Followers

Monday, June 06, 2022

சங்கிகள் சற்றே சிந்திப்பார்களாக!

 

சங்கிகள் சற்றே சிந்திப்பார்களாக!

 

நபிகள் நாயகத்தை இழிவு படுத்துவதை பொறுக்காது உலகமெங்கும் கண்டனக் குரல் எழுப்பப்படுகிறது. நமது இந்து சகோதரர்களும் 'சங்கிகள் இவ்வாறு செய்யக் கூடாது' என்று அறிவுரை கூறினர். உடனே சங்கிகள் ராமன், கிருஷ்ணன் போன்ற மற்ற இந்து தெய்வங்களை திருமாவளவன் , வீரமணி போன்றவர்கள் விமரிசிக்கிறார்களே?' என்று கேட்கின்றனர். 

 

இந்து மதத்தின் வர்ணாசிரமக் கொள்கையால் தினம் தினம் அவமானப்பட்டுக் கொண்டிருக்கும் திருமாவளவனும், வீரமணியும் அதனை விமரிசிப்பதை அவர்களின் ஆற்றாமை என்று எடுத்துக் கொள்ள வேண்டும். பெரியார் இந்த அளவு விமரிசித்ததற்குப் பிறகுதான் இந்து மதத்தில் பல சட்ட திருத்தங்களை கொண்டு வந்தனர். இனியும் கொண்டு வருவர்.

 

முன்பு தமிழர்கள் சிலை வணக்கம் இல்லாமல் சுய மரியாதையோடு வாழ்ந்து  வந்ததைத்தான் கீழடி ஆய்வுகளில் கண்டோம். 2000  ஆண்டுகளுக்கு முன்பு நமது நாட்டுக்கு ஆடு மாடுகளை ஓட்டி வந்த ஆரியர்களினால் நமது கலாசாரமே மாற்றப்பட்டது. மாற்றப்பட்ட அந்த கலாசாரத்தை மீட்டெடுக்கவே வீரமணி, திருமாவளவன் போன்றவர்கள் முயற்சிக்கின்றனர். அது அவர்களுக்கு அவசியமும் கூட..

 

ஆனால் நபிகள் நாயகத்தின் போதனையால் இன்று உலக முஸ்லிம்கள் மிகச் சிறந்த வாழ்வு முறையை பெற்றுள்ளனர்.  நாடு, மொழி, இனம், நிறம் போன்ற எந்த பாகுபாடும் இல்லாமல் இன்று ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று தங்கள் வழியில் சென்று வருகின்றனர். முஸ்லிம்களின் அழகிய வாழ்வியலை பார்க்கும் இந்துக்கள் தாங்களாகவே முன் வந்து இஸ்லாத்தை ஏற்கின்றனர். இந்து மதத்தில் பார்பனன், சூத்திரன் என்ற பாகுபாட்டை புகுத்தி கோவிலிலும் அவர்களை நுழைய விடுவதில்லை. இதனால் வெறுப்புற்று பல இந்துக்கள் இஸ்லாத்தை ஏற்கின்றனர். இதை தடுக்க வேண்டுமானால் மோடி வகையறாக்கள் இந்து மதத்தில் உள்ள சாதி பாகுபாடுகளை களைய முற்பட வேண்டும். அதை விடுத்து இஸ்லாத்தின் மேல் சேற்றை வாரி இறைப்பதால் எங்களுக்கு ஒரு நட்டமும் இல்லை. தற்போது உலக நாடுகள் கடும் கண்டனங்களை இந்தியாவை நோக்கி வீசுகின்றன. ஏற்கெனவே பொருளாதாரம் அதள பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கும் போது லட்சக்கணக்கான இந்தியர்களை வளைகுடா நாடுகள் திருப்பி அனுப்பினால் நமது நாட்டால் தாங்க முடியுமா என்பதை சங்கிகள் சிந்தித்து பார்க்க வேண்டும். இன்னும் 200 வருடங்கள் ஆனாலும் இன்னும் எத்தனை கொடுமைகளை  கட்டவிழ்த்து விட்டாலும் முஸ்லிம்கள் இஸ்லாத்தை விடப் போவதில்லை. சீனா, ரோஹிங்கியா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளாலேயே இஸ்லாத்தை முஸ்லிம்களிடமிருந்து பிரிக்க முடியாமல் தோற்று போயினர். மோடி, அமிதஷா வகையறாக்களால் மட்டும் இது சாத்தியப்பட்டு விடுமா என்ன? முடிவில் தோல்வியையே தழுவுவார்கள்.  இதனை வருங்கால வரலாறு உணர்த்தும்.

 

ஆக்கம்

சுவனப்பிரியன்

 

 

 

 

 

 

 

Sunday, June 05, 2022

சூத்திரர்களின் வீழ்ச்சிக்கு பார்ப்பனர்கள்

 

சூத்திரர்களின் வீழ்ச்சிக்கு பார்ப்பனர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பது பற்றிய எனது தனிப்பட்ட அனுபவத்தை இந்த திரியில் பகிர்ந்து கொள்கிறேன். 1986 ஆம் ஆண்டு, ஐஐடி இயற்பியல் தாளுக்கு பேராசிரியர் சங்கரன் சிறந்த பயிற்சியளிப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள அவரது குடியிருப்பில் அவரைச் சந்தித்தேன். அவர் தனது கண் கண்ணாடிகளை அகற்றிவிட்டு, அவர் கண் நோயால் அவதிப்படுவதாக கூறினார். இதனால் பயிற்சி வகுப்புகளை நிறுத்திவிட்டதாகவும் கூறினார். நான் ஏமாற்றமடைந்தேன், ஆனால் நான் முயற்சித்ததில் மகிழ்ச்சியடைந்தேன்.

 

இரண்டு நாட்களுக்குப் பிறகு, எனது பார்ப்பான் வகுப்புத் தோழன் சில நாட்களுக்கு முன்பு அதே பேராசிரியர் சங்கரனின் வகுப்புகளில் எடுத்த குறிப்புகளைக் காட்டினான் !! வகுப்புகள் நன்றாக நடக்கிறது என்றான் .

 

அந்த பார்ப்பன ஆசிரியர் ஏற்கனவே அந்தப் பாடத்துக்கு வினாத்தாள்களை அவரே அமைத்ததால் , அவரது மாணவர்களை நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற என்ன பயிற்சி கொடுக்க வேண்டும் என்பது அவருக்கு துல்லிதமாக தெரிகிறது என்றான் .

 

பாருங்கள் நண்பர்களே , பார்ப்பான் எப்படி அமைதியாக என்னை வாயிலில் இருந்து வெளியேற்றினான். என் பெயர் மற்றும் என் கருமையான தோல் நிறத்தில் இருந்து நான் ஒரு சூத்திரன் என்று அவர் முடிவு செய்திருக்க வேண்டும்.

 

இதில் கொலை, திருட்டு, சட்ட விரோதம் எதுவும் இல்லை. ஆனால் ஒரு பிரகாசமான பையனின் எதிர்காலத்திற்கு பார்ப்பான் செய்த தீங்கு அளவிட முடியாதது.

 

Kaali

 

@Kaali67800508

 

 


Saturday, June 04, 2022

அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்!

 

சாதி கொடுமைகளிலிருந்து விடுதலை பெறுவதற்காக போராடி சிறை சென்ற பின்பு, இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட நீல புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆகிய டி.எம் மணி என்கின்ற உமர் பாருக் அவர்களின் உருக்கமான உரை செந்தமிழ் நாட்டுச் சேரிகள் என்ற புத்தகத்திலிருந்து...

 

நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு ஓராண்டுக்கு மேல் ஆகி விட்டது. இப்போது என் பெயர் உமர் பாரூக். நான் ஒரு தீண்டத்தகாதவன் என்ற உணர்வு என்னை விட்டுப் போய்விட்டது. இதனால் எனது தலித் சேவை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. இஸ்லாம் ஒரு உண்மையான சீர்திருத்த மார்க்கம். ஆகவே நீங்களும் நான் இந்து இல்லை என்று அறிவியுங்கள்.

 

அடுத்து உங்களை ஏற்றுக் கொள்ள இன்னொரு சமூகம் தேவைப்படுகிறது. தமிழக அளவில் இரண்டு சமூகங்கள் உங்களை வரவேற்க தயார் நிலையில் உள்ளது.

