சமீப காலமாக சவூதி அரேபிய அரசாங்கம் பங்களாதேஷிலிருந்து பணிக்கு ஆட்கள் எடுப்பதை நிறுத்தி விட்டது. சவூதி நாட்டவர் பங்காளிகளை அதிகம் விரும்புவதில்லை. மேலும் அவர்களில் பெரும்பான்மையோர் பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதும் அதிகமான குற்ற செயல்களில் ஈடுபடுவதும் கூட முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அரசாங்கம் விசாக்களை நிறுத்தி ஆறு மாதத்துக்கு மேல் ஆகிறது. ஆனால் புதிய பங்காளிகளின் வருகை மட்டும் குறைந்த பாடில்லை. இது எனக்கு ஆச்சரியமாகப் படவே புதிதாக வந்த ஒரு பங்காளியிடம் இது விஷயமாக பேசிப்பார்த்தேன். அவன் சொன்ன விஷயம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
நான்: அரசாங்கம் உங்களுக்கான விசாக்களை அடியோடு நிறுத்தி விட்டது. பிறகு உங்கள் நாட்டவர் எப்படி புதிது புதிதாக வருகின்றீர்கள்?
பங்காளி: இது தெரியாதா? உங்கள் நாட்டுக்கும் எங்கள் நாட்டுக்கும் உள்ள எல்லையோர மாநிலங்களான திரிபுரா,அஸ்ஸாம் போன்றவற்றின் காட்டுப் பகுதிகள் வழியாக இந்தியாவிற்க்குள் நுழைந்து விடுவோம். அங்கிருந்து மும்பையிலோ அல்லது வேறு எல்லையோர மாநிலத்திலிருந்தோ பாஸ்போர்ட் எடுத்து இந்தியனாக வந்து விடுவோம்.
நான்: நீங்கள் எல்லையைக் கடக்கும் போது ராணுவத்தினர் சோதனையிடுவதில்லையா?
பங்காளி: நாங்கள் எல்லையைக் கடப்பது அதிகமாக இரவு நேரங்களில். அப்படியே ராணுவத்தின் கண்ணில் பட்டால் 5000 மோ 10000 மோ கொடுத்து ஊடுருவி விடுவோம். எங்களைப் போன்றோருக்கு பாஸ்போர்ட் எடுப்பதற்க்காகவே நிறைய ஏஜண்டுகள் உள்ளனர்.
நான்: சரி. கள்ள பாஸ்போர்ட் எடுத்து வந்து விடுகிறீர்கள். திரும்பவும் சவூதியிலிருந்து உங்கள் நாட்டுக்கு எப்படி திரும்பி போவீர்கள்?
பங்காளி: வந்த வழியேதான். சவூதியிலிருந்து மும்பை செல்வோம். பிறகு அங்கிருந்து பஸ்ஸில் திரிபுரா, அஸ்ஸாம் பயணிப்போம். அங்கிருந்து இரவில் எல்லையைக் கடப்போம்.
அடப் பாவிகளா! இது என்ன தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் போகிற பயணமா? எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் அவன் சொன்ன செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இது போன்ற ஊடுருவல்காரர்களால் நம் நாட்டுக்கு மிகப் பெரும் ஆபத்து காத்திருக்கிறது. இவர்களை பயன்படுத்தி சமூக விரோதிகளும் பணத்தில் கொழிக்கிறார்கள். நம் நாட்டின் உள் துறை அமைச்சகம் தூங்குகிறதா என்ன? சிதம்பரம் பொறுப்பு எடுத்த பிறகும் இதே நிலைதான்.
இதில் இன்னொரு பிரச்னையும் இருக்கிறது. பிற்காலத்தில் இவர்களை களை எடுக்கிறேன் என்ற போர்வையில் நம் நாட்டு பூர்வ குடிகளையும் அரசாங்கத்தால் சந்தேகிக்கப்படலாம். முன்பு மும்பையில் இது போன்ற ஒரு பிரச்னையை நம் நாட்டு பூர்வ குடிகளே சந்தித்து இருக்கிறார்கள்.
