Followers

Monday, September 16, 2019

குளிப்பு கடமையானவர் எவ்வாறு குளிக்க வேண்டும்?

குளிப்பு கடமையானவர் எவ்வாறு குளிக்க வேண்டும்?
ஒருவர் தனது மனைவியோடு உடலுறவில் ஈடுபட்டால் அவசியம் குளிக்க வேண்டும். அப்போதுதான் அவர் இறைவனை தொழ முடியும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. அந்த குளியல் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் காட்டித் தந்தார்களோ அந்த வழியில் இவர் குளித்து அதனை மற்றவருக்கும் விளக்குவதையே இந்த காணொளியில் பார்க்கிறோம்.
சவுதி அரேபியா எங்கே? ஆப்ரிக்கா எங்கே? இரண்டும் வேறு வேறு கண்டங்கள். மொழி, இனம், கலாசாரம், நிறம் என்று அனைத்திலும் வேறுபட்ட இரு நாடுகள். ஆனால் இவ்வளவு மாறுபாடுகளைக் கொண்ட இரு நாடுகளையும் இங்கு இணைப்பது இஸ்லாம். ஒரு அரபியரின் சொல் செயல் அங்கீகாரத்தை தனது வாழ்நாளில் செயல்படுத்த ஆர்வமுடன் உள்ள ஆப்ரிக்கரைத்தான் இங்கு பார்க்கிறோம். தான் பின்பற்றுவது மட்டுமல்லாது தனது மக்களும் பின்பற்ற வேண்டும் என்பதற்காக அதனை காணொளியாக்கியுள்ளார். இந்த அன்பும் பாசமும் எவ்வாறு வந்தது? எல்லோரும் ஒரு தாய் மக்கள்: மனிதர்களில் ஏற்றத் தாழ்வு இல்லை: மொழிகளில் ஏற்றத் தாழ்வு இல்லை: மொழி வெறிக்கு இங்கு இடமில்லை. எல்லா மூல மொழிகளும் இறைவனால் மனிதர்களுக்கு வழங்கப்பட்டவையே என்று இஸ்லாம் போதிப்பதை உள் வாங்கியதாலேயே இது சாத்தியப்படுகிறது.
----------------------------------------
முதலில் கைகள் இரண்டையும் மூன்று முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
தொடர்ந்து மர்மஸ்தானத்தைக் கழுவுவது.
பின்னர் தொழுகைக்காக வுழூச் செய்வது போன்று வுழூச் செய்து கொள்வது.
வுழூவின் நிறைவில் கால்களைக் கழுவுவதைப் பொறுத்தவரை உடனே கழுவிக் கொள்ளவும் முடியும். அல்லது குளித்து முடிந்ததும் இறுதியாகக் கழுவிக் கொள்ளவும் முடியும்.
வுழூச் செய்து முடிந்ததும் தண்ணீரைத் தலையில் மூன்று முறை ஊற்றுவது. அப்போது முடியைத் தேய்த்து குடைந்து கொள்ள வேண்டும்.
தொடர்ந்து உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றிக் குளிப்பது. அப்போது வலதைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். குளிக்கும் போது அக்குள், காதுகள், தொப்புள், கால் விரல்கள் போன்ற தேய்க்க முடியமான பகுதிகளைத் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறுதான் நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றியதாக அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (பார்க்க:புகாரி (265), (முஸ்லிம் (744) பாடம்: கடமையான குளிப்பை நிறைவேற்றும் முறை)


No comments: