Followers

Saturday, June 11, 2022

தமிழ்தேசியத்தின் பிதாமகன் இராசராசனின் ஆட்சி பொற்கால ஆட்சியாம்..??

 


தமிழ்தேசியத்தின் பிதாமகன் இராசராசனின் ஆட்சி பொற்கால ஆட்சியாம்..??

 

பார்ப்பன கலாச்சாரத்தை தமிழகத்தில் புகுத்தியவனே ராசராசன்தான் என்கிறது வரலாறு...

 

தமிழகத்தில் பொற்கால ஆட்சியான களப்பிரர்களின் ஆட்சியை இருட்டிப்பு செய்து. சமண. பௌத்த மடங்களை இடித்து, விரட்டி. சைவ பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை மேலோங்க செய்த சோழர் ஆட்சி.

 

பார்ப்பன கலாச்சாரத்தை தமிழகத்தில் புகுத்தியவனே ராசராசன்தான் என்கிறது வரலாறு.

 

பெரிய கோவிலின் கல்வெட்டுக்களில்தான் தமிழகத்தில் முதன்முதலாக சமஸ்கிருதம் அச்சேறியது.

 

முன்னர் தானமளிக்கப்பட்டு களப்பிரர் காலத்தில் பிடுங்கப்பட்ட நிலங்களை மீண்டும் பார்ப்பனர்களுக்கே வழங்கியது சோழர் ஆட்சிதான்.

போரில் தோற்றவர்களில் இருந்தும், வரி கட்ட முடியாமல் போன குடியானவ வீடுகளில் இருந்தும் தகுதியான பெண்களை தெரிவு செய்து, உடலில் சூடும் போட்டு, கல்வெட்டுகளில் பெயரையும் பதிவு செய்து சுமார் 400 பேரை பெரிய கோவிலில் தேவரடியார் என்ற தாசி தொழிலில் ஈடுபடுத்தியவன் ராசராசன். மீந்த பெண்களை பெரிய கோவிலின் கொட்டாரத்தில் நெல் குற்ற அனுப்பினான்.

வரிக்கொடுமை தாங்காமல் தங்களைத் தாங்களே கோவிலுக்கு அடிமையாக விற்றுக்கொள்ளும் 12 குடும்பங்களின் கதை செங்கற்பட்டு மாவட்ட கல்வெட்டுக்களில் காணப்படுகிறது.

 

வரி கட்ட முடியாதவர்களுக்கு சிவ துரோகி என்ற பட்டமளித்து, அவர்களது நிலத்தை விற்று மைய அரசிடம் சமர்ப்பித்தது ஊர் சபை. அந்த விற்பனைக்கு ராசராசனும் அவனது தமக்கையும் பணம் அளித்ததை கல்வெட்டுகள் பல ஆதாரத்துடன் தெரிவிக்கின்றன. அந்த நிலங்கள் ஆலயத்திற்கு சொந்தமான தேவ தானங்களாகவும், பிராமணர்களுக்கு சொந்தமான பிரம்மதேயங்களாகவும் மற்றும் வேதகல்விச் சாலைகளுக்கான மானியத்திற்காக ஏற்படுத்தப்பட்ட சதுர்வேதி மங்கலங்களாகவும் பின்னர் மாற்றப்பட்டது.

 

அதே நேரத்தில் வரிகட்ட முடியாத ஏழை குத்தகை விவசாயிகள் சிவ துரோக பட்டத்திலிருந்து தப்புவதற்காகவும் தமது பெண்டிரை ஆலய தாசி வேலைக்கு நேர்ந்து விட்ட கொடுமையும் சோழர் கால பொற்கால ஆட்சியில்தான் நிகழ்ந்தது.

சோழர் காலத்தில் கிரேக்க ரோமானிய நாடுகளில் பொருள்களின் தரத்திற்கேற்ப சந்தைகளில் விலை கூவி விற்ப்பதைப் போன்று அடிமை மனிதர்கள் அவர்களின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் ஏற்ப விலைக் கூவி விற்கப்பட்டுள்ளனா. அதேபோன்று கி.பி.11-12 ஆம் நூற்றாண்டுகளில் சோழநாட்டில் அடிமைகள் விற்கப்பட்ட செய்தி பல கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. அடிமைகளில் ஆண்களும், பெண்களும் இருந்தனர்.

