை உழவர்களுக்கு மட்டும் உரியதல்ல. உழுவார் உலகத்தார்க்கு அச்சாணியானவன் என்கின்றார் வள்ளுவர். எனவேää கதிரவனுக்கு நன்றிசெலுத்தும் பொங்கல் உலகத்திற்கே பொதுவானது. அதை உணர்ந்து தான் பண்டைத் தமிழர்கள் ஆண்டுத் தொடக்கத்திலேயே அதனை ஒரு பண்டிகையாகக் கொண்டாடும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

சித்திரைப் புத்தாண்டு தமிழர்களின் புத்தாண்டு அல்ல. சித்திரை முதல் நாள் தமிழர்களின் புதுவருடப்பிறப்பு அல்ல. அது இந்துக்களின் புதுவருடப்பிறப்பு என்று சொல்லப்படுகின்றது. சிங்களவர்களுக்கும் சித்திரையில்தான் புதுவருடம் பிறக்கிறதாம். இலங்கை நாட்காட்டிகளில் ஏப்பிரல் 14 ஆம் திகதி இந்துää சிங்கள புதுவருடப்பிறப்பு என்றுதான் குறிப்பிடப்படுகின்றது. தமிழர்களின் புதுவருடப்பிறப்பு என்று குறிப்பிடப்படுவதில்லை. அவ்வாறு எங்காவது குறிப்பிடப்பட்டிருந்தால் அது தவறாகும்.

சித்திரைப் புத்தாண்டுதான் வருடப்பிறப்பு என்பதற்கு இந்து மதத்தவர்களிடையே நிலவுகின்ற புராணக்கதையையும் நாம் இங்கு நினைவுகூருதல் பொருத்தமாகும்.

புராண காலத்தில் நாரதமுனிவருக்குக் காம இச்சை ஏற்பட்டதாம். அந்த இச்சை தாங்கொணாதபடி அதிகமாகவே அதைத் தீர்த்துக்கொள்வதற்காக அவர் கிரு~;ணரோடு உறவுவைத்துக்கொண்டாராம். அதன் மூலம் அறுபது ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தாராம். பிரபவமுதல் அட்சய ஈறாக பெயர் சூட்டப்பட்ட அந்த அறுபது குழந்தைகளின் பெயர்களால்தான் ஆண்டுகளின் தொடக்கம் கொண்டாடப்படுகிறதாம். அபிதான சிந்தாமணி என்ற நூலில் இந்தக்கதை சொல்லப்பட்டுள்ளது. இத்தகைய கேவலமான புராணக்கதையினைப் பின்னணியாக வைத்துத்தான் சித்திரை வருடப்பிறப்பைக் கொண்டாடுகின்றோமாம். இந்தக்கதை அறிவியலுக்குப் பொருந்துமா? தமிழ் மரபுக்கு உகந்ததா? தமிழ்ப் பண்புக்குள் அமைந்ததா? நமது குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்க முடியுமா?

உண்மை என்னவென்றால் இந்த 60 ஆண்டுப்பெயர்கள் சாலிவாகனன் என்னும் வடநாட்டு அரசனின் பெயரால் ஏற்படுத்தப்பட்டவை. தமிழ்மக்களுக்கும் இதற்கும் சம்பந்தமே இருந்ததில்லை. மேலும் 60 வருடங்கள் முடிந்ததும் அதாவது அட்சய வருடம் முடிந்ததும் மீண்டும் பிரபவ வருடம் வரும். மீண்டும் 60 வருடங்கள் கழிந்ததும் அட்சய வருடம் வரும். இப்படியே சுற்றிக் கொண்டிருப்பதால் சித்திரைப் புத்தாண்டு முறையால் அறுபது வருடங்களுக்கு மேற்பட்ட காலத்தை வரலாற்று ரீதியாகக் கணக்கிட முடியாது. குறித்துரைக்க இயலாது.

உதாரணமாக பிரபவ வருடத்தில் உலகத்தில் வரலாற்றுச் சம்பவம் ஒன்று நிகழ்ந்தால் அல்லது ஒரு பெரியார் பிறந்ததாகச் சொன்னால் எந்தப் பிரபவ வருடத்தில் அது நடந்ததென்று எப்படிக் கணக்கிட்டு வைக்கமுடியும்? அறுபது வருடங்களுக்கொருதடவை பிரபவ வருடம் வரும் அல்லவா?

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்போரலையைப்பற்றி இன்னும் நூற்றி ஐம்பது வருடங்களுக்குப் பிறகு சொல்லும்பொழுது ஆழிப்பேரலை தாரண வருடத்தில் மார்கழி மாதத்தி;ல் தாக்கியது என்றுசொன்னால் எந்தத் தாரண வருடத்தில் என்று தெரியவருமா? எத்தனை வருடங்களுக்கு முன்னர் அந்த அனர்த்தம் நடந்தது என்று கணக்கிட முடியுமா? ஏனென்றால் இன்றிலிருந்து நூற்றைம்பது வருடங்களுக்குப்பிறகு இரண்டு மூன்று தாரண வருடங்கள் வந்துவிடும் அல்லவா?

இன்னும் ஒரு விடயத்தையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். சித்திரையில் பிறப்பதுதான் தமிழ்ப்புத்தாண்டு என்றால் அதற்கு அடிப்படையாகக் கொள்ளப்படுகின்ற பிரபவ முதல் அட்சய வரை உள்ள அறுபது வருடங்களின் பெயர்கள் எதுவுமே தமிழில் இல்லையே! ஏன் என்ற கேள்வியும் எழுகிறதல்லவா?

ஆனால் சிந்துவெளி மக்கள் தைமுதல் மார்கழி வரையான பன்னிரண்டு மாதங்களையே தமிழ் மாதங்களாகப் பின்பற்றிவந்துள்ளனரென்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் சான்று பகர்ந்துள்ளனர். தை முதல் மார்கழி வரையான பன்னிரண்டு மாதப் பெயர்களும் சுத்தமான தமிழ்ப் பெயர்கள் என்பதுடன்ää தொல்காப்பியர் காலத்திலேயே அவை வழக்கத்திலிருந்தன என்று கூறுகின்றார் மொழியறிஞர் சி. இலக்குவனார் அவர்கள். யேசு கிறீஸ்துவின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு கி.மு என்றும் கி.பி. என்றும் உலக வரலாறு வரையறுக்கப்பட்டு வருகின்றது. அதேபோலப் புத்தரின் வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு புத்த சமயத்தினர் புத்த ஆண்டு என்று கணித்துப் பின்பற்றுகின்றார்கள். இவற்றுக்கெல்லாம் எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட தமிழ்ப் புத்தாண்டு வழக்கத்தை இடையிலே கைவிட்டுவிட்டு எதையெதையோவெல்லாம் தமிழர்கள் பின்பற்றுவது எவ்வளவு துர்ப்பாக்கியமானது.

தைமுதல்நாள் தமிழர் திருநாள் மட்டுமல்ல அதுவே தமிழ்ப்புத்தாண்டின் தொடக்க நாளுமாகும். அதனால்தான் தமிழ்ப் புத்தாண்டுபற்றிய உண்மைநிலையைத் அறிவுபூர்வமாகவும்ஆராய்ச்சியின் அடிப்படையிலும் தமிழ்மக்களுக்கு உணர்த்துவதற்காக 1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியிலே தமிழ் அறிஞர்கள் செந்தமிழ்ப் புலவர்கள் கூடி ஆராய்ந்திருக்கிறார்கள். தமிழ்க்கடல் நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகள் அவர்களது தலைமையிலே அந்த ஆராய்ச்சி நடைபெற்றிருக்கின்றது.

மாபெரும் தமிழறிஞர்களும் கல்விமான்களுமான தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார் தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியம்பிள்ளை சைவப்பெரியார் சச்சிதானந்தம்பிள்ளை நாவலர் சோமசுந்தர பாரதியார் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் அந்த அறிஞர் குழவிலே இருந்திருக்கிறார்கள்.

அத்தனை அறிஞர் பெருமக்களும் ஒன்றாகக்கூடி தமிழ்ப் புத்தாண்டு பற்றி ஆராய்ந்திருக்கிறார்கள். முடிவுகண்டிருக்கிறார்கள். 500 இற்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் அந்த முடிவிற்குத் தமது ஏற்பிசைவை வழங்கியிருக்கின்றார்கள். அவர்களது முடிவின்படி இயேசுகிறீஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தவர் திருவள்ளுவர் என்றும் அவரது பெயரில் தொடர்ஆண்டுக் கணக்கீட்டைப் பின்பற்றுவது என்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

அந்த முடிவுகளின்படி திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை. இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல்நாள் ஆகும். கிழமை நாட்கள் ஏழு. அவைஞாயிறு திங்கள் செவ்வாய் அறிவன் வியாழன் வெள்ளி காரி என்பனவாகும். புதனும் சனியும் தமிழ்ப்பெயர்கள் அல்லவென்பதால் அவற்றுக்கான பண்டைய தமிழ்ப்பெயர்களான அறிவன் காரி என்பன முறையே வழங்கப்படவேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஆங்கில ஆண்டுடன் 31ஐக் கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு. அதுவே தமிழ் ஆண்டுக் கணக்கு.

அறிஞர்களது தீர்மானத்தை அன்றைய தமிழக அரசு அப்படியே ஏற்றுக்கொண்டது. அதன்படி திருவள்ளுவர் ஆண்டு முறையை 1971 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு நாட்குறிப்பிலும் பின்னர் 1972 இலிருந்து தமிழக அரசின் அதிகாரபூர்வமான இதழிலும் 1981 இலிருந்து தமிழகத்தின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றது. 2009 இல் தமிழக அரசு தைப்பிறப்பையே தமிழ்ப்புத்தாண்டு என்றும் சித்திரைமாதத்தில் தமிழ்ப்புத்தாண்டு இல்லை என்றும் சட்டபூர்வமாக ஆணை பிறப்பித்தது. தமிழ் மக்களின் புத்தாண்டு விடயத்திற்குச் சட்டரீதியான அந்தஸ்துக் கொடுக்கப்பட்டமை மகிழ்ச்சிக்குரிய விடயமே.

ஆனால் தமிழ் அரசியல் தலைவர்கள் சிலரின் அரசியல் முதிர்ச்சியற்ற நிலைமையும் நாகரிகமற்ற தன்மையும் தமிழ்ப் புத்தாண்டு விடயத்தையும் அரசியல் சாக்கடைக்குள் தள்ளிவிட்டிருப்பது தமிழ் இனத்தின் துர்ப்பாக்கியமாகும். தைப்பிறப்பைத் தமிழ்ப் புத்தாண்டென அரசாணை பிறப்பித்தது கலைஞர் கருணாநிதி அவர்களின் தி.மு.க. அரசு என்ற ஒரே காரணத்திற்காக அவருக்கப் பிறகு ஆட்சிக்கு வந்த செல்வி. ஜெயலலிதா அவர்கள் அந்த அரசாணையை மாற்றி சித்திரையே தமிழ்ப் புத்தாண்டு என தீர்மானம் போடும் முடிவுக்கு வந்திருக்கிறார். தைப்பிறப்பே தமிழ்ப்புத்தாண்டு என்பது கலைஞர் கருணாநிதியின் தீர்மானம் அல்ல. கலைஞர் பிறப்பதற்கு முன்னரே 1921 ஆம் ஆண்டு தமிழ் இனத்தின் சார்பாகத் தமிழ்ப் புலவர்களாலும்அறிஞர்களாலும் எடுக்கப்பட்ட முடிவு அது. இதனை நன்கறிந்த தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் செல்வி ஜெயலலிதா அவர்களின் கட்சியிலும் இருக்கிறார்கள். என்ன செய்வது எடுத்துச்சொல்லும் திராணியற்றவர்களாக இருக்கிறார்கள்!
யாரும் அறிவுரை சொல்லப் பயப்படுகின்ற நிலைமையைத் தமிழ் தலைமைகள் பேணிவந்தமையும் மாற்றுக் கருத்துக்களைச் சொன்னவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டமையும்தான் தமிழ் இனத்தின் வீழ்ச்சிக்கு காரணமானவை என்பதுதானே வரலாறு. அந்த நிலை இன்னும்தான் நீடிக்கிறது.

தைமாதத்தைத் தமிழ்ப்புத்தாண்டு என்று கொண்டாடினால் கிரக மாற்றங்களில் குளறுபடி ஏற்படுமாம் பஞ்சாங்கக் கணிப்புத் தவறாகிவிடுமாம் என்றெல்லாம் சிலர் மக்களைக் குழப்புகின்றார்கள். இது என்ன பேதைமை! சித்திரையை அடிப்படையாக வைத்துத்தான் கிரக சஞ்சாரங்கள் நடைபெறுகின்றன என்றால் அவை அப்படியே நடக்கட்டும். அவற்றுக்கு அமைவாக எழுதப்பட்ட பஞ்சாங்கங்கள் அப்படியே இருக்கட்டும். சித்திரை மாதக் கிரக நிலையைத் தைமாதத்திற்கு நகர்த்தும்படி யாரும் கூறவில்லை. பஞ்சாங்கங்களைத் திருத்தும்படி யாரும் சொல்லவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. ஆனால் சித்திரை மாதம் என்பது தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் அல்ல. தைமாதமே தமிழ்ப்பத்தாண்டின்முதல் மாதம் என்றும்ää தைமுதல் திகதியே தமிழ்ப் புத்தாண்டின் முதல்திகதி என்றும் கொண்டாடுவோம். அவ்வாறு நாம் கொண்டாடுவதால் கிரகமாற்றங்களில் கோளாறு ஏற்படும் என்பதும் பஞ்சாங்கம் பொய்த்துவிடும் என்பதும் இந்துத்துவத் திமிர்பிடித்த மூடநம்பிக்கைகள். மடத்தனமான விதண்டா வாதங்கள். மக்களைக் குழப்பும் முயற்சிகள்.

தையே முதற்றிங்கள் தைம்முதலே ஆண்டுமுதல்
பத்தன்று, நூறன்று பன்னூறன்று
பல்லாயிரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தைம்முதல்நாள், பொங்கல் நன்னாள்

என்று தைத்திங்கள் திருநாளை, தமிழினத்தின் திருநாளாக, தமிழ் வருடத்தின் முதல்நாளாக, தமிழ்ப பண்பாட்டின் பெருநாளாக போற்றிப் பாடுகின்றார் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் அம்மொழியே பொன் மொழியாகட்டும். அனைத்துலகத் தமிழர்களுக்கும் ஒரே வழியாகட்டும்.

எனவே தைமுதல் நாளையே தமிழ்ப்புத்தாண்டெனக்கொண்டாடும் நமது பண்டைய வழக்கத்தினை உலகத் தமிழ்மக்கள் அனைவரும் வழக்கப்படுத்திக்கொள்ளவேண்டும். வாழ்வில் கடைப்பிடிக்கவேண்டும்.


பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் கடந்து விட்ட வருடத்தின் கடைசிநாள்.
வீட்டிலுள்ள வேண்டத்தகாத பொருட்களையெல்லாம் வீசி எறியும் நாள்.
வீட்டிலும், வீட்டைச்சுற்றவரவும், காணிகளிலும் உள்ள அழுக்குக்களை,
குப்பை கூழங்களையெல்லாம் கூட்டிப்பெருக்கித் தீயிட்டுக்கொழுத்தி
துப்பரவுசெய்யும் நாள்.

புலரும் பொழுதில், மலரும் பொங்கல்பண்டிகையை, புத்தாண்டுப் பிறப்பை வரவேற்க வீடுகள்தோறும் விடியவிடிய மகிந்திருக்கும் நாள்.
வீட்டுச்சுவர்களுக்கு வெள்ளையடிப்பதும், வர்ணச்சாயம் தீட்டுவதுமாக
அன்றைய நாள் முழுவதும் ஊரே மகிழ்ச்சியில் அமர்க்களப்படும்.
அந்த நாளைப் போகி நாள் என்று சொல்வார்கள்.
கடந்த வருடத்தைப் போக்குதல், க~;டங்களைப் போக்குதல்,
உறவினர்களுக்கிடையே இருந்த உரசல்களைப் போக்குதல்,
அகத்திலும் புறத்திலும் உள்ள அழுக்குக்களைப் போக்குதல் என்றெல்லாம் பொருளமைந்ததுதான் போகி நாள், போகிப் பண்டிகை!

