Followers

Sunday, March 06, 2022

இஸ்லாம் & ரஷ்யா

 

ரஷ்யா & இஸ்லாம்.......

 

பிரபல சர்வே நிறுவனமான Pew Research center, சென்ற வருடம் ரஷ்ய மக்களிடம் இஸ்லாம் குறித்த ஆய்வொன்றை நடத்தியது. அதில், 76% ரஷ்யர்கள் இஸ்லாம் மீது நன்மதிப்பை கொண்டிருப்பதாக தெரிவித்தனர். மக்கள் மட்டும் அல்ல, ரஷ்ய அரசியல்வாதிகளும் கூட இஸ்லாமை தங்கள் பாரம்பரியத்தின் பிரிக்கமுடியா சக்தி என்றும், தங்கள் நாட்டை கட்டமைத்ததில் கணிசமான பங்கு இம்மார்க்கத்திற்கு இருப்பதாகவும் கூறுகின்றனர். இதனாலேயே ரஷ்ய அரசியலமைப்பு இஸ்லாமிற்கு கவுரவமான இடத்தை கொடுத்திருக்கிறது.

 

ரஷ்யாவின் இன்றைய முஸ்லிம் மக்கட்தொகை 17% ஆகும் (சுமார் 2.5 கோடி). இதுவே 2050 - ஆம் ஆண்டு வாக்கில் முப்பது சதவிதத்தை தாண்டும் என கணக்கிடப்பட்டிருக்கிறது. ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் மட்டும், முஸ்லிம்களின் மக்கட்தொகை சுமார் பத்து லட்சமாகும். முஸ்லிம்கள் இல்லையென்றால் மாஸ்கோவின் பொருளாதாரத்தை நிர்வகிக்க முடியாது என இந்நகரத்தின் மேயர் ஒருமுறை குறிப்பிட்டது இங்கே கவனிக்கத்தக்கது.

 

ரஷ்யாவின் முஸ்லிம் பெரும்பான்மை குடியரசுகள் ஏழு ஆகும். செசன்யா, டகெஸ்டான், டாடரஸ்தான் ஆகியவை இதில் அடங்கும். வெளியுறவு மற்றும் ராணுவம் தவிர்த்து மற்ற அனைத்தையும் இவர்களே தீர்மானித்துக்கொள்ளலாம். ரஷ்யா குறித்த உரையாடல் என்றால் அதில் செசன்யா இல்லாமல் இருக்காது. சோவியத் உடைந்த போது தங்களையும் தனி நாடாக அறிவித்துக்கொண்டார்கள் செசன்னியர்கள். பின்னர் ரஷ்யாவுடன் இரு போர்கள். முடிவில் தங்களுடன் செசன்யாவை மறுபடியும் இணைத்துக்கொண்டது ரஷ்யா. இன்று,  ரஷ்ய அரசின் பாசிட்டிவ் அணுகுமுறைகளால், செசன்யாவில் பிரிவினைவாதம் குறைந்து அமைதி நிலவுகிறது.

 

சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய கல்வி/ஆன்மீக  நிறுவனங்கள் ரஷ்யாவில் இயங்குகின்றன. இவற்றிற்கு மானியமும் வழங்குகிறது ரஷ்ய அரசு. டாடர் இன முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் டாடரஸ்தான் குடியரசின் தலைநகரான கசன் தான் முஸ்லிம்கள் அதிகம் வாழும் இரண்டாவது பெரிய ரஷ்ய நகரமாகும் (மாஸ்கோவிற்கு முதல் இடம்). இந்நகரில் அமைந்திருக்கும் Qolsarif பள்ளிவாசல், ஐரோப்பாவின் மிகப்பெரும் பள்ளிவாசல்களில் ஒன்றாகும் (படம் 1)

 

இரு பெருநாள் தினத்துடன், மற்றொரு தினத்தையும் தேசிய விடுமுறையாக அறிவித்திருக்கிறது டாடரஸ்தான் அரசு. அது என்னவென்றால், இவர்களின் மூதாதையர் இஸ்லாமை தழுவிய நாள் தான் அது. 922 - ஆம் ஆண்டு, மே 21-ல் டாடர் இன மக்கள், பாக்தாத்-திலிருந்து வந்த முஸ்லிம் மக்களின் பிரச்சாரத்தால் இஸ்லாமை தழுவினராம். ஆகவே அந்நாளை தேசிய விடுமுறையாக கொண்டாடுகிறது இந்த குடியரசு. டாடர் இன மக்களில் ஐவரில் ஒருவர் இஸ்லாமிய மார்க்க அறிஞராக இருக்கிறார். டகெஸ்டான் குடியரசில் பல்வேறு இஸ்லாமிய பல்கலைக்கழகங்களும், மதரசாக்களும் செயல்படுகின்றன.

