'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
அமெரிக்காவில் துப்பாக்கி
சூட்டில் இறந்த 59 நபர்களின் குடும்பத்தாருக்கு
எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
நேற்று அமெரிக்காவில்
இசை நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தி 59 பேரை கொன்ற ஸ்டீஃபன் பெட்டாக் சூதாட்டத்தை அதிகம் விரும்பியவன்:
நாட்டுப்புற இசையை அதிகம் விரும்பி கேட்பவன்:. இசையை ஓரளவு ரசித்தால் அதனால் பிரச்னை
ஒன்றுமில்லை. ஆனால் எந்நேரமும் இசை... இசை என்று அடிமை நிலைக்கு சென்றால் மனநோயாளியாக
மாறி முடிவில் துப்பாக்கியை கையில் எடுக்கும் மனோ நிலைக்கு தள்ளப்படுவோம். இதற்கு சிறந்த
எடுத்துக் காட்டு இந்நிகழ்வு.
இசையை எந் நேரமும்
ரசித்துக் கொண்டிருந்த மைக்கேல் ஜாக்ஸனும் முடிவில் போதை மருந்துக்கு அடிமையாகி தனது
வாழ்வை முடித்துக் கொண்டார். இசையை வாழ்வாகக் கொண்ட பலரின் முடிவு இவ்வாறாகவே இருந்துள்ளது.
இஸ்லாமும் இதனால்தான்
இசைக்கு சில கட்டுப் பாடுகளை விதிக்கிறது. பண்டிகை காலங்களில் சந்தோஷமாக இசைக் கருவிகளோடு
இசைத்துக் கொள்ள அனுமதி அளிக்கும் இஸ்லாம் எந்நேரமும் இசையில் வாழ்வை கழிக்க தடை விதிக்கிறது.
அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சல்லவா! எனவே இசை விஷயத்தில் மிக கவனமாக இருந்து
நமது இறைவன் கொடுத்த பகுத்தறிவை பாதுகாத்துக் கொள்வோம்.
கர்நாடக தலைநகர் பெங்களூருவை
சேர்ந்த பியானோ இசைக்கலைஞர் கரன் ஜோசப். இவர் மும்பையின் பந்த்ராவில் உள்ள தனது
நண்பர் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஒரு மாதமாக தங்கியிருந்தார்.
நேற்று(செப்.,9) இரவு
8.30 மணியளவில் 12வது மாடியிலிருந்து கீழே குதித்து
தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர்
கூறியதாவது: நேற்று இரவு, 12வது
மாடியில் உள்ள வீட்டில் தனது நண்பர்களுடன் டிவி பார்த்து கொண்டிருந்த கரன், திடீரென எழுந்து வந்து ஜன்னல்
வழியாக கீழே குதித்தார். உடனடியாக மருத்துவமனைக்கு நண்பர்கள் அழைத்து
சென்றனர்.ஆனால் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். அவரது வீட்டில்
தற்கொலை குறித்த குறிப்பு ஏதும் இல்லை. அவரது மொபைல் போன் தடயவியல் சோதனைக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியில் சென்ற அவர், சனிக்கிழமை தான் பிளாட்டிற்கு
திரும்பினார். சம்பவம் குறித்து கரன் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இவ்வாறு
அவர் கூறினார்.
தினமலர்
10-09-2017
இசை மனிதனுக்கு அமைதியை கொடுக்கும். மன உளைச்சலுக்கு சிறந்த
மருந்து என்று பலரும் சொல்கின்றனர். ஆனால் இந்த இசைக் கலைஞனின் வாழ்வானது அந்த எண்ணத்தை
பொய்ப்பிக்கிறது.
இசை பற்றி இஸ்லாமிய நிலைப்பாட்டை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்
நிறுவனர் பீ ஜெய்னுலாபிதீன் அவர்கள் கூறியதற்கு சகோதரர்வாசுகி பாஸ்கர்அவர்கள்
அபிப்ராயம் என்ற பெயரில் பின்னூட்டம் பதிந்ததில் ஆச்சரியமில்லை. என் தாயார்
சொல்வார்கள்: சட்டியில் இருந்தால் தானே ஆப்பையில் வரும் என்று - சிந்திக்காத, கங்கணம்
கட்டி கொண்டு மூளையை சிந்தனை செய்யாமல் தடுத்து கொண்ட சகோதரரிடம் எப்படி
அதெயெல்லாம் எதிர்பார்க்க முடியும்?
ஆனால் இசை சம்பந்தமாகவும், அதன்
முக்கியம் பற்றியும் சகோதரர் வே.மதிமாறன்Mathimaran V Mathiமுகநூலில்
பதிந்த கருத்து ஆச்சரியம் அளிக்கிறது. தனக்கு இசை மேல் பிரியம் உண்டு, காலசக்கரத்தின்
கஷ்டங்களில் இருந்து இசை தன்னை மீட்டெடுத்தது என்ற கருத்துடன் அவர் நிறுத்தி
விட்டிருந்தால், அது ஒரு தனிமனிதனின் நியாயமான வாதமாக இருந்திருக்கும்.
ஆனால் பொதுகருத்து என்ற பெயரில் - அநியாயமான நச்சு கருத்தான - அதாவது, இசை
இல்லாத வாழ்க்கை முரட்டுதனமானது, பரிதாபமானது
என்று பதிந்தது - மதிமாறனுக்குள் இப்படிபட்ட ஒரு நபர் ஒளிந்திருக்கிறாரா என்ற
கேள்வி எழும்பி குழப்பத்தில் தள்ளியுள்ளது.
அம்பேத்கர், பெரியார்
போன்றவர்கள் எந்த இசையை கேட்டு தங்களை நேர்முகப்படுத்தி கொண்டு ஒரு சமுதாயத்தை
வழிநடத்தினார்கள்? துன்பங்கள் வாட்டிய பொழுது இவர்களை காப்பாற்றிய இசை எது? அல்லது இவர்கள் இசை இல்லாத வாழ்க்கை வாழ்ந்த முரடர்களா?
துன்பங்களினால் கஷ்டப்பட்ட பொழுது இசைக்கு பின்னால் ஒளிந்து
கொள்ளாமல், துன்பத்தின் உண்மையான பரிமாணத்தை உணர்ந்து, உள்ள-புத்தி
வலிமையினால் அதிலிருந்து மீண்டு வந்து, அம்பேத்கர், பெரியார்
போன்றவர்கள் போட்ட சமுதாய அடித்தளம் - அதாவது அம்பேத்கர், பெரியார்
போன்றோர் போட்ட அடிதளத்தின் ஆழத்தினை கூட நுகர்ந்து பார்க்க முடியாமல் கையை
பிசைந்து கொண்டு கதறும் ஹிந்துத்துவ பாசிஸ்ட்டுகள் படும் ஒரு நிலையை விட்டு சென்ற
அம்பேத்கரும், பெரியாரும் - முரட்டுதனத்தின் தயாரிப்பா?
எம்எஸ்வி (அல்லது சகோதரர் மதிமாறனுக்கு பிடித்த இசை
அறிஞர்கள்) போன்றவர்களின் பாடல்களை கேட்பவர்கள் மட்டும் தான் முரட்டுதனம்
இல்லாதவர்களா? நம்பிக்கையின் அடையாளமான வடக்கத்திய ஹிந்துஸ்தானி, தெற்கத்திய
கர்னாட்டிய சங்கீதமும் - அதனை ஒத்த வர்ணாசிரம கொள்கையும்; வன்முறை
இசையாகிய அமெரிக்காவின் வெஸ்ட் கோஷ்ட்-ஈஸ்ட் கோஸ்ட் ஹிப்-ஹாப் ராப் இசையும் (West
Coast/East Coast Hip-Hop Rap) - அதனை ஒத்த வன்முறை கொலைகளும் -
மிதவாதமா?
வாழ்க்கையின் நெருக்கடியான நேரத்திலும், சத்தியம்
நிலைநாட்டப்படும் விவாதத்திலும் உள்ளம் மற்றும் மூளையின் பலத்தை வலுப்படுத்தி, அதனை
ஆயுதமாக்கி, நிதர்சனத்தை நிலைநாட்டி வென்று மீள்வது மெய்மையா? அல்லது
பலப்படுத்தி பழக்கப்பட வேண்டிய உள்ளத்தையும், அறிவையும்
இசை கொண்டு சஞ்சலம் அடைய செய்து மழுங்கடிக்கும் பழக்கத்திற்கு பெயர் மெய்மையா?
இசை என்பது உள்ளுணர்வு கவனத்தை மழுங்கடித்துவிட்டு, வெளியுணர்வு
கவனத்தை மட்டும் செயல்படுத்த வைக்கும் என்பதையும்; ஒன்றிணைந்த
கவனத்தையம், அதன் ஆற்றலையும் தடுக்கும் என்பதையெல்லாம் சகோதரர் மதிமாறன்
அறிந்து கொள்ள முயற்சிக்கவில்லையா? சீரிய
சிந்தனையை செலுத்தி சந்தேகங்களுக்கு தீர்வு காணாமல், அரைகுறை
கவனத்துடன் கிடைக்கும் விடை தான் உயர்ந்ததா?
ஒரு மரண கடி படத்தை குறைந்தது இரண்டு முறையாவது மீண்டும்
பார்க்க வைக்க, ஒன்று அல்லது இரண்டு டப்பாங்குத்து பாட்டை, இசை
என்ற பெயரில் இடையில் சொருகி சிந்தனையை கட்டிப்போடும் பழக்கத்திற்கு பெயர் தான்
சந்தோஷமா?
சுவையான உணவை உண்ணும்பொழுதும், பணம்
அதிகமாகும்பொழுதும், சம மற்றும் மாற்று இனத்துடன் காதல் வயப்படும்பொழுதும், காமம்
கொள்ளும்பொழுதும், போதை பொருள்கள் புழங்கும்போதும் சுரக்கும் டோபமைன் என்னும்
இரசாயனம் தான் பிடித்தமான இசை கேக்கும் பொழுதும் மூளையில் சுரக்கிறது என்பதை
சகோதரர் மதிமாறன் அறிந்து வைத்திருக்கவில்லையா?
மாட்டுக்கறி திங்காதவர் - தின்பவர் என்று இரண்டு பிரிவினர்
இருக்கலாம்; அதேபோல் இசையை விரும்புபவர் - விரும்பாதவர் என்று இரு
பிரிவினர் இருக்கலாம். இது பகுத்தறிவு.
ஆனால் இசையை விரும்பாதவர்கள் முரடர்கள், பரிதாபமானவர்கள்
என்பது பகுத்தறிவா?
'குன் ஃபய குன்' - அறிவியல் விளக்கமும் ரஹ்மானின் இசையும்!
6:73 - அவன் தான் வானங்களையும் பூமியையும் உண்மையாகவே படைத்தான்; அவன் “ஆகுக!” என்று சொல்லும் நாளில், அது உடனே ஆகிவிடும். அவனுடைய வாக்கு உண்மையானது; எக்காளம் (ஸூர்) ஊதப்படும் நாளில், ஆட்சி அதிகாரம் அவனுடையதாகவே இருக்கும்; அவன் மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான்; அவனே பூரண ஞானமுடையோன்; யாவற்றையும் நன்கறிந்தோன்.
2:117. (அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி இல்லாமையிலிருந்து, தானே உண்டாக்கினான்; அதனிடம் “குன்” - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது.
19:35. அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை; அவன் தூயவன்; அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், “ஆகுக!” என்று தான் கூறுவான்; உடனே அது ஆகிவிடுகிறது.
كُن فَيَكُونُ குன்பயகூன் என்ற இந்த வார்த்தையை இறைவன் குர்ஆனில் பல இடங்களில் பயன்படுத்துகிறான். இறைவன் 'ஆகு' என்று சொன்னால் உடன் ஆகி விடும். இங்கு தனது வல்லமையை மனிதர்களுக்கு இறைவன் விளக்குகிறான். இன்றைய அறிவியல் இந்த வசனத்துக்கு என்ன விளக்கம் கொடுக்கிறது என்று பார்ப்போம்.
சிங்குலாரிட்டி என்பது என்ன?
'வினோதத் தன்மை' (SINGULARITY) என்பது நாம் அறிந்துள்ள அனைத்து அறிவியல் விதிகளும் தோற்கடிக்கப் படும் அல்லது பயன்படாத நிலையை அடையும் இடமே 'சிங்குலாரிட்டி' (வினோதத் தன்மை) ஆகும். பெரு வெடிப்பு எந்த மயிரிழை நேரத்தில் திடீரென நடைபெற்றதோ அந்தக் கணத்திற்குப் பின்னால் நிகழ்ந்த யாவும் நாம் அறிந்துள்ள அறிவியல் விதிகளுக்கு உட்பட்டவையாகும். ஆனால் அந்த கணத்திற்கு முன்னால் நிகழ்ந்தது என்ன என்பதைக் கண்டுபிடிக்க நாம் அறிந்துள்ள அறிவியல் விதிகளால் இயலவில்லை. தற்போது பேரண்டம் இயக்கப்படுகின்ற விதிகளையே நாம் அறிவோம். ஆனால் இந்த விதிகள் யாவும் பெரு வெடிப்புக்கு முன்னால் செயலற்றுப் போகிறது. மேலும் பெரு வெடிப்புக்கு முன் அது எப்படி நடைபெற்றிருப்பினும் அவற்றுக்கும் பெரு வெடிப்பு நிகழ்ச்சிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதே 'பெரு வெடிப்பு வினோதம்' (BIG BANG SINGULARITY) ஆகும்.
-'எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்'(A BRIEF HISTORY OF TIME) பக்கம் 9
-அறிவியல் அறிஞர் ஹாக்கிங்.
இந்த இடத்தில் அறிவியல் அறிஞர் ஹாக்கிங் அவர்களின் கூற்றை சற்று சிந்தித்துப் பார்ப்போம். இந்த உலகின் காலம் தொடங்குவதே பெரு வெடிப்பில் இருந்துதான். பெரு வெடிப்பு என்று நிகழ்ந்ததோ அன்றிலிருந்துதான் காலம் தொடங்குகிறது. இதன் பொருள் பெரு வெடிப்புக்கு முன் காலம் இல்லை என்பது தெளிவாகிறது. பெரு வெடிப்புக்கு முன் அதை துல்லியமாக நிகழ்த்திக் காட்டியது யார்? என்ற கேள்வி இங்கு இயல்பாக நமக்குள் எழும்.
முன்பு 'பேரண்டம் என்றும் நிலையானது: மாற்றமில்லாதது: ஆதியோ அந்தமோ இல்லாதது: அது என்றென்றும் நிலைத்திருப்பது: அதற்கு ஒரு படைப்பாளன் தேவையில்லை:' என்றுதான் பல அறிஞர்களும் சொல்லி வந்தனர். 'மாறா நிலைக் கோட்பாடு' என்பதோடு இந்த கருத்து ஏறத்தாழ ஒத்து வரும். நாத்திகத்திற்கும் இந்த கருத்து வலு சேர்க்கும் விதமாக இருந்ததால் பலரும் இதைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தனர். அறிஞர் அரிஸ்டாட்டிலும் இந்தக் கருத்தை ஆதரித்தார்.
ஆனால் அறிஞர் ஐசக் நியூட்டன்(1672-1727) பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு இந்த பேரண்டம் இறைவன் என்ற ஒருவனின் துணையில்லாமல் உண்டாயிருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தார். 'பிரின்ஸிப்பியர்' (Matthematical Principles Of Natural Philosophy) என்ற புகழ் பெற்ற நூலில் நியூட்டன் இந்த தகவலைத் தெரிவிக்கிறார். ஆனால் இந்த பேரண்டம் எவ்வாறு உருவானது? எந்த காலத்தில் உருவாக்கப்பட்டது என்ற கேள்விகளுக்கு அவரால் விடை காண முடியவில்லை.
இப்பேரண்டத்தின் வரலாற்றில் 500 கோடியிலிருந்து 1500 கோடி வருடங்களுக்கு இடையில் குறிப்பிடும்படியான நிகழ்ச்சிகளைக் கொண்ட ஒரு கால கட்டம் இருந்துள்ளதாக அறிவியலாளர்கள் வலியுறுத்துகிறார்கள். அதற்கு முன் அங்கு ஒரே ஒரு அணு 'ஒரு முழு முதல் அணு' இருந்ததாகவும் ஏதோ ஒரு காரணத்தால் வினாடியின் பல்லாயிரக்கணக்கான பகுதியில் ஒரு துளி நேரத்தில் அந்த அணு வெடித்துச் சிதறியதாகவும் கூறுகிறார்கள். அம்மாபெரும் வெடிப்பின்போது அந்த அணுவிலிருந்து கணக்கிட முடியாத பிரம்மாண்டமான ஆற்றல் வெளி வந்தது. பிறகு மெதுவாகப் படிப்படியாக அந்த ஆற்றலில் இருந்து விண்ணகப் பொருட்கள் யாவும் உருவாகின என லிமாயிட்டர் கருதுகிறார்.
பெரு வெடிப்பு நிகழ்ந்த நூறு வினாடிகளுக்குப் பிறகு டியூட்ரியம் எனும கன ஹைட்ரஜன் வாயுவின் மையக் கரு உருவாகி இருக்க வேண்டும் என்றும் அவை இணைந்து ஹீலியம் அணுவின் மையக் கரு உருவாகி இருக்கலாம். அவைகளிலிருந்து 'லிதியம்' மற்றும் 'பெரில்லியம்' போன்றவற்றின் தனிமங்கள் உருவாகி இருக்க வேண்டும். என்று அறிஞர் ஹாக்கிங் மேற்கண்ட புத்தகம் பக்கம் 124ல் கூறுகிறார்.
மேற்கண்ட தகவல்கள் பேரண்டம் அதன் துவக்க கட்டத்தில் விண்ணகப் பொருட்களாகிய காலக்சிகள், நடசத்திரங்கள், கிரகங்கள், வால் நட்சத்திரங்கள், விண் கற்கள் போன்ற எந்த பொருட்களுமே இல்லாத ஒரு சூன்ய நிலையிலேயே இருந்துள்ளதாக நாம் அறிகிறோம். பெரு வெடிப்புக்கு முன் மேற் கூறிய பொருட்கள் யாவும் முன்னரே தயாராக இருந்திருக்கவில்லை என்பதையும் இங்கு நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது இன்னொரு கேள்வியும் எழுகிறது. பெரு வெடிப்புக்கு முன் சூன்யமான அண்ட வெளியில் ஒன்றுமே இல்லை எனில் வெடித்த பொருள் எது என்பதாகும். இதற்கு ஹாக்கிங் 'பெரு வெடிப்பு நிகழ்ந்த போது இப்பேரண்டத்தின் பரிணாமம் பூஜ்யமாகும். அதன் வெப்பம் எல்லையற்றதுமாகும்' என்கிறார்.
-A Brief History of Time பக்கம் 123
பூஜ்யத்திலிருந்து அதாவது சூன்யத்திலிருந்து இம்மாபெரும் பேரண்டத்தை படைத்தது உருவாக்கியது யார்?
'விண்ணகத்தை நாம் வல்லமையைக் கொண்டு படைத்தோம்'
-குர்ஆன் 51:47
ஆம் இன்றைய அறிவியல் பெரு வெடிப்புக்கு முன்னால் திடீரென்று புறப்பட்ட ஒரு ஆற்றலின் மூலமே பெரு வெடிப்பு சாத்தியமானது என்பதை குர்ஆனும் மெய்ப்பிப்பதைப் பார்க்கிறோம். எவ்வளவு பெரிய உண்மையை வெகு சாதாரணமாக குர்ஆன் சொல்லிச் செல்வதை எண்ணி வியக்கிறோம். ஆற்றலின் வரைவிலக்கணம் கூட தெரியாத அன்றைய அரபுலகில் பிறந்த முகமது நபிக்கு இந்த உண்மைகள் எவ்வாறு தெரிய வந்தது?
குர்ஆனின் இந்த அருமையான வசனங்கள் இவ்வளவு அழகிய அறிவியல் விளக்கங்களை கொடுத்துக் கொண்டிருக்க நமது சூஃபி பிரியர்களில் சிலர் இதனை கவிதையாக வடிக்க அதை நம் ஏ.ஆர்.ரஹ்மானும் அருமையான பாடலாக கொடுத்துள்ளார். இசையும் பாடலும் சேரும்பொது அங்கு சிந்தனை அகன்று விடுவதைப் பார்க்கிறோம். 'குன்பயகூன்' என்ற வார்த்தையை இறைவன் ஏன் பயன்படுத்தினான்? அதன் அறிவியல் உண்மை என்ன என்பதெல்லாம் ரஹ்மானின் இசையோடு கூடிய பாடலில் நமமால் உணர முடியாது. ரஹ்மானின் இசையும் அப்பாடலின் ராகமும் தான் நம் மனதில் நிற்கும்.
//ஓ துறவிகளின் அரசரே;
வாழ்வில் நம்பிக்கையைத் தொலைத்து, பெரும்சோகத்தில் இருப்பவர்களின் துயர்துடைக்கும் மாமன்னரே;
உங்களது காலடியை முன்னால் எடுத்து வையுங்கள்
எல்லைகளைத் தாண்டி வாருங்கள்
உங்களது அன்பிற்குரியவனின் இல்லத்தில் உள்ள இந்த வெறுமையை நிரப்புங்கள் //
இது போன்ற வார்த்தைகள் தர்ஹாவில் அடங்கியிருப்பவர் இன்றும் உயிரோடு இருக்கிறார்: நாம் கேட்கும் பல பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கிறார் என்று நம்பி கேட்பதாக அமைக்கப்பட்டுள்ளது.
தர்ஹாவில் அடங்கியிருப்பவரின் சுய ரூபம் உங்களுக்கோ எனக்கோ தெரியாது. அவர் நல்லவராகவும் இருக்கலாம். நித்தியானந்தாவைப் போல் மக்களுக்காக வெளிவேஷம் போட்டவராகவும் இருக்கலாம் உண்மை நிலை இறைவனுக்கே தெரியும்.
குர்ஆனில் வரக் கூடிய இந்த சொற்றொடரை தழுவி இந்த பாடல் அமைக்கப்பட்டடுள்ளது. இந்த பாடலை இறைவனை நோக்கி பாடுவதாக சொன்னாலும் ஓரளவு அதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால் படத்தில் இந்த பாடல் ஒரு தர்ஹாவுக்கு முன்னால் அமர்ந்து பாடுவதைப் போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இது இஸ்லாத்தில் முற்றிலுமாக தடுக்கப்பட்டது.
'உங்களின் இடத்திலே வந்து எனது தலையை வைக்கிறேன்' என்று மற்றொரு பாடலில் ரஹ்மான் பாடுகிறார். இறைவனைத் தவிர வேறு எவருக்கும் நமது தலையை கீழே வைக்கலாகாது என்பதை என்று ரஹ்மான் உணருவாரோ தெரியவில்லை.
எனவே ரஹ்மான் அவர்களே! நீங்கள் சினிமாவுக்கு இசை அமைத்து பல பாராட்டுக்களை பெற்றுக் கொள்ளுங்கள். அது உங்களின் தனிப்பட்ட விஸயம். ஆனால் இஸ்லாமிய கருத்தை இசை மூலம் கொடுக்க முயற்சிக்கும் இந்த பாணியை விட்டு விடுங்கள். இதற்கு இஸ்லாமியரிடத்திலும் மற்ற மதத்தவரிடத்திலும் எந்த வரவேற்பும் கிடைக்காது. சில கைத்தட்டல்கள் வேண்டுமானால் கிடைக்கலாம். மனதை மாற்றி விடும் சக்தி உங்கள் இசைக்கு இல்லை. இஸ்லாத்தை ஏற்ற 90 சதமான பேர் அதன் கருத்துக்களை விளங்கித்தான் வந்தார்களேயொழிய சூஃபித்துவ இசையினால் அல்ல என்ற உண்மையை விளங்கிக் கொள்ளுங்கள்.
இறைவன் உங்களுக்கு குர்ஆனின் உண்மையான ஞானத்தை மேலும் அதிகப்படுத்துவானாக!
பிரபல இரானிய திரைப்பட இயக்குனர் மஜீத் மஜீதியின் 'இறைவனுடைய தூதுவர்' என்ற பெயரில் வெளிவந்துள்ள படம் தற்போது உலகமெங்கும் பேசப்படுகிறது. இந்த படத்தில் பணி புரிந்துள்ள இசை அமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுக்கு எதிராகவும் .பத்வா கொடுக்கப்பட்டுள்ளது. சுன்னத் வல் ஜமாத்தை சேர்ந்த 'ரஜா அகாடமி' என்ற அமைப்பு இந்த ஃபத்வாவை கொடுத்துள்ளது. இதற்கு ஆதாரமாக மும்பையின் தலைமை முஃப்தி முஹம்மது அக்தர் கொடுத்த ஃபத்வாவை ஆதாரமாக காட்டியுள்ளது.
மஜீத் மஜீதியும், ஏ ஆர் ரஹ்மானும் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டார்களாம். இவர்கள் செய்த திருமணமும் செல்லாதாம். புதிதாக கலிமா சொல்லி இஸ்லாத்தில் இணைய வேண்டுமாம். இதற்கு இவர்கள்' கூறும் காரணம் 'படத்தில் முகமது நபியின் இளமைக் காலத்தை ஒரு நடிகனை வைத்து காட்டுகிறார்கள். பணம் வாங்கிக் கொண்டு நடிக்கும் நடிகன் வெளியில் யோக்கியமாக இருப்பானா? இது இஸ்லாத்துக்கு புறம்பானது'என்று இதற்கு காரணத்தை சொல்கின்றனiர்.