 

1. தாசியின் மக்கள்

2. விலைக்கு வாங்கப்பட்டோர்

3. கொடையாகப் பெறப்பட்டோர்

4. பெற்றோரால் விற்கப்பட்டோர்

5. வெள்ளளத்தின் போது பாதுகாக்கப்பட்டோர்

6. பிரமாணத்தின் மூலம் அடிமையானோர்

7. கடன் காரணமாக அடிமைப்பட்டோர்

8. போரில் பிடிப்பட்டோர்

9. சூதில் வெல்லப்பட்டோர்

10. தாமே வழிய வந்து அடிமையானோர்

11. வறுமையால் அடிமைப்பட்டோர்

12. தன்னைத்தானே விற்றுக்கொண்டவர்கள்

13. இறைவனுக்கு அடிமையானோர்

14. அடிமைப் பெண்ணை திருமணம் செய்து அதன் வழி அடிமையானோர்

15. குறிப்பிட்ட கால அடிமைகள்

 

இவ்வாறு பதினைந்து காரணங்களால் மக்கள் அடிமையாக்கப்பட்டனர். சமுதாயத்தில் இழிவானதாக கருதப்படும் பணிகளை இம்மக்களைக் கொண்டு செய்தனர். இவர்களை தாசர், தாசன், தாசி என்று மனு குறிப்பிடுகின்றது.

கி.பி.1201-ல் பஞ்சம் ஏற்பட்டபோது வாழ வழியின்றி வெ___ன் ஒருவன் தன்னையும், தன் மனைவியையும். துன் மக்களையும் 110 காசுகளுக்கு விற்றுக்கொண்டுள்ளான்.

 

கி.பி.1219-ல் 5 பெண்களும், 5 ஆண்களும் வழிவழி அடிமையாக 1000 காசுகளுக்கு விற்றுக்கொண்டுள்ளனர்;. கி.பி.1210-ல் வெ___ன் ஒருவரும் அவன் மனைவியும் 110 காசுகளுக்கு மடத்திற்கு அடிமைகளாக விற்கப்பட்டுள்ளனா;.

 

நாங்கூh; அந்தணன் ஒருவன் தன்னுடைய அடிமைகளில் பெண்கள் உட்பட 7 பேரை ஒருமுறையும் 15 பேரை மற்றொரு முறையும் விற்றுள்ளான். அத்துடன் 2 பெண்களும், 5 ஆண்களும் 30 காசுகளுக்கும் அடிமைகளாக விற்கப்பட்ட செய்தி கல்வெட்டுகளில் காணப்படுகின்றன

 

(ஆதாரம்: இராசாராசன் துணூக்குகள் நூறு வெளியீடு தமிழ்நாடு தொல்லியல் துறை / பிற்காலச் சோழர் வரலாறு பக்கம் எண்:479,480. -தி.வை.சதாசிவ பண்டாரத்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)

 

2 comments:

Dr.Anburaj said...

சுவனப்பிரியன் ஒரு தேச துரொகி . அசல் அரேபியன். ஆகவே தமிழகத்தின் பெருமையாக ஏதையும் ஒப்புக்கொள்ளாதவன. . .எந்த சிறப்பையும் பேச மறுப்பவன். .எழுத மறுப்பவன்.
ராசராசன் இறைவனின் தூதா் அல்ல. ஒரு பேரரசை நிறுவிய மாமன்னா். குடவோலை முறையைக் கொண்டு வந்தவா். சிறப்பான நல்லாட்சியை மக்களுக்கு அளித்தவன்.
அரிச்சந்திர புராணத்தில் அரிச்சந்திரன் தன் மனைவியை மகனை ஏலம் விடுவான். ஆனால் எலம் எடுத்தவன் அந்த பெண்ணை விபச்சாரியாக முடியாது. அந்த உரிமை ஏலம் எடுத்தவனுக்கு கிடையாது. குறைகள் நிறைய கொண்டவன்தான் இராசராசன். இருக்கட்டும். மேற்படி புத்தகத்தை நான் படிக்கவில்லை.
தஞ்சை பிரதீஸ்வரா் திருக்கோவில் 1000 ஆண்டுகளைத்தாண்டி இராசராசன் பெருமைகளை உலகிற்கு பறை சாற்றி வருகிறது. ஹிந்துக்களாகிய நாங்கள் அதை பெரும் சாதனையாகக் கருதுகின்றோம். புளங்காகிதம் அடைகின்றோம். பெருமை கொள்கின்றோம்.
என்னதான் குறைகள் இருப்பினும்

9 வயது சிறுமியை 53 வயது கிழவன் புணா்ந்த வரலாறு இராஜராஜன் வரலாற்றில் இல்லை.இல்லவேயில்லை.

Dr.Anburaj said...

