Followers

Friday, September 04, 2009

பென்டகானில் இஃப்தார் நிகழ்ச்சி!



இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில்தான் அருளப்பட்டது. அது மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். பொய்யை விட்டு உண்மையை பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். இறைவன் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான். சிரமமானதை உங்களுக்கு நாட மாட்டான்.
-குர்ஆன் 2:1185


இறைவன் விடுத்த கட்டளையை உலக முஸ்லிம்கள் அனைவரும் கடை பிடித்து வருகின்றனர். பென்டகானும் இஃப்தார் நிகழ்ச்சிக்கான கதவை முதன்முறையாக திறந்து விட்டுள்ளது. அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் அனைத்து முஸ்லிம்களுக்காவும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை பென்டகான் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. ஜமால் பதானி என்பவரின் மேற்பார்வையில் இந்நிகழ்ச்சி ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. சுமார் 200க்கும் அதிகமான முஸ்லிம்கள் தங்களின் குடும்பத்தோடு கலந்து கொண்டிருந்தனர்.

முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் அல்லாதவருக்கும் புரிந்துணர்வு ஏற்பட இது போன்ற நிகழ்ச்சிகள் பெரிதும் துணை புரிகின்றன. அங்கு வந்த அதிகாரிகளின் வாக்கு மூலத்தை இனி ஆங்கிலத்திலேயே படிப்போம்.

“Tonight is a true representation of what American stands for,” said Nihad Awad, the head of Washington-based Council on American-Islamic Relations, “and for what all Americans can do for themselves and others in this country.” Navy’s Abuhena M. SaifelIslam, who led the Maghreb prayer said it was important to hold Iftarin the Pentagon, which was struck by terrorists in September 2001. “The Pentagon has its own gravity; it would probably lose the significance if we don’t hold it here in the Pentagon.”
But he admitted the event was becoming so popular it was becoming crowded. This was not only due to direct invitations, but also to the fact that “the Iftarinvitation was displayed throughout the Pentagon, so anybody working here — including non-Muslims — could attend if they wanted to.”
தந்தை பெரியாரும் தன் கடைசி காலத்தில் தான் எப்படி இறக்க வேண்டும் என்பதை சொல்லிச் சென்றதை சமீபத்தில் படித்தேன். அதையும் கீழே இணைக்கிறேன்.

முஸ்லிமாகச் சாவேன்: ஈ.வே. ரா அறிக்கை!

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-
‘‘நான் சாவதற்கு சில நிமிடமிருக்கும் வரையிலும் இந்த ஜாதி, மத, புராணப் புரட்டுகளை ஒழிக்கப் போராடி சாகுந்தருணத்தில் முஸ்லிமாகத்தான் சாவேன்.

ஏனென்றால் நான் செத்த பிறகு என் சொத்துக்களை, என்னை மோட்சத்திற்கு அனுப்புவதான புரட்டுகளால் என் சந்ததியாரை ஏமாற்றிப் பறிக்கப்படாமலும், அவர்கள் மூடநம்பிக்கையிலீடுபடாமலிருக்கச் செய்யவும்தான் நான் அவ்வாறு செய்யத் தீர்மானித்திருக்கின்றேன்.

நான் செத்தபிறகு என் சந்ததியார் என்னை மோட்சத்திற்கனுப்பப்படுமென்ற மூடநம்பிக்கையினால் பார்ப்பனர் காலைக்கழுவி சாக்கடைத் தண்ணீரை குடிக்காமலிருக்க செய்ய வேண்டுமென்பதற்காகவும்தான் நான் முஸ்லிமாகச் சாவேன் என்கிறேன். (திராவிடன் 05-08-1929)

இஸ்லாம் மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமென்றும்,
இஸ்லாம் மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமென்றும், பகுத்தறிவின் பரிச்சைக்குவிட்டு அதன்படி நடக்கத் தயார் என்றும் முஸ்லிம்கள் இன்று தைரியமாகச் சொல்லுகிறார்கள்.

அந்தப்படிச் சொல்ல மற்ற மதக்காரர்களுக்கு ஏன் தைரியமில்லை?

எனெனில் திரு. முகம்மது நபி கொள்கைகள் அனைத்தும் அநேக விஷயங்களால் அது பகுத்தறிவுக்கு நிற்கத்தக்க யோக்கிதையுடையதாய் இருக்கின்றது. -

குடி அரசு. ஆக. 23, 1931.

அனைவருக்கும் இதயம் கனிந்த ரமளான் நல் வாழ்த்துக்கள்.

5 comments:

Anonymous said...

சவுதி-அரேபியா,ஈரான், பாக்கிஸ்தான் போன்ற முஸ்லிம்கள் நாடுகளில் இந்த மாதிரி பிற மத நிகழ்ச்சிகளை அரசு நடத்தாது. ஆனால் அமெரிக்கா எனும் கிறுத்துவ பெரும்பான்மை நாட்டில் முஸ்லிம் மத நிகழ்ச்சி, அதுவும் 9/11 க்குப்பின் நடை பெறுவதைப் பார்க்கும் போது அமெரிக்கர்களின் மத சகிப்புத்தனமை கண்டு நெஞ்சம் நெகிழ்கிறது.

suvanappiriyan said...

அனானி!

சவூதி அரேபியா நூறு சதவீதம் இஸ்லாமியர்களைக் கொண்ட நாடு. மேலும் இஸ்லாத்தை தங்கள் வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் கடைபிடிக்கும் மக்களை கொண்ட நாடு.

அமெரிக்கா பெயரளவுக்கு கிறித்தவம் என்று சொன்னாலும் கிறித்தவ மதத்தை தங்கள் வாழ்வில் கடைபிடிப்பவர் ஐந்து சதம் கூட தேறாது. மேலும் அமெரிக்கா கிறித்தவ மதத்தை அடிப்படையாக கொண்டு நடக்கும் நாடும் அல்ல. எனவே இரண்டையும் போட்டு நாம் குழப்பிக் கொள்ளக் கூடாது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Anonymous said...

//சவூதி அரேபியா நூறு சதவீதம் இஸ்லாமியர்களைக் கொண்ட நாடு. மேலும் இஸ்லாத்தை தங்கள் வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் கடைபிடிக்கும் மக்களை கொண்ட நாடு//


சவூதி அரேபியா 100% முஸ்லிம் நாடானது எப்படி? ரொம்ப சிம்பிள்! அங்கு வாழும் முஸ்லிம்கள் மதசகிப்புதன்மையோடு, மற்ற மதத்தவரையெல்லாம் போட்டுத்தள்ளி விட்டு, மற்ற மதத்தை கடை பிடித்தால் 'மவனே காலி' என்று சொல்லிவிட்டதால்தானே? இந்த புத்திசாலித்தனம் அமெரிக்க கிறித்தவனுக்கு இல்லையே!

//அமெரிக்கா பெயரளவுக்கு கிறித்தவம் என்று சொன்னாலும் கிறித்தவ மதத்தை தங்கள் வாழ்வில் கடைபிடிப்பவர் ஐந்து சதம் கூட தேறாது. மேலும் அமெரிக்கா கிறித்தவ மதத்தை அடிப்படையாக கொண்டு நடக்கும் நாடும் அல்ல.//

தவறு ஐயா... அமெரிக்காவின் கிறுத்தவர் எண்ணிக்கை 78%. மேலும் 62% மக்கள் மதத்தை மிகவும் முக்கியமானதாக கருதுபவர்கள் மற்றும் சர்சுக்கு போய் வழிபாடு செய்பவர்கள். ஐரோப்பியர் போல அல்ல அமெரிக்கர்கள். அதுவும் தென் மாநிலங்களில் 80%க்கும் மேற்பட்டோர் கடவுள் நம்பிக்கை உடைய கிறுத்துவர்கள்.

அமெரிக்காவில் முஸ்லிம் எண்ணிக்கை ஒரு சதவீதம் கூட இல்லை (0.7%). ஆனால் அவர்களையும் ஆதரிக்கும் அமெரிக்கர்கள் பாராட்ட தகுந்தவர்கள்தானே?

suvanappiriyan said...

//மற்ற மதத்தவரையெல்லாம் போட்டுத்தள்ளி விட்டு, மற்ற மதத்தை கடை பிடித்தால் 'மவனே காலி' என்று சொல்லிவிட்டதால்தானே? இந்த புத்திசாலித்தனம் அமெரிக்க கிறித்தவனுக்கு இல்லையே!//

எந்த ஒரு மார்க்கத்தையும் கட்டாயப்படுத்தி எவருக்கும் திணிக்க முடியாது. பயத்தினால் வரும் பற்று ஒரு நாளிலோ, ஒரு மாதத்திலோ, ஒரு வருடத்திலோ மறைந்து விடும். 'மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை' என்று குர்ஆனே கட்டளை இடுகிறது. முகமது நபி இறக்கும் தருவாயில் ஒரு யூதரிடம் அடமானததிற்கு கடன் வாங்கியிருந்தார் என்று அறிகிறோம். அந்த நேரத்தில் முகமது நபி ஒரு ஆட்சியாளர். எனவே எல்லோரையும் போட்டுத் தள்ளி இஸ்லாத்தை வளர்த்தனர் என்பது தவறான வாதம்.

நம் பெரியாரே இஸ்லாமியனாக இறக்க ஆசைப்பட்ட செய்தியை மேலே படித்திருப்பீர்கள். அவரை யார் வற்புறுத்தினர் என்று கொஞ்சம் தெரிந்தால் சொல்லுங்களேன்.

//அமெரிக்காவில் முஸ்லிம் எண்ணிக்கை ஒரு சதவீதம் கூட இல்லை (0.7%). ஆனால் அவர்களையும் ஆதரிக்கும் அமெரிக்கர்கள் பாராட்ட தகுந்தவர்கள்தானே?//

கண்டிப்பாக பாராட்ட வேண்டும். இதில் மாற்று கருத்து இல்லை.

Anonymous said...

//மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை' என்று குர்ஆனே கட்டளை இடுகிறது// எத்தினை காலத்திற்கு இந்த கதையை சொல்லிக் கொண்டிருப்பீர்கள். எல்லா இஸ்லாமியர்களும் குரான் சொல்கிறபடி தான் வாழ்கிறீர்களா? இன்றைக்கு சவுதியை சேர்ந்த ஒருவர் தன் விருப்பபடியே வேறு மதத்துக்கு மாறினால் அவர் உயிரோடு இருக்க முடியுமா. உங்கள் பல்லவியை கொஞ்சம் மாற்றி படுங்கள்