Followers

Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

Wednesday, May 20, 2020

அடுத்த நம்பிக்கையில் கை வைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

வெரி குட். அடுத்த நம்பிக்கையில் கை வைக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த முறை அடிப்படையிலேயே கை வைத்துவிட்டார்கள். இந்த செய்தியை புரிந்துக்கொள்ள முதலில் நாம் நம்முடைய ஸ்கூல் காலத்திற்கு சென்று வந்து விடுவோம். உயிரின செல்கள் இரண்டு வகைப்படும். ஒன்று Procaryote, மற்றொன்று Eucaryote.
Eucaryote வகை செல்கள் பல்வேறு மண்டலங்களை தன்னுள்ளே கொண்டவை. ஒவ்வொரு மண்டலமும் தனித்துவமான வேலைகளை செய்து உடல் இயக்கத்திற்கு உதவி செய்கின்றன. மனிதர்கள், விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களில் இவ்வகை செல்கள் காணப்படுகின்றன.
Procaryote வகை செல்கள், மண்டலங்கள் இல்லாத மிக எளிமையான கட்டமைப்பை கொண்டவை. பாக்டீரியா உள்ளிட்ட உயிரினங்களில் இவை காணப்படுகின்றன. பரிணாம புரிதலின்படி, எளிமையான Procaryote செல்களில் இருந்து சிக்கலான வடிவமைப்பை கொண்ட Eucaryote செல்கள் தோன்றியதாக காலங்காலமாக நம்பப்பட்டு வருகிறது. எப்படி மற்ற பரிணாம நம்பிக்கைகளுக்கு ஆதாரம் இல்லையோ அது போல இதற்கும் ஆதாரம் கிடையாது. இருந்தாலும் நம்பிக்கொண்டிருந்தார்கள்.
சரி நாம விசயத்திற்கு வருவோம். Procaryote செல்கள், மண்டலங்கள் இல்லாத எளிமையான கட்டமைப்பை கொண்டவை என்ற நம்பிக்கையில் தான் தற்போது மண் விழுந்திருக்கிறது. கடந்த சிலபல ஆண்டுகளாக மிக முன்னேறிய தொழில்நுட்பங்களை கொண்டு பாக்டீரியாக்களில் நடத்தப்பட்டு வரும் ஆய்வுகள், Procaryote செல்களிலும் சிக்கலான கட்டமைப்பை கொண்ட பல்வேறு மண்டலங்கள் உள்ளதாக தெரிவிக்கின்றன.
உதாரணத்திற்கு, Eucaryote செல்களுக்கு ஆற்றலைக் (energy) கொடுக்கும் Mitochondria மண்டலம் இருப்பது போல, Procaryote செல்களுக்கு ஆற்றலை கொடுக்க Anammoxosome மண்டலம் உள்ளது. ஆச்சர்யம் என்னவென்றால், இந்த Procaryote மண்டலங்களில் சில, Eucaryote மண்டலங்களை ஒத்திருந்தாலுல், பல மண்டலங்கள் தனித்துவமாக இருக்கின்றன.
இன்னும் வியப்பு என்னவென்றால், எல்லா வகை பாக்டீரியாக்களிலும் இந்த மண்டலங்கள் ஒரே மாதிரியாக இல்லாமல், ஒவ்வொரு வகைக்கும் வேறுபடுகின்றன. இதெல்லாம் நீண்ட கால நம்பிக்கைகளுக்கு ஷாக் கொடுக்கக்கூடிய கண்டுபிடிப்புகள்.
ஆக, Eucaryote செல்களை போல, Procaryote செல்களும் சிக்கலான வடிவமைப்பை கொண்டவை தான் என்பது நிரூபணம் ஆகியுள்ளதால், Procaryote-டிலிருந்து Eucaryote வந்ததாக சொல்லப்பட்டு வந்த கதை கிழிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், இப்போது எப்படி விளக்கத்தை மாற்றியிருக்கிறார்கள் என்றால், Procaryote Eucaryote ஆகிய இரண்டும் தனித்தனியே பரிணாமம் அடைந்ததாம். 
நீங்க எதையாவது சொல்லிட்டு போங்க, நம்ம கிட்ட திணிக்காத வரைக்கும் OK...
படங்கள்: Procaryote மண்டலங்களை காட்டும் elecron micrograph & Reconstruction படங்கள்.
படங்களுக்கு நன்றி: Quanta Magazine
செய்திக்கான ஆதாரம்: https://www.quantamagazine.org/bacterial-organelles-revise…/
சகோ Aashiq Ahamed பதிவிலிருந்து எடுக்கப்பட்டது.