திருமணமாகித் தனிக்குடும்பம் நடாத்தும் தங்கள் பெண்களுக்கும், சகோதரிகளுக்கும் பெற்றோரும், சகோதரர்களும் சீர்வரிசை செய்வதும் அன்றைய நாளில்தான்.

நெல்லு, அரிசி, குரக்கன், சோளம் முதலிய தானியங்கள் முக்கனிகள், இனிப்புப் பலகாரங்கள், புத்தாடைகள், அலங்காரப் பொருட்கள் என்பவற்றையெல்லாம் இல்லறம் நடத்தும் தம் பிள்ளைகளின் வீடுகளுக்கு எடுத்துச்சென்று கொடுத்து மகிழ்வார்கள். இல்லத்தையும், சுற்றுப்பறத்தையும் எல்லோருமாகச் சேர்ந்து துப்பரவுசெய்து, புதுப்பொலிவு ஊட்டுவார்கள். அது பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள். புத்தாண்டுக்கு முதல்நாள். கடக்கும் வருடத்தின் கடைசிநாள். அதுதான் போகிநாள்!

தைத் திங்கள் முதல்நாளே தமிழர் நமது புதுவருடப் பெருநாள். தங்கத் தமிழினத்தின் தைப்பொங்கல் திருநாள். எனவே, பொங்கல் திருநாளிலேயே நமக்குப் புதுவருடம் பிறக்கிறது என்பதை, பொங்கல் திருநாளிலேயே நமக்குப் புதுவருடம் பிறக்கிறது என்பதை, பொங்கல் திருநாளே நமது புத்தாண்டு என்பதை, எங்கும் பறைசாற்ற வேண்டும். எப்போதும் அதனைப் பின்பற்ற வேண்டும். தப்பாமல் நம் வாழ்நாளில் கடைப்பிடிக்க வேண்டும். வாசலில் கோலமிட்டு, மாவிலையிலும், மஞ்சள் குருத்தோலையிலும் தோரணங்கட்டி, புத்தரிசி கொண்டு, புதுப்பானையில் பொங்கலிட்டு, தலைவாழையிலையில் பொங்கலும்,பழங்களும், கரும்பும் படைத்து, கதிரவனை நோக்கிக் கைகூப்பித்தொழுது நன்றிதெரிவிக்கும் நந்நாளே பொங்கல் திருநாள்.

காலையில் வழிபாடு. பகலில் உறவினர்களோடு மகிழ்ந்து உறவாடல். உணவு பரிமாறல். உண்டு களைப்பாறல். மாலையில் களியாடல். கலைகள் அரங்கேறல். ஊரே திரண்டு ஒன்றாய் மகிழ்ந்து கொண்டாடல். இதுதான் தமிழரின் தாயகங்களின் தைத்திருநாள். அது வருடத்தில் ஒருநாள். புத்தாண்டின் முதல் நாள். தமிழருக்கு அது பெருநாள். புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் நமது தாயகங்களிலே நாம் கொண்டாடி மகிழ்ந்த அந்த நாட்களை நினைவுகூரவேண்டும்.

வாழுகின்ற இடத்தால் வேறுபட்டாலும், வணங்குகின்ற மதத்தால் வேறுபட்டாலும், சார்ந்துள்ள அரசியல் கருத்தால் வேறுபட்டாலும், தனிப்பட்ட குணத்தால் வெறுபட்டாலும் தமிழர் என்ற இனத்தால் ஒன்றுபடுவோம். தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுவோம். தைமுதல்நாளே புத்தாண்டு என்று உறுதி பூணுவோம். எங்கு வாழ்ந்தாலும் அந்த வழக்கத்தைப் பேணுவோம்.

தைபிறந்தால் வழிபிறக்கும் என்பார்கள். கல்வியைத் தொடங்கும் பிள்ளைகளுக்கு வழிபிறக்கும். புதுவகுப்பிற்குச் செல்லும் மாணவர்க்கு வழிபிறக்கும். பல்கலைக்கழகம் செல்லும் இளையோர்க்கு வழிபிறக்கும். திருமணத்திற்குக் காத்து நிற்கும் காதலர்க்கு வழிபிறக்கும்ää பிள்ளைப் பாக்கியத்திற்குக் காத்திருக்கும் தம்பதிகளுக்கு வழிபிறக்கும். பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துவைக்க ஆசைப்படுகின்ற பெற்றோருக்கு வழிபிறக்கும். இவ்வாறு சிறியோர்க்கும், பெரியோர்க்கும் எல்லோர்க்கும் தைபிறந்துவிட்டால் வழிபிறக்கும்.


பிற்குறிப்பு:

2001 ஆம் ஆண்டு தைமாதம் 6 ஆம் திகதி மலேசியாவிலே “தைமுதல்நாளே தமிழ் ஆண்டுத் தொடக்கம்” என்று பரப்புரைப் பிரகடனம் வெளியிடப்பட்டது. 2006 ஆம் ஆண்டு, அவுஸ்திரேலியாவில், விக்ரோறிய தமிழ்க் கலாசாரக் கழகத்தின் பொங்கல் விழாவில் எனது தலைமையில் எழுநூற்றுக்கும் அதிகமான பங்களிப்பாளர்களின் முன்னிலையில், “தைத்திருநாளே தமிழரின் புத்தாண்டு” என்று உறுதிமொழி பிரகடனப்படுத்தப்பட்டது.

-சு.சிறீகந்தராசா

http://www.tamilmurasuaustralia.com/2015/01/blog-post_8.html

Sunday, April 05, 2015

திருக்குறளை அரபியில் மொழி பெயர்த்த ஜாகிர் ஹூசைன்!



திருவள்ளுவரால் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட திருக்குறள் அரபு மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.

சவூதி அரேபிய கலை மற்றும் கலாச்சார மையம் சார்பில் தம்மாமில் நடைபெற்ற கவிஞர்கள் மாநாட்டில் அரபு மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் வெளியிடப்பட்டது. இந்த வியத்தகு சாதனையை நிகழ்த்தியிருப்பது மதரசாவில் கல்வி பயின்ற ஜாஹிர் ஹுசைன் பாகவி. தமிழகத்தின் கடைகோடி பகுதியிலிருக்கும் குமரி மாவட்டத்திலுள்ள தக்கலையை சார்ந்த இவர், சென்னை பல்கலைக் கழகத்தின் அரபுத்துறையின் தலைவராக பணியாற்றுகிறார்.

இவ்வெளியீடு குறித்து தெரிவித்த கவிஞர் ஜாஹிர் ஹுசைன் பாகவி, "திருக்குறளை அரபு உலகிற்கு அறிமுகப்படுத்திய முதல் நிகழ்ச்சி இது. நம் தாய் நாட்டுச் சொந்தங்கள், நண்பர்கள் அதிக அதிக அளவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். அரபுக் கவிஞர்கள் வள்ளுவரின் வார்த்தைகளை மெய்மறந்து ரசித்தார்கள். இது ஓர் அற்புதமான அனுபவம்" என்று கூறியுள்ளார்.

தகவல் உதவி
இந்நேரம்.காம்

தமிழரின் பொக்கிஷமாக விளங்கும் திருக்குறள் இனி அரபுகளின் கைகளிலும் தவழும். எல்லோருக்கும் பொதுவாக இறைவன் என்றே பல இடங்களில் கடவுளைப் பற்றி வள்ளுவர் கூறுகிறார். முன்பு தமிழர்களுக்கு கொடுத்த இறை வேதமாகக் கூட திருக்குறள் இருக்கலாம். இறைவனே அறிந்தவன்.