ஹிந்து மன்னர்களின் வரலாற்றை மக்களிடம் எடுத்துச் செல்லப்போகிறோம்..!
- செய்தி.
தமிழகத்தைப் பொறுத்தவரை இவர்கள் கூறும் ஹிந்து மன்னர்கள் யாரு???🤔🤔🤔
சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள்.
இவர்களின் வரலாறுனா? எதை மக்களிடம் எடுத்துச்செல்லப் போகிறார்கள்?
பிரம்மாண்டமான கோவில்கள் கட்டியதை, அதன் கட்டுமானத்தை, அதனுடன் தொடர்புடைய பொருளாதாரத்தை, ஆன்மீகத்தை, பண்பாட்டு கலாச்சாரங்களைத்தான் மக்களுக்கு எடுத்துச் செல்லப்போகிறார்கள்.
என்னென்ன கோவில் கட்டினார்கள்?
இராமர் கோவில், சிவன் கோவில், விநாயகர் கோவில், முருகன் கோவில் இப்படி பல கோவில்கள் கட்டினார்கள்.
கோவில்கள் மட்டும்தான் கட்டினார்களா? அப்புறம் பொருளாதாரம்?
அந்த கோவில்களுடன் மருத்துவமனைகளும் கல்வி நிலையங்களும் கட்டினார்கள்.
ஓ...! ஏழை மக்களுக்கு அங்கு கல்வியும் மருத்துவமும் கிடைத்ததா?
இவை மக்களுக்கு பாரபட்சமின்றி இலவசமாகவே அளிக்கப்பட்டது. இலவசமாக இருந்தால் ஏழைகளுக்கு கிடைக்காதா என்ன?
வேற என்னென்ன பண்ணாங்க?
அவர்கள் கட்டிய கோவிலுக்கு நிலதானம் பொருள்தானம், ஆடுகள்னு தானங்கள் வழங்கி அந்த பொருட்களை பராமரிக்க ஊர் மக்களுக்கு வேலை கொடுத்தார்கள்.
வேற என்னென்ன பண்ணாங்க?
போர்க்கலை, வேதங்கள், மருத்துவம் தொடர்பான பயிற்சிகள்னு நாடும் வீடும் முன்னேறுவதற்கான அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்பட்டது.
ஓ.. கல்வி, மருத்துவம், வாழ்விற்கான பொருளாதாரம்னு எல்லாமே கொடுத்தாங்களா?
ஆமா. இதுதான் நமது மன்னர்களின் வரலாறு இதைத்தான் மக்களிடம் எடுத்துச்செல்கிறோம்னு சொல்றாங்க.
அப்புறம் எதுக்கு இதை எதிர்க்கிறாங்க?
இவர்களின் வரலாற்றை மக்களுக்கு எடுத்து சொல்லிவிட்டால்..🤔 நம் மன்னர்கள் ஏன் கோவில் கட்டினார்கள்? அதன்மூலம் என்னென்ன செய்தார்கள்? அவர்களின் இறை வழிபாடு என்னென்ன? பண்பாடு, கலாச்சாரம், மொழி னு மக்களுக்கு எல்லாமே தெரிஞ்சிருமே...
இதெல்லாம் மக்களுக்கு தெரிஞ்சா என்ன?
இதெல்லாம் மக்களுக்கு தெரிந்தால் மதமாற்றம் நடக்காது. கோவில்கள், பண்பாடு கலாச்சாரம்னு எல்லாவற்றையும் பின்பற்ற துவங்கிவிடுவார்கள். மதத்தின் பெயரில் நடக்கும் ஏமாற்று வேலைகள் மக்களிடம் செல்லாது. இந்த பாரத தேசத்தின் உண்மையான வரலாறு தெரிந்துவிடும்.
இதெல்லாம் மக்கள் பின்பற்ற துவங்கிவிட்டால் என்ன?
மிலேச்ச மதங்களுக்கு இங்கு என்ன வேலை? பெட்டி படுக்கைகளை தூக்கீட்டு கெளம்ப வேண்டியதுதான். கோவில்களையோ அதனுடன் தொடர்புடைய எதை இழிவு படுத்தினாலும் ஏறி மிதிச்சிட்டு போய்ட்டே இருப்பாங்க..
ஓ.. அதுதான் சங்கதியா? அப்போ எதிர்க்கத்தான் செய்வாங்க.
ஆமா. இவர்கள் நம் மன்னர்களின் வரலாற்றை மக்களுக்குச் சொல்லாமல் அயல்நாட்டு படையெடுப்பாளர்களை முன்மொழிவதற்கு இதுவே காரணம்.
எனில் அரசின் இந்த முன்னெடுப்பு மக்களை நல்நிலைநோக்கி எடுத்துச்செல்லும். நல்ல முயற்சி. அரசுக்கு பாராட்டுகள்...!
(பட உதவி : நன்றி இணையம்)
- பா இந்துவன்.இவரது முகநூல் அற்புதமானது.அரேபிய அடிமைகள் படிக்க வேண்டும்.