ஒருவரை இஸ்லாத்தை விட்டு நீக்க எவருக்கும் அதிகாரம் இல்லை. இது சம்பந்தப்பட்டவருக்கும் இறைவனுக்கும் இடையிலான பிரச்னை. வெளிப்படையாக ஒருவர் ஏக இறைவனை மறுக்கிறார். முகமது நபி கடைசி இறைதூதர் என்பதையும் பகிரங்கமாக மறுத்தாலேயே ஒருவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவராக கருத முடியும். இது அல்லாமல் சகட்டு மேனிக்கு முல்லாக்கள் கொடுக்கும் எந்த ஃபத்வாவும் எவரையும் கட்டுப்படுத்தாது.
மேலும் மஜீத் மஜீதி தனது பேட்டியில் 'ஷியா சன்னி இரண்டு பிரிவினரும் ஒத்துக் கொள்ளக் கூடிய சம்பவங்களையும் ஆதாரபூர்வமான ஹதீதுகளையும் கொண்டே இந்த படத்தை உருவாக்கியுள்ளேன். இதுவரை இஸ்லாம் சம்பந்தமாக மேற்குலகம் வைத்திருக்கும் பார்வையானது இந்த படத்தின் மூலம் தகர்த்தெறியப்படும்' என்று கூறியுள்ளார். ஆஸ்காருக்கே பரிந்துரைக்கப்பட்ட உலக அளவில் பிரசித்திப் பெற்ற இயக்குனர் மஜீத் மஜீதி. எனவே சிறந்த முறையில் படத்தை இயக்கியிருப்பார் என்றே எண்ணுகிறேன்.
படத்தை பார்த்து விட்டு வந்த ஈரானியர்கள் மிக சிறப்பாக படம் வந்திருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளார்கள். சினிமா என்பது மிகச் சிறந்த சாதனம். அதனை இது வரை நாம் சரியாக பயன்படுத்தவில்லை. முயற்சி எடுக்கும் ஓரிருவரையும் இவ்வாறு காயப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
நபியாவதற்கு முன்பு அன்றைய அரபுலகம் எவ்வாறு இருந்தது என்பதையே பிரதானமாக இதில் காட்டியுள்ளார்கள். நபியாக ஆனதற்கு பிறகு உள்ள சரித்திரக் குறிப்புகள் அடுத்த பாகத்தில் வரும். அதில் நபிகள் நாயகத்தை காட்ட மாட்டார் என்றே நினைக்கிறேன். 'தி மெஸ்ஸேஜ்' படத்தைப் போன்றுதான் அதுவும் இருக்கும் என்று நினைக்கிறேன்.
மேலும் இசையை பொறுத்தவரை குர்ஆன் நேரிடையாக தடையை விதிக்கவில்லை. சில ஹதீதுகள் இசையை தடுக்கின்றன. சில ஹதீதுகள் இசையை ஆதரிக்கின்றன. இதன் மூலம் நாம் இசைக்கு அடிமையாகி விடாமல் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும் என்பது இதிலிருந்து புலனாகிறது. நமக்கு கொடுக்கப்பட்ட வாழ்நாளின் நேரம் மிக முக்கியமானது. சிலர் பெருமபாலான நேரத்தை இசையை கேட்பதிலேயே செலவிடுகின்றனர். அதிலிருந்து நம்மை கட்டுப்படுத்திக் கொள்ளவும் பழகிக் கொள்ள வேண்டும்.
ஏ ஆர் ரஹ்மான் அவர்களே!
ஃபத்வாக்களைப் பற்றி கவலைபட வேண்டாம். நீக்குவதாக இருந்தால் பல தலைமுறைகளாக இஸ்லாத்தில் இருக்கும் பல லட்சம் இஸ்லாமியர்களை வெளியேற்ற வேண்டி வரும். அப்பாவிகளின் கழுத்தை அறுக்கும் ஐஎஸஐஎஸ், போகோ ஹராம், லஸ்கர் ஏ தொய்பா போன்ற தீவிரவாத கும்பல்களுக்கு எதிராக இவர்கள் என்றாவது ஃபத்வா வெளியிட்டுள்ளார்களா? முதலில் அதற்கல்லவா இவர்களின் ஃபத்வாவை வெளியிட்டிருக்க வேண்டும்?
இந்த பதிவை ஏ ஆர் ரஹ்மான் அவர்களே! உங்களின் இன்பாக்ஸிலும் கொடுத்துள்ளேன். பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறவில்லை என்று நான் ஃபத்வா கொடுக்கிறேன். உங்களின் பணிகளை நீங்கள் தொடர்ந்து செய்து வாருங்கள். இவர்கள் பண்ணும் அளப்பறையில் படத்துக்கு இன்னும் விளம்பரம் கூடும். உங்களுக்கு இதன் மூலம் மற்றொரு ஆஸ்கார் விருதும் காத்திருக்கிறது.
படத்தின் டிரெய்லரை நானும் பார்த்தேன். அசந்து விட்டேன்..... படத்தைப் பார்த்த ஒருவரின் விமரிசனம்...
I saw the movie yesterday in cinema, it was really great. The cinematic were incredible. The musics used on the film (by A.R.Rahman ) bring it to the next level! I was a fan of Hobbit and Lord before this movie, but i can tell you that this movie in almost all aspect is as good as them with a simple difference which is that the historic behind it is totally true! that makes a really great feeling. I cried in a lot of scenes of it and goosebumps in the miracles scenes. I repeat that the best positive point of the movie is the music which has been successfully joined with the film.
مزيد من المعلومات
இஸ்லாமிய பாடல்களை பல ஆண்டுகளாக தமிழகமெங்கும் ஒலிக்கச் செய்த நாகூர் ஹனீஃபா இன்று இரவு காலமானார். சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள வீட்டில் அவரது உயிர் பிரிந்தது. இவருக்கு வயது 96. இவரை பிரிந்து வாடும் இவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். (நாம் அனைவரும் இறைவனிடம் இருந்தே வந்தோம்... அவனிடமே திரும்பிச் செல்பவர்களாகவே இருக்கிறோம்...)
இறைவன் இவரது பாவங்களை மன்னிக்க நாமும் பிரார்த்திப்போமாக!
நேற்று பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் முக நூல் பக்கத்தில் நான் பார்த்த ஒரு பதிவு இது. இந்த பதிவுக்காக சிலர் அவரை தூற்றியும் மற்றும் சிலர் பாராட்டியும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மிக அழகாக தனது கருத்தை பதிவாக்கியுள்ளார் யுவன்.
'உலக முடிவு நாளன்று நான் இளையராஜாவின் மகனாகத்தான் இருப்பேன்: இளையராஜா எனது தந்தையாகத்தான் இருப்பார். இதில் எந்த மாற்றமும் நடந்து விடப் போவதில்லை' - யுவன் சங்கர் ராஜா
ஆம்... கண்டிப்பாக..... இன்று யுவன் தனது வாழ்வியலை இஸ்லாமாக மாற்றிக் கொண்டிருக்கலாம். தனது பெயரைக் கூட 'அப்துல் ஹாலிக் யுவன்' என்று மாற்றியிருக்கலாம். ஆனால் அவர் இளையராஜாவின் மகன் என்ற அடையாளம் உலக முடிவு நாள் வரை நிலைத்திருக்கும். அவர் தமிழன் என்ற அடையாளமும் எந்த நாளும் மாறப் போவதில்லை. அவ்வாறு அடையாளப்படுத்திக் கொள்வதை இஸ்லாமும் தடை செய்யச் சொல்லவில்லை.
இன்று அவருக்கும் அவரது தந்தைக்கும் ஏற்பட்டுள்ள மாற்றம் இறை வழிபாட்டில் மட்டுமே. இந்த மாற்றம் அவர்களை நிரந்தரமாக பிரித்து விட இஸ்லாம் கட்டளையிடவில்லை. ஒரு முறை ஒரு நபித் தோழர் 'இறைவனின் தூதரே! எனது பெற்றோர் இஸ்லாத்தை ஏற்கவில்லை. வயதான அந்த பெற்றோருக்கு முஸ்லிமான நான் பணிவிடை செய்ய வெண்டுமா?' என்று கேட்டதற்கு 'ஆம்... அவர்கள் இஸ்லாத்தை எற்கா விட்டாலும் கண்டிப்பாக நீ பணிவிடை செய்ய வேண்டும்' என்று மறுமொழி பகர்ந்தார்கள்.
எனவே இளையராஜா இஸ்லாத்தை எற்கா விட்டாலும் யுவன் தனது தந்தைக்கு செலுத்த வேண்டிய மரியாதையை குறைத்து விடச் சொல்லி கட்டளையிடவில்லை இஸ்லாம். பெற்றோருக்கு செய்யும் மரியாதையில் சில மாற்றங்களை இஸ்லாம் செய்யச் சொல்கிறது. முன்பு இளையராஜாவின் காலில் விழுந்து தனது அன்பை யுவன் வெளிப்படுத்தியிருக்கலாம். ஆனால் மனிதன் மற்ற மனிதனின் காலில் விழுவதை இஸ்லாம் தடுக்கிறது. கடவுளைத் தவிர வேறு யாருக்கும் தனது தலையை ஒரு முஸ்லிம் சாய்க்க மாட்டான். எனவேதான் ஏ ஆர் ரஹ்மான் கூட இது வரை பொது மேடைகளில் தனது சீனியர்களான எம்எஸ்வி, இளையராஜா போன்றோரின் கால்களில் விழுந்ததில்லை. தாய் தந்தையருக்கு மரியாதை எந்த விதத்தில் செய்ய வேண்டும் என்று கட்டளையிடுகிறதோ அந்த இலக்கணத்திலிருந்து சற்றும் பிறழாமல் தனது வாழ்வை யுவன் அமைத்துக் கொள்வாராக! ஏகத்துவ கொள்கையிலிருந்து சிறிதும் சமரசம் செய்து கொள்ளாமல் தனது பயணத்தை தொடர்வாராக!
ஈரானின் மஜீத் மஜீதியின் அடுத்த படத்துக்கான ஒலிப்பதிவு வேலைகள் முடிக்க ஏ ஆர் ரஹ்மான் தற்போது பாரிஸில் முகாமிட்டுள்ளார். சமீர், விஸாம், அத்னான் என்ற புகழ் பெற்ற ஊத் இசை அமைப்பாளர்களோடு தனது அடுத்த படத்துக்கான வேலைகளை பகிர்ந்து கொண்டார். பாலஸ்தீனியர்களான இந்த மூன்று பேரும் சகோதரர்களாம். முன்பு ரஹ்மானின் இசையில் அராபிய இசையின் தாக்கம் அதிகம் இருக்கும். இந்த படத்தில் சொல்லவே வேண்டாம். வெளுத்து கட்டுவார்.
இந்த படம் நபிகள் நாயகத்தின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளை சொல்லக் கூடியதாக இருக்கும். உலகப் புகழ் பெற்ற பல விருதுகளை குவித்த மஜீதி இதன் டைரக்டர் என்பதால் காட்சி அமைப்புகளும் மிகப் பிரமாண்டமாக இருக்கும் என்று எதிர் பார்க்கலாம்.
'தி மெஸ்ஸேஜ்' படத்தைப் போன்றே கதாநாயகனை காட்சிப் படுத்தாமலேயே வரலாற்றை நகர்த்திச் சென்றுள்ளார் மஜீதி. கலீபா அபூபக்கர், கலீபா உமர் போன்றவர்களை படத்தில் கொண்டு வந்துள்ளார்.
மஜீதி ஷியா என்பதால் பலரும் பயந்தனர். ஆனால் அவர் தனது பேட்டியில் சன்னி, ஷியா இரு பிரிவினரும் ஒத்துக் கொண்ட விஷயங்களை வைத்தே இந்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளதாக தனது பேட்டியில் கூறியுள்ளார். நபிகள் நாயகம் மரணித்து பல ஆண்டுகள் கழித்தே ஷியாக்கள் ஆட்சி அமைப்பதில் எழுந்த குளறுபடியால் உருவானார்கள். எனவே இவரது படத்தில் நபிகள் நாயகம் வரலாற்றில் எந்த பிரச்னையும் வராது என்றே நம்புவோம்.
இவரது முந்தய படங்கள் உணர்வு பூர்வமாக இருக்கும். இஸ்லாமிய வரலாற்றில் ஆரம்ப காலகட்டங்களில் நடந்த வரலாற்று நிகழ்ச்சிகள் பலரது கண்களையும் குளமாக்கும். அந்த காட்சிகளை எல்லாம் எவ்வாறு எடுத்துள்ளார் என்பதை பற்றி இப்போதே பலரின் எதிர்பார்புகளை மஜீதி ஏற்படுத்தியுள்ளார்.
மாற்று மத மக்களுக்கு உலகமெங்கும் இஸ்லாத்தின் செய்தியை ஒரே நேரத்தில் கொண்டு செல்ல சினிமா ஒரு சிறந்த சாதனம். அதனை மஜீத் சரியாக பயன்படுத்தியுள்ளாரா என்பதை படம் ரிலீஸானவுடன்தான் நமக்கு தெரிய வரும்.
இந்த படத்துக்கு பிறகு அராபிய உலகிலும் ரஹ்மான் காலடி பதிப்பார் என்று நம்பலாம். ஆஸ்காரும் கிடைக்க வாழ்துவோம்.
தகவல் உதவி
டெக்கான் கெரானிக்கல்
03-02-2015
ஒரு முறை நபிகள் நாயகம் அவர்களிடம் ஒருவர் வந்து 'திருமணத்தில் இசைப்பதையும் கெளிக்கை நடத்துவதையும் அனுமதித்துள்ளீர்களா?' என வினவினார். அதற்கு 'ஆம்! அது திருமணம் தானே! விபசாரம் அல்லவே! என நபிகள் நாயகம் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஜீத்
நூல் தப்ரானி: பத்ஹூல் புகாரி, பாகம் 11, பக்கம் 133
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
புஆஸ் எனும் போரின் போது அன்சாரிகள் ஒருவரை ஒருவர் நோக்கிப் பாடிய பாடல்களை இரு அன்சாரிச் சிறுமிகள் என்னருகில் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர். (இதைக் கண்ட) உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், 'இறைத் தூதரின் இல்லத்திலேயே ஷைத்தானின் இசைக் கருவிகளா?' என்று (கடிந்து) பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் அன்றாகும். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், '(அவ்விருவரையும் விட்டு விடுங்கள்). அபூபக்ரே! ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள்' என்று கூறினார்கள்.
மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அதில் இரு சிறுமியர் கஞ்சிராக்களை அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர் என வந்துள்ளது.
நூல்: முஸ்லிம் 1619
எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (இந்த ஹதீஸைக் கேட்டுக் கொண்டிருந்த காலித் இப்னு தக்வான் (ரஹ்) அவர்களிடம்) 'எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போன்று நபி(ஸல்) அவர்கள் என்னுடைய விரிப்பின் மீது அமர்ந்திருந்தார்கள்' (என்று ருபய்யிஉ கூறினார்கள்) அங்கு சில சிறுமிகள் கஞ்சிராக்களை அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து இரங்கல் பாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, 'எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்க விருப்பதையும் அறிவார்' என்று கூறினாள். உடனே நபி(ஸல்) அவர்கள், இப்படிச் சொல்லதே! இதை விடுத்து முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை வேண்டுமானால் சொல்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ருபய்யி(ரழி) நூல்: புஹாரீ: 4001
கஞ்சிராக்கள் என மொழிபெயர்க்கப்பட்ட இடத்தின் அறபு மூலத்தில் 'துப்பு' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் தோலால் மூடப்பட்ட கருவியாகும். இதை சிறுமிகள் பயன்படுத்திக் கொண்டிருந்த போது நபி(ஸல்) அவர்கள் கண்டிக்கவில்லை. எனவே இது அங்கீகரிக்கப்பட்டது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
நிருபர்: உங்களை கடவுளாக சிலர் சித்தரிக்கும் போது என்ன நினைப்பீர்கள்?
இளையராஜா: இதை நான் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. மக்களில் சிலர் சச்சின் டெண்டுல்கரையும் கடவுளாக நினைக்கின்றனர். அதைப் போல அவர்கள் பார்வையில் நானும் ஒரு கடவுள். இதில் எந்த வித்தியாசத்தையும் நான் பார்க்கவில்லை. இது போன்ற விஷயங்களுக்கு நான் அதிக முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. கடவுளை வானிலிருந்து கீழே இறக்கி அவரை அற்ப பொருளாக மாற்றி விட்டோம்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா
19-01-2015
உங்களை யாரும் கடவுளாக சித்தரிப்பதை நீங்கள் விரும்பவில்லை என்று சொன்னது மகிழ்ச்சியாக உள்ளது. கடவுளை வானிலிருந்து கீழிறக்கி அற்ப பொருளாக்கி விட்டனர் என்று சொன்னதும் அருமையான வாசகம். ஆனால் உங்களை வார்த்தைகளால் கடவுளாக்குபவர்களை கண்டிக்க வேண்டும். பொது மேடைகளில் உங்களை வைத்துக் கொண்டு 'என் கடவுள் இளையராஜா: நான் வணங்கும் தெய்வம்' என்றெல்லாம் சொல்லும் போது அந்த மேடையிலேயே அவர்களின் அறியாமையை சுட்டிக் காட்டி தடுக்க வேண்டும். உங்களின் மவுனமானது அதனை அங்கீகரிப்பது போல் உள்ளது. நீங்கள் அதுவும் ஒரு ஆங்கில தினசரிக்கு கொடுக்கும் இந்த பேட்டியை எத்தனை தமிழர்கள் பார்பார்கள்? மிக சொற்பமான நபர்களுக்கே உங்கள் செய்தி சென்றடைந்திருக்கும். எனவே வருங்காலங்களில் பொது மேடையிலேயே உங்களை கடவுளாக்குபவர்களை கண்டியுங்கள். ஏ ஆர் ரஹ்மானும் ஒரு முறை நிகழ்ச்சி தொகுப்பாளினியை தன்னை கடவுள் என்று சொன்னதற்காக கண்டித்தார்.
இனி நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை சற்று பார்போம்....
'நான் ஹீரா என்ற ஊருக்குச் சென்றேன். அங்குள்ள தலைவருக்கு அந்த மக்கள் காலில் விழுந்து சிரம் பணிவதைப் பார்த்தேன். காலில் விழுந்து மரியாதை செய்வதற்கு நம்முடைய நபி மிகப் பொருத்தமானவர்களாயிற்றே என்று எனக்குள் கூறிக் கொண்டேன். முகமது நபி அவர்களிடம் வந்து 'ஹீரா ஊர் மக்கள் தங்கள் தலைவருக்கு காலில் விழுந்து மரியாதை செய்வதைக் கண்டேன். இறைவனின் தூதரே! இதற்கு நீங்கள் தகுதியானவர்கள்' என்றேன். அதற்கு முகமது நபி அவர்கள் 'நான் இறந்த பிறகு எனது சமாதியில் இதே போன்ற வணக்கத்தைச் செலுத்துவாயோ?' என்று கேட்டனர். மாட்டேன் என்று நான் கூறினேன். பின்னர் முகமது நபி அவர்கள் 'மனிதனுக்கு மனிதன் காலில் விழுந்து மரியாதை செய்யும் பழக்கத்தை செய்யாதீர்கள். ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு சிரம் தாழ்த்த அனுமதி இருந்தால் ஒரு மனைவி தனது கணவனுக்கு சிரம் தாழ்த்த சொல்லியிருப்பேன். ஏனெனில் அவர்கள் கணவர்களுக்கு அதிகம் கடன்பட்டிருக்கிறார்கள்.'
-அறிவிப்பவர் கைஸ் பின் சாத், நூல் அபுதாவுத்: 1828.
ஒருமுறை முகமது நபி அவர்கள் தமது தோழர்களுடன் நடந்து சென்றார்கள். அவர்களின் தலை மீது மட்டும் நிழல்படுவதைக் கண்டார்கள். தலையை உயர்த்திப் பார்த்தபோது ஒரு துணிக் குடையால் அவர்களுக்கு நிழல் தரப்படுவதைக் கண்டார்கள். 'விடுங்கள்' என்று கூறி அந்தத் துணியை வாங்கி மடக்கி வைத்தார்கள். 'நானும் உங்களைப் போன்ற மனிதன் தான்' என்றும் கூறினார்கள்.
ஆதாரம்: தப்ரானி.
தனக்கு யாரும் விசேஷமாக மரியாதை செய்து விடக் கூடாது என்பதிலும், தனது இறப்புக்குப் பின் யாரும் தன்னை கடவுளாக்கி விடக் கூடாது என்பதிலும் முகமது நபி எந்த அளவு கவனமாக இருந்திருக்கிறார்கள் என்பதை நினைத்து ஆச்சரியப்படுகிறோம்.
இளையராஜா: நான் என்னையே சில நேரம் வெறுக்கிறேன். எனக்கு கிடைத்த இந்த பிறப்பை நான் விரும்பவில்லை. இதற்கு முன்னால் உள்ள பிறவியில் நான் செய்த தவறுகளுக்கு தண்டனையாகத்தான் இந்த பிறவியில் இவ்வாறான வாழ்க்கை எனக்கு கிடைத்துள்ளது. இதனை எவ்வாறு சரி செய்வது என்பதுதான் தற்போதய சிந்தனை. முற் பிறவியில் செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தமாகத்தான் இந்த பிறவியில் எனது தவறுகளை சரி செய்து வருகிறேன்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா
19-01-2015
டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு இளையராஜா நேற்று கொடுத்த பேட்டியில் ஒரு பகுதியைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள். மனிதர் ரொம்பவும் குழம்பிப் போயுள்ளார். ஏழு பிறவி என்ற நம்பிக்கையானது நிரூபிக்க முடியாத ஒன்று. இந்த உலகில் உள்ள மனிதர்கள் தொடர்ந்து பல பிறவிகள் எடுத்தால் உலகின் மக்கள் தொகையானது கூடக் கூடாது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னால் பாரதி 'முப்பது கோடி முகமுடையாள்' என்று இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற மூன்று நாடுகளையும் இணைத்து பாடினார். ஆனால் இன்று இந்தியாவின் மக்கள் தொகை மட்டுமே 100 கோடிக்கு மேல் ஆகி விட்டது. அன்றைய 30 கோடி இன்று 100 கோடியாகியுள்ளது. மறு பிறவி சாத்தியம் என்றால் தற்போது புதிதாக உருவாகியுள்ள 70 கோடி மக்களின் முந்தய பிறவி எது?
ஆடு, மாடு, நாய்களாகவும் பிறவி எடுக்கலாமே என்று நீங்கள் கெட்டால் அந்த உயிரினங்களின் வளர்ச்சியும் தாறுமாறாகவல்லவா பெருகியிருக்கிறது? முதலில் உலகம் முழுக்க அனைத்து உயிரினங்களும் 500 கோடியாக இருந்ததாக கணக்கிட்டால் இன்றைய கணக்குப் படி அதே ஐநூறு கோடிதான் இருக்க வேண்டும். அவற்றுக்குள்தான் மறுபிறவி நடந்திருக்க வேண்டும். எல்லா உயிரினங்களிலும் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மறு பிறவி என்பது இல்லாத ஒன்று என்ற முடிவுக்கு வருகிறோம். இந்து மதத்தில் மறு உலக வாழ்வு சொல்லப்பட்டுள்ளது. அதனைத்தான் திரித்து மறு பிறவி என்று மக்களுக்கு போதித்து விட்டார்கள். இந்து மத வேதங்கள் எதிலும் மறு பிறவிப் பற்றியும் சொல்லப்படவில்லை.
அடுத்து ஒரு பிறவியில் தவறிழைத்தால் அதற்கு பரிகாரமாக மறு பிறவியில் இழிவானவனாக பிறக்க வைக்கப்படுவான் என்று மறு பிறவிக்கு விளக்கம் சொல்கின்றனர். முதலில் முற்பிறவியில் நான் எந்த பாவம் செய்தேன் என்று எனக்கு தெரிந்திருக்க வேண்டும். அடுத்து இந்த பிறவியில் எதனால் இழி பிறவியானேன் என்ற விளக்கமும் எனக்கு கிடைத்திருக்க வெண்டும். அப்போதுதான் என்னை திருத்திக் கொண்டு இனி வரும் பிறவியில் நல்லவனாக பிறக்க முயற்சி செய்வேன். எல்லாம் மூடு மந்திரமாக எதுவும் விளங்காமல் நான் இந்த பிறவியில் பிறந்திருந்தால் அதனால் எனக்கு என்ன நன்மை? எவ்வாறு என்னை நான் திருத்திக் கொள்வது? இப்படி குழப்பமான ஒரு தத்துவத்தை இறைவன் நமக்கு கொடுத்திருப்பானா?
மறுமை வாழ்க்கையை இந்து மத கிரந்தங்கள் 'புனர் ஜென்மம்', 'பர்லோக்' என்கிற பெயரில் வலியுறுத்துகிறது. புனர் (மற்றொரு (அ) அடுத்த) + ஜன்மம் அதாவது மறுமை வாழ்க்கை என்ற பொருளில் வரும்.
'இந்துவேதங்கள் குறிப்பிடும் புனர் ஜென்மம் என்பது இந்த உலக வாழ்க்கைக்குப் பின் உள்ள மறு உலக வாழ்க்கை ஆகும். திரும்ப திரும்ப ஜன்மம் எடுத்து வரும் வாழ்க்கையல்ல' என்று Dr Farida Ghauhan தன்னுடைய நூலான Punarjanam aur ved (page 93) -ல் கூறுகிறார்.
ஆன்மாவானது மறுபடியும் மறுபடியும் பல ஜென்மம் எடுத்து வரும் என்று எந்த இந்து வேதமும் குறிப்பிடவில்லை என்றுSri Satya Prakash Vidya Lankar தன்னுடைய நூலான Awagawan (Page 104) -ல் குறிப்பிடுகிறார்.
'மறு பிறவித் தத்துவம் என்பது ஒரு கொள்கை அளவில் மட்டுமே இந்து மதத்தில் குறிப்பிடப் படுகிறது. அது உண்மை என்றோ அடிப்படையான தத்துவம் என்றோ கொள்ளப் பட வேண்டியது இல்லை. வேதங்களோ, உபநிஷத்துகளோ இதைக் குறிப்பிடவில்லை.'
-சுவாமி பூமாந்த தீர்த்தர், ஞான பூமி
10 பக்கம்
97 ஏப்ரல்
மரணத்திற்குப் பின் உள்ள மறுமை வாழ்வு பற்றி குர்ஆன் என்ன கருத்து வைக்கிறதோ அதையே தான் இந்து மத வேதங்களும் வைக்கின்றன. அவற்றை வரிசையாக கிழே பார்ப்போம்.
'ஏ அக்னி! இறந்த இந்த மனிதர் மறு உலகிற்கு செல்வார்'
10 : 16 : 5 - ரிக் வேதம்
ஒவ்வொருவரும் மரணத்தை சுவைக்கக் கூடியவர்களே நன்மை மற்றும் தீமையின் மூலம் பரீட்ஷித்துப் பார்ப்பதற்காக உங்களைச் சோதிப்போம். நம்மிடமே திரும்ப கொண்டு வரப் படுவீர்கள்.
21 : 35 - குர்ஆன்
ஏ கணவன் மனைவியரே! நீங்கள் ஒற்றுமையாய் நல்லறங்கள் செய்யத் துவங்குங்கள். சொர்க்க வாழ்க்கையை உண்மையில் அனுபவிப்பீர்கள்.
6 : 122 : 3 - அதர்வண வேதம்
பய பக்தி உடையவர்களுக்காக சொர்க்கம் சித்தப் படுத்தப் பட்டுள்ளது.
3 : 133 -குர்ஆன்
மறுமையில் இவர்களை நொக்கி நீங்கள் உங்கள் மனைவி மார்களுடன் மகிழ்ச்சியுடன் சுவனத்துக்குள் நுழைந்து விடுங்கள் என்று கூறப்படும்.
43 : 70 -குர்ஆன்
சுவனத்தில் வெண்ணெய் வழிந்தோடும் ஓடைகளும் சேமித்து வைக்கப் பட்ட தேனும் இன்னும் பழ ரசங்கள் பால் தயிர் நீர் எல்லாம் கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கும் வகையில் சதா சிற்றாறுகளாய ஓடிக் கொண்டிருக்கும். அவைகள் உன்னுடைய மகிழ்ச்சியை அதிகப் படுத்தும். ஏரியில் நிரம்பிக் கிடக்கும் தாமரை மலர்கள் உன்னுடைய ஆத்மாவை வலிமைப் படுத்தும்.
4 : 34 : 6 - அதர்வண வேதம்
நரகத்தில் நுழைந்தவுடன் தாங்க முடியாத வேதனை துவங்கும். கை கால்கள் எரிக்கப் படும். விறகுக் கட்டுகள் அவனைச் சுற்றி குவித்து வைக்கப் பட்டு எரிக்கப் படும். அவனுடைய சதை அவனுக்கு உண்ண கொடுக்கப்படும். தன்னைத் தானே செதுக்கிக் கொள்வான் அல்லது பிறரால் வெட்டப் படுவான். குடல்கள் பிதுங்கி வெளியே தள்ளப் பட்டவனாக இருப்பான். எனினும் அவன் உயிருடனே இருப்பான். அவன் சாகாது தொடர்ந்து வேதனையை அனுபவித்துக் கொண்டே இருப்பான்.
- ஸ்ரீமத் பாகவத் மஹா புராணம்
மேலே நான் கொடுத்துள்ள இந்து மத வேத ஆதாரங்களும் இஸ்லாமிய வேத ஆதாரங்களும் எந்த அளவு ஒத்துப் போகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே இந்து மதமும் மறு உலக வாழ்க்கையை வலியுறுத்துகிறது. மறு பிறவி என்பது இந்து மத கோட்பாடு அல்ல. அது தவறாக விளங்கிக் கொள்ளப்பட்ட ஒன்று என்று விளங்கிக் கொள்ளலாம்.
எனவே இளையராஜா அவர்களே! நீங்கள் இசை அமைப்பதில் பெரும் ஜாம்பவானாக இருக்கலாம். ஆனால் கடவுளை தேடும் விஷயத்தில் உங்களை விட உங்கள் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா மிக உயரத்தில் இருக்கிறார். அவரிடம் உள்ள தமிழ் குர்ஆனை வாங்கி தினம் ஒரு பக்கமாக பொறுமையாக படித்து வாருங்கள். உங்கள் மகனைப் பொலவே உங்களுக்கும் ஆன்மீகத்தில் ஒரு தெளிவு கிடைக்கும்.
அவ்வாறு தெளிவு கிடைத்து விட்டால் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்', 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' 'நட்ட கல்லும் பேசுமோ' போன்ற நமது முன்னோர்களின் வழியை குர்ஆன் உங்களுக்கு காண்பிக்கும். பிறவிப் பயனை உங்கள் மகனைப் போன்று நீங்களும் அடைந்து கொள்வீர்கள். உங்களை சகோதரனாக அரவணைக்க 200 கோடிக்கு மேல் உலகமெங்கும் காத்துக் கொண்டிருக்கிறோம்.
டிஸ்கி: நான் படிக்கும் காலங்களில் சலங்கை ஒலி, சங்கரா பரணம், அழகே உன்னை ஆராதரிக்கிறேன் போன்ற படங்களின் பாடல்களில் லயித்து பள்ளியை கட்டடித்து விட்டு எங்கள் ஊர் தியேட்டரில் பல முறை சினிமா பார்த்துள்ளேன். இதனால் எனது தாயாரிடம் நிறைய அடி வாங்கியதுண்டு. அந்த அளவு உங்கள் இசையின் மேல் ஒரு காலத்தில் ஈர்ப்பு இருந்தது. :-)
பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜாவுக்கும் சகோதரி ஜபருன்னிஷாவுக்கும் இன்று கீழக்கரையில் திருமணம் இனிதே நடந்து முடிந்தது. கீழக்கரையில் உள்ள செங்கல் நீரோடை என்ற இடத்தில் இந்த திருமண வைபவத்தை ஏற்பாடு செய்திருந்தனர். மிக எளிமையாக திருமணம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.
புதிதாக இஸ்லாத்தை ஏற்று இன்று புது வருடம் முதல் தேதியன்று புது வாழ்வு தொடங்கும் யுவனை நாமும் வாழ்த்துவோம். இதற்கு முன் நடந்த இரண்டு திருமணங்களும் யுவனுக்கு தோல்வியிலேயே முடிந்தது. மூன்றாவது திருமணமானது அவரது வாழ்வை மேலும் சிறப்புக்குரியதாக ஆக்கட்டும் என்று பிரார்த்திப்போமாக!
திருமணமான மணமக்களை இஸ்லாமிய முறையில் வாழ்த்தும் முறை:
"பாரகல்லாஹூ லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ ஹைர்"
பொருள்: "இறைவன் உங்கள் இருவருக்கும் அருள் புரிவானாக. உங்கள் இருவரின் சந்ததிகளுக்கும் அருள் பொழிவானாக. உங்களிருவரையும் நல்லறங்களில் ஒன்றிணைப்பானாக."
என்று நபிகள் நாயகம் கூறுவார்களென நபித் தோழர் அபூஹூரைரா தனது அறிவிப்பில் கூறுகிறார்.
'டிஸ்கோ சாந்தி' கேள்விபட்டிருக்கிறோம். அது என்ன 'டிஸ்கோ முல்லா'! அதாவது பாகிஸ்தானில் ஜூனைத் சம்சாத் என்ற பாப் இசை பாடகன் ஒருவன் இருந்தான். பல ஆல்பங்கள் இவனது பெயரைக் கொண்டு மிக அதிகமாக விற்று தீர்ந்தது. கராச்சி மாகாணத்தை சேர்ந்தவன். 2001 ம் ஆண்டு பாப் இசை தொழிலை விட்டு விட்டு இஸ்லாத்தின் மூலம் புரோகித தொழிலை தொடங்கினான். தப்லீக் ஜமாத்தில் மிக ஆர்வமாக பணியாற்றினான். முரீது கும்பலை சேர்ந்தவன். இங்கும் நல்ல வருமானம். முரீது கொடுக்கும் போது தனது பழைய பாப் நடனத்தையும் கூடவே சேர்த்துக் கொண்டான். இது மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானது. கிறித்தவர்கள் 'ஆண்டவன் உங்களை ஆசீர்வதிப்பாராக' என்று நெற்றியில் ஒரு தட்டு தட்டினால் அந்த மக்கள் எப்படி துடித்து துள்ளி விழுகிறார்களோ அதே போன்ற ஒரு ட்ரிக்தான் இந்த ஆட்டமும். இஸ்லாத்துக்கு எதிராக வேலை செய்ய யூதர்களால் தயாரிக்கப்பட்டவனாகவும் இருக்கலாம். காணொளியை பார்த்து நம்ம மவுலவி என்ன ஆட்டம் ஆடுகிறார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். :-)
தற்போது தனது பிரசாரத்தில் நபிகள் நாயகம் மனைவியரில் ஒருவரை தவறாக பேசி அதனால் சர்ச்சை ஏற்பட்டு கோர்ட்டினால் தண்டனை வழங்கப்பட்டுள்ளான். தண்டனை கிடைத்தவுடன் தற்போது அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளான். 'நான் எனது அறிவை இழந்து என்ன பேசுகிறேன் என்று விளங்காமல் பேசி விட்டேன். என்னை முஸ்லிம்கள் மன்னித்து தண்டனையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என்று கோரிக்கை அளித்துள்ளான். தற்போது வழக்கு கோர்ட்டில் உள்ளது.
இறைவனும் அவரது தூதரும் காட்டித் தராத எந்த வணக்கமும் முடிவில் சம்பந்தப்பட்டவர்களை படுகுழியில் தள்ளி விடும் என்பதற்கு ஜூனைத் சம்சாத் என்ற இந்த கிறுக்கு மவுலவியின் முடிவு ஒரு சிறந்த உதாரணம்.
நம் தமிழகத்திலும் முரீது கோஷ்டிகள் ஆங்காங்கே உண்டு. ஜமாலி போன்ற கிறுக்கர்கள் இதனை ஆதரிக்கக் கூடியவர்களே. தவ்ஹீத் வாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தற்போது ஓரளவு இந்த மூடர்கள் அடக்கி வாசிக்கிறார்கள். உங்கள் ஊர்களில் இது போன்று மூரீது கும்பல்கள் யாராவது தென்பட்டால் உடன் விளக்கத்தைக் கேட்டு அவர்களை அழிவின் விளிம்பிலிருந்து காப்பாற்றுங்கள். உங்களையும் என்னையும் இறைவன் குர்ஆனின் நேரான வழியிலும் நபிகள் நாயகம் காட்டித் தந்த வாழ்வு முறையிலும் கடைசி வரை இருந்து மரணிக்கச் செய்வானாக!
ஏ ஆர் ரஹ்மானுக்கும், யுவன் சங்கர் ராஜாவுக்கும்(அப்துல்லா) நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். இசையை ஒரு தொழிலாக செய்து கொள்ளுங்கள். அது சரியா தவறா என்பதை இறைவன் தீர்மானித்துக் கொள்வான். ஆனால் அந்த இசையை வணக்கமாக்குகிறேன் என்ற பெயரில் ஏடா கூடமாக எதையாவது செய்து வம்பில் மாட்டிக் கொள்ளாதீர்கள். இது எனது அன்பான வேண்டுகோள்.
யுவன் சங்கர் ராஜாவின் முகநூல் பக்கத்தில் அவரது ரசிகர் எழுதிய ஒரு பின்னூட்டம்.
