Followers

Sunday, September 08, 2019

நாசாவின் கருவியை ஏன் அனுப்பினீர்கள்..

நாசாவின் கருவியை ஏன் அனுப்பினீர்கள்..
நாசாவின் கருவியை ஏன் அனுப்பினீர்கள்.. உருவான சர்ச்சை.. விக்ரம் லேண்டர் மாயமானதில் தொடரும் மர்மம்!
டெல்லி: சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் மாயமானது தொடர்பாக நிறைய சர்ச்சைகளும், மர்மங்களும் நிலவி வருகிறது. சந்திரயான் 2 திட்டம் வெற்றிக்கு மிக மிக அருகில் சென்று சறுக்கி உள்ளது. மிக அருகில் என்றால், 2.1 கிமீ!. ஆம் சந்திரயான் 2வின் விக்ரம் லேண்டர் நிலவிற்கு அருகில் 2.1 கிமீ தூரம் வரை சென்றது. ஆனால் கடைசியில் ஏற்பட்ட தொலைத்தொடர்பு கோளாறு காரணமாக சந்திரயான் 2 உடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. விக்ரம் 2 லேண்டர் எங்கே சென்றது என்றும் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. சந்திரயான் 2ல் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் இருந்தது.
இந்த ரோவர் மற்றும் லேண்டர் இல்லாமல் வேறு 10 பொருட்களையும் சந்திரயான் 2 நிலவிற்கு கொண்டு சென்றது. சந்திரயான் 2 ஐரோப்பாவில் இருந்து மூன்று, அமெரிக்கா மற்றும் பல்கேரியாவில் இருந்து இரண்டு கருவிகளை நிலவிற்கு கொண்டு சென்றது. இவை எல்லாம் நிலவில் தரையிறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதில் இஸ்ரோ சறுக்கி உள்ளது. அதேபோல் இதில் நாசாவில் இருந்து சந்திரயான் 2 எல்ஆர்ஏ எனப்படும் (Laser Retroreflector Array (LRA)) கருவியை நிலவிற்கு கொண்டு சென்றது. நிலவில் நாசாவின் Laser Retroreflector Array (LRA) கருவி ஏற்கனவே சில இருக்கிறது. இது பூமிக்கும் நிலவிற்கு இடையில் உள்ள தூரத்தை கணக்கிட உதவும்.
நாசாவின் அப்போலோ மூலம் ஏற்கனவே Laser Retroreflector Array (LRA) கருவிகள் சில நிலவில் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது இஸ்ரோ மூலம் மீண்டும் அந்த கருவிகள் அனுப்பப்பட்டது. ஆனால் இதை இஸ்ரோ நிலவில் டெலிவரி செய்ய முடியாமல் சறுக்கி உள்ளது.
என்ன சர்ச்சை ஆனால் இதை வைத்து புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அதன்படி இஸ்ரோ சந்திரயான் 2 போன்ற பெரிய திட்டங்களை செய்யும் போது அந்நிய நாட்டு பே லோட்களை கொண்டு செல்ல கூடாது. அப்படி கொண்டு செல்வது அந்த மிஷனுக்கே ஆபத்தாக முடியும்.
நாம் ஒரு குறிக்கோளுடன் கருவிகளை உருவாக்கி இருப்போம். மற்றவர்கள் வேறு மாதிரி கருவிகளை உருவாக்கி இருப்பார்கள். அப்படி இருக்கும்பட்சத்தில் நாசா போன்ற நிறுவனத்தின் கருவிகளை சந்திரயான் உடன் அனுப்புவது என்பது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். இரண்டுக்கும் அது பிரச்னை ஆகும்.
இப்போது அந்த நாசாவின் கருவியையும் டெலிவரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, என்று கூறியுள்ளனர். விக்ரம் லேண்டர் எங்கே சென்றது என்ற மர்மம் இப்போதும் நீடித்து வருகிறது. அதனுள் இருந்த நாசாவின் கருவிகளுக்கும், பிரக்யான் ரோவருக்கும் என்ன நடந்தது என்பதும் பெரிய புதிராக உள்ளது.
தகவல் உதவி
tamil.oneindia
07-09-2019


1 comment:

Dr.Anburaj said...

தகுதியற்ற விசயங்களில் தீர்ப்பு சொல்வது முட்டாள்களின் செயல்.
வீணர்களின் செயல்.