இஸ்லாமிய பார்வையில் தேவ மொழி என்று எதுவும் கிடையாது. உலகில் உள்ள அனைத்து மூல மொழிகளையும் தானே படைத்ததாக இறைவன் குர்ஆனிலே கூறுகின்றான். எனவே புனித மொழி என்று எதனையும் நாம் வகைப்படுத்த முடியாது. தாய் மொழிப் பற்று இயற்கையாகவே எல்லோருக்கும் இருக்கும். ஆனால் அது மொழி வெறியாக மாறி விடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சவுதியில் பல பள்ளி வாசல்களில் வெள்ளிக் கிழமை தொழுகையில் செய்யப்படும் பிரசங்கத்தை தமிழ் மொழியில் மொழி மாற்றம் செய்து ஒலி வாங்கி மூலமாக பலரும் கேட்கும் வண்ணம் ஒலிபரப்பு செய்கின்றனர். மலையாளம் உருது போன்ற மொழிகளுக்கும் இடம் தருகின்றனர். அனைத்து மொழிகளையும் படைத்தவன் இறைவன்தான் என்ற உண்மையை உணர்ந்ததால்தான் சவுதி பள்ளிகளில் வேறு மொழிகளுக்கும் இடம் கிடைக்கின்றது.



----------------------------------------------------------


"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு"

- திருக்குறள் 5

பொருள்:

'இருளில் சேர்த்து விடும் இரு வினைகளையும் தவிர்த்து இறைவன் இட்ட கட்டளைப் படி தனது வாழ்வை அமைத்துக் கொள்வோரே புகழோடு வாழ்ந்தவராவார்'

அது என்ன இருளில் சேர்க்கும் இரு வினைகள்? நன்மை தீமையை சொல்கிறாரா வள்ளுவர்? இல்லை. ஏனெனில் இரண்டு வினைகளுமே நம்மை இருளில் சேர்த்து விடும் என்கிறார். நன்மையான காரியங்களை செய்பவரை எப்படி இருளில் கொண்டு சேர்பதாக வள்ளுவர் சொல்வார்? எனவே நன்மை தீமையை இங்கு வள்ளுவர் கூறவில்லை என்பதை அறியலாம். ஆனால் பல விளக்கவுரைகளில் நன்மை தீமை என்றே 'இருளில் நேர்க்கும் இரு வினைகளுக்கு' விளக்கம் அளித்துள்ளனர். கலைஞரும் சாலமன் பாப்பையாவும் கூட நன்மை தீமை என்றே மொழி பெயர்த்துள்ளனர்.

வள்ளுவர் சொன்ன அந்த இரு வினைகள் என்ன என்று பார்போம்.

ஒன்று ஒரு மனிதன் பிறக்கும் போதே அவனோடு சேர்ந்து வரும் இறைவன் விதித்த தீமையை அடிப்படையாக கொண்ட விதி. மற்றொன்று ஒரு மனிதன் பிறந்ததற்கு பிறகு இந்த பூமியில் அவன் இறக்கும் வரை செய்து வரும் தீய வினைகள். அதாவது தீய செயல்கள். இந்த இரண்டு தீய செயல்களையும் எவன் ஒருவன் வென்று விடுகின்றானோ அவனே பாக்கியசாலி என்கிறார் வள்ளுவர்.

இஸ்லாமும் இந்த இரு வினைகளைப் பற்றி பேசுகிறது. மனிதன் இந்த பூமியில் பிறப்பதற்கு முன்பு தாயின் வயிற்றில் ஒரு வானவர் மூலமாக அவனது அனைத்து காரியங்களும் பதியப்படுவதாக நபிகள் நாயகம் அறிவித்துள்ளார். நல்லவனா? தீயவனா? என்பது இங்கு தீர்மானிக்கப்படுகிறது. இது ஒரு வினை. தாயின் வயிற்றிலிருந்து அவன் வெளியேறியவுடன் இந்த உலகில் நன்மை தீமை இரண்டும் இறை வேதங்கள் மூலம் கொடுக்கப்படுகிறது. இந்த இறை வேதங்களை ஆராய்ந்து இறைவன் இட்ட கட்டளைப்படி நன்மை செய்து இறப்பவனுக்கு சொர்கம் தருவதாகவும், இறை கட்டளைகளை மீறுபவனுக்கு நரக வேதனை தருவதாகவும் குர்ஆன் கூறுகிறது. இது இரண்டாவது தீய வினை. இங்கும் இரண்டு தீய வினைகளைப் பார்கிறோம்.

Wednesday, March 11, 2015

வாரியார் சுவாமிகள் விரும்பிய ஏக தெய்வ வழிபாடு!

வாரியார் சுவாமிகள் விரும்பிய ஏக தெய்வ வழிபாடு!





"கடவுளை வழிபடுவதற்கு ஏக தெய்வ வழிபாடு மிகவும் சிறந்தது. தமிழ் மறையாம் தேவாரம் பாடிய மூவரும் மாணிக்க வாசகரும் ஏக தெய்வ வழிபாட்டைக் கையாண்டுள்ளனர். ஏக தெய்வ வழிபாடு என்றால் இதர தெய்வ ஆலயங்களுக்கோ மற்ற மதத்தினர் வழிபடும் இடங்களுக்கோ செல்லக் கூடாது என்பது அல்ல பொருள். முருக பக்தன் ஒருவன் வைணவக் கோவிலுக்குச் சென்றாலும் மசூதி மற்றும் மாதா கோவிலுக்குச் சென்றாலும் அங்கு இருக்கும் இறைவனை தான் வணங்கும் முருகனாக கருதி வழிபட வேண்டும்.

நால்வருக்கு பிறகு அருணகிரி நாதர்தான் ஏக தெய்வ வழிபாட்டைச் செய்தவர். அவர் முருகனைத் தவிர யாரையும் பாடியதில்லை.

கடவுளுக்கு உருவம் உண்டா இல்லையா? என்று பலர் பிரச்னையை எழுப்புகிறார்கள். கடவுளுக்கு உருவம் இல்லை என்பது இந்து மதத் தத்துவம். ஆனால் இந்துக்கள் உருவ வழிபாடு செய்கிறார்கள். தண்ணீர் அதிக குளிர்ச்சியின் காரணமாக பனிக் கட்டியாவது போல் உருவமில்லாத இறைவன் பக்தர்களின் நம்பிக்கை காரணமாக உருவமுள்ளவனாகிறான்".

-தஞ்சை பெரிய கோவில் ராஜராஜ சமய சங்கத்தின் சார்பில் நடைபெற்ற அருணகிரி நாதர் 600 வது ஆண்டு நிறைவு விழாவில் கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவின் ஒரு பகுதி இது.

-தினமணி
12-12-1975

இந்து மத கொள்கைகளை வாரியார் சுவாமிகள் ஆய்வு செய்து இறைவனுக்கு உருவம் கற்பித்து வணங்குவதை இந்து மதம் ஒத்துக் கொள்ளவில்லை என்று கூறுகிறார். இந்துக்கள் உருவ வழிபாடு தற்போது செய்து வருவதால் அதற்காக ஒரு சமாதானத்தைத்தான் வாரியார் சுவாமிகள் சொல்கிறார். எனவே அடிப்படையில் இந்து மதம் இஸ்லாம் கூறும் ஏக தெய்வ கொள்கையையே கொண்டிருப்பதாக ஒரு முடிவுக்கு வர வேண்டியுள்ளது.

ஏகலைவன் வரலாற்றை நாம் கொஞ்சம் கேட்போமா?



சென்ற ஒரு வாரத்துக்கு முன்பு சாதி மாறி திருமணம் முடித்தாள் என்பதற்காக தனது பெற்ற மகளையே ஒரு தகப்பன் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்றதை பத்திரிக்கைகளில் படித்தோம். இதற்கு கௌரவக் கொலை என்று பெயரும் வைத்துள்ளனர். இந்த சாதி வெறி இவர்கள் மனதில் எப்படி உருவானது. 20 வயது வரை போற்றி போற்றி வளர்த்த தனது மகளை வெட்டிப் போட எப்படி மனது வந்தது?