// Dear yuvan sir,
I'm ur diehard fan... We have initiated a plan for all ur fans to message about their opinion about ur name change...pleasemy dear yuvan..ur name is really very very very cute....i say yuvan yuvan yuvan everyday...and I cannot say Abdul anymore...i don't want these name change as ur every diehard fan...please for us don't change ur name thalaiva...neenga illana nanga illa...yuvan is youth icon of Tamil music...it should stay as it is...please don't let it to change thalaiva....i know U r not going to change ur name...but some fake news are spreading about this...so please confirm soon about ur name change...thank you in advance thalaiva...as ur sister said U r gonna get married, I wish U from my heart to have a successful life thalaiva...go ahead...u r hearts winner...millions of ur fans are here to support U for any cause...once again a request from ur follower please don't change ur name...//
- Sãñdîàr Múthù Kúmãr
'ஆமா.... காலங் கெடக்கிற கெடப்புல உலகத்துக்கு இது ரொம்ப முக்கியம்' என்று நீங்க அலுத்துக்கிறது தெரிகிறது. இருந்தாலும் இதிலும் சில விளக்கங்கள் படிப்பினைகள் நம்மால் பெற முடியும். முதலில் சண்டியர் முத்துக் குமாருடைய பின்னூட்டத்தைப் படிக்கவும். யுவனுடைய முகநூல் பக்கத்தில் அவருக்கு எழுதியது இந்த பின்னூட்டம். ஒரு அளவுக்கு மீறி போனால் இசை ஒரு மனிதனை எந்த அளவு பைத்தியம் பிடிக்க வைக்கும் என்பதற்கு இந்த பின்னூட்டம் ஒரு சிறந்த உதாரணம். 'நீங்க இல்லேன்னா நாங்க இல்ல' என்று சொல்கிறார். யுவன் ஒரு மியூசிக் டைரக்டர். ஒவ்வொரு காலத்துக்கும் ஒவ்வொருவர் தங்கள் இசையால் மக்களை மகிழ்விப்பர். முன்பு எம்எஸ்வி, நேற்று இளைய ராஜா, இன்று ஏ ஆர் ரஹ்மான் நாளை அனிருத்தோ, யுவனோ யாராவது இருந்து விட்டுப் போகட்டும். அது அவர்கள் தொழில். அதை விடுத்து அவருக்கு ஆயிரம் பேர் என்றும் இவருக்கு ஆயிரம் பேர் என்றும் வரிந்து கட்டிக் கொண்டு பின்னூட்டத்தில் வசை மாறி பொழிந்து கொண்டிருப்பவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கும்.
அடுத்து யுவனின் தங்கை பவதாரிணி காட்டமாக ஒரு அறிக்கை விட்டுள்ளார். அவர் கூறுவதாவது 'என் சகோதரன் யுவன் சிகரெட் பிடித்தது கிடையாது. மது அருந்தியது கிடையாது. வேறு எந்த கெட்ட பழக்கங்களும் கிடையாது. சிறு வயது முதலே மிக நேர்மையாக வாழ்ந்து வருபவர். ஆம். அவர் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக் கொண்டுள்ளார். இதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்னை? இந்த வருட டிசம்பரில் அவருக்கு ஒரு இஸ்லாமிய பெண்ணோடு திருமணம் நடத்தி வைக்க முயற்சி செய்துள்ளோம். அவருடைய எந்த முடிவுக்கும் குடும்பத்தார் நாங்கள் உறுதுணையாக இருப்போம். ரசிகர்கள் என்ற பெயரில் அவருக்கு தயவு செய்து யாரும் தொந்தரவு கொடுக்காதீர்கள்' என்கிறார். அந்த அளவு அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது மற்றவர்களுக்கு கசப்பாக இருக்கிறது. ஏன் இந்த நிலை? ஏனென்றால் மற்ற மதங்களுக்கு மாறினால் பெயர் மட்டுமே மாறும். கலாசாரம் மாறாது. இஸ்லாத்துக்கு மாறினால் பெயர் மட்டும் அல்ல. கலாசாரமும் வணக்க வழிபாடுகளும் முற்றிலும் மாறுபடும். பார்பனியத்தின் பிடி முற்றிலுமாக உடைத்தெறியப்படும். எனவே தான் பார்பனர்கள் ஏகத்துக்கும் குதிக்கிறார்கள். பல போலி பெயர்களில் வந்து இது போன்று இஸ்லாத்தை ஏற்றவர்களின் மனதை காயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இஸ்லாமிய சட்டப்படி அவர் யுவனாகவே தொடரலாம். அரபியில்தான் பெயர் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. ஆனால் சாதி வேரூன்றிய இந்த சமூகத்தில் அதே பெயரில் அவர் தொடர்ந்தால் 'அவர் சாதி எது?' என்ற கேள்வி வரும். எனவே தான் பழகிய தங்கள் பெயரை இஸ்லாத்தை ஏற்பவர்கள் முதலில் மாற்றி விடுகின்றனர். ஏ ஆர் ரஹ்மான் முன்பு எந்த சாதி என்பது 99 சதவீதமானவருக்கு தெரிந்திருக்காது. அடுத்த தலைமுறையில் அந்த சதமும் மாறி விடும். ஆனால் யுவன் தனது சொந்த பெயரிலேயே இருந்தால் அவரது சாதி மறைய வெகு காலம் ஆகும். எனவே பெயர் மாற்றம் என்பது அவரது சொந்த விருப்பம். அதில் ரசிகர்கள் என்ற பெயரில் பலர் மூக்கை நுழைத்து அவருக்கு ஆலோசனை வழங்குவது அதிகப்பிரசங்கித் தனம் இல்லையா? இதை ஏன் இவரது ரசிகர்கள் உணர மாட்டேன் என்கின்றனர்? இஸ்லாமிய பெயரை தேர்ந்தெடுப்பதால் அவரது இசைப்பிரியர்களுக்கு இசையை ரசிக்கும் தொனியில் ஏதாவது மாற்றத்தைக் கொண்டு வந்து விடுமா? எனக்கு விளங்கவில்லை!
இந்தியத் திரு நாடே! இந்திய மக்களின் வாழ்வுக்குக் காரணமான
நீயே எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய்.
நின் திருப்பெயர் பஞ்சாபையும், சிந்துவையும், கூர்ச்சரத்தையும்
மராட்டியத்தையும், திராவிடத்தையும், ஒரிசாவையும்,
வங்காளத்தையும், இன்பத்தால் உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது.
நின் திருப்பெயர் விந்திய, இமய மலைத் தொடர்களில் எதிரொலிக்கிறது;
யமுனை, கங்கை ஆறுகளின் இன்னொலியில் ஒன்றுகிறது;
இந்தியக் கடலலைகளால் போற்றப்படுகிறது:.
அவை உனது பெருமையை போற்றுகின்றன: நின் புகழைப் பரப்புகின்றன.
இந்தியர்களின் வாழ்வுக்குக் காரணமான என் தாய் நாடே...
உனக்கு வெற்றி! வெற்றி! வெற்றி!
1911-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதிதான் முதன்முதலாக கல்கத்தா நகரில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடக்கும்போது இப் பாடல் பாடப்பட்டது. தாகூரின் உறவினரான சரளாதேவி சௌதுராணி இந்தப் பாடலைப் பாடினார்.
தகவல் உதவி: விக்கி பீடியா
நமது தேசிய கீதத்தை கென்யர்கள் பாடினால் எப்படி இருக்கும்? :-)
சென்னை: இந்தியர்கள் தங்கள் கலாச்சாரத்துக்கு தொடர்பே இல்லாமல் வெளிநாட்டு கலாச்சாரத்தைப் படமாக்குவது ஏன்? என்று ஏ ஆர் ரஹ்மானிடம் பிரபல ஈரான் இயக்குநர் மஜித் மஜிதி கேள்வி எழுப்பியுள்ளார். இதனை ரஹ்மானே நேற்று தெரிவித்தார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள காவியத் தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடந்தது.
விழாவில் படக்குழுவினருடன் ஏஆர் ரஹ்மானும் பங்கேற்றார். இறுதியாக ரஹ்மானைப் பேச அழைத்தனர். அவர் பேசியது முப்பது வினாடிகள்.. நான்கே வரிகள். அவரது பேச்சு: "நான் இதுவரை 3 தலைமுறைகளுக்கு இசையமைத்திருக்கிறேன். சில தினங்களுக்கு முன்பு ஈரானிய இயக்குனர் மஜித் மஜித்திடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, அவர் என்னிடம், நான் உங்களுடைய படங்கள் எல்லாம் பார்த்து வருகிறேன். ஏன் உங்கள் கலாச்சாரத்தை விட்டுவிட்டு, வெஸ்டர்ன் கலாச்சாரத்தையே பின்பற்றி வருகிறீர்கள் என்றார். அவருக்கான பதிலாக இந்தப் படம் இருக்கும்."
(குறிப்பு: சாங் ஆப் ஸ்பேராஸ் உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களைத் தந்தவர் மஜித் மஜிதி. 'இந்தியாவில் ஏன் நடிகர்களுக்கு கோடிகளைக் கொட்டிக் கொடுக்கிறார்கள்' என்று கேள்வி எழுப்பியவர்).
-பத்திரிக்கை செய்தி
இந்திய கலாசாரம் என்பது என்ன? மனிதனை நான்கு பிரிவுகளாக பிரித்து அவனது தொழிலுக்கு ஏற்ப அவனது தகுதியை நிர்ணயித்து மேல் சாதி கீழ் சாதி என்று பிரித்து வைத்துள்ள மனு நீதியை அடிப்படையாகக் கொண்டு இயங்கிய இன்று வரை இயக்கப்படுவதற்கு பெயர்தான் இந்திய கலாசாரம். ஆதி தமிழர்கள் ஏக இறைவனை வணங்கி வந்துள்ளதற்கு சான்றுகள் கிடைத்துள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆரிய படையெடுப்புகளால் தமிழன் தனது கலாசாரத்தை தொலைத்தான். பல தெய்வ வணக்கத்தில் வீழ்த்தப்பட்டான். இதற்கு உடன்படாத தமிழர்களை கழுவில் ஏற்றி கொன்றனர் இந்நாட்டுக்கு சம்பந்தமே இல்லாத ஆரியர்கள். மேலும் சேர சோழ பாண்டிய மன்னர்கள் தங்களுக்குள் பல ஆண்டுகளாக போர் செய்து விவசாய நிலங்கள் கழனிகளையும் வெற்றிக் களிப்பால் அழித்தது நமது கலாசாரம்.
பெண்கள் தங்களின் மார்பை மறைத்துக் கொள்வதற்கு போராட்டம் நடத்தில் பார்பனர்களின் விடாப்பிடியால் முடிவில் கிறித்தவ மதத்தில் தங்களை ஐக்கியமாக்கிக் கொண்டது நமது கலாசாரம். கன்யாகுமரி சுற்று வட்டாரத்தில் நாடார்களிடம் இதனைக் கேட்டால் கதை கதையாக சொல்வார்கள். 'முலை வரி' என்ற ஒன்றை போட்டு பெண்களின் மார்புக்கும் வரி வசூல் செய்தது நமது கலாசாரம்.
இன்று வரை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சிரட்டையில் தேனீர் கொடுக்கும் பழக்கமும் தனிக் குவளை முறையும் உள்ளது. ஆதிக்க சாதியினர் உள்ள ஊர்களில் பள்ளிக்கு செல்லும் தாழ்த்தப்பட்ட சிறுவர் சிறுமியர் தங்கள் காலணிகளை கைகளில் எடுத்துச் செல்லும் அவலம் இன்றும் தொடர்கிறது. இதுவும் கூட நமது கலாசாரம்தான்.
அடுத்து சாதி மாறி காதலித்த ஒரே குற்றத்திற்காக தருமபுரியில் இரண்டு கிராமங்களை முற்றாக அழித்து அதனை இன்று வரை நியாயம்தான் என்று பேசிக் கொண்டும் இருக்கிறோம். முடிவில் தாழ்த்தப்பட்ட அந்த இளைஞனை கொன்று அதனை தற்கொலையாக மாற்றியதும் நமது கலாசாரம்தான்.
காஞ்சிபுரம் கோவிலில் நடந்த பாலியல் அநியாயங்களை தட்டிக் கேட்ட கடவுள் பக்தர் சங்கரராமனை பட்டப் பகலில் கொலை செய்து, அதற்கு காரணமானவர்கள் இன்றும் மக்களுக்கு அருளாசி வழங்கிக் கொண்டிருப்பதும் நமது கலாசாரம்தான்.
கந்து வட்டி, ரியல் எஸ்டேட், பெண் பிரச்னை, மாமூல் வசூலிப்பது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு அதனால் கொலையுண்ட பல இந்துத்வா நபர்களை நாம் அறிவோம். அவர்கள் இந்துத்வாவில் தொடர்பு உள்ளவர்கள் என்ற ஒரே காரணத்தினால் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள வழக்கை முடித்துக் கொள்ள எந்த முகாந்திரமும் இல்லாமல் அதற்கு மத சாயம் பூசி அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை விசாரணைக் கைதிகளாக அடைத்து வைத்திருப்பதும் நமது கலாசாரம்தான்.
கணவன் இறந்தால் எரியுட்டப்படும் அந்த சிதையிலேயே இளம் பெண்களை 'சதி' என்ற பெயரில் சதி செய்து நெருப்பில் தள்ளுவதும் நமது கலசாரம்தான். அவ்வாறு தங்கள் உயிரை விட துணியாத பெண்களை கோரஷாக சப்தமிட்டு அந்த பெண்களை வலுக்கட்டாயமாக நெருப்பில் தள்ளி கொன்றதும் நமது கலாசாரம்தான்.
உலகிலேயே கற்பழிப்புகள் நடைபெற்று அந்த பெண்களை மரத்தில் தொங்க விடுவதும் நடப்பது நமது நாட்டில்தான். பெண் கொடுமைகள் நடப்பதில் உலகிலேயே முதலிடத்தை பெற்றவர்களும் நமது நாட்டவர்தான்.