சவூதிக்கான இந்திய தூதரும் இதற்கான முயற்சியை எடுக்க வேண்டும். சிறுபான்மையினரின் நலன் காப்பது என்பதையும் வேறு நாட்டவர் நம் நாட்டில் கள்ளத்தனமாக குடியேறுதல் என்பதையும் ஒன்றாக போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் அரசு உடன் ஆவண செய்ய வேண்டும்.
3 comments:
//நம் நாட்டின் உள் துறை அமைச்சகம் தூங்குகிறதா என்ன? சிதம்பரம் பொறுப்பு எடுத்த பிறகும் இதே நிலைதான். //
சுவனப்பிரியன் அய்யா,
நம் நாட்டின் உள்துறை தூங்குகிறதே என்ற ஆதங்கத்தில் எழுதியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.
ஆனால் தூங்குவது உள்துறை மட்டுமல்ல.வெளித் துறையும்,பாதுகாப்பு துறையும் இன்னும் ஷோக்காக தூங்குகின்றன அய்யா.இதுல வேடிக்கை என்னவென்றால் வேலைக்காக சவுதிக்கு செல்லும் பங்க்ளாதேஷ் (இந்திய)ஆசாமிங்களை விட ஆயிரக்கணக்கில் ஓட்டுக்காக அசாமில் குடியேற்றப்ப்டும் பங்ளாதேஷ் (இந்திய) கும்பலின் எண்ணிக்கை மிக மிக அதிகம்.என்ன செய்வது?நாட்டுப் பற்று என்ற சமாசாரம் கிஞ்சித்தும் இல்லாத ஓட்டு வங்கி கட்சியாக காங்கிரஸ் மாறிப் போனது நம்து துரதிர்ஷ்ட்டமே.
பார்க்கலாம் நம்ம ஊர் சஞ்சயும்,விஜய் அய்யாவும் இது பற்றீ ஏதாவது செய்வாங்க்ளா என்று.
பாலா
பாலா!
//இதுல வேடிக்கை என்னவென்றால் வேலைக்காக சவுதிக்கு செல்லும் பங்க்ளாதேஷ் (இந்திய)ஆசாமிங்களை விட ஆயிரக்கணக்கில் ஓட்டுக்காக அசாமில் குடியேற்றப்ப்டும் பங்ளாதேஷ் (இந்திய) கும்பலின் எண்ணிக்கை மிக மிக அதிகம்//
இதுவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இது போன்ற குடியேற்றங்களால் உள் நாட்டு மக்களுக்கு வேலை கிடைப்பது அரிதாகி விடுகின்றது. சாதி மதத்துக்கு அப்பால் இந்த பிரச்னையை அணுக வேண்டும். காங்கிரஸை குறை கூறுகிறீர்கள். பி.ஜே.பி யும் இதே தவறை செய்கிறது. பங்களாதேஷிலிருந்து இடம் பெயர்ந்த முஸ்லிம்களை திருப்பி அனுப்ப வேண்டும். இந்துக்கள் இங்கேயே இருந்து கொள்ளலாம். பிரச்னை இல்லை என்ற நிலைப்பாடுதான் பி.ஜே.பி க்கும். எனவே அனைவருக்கும் கிடைக்கும் ஓட்டைப் பற்றித்தான் கவலை. நாட்டைப் பற்றி அல்ல.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//இந்துக்கள் இங்கேயே இருந்து கொள்ளலாம். பிரச்னை இல்லை என்ற நிலைப்பாடுதான் பி.ஜே.பி க்கும். எனவே அனைவருக்கும் கிடைக்கும் ஓட்டைப் பற்றித்தான் கவலை. நாட்டைப் பற்றி அல்ல.//
ஏற்றுக்கொள்ள வேண்டிய கருத்து.
பாலா
Post a Comment