ஒன்று கிறிஸ்தவம், மற்றொன்று இஸ்லாம். கிறிஸ்தவம் உங்களை அன்புடன் அழைத்தாலும் தலித் என்ற கொடுமை அங்கே தொடர்கிறது ஆனாலும் இந்து பள்ளன் பறையன் ஐ விட ஒரு கிருஸ்துவ பள்ளர் பறையருக்கு ஒரு ஆறுதல் இருக்கின்றது.

 

தலித் கிருத்துவர்கள் கடும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிற பொழுது அந்த குருமார்கள் வந்து ஆறுதல் அளிப்பார் அவ்வளவுதான். ஆனால் இஸ்லாம் அப்படி அல்ல. நீங்கள் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட அடுத்த வினாடியே உங்களை தொடர்ந்த இழிவு நீங்கி விடுகிறது. நீங்கள் மனிதனாக மதிக்கப்படுவீர்கள். நீங்கள் இஸ்லாமியர் என்ற அடையாளத்துடன் இருந்தாலே அந்த சமூகம் ஆதரவு கரம் நீட்ட தொடங்கிவிடுகிறது. நெஞ்சோடு நெஞ்சாக ஆரத் தழுவிய அரவணைத்துக் கொள்கிறது, இடைவெளியில்லாமல் இணைத்துக் கொள்கிறது.

 

உங்களுடைய ஒருவேளை பசியையும் அவர்கள் பொறுத்துக் கொள்வதில்லை. பள்ளிவாசல் என்பது ஒரு கருணை இல்லமாக இருக்கிறது. அல்லாஹ் உங்களை அன்போடு ஏற்றுக் கொள்கின்றான். ஏக இறைவன் உங்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றான். கருணைக் கடலில் மிதக்க வைக்கின்றான். ஆம்!

 

உங்கள்மீது சுமத்தப்பட்ட தீண்டாமை என்னும் கரையை துடைத்தெடுத்து விடுகின்றான். அம்பேத்கர் வடித்த கண்ணீர் துடைக்க படுகிறது. அண்ணலின் லட்சியம் நிறைவேற்றப்படுகிறது. அடிமைப்பட்ட அவரின் மக்கள் அதிகாரம் பெற்றவர்களாக சமூக சம உரிமை பெற்றவர்களாக மாற்றப்படுகிறார்கள்.

அம்பேத்கரின் லட்சியம் நிறைவேற ஒவ்வொரு சிந்தனை பெற்ற மனிதனும் சேரியை விட்டு வெளியேறுங்கள். அதன்பின் உங்கள் உழைப்பின் உபரி உங்களின் சொந்தங்களுக்கு போய் சேரட்டும் . உங்கள் உள்ளமும் உணர்வும் நீங்கள் கடமைப்பட்டவர்களின் உயர்வில் இருக்கட்டும். இஸ்லாம் இதற்கு என்றென்றும் தடையாக இருக்காது. இஸ்லாமியரின் இந்த அடையாளமான தாடியை, தொப்பியை எவ்வித தயக்கமின்றி ஏற்றுக் கொள்ளுங்கள்.

 

அல்லாஹு அக்பர் ! அல்லாஹு அக்பர் !

 

என்று உரக்க கூவுங்கள்.

 

அந்த அற்புத முழக்கம் அந்த ஓர் ஏக இறைவனின் காதுகளில் உரக்க ஒலிக்கும்.

உங்களை 2000 ஆண்டுகள் அடிமைப்படுத்தி வைத்திருந்த உங்கள் எதிரிகள் காதுகளுக்கு அழைப்பு ஒலியாக இருக்கட்டும்.

 

அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! அஸ்ஸலாமு அலைக்கும் ...




 

உபி - மொஹபா மாவட்டம் - ராம் நகர்

 உபி - மொஹபா மாவட்டம் - ராம் நகர்


'பிறப்பது ஆனைத்தும் பெண் குழந்தைகள். ஆண் குழந்தையை ஏன் பெறுவதில்லை?' என்று கூறி குடும்ப உறுப்பினர்கள் அந்த பெண்ணை நடு ரோட்டில் போட்டு உதைக்கின்றனர். மக்களும் அவர்கள் குடும்ப பிரச்னை என்று வேடிக்கை பார்க்கின்றனர். எப்படிப்பட்ட கல் நெஞ்சர்கள் மத்தியில் வாழ்கிறோம்.


இது தான் ராம ராஜ்யமா?