Followers

Thursday, September 03, 2009

சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெறலாமா?

சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெறலாமா?

கேள்வி: சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெறும் முறைக்கு இஸ்லாத்தில் அனுமதி உள்ளதா? முந்தய காலத்தில் தாய் அல்லாத மற்ற பெண் மூலம் குழந்தைக்கு பால் கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது. பால் கொடுப்பதன் மூலம் அந்தப் பெண் தாய் அந்தஸ்தை அடைந்தாலும் தந்தைக்கும் அந்தப் பெண்ணுக்கும் எந்த உறவும் உடல் ரீதியாக ஏற்படுவதில்லை. பால்குடி முறையும் சோதனைக் குழாய் முறையும் ஒன்று போல் தோன்றுகிறதே? விளக்கவும்.

பதில்: சோதனைக் குழாய் மூலம் குழந்தைப் பெறுவதில் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. கணவனின் உயிரணுவை எடுத்து, செயற்கை முறையில் மனைவியின் கரு முட்டையுடன் சேர்த்து சோதனைக்குழாயில் வளர்த்து அதை மனைவியின் கருவறையில் செலுத்துவது ஒரு முறையாகும்.

ஒரு பெண்ணுக்கு அவளது கணவன் அல்லாத வேறொரு ஆணிடமிருந்து உயிரணுவை எடுத்து அதனுடன் அவளது கரு முட்டையைச் சேர்த்து குழந்தை பெற வைப்பது மற்றொரு முறையாகும்.

கணவன், மனைவி ஆகிய இருவரும் அல்லாத வேறு ஆண், பெண்ணிடமிருந்து உயிரணு, கருமுட்டையை எடுத்து அதை குழந்தையில்லாத பெண்ணின் கருவில் வளர்ப்பது மூன்றாவது வழிமுறையாகும். இவற்றில் முதலாவது வழிமுறைக்கு மட்டுமே இஸ்லாத்தில் அனுமதி உள்ளது.

'உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்கள், உங்கள் விளை நிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்'
குர்ஆன் 2:223


'உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்கள்' என்ற சொற்றொடர் மூலம் கணவனின் உயிரணுவை எடுத்து செயற்கை முறையில் மனைவிக்குச் செலுத்தலாம் என்றும் கணவன் அல்லாத மற்றவர்களின் உயிரணுவை எடுத்து இவ்வாறு செய்வது கூடாது என்றும் விளங்கலாம்.

பால்குடித் தாய் முறை என்பது இஸ்லாம் அனுமதித்த ஒன்றாகும். கருவறையில் அடுத்த ஆணிண் கருவைச் சுமப்பதற்கு இஸ்லாம் அனுமதிக்கவில்லை. எனவே இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து இஸ்லாமியச் சட்டத்தைத் தீர்மானிக்கக் கூடாது.

நன்றி:ஏகத்துவம் மாத இதழ்

2 comments:

Anonymous said...

nalla pathivu
-Guthoose

Anonymous said...

Assalamu alaikkum,
Superb, Good post
by mdfathah