இப்படியாக நமது கலாசாரத்தை அடுக்கிக் கொண்டே போகலாம்.
மஜீத் மஜீதி அவர்கள் ஈரானில் அமர்ந்துள்ளதால் இந்த கலாசார புரட்சிகளெல்லாம் அவருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால் சிறு வயது முதலே இந்து கலாசாரத்தில் வளர்ந்து பழக்கப்பட்ட ரஹ்மானுக்கு இவை எல்லாம் தெரியாதா? நமது நாட்டோடு சென்று விட்ட இந்த கலாசார புரட்சியை உலகுக்கும் திரைப்படமாக எடுத்துப் போட்டு நமது மானத்தைக் கப்பலேற்ற வேண்டுமா? இந்திய கலாசாரங்களை ஒவ்வொன்றாக திரைப்படங்களாக எடுத்து அதனை மஜீது டைரக்ட் செய்து ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்தால் கண்டிப்பாக அது வெற்றி பெறும். பல ஆஸ்கார் விருதுகளையும் குவிக்கும். ஆனால் இந்தியர்களாகிய நாம் வெளி நாட்டுக்கு சென்றால் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டுதான் செல்ல வேண்டும். இந்த நிலை நமக்குத் தேவைதானா? என்பதை ரஹ்மான் சற்று யோசிப்பாராக!
மன்னார்குடி தனியார் பொறியியல் கல்லூரியில் காலில் விழச் சொல்லி ராகிங் செய்த மாணவர் கள் உருட்டுக் கட்டையால் தாக்கிய தில், மாணவர் ஒருவர் கைகளில் எலும்பு முறிவுகளுடன் தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் விளார் சாலை அண்ணா நகர் 17-ம் தெருவைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி. மின்வாரியத்தில் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ரவிச்சந்திரன் இறந்துவிட்டார். இவர்களின் மகன் ஜெகன்(22).
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஜெகன் டிப்ளமா (டிஇஇஇ) முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார். திங்கள்கிழமை கல்லூரிக்குச் சென்ற அவரை, வாசலிலேயே வழிமறித்த மாணவர்கள் சிலர், தங்கள் காலில் விழச் சொல்லி ராகிங் செய்தனராம். மறுத்த ஜெகனை உருட்டுக் கட்டைகளால் உடல் முழுக்கத் தாக்கியதில், கைகள் இரண்டிலும் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, ஜெகன் தஞ்சை தெற்கு காவல் நிலைய போலீஸா ரிடம் அளித்த புகாரில், “திங்கள்கிழமை கல்லூரிக்குச் சென்ற என்னை, அதே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சிலர் அழைத்து, தங்களை அண்ணன் என அழைக்கக் கூறினர். நானும் கூறினேன். பின்னர், காலில் விழுந்து வணக்கம் சொல்லச் சொன்னார்கள். நான் முடியாது என்று கூறிவிட்டு, வகுப்புக்குச் சென்றுவிட்டேன். அப்போது, என்னை தகாத வார்த்தைகளால் திட்டினர்.
மாலையில், வகுப்பு முடிந்து வீட்டுக்குச் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த மாணவர்கள் மீண்டும் என்னைக் காலில் விழச் சொன்னபோது, வாக்குவாதம் ஏற்பட்டது. என்னை உருட்டுக் கட்டைகளால் உடல் முழுதும் தாக்கி, கீழே தள்ளி மிதித்தனர். மீண்டும் கல்லூரிக்கு வந்தால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர். அவர்கள் தாக்கியதில் எனது இரு கைகளிலும் எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. என்னைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
07-08-2014
காலில் விழும் இந்த கலாசாரம் படிக்கும் இந்த மாணவர்களை எந்த அளவு கொண்டு சென்றுள்ளது என்பதைப் பார்க்கிறோம். இதற்குத்தான் இஸ்லாம் இப்படிப்பட்ட ஒரு கலாச்சாரத்தையே குழி தோண்டி புதைத்தது.
இந்திய அரசியல், சினிமாத்துறை, கல்விக் கூடங்கள் என்று எங்கு பார்த்தாலும் மரியாதை நிமித்தமாக காலில் விழும் பழக்கம் அனைவரிடத்திலும் குடி கொண்டுள்ளது. ஒருவரை மதிக்கிறோம் என்ற பெயரில் இந்த காரியத்தை நாம் சர்வ சாதாரணமாக செய்து வருகிறோம். அரசியல் வாதிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். புகழ் கிடைக்கிறது என்பதற்காக இதை அவர்கள் மனதாற ஆதரிக்கிறார்கள். தொண்டனும் கிடைக்கும் பணத்துக்காகவும், ஒரு சில எம்.எல்.ஏ, எம்.பி சீட்டுகளுக்காகவும் காலில் விழுவதைப் பார்க்கிறோம். நம்மைப்போன்ற ஒரு மனிதனிடம் மிகச்சிறப்பு வாய்ந்த தலையை அவன் காலடியில் கொண்டு வைப்பது சுய மரியாதைக்கு இழுக்கு என்று நாம் சிந்திப்பதில்லை.
'நான் ஹீரா என்ற ஊருக்குச் சென்றேன். அங்குள்ள தலைவருக்கு அந்த மக்கள் காலில் விழுந்து சிரம் பணிவதைப் பார்த்தேன். காலில் விழுந்து மரியாதை செய்வதற்கு நம்முடைய நபி மிகப் பொருத்தமானவர்களாயிற்றே என்று எனக்குள் கூறிக் கொண்டேன். முகமது நபி அவர்களிடம் வந்து 'ஹீரா ஊர் மக்கள் தங்கள் தலைவருக்கு காலில் விழுந்து மரியாதை செய்வதைக் கண்டேன். இறைவனின் தூதரே! இதற்கு நீங்கள் தகுதியானவர்கள்' என்றேன். அதற்கு முகமது நபி அவர்கள் 'நான் இறந்த பிறகு எனது சமாதியில் இதே போன்ற வணக்கத்தைச் செலுத்துவாயோ?' என்று கேட்டனர். மாட்டேன் என்று நான் கூறினேன். பின்னர் முகமது நபி அவர்கள் 'மனிதனுக்கு மனிதன் காலில் விழுந்து மரியாதை செய்யும் பழக்கத்தை செய்யாதீர்கள். ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு சிரம் தாழ்த்த அனுமதி இருந்தால் ஒரு மனைவி தனது கணவனுக்கு சிரம் தாழ்த்த சொல்லியிருப்பேன். ஏனெனில் அவர்கள் கணவர்களுக்கு அதிகம் கடன்பட்டிருக்கிறார்கள்.'
-அறிவிப்பவர் கைஸ் பின் சாத், நூல் அபுதாவுத்: 1828.
ஒருமுறை முகமது நபி அவர்கள் தமது தோழர்களுடன் நடந்து சென்றார்கள். அவர்களின் தலை மீது மட்டும் நிழல்படுவதைக் கண்டார்கள். தலையை உயர்த்திப் பார்த்தபோது ஒரு துணிக் குடையால் அவர்களுக்கு நிழல் தரப்படுவதைக் கண்டார்கள். 'விடுங்கள்' என்று கூறி அந்தத் துணியை வாங்கி மடக்கி வைத்தார்கள். 'நானும் உங்களைப் போன்ற மனிதன் தான்' என்றும் கூறினார்கள்.
ஆதாரம்: தப்ரானி.
தனக்கு யாரும் விசேஷமாக மரியாதை செய்து விடக் கூடாது என்பதிலும், தனது இறப்புக்குப் பின் யாரும் தன்னை கடவுளாக்கி விடக் கூடாது என்பதிலும் முகமது நபி எந்த அளவு கவனமாக இருந்திருக்கிறார்கள் என்பதை நினைத்து ஆச்சரியப்படுகிறோம்.
ஜீ டிவி சரிகமபா வில் கமால்கான் என்ற ஒரு பாடகரின் செய்கையைத்தான் இங்கு பார்க்கிறீர்கள். பாடல் முடிந்தவுடன் அபிமானத்தைக் காட்ட வேண்டி 'ஏ.ஆர்.ரஹ்மானின் காலைத் தொட்டு ஆசீர்வாதம் வாங்குகிறேன்' என்கிறார். அதற்கு அனுமதியும் வழங்கப்படுகிறது. தலர் மெஹந்தி ஆசீர்வாதம் பெற அனுமதிக்கிறார். ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் சீட்டை விட்டு எழும்பாமல் கைகளை மட்டும் கொடுத்து விட்டு 'காலில் விழ வேண்டாம்' என்று தடுப்பதைத்தான் நாம் பார்க்கிறோம். பிறவியிலேயே முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த கமால்கான் இஸ்லாத்தின் போதனைகளை மறந்து காலில் விழ செல்கிறார். நமக்கு தெரிந்து இஸ்லாத்தை ஏற்ற ரஹ்மான் இஸ்லாம் தடுத்ததால் காலில் விழுவதை தடுக்கிறார். இவர் சினிமாத் துறையில் இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இதிலிருந்து இவர் தவிர்ந்து கொள்ள வேண்டும். அதே போல் தர்ஹாக்களுக்கு செல்வதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அவருக்கு நெருக்கமானவர்கள் இந்த செய்தியை அவருக்கு கொண்டு சென்றால் நல்லது. ஒருவரின் பெயரில் இஸ்லாம் இல்லை. இஸ்லாமிய கொள்கைகளை கடைபிடிப்பதில்தான் அவர் இஸ்லாமியனாகப் பார்க்கப்படுகிறார்.
நாகூர் அனீபாவின் பாடலில் வரும் 'அல்லாஹ்வின் பேரளுளை நம்பி நில்லுங்கள்' என்று வரும் இடத்தில் 'ஆண்டவனின் பேரளுளை நம்பி நில்லுங்கள்' என்று பாடுகிறார். இஸ்லாத்தை பொறுத்த வரையில் அல்லாஹ், இறைவன், கடவுள், தேவன், ஆண்டவன், ரப் என்று எந்த பெயரில் அழைத்தாலும் அது ஏக இறைவனைத்தான் குறிக்கும். குர்ஆன் மற்றும் இந்து மத வேதங்கள் கூறுவதை இனி பார்ப்போம்.
இந்து மதத்தின் அனைத்து வேதங்களுக்கும் முன்னோடியான மிகப் பழமையான வேதம் ரிக் வேதம். இதில் வரக் கூடிய ஒரு வசனம் :
'ஏகாம் சத் விப்ரா பஹுதா வதன்தி'
-ரிக் வேதம் 1:164:46
'ஒரே இறைவனை அழையுங்கள். அந்த இறைவனுக்கு பல பெயர்கள் உள்ளன.'
உண்மை ஒன்றுதான். படைத்த இறைவன் ஒருவன்தான். அவனை பல பெயர்களில் அழைத்துக் கொள்ளட்டும் என்று விளக்கப் படுகிறது.
அந்த இறைவனுக்கு 33 பண்புகள் இருப்பதாக அந்த பண்புகளின் பெயர்களை பிரம்மா, விஷ்ணு என்று வரிசையாக பட்டியலிடுகிறது.
-ரிக் வேதம் 2 : 1
இந்த 33 பண்புகளையும் நமது இந்து நண்பர்களின் முன்னோர்கள் அவரவர்களின் வசதிக்கு ஏற்றவாறு உருவங்களை வரைந்து கொண்டனர். 'பிரம்மன்' படைப்புத் தொழிலைச் செய்யக் கூடியவன்: 'விஷ்ணு' காக்கும் தொழிலைச் செய்யக் கூடியவன்: என்றெல்லாம் படைத்த ஒரே இறைவனின் பண்புகளை பல கடவுள்களாக பிரித்து விட்டார்கள். நாளடைவில் இந்த உருவங்கள் கடவுள் பெயரால் நம்மிடையே நிலைத்து விட்டன.
இது சம்பந்தமாக குர்ஆன் என்ன சொல்கிறது என்றுபார்ப்போம்.
'அல்லாஹ் என்று அழையுங்கள்! அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்! நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன.'
குர்ஆன் 17 :110
இரண்டு வேதங்களின் கருத்துக்களும் எந்த அளவு ஒத்துப் போகிறது என்று பாருங்கள். இறைவனின் வல்லமையைக் காட்டக் கூடிய பல பெயர்கள் குர்ஆனில் ஆங்காங்கே வரும். இறைவனின் பண்புகளாக வரக் கூடிய சிலவற்றைப் பட்டியலிடுகிறேன் :
- இது போன்று மொத்தம் 99 பண்புகளை இறைவன் ஆங்காங்கே குர்ஆனில் விவரித்துச் செல்கிறான்.
'அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்.அவர்கள் செய்து வந்ததற்காக தண்டிக்கப் படுவார்கள்.'
குர்ஆன் 7 : 180
இறைவனுக்கு அழகான பெயர்கள் உண்டு என்றும் அப்பெயர்களாலேயே அவனை அழைக்க வேண்டும் என்றும் மேற் கண்ட வசனம் கூறுகிறது. இறைவனின் பெயரை திரித்துக் கூறுவதும் சிதைப்பதும் கடும் குற்றம் எனவும் அவர்கள் தண்டிக்கப் படுவார்கள் எனவும் இவ் வசனம் கடுமையாக எச்சரிக்கிறது.
இன்று முஸ்லிம்களிடம் கூட சிலர் அறியாமையினால் தியானம் என்ற பெயரில் வருடத்தில் இரண்டு மூன்று நாட்கள் இரவு நேரங்களில் அமர்ந்து கோரஸாக ஓதி வருவதை பார்க்கிறோம்.அவர்கள் உபயோகிக்கும் வார்த்தைகளில் ஒன்று 'ஹீ,ஹீ' என்பது. ஹீ என்றால் அரபியில் 'அவன்' என்று அர்த்தம். சாத்தானைக் கூட 'ஹீ' என்று கூறலாம்.
அடுத்து ஒன்று 'ஹக் தூ ஹக்' என்று அரபியும் உருதும் கலந்து புது வார்த்தையை கண்டு பிடித்து திக்ரு என்ற பெயரில் செய்து வருகிறார்கள்.
இன்னொன்று 'அல்லாஹ்' என்ற பெயரில் முதல் எழத்து அ வையும் கடைசி எழுத்து ஹ் ஹையும் இணைத்து 'அஹ்' என்ற புது பெயரை கண்டு பிடித்துள்ளார்கள்.
அடுத்து 'இல்லல்லாஹ்' என்றும் ஓதுகிறார்கள். இதற்கு பொருள் 'அல்லாஹ்வைத் தவிர'. இதற்கும் எந்த பொருளும் இல்லை.
எனவே இறைவனோ, முகமது நபியோ காட்டித் தராத இது போன்ற நவீன வணக்கங்களை செய்வோரைப் பார்த்துதான் மேற் கண்ட வசனத்தில் எச்சரிக்கப் படுகிறது.
// அன்புள்ள சுவனப்பிரியன்,
இந்தியாவில் ஆந்திராவில் கடப்பா மாவட்டத்தில் ஒரு புகழ்பெற்ற தர்கா உள்ளது. அங்கு சென்று தான் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் அவர்கள் மாதம் ஒருமுறை சென்று வழிபடுகிறார்.//
அதே ஏ ஆர் ரஹ்மான் ஐந்து வேளை தொழுகையையும் நேரத்தோடு நிறைவேற்றுகிறார். அதை மறந்து விட்டீர்களே! அவர் தர்ஹா மீது கொண்ட பிரியத்தை குர்ஆனை உண்மையாக விளங்கியவுடன் விட்டு விடுவார் என்றே நினைக்கிறேன். இது பற்றி அவருக்கு பல மடல்களும் எழுதியுள்ளேன்.
//மக்கள் புனிதமாக கருதி வழிபடும் தர்காக்களை இடிக்க உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது ? கொடுஞ்செயலை நியாயப்படுத்தி எழுதும் கேவலத்தை நீங்கள் செய்யலாமா ? 10-க்கும் மேற்பட்ட தர்காக்கள் இடிக்கப்பட்டதை நியாயப் படுத்தி எழுதியுள்ளீர்கள். உங்களை கடவுள் மன்னிக்க மாட்டார்.//
தர்ஹாக்களை இடிக்க எனக்கு குர்ஆனும் நபி மொழிகளும் அனுமதி கொடுத்துள்ளது. ஆனால் அதனை தர்ஹாக்களை வணங்கும் அந்த மக்களே உணர்ந்து அதனை அப்புறப்படுத்தும் வரை நாங்கள் பொறுமை காப்போம். இனி குர்ஆன் வசனங்களை பார்ப்போம். ஒரு மனிதன் மரணித்து விட்டால் அவனுக்கும் உலகத்துக்கும் இடையிலான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிடுகிறது. இறந்த ஒரு மனிதனால் கேட்கவோ, பார்க்கவோ முடியாது! இனி குர்ஆன் வசனங்களை பார்ப்போம்.
குருடனும், பார்வையுள்ளவனும் இருள்களும், ஒளியும் நிழலும், வெப்பமும் சமமாகாது. உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச்செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச்செய்பவராக இல்லை. (திருக்குர் ஆன் 35:19-22)
பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!
குர்ஆன் 72:18
ஹஜ்ரத் அலி அவர்கள் அபுல் ஹய்யாஜ் அல் அஸதியை நோக்கி ‘அறிந்து கொள்! நபிகள் நாயகம் என்னை எதற்காக அனுப்பினார்களோ அதற்காக நானும் உன்னை அனுப்புகின்றேன். பூமியின் மட்டத்தை விட்டும் உயர்ந்திருக்கின்ற எந்த ஒரு கப்ரையும் சமப்படுத்தாமல் விட்டு விடாதே எனப்பணித்து அனுப்பினார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்:1662)
“அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கப்ருகளை பூசுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் தடை செய்தார்கள்.”
(அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்-1610)
‘இறைவா! எனது அடக்கத் தலத்தை வணக்கத்தலமாக ஆக்கி விடாதே என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.’
(அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூல்: முஸ்னத் அல் ஹுமைதி)
மேற்கண்ட ஆதாரங்கள் அனைத்தும் தர்ஹாக்கள் கட்டுவதையும் அங்கு விழாக்கள் நடத்துவதையும் தடை செய்கின்றன. மக்கள் அறியாமையில் செய்தால் அதனை குர்ஆன், நபி மொழிகளோடு விவாதித்து அவர்களை நேர்வழிப்படுத்துகிறோம். இஸ்லாத்தில் தர்ஹாக்களுக்கு இடமில்லை. இஸ்லாத்தை விட்டு வெளியேறி தனி மதமாக அறிவித்துக் கொண்டு அவர்கள் வழிபட்டால் அதற்கு நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப் போவதில்லை.
எனவே தர்ஹா விஷயமாக இறைவன் என்னை குற்றம் பிடிக்க மாட்டான் என்று உறுதியாக நான் சொல்கிறேன்.
இந்தி பிண்ணனி பாடகர் ஹான்ஸ் ராஜ் இஸ்லாத்தை ஏற்றார்!
இந்திய மாநிலமான பஞ்சாப்பின் ஜலந்தர் மாவட்டத்தில் ஷாஃபிபூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் ஹான்ஸ் ராஜ். சர்தார் ரஷ்பால் சிங் மற்றும் மாதா சிர்ஜான் கவுர் என்ற தம்பதிக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர். இசை பின்னணி இல்லாத ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் ஹான்ஸ் ராஜ். தனது இசை ஆர்வத்தால் ரியாலிடி ஷோவில் முதல் பரிசை தட்டிச் சென்றார். பல விருதுகளைப் பெற்றவர். கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றவர். இருந்தும் மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலை பாய்ந்தது. முடிவில் இஸ்லாத்தை படிக்க ஆரம்பித்தார். மன அமைதி இசையில் கிடைக்காது தூய இஸ்லாத்தில்தான் கிடைக்கும் என்று உறுதிபூண்டு தற்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். தனது பெயரை முஹம்மது யூசுஃப் என்று மாற்றிக் கொண்டுள்ளார்.
பஞ்சாபி மொழியில் அமைந்த கிராமிய பாடல்களையும் சூஃபி பாடல்களையும் பாடி தனது ரசிகர்களை மகிழ்வித்து வந்தார். தனியாக ஆல்பமும் மற்றும் திரைப்படங்களிலும் நிறைய பாடியுள்ளார். பாகிஸ்தான் பாடகர் நுஸ்ரத் ஃபதே அலிகானுடன் ஒரு படத்தில் பாடியும் உள்ளார். வாஷிங்டன் பல்கலைக் கழகமும் சான் ஜோஸ் மாநில பல்கலைக் கழகமும் இவரை கௌரவித்து அவார்டும் கொடுத்துள்ளது. சிரோண்மணி அகாலி தள வேட்பாளராக ஜலந்தர் லோக்சபா சீட்டுக்காக 2009ல் நின்று வெற்றியும் பெற்றவர்.
இஸ்லாத்தை ஏற்றதைப் பற்றி பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளிக்கும் போது "இஸ்லாம் ஒன்றில்தான் அன்பு, அமைதி, சகோதரத்துவம் என்ற அனைத்தும் எனக்கு கிடைத்தது. முகமது நபி அவர்களை நினைத்தாலே உள்ளார்ந்த ஒரு அன்பு என்னுள் மேலிடுகிறது. கூடிய விரைவிலேயே மெக்கா மதினா போன்ற புனித நகரங்களுக்கு பயணம் மேற்கொள்வேன். இஸ்லாத்தை படிக்க ஆரம்பித்த எனக்கு குர்ஆனின் மீது இனம் புரியாத ஒரு ஈர்ப்பு வந்தது. இறைவனைப் பற்றிய உண்மைகள் எனக்கு தெரிய ஆரம்பித்தன. எனது உள்ளம் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுமாறு சொன்னது. எனவே இன்று நான் உங்கள் முன் முஹம்மது யூசுஃபாக நிற்கிறேன்."
என்று மகிழ்ச்சியோடு தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
என்ன ஒரு ஆச்சரியமான நிகழ்வு. இந்த அரசும், நீதித்துறையும், காவல்துறையும், பத்திரிக்கைத்துறையும், நமது நாட்டு வரலாற்றுத் துறையும் திட்டமிட்டு இஸ்லாத்துக்கு எதிராக எதிர் மறை கருத்துக்களை விதைத்து வருகின்றன. இந்தியாவில் எங்கு பார்த்தாலும் முஸ்லிம்கள் இந்துத்வாவாதிகளால் கொல்லப்படுகின்றனர். இனி வரும் காலங்களில் இந்தியாவில் இஸ்லாமியர்களின் எதிர்காலம் அவ்வளவுதான் என்று பலரும் நினைத்து வருகின்றனர்.
ஆனால் இத்தனை சூழ்ச்சிகளையும், பொய்களையும் மீறி இஸ்லாம் நமது தொப்புள் கொடி உறவான இந்துக்களை அன்போடு அரவணைத்துக் கொள்கிறது. இது எப்படி சாத்தியம்?
‘அவர்கள் மீது நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள், ‘நாம் நிச்சயமாக இவற்றை முன்னரே கேட்டிருக்கின்றோம், நாங்கள் நாடினால் இதைப் போல் சொல்லி விடுவோம். இது முன்னோர்களின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை’ என்று சொல்கிறார்கள்.
அல்குர்ஆன் 8:31
அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர். அல்லாஹ்வும் அவர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்’
அல்குர்ஆன் 8:30
எத்தனை சூழ்ச்சிகள் செய்து இறைவனின் மார்க்கத்தை இந்த உலகை விட்டு துடைத்தெறிய வேண்டும் என்று பலரும் முயன்றாலும் நம்மை படைத்த இறைவன் அதற்கு மேல் சிறந்த சூழ்ச்சியை செய்து எதிரிகளை திகைப்புக்குள்ளாக்குகிறான். அதைத்தான் தினமும் நாம் பார்த்து வருகிறோம்.
ஒன்றை கவனித்தீர்களா? இஸ்லாத்தை ஏற்கும் ஒவ்வொருவரும் 'நாங்கள் குர்ஆனை படித்து இஸ்லாத்தை ஏற்றோம்' என்கின்றனர். எவருமே முஸ்லிம்களைப் பார்த்து இஸ்லாத்தை ஏற்றதாக சொல்லவில்லை. அந்த அளவு முஸ்லிம்களாகிய நமது நடவடிக்கை இருக்கிறது. உலக முஸ்லிம்களின் வாழ்க்கை குர்ஆனாக மாறி விட்டால் இஸ்லாமிய பிரசாரத்துக்கு அவசியமே இல்லை. இஸ்லாம் தானாக வளரும்.
இது போன்ற மத மாற்ற செய்திகளை ஏன் தொடர்ந்து வெளியிட வேண்டும் என்று பலர் கேட்கலாம். உலகம் முழுவதும் அதிலும் குறிப்பாக இந்தியாவில் இஸ்லாம் வளர்ந்தது வாளால் என்று நமது வரலாறு முதல் நம் நாட்டு இந்துத்வாவாதிகள் வரை பொய்களை பரப்பி வருகின்றனர். நமது வரலாறு சொல்வது அனைத்தும் பொய் என்பதை நிரூபிக்கவே இது போன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
ஹான்ஸ் ராஜூம், யுவன் சங்கர் ராஜாவும், திலீபனும் இஸ்லாத்தை ஏற்றதால் இஸ்லாத்துக்கு எந்த பெருமையும் இல்லை. மாறாக முஹம்மது யூஃசுபாக, முஹம்மது ஹாலிக் யுவனாக, ஏ ஆர் ரஹ்மானாக மாறியதால் இவர்கள்தான் அந்த பெருமையை பெறுகிறார்கள்.