Followers

Sunday, September 10, 2017

கர்நாடக இசைக் கலைஞர் தற்கொலை!

கர்நாடக இசைக் கலைஞர் தற்கொலை!

கர்நாடக தலைநகர் பெங்களூருவை சேர்ந்த பியானோ இசைக்கலைஞர் கரன் ஜோசப். இவர் மும்பையின் பந்த்ராவில் உள்ள தனது நண்பர் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஒரு மாதமாக தங்கியிருந்தார். நேற்று(செப்.,9) இரவு 8.30 மணியளவில் 12வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நேற்று இரவு, 12வது மாடியில் உள்ள வீட்டில் தனது நண்பர்களுடன் டிவி பார்த்து கொண்டிருந்த கரன், திடீரென எழுந்து வந்து ஜன்னல் வழியாக கீழே குதித்தார். உடனடியாக மருத்துவமனைக்கு நண்பர்கள் அழைத்து சென்றனர்.ஆனால் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். அவரது வீட்டில் தற்கொலை குறித்த குறிப்பு ஏதும் இல்லை. அவரது மொபைல் போன் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியில் சென்ற அவர், சனிக்கிழமை தான் பிளாட்டிற்கு திரும்பினார். சம்பவம் குறித்து கரன் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்
10-09-2017


இசை மனிதனுக்கு அமைதியை கொடுக்கும். மன உளைச்சலுக்கு சிறந்த மருந்து என்று பலரும் சொல்கின்றனர். ஆனால் இந்த இசைக் கலைஞனின் வாழ்வானது அந்த எண்ணத்தை பொய்ப்பிக்கிறது.


1 comment:

Dr.Anburaj said...

தமிழ் நாட்டில் மிகப்பிரபலமான இசை பாரம்பாியம் மிக்க பிரபல கா்நாடக பாடகியின் கணவா் கூட தற்கொலை செய்து கொண்டாா்.சுவனப்பிாியன் இவா் வாழ்வில் ஏதோ விபாிதம் நடந்து இருக்கலாம். அதற்காக இசையின் சிறப்பை மலினப்படுத்த வேண்டாம்.காட்டரபிகளின் கருத்து தவறு.மேல் நாட்டு இசையும் முரட்டுத்தனமானது.பண்பாட்டுச் சிதைவிற்கு காரணமாக உள்ளது.தமி்ழ் பண் மற்றும் கா்நாடக சங்கீத ராகங்கள் மனதிற்கு சுகமானவை.ஆவேசம் அற்றவை. மென்மையானவை.

துன்பக்கடலை தாண்டும் போது தோணியாவது கீதம்.

மனிதா்கள் பலவகை திறமைகளுடன் பிற்கின்றாா்கள்.அதில் இசையும் ஒன்று. இசையையும் பண்பாட்டுச் சிதைவு ஏற்படாமல் ரசிக்க மக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.காயத்திாியின் வீணை இசையைக் கேட்டுப் பாருங்களேன். தற்கொலை செய்யும் எண்ணம் வருகின்றதா ? ஆவேசம் வருகின்றதா ? மனம் புத்துணா்ச்சி அடைகின்றதா ?

குரான் ஓதுவது கூட ஒருவகை ராகம் போட்டுத்தானே ! பின் ஏன் இசை என்றால்இவ்வளவு வெறுப்பு.
சென்னையில் பரத நாட்டியப் பள்ளிகளில் நிறைய முஸ்லீம் குழந்தைகள் பரத நாட்டியம் படிக்கின்றாா்கள்.கா்நாடக சங்கீதம் படிக்கின்றாா்கள்.இசைக் கருவிகள் வாசிக்கப் படிக்கின்றாா்கள். தாங்கள் அரேபிய மயக்கத்தை விட்டு கண்ணைத்திறந்து பாருங்கள்.