Followers

Saturday, February 26, 2011

சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா!





சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா ( Cheraman Perumal )என்பவர் இஸ்லாம் மதத்தை ஏற்ற முதல் இந்தியர் ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம் கொடுங்கலூரில் கட்டப்பட்டது. சேரமான் பெருமாள் ஜுமா மசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதியே உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும்.


சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா கி.பி எட்டாம் நூற்றாண்டில் தொன்மையான சேர வம்சத்தை ஆண்டு வந்த தமிழ் மன்னன் ஆவார். இவரது ஆட்சியின் கீழ் இன்றைய கேரள மாநிலமும் தமிழகத்தின் தென் பகுதியும் இருந்தது. அப்போது சேர நாடு அரபியார்களுடன் வியாபார கப்பல் தொடர்பை கொண்டிருந்தது. பல்வேறு கிறிஸ்தவ மதத்தினரும் யூத மதத்தினரும் அப்போது சேர நாட்டுக்கு வந்துகொண்டு இருந்தனர்.

நிலவை பிரிக்கும் அதிசயம்

மெக்காவில் முகம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாம் மதத்தை மக்களிடையே அறிமுகம் செய்திருந்தனர். இந்த நிலையில் ஒரு நாள் இரவு தனது மாளிகையில் நிலவை ரசித்துக்கொண்டு இருந்த சேரமான் பெருமாள் அவர்கள், திடீரென்று நிலவு இரண்டாக பிரிந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார்கள். இந்த அதிசய நிகழ்வை பற்றி அவர்கள் பலரிடமும் விசாரித்தார்கள். அப்போது சேர துறைமுகத்துக்கு வந்த ஒரு அரபியார் கூட்டம் ஒன்று அது பற்றி தங்களுக்கு தெரியும் என கூறியதை கேட்டு, அவர்களை தங்கள் அரண்மனைக்கு வரவழைத்து விசாரித்தார்கள். அப்போது அவர்கள் தங்கள் நாட்டில் இறைதூதர் ஒருவர் தோன்றி இருப்பதாகவும். அவர் பெயர் முகம்மது (ஸல்) எனவும், அவரே இறைமறுப்பாளர்களை நம்பவைப்பதற்காக இந்த 'நிலவை பிரிக்கும் அதிசயத்தை' நடத்தியதாகவும் கூறக்கேட்டனர். இதில் மிகவும் ஆர்வம் ஏற்பட்ட சேரமான் பெருமாள் அவர்கள் அந்த அரபியார்களிடம் தான் முகம்மது நபி (ஸல்) அவர்களை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும், அதனால் தன்னையும் மெக்காவுக்கு அழைத்து செல்லுமாறும் கேட்டார்கள். ஆனால் அப்போது ஈழத்துக்கு பயணப்படுவதற்கு ஆயத்தமாயிருந்த அந்த அரபியார் கூட்டம் தங்கள் திரும்பி வரும்பொழுது சேரமான் பெருமாள் அவர்களை மெக்காவுக்கு அழைத்து செல்வதாக வாக்களித்தனர்.

இஸ்லாத்தை ஏற்றல்

தனது ராஜ்ஜியததை பல்வேறு பிரிவுகலாக பிரித்த சேரமான் பெருமாள் அவர்கள், அதை தனது மகன்களுக்கும் உறவினர்களுக்கும் பகிரிந்து கொடுத்தார் (அதில் ஒரு பிரிவினர் 'கொச்சின் ராயல் பேமிலி' என்ற பெயரில் இன்றளவும் கேரளாவில் வாசித்து வருகின்றனர்). அதன் பிறகு சேரமான் பெருமாள் அவர்கள் திரும்பி வந்த அராபிய கூட்டத்தாருடன் மெக்கா கிளம்பி சென்றனர். அங்கு முகம்மது நபி (ஸல்) அவர்களை நேரில் பார்த்த சேரமான் பெருமாள் அவர்கள் அங்கேயே இஸ்லாம் மதத்தை ஏற்றார்கள். மேலும் முகம்மது நபி (ஸல்) அவர்களால் தாஜுதீன் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பெற்றார்கள். மேலும் 3 நாட்கள் அங்கு தங்கி இருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றிய அவர்கள் முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு தாங்கள் கொண்டுவந்த ஊறுகாயை அன்பளிப்பாக கொடுத்தார்கள். இதை நபி தோழர்களில் ஒருவரான அபு சயீத் அல் குத்ரி கூறியதாக ஹக்கிம் என்பவர் தனது நூலான அல் முஸ்தராக் என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார் இந்தியாவிலிருந்து முகம்மது நபி (ஸல்) அவர்களை பார்க்க வந்திருந்த ஒரு மன்னர் ஒரு ஜாடீ நிறைய ஊறுகாய்கலை கொடுவந்திருந்தார். அதில் இஞ்சி சேர்க்கப்பட்டு இருந்தது. அதை முகம்மது நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தனர். அதில் எனக்கும் ஒரு துண்டு கிடைத்தது."

இறப்பு

சேரமான் பெருமாள் அவர்கள் அங்கேயே ஜித்தாஹ் (jeddah) தேசத்து மன்னரின் தங்கையை மனம் முடித்தார். அதன் பிறகு இஸ்லாம் மதத்தை இந்தியாவில் பரப்பும் பொருட்டு நபி தோழர்களில் ஒருவரான மாலிக் பின் தீனார் (ரலி) என்பவரின் தலைமையில் பல போதகர்களை அழைத்துக்கொண்டு நாடு திரும்பினார். ஆனால் திரும்பும் வழியிலேயே ஓமன் நாட்டில் உள்ள சலலாஹ் துறைமுகத்தில் (Salalah Port,Oman) நோய் வாயப்பட்டு இறந்தார். அவருடைய உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.

மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களின் குழு சேர நாட்டை அடைந்தது. அங்கு மன்னர் குடும்பத்தை சந்தித்த அவர்கள் சேரமான் பெருமாள் அவர்கள் இறப்பதற்கு முன்பு எழுதி இருந்த கடிதத்தை கொடுத்தனர். அதில் சேரமான் பெருமாள் அவர்கள் தங்கள் குடும்பத்தார்களுக்கு இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கு மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவுமாறும் அதற்காக பல மசூதிகளை காட்டுமாறும் பனித்திருந்தனர். அதை ஏற்று மன்னர் குடும்பமும் இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கும் மசுதிகளை காட்டுவதற்கும் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவியது. அதன் பேரில் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்கள் கி.பி 612-ல் கொடுங்கலூரில் முதல் மசூதியை கட்டினார். அதன் பிறகு மேலும் பல மசூதிகளை வட கேரளம் மற்றும் காசர்கோடு (கர்நாடகா) பகுதிகளிலும் காட்டினார்.

சில தகவல்கள்

  • சேரமான் பெருமாள் இஸ்லாம் மதத்தை ஏற்ற முதல் இந்தியர் மற்றும் தமிழர் ஆவார்.
  • சேரமான் பெருமாள் ஜுமா மசூதி தான் இந்தியாவின் முதல் மசூதி மற்றும் உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும். (உலகின் முதல் ஜுமா மசூதி மதினாவில் உள்ளது)
  • சேரமான் பெருமாள் அவர்களது சமாதி இன்றும் ஓமான் நாட்டில் உள்ள ஜாபர் துறைமுகத்தில் (இன்றைய சலாலா) இந்திய மன்னர் சமாதி என்ற பெயரில் உள்ளது
  • சேரமான் பெருமாள் மற்றும் மாலிக் பின் தீனார் (ரலி) ஆகிய இருவரது சமாதியும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளது.
  • a b William Logan, Malabar Manual, Asian Educational Services, 1996 ISBN 8120604466, 9788120604469
  • saheehain al mustadrak reported by Al Imam Al Hafiz Abi Abdillah AL HAKIM -vol 4 chap 33 kitabul ath’ama page 241
  • The Land of the Permauls. Cochin, Its Past and Its Present 1863. Chapter 2. Page 44, The Last "Permaul." Dr. Francis Day.

-நன்றி விக்கிபீடியா

THRISSUR: President A. P. J. Abdul Kalam will visit the Cheraman Juma Masjid at Kodungallur, near here, considered to be the first mosque in the subcontinent, on July 29.

According to the president of the Mosque Committee V. A. Ibrahim, the President has responded to an invitation sent by the committee two months ago.

``This is the first time that an Indian President is visiting the mosque. It is a historic occasion,'' Mr. Ibrahim says.

The President is expected to arrive at the mosque at 5.45 p.m. and spend 25 minutes there.

He will meet mosque committee officials, address the gathering and leave at 6.10 p.m.

The mosque is believed to have been established in 629 AD by Malik Bin Dinar, a contemporary of Cheraman Perumal.

Belief goes that Perumal had gone to Mecca, met Prophet Mohammed and embraced Islam. Perumal fell ill as he returned from Mecca.

Malik Bin Dinar and a few others reached Kodungallur and showed the rulers letters written by Perumal about his new religious experiences. Dinar and his associates were allowed to construct a mosque.

When Dinar, who was the chief priest (Ghazi) of the mosque, left for Arabia, his nephew Habib Bin Malik took over.

The mosque is believed to have been renovated in the 11th and 18th centuries AD. In 1974, an extension was built.

``The mosque has been visited by a galaxy of celebrities, including theologians from different parts of the world,'' says Mr. Ibrahim.

`Vidyarambham' (initiation into world of letters) ceremonies have been held in the mosque, Hindu style, in the past four years.

-நன்றி தி ஹிந்து நாளிதழ்

கல்கியில் கண்ணதாசன் 'சேரமான் காதலி' என்ற வரலாற்றுத் தொடரை எழுதினார். படிக்கும் காலங்களில் இத் தொடரை தொடர்ந்து படித்து வந்தேன். உலகின் இரண்டாவது ஜூம்ஆ பள்ளி நம் நாட்டில் உள்ளதுதான் என்ற செய்தி எனக்கு புதிதாக இருந்தது. சேரமான் பெருமாளைப் பற்றி வேறெதுவும் சரித்திரக் குறிப்புகள் இருந்தால் நண்பர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.


அரசாட்சி, சுகபோக வாழ்க்கை அனைத்தையும் உதறி தள்ளி விட்டு முகமது நபியைக் காண புறப்பட்ட சேரமான் பெருமாள் போற்றப்பட வேண்டியவர். படிக்கும் காலங்களில் ஒவ்வொரு வருடமும் வரலாற்று பாடத்தை நான் படித்திருந்தாலும் ஒரு வருடம் கூட சேரமான் பெருமாளைப் பற்றிய குறிப்புகளை என்னால் பார்க்க முடியவில்லை. ஒருக்கால் நம் சரித்திர ஆசிரியர்களுக்கு சேரமானின் வரலாறு தெரியவில்லையோ என்னமோ! :-(

'அந்த நேரம் நெருங்கி விட்டது. சந்திரனும் பிளந்து விட்டது. அவர்கள் சான்றைக் கண்டால் 'இது தொடர்ந்து நடக்கும் சூனியம்' எனக் கூறி புறக்கணிக்கின்றனர்.'

-குர்ஆன் 53:1,2

Friday, February 25, 2011

நாடு திரும்பிய மன்னர் அப்துல்லாஹ்!


அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து நலமுடன் மன்னர் அப்துல்லாஹ் நாடு திரும்பியுள்ளார். குடிமக்கள் அனைவரும் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். 'தான் நலமுடன் இருப்பதாகவும் நாட்டை முன்னெடுத்துச் செல்வதில் முன்பு போல் உற்சாகமாக பணியாற்றுவேன்' என்றும் மக்களுக்கு செய்தி கொடுத்திருக்கிறார் மன்னர். மன்னரின் குடும்பத்தின் மகிழ்ச்சியில் நாமும் பங்கு பெறுவோம். இறைவன் அவருக்கு உடல் நலத்தையும் இறைத் தூதரின் வழிகாட்டுதலையும் முன்புபோல் என்றும் வழங்குவானாக!

அரப் நியூஸில் வந்த ஒரு வாசகர் கடிதம்:

MARGOT

Report abuse

My dear Saudis, I watched the arrival of King Abdullah on TV and have to say I never saw something like it. This was so great and touching. Such a reception and such a warm, warm welcome - just beautiful. All his people on the street cheering and it was just beautiful to watch. See, in the West (I am from Germany) you do not see something like that. Nowadays the people rather run from the politican we have. Since today, I envy you for your King Abdullah. He is a great King and thanks to Allah/God that he recovered so fast from his operation. Long live the KING,.

---------------------------------------------------------------------------------

என்னைப் பொறுத்தவரையில் எனக்கு உலகக் கல்வியை கொடுத்தது இந்தியாவாக இருந்தாலும், மார்க்க கல்வியை சவூதி அரேபியா வந்துதான் கற்றுக் கொண்டேன். இதற்கு முன்னால் இஸ்லாம் என்றால் தமிழகத்திலுள்ள தர்ஹாக்களும், அங்கு நடக்கும் சந்தனக் கூடு வைபவங்களும் அதை யொட்டி நடக்கும் கச்சேரிகளும்தான் இஸ்லாம் என்று எண்ணியிருந்தேன். இறந்து போனவர்களுக்கு மார்க்க அறிஞரை கூட்டி வந்து பாத்திஹா ஓதுவதும் ஏழாம் நாள், நாற்பதாம்நாள், இறந்தவர் பெயரில் சாப்பாடு ஆக்குவதும் முகமது நபி பெயரில் பாடல்களை பாடுவதும், மீலாது நபி கொண்டாடுவதும்தான் இஸ்லாம் என்று நம்பியிருந்தேன். ஒருமுறை முத்துப் பேட்டை சென்றபோது 60 அடியில் ஒருவரை புதைத்து தர்ஹா என்ற பெயரில் கட்டிடத்தையும் எழுப்பியிருந்தார்கள். தமிழகத்தில் இஸ்லாம் நுழைந்து 1000 வருடங்கள்தான் ஆகிறது. இந்த கால கட்டத்தில் இவ்வளவு உயரமாக எந்த மனிதனும் இருந்திருக்க முடியாது. பிறகு எவ்வாறு இந்த சமாதியை உண்டாக்கினார்கள் என்ற கேள்வி என்னுள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இதைப் பற்றி கேள்வி கேட்டால் இறைவன் கோபித்துக் கொள்வானோ என்று நினைத்து யாரிடமும் கேட்பது கூட இல்லை.

ஆனால் சவுதி வந்தவுடன் நான் தமிழகத்தில் பார்த்த அத்தனை காட்சிகளுக்கும் நேர்மாறாக சவுதிகளின் நடவடிக்கையை பார்த்தேன். இங்கு எந்த இடத்திலும் தர்ஹாவின் சுவடு கூட தெரியவில்லை. முகமது நபியைக் கூட மண்ணைக் கொண்டுதான் அடையாளப்படுத்தி இருக்கிறார்கள். யாரும் முகமது நபியின் அடக்கத்தலத்தைப் பார்த்து பிரார்த்தனையில் ஈடுபட்டால் அருகில் இருக்கும் காவலர் வந்து பள்ளியில் சென்று இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமாறு அவர்களை பணிப்பதை பார்த்தேன். முகமது நபி பிறந்த இந்த நாட்டில் மீலாது நபி கொண்டாடப்படுவதில்லை. அவரை வாழ்த்தி குறிப்பிட்ட நாட்களில் புகழ்பாக்களும் பாடப்படுவதில்லை. ஆனால் அவர் எதை எல்லாம் இஸ்லாம் என்று சொன்னாரோ அதை நடை முறை படுத்தி வருகின்றனர் சௌதிகள். ஒவ்வொரு தொழுகை நேரத்திலும் அனைத்து பள்ளிகளிலும் கார்கள் அணிவகுத்து நிற்கும். சில நேரங்களில் பள்ளியின் அருகில் பார்கிங் கிடைக்காமல் பலரும் திண்டாடுவதை பார்க்க முடியும். தொழுகை நேரத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்படுகின்றன. ஒரு ஜிஎம்ஸி வண்டியில் 'தொழுகை நேரம் வந்து விட்டது. தொழுகைக்கு வாருங்கள்' என்று சொல்லிச் செல்லும் முத்தவாக்களை(அழைப்புப் பணியில் ஈடுபடுவோர்)பார்க்க முடியும்.

இது எல்லாம் அன்று எனக்கு புது அனுபவங்கள். இஸ்லாத்தின் மேல் பிடிப்பு இல்லாமல் இருந்த எனக்கு பிறகு தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மேலிட தொடங்கியது. அரசு நடத்தும் 'அழைப்பு வழிகாட்டல் மையத்தில்' சேர ஆரம்பித்தேன். ஆசிரியர்களாக நிறைய இலங்கை தமிழ் முஸ்லிம்கள். பல சந்தேகங்களும் தெளிவடைந்தது. சில சந்தேகங்களை திரு பி.ஜெய்னுல்லாபுதீனுடன் தொலை பேசியிலும், புத்தகங்கள் ஒலி,ஒளிநடாக்கள், இணையம் மூலமாகவும் தெரிந்து கொண்டேன்.

இந்த மையத்துக்கு ஒருமுறை ம்ன்னரின் உறவினர் அமைச்சர் வலித் பின்தலாலின் தம்பி வருகை புரிந்தார். உலகிலேயே பெரும் பணக்காரர்களில் ஒருவரின் தம்பி எங்களோடு மிகவும சந்தோஷமாக ஐந்து மணி நேரத்தைக் கழித்தார். எங்கள் அனைவரிடமும் கைகுலுக்கி நலமும் விசாரித்தார். 'அழைப்புப் பணியின் அவசியம்' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் 20 நிமிடம் உரையாற்றினார். சாப்பாட்டு நேரமும் வந்தது. பாதுகாப்பு காரணம் கருதி அவருக்கு சாப்பாடு தனியாக ஒரு இடத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள். 'இது அரசு விழா அல்ல....மார்க்கம் சம்பந்தப் பட்ட விழா' என்று கூறி நாங்கள் ஐந்து ஐந்து பேராக உட்கார்ந்த இடத்தில் அவரும் வந்து உட்கார்ந்து கொண்டார். நாங்கள் கை வைத்த சாப்பாட்டின் கறியின் சில பகுதிகளை அவரும் கை வைத்து மிகவும் ருசித்து சாப்பிட்டது நெகிழ்ச்சியாக இருந்தது. இது போன்ற ஒரு நிலை மக்களாட்சி நடக்கும் நம் நாட்டில் கூட காண்பது அரிது. இங்கு மன்னராட்சி நடந்தாலும் ஒரு மக்களாட்சியில் என்ன ஒரு குடிமகனுக்கு கிடைக்க வேண்டுமோ அது அனைத்தும் தாராளமாக கிடைக்கிறது. எந்த வகை ஆட்சியாக இருந்தாலும் அது மக்களுக்கு நன்மைபயக்கக் கூடிய ஆட்சியாக இருக்க வேண்டும்.

பஹ்ரைனில் கூட மன்னருக்கு ஆதரவாக இந்தியர்களும்,பாகிஸ்தானிகளும், பங்களாதேஷிகளும் களத்தில் நேற்று இறங்கி இருப்பதாக செய்திகள் வருகிறது. நம் தூதரகம் தடுத்தும் நம் மக்கள் மன்னருக்கு ஆதரவாக அணி திரளுவது ஆச்சரியமாக இருக்கிறது. இத்தனை வருடம் குடும்பத்தோடு எந்த பிரச்னையும் இல்லாமல் அமைதி வாழ்க்கை வாழும் இந்தியர்கள் இங்கு ஜனநாயகம் மலர்வதை விரும்பவில்லை என்பதை கவனிக்கவும்.

துனீஷியா,எகிப்து,லிபியா போல் சவுதியிலும் புரட்சி வராதா என்று இஸ்லாமிய எதிரிகள் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். துனீஷியா,எகிப்து,லிபியா,ஏமன் போன்ற நாடுகளையும் சவுதி போன்ற நாடுகளையும் ஒரே கண்ணோட்டத்தோடு பார்க்க முடியாது. அங்கு மக்கள் அரசை எதிர்த்தார்கள். சவுதி அரேபிய மக்களோ மன்ரையும் அரசையும் மதிக்கிறார்கள். எனவே இஸ்லாமிய சட்ட திட்டங்கள் முழுமையாக அமுல்படுத்தப்பட இந்த மன்னராட்சி அவசியம் இந்த நாட்டுக்கு தேவை. மன்னர் அப்துல்லாவுக்கும் அவரது அமைச்சர்களுக்கும் இஸ்லாமிய வழியில் என்றும் நிலைத்து நின்று சிறந்த ஆட்சியை குழப்ப மற்ற ஆட்சியை இறைவன் வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

'இறைவா! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவு படுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.' - குர்ஆன் 3:26

Wednesday, February 23, 2011

கலைஞரே! இது நியாயமா?


இன்று தமிழக அரசுக்கு உள்ள கடன் தொகை தற்போதய நிலவரப்படி ஒரு லட்சம் கோடியை தாண்டி விட்டது. இவை அனைத்தும் இலவச திட்டங்களால் வந்ததாக பொருளாதார நிபுணர்கள் அறிக்கை சமர்ப்பிக்கிறார்கள். அன்பழகனோ இலவச திட்டங்கள்தான் பலரின் வயிற்றைக் கழுவுகிறது. எனவே அதை குறை சொல்லாதீர்கள் என்கிறார். தமிழக அரசு போடும் இலவச திட்டங்களில் சத்துணவை தவிர மற்ற அனைத்து திட்டங்களும் விழலுக்கு இறைத்த நீர்தான். யாருக்கும் எந்த பயனையும் இந்த இலசவ திட்டங்கள் ஏற்ப்படுத்தப் போவதில்லை.

இலவச கலர் டிவி கொடுக்கச் சொல்லி யார் அழுதது? சினிமா நடிகர்களுக்கு இலவச மனைகளாம். கோடிகளில் புரண்டு கருப்புப் பணத்திலேயே வாழ்க்கையை ஓட்டி இளைய சமுதாயத்தை கெடுத்து தொலைக்கும் இந்த கூத்தாடிகளுக்கு ஏழைகளின் வரிப் பணத்தில் இலவச வீடு. இது நியாயமா கலைஞரே!

மணி மண்டபங்கள், பல தலைவர்களுக்கும் சிலைகள் என்று கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டுகிறீர்கள். இந்த மணிமண்டபங்களால் பொது மக்களுக்கு ஏதும் பயன் இருக்கிறதா? இதற்கு ஒதுக்கக் கூடிய பணத்தை கிராமங்கள் தோறும் குளங்களை தூர்வாரி வீணாக கடலில் கலக்கும் மழை நீரை சேகரிக்கக் கூடாதா? ஒரு பகுத்தறிவாதி சிலைகளை திறக்கலாமா? அதற்கு சென்று மாலை போட்டால் அதற்கு விளங்குமா? பெரியாரின் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு இன்று மஞ்சள் துண்டோடு வலம் வருகிறீர்களே! கலைஞரே இது நியாயமா?

எண்ணிக்கையிலேயே அடங்க முடியாத அளவுக்கு உங்கள் அமைச்சர் ராஜா ஊழல் பண்ணியது உங்களுக்கு தெரியாமல் நடந்திருக்குமா? 'நானும்,கண்ணதாசனும் ஆரம்ப காலங்களில் சென்னையில் சிங்கிள் டீயை பகுதியாக்கி குடிப்போம். அவ்வளவு வறுமை' என்று முன்பு எங்கோ படித்தது ஞாபகம் வருகிறது. இன்று ஆசியாவில் உள்ள பணக்காரர்களில் நீங்களும், உங்கள் குடும்பமும் வருகிறதே! அனைத்தும் கதை வசனம் எழுதிதான் வந்ததா! மெய்யாலுமா கலைஞரே!

எவ்வளவுதான் பணம் இருந்தாலும் பசி தீரும்வரைதான் சாப்பிட முடியும். தூங்குவதற்கு ஆறடி இடம் போதும். உடுத்திக் கொள்ள வேட்டியும் சட்டையும் ஒருவனுக்கு ஐந்து ஆறு செட்கள் இருந்தாலே போதும். தங்குவதற்கு ஒரு வீடு இருந்தால் போதும். ரோட்டிலே கிடக்கும் குப்பனுக்கும் சுப்பனுக்கும் எது தேவையோ அதுதான் உங்களுக்கும் தேவை. எனவே இத்தனை கோடிகளை வைத்துக் கொண்டு அதுவும் இந்த தள்ளாத வயதில் என்ன சுகத்தை அனுபவித்து விடப் போகிறீர்கள்? எனவே தேவைக்குப் போக பாக்கி சொத்துக்களை எல்லாம் அரசாங்கத்திடமே கொடுத்துடு ராசா! உங்கள் மேல் உள்ள பிரியத்தில்தான் சொல்கிறேன். சரி கொடுக்க மனது இல்லா விட்டாலும் இனிமேலாவது லஞ்சம் இல்லாத ஒரு ஆட்சியை வழங்க ஸ்டாலினுக்கு அறிவுரையாவது வழங்கக் கூடாதா? உங்களை தூக்கி எறிந்து விட்டு அந்த அம்மாவை உட்கார வைக்கலாம் என்றால் அதுவோ மதம் முழுங்கி மகாதேவன். தமிழ்நாட்டையே வித்துட்டு அந்தம்மா கர்நாடகாவுல போய் உட்கார்ந்திரும். அந்தம்மா திரும்பவும் ஆட்சிக்கு வர நீங்களே வழி வகுக்கலாமா? இது நியாயமா கலைஞரே!

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர் நின்று

போற்றினும் பொத்துப் படும்.

-திருக்குறள்

கலைஞரே! போதும் இலவச திட்டம்!

நாட்டுக்குத் தேவை நீண்ட கால திட்டம்!

அது இல்லையேல் தமிழர்கள் சேர்ந்து

கொடுப்பார்கள் உமக்கு திண்டாட்டம்!:-)


படிக்கும் காலங்களில் டி.ராஜேந்தர் படம் பார்த்ததின் பாதிப்பு.

மதம் சம்பந்தமாகவே பதிவுகள் தருகிறீர்களே! நாட்டு நடப்பையும் சேர்த்துக் கொள்ளக் கூடாதா என்று என் நண்பர் கேட்டார். அதன் விளைவு பிறந்தது சமூக அக்கறையுடன் ஒரு பதிவு.

Thursday, February 17, 2011

ஹஜ் கடமை பற்றிய பெரியாரின் சந்தேகம்!



பெரியார் 1931 ஆம் ஆண்டு நபிகள் நாயகம் விழாவில் கலந்து கொண்டு பேசியிருக்கின்றார். மறுநாள் தந்தை பெரியார் அவர்களிடம் சிலர் கேள்வி கேட்டனர்.

இஸ்லாமியர்கள் மக்காவுக்குச் செல்கிறார்களே அது மூடநம்பிக்கை இல்லையா? காசி, ராமேஸ்வரம் போவதை மட்டும் மூடநம்பிக்கை என்று சொல்லுகிறீர்களே என்று கேட்டார்கள். பெரியார் அவர்களிடம் மூடநம்பிக்கைகளைப் பற்றிக் கூறினார்.

பிறகு ஒருமுறை ஈரோடு வந்த அப்துல் சமது அவர்களுடைய தகப்பனார் மவுல்வி அப்துல் ஹாஜி அவர்களிடம் பெரியார் இது பற்றி என்ன கருத்து சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். அப்பொழுது மவுல்வி அப்துல் சாகிப் சொன்னார். மக்கா என்பது புனிதத் தலம் அல்ல. மகம்மது நபி பிறந்த இடம். அது ஒரு வரலாற்றுச் சின்னம். அந்த வரலாற்றுச் சின்னத்தைப் பார்க்கவும், நடை, உடை, நாகரிகம் இவைகளைப் பார்த்து வரத்தான் செல்கிறார்கள். இதைத்தாண்டி யாராவது புனிதத்தலம் என்று சென்றால் அது அவர்களுடைய அறியாமையைத்தான் காட்டும் என்று பதில் சொன்னார்.

-மீலாது மாநாட்டில் திரு கி. வீரமணி அவர்களின் உரை. 14-02-2011


தமிழ் ஓவியா வின் பதிவில் இந்த செய்தி வந்ததும் நான் முன்பு செய்த ஹஜ் கடமைகள் எனக்கு ஞாபகம் வந்தது. அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நாங்கள் அனைவரும் சவூதி அரசாங்கம் நடத்தும் 'இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டுதல் மையம்' சார்பாக ஹஜ் பயணத்தை தொடங்கினோம். எங்கள் குரூப்பில் சரவணன்(அப்துல்லா), பிரசாத்(சாத்) மற்றும் 20 சவூதிகள்,40 பிலிப்பைனிகள், மற்றும் பாகிஸ்தான் இந்தியர்கள் என்று ஐந்து வேன்களில் புறப்பட்டோம். இதில் சரவணன் ராமநாதபுரத்தை சேர்ந்தவர். மீசை கூட இன்னும் சரியாக முளைக்கவில்லை. சவூதி வந்தவுடன் இங்குள்ள வாழ்க்கை முறையைப் பார்த்து விரும்பி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர். வழியில் அவர் தாய் தனக்கு எழுதிய கடிதத்தைக் காண்பித்தார். அதில்'சரவணா! என்னடா இப்படி பண்ணிட்டே! நான் உன்னை பெற்ற அம்மாடா! எங்களை எல்லாம் விட்டுட்டு போய்டுவியாடா? தீவிரவாதியாகவெல்லாம் மாறிடாதேப்பா!.........' என்று எழுதிய கடிதத்தைப் பார்த்தவுடன் எனக்கும் அந்த தாயின் மன நிலையைப் பார்த்து சங்கடமாக இருந்தது. பத்திரிக்கைகளும் சினிமாக்களும் இஸ்லாம் என்றால் 'தீவிரவாதம்' என்ற கருத்தை எந்த அளவு விதைத்திருக்கிறார்கள் என்பதை அந்த தாயின் கருத்திலிருந்து தெரிந்து கொண்டேன். 'சரவணா! நீ இஸ்லாத்துக்கு வந்தாலும் உன் தாயின் அன்பை இழக்கக் கூடாது. அவர்கள் உன்னை ஆளாக்கியவர்கள். அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நீ கண்டிப்பாக செய்ய வேண்டும். முகமது நபியும் அதைத்தான் வலியுறுத்துகிறார்' என்றேன். 'கண்டிப்பாக! நான் என் பெற்றோரை விட்டு விட மாட்டேன்' என்றார் சரவணன்.

இனி ஹஜ்ஜில் உள்ள சில செய்கைகளையும் அது எவ்வாறு மனிதனின் எண்ணங்களில் மாற்றங்களை ஏற்படுத்தகிறது என்பதையும் பார்க்கலாம்.

1.ஆபிரஹாமின் மகன் இஸ்மாயிலுக்கு தண்ணீர் தேடி இரண்டு மலைகளுக்கு இடையே ஓடுகிறார் அன்னை ஹாஜர். அதை நினைவு படுத்தும் முகமாக இரண்டு மலைகளுக்கு இடையில் உலக மக்கள் அனைவரும் ஓட வேண்டும்.

ஒரு தாய் அன்று தண்ணீர் இல்லாமல் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என்பதை உலக மக்கள் உணருவதற்காக நீங்களும் ஓடுங்கள் என்ற கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. உலக மக்கள் அனைவரும் 24 மணி நேரமும் இரண்டு மலைகளுக்கும் இடையே ஓடி அதை இன்றும் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

2.முஜ்தலிஃபா என்ற இடத்தில் ஒரு இரவு முழுவதும் தங்க வேண்டும். அதுவும் திறந்த வெளியில் தங்குவது சிறப்பு.

இங்கு எங்களோடு வந்த சவூதி கோடீஸ்வரர்களும் எங்களோடு ஒன்றாக திறந்த வெளியில் பனியில் தூங்கியது புதிதாக வந்த அனைவருக்கும் ஆச்சரியத்தை உண்டாக்கியது. பிலிப்பைனிகள் இந்த செய்கைகளை எல்லாம் பார்த்து ஆச்சரியமடைந்தனர். ஏஸி,பஞ்சு மெத்தைகள்,பணிவிடைக்கு பல ஆட்களும் வைத்துக் கொண்டு ராஜ வாழ்க்கை வாழும் இவர்களை நாங்கள் தூங்குவது போல் காலி மைதானத்தில் தூங்க வைத்து அதன் சிரமங்களை உணர வைத்தது இந்த கடமை.

3.அரஃபா மைதானத்தில் தங்கி இறை வணக்கத்தில் ஈடுபடுதல்.

ஹஜ்ஜூக் கடமைகளில் மிக முக்கிய இடத்தை வகிப்பது அரஃபாவில் பெரும் மைதானததில் தங்கி இறை வணக்கத்தில் ஈடுபடுவது. இங்கு வெயிலில் மலைகளின் மேல் நின்று பலரும் பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள். இறைவன் இங்கு கேட்கும் பிரார்த்தனைகளை உடன் அங்கீகரிக்கிறான் என்பதால் பலரும் பலமணி நேரம் நின்று அழுது பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள். அவர்களில் வயதானவர்கள் பலரும் களைப்புற்று விடுவார்கள் என்பதால் தண்ணீர்,மோர்,ஜூஸ் போன்ற பானங்களை இலவசமாக மக்களுக்கு அங்கு அரசும் வினியோகிக்கும். எங்கள் குரூப்பில் பல செல்வந்தர்கள் நன்கொடையாக 7000 ரியால்(80000 ரூபாய்) இதற்காக தநதனர். அந்த பணத்தில் பானங்களை வாங்கிக் கொண்டு எங்களில் 10 பேர் இலவசமாக வினியோகிக்க கிளம்பினோம். சரவணனும் கூட வந்தார். சிறு வயது என்பதால் மலைகளின் மேல் அங்கும் இங்கும் ஓடி அவர் பல வெளிநாட்டவருக்கும் பானங்களை வினியோகித்தக் காட்சி சிறப்பாக இருந்தது. 'முகமது நபி நின்று பிரார்த்தித்த இடத்தில் நானும் நின்று பிரார்த்திப்பதை நினைத்து பெருமையடைகிறேன்' என்றார் சரவணன்.

4.கஃபாவை ஏழு முறை வலம் வர வேண்டும்.

வாகனம் இல்லாமல் நடந்து செல்வது எந்த அளவு சிரமத்தை கொடுக்கும் என்பதை உணரும் முகமாக இறைவனின் பெருமையை உரத்த குரலில் கூறி அனைவரும் ஏழு முறை கஃபாவை சுற்றி வர வேண்டும். இது போல் இரண்டு மூன்று தடவைகள் ஒவ்வொரு ஹாஜிகளும் செய்ய வேண்டும். மொத்தத்தில் அனைவரும் தங்களின் உடல் உழைப்பை ஒரு வித சந்தோஷத்தோடு செய்வதைப் பார்க்கலாம். மிகவும் வயதானவர்கள் இவ்வளவு தூரம் நடக்க சிரமிருந்தால் அதற்காக பணம் கொடுத்து ஆட்களையும் நியமித்துக் கொள்ளலாம்.

5.கைகளால் நெய்யப்பட்ட வெள்ளை துண்டுகள் இரண்டை ஆண்கள் மேலும் கீழும் உடுத்திக் கொள்ள வேண்டும். பெண்கள் சாதாரண உடையிலேயே இருக்கலாம்.

வெள்ளையன்,கறுப்பன்,ஆசியன்,ஆப்ரிக்கன்,ஐரோப்பியன் என்று அனைவரும் நெய்யப்படாத இரண்டு ஆடைகளை மேலும் கீழும் உடுத்திக் கொள்ள வேண்டும். மனிதர்கள் அனைவரும் சமம். எவரும் உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ இங்கு கிடையாது என்பதை இந்நிகழ்ச்சி நமக்கு உணர்த்துகிறது. தொழும் போது ஆப்ரிக்கனின் காலடியில் ஐரோப்பியனின் தலை இருக்கும். ஒருநாள் ஐந்து வேளையும் ஒருவன் தொழுதால் தான் என்ற கர்வம் அவன் மனதிலே எழுமா? இந்த தொழுகைதான் முஸ்லிம்களை வர்ண பேதம் பார்க்காமல் தடுத்து வைக்கிறது.

6.மினாவில் மூன்று நாள் தங்க வேண்டும்.

கூடாரம் அடித்து மூன்று நாட்கள் இங்கு தங்க வேண்டும். தொழுகைக்கு பிறகு ஒரு பிலிப்பைனியை பேச சொன்னார்கள். 'நான் போதையிலும நைட் கிளப்புகளிலும் எனது நேரத்தை பிலிப்பைனில் செலவிட்டேன். எனது அம்மாவை சில நேரங்களில் அடித்தும் இருக்கிறேன். இன்று நான் ஒரு புது மனிதன். நான் ஒரு புது மனிதன் என் தாயே என்னை நீ மன்னிப்பாயா...' என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே அழ ஆரம்பித்து விட்டார். ஆயிரக்கணக்கான நபர்களிடமிருந்தும் எந்த சப்தமும் இல்லாமல் நிசப்தமே நிலவியது.

இந்த செய்கைகளை எல்லாம் பிரசாத்(சாத்) உன்னிப்பாக கவனித்து குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தார். ஹைதராபாத்தை சேர்ந்த இவர் ஒரு சாஃப்ட் வேர் இன்ஜினியர். இவருடைய தாய் ஹார்ட் பேசண்ட் என்பதால் இதுவரை தான் முஸ்லிமாக மாறியதை வீட்டுக்கு தெரிவிக்கவில்லை. இரண்டு முறை ஊருக்கு சென்று வந்து விட்டாலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஊருக்கு சென்றால் ரூமை தாளிட்டுக் கொண்டுதான் தொழுது கொள்வார். அம்மாவோடு கோவிலுக்கு சென்று விட்டு அந்த நேரத்தில் ஏதாவது சாக்கு சொல்லி விட்டு விக்கிரகங்களை வணங்குவதிலிருந்து தவிர்ந்து கொள்வார். ஒரு அண்ணன் டாக்டர்.தங்கை டீச்சர். மிகவும் ஆச்சாரமான குடும்பம். தங்கையின் கல்யாணம் முடிந்து அம்மாவையும் சரி செய்தவுடன்தான் தனது கல்யாணத்தைப் பற்றி யோசிப்பேன் என்று என்னிடம் சொன்னார். கம்பெனி மாற்றலாகி மலேசியா சென்று விட்டார். அதன்பிறகு என்ன நிலை என்று தெரியவில்லை. சிலருக்கு இந்த இஸ்லாம் பரம்பரையில் இலகுவாக கிடைத்து விடுகிறது. சாதைப் போன்றவர்கள் இந்த மார்க்கத்துக்குள் நுழைவதற்காக எத்தனை தியாகங்கள் செய்ய வேண்டி இருக்கிறது என்று நினைத்துப் பார்த்தேன். ஒரு தலைமுறை மட்டும் இவரைப் போன்றவர்களுக்கு மிகுந்த சோதனைக் காலம். இவருடைய வாழ்வும் சரவணன்(அப்துல்லா) உடைய வாழ்வும் பெற்றோரையும் அனுசரித்து தனது மார்க்கத்திலும் சிறந்து விளங்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டும். நாமும் பிரார்த்திப்பொம்.

நம் நாட்டில் வீடற்ற ஏழைகள் கிடைப்பதை சாப்பிட்டுக் கொண்டு உடல் உழைப்பையும் கொடுத்து ரோட்டோரத்தில் சுருண்டு படுத்து கிடப்பார்கள். இது போன்ற ஏழைகளின் உழைப்பும், அசதியும், சுகாதாரக் குறைவும்,தூக்கமும்,பசியும் எப்படி இருக்கும் என்பதை செல்வந்தர்களும் உணர வேண்டும், உலக மக்கள் அனைவரும் ஒருதாய் மக்கள் என்பதையும் உணர வேண்டும், ஆபிரஹாமின் வழித் தோன்றல்கள் பட்ட கஷ்டங்களை உணர வேண்டும் என்பதற்காகவுமே இத்தகைய வணக்கங்களை இஸ்லாம் வலியுறுத்துகிறது. அத்தகைய நன்மக்களாக உங்களையும் என்னையும் இறைவன் ஆக்கி அருள்புரிவானாக!


அகிலத்தின் நேர் வழிக்காகவும் பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் மக்காவில் உள்ளதாகும். அதில் தெளிவான சான்றுகளும் மகாமெ இப்றாஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் இறைவனுக்காக ஹஜ் செய்வது சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை.

-குர்ஆன் 3:96,97

Tuesday, February 15, 2011

பசும்பால் சைவமா அல்லது அசைவமா?


பொதுவாக,மாமிசம் சாப்பிடுபவர்கள், சாப்பிடாதவர்களை நோக்கி, பசும்பால் பசுவின் ரத்தத்தில் உற்பத்தியாவது தானே! அதைக் குடிக்கும் நீங்கள் மாமிசம் சாப்பிடும் எங்களை ஏதோ பாவம் செய்து விட்டது போல பார்க்கிறீர்களே! என்று கேலியோ, விதண்டாவாதமோ பேசுவார்கள்.பசுவுக்கு மட்டும் தான் இறைவன் ஒரு அரிய குணத்தைக் கொடுத்திருக்கிறான், ஒரு பசுவிடம் உற்பத்தியாகும் பால் முழுவதையும் கன்றால் குடிக்க முடியாது. அதனால், மிஞ்சும் பாலை மனிதர்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பசுவின் பாலைக் கறப்பதற்கு காம்புகளை இழுக்கும் போது அதற்கு வலிக்குமோ என்று நமக்கு தோன்றும். ஆனால் எதற்கு எவ்வித துன்பமும் ஏற்படுவதில்லை. சந்நியாசிகளின் உணவில் பால் முக்கிய இடம் பெறுகிறது. காரணம் அது நற்குணத்தை வளர்க்கும் பானமாக இருக்கிறது. மேலும், எந்த ஜீவனையும் இம்சை செய்து பெறப்படாததாக இருக்கிறது. ஆட்டையோ, மாட்டையோ வெட்டி அதைத் துடிதுடிக்கச் செய்து சாப்பிடுவது தான் அசைவம். துன்பமேயின்றி கிடைக்கும் பசும்பால் அசைவ வகையில் சேராது.


-நன்றி தினமலர்

:-))))))))))))))

தமிழகத்திலும் வெளிநாடுகளிலும் பரவலாக படிக்கப்படும் ஒரு பத்திரிக்கையின் செய்திதான் இது. இருந்தாலும் தமிழன் இவ்வளவு சோதனைகளையும் தாங்கிக் கொண்டு முன்னேறுவது ஆச்சரியப்படத்தக்க ஒன்றுதானே!


எந்த ஒரு கொள்கையும் உலக மக்கள் அனைவரும் கடைபிடிக்கக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். புலால் உண்ணாமை என்பது ஏதோ மிகப் பெரிய அறம் போன்று செய்தி பரப்பப்படுகிறது. துருவப்பிரதேசங்களில் வாழக் கூடியவர்கள் கய்கறிகளை மட்டுமே சாப்பிட வேண்டும் என்றால் அவர்களால் உயிர் வாழ முடியாது.

அடுத்து மனிதர்கள் உணவாக சாப்பிடும் ஆடு,மாடு,கோழி,ஒட்டகம்,மீன் போன்ற உயிரினங்கள் உலக அளவில் எண்ணிக்கையில் குறையக் காணோம். அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது. இவை எல்லாம் புலால் உண்ணுபவர்களால் உபயோகப்படுத்தாமல் விட்டால் இவைகளின் எண்ணிக்கை அதிகரித்து சுற்று சூழலுக்கு பிரச்னையாகி விடும். முடிவில் ஆஸ்திரேலியாவில் கங்காருகளின் எண்ணிக்கை அதிகரித்து அவைகளை சுட்டுக் கொல்ல் அரசு ஆணையிட்டது போல்தான் எங்கும் நடக்கும். பாதிபேர் புலால் உண்ணுவதால்தான் காய்கற்களின் விலை ஒரு மட்டுக்குள் இருக்கிறது.

அனைவரும் சைவத்துக்கு மாறி விட்டால் உணவுத் தட்டுப்பாடும் ஏற்படும்.

விலங்குகளின் உடம்பிலிருந்து பெறப்படும் பால் சைவம்தான் என்பதற்க்கு அறிவியல்பூர்வமாக எந்த ஆராய்ச்சியையும் தினமலர் வெளியிடவில்லை.

எனவே காய்கறிகளை விரும்பி சாப்பிடுபவர்கள் தாராளமாக சாப்பிட்டுக் கொள்ளட்டும். புலால் உணவை விரும்புபவர்கள் மாமிசம் சாப்பிட்டுக் கொள்ளட்டும். இதில் வந்து தினமலர் தனது மூக்கை நுழைக்க வேண்டாம்.


அற்பமான இந்த விலங்கிடும் காட்டும் பரிவில் நூற்றில் ஒரு பங்கு சக மனிதர்களிடம் காட்டலாமே!

Saturday, February 12, 2011

ஏ.ஆர்.ரஹ்மான்-ஸ்டார் டிவி பேட்டி!


இந்தியனாகவும் இருந்து சிறந்த இஸ்லாமியனாகவும் இருக்க முடியுமா?

முடியும் என்று நமது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் நிரூபித்து வருகிறார். இஸ்லாம் சொன்ன கட்டாய கடமைகள் அனைத்தையும் தன்னால் முடிந்த வரை கடைபிடித்து வருகிறார். தொழுகைக்கு இடைஞ்சல் இருக்கக் கூடாது என்பதற்காக ரிகார்டிங் அனைத்தையும் இரவிலேயே வைத்துக் கொள்கிறார். தன்னை ஈன்றெடுத்த தாய்க்காக 'மா துஜே சலாம்' தனது இனத்துக்காக 'வெள்ளைப் பூக்கள்', தனது நாட்டுக்காக 'ஜன கன மன' என்று இவர் எந்த துறைக்கு சென்றாலும் அங்கு தனது முத்திரையை பதித்து விடுகிறார். நேரம் கிடைத்தால் அவ்வப்போது இவரது பேட்டிகளை காண்பது உண்டு. அந்த வகையில் ஸ்டார் சேனலுக்கு அளித்த பேட்டியை பார்க்க நேர்ந்தது. தனது தாய்க்காக அவர் பாடிய 'மா துஜே சலாம்' என்ற பாடலை எவ்வளவு உணர்வு பூர்வமாக பாடுவதை பாருங்கள். என் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்தது. நான் பெற்ற இன்பத்தை நீங்களும் பெற பகிர்ந்து கொள்கிறேன்.