காலகாலமாக நமது தமிழ் புராணங்களும், இதிகாசங்களும், வேதங்களும் சாதியை முன்னிறுத்தியே புனிதம் என்ற பெயரில் அரங்கேற்றி வந்தது. கடவுளே அனுமதி கொடுத்திருப்பதால் வழி வழியாக இந்த சாதி வெறியானது நமது மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றி விட்டது.

இன்று இந்து மதத்துக்கு வக்காலத்து வாங்கி வரும் பிற்படுத்தப்பட்ட மக்களான சென்னி மலை, ராம் நிவாஸ் போன்ற நண்பர்கள் இந்த வரலாறை படித்திருப்பார்கள். என்னதான் கொடுமையை அனுபவித்தாலும் அதனை சகித்துக் கொண்டு தான் வாழும் இந்து மதத்தை விட்டுக் கொடுக்காமல் பேசி வரும் இவர்களின் குணம் நாம் வரலாறுகளில் படித்த ஏகலைவன் குணமே! அது அவர்களின் இயல்பு. காலா காலமாக ஒரு குறிப்பிட்ட மேல் சாதியினர் ஆதிக்கம் செலுத்த என்றுமே உறுதுணையாக இருப்பவர்கள் இந்த பிற்படுத்தப்பட்ட மக்கள். இந்த எண்ணம் எவ்வாறு ஏற்பட்டது என்பதற்கு பல வரலாறுகளில் ஒன்றான ஏகலைவன் வரலாற்றை சற்று படித்துப் பார்போம்.

-----------------------------------------

வேட்டுவர் குலத்தைச் சார்ந்த ஏகலைவனுக்கு வில் வித்தை கற்றுக் கொள்ள ஆசை ஏற்படுகிறது. வில் வித்தை கற்ற துரோணாச்சாரியாரிடம் செல்கிறான் ஏகலைவன்.

“நீ என்ன குலம்? என்ன ஜாதி?” என்று வில்வித்தை கற்க வந்த ஏகலைவனைப் பார்த்து துரோணாச்சாரி கேட்கின்றார்.

“நான் வேட்டுவர் குலம். நான் வேடன்” என்று சொன்னவுடனே,

"அப்படியா? உனக்கு தனுஷ் வித்யா என்று சொல்லக்கூடிய இந்த வில்வித்தையை நான் கற்றுத்தரமாட்டேன்” என்று சொல்லுகிறார்.


“வர்ணாஸ்ரம தர்மப்படி கல்வி என்கின்ற அந்த வில்வத்தையை கற்றுக்கொள்ள உனக்கு அந்த உரிமை கிடையாது. எனவே நீ அதை நினைக்கக் கூடாது, உன்னை நான் சேர்த்துக்கொள்ளக் கூடாது” என்று அனுப்பிவிடுகிறார்.

எப்பொழுதோ நடந்த சம்பவம் அதை இருவரும் மறந்து விடுகின்றார்கள். பின்னால் காட்டிலே துரோணாச்சாரி அவர்கள் சென்று கொண்டிருக்கின்ற நேரத்திலே திடீர் என்று அப்பொழுதுதான் நாய் குரைக்கிறது. குரைக்கின்ற நாயின் சத்தத்தைக் கேட்டே அம்பு விழுகிறது அந்த நாயின் வாய் இரண்டாகப் பிளந்து விடுகின்றது.

“அந்த வில்வித்தை வீரன் யார்? ஒலியை வைத்து இவ்வளவு துல்லியமாக அடிக்கக் கூடிய ஆற்றல் படைத்த வில் வித்தை வீரன் யாராக இருக்க முடியும்? அர்ஜூனன் தானே வில் வித்தைக்கே புகழ் பெற்றவன் என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன். இப்படி அம்பு எய்தியது யார்?” என்று கேட்டு ஒரு சத்தம் கொடுக்கிறார் துரோணாச்சாரி.

உடனே ஒரு வேடன் வந்து அவர் காலிலே விழுந்து வணங்கி, “குருதேவ! நான் தான் அம்பை எய்து அந்த நாயைக் கொன்றவன்.” என்று சொல்லுகின்றார்.

இப்படிச் சொன்னவுடனே “அப்படியா? நீ யார் சொல். இந்த வில்வித்தை அர்ஜூனனுக்கு மட்டும் தான் தெரியும். ஆனால், இங்கு நீ அதைவிட திறமையாகச் செய்திருக்கிறாயே, உனக்கு எப்படி இந்தத் திறமை வந்தது” என்று துரோணாச்சாரி கேட்கிறார்.


“யார் உனக்கு குரு? யார் உனக்கு சொல்லிக்கொடுத்தது?” என்று கேட்கிறார் அப்பொழுது மிகுந்த அடக்கத்தோடு ஏகலைவன் சொல்லுகிறார்.

(ஏனென்றால், நாமெல்லாம் இந்த ஏகலைவன் பட்டியலிலே இருக்கக்கூடியவர்கள். இன்று இந்து மதத்துக்கு தோள் கொடுக்கும் சென்னி மலை, ராம் நிவாஸ் மற்றும் என்னைப் போன்ற மதம் மாறிய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு வரலாறு. ஏகலைவன்கள் எவ்வளவு அடக்கமாக இருப்பார்கள் எவ்வளவு நன்றியோடு இருப்பார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். :-))

“ நீ எனக்கு மாணவன் என்று சொல்லுகின்றாய் உன்னை ஒரு நாளும் பார்த்ததில்லையே” என்று கேட்கின்றார் துரோணாச்சாரி.

நடந்ததை ஏகலைவன் சொல்லுகின்றார். “வில்வித்தை கற்க நான் வந்தபொழுது அதை ஏற்க மாட்டேன் என்று சொன்னீர்கள். பிறகு உங்களைப் போலவே மண்ணாலே ஒரு உருவம் செய்து தினசரி நான் பயிற்சி செய்து அதிலேயே நான் இந்த வில்வித்தையைக் கற்றுக்கொண்டேன்” என்று சொல்லுகின்றார்.

இதைக் கேள்விப்பட்டவுடன் அந்த குருநாதர் தன்னுடைய மாணவனை எவ்வளவு பாராட்ட வேண்டும்? அவன் உண்மையான நல்லாசிரியராக இருந்திருந்தால் தட்டிக் கொடுத்து “நான் இல்லாமலேயே என்னைப் போல் இவ்வளவு அருமையாக செய்திருக்கிறாயே. நீ அல்லவா என்னுடைய தலைசிறந்த மாணாக்கன்” என்று சொல்லித் தட்டிக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் தட்டிக்கொடுப்பதற்கு துரோணாச்சாரிக்கு அந்த எண்ணம் வரவில்லை. உடனே அவர் என்ன செய்கிறார்? சிரித்துக்கொண்டே ரொம்ப அமைதியாக

“அப்படியா? நீ குரு தட்சணை கொடுக்க வேண்டுமே” என்று சொல்லுகின்றார்.

ஏகலைவன் இனமோ ஏமாந்தே பழக்கப்பட்ட இனம். நன்றியுணர்ச்சியினுடைய அடிப்படையிலே ஏகலைவன் சொல்லுகின்றார்.

“குருதேவ! நீங்கள் எதைக் காணிக்கையாக கேட்டாலும் அதை நான் கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறேன்” என்று சொல்லுகிறான்.

உடனே துரோணாச்சாரி “எதைக் கேட்டாலும் கொடுப்பாயா?” என்று கேட்கின்றார்.

“நீங்கள் கேட்கும் பொழுது குரு தட்சணையை நான் மறுப்பேனா?” என்று சொல்லுகின்றார்.

''என்ன தருகிறாய்?''

''என் உயிரை வேண்டுமானாலும்''

''உன் உயிர் வேண்டாம். உன்னுடைய வலது கை கட்டைவிரல் வெட்டித்தா. அதுவே காணிக்கை...''

கண்ணீர் விடுகிறான், ஏகலைவன். கலங்கித் தவிக்கிறான். மருகி மன்றாடுகிறான். கட்டைவிரல் இல்லாவிட்டால் அம்பைப்பற்றிப் பிடிக்கமுடியாது. வில்லைக் கையாளமுடியாது.

வர்ணாசிரமத்தின் கோர ரூபம் அவன் முன்னால் நின்றது. துரோணோச்சாரியாருக்கோ பாவத்தைக் கழுவுகிற யத்தனிப்பு. அவனுக்கோ வாழ்வுரிமையைப் பறிகொடுக்க இருக்கிற பதைப்பு. பரிதவிப்பு.

முடிவில் தனது கட்டை விரலை ஏகலைவன் வெட்டிக் கொடுத்தான். (இந்த இனம் காலம் காலமாக ஏமாந்த இனம் என்பதற்கு அடையாளமே அது தான்.)


துரோணாச்சாரியும் பெற்றுக்கொள்கின்றார். அதற்குப் பிறகு ஏகலைவன் சிறந்த வில்வித்தை வீரன் வில்லைத் தொடவில்லை.

துரோணர்களும், பஞ்சபாண்டவர்களும், கௌரவர்களும் சோற்றில் கை வைத்து உண்ணுகிறார்கள் என்றால், அந்த உணவு உற்பத்திக்காக சேற்றில் கால்வைத்துப் புதைகிற வியர்வை மனிதர்கள்... உழைப்பாளி மக்கள். சகலத்தையும் உற்பத்தி செய்கிற வியர்வை மனிதர்கள்.

காலா காலமாக தலித்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒடுக்கப்பட்டு வருவதன் சூட்சுமம் இது போன்ற வரலாறுகள்தான். இது ஆழமாக உள் மனதில் பதிந்து விட்டதனால்தான் பார்பனர்களுக்கும் வர்ணாசிரமம் ஒரு பாவம் என்று விளங்குவதில்லை. அடிமையாக இருப்பதுதான் நம் தலையில் எழுதப்பட்ட விதி என்று பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்கள் ஒரு பொதுப் புத்திக்கு வந்து விட்டதால் இது ஒரு கொடுமையாகவே அவர்களுக்கு தெரிவதில்லை.

வேதமறிந்த பிராமணர்க்குப் பணிவிடை செய்வதே சூத்திரர் தர்மம். சூத்திரர்க்கு அதுவே மோட்சப் பாதை.
(மனு தர்மம் 10:276)

பிராமண, சத்திரிய, வைசியர்க்கு ஒருவரில்லாவிடில் அடுத்தவருக்குத் தொண்டு புரிவதே சூத்திரருக்குத் தர்மம் ஆகும்.
(மனுதர்மம் 10:277)

பிராமணனுக்கு மங்களம், சத்திரியனுக்கு பலம், வைசியனுக்குச் செல்வம், சூத்திரனுக்கு அவனது அடிமை நிலை தோன்றும்படியான பெயர்களைச் சூட்ட வேண்டும்.
(மனு தர்மம் 3:23)


சென்னி மலை ஆதாரங்களைத் தாருங்கள் விவாதிப்போம் என்று கேட்டதாலேயே இந்த பதிவை பகிர்கிறேன்.

இனி ராமாயணத்தில் வரக் கூடிய இன ஒதுக்கலைப் பற்றி வரக் கூடிய பதிவுகளில் பார்போம்.





Tuesday, March 10, 2015

நெகிழ வைத்த நிகழ்வு - இந்து மத நன்மக்கள்

நெகிழ வைத்த நிகழ்வு - இந்து மத நன்மக்கள்

முகநூலில் ஒரு இந்து நண்பர் பதிந்த பதிவும், அந்த பதிவுக்கு வந்த பின்னூட்டங்களும்....

நான் எனது பள்ளிப்படிப்பை பழனி அருகில் உள்ள கீரனூர் எனும் அழகிய ஊரில் படித்தேன். கிட்டத்தட்ட பாதிக்கு மேல் என் பள்ளித்தோழர்கள் இசுலாமிய மார்க்கத்தை சேர்ந்தவர்கள். லுங்கி அணிந்தே பள்ளிக்கூடம் வருவதும் ஒரு சில சமயங்களில் அனுமதிக்கப்பட்டே இருக்கும். பிஸ்மில்லாஹிரஹ்மானிரஹீம் என்று பள்ளியில் என் நண்பன் பஜ்ஜுலூர் ரஹ்மான் மைக்கில் ஓதுவான். இன்னொரு நண்பன் இஸ்மாயில் பள்ளிக்கூட பாட்டுப்போட்டியில் முதலிடம் வாங்குவான் . . . இன்றும் அவனது நாகூர் ஹனீபா குரலில் பாடும் . . . "பாங்கோசை கேட்டபின்பும்... பள்ளி செல்ல மனம் வல்லையோ . . .. படைத்தவன் நினைவில்லையோ" பாடல் ஒலிக்கிறது !

அப்போதே இரண்டு பிரிவுகள் . . .. ஒன்று நாகூர் அனீபா பாட்டுக்கச்சேரி நடத்தும் திமுக சார்பு அணி . . . இன்னொன்று சேக்முகமது (என்று ஞாபகம்) அவர்களை அழைத்து கச்சேரிகள் நடத்தும் ஏடிஎம்கே அணி. அன்றெல்லாம் பாய்மார்கள் எல்லாம் மாமன் மச்சான் உறவோடு பழகிய காலம் !

கோவையில் இனமோதல்களை பார்த்தபோது எனக்கு ஒன்றுமே விளங்கியதில்லை . . .. புரிபடவும் இல்லை. உள்ளூர் கலாச்சாரங்களை உலக கலாச்சாரங்கள் முழுங்கியபோதுதான் பிரச்சினைகள் ஏற்பட்டது என்று மட்டும் கொஞ்சம் புரிந்தது. ஆனாலும் லைலத்துல் கத்ர் அன்று காலை கூட உணவு உண்ணாமல் பல ஆண்டுகள் நோம்பு இருந்தேன். காந்திபுரம் வாட்ச் பாய் ஷனாவுல்லா உடன். உண்மையில் ரமலான் அவர்களுக்கு ஒரு இறையுணர்வுடன் கூடிய ஒரு புனித காலம் என்பது மட்டும் எனக்கும் அவர்களோடு பழகியதில் புரிந்தது. அவரவர்கள் வழியில் பயணிக்காமல் அடுத்தவர்களின் வழியை குறைசொல்ல தொடங்கும்போதுதான் மார்க்கங்கள் மரணங்களில் முடிகின்றன. எனக்கு தக்கலையில் ஒரு முதியவர் ஒருவர் நண்பராக இருந்தார். அவர் சொல்வார் . . . "நான் என் அளவுக்கு அல்லாவுக்கு எவ்வளவு நேர்மையாக இருக்கிறேன் என்பதை மட்டுமே பார்க்கிறேன் தம்பி. மற்றவர்களின் தீர்ப்பை அல்லாதான் முடிவு செய்வார் .. அதில் எனக்கு ஒரு பங்கும் இல்லை" என்று சொல்லுவார். அனைவருக்கும் ஷியா, சன்னி என்ற இரு பிரிவுகள் மட்டுமே தெரிந்திருக்கும்போது எனக்கு இன்னொரு பிரிவான இபாதி இசுலாம் பற்றியும் படித்து வந்திருக்கிறேன். இன்றும் அவ்வப்போது நபிகளின் போதனைகளை படிப்பதும் உண்டு.

அனைத்து நண்பர்களுக்கும் எனது இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள் !

-ஓசை செல்லா

----------------------------------------

Alangiam pallivasalil dhinandhorum kalai 5.45 paadum baangosai engalukku puthunarvu tharum ......

-Shanmuga Sundar

----------------------------------------

நான் சென்னை பாரிமுனைக்கு அருகே ஒரு கான்வென்ட் இல் lkg. -2nd STD படித்து போது, என் அம்மா வேறொரு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார் .அவர் வீடு திரும்பும் முன்னரே நாங்கள் வந்துவிடுவோம் ஆகையால் நானும் என் அக்காவும் என் தோழி தமீம் பாத்திமா வீட்டில் தான் காத்துக்கொண்டிருப்போம்.... அவர்கள் வீடு மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும... அவர்கள் வீட்டில் நான் சுவைத்த ஏலக்காய் டீபோல் வாழ்க்கையில் வேறு எங்கும் சாப்பிட்டதில்லை..... என் குழந்தைப் பருவத்தின் பல பசுமையான நியாபகங்களின் களமாக திகழ்ந்தது அவர்களின் வீடு... பகிர்ந்து உண்ண நான் கற்றுக் கொண்டது அங்கே தான்....

இசுலாம் நல்ல மதம் ...இசுலாமியர்கள் நல்லவர்கள் ....கெட்டவர்கள் இசுலாமியர்களே இல்லை !

இனிய ரமலான் நல்வாழ்த்துகள்

-Iswarya Raghupathy

---------------------------------------

இதுதான் தமிழகம்..... இந்த எண்ணங்கள் தான் தமிழர்களின் பெரும்பான்மையோருடையது. ஒரு சில ராம கோபாலன்களும், தெகோடியாக்களும், நரேந்திர மோடிக்களும் இந்த அமைதியை குலைத்து விட முடியாது. என்றும் எங்களது தமிழகம் அமைதிப் பூங்காவே என்று மார்தட்டி சொல்லுவோம்.

கல்லு போன்ற உறுதி எது? விளக்குகிறார் பெரியார்!



"சகோதரர்களே!

இந்த மாதிரியான முக்கிய சந்தர்ப்பத்தில் கூட்டப்பட்ட இப்பெரியக் கூட்டத்தில் என் போன்றவர்களது அபிப்பிராயத்தையும், தெரிவிக்கச் சந்தர்ப்பமளித்ததற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு முன் இங்கு பேசிய இருவர்களில் முதலில் பேசிய மௌலானா மௌல்வி அ. க. அப்துல் அமீது சாயபு (பாகவி) அவர்களைப் பற்றி நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. அவர்கள் இதற்குமுன் பலதடவை நம் ஈரோட்டிற்கு வந்திருந்தாலும் குறிப்பாக திரு. காந்திய வர்களும், மௌலானா அசாத் சோபானி அவர்களும் நம் ஈரோட்டிற்கு வந்திருந்தபோது மௌலானா அவர்கள், மௌலானா அசாத் சோபானி அவர்களின் உருது உபந்நியாசத்தைத் தமிழில் மொழி பெயர்த்ததோடு தமிழ்நாடு முழுவதும் அவர்கள் கூடவே இருந்தவர் என்பது உங்களனைவருக்கும் ஞாபகமிருக்கலாம். அவர்கள் இதுவரை பேசியதிலிருந்து எதையும் எந்த மதத்தையும் சரித்திரத்திலிருந்து தீர்மானிக்கக் கூடாது என்றும், அதன் பலனைக் கொண்டும், அது மக்களுக்கு என்ன நன்மை அளித்தது என்பதைக் கொண்டுதான் தீர்மானிக்க வேண்டுமென்றும், மதம் என்பது வெறும் வேஷத்திலில்லையென்றும், அது மக்களின் நன்மைக் காகவே இருக்க வேண்டுமென்றும், அத்தோடு அது எவருக்கும் நம்பிக்கையில் மாத்திரம் இல்லாமல், பகுத்தறிவிற்கும், ஆராய்ச்சிக்கும், அனுபவத் திற்கும் ஏற்றதாயிருக்க வேண்டுமென்றும் சொன்னார்கள். இதை நான் முழு மனதுடன் ஒப்புக் கொள்கிறேன். மற்றும் உலகத்திலுள்ள மதக்காரர்களெல்லாம் இதை ஒப்புக் கொள்ளும்பட்சம் நாட்டில் மத சம்மந்தமான எவ்வித சண்டையும், அபிப்பிராயபேதமும், பிரிவும் பல மதங்களும் ஏற்பட இடமே இருக்காது. தவிர மௌலானா அவர்கள் இஸ்லாம் மதத்தில் பெண்களுக்கும், தீண்டாதார் என்பவர்களுக்குமுள்ள பல சுதந்திரங்களையும், இந்து மதத்தில் அவை இல்லாததையும் எடுத்துச் சொன்னார்கள். அதையும் நான் ஒப்புக் கொள்கிறேன். மேலும் அதைப் பற்றியே இரு சமூகத்திற்கும் பயன் படுமாறு சில வார்த்தைகள் பின்னால் பொதுவாகச் சொல்லுகிறேன்.

இந்துக் கடவுள்கள் உருவத்தை எல்லாம் இஸ்லாமியர்கள் உடைத்து சின்னாபின்னமாக்கப்பட்டதாகவும், ஒரு கையில் வாளையும், மற்றொரு கையில் குரானையும் வைத்து மதப் பிரசாரம் செய்ததாகவும் சொல்லப் படுகின்றது. அது உண்மையாய் இருந்தாலும் இருக்கலாம், பொய்யாயிருந்தாலும் இருக்கலாம். ஆனாலும் அது உண்மையாயிருந்தால் அந்த கொள்கை கொண்ட மகமதிய அரசாங்கம் இதுவரை இந்தியாவில் இருந்திருக்குமாயின் இன்றைய இந்தியாவின் நிலை எவ்வளவோ மேன்மையாய் இருந்திருக்கும். தீண்டாதார்களாக ஆறு கோடியும் பயங்காளிகளும், கோழைகளும் ஒற்றுமையற்றவர்களும் சோம்பேறிகளுமாக இருபது கோடியுமுள்ள மக்கள் இன்று கண்டிப்பாய் இந்தியாவில் இருந்திருக்க மாட்டார்கள் என்பது கல்லு போன்ற உறுதி.

குழவிக் கல்லுக்கு கோடி ரூபாய்

ஒரு பக்கம் நமது மக்கள் கஞ்சிக்கில்லாமல் அலையவும் - நாட்டை விட்டு லட்சக்கணக்கான பேர்கள் கஞ்சிக்காக வெளி நாடுகளுக்கு ஓடவும் பார்த்துக் கொண்டே நமது கடவுள்கள் குழவிக் கல்லுகள் அவதாரத்திலிருந்து கொண்டு இவ்வளவு பெரிய கோவிலுடனும், இத்தனைக் கோடி ரூபாய்கள் நகையுடனும், இத்தனை வேளை பூசையுடனும், இத்தனை தாசி, வேசி, வைப்பாட்டி, பெண்டாட்டிகளுடனும் இருந்து கொண்டு பல்லக்கு, ரதம், தேர், ஆனை, குதிரை, ஆடு, மாடு, மயில், குரங்கு, கழுகு வாகனத்தில் சவாரி செய்து கொண்டு ஊர்வலம் வந்துகொண்டே இருக்குமா? இருக்கும் என்று நீங்கள் கருதுகின்றீர்களா? அல்லது இவ்வளவு பணம் நமது நாட்டை விட்டு வெளிநாட்டுக்கு கொள்ளை போய் கொண்டு இருப்பதற்கு நமது மக்களே அனுகூலமாய் இருப்பார்கள் என்று கருதுகின்றீர்களா?

இந்தியாவானது எத்தனையோ காலத்திற்கு முன் சுயராஜியத்துடன் உலகத்திலுள்ள நாடுகளில் எல்லாம் மேன்மையாக இருந்து கொண்டிருக்கும். ஆகையால் அதைப் பற்றி அதாவது வாள் கொண்டு இஸ்லாம் மதப் பிரசாரம் செய்ததைப் பற்றியும் நமது கோயில்களை இடித்து சாமிகளை ஊனப்படுத்தினார்கள் என்பதைப் பற்றியும் நான் சிறிதும் வருத்தமடையவில்லை. அன்றியும் அதுவேதான் அம் மாதிரியாகச் செய்வதுதான் மற்ற எல்லா மதத்தினுடையவும் பிரசார தர்மமாகவும் இருந்திருக்கின்றது. இன்றும் இருக்கின்றது.

-ஈரோடு முனிசபல் எலிமெண்டரி பாடசாலையில் நடந்த நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த நாள் விழாவிலும் சத்தியமங்கலம் விழாவின் தலைவர் முடிவுரையிலும் பெரியார் அவர்கள் பேசியது.-”குடி அரசு” - சொற்பொழிவு - 24.08.1930

Monday, March 09, 2015

இஸ்லாமியரை தடுக்கலாம்! இந்துக்களை தடுக்க முடியுமா?





இஸ்லாமியரை தடுக்கலாம்! இந்துக்களை தடுக்க முடியுமா?

திரு பிஎஸ்!

//இசுலாமியருக்குச் சொல்லிச்சொல்லி அவர்களைப்போக விடாமல் செய்வேன் என்று சுவனப்பிரியன் எழுதுகிறார். அபபடியே இசுலாமியர் நிறுத்திக்கொண்டாலும் இந்துக்களால் தர்கா வழிபாடு தொடர்ந்து கொண்டே இருக்கும்.//

அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பது போல இன்று நாகூர் தர்ஹா போன்ற தமிழக தர்ஹாக்களை பெரும் பாலான இஸ்லாமியர்கள் விட்டு விட்டனர். எனது குடும்பத்திலேயே பலர் வருடா வருடம் நாகூர் தர்ஹாவுக்கு சென்று வருவர். குர்ஆன் வசனங்களையும் நபி மொழிகளையும் அவர்களிடம் எடுத்துச் சொல்லி இன்று பெண்களும் தொழுகைக்கு பள்ளிக்குச் செல்கிறார்கள்.

மற்றபடி இந்துக்கள் தர்ஹாவுக்கு இன்றல்ல. தொன்று தொட்டு வந்து கொண்டேயிருக்கிறார்கள். பள்ளி வாசலுக்கும் தங்கள் குழந்தைகளை கொண்டு வந்து ஓதி விடச் சொல்வார்கள். திருத்தணி பள்ளி வாசலில் சில நேரம் நானும் ஓதி ஊதி விட்டுள்ளேன். :-) அது அவர்களின் நம்பிக்கை. அதில் நான் தலையிட முடியாது. ஆனால் இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றினால் ஒரு இஸ்லாமியன் என்ற முறையில் அதற்கான ஆதாரத்தை கேட்கும் உரிமை எனக்கிருக்கிறது.

//தர்காக்கள் இறந்த இசுலாமியர் மேல் எழுப்பப்பட்ட சமாதிகள் மட்டுமல்ல, இறந்த இசுலாமியரல்லாதோர் மேலும் எழுப்பப்பட்ட சமாதிகளும் ஆகும். தமிழகத்தைப் பொறுத்தவரை. பிராமணர்களுக்கும் தர்காக்கள் உண்டு. திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வரும் காட்டுப்பள்ளிவாசல் என்ற நிறுத்ததில் வரும் புகழ்பெற்ற தர்கா இரு இசுலாமியச்சஹோதரகளும் 7 பிராமணப்பெண்டிரும் தொடர்பான கதை. தஞ்சைக்குப் பக்கத்தில் இருப்பது பாப்பாத்தி அம்மன் தர்கா (ஒரு பிராமணப்பெண் இசுலாமியராக மாறி இறந்து அது தர்ஹாவாக மாறியுள்ளது) //

இது எனக்கு புதிய தகவல். தகவலை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி! அந்த தர்ஹாக்களை கல்விச் சாலைகளாகவோ அல்லது இறைவனை வழிபடும் பள்ளி வாசலாகவோ மாற்றினால் அங்கு அடங்கியுள்ள அந்த சகோதரர்களின் நன்மைகளாக பதிவு செய்யப்படும். அந்த தர்ஹாக்களை நிர்வகிப்பவர்கள் இதற்கான முயற்சிகளை அந்த மக்களின் துணையோடு எடுப்பார்களாக!

//லேட் மலர்மன்னன், க்ருஷ்ணகுமார் போன்ற இந்துக்கள் இத்தர்காக்களுக்குச் சென்று வழிபடுதலும் உருகுதலும்//

திரு மலர்மன்னனும், திரு க்ருஷ்ணகுமாரும் தர்காக்களுக்காக உருகுவதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. பவுத்தம், சமணம், நாட்டார் வழிபாடு, தமிழரின் வழிபாடு, கிறித்தவம் என்று அனைத்து வழிபாடுகளிலும் பார்பணியத்தை புகுத்தி அவற்றை எல்லாம் இந்து மதத்தின் ஒரு பிரிவாகவே மாற்றி விட்டனர். ஆரம்ப காலம் தொட்டு இஸ்லாம் மட்டுமே தனித் தன்மையோடு விளங்குகிறது. இந்து மதத்துக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது இஸ்லாம் மட்டுமே! பல இந்துக்கள் இஸ்லாத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். இதனை தடுக்க அருமையான வழிதான் இஸ்லாத்தில் இந்து மத சடங்குகளை புகுத்துவது. அதற்கு மிக உறுதுணையாக இருப்பது தமிழக தர்ஹாக்கள். தேர் இழுத்தலை சந்தனக் கூடு என்றும், தீ மிதித்தலை பூக்குழி இறங்குதல் என்றும் பெயர்களை மாற்றி இந்து மத சடங்குகளை கணக்கின்றி புகுத்தினர். காலில் விழுவது, மயிலிறகால் ஆசீர்வதிப்பது, இசைக் கச்சேரிகளை அரங்கேற்றுவது, மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடி, தேங்காய், பூ, சந்தனம் என்று அனைத்து கலாசாரத்தையும் தர்ஹாக்களில் அரங்கேற்றுவதை காணலாம்.

ஆனால் இவற்றில் எந்த ஒன்றுமே பள்ளி வாசலில் அரங்கேற்ற முடியாது. பாதுகாக்கப்பட்ட குர்ஆனின் மொழி பெயர்ப்பு இருப்பதால் அதனை வைத்தே புதிய வழிபாடுகள் அனைத்தையும் இஸ்லாமியர் ஓரங்கட்டி விடுவர்.

எனவே தான் க்ருஷ்ணகுமாரும், அரிசோனனும், மலர் மன்னனும் தர்ஹாவுக்கு கொடி பிடிக்கின்றனர். இது தர்ஹாவின் மேல் எழுந்த பாசம் அல்ல. இஸ்லாத்தின் தனித் தன்மையை உடைக்க தர்ஹா பயன்படுகிறதே என்ற சந்தோஷத்தில் எழும் வார்த்தைகளே அவை. இதனை க்ருஷ'ணகுமாரும் நன்றாகவே உணர்வார் :-)

Sunday, March 08, 2015

புதிய தலைமுறை பேட்டியில் சீமான்!

புதிய தலைமுறை பேட்டியில் சீமான்!

கேள்வி:

மோடி இலங்கை சென்று அந்த நாட்டு ஜனாதிபதியோடு பேசினால் அங்குள்ள தமிழர்களுக்கு நீதி கிடைக்காதா? இதை ஏன் தடுக்கிறீர்கள்?

சீமான்:

என்ன பேசிடப் பொறாரு இவரு? ரொம்ப பேசுனாருன்னா 'நீ குஜராத்துல முஸ்லிம்களுக்கு என்ன செஞ்சீயோ அதத்தான் நானும் செஞ்சேன்' என்று பதில் குடுத்தான்னா இவர் மூஞ்சிய எங்க கொண்டு போய் வச்சுக்குவாரு! அதனால் உபயோகமா எதையும் பேச மாட்டார். அது எங்களுக்கும் தெரியும்.

கேள்வி:

“தமிழர் மதம்” என்று ஏற்படுத்துவது புதிதாக ஒரு குழப்பத்தை உண்டாக்குகிறீர்களா?

சீமான்:

'ராவணன் என் முப்பாட்டன். அவனை வில்லனாக்கி அவனுக்கு 10 தலையை கோத்து விட்டு, பற்களை அகோரமாக்கி ஜண்டு பாம் விளம்பரத்தில் 'ஹா... ஹா....' என்று பயமுறுத்துவது கிண்டலா இல்லையா? ராமனுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? சத்ரபதி சிவாஜிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? இதை எல்லாம் என் இனத்துக்கு சொல்லக் கூடாதா?'