 

ரஷ்யாவின் Norilsk நகரில் அமைந்துள்ள நார்ட் கமால் மசூதி தான் (படம் 2), உலகின் வடக்கோடியில் அமைந்துள்ள பள்ளிவாசலாகும். இதனை டாடர் இன மக்கள் நிர்வகிக்கின்றனர். எட்டாயிரத்திற்கும் அதிகமான பள்ளிவாசல்கள் உள்ள ரஷ்யாவில் இருந்து, வருடந்தோரும் சுமார் 20,000 முஸ்லிம்கள் ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த எண்ணிக்கையை 28,000-மாக உயர்த்த வேண்டும் என தொடர்ந்து சவுதி மன்னரை வலியுறுத்தி வருகின்றனர் ரஷ்யர்கள்.

 

யாரும் எதிர்பாரா வண்ணம், இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் அமைப்பில் (OIC) சேர விருப்பம் தெரிவித்தது ரஷ்யா. தற்பொழுது OIC-யில் பார்வையாளர் அந்தஸ்த்தில் இருக்கிறது. சோவியத் ரஷ்யாவிலும், அதற்கு பின்பான ரஷ்யாவிலும் நாம் கற்றுக்கொள்ள நிறைய பாடங்கள் உண்டு. மக்கள் மனதில் ஆழமாக குடியேறிய ஒரு கொள்கையை அடக்குமுறையால் எல்லாம் வென்றுவிட முடியாது. என்றாவது ஒருநாள் அது உங்களை நிச்சயம் மிகைத்துவிடும். அப்பொழுது, அரவணைத்து செல்வது மட்டுமே உண்மையான வெற்றி என்ற நிதர்சனம் புரியவரும்.

 

படம் 1: டாடரஸ்தான் குடியரசின் தலைநகர் கசன்-னில் அமைந்திருக்கும் Qolsarif பள்ளிவாசல்.

 

படம் 2: நார்ட் கமால் பள்ளிவாசல், உலகின் வடக்கோடியில் அமைந்துள்ள மசூதி.

 

படம் 3: செசன்ய தலைநகர் க்ராஸ்னி-யில் அமைந்துள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி.

 

இப்பதிவுக்கான ஆதார ஊடகங்கள்:

Pew Research, BBC, TRT World, The Times, NewsWeek, Russian Population census & Wikipedia

 




படங்களுக்கு நன்றி:


Wikipedia & TRT World

.

தமிழில் அரபுச்சொற்கள் ..

 முஸ்லிம்கள் இந்த நாட்டை 800 ஆண்டுகள்  ஆண்டு  மக்களோடு வாழ்ந்து சென்றிருக்கிறார்கள். 

என்பதற்கான ஆதாரம் அவர்கள் நம்மிடம் விட்டு சென்ற மொழி இன்னும் நம் புழக்கத்தில்...

கீழே...👇


தமிழில் அரபுச்சொற்கள் ..

 

அசல்   أصل மூலம்.

மாஜி  ماضي  முந்தைய .

அத்து  حد  வரம்பு.

முகாம் مقام  தங்குமிடம்.

அத்தர் عطر மணப்பொருள்.

முலாம்  ملام  மேற்பூச்சு.

அமுல் عمل  நடைமுறை.

ரத்து رد  விலக்கு/நீக்கம்.

அனாமத்  أنعمت கேட்பாரற்ற.

ரசீது  رصيد  ஒப்புப் படிவம்.

அல்வா حلوه  இனிப்பு.

ராஜி  راضي  உடன்பாடு.

ஆஜர்  حاضر  வருகை.

ருஜு  رجوع  உறுதிப்பாடு.

ஆபத்து آفة துன்பம்.

ருமால் رمال  கைக்குட்டை.

இனாம்انعام  நன்கொடை.

லாயக் لائق  தகுதி.

இலாகா  علاقة  துறை.

வக்கீல் وكيل  வழக்குரைஞர்.

கஜானா  خزانة  கருவூலம்.

வக்காலத்து  وكالة  பரிந்துரை.

காலி  خالي  வெற்றிடம்.

வகையறா  وغيره  முதலான.

காய்தா  قاعدة  

தலைமை/வரம்பு.  

வசூல்  وصول  திரட்டு.

காஜி قاضي  நீதிபதி.

வாய்தா  وعده  தவணை.

கைது قيد  சிறைபிடிப்பு.

வாரிசு وارث  உரியவர்.

சவால் سؤال  

அறைகூவல்/கேள்வி  .

சர்பத் شربة குளிர்பானம்.

ஜாமீன் ضامن  பிணை.

சரத்து شرط  நிபந்தனை.

ஜில்லா ضلعة  மாவட்டம்.

தகராறு تكرار வம்பு.

தாவா دعوة  வழக்கு.

திவான் ديوان  அமைச்சர்.

பதில் بدل  மறுமொழி.

பாக்கி باقي  நிலுவை.

மஹால்  محل  மாளிகை..

ஜமாபந்தி ஒன்றுகூடல்.

ஃபிர்கா அலகு

மகசூல் محصول  அறுவடை.

மாமூல் معمول  வழக்கம்.

தாலுக்கா :تعلقة

Saturday, March 05, 2022

மனதுக்குள் சிரித்துக் கொண்டேன்.

 சவுதி ரியாத்தில் சூப்பர் மார்க்கெட்டில் பல ஆண்டுகளாக ஒரு இந்து நண்பர் ஓட்டுனராக பணி புரிந்து வந்தார். அவருக்கு சிறுநீர் கழிப்பதில் தொடர்ந்து பிரச்னையிருந்து வந்தது. நீர் பிரியும் போது ஏதோ அடைப்பு முன் பக்கம் குறுக்கிட்டு மிகவும் சிரமப்பட்டார். முடிவில் மருத்துவரை அணுகுகிறார்.

மருத்துவரோ அவரை சோதித்து விட்டு முஸ்லிம்கள் செய்வது போல் 'சுன்னத்' செய்து முன் தோலை நீக்கிக் கொள்ளுங்கள். அதுதான் இதற்கு தீர்வு என்றார் மருத்துவர். முடிவில் 50 வயதில் அவருக்கு கத்னா பண்ணப்பட்டது. தற்போது எந்த சிக்கலும் இல்லாமல் நிம்மதியாக உள்ளார்.
இந்துத்வாவாதிகள் கலவரம் பண்ணும் போது கைலி அல்லது பேண்டை அவிழ்க்கச் சொல்லி 'சுன்னத்' செய்யப்பட்டுள்ளதா என்று பார்த்து விட்டு கொல்வார்களாம். இந்த இந்து நண்பரை அவ்வாறு பார்த்தால் என்ன செய்வார்கள்? நேற்று அவரை சந்திக்கும் போது எனக்கு இந்த ஞாபகம் வரவே மனதுக்குள் சிரித்துக் கொண்டேன்.

Thursday, March 03, 2022

மாணவர் பேட்டி

 ''மோடி அரசு செய்தது நாங்கள் வந்த பஸ்ஸில் இந்திய கொடியை ஒட்டியது மட்டுமே.

ஏஜென்சி மூலம் பஸ் ஏற்பாடு செய்துகொண்டது நாங்கள்.
அமைச்சர்கள் ஷோ காட்டுகிறார்கள்.

உக்ரைன் உள்ளே மாட்டிக்கொண்டு இருப்பவர்களிடம் மீட்புப் பணியை செய்யச்சொல்லுங்கள். ''

- மாணவர் பேட்டி



ரியாத்தில் இறந்த சகோதரரின் நல்லடக்கம்..

 

ரியாத்தில் இறந்த சகோதரரின் நல்லடக்கம்...

 

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் - இறைவனிடமிருந்தே வந்தோம்: அவனிடமே திரும்ப வேண்டியவர்கள் நாம்.

 

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையைச்  சேர்ந்த சகோதரர் ஹாஜா மைதீன் அவர்கள் மாரடைப்பால் கடந்த திங்கட்கிழமையன்று இறந்து விட்டார். இன்று 03-03-2022  அல்ராஜ்ஹி பள்ளியில் தொழ வைக்கப்பட்டு நஸீம் மையவாடியில் அவரது நல்லடக்கம் நடந்தது. இவரைப் போலவே பத்து இறந்த உடல்கள் வரிசையாக கொண்டு வரப்பட்டன. இந்தியன், பாகிஸ்தானி, சவுதி, எகிப்து என்று வரிசையாக உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது. இதில் பெருமளவு நன்மை இருப்பதால் சவுதிகளும் நம் கூடவே வேலை செய்வது நெகிழ்ச்சியாக இருந்தது. ஏழை, பணக்காரன், கருப்பன், சிகப்பன் அரபியன் அரபியன் அல்லாதவன் என்ற எந்த பாகுபாடும் காட்டப்படாமல் ஒன்றாக தொழுக வைக்கப்பட்டு வரிசையாக உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. இறந்த அந்த உடலோடு நானும் ஆம்புலன்ஸில் மையவாடி வரை பயணித்தேன். இது ஒரு பயம் கலந்த புதிய அனுபவம்..

 

இறந்த சகோதரர் ஹாஜா மைதீன் ஒரு நிறுவனத்தில் அக்கவுண்டட்டாக பணி புரிந்து வந்துள்ளார். திருமணத்துக்காக பெண்ணும் நிச்சயம் செய்து வைத்துள்ளார்கள். இறைவனின் அழைப்பு எந்த வயதிலும் வரலாம்: அதற்காக நம்மை நாமே தயார் செய்து கொள்ள வேண்டும்.  இது போன்ற இறப்புகளின் மூலம் நாம் படிப்பினை பெறுவோமாக.... 

 

ஜனாஸா தொழுகை:

யார் ஜனாஸா தொழுகையில் பங்கேற்கின்றாரோ அவருக்கு ஒரு கிராஅத் நன்மையுண்டு யார் அடக்கம் செய்யப்படும்வரை கலந்து கொள்கின்றாரோ அவருக்கு இரண்டு கிராஅத்கள் நன்மை உண்டென நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது இரண்டு கிராஅத்கள் என்றால் என்ன? என வினவப்பட்டது அதற்கவர்கள் ”இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)” என்றார்கள்.


 அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி முஸ்லிம்)