தான் கொண்டுள்ள கொள்கையில் இவர் எந்த சமரசமும் பண்ணிக் கொள்வதில்லை. அதே சமயம் இந்துக்கள், கிறித்துவர்களுக்கு மத்தியில் எந்த நேரமும் இருந்தாலும் அதே புன்சிரிப்பு. எவரிடமும் இதுவரை பகை கொண்டதில்லை. இவருடைய தொழில் தவிர்த்து இவரிடம் 'நாங்கள் பரம்பரை முஸ்லிம்கள்' என்று தவறாக விளங்கி சொல்லிக் கொண்டிருப்பவர்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. தனது நாட்டை நேசிக்கவும், தனது இனத்தை நேசிக்கவும், தனது குடும்பத்தை நேசிக்கவும் இஸ்லாம் ஒரு தடையே அல்ல என்பதைத்தான் அவரது வாழ்வு நமக்கு சொல்லிக் கொண்டிருக்கிறது.

மெக்காவில் பள்ளியின் உள் ஒருமுறை இவரை பார்த்திருக்கிறேன். தன்னை மறந்து தொழுகையில் ஈடுபட்டிருந்தார். தொழுகை முடிந்து அவரிடம் பேசலாம் என்று சென்றால் அதற்குள் கூட்டம் அதிகமாகவே என்னால் அவரிடம் பேச முடியவில்லை. மினாவில் நாங்கள் தங்கியிருந்த கூடாரத்துக்கு அருகில்தான் அவரும் தங்கியிருப்பதாக சொன்னார்கள். ஒரு பேட்டி எடுக்கலாமா என்று கூட அப்பொழுது யோசித்தேன். நாம் வந்தது 'ஹஜ்' செய்ய என்ற எண்ணம் வரவே ஆர்வத்தை அடக்கிக் கொண்டேன். அங்கும் அவரை சந்திக்க முடியவில்லை.

குறிப்பு;
சில நண்பர்கள் தனி மெயிலில் ரஹ்மான் தர்ஹாக்கு செல்வதையும் அவரின் சூஃபி கொள்கையையும் ஆதரிக்கிறீர்களா? என்று கேட்டிருந்தனர்.

இந்த பதிவின் நோக்கம் மார்க்க கட்டளைகளை கடை பிடிக்கும் ஒரு முஸ்லிம் நாட்டுப்பற்றுடனும், இனப்பற்றுடனும், மொழிப்பற்றுடனும் இருக்க முடியாது:மற்ற மதத்தவர்களோடு ஒருங்கினைந்து வேலை செய்ய முடியாது என்ற போக்கில் சில பின்னூட்டங்கள் வந்தது. அது தவறு. ஒரு முஸ்லிம் தனது மார்க்க கடமைகளை செய்து கொண்டே மாற்று மதத்தவரோடு சகஜமாக பழக முடியும. இதற்கு மார்க்கம் தடையில்லை என்பதை ரஹ்மான் மூலம் சொல்ல வந்தேன். அவர் தர்ஹாவுக்கு போவதும் தவறான வழிகாட்டுதல்: அதே போல்தான் சூஃபி இசமும். இவற்றில் இருந்தெல்லாம் ரஹ்மான் விலகிக் கொள்வார்: விலகிக் கொள்ள வேண்டும் என்று நாமும் பிரார்த்திப்போம்.

Monday, February 07, 2011

தமிழன் என்றோர் இனமுண்டு! தனியே அதற்க்கோர் குணமுண்டு!


பூமியில் உள்ள கோடானு கோடி உயிரினங்களில் மிக உன்னதமான பெருமைக்குரிய படைப்பு நம் மனித இனம். பூமி என்ற ஒரு கோளை உருவாக்கி அதில் மனிதனுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி மனிதனை பூமிக்கு அனுப்புகிறான் இறைவன்.

இந்த உயரிய படைப்பான மனித இனம் தன்னை விட தகுதியில் குறைந்த ஒரு எல்லைக் கல்லை எந்த அளவு மரியாதை செய்ய தயாராகி விடுகிறது என்பதைத்தான் நாம் இங்கு பார்க்கிறோம். இறைவன் அளித்துள்ள பகுத்தறிவை இந்த இடத்தில் மனிதன் அடகு வைத்து விடுகின்றான். எனது தாய் மொழியான தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்ட ஒருவர் தனது அறிவை அடகு வைப்பதைக் கண்டு மனம் வெம்புகிறது.

இவரைப் பார்த்து ஆத்திரப்படுவதா! சிரிப்பதா! ஆதங்கப்படுவதா! என்ன ஒரு மரியாதை பாருங்கள். தனது செருப்பைக் கூட ஒரு ஓரத்தில் வைத்து விட்டு என்ன ஒரு பவ்யமாக வணங்குகிறார். இவர் சென்ற பிறகு அந்த இடத்தில் ஒரு நாய் வந்து சிறு நீர் கழித்து விட்டு செல்லும். இறைவனை கண்ணியப்படுத்தும் முறை இதுதானா? இந்த படத்தை வெளியிட்டு தினமலர் இவரின் அறியாமையை வெளியாக்குகிறது. அதே தினமலர் இந்த கல்லுக்கு முன்னால் ஒரு பந்தலையோ ஒரு கட்டிடத்தையோ கட்டி அதற்கு ஒரு புரோகிதரையும் வைத்து சமஸ்கிரதத்தில் மந்திரங்கள் ஓத ஆரம்பித்தால் அதை ஏற்றுக் கொள்கிறது.இவரை கேலி செய்த தினமலர் அதே காரியத்தை சில மாற்றங்களுடன் செய்து வருவதை பார்க்கிறோம்.

'நீங்கள் வணங்கும் இந்த சிலைகள் என்ன? என்று ஆபிரஹாம் தனது தந்தையிடமும் தனது சமுதாயத்திடமும் கேட்டபோது 'எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கக் கண்டோம்' என்று அவர்கள் கூறினர்.' -குர்ஆன் 21:52,53

'இறைவனையன்றி நீங்கள் வணங்குபவை வெறும் பெயர்களே! நீங்களும் உங்களின் முன்னோர்களும் அவற்றிற்கு பெயரிட்டீர்கள். இது குறித்து எந்த சான்றையும் இறைவன் உங்களுக்கு அருளவில்லை'-குர்ஆன் 12:40

'தேடுவோனும், தேடப்படுவோனும் பலகீனர்களாக இருக்கிறார்கள்' -குர்ஆன் 21:52,53

இந்நேரத்தில் என் முன்னோர்களை நினைத்துப் பார்க்கிறேன்.நான்கைந்து தலைமுறைக்கு முன்னால் எனது முன்னோர்களும் இதே நிலையில்தான் இருந்திருப்பார்கள். இஸ்லாம் என்ற ஒரு மார்க்கத்தில் அவர்கள் தங்களை பிணைத்துக் கொண்டதால் இன்று நானும் ஒரு சுயமரியாதைக்காரன் என்று சொல்லிக் கொள்கிறேன்.என் முன்னோர்கள் எனக்கு பெரும் சொத்துக்களை சேர்த்து வைக்கா விட்டாலும் இஸ்லாம் என்ற ஒரு உயரிய மார்க்கத்துக்கு சொந்தக்காரர்களாக்கி விட்டுச் சென்றார்களே அவர்களை நினைத்து பெருமைபடுகிறேன்.

இந்த அழகிய மார்க்கத்தில் பிறக்க வைத்த அந்த இறைவனுக்கே எல்லாப் புகழும்!

'அவர்கள் சிந்திப்பதற்காக இந்தக் குர்ஆனில் பல விஷயங்களை தெளிவுபடுத்தியுள்ளோம். அது நிராகரிப்பவர்களுக்கு வெறுப்பையே அதிகப்படுத்துகிறது.' -குர்ஆன் 17:41

'தமிழன் என்றோர் இனமுண்டு: தனியே அதற்கோர் குணமுண்டு' என்ற பெருமைக்குரிய நம் இனம் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' 'நட்ட கல்லும் பேசுமோ' என்ற நமது முன்னோர்களின் கொள்கைகளை வாழ்வில் கடைபிடித்து எல்லைக் கற்க்களை எல்லாம் வணங்குவதை விட்டும் தவிர்ந்து கொள்வோமாக!

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது. -திருக்குறள்


'இறைவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை'- அதர்வண வேதம் 32:3

'தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை'_யோவான்1:18

Sunday, February 06, 2011

ஏதோ எகிப்துக்கு நம்மால் முடிந்தது!


எகிபதின் நிலைமை நாளுக்கு நான் மோசமாகி வருகிறது. ஹோஸ்னி முபாரக்கை நீக்கியே தீருவோம் என்று எதிர்க் கட்சிகளும், முபாரக்தான் ஆட்சித் தலைவர் என்று அவரது ஆதரவாளர்களும் போராட்டத்தில் குதித்திருக்கின்றனர். பல உயிர்கள் போனாலும் ஒரு முடிவு இன்னும் எட்டப்படவில்லை.

முபாரக் தனக்கு அடுத்து ஒருவரை புதிதாக நியமித்திருந்தாலும் போராட்டக்காரர்கள் விடுவதாக இல்லை. 'திடீரென நான் விட்டுக் கொடுத்தால் நாடு சின்னாபின்னமாகி விடும்' என்பது முபாரக்கின் வாதம். முஸ்லிம் பிரதர்ஹுட் (இஹ்வானுல் முஸ்லிமீன்) என்ற பிரதான எதிர்க் கட்சி முபாரக்கை இறக்கியே தீருவது என்று போராட்டத்தை தீவிரப்படுத்துகிறது.

என்னோடு அலுவலகத்தில் ஒன்றாக பணிபுரியும் எகிப்து நாட்டைச் சேர்ந்த ஹைதம் என்பருடன் இது விஷயமாக பேசிப் பார்த்தேன்.

சுவனப்பிரியன்: ஹைதம்! நீங்களும் உங்கள் குடும்பமும் யார் பக்கம்?

ஹைதம்: பல வருடங்களாக நாங்கள் ஹோஸ்னி முபாரக்கைத்தான் ஆதரித்து வருகிறோம.

சுவனப்பிரியன்: உங்கள் நாட்டின் முக்கிய வருமானம் எது?

ஹைதம்:சுற்றுலாத்துறை எங்கள் நாட்டின் முக்கிய வருமானமாக திகழ்கிறது. பழங்கள், காய்கறிகள் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் கணிசமாக வருமானம் வருகிறது. கணிசமான அளவு பெட்ரோலும் கிடைக்கிறது. எங்கள் நாடு வளமான நாடு. அரசியல்வாதிகளின் சுரண்டலால் நாடு இன்று இந்த நிலைக்கு சென்றுள்ளது.

சுவனப்பிரியன்: அரசியல்வாதிகள் நாட்டை கெடுத்து விட்டதாக சொல்கிறாய். ஆனால் முபாரக்கை எப்படி ஆதரிக்கிறாய்?

ஹைதம்: முபாரக்குக்கு சரியாக ஒரு மாற்று தலைமை இல்லை. அதனால்தான் நாங்கள் அவரை வேறு வழி இல்லாமல் ஆதரிக்கிறோம்.

சுவனப்பிரியன்: உன்னைப் போன்ற இளைஞர்கள் முபாரக்குக்கு எதிராகவல்லவா இருக்க வேண்டும். தற்போது மாற்று ஏற்பாடாக வந்துள்ள உமர் சுலைமான் அமெரிக்க ஏஜண்ட் என்று நான் படித்தேன். தற்போது உள்ள போராட்டத்துக்கு அமெரிக்காவும், இஸ்ரேலும் எதிர்ப்பதிலிருந்தே முபாரக் அமெரிக்க, இஸ்ரேலிய கைக்கூலி என்று விளங்குகிறதே!

ஹைதம்: நீ சொல்வதும் உண்மைதான். இதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?

சுவனப்பிரியன்: மாற்று ஏற்பாடாக 'முஸ்லிம் பிரதர்ஹூட்' டை நீங்கள் ஏன் ஆதரிக்கக் கூடாது?

ஹைதம்: அவர்களின் ஆதரவாளர்களை முபாரக் அரசு கைது செய்தால் பிறகு அவர்கள் வெளியில் வர முடியாது. என் நண்பர்களில் பலர் இது போல் சிறை சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. எனவேதான் இவர்களை ஆதரிக்க பலர் தயங்குவது.

அடுத்து இவர்கள் ஆட்சிக்கு வந்தால் சுற்றுலாத் துறை பாதிக்கப்படும். வெளிநாட்டவர்களின் வரவு குறையும். பெண்கள் ஸ்கர்ட் போட்டுக் கொண்டு வேலைக்கு செல்வதை எதிர்க்கிறார்கள். கடற்கரையில் ஆண்களும் பெண்களும் கூட்டாக குளிப்பதை கண்டிக்கிறார்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இப்படி என்றால் ஆட்சிக்கு வந்து விட்டால்? எங்கள் நாட்டு வருமானம் பாதிக்கப்படும்.

சுவனப்பிரியன்:இன்னும் இரண்டு மாதத்தில் கல்யாணம் உனக்கு ஆகப் போகிறது. உன் மனைவியோடு கடற்கரையில் பலர் முன்னிலையில் நீ குளிப்பாயா?

ஹைதம்: அதெப்படி என் மனைவியோடு பலர் முன்னிலையில் நான் குளிக்க முடியும்? நான் குளிக்க மாட்டேன். குளிக்கும் வெளிநாட்டவரை தடுக்கவும் மாட்டேன்.

சுவனப்பிரியன்: நமக்கு சக்திக்கு உட்பட்டு நடக்கும் தவறுகளை நாம் தடுக்க முயல வேண்டும். இல்லை என்றால் இதற்காக நீ இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும். இதை தடுப்பதனால் சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டால் இறைவன் வேறொரு வருமானத்துக்கு வழி வகுப்பான். இன்று சவுதி இல்லையா? அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் அவர்களின் இருப்பிடங்களில் மாத்திரம் குறைவான ஆடைகளுடன் குளிப்பார்கள். மது அருந்திக் கொண்டு ஆட்டம் பாட்டமும் இருக்கும். எல்லாம் இருப்பிடங்களுக்குள்ளேயே. வெளியில் வரும் போது கருப்பு உடையை அணிந்து கொண்டுதானே வருகிறார்கள். இஸ்லாமிய சட்டத்தை கடை பிடிப்பதால் சவுதி எந்த விதத்தில் பொருளாதார வளத்தில் குறைந்து விட்டது? தற்போது உன் சக்திக்கு உட்பட்டு முபாரக்கை நீக்கவும், முஸ்லிம் பிரதர்ஹூட்டை ஆட்சியில் அமர்த்தவும் நீ முயல வேண்டும்.

ஒரு வாரமாக அரபு ஆங்கில பேப்பர்களையும், வெப்சைட்களையும் தொடர்ந்து கொடுத்து வந்தேன். ஒரு வழியாக தற்போது 'முஸ்லிம் பிரதர்ஹூட்'டின் ஆதரவாளராக மாறி விட்டான்.

கெய்ரோ சுதந்திர முனையில் எதிர்ப்பாளர்கள் இன்றும் கூடியிருக்கிறார்கள். பழங்களும் காய்கறிகளும் சவுதிக்கு வருவது நின்று போனதால் விலைகளும் சுமாராக ஏறி உள்ளது.

30 வருடம் ஆண்டது போதும் முபாரக். நீங்கள் வெளியேறினால் பாலஸ்தீனர்களுக்கும் ஒரு நல்ல காலம் பொறக்கும். எப்போ காலி பண்ணப் போறிங்க....

ஏதோ நம்மால் எகிப்துக்கு செய்ய முடிந்தது.