Sunday, May 17, 2020

உலக வரலாற்றின் போக்கையே பல்வேறு கண்டுபிடிப்புகள்



உலக வரலாற்றின் போக்கையே பல்வேறு கண்டுபிடிப்புகள் மாற்றியுள்ளன. அல்லாஹ் வழங்கிய அறிவின் மூலம் தாவுத் (அலை) அவர்களின் கண்டுபிடிப்புகள், மிக பெரும் சாம்ராஜியத்தை நிறுவ அவருக்கு உதவியது.
வேதம் வழங்கப்பட்ட இறைதூதராகவும், மிக சிறந்த தொழில் நுட்பவாதியாகவும் வாழ்ந்த தாவுத் (அலை) அவர்களின் கண்டுபிடிப்புகளை பற்றி குர்ஆன் வசனங்கள் மூலம் அறிந்து கொள்வோம்.
ஃபிர்அவுனின் கொடுமைகளிலிருந்து தப்பிக்க, மூஸா (அலை) அவர்களின் தலைமையில் எகிப்து தேசத்திலிருந்து வெளியேறினர் இஸ்ராயீல் மக்கள், அதன் பின்னர் பல ஆண்டுகள் நாடோடிகளாக வாழ்ந்து வந்தனர். அப்படிப்பட்ட நாடோடி சமூகத்தில் பிறந்தவர் தான் தாவூத் (அலை) .
ஆயிரகணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தாவுத் (அலை) அவர்களின் காலத்தில், போர் முறைகள் மிக பழமையானது. சிறு ஆயுதங்களை வைத்துகொண்டு சண்டையிடுவார்கள். ஆயுதத்தின் கூர்மை, வீரர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் பலம் ஆகியவற்றை கொண்டே போரில் வெற்றி பெற்று வந்தனர்.
போர்களத்தில் எதிரிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் கவச ஆடைகள் என்று அப்போது எதுவும் இருக்கவில்லை. அப்படி ஒன்றை உருவாக்க முடியும் என்று யாரும் கற்பனை கூட செய்தது இல்லை.
உலக வரலாற்றில் முதன் முதலாக தாவுத் (அலை) அவர்கள் இரும்பை கொண்டு போர் கவசங்களை உருவாக்கினார்கள். எதிரி என்னை தாக்கினால் எனக்கு எதுவும் ஆகாது, அதே நேரத்தில் என்னால் அருகில் இருந்து கொண்டு எதிரியை தாக்க முடியும் என்ற நிலையை அது ஏற்படுத்தியது. இது போர்களத்தின் போக்கையே மாற்றியது.
தாவுத் (அலை) அவர்களின் இந்த கண்டுபிடிப்பு, போர்களத்தில் வெல்ல முடியாத மனிதராக அவரை மாற்றியது. மிக பெரிய சாம்ராஜியத்தை உருவாக்கி, பேரரசர் ஆனார் தாவுத் (அலை).
அன்னாரின் மகன் சுலைமான் (அலை) அவர்கள், தந்தையின் சாம்ராஜியத்தை மேலும் விரிவுபடுத்தினார்.
இரும்பை கொண்டு கவச ஆடை தாயாரிகும் தொழில்நுட்பம் (குர்ஆன் வசனங்களில் இருந்து) :
இரும்பு உறுதியானது, கடினமானது, இதை கொண்டு ஆடை தயாரிக்க முடியும் என யாரும் அப்போது கற்பனை கூட செய்து பார்த்திருக்க மாட்டார்கள்.
ஆடை என்பது மென்மையாக இருக்க வேண்டும், நாம் அசையும் போது நம்மோடு சேர்ந்து அதுவும் அசைய வேண்டும். கடினமான இரும்பை ஆடையாக மாற்றிய தாவுத் (அலை) அவர்களின் கண்டுபிடிப்பை குர்ஆன் வசனங்களில் இருந்து அறிந்து கொள்வோம்.
....."போர்க் கவசங்களைச் செய்வீராக! அவற்றின் வளையங்களை ஒழுங்குபடுத்துவீராக'' என (கூறி) அவருக்கு (தாவூதுக்கு) இரும்பை மென்மையாக்கினோம்....(குர்ஆன் 34:10,11)
அல்லாஹ் வழங்கிய அறிவை கொண்டு தாவுத் (அலை) அவர்கள் இரும்பை மென்மையாக்கி (அதிக வெப்ப நிலையில் அதை உருக்கி) சிறு சிறு வளையங்கள் செய்து, அதை ஒழுங்குபடுத்தி கவச ஆடைகளை தயாரித்தார்கள்.
நூலை கொண்டு நாம் உடுத்தும் ஆடைகள் தயாரிக்கப்படுவதை போல, உறுதியான சிறு சிறு இரும்பு வளையங்களை கொண்டு கவச ஆடைகள் தயாரிக்கப்படுகின்றது. உடலின் அசைவிற்க்கு ஏற்ப, இந்த சிறு வளையங்களால் ஆன இரும்பு ஆடையும் அசைந்து கொடுக்கும்.
அந்த கால கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிக சிறந்த கண்டுபிடிப்பு இது. இன்னும் விரிவாக விளக்குகின்றேன்.
இரும்பு கடினமானது, அதை அதிக வெப்ப நிலையில் உருக்கினால் (உருகி) மென்மையாகும், ஆனால் உருகிய நிலையில் உள்ள இரும்பை நாம் கையால் கூட தொட முடியாது. எனவே அதை அப்படியே பயன்படுத்த முடியாது. (கண்டுபிடிப்பு இன்னும் முழுமை பெறவில்லை)
சாதாரண வெப்ப நிலையிலும் இரும்பு மென்மையாக இருக்க வேண்டும். வளைத்தால் வளைய வேண்டும், நாம் விரும்பும் வகையில் அது அசைய வேண்டும். அதே நேரத்தில் உறுதியாகவும் இருக்க வேண்டும். இது தான் கண்டுபிடிப்பிற்க்கான தேவை (Problem Statement)
இரும்பை உருக்கி அதை கொண்டு சிறு வளையங்கள் செய்து அந்த வளையங்களை கொண்டு ஆடை செய்யும் போது, நாம் விரும்பியது கிடைக்கின்றது.
இப்போது சாதாரண வெப்ப நிலையிலும் அதை நாம் அசைக்கலாம், வளைக்கலாம், விரும்பிய வகையில் நகர்த்தாலாம். கடினமான இரும்பு இப்போது மனிதனின் விருப்பப்படி அசையும் வகையில் மென்மையாகிவிட்டது (Problem solved)
உண்மையில் இது மிகவும் அற்புதமான கண்டுபிடிப்பு, இதற்க்குள் இன்னும் பல்வேறு கண்டுபிடிப்புகள் உள்ளன. (எழுதினால் எழுதி கொண்டே போகலாம்)
இந்த கண்டுபிடிப்பின் மூலம் நாடோடியாக பிறந்த தாவுத் (அலை) அவர்கள், மிகபெரும் சாம்ராஜியத்தின் அதிபதியானார்.
ஒரு கண்டுபிடிப்பாளர் (Inventor) எப்படி யோசிக்க வேண்டும் என்பதை தாவுத் (அலை) அவர்களின் கண்டுபிடிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்
இது மிக மிக கடினம், இதை யாராலும் செய்ய முடியாது என நினைக்கும் ஒன்றை, தொழில் நுட்பங்களின் மூலம் சாதித்து காண்பிப்பது தான் கண்டுபிடிப்பு (Invention).
அந்த தொழில்நுட்ப அறிவை அல்லாஹ் தான் அவருக்கு வழங்கினான்,
தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் கல்வியை அளித்தோம். "நம்பிக்கை கொண்ட தனது ஏராளமான அடியார்களை விட எங்களைச் சிறப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' என்று அவ்விருவரும் கூறினர். ....(குர்ஆன் 27:15)
அல்லாஹ்விடம் பிராத்தனை செய்யுங்கள் அல்லாஹ் உங்களுக்கும் கல்வி ஞானத்தை வழங்குவான் (அல்லாஹ் நாடினால்)
கல்வி அறிவை வளர்த்து கொண்டு, அறிவார்ந்த வகையின் சிந்தித்தால் எதையும் வெற்றி கொள்ளலாம் என்பதற்க்கு குர்ஆனில் கூறப்பட்ட தாவுத் (அலை) அவர்களின் வரலாறு ஒரு சான்று
ஆக்கம் : S. சித்தீக் M.Tech
 மாற்றியுள்ளன. அல்லாஹ் வழங்கிய அறிவின் மூலம் தாவுத் (அலை) அவர்களின் கண்டுபிடிப்புகள், மிக பெரும் சாம்ராஜியத்தை நிறுவ அவருக்கு உதவியது.
வேதம் வழங்கப்பட்ட இறைதூதராகவும், மிக சிறந்த தொழில் நுட்பவாதியாகவும் வாழ்ந்த தாவுத் (அலை) அவர்களின் கண்டுபிடிப்புகளை பற்றி குர்ஆன் வசனங்கள் மூலம் அறிந்து கொள்வோம்.
ஃபிர்அவுனின் கொடுமைகளிலிருந்து தப்பிக்க, மூஸா (அலை) அவர்களின் தலைமையில் எகிப்து தேசத்திலிருந்து வெளியேறினர் இஸ்ராயீல் மக்கள், அதன் பின்னர் பல ஆண்டுகள் நாடோடிகளாக வாழ்ந்து வந்தனர். அப்படிப்பட்ட நாடோடி சமூகத்தில் பிறந்தவர் தான் தாவூத் (அலை) .
ஆயிரகணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தாவுத் (அலை) அவர்களின் காலத்தில், போர் முறைகள் மிக பழமையானது. சிறு ஆயுதங்களை வைத்துகொண்டு சண்டையிடுவார்கள். ஆயுதத்தின் கூர்மை, வீரர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் பலம் ஆகியவற்றை கொண்டே போரில் வெற்றி பெற்று வந்தனர்.
போர்களத்தில் எதிரிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் கவச ஆடைகள் என்று அப்போது எதுவும் இருக்கவில்லை. அப்படி ஒன்றை உருவாக்க முடியும் என்று யாரும் கற்பனை கூட செய்தது இல்லை.
உலக வரலாற்றில் முதன் முதலாக தாவுத் (அலை) அவர்கள் இரும்பை கொண்டு போர் கவசங்களை உருவாக்கினார்கள். எதிரி என்னை தாக்கினால் எனக்கு எதுவும் ஆகாது, அதே நேரத்தில் என்னால் அருகில் இருந்து கொண்டு எதிரியை தாக்க முடியும் என்ற நிலையை அது ஏற்படுத்தியது. இது போர்களத்தின் போக்கையே மாற்றியது.
தாவுத் (அலை) அவர்களின் இந்த கண்டுபிடிப்பு, போர்களத்தில் வெல்ல முடியாத மனிதராக அவரை மாற்றியது. மிக பெரிய சாம்ராஜியத்தை உருவாக்கி, பேரரசர் ஆனார் தாவுத் (அலை).
அன்னாரின் மகன் சுலைமான் (அலை) அவர்கள், தந்தையின் சாம்ராஜியத்தை மேலும் விரிவுபடுத்தினார்.
இரும்பை கொண்டு கவச ஆடை தாயாரிகும் தொழில்நுட்பம் (குர்ஆன் வசனங்களில் இருந்து) :
இரும்பு உறுதியானது, கடினமானது, இதை கொண்டு ஆடை தயாரிக்க முடியும் என யாரும் அப்போது கற்பனை கூட செய்து பார்த்திருக்க மாட்டார்கள்.
ஆடை என்பது மென்மையாக இருக்க வேண்டும், நாம் அசையும் போது நம்மோடு சேர்ந்து அதுவும் அசைய வேண்டும். கடினமான இரும்பை ஆடையாக மாற்றிய தாவுத் (அலை) அவர்களின் கண்டுபிடிப்பை குர்ஆன் வசனங்களில் இருந்து அறிந்து கொள்வோம்.
....."போர்க் கவசங்களைச் செய்வீராக! அவற்றின் வளையங்களை ஒழுங்குபடுத்துவீராக'' என (கூறி) அவருக்கு (தாவூதுக்கு) இரும்பை மென்மையாக்கினோம்....(குர்ஆன் 34:10,11)
அல்லாஹ் வழங்கிய அறிவை கொண்டு தாவுத் (அலை) அவர்கள் இரும்பை மென்மையாக்கி (அதிக வெப்ப நிலையில் அதை உருக்கி) சிறு சிறு வளையங்கள் செய்து, அதை ஒழுங்குபடுத்தி கவச ஆடைகளை தயாரித்தார்கள்.
நூலை கொண்டு நாம் உடுத்தும் ஆடைகள் தயாரிக்கப்படுவதை போல, உறுதியான சிறு சிறு இரும்பு வளையங்களை கொண்டு கவச ஆடைகள் தயாரிக்கப்படுகின்றது. உடலின் அசைவிற்க்கு ஏற்ப, இந்த சிறு வளையங்களால் ஆன இரும்பு ஆடையும் அசைந்து கொடுக்கும்.
அந்த கால கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிக சிறந்த கண்டுபிடிப்பு இது. இன்னும் விரிவாக விளக்குகின்றேன்.
இரும்பு கடினமானது, அதை அதிக வெப்ப நிலையில் உருக்கினால் (உருகி) மென்மையாகும், ஆனால் உருகிய நிலையில் உள்ள இரும்பை நாம் கையால் கூட தொட முடியாது. எனவே அதை அப்படியே பயன்படுத்த முடியாது. (கண்டுபிடிப்பு இன்னும் முழுமை பெறவில்லை)
சாதாரண வெப்ப நிலையிலும் இரும்பு மென்மையாக இருக்க வேண்டும். வளைத்தால் வளைய வேண்டும், நாம் விரும்பும் வகையில் அது அசைய வேண்டும். அதே நேரத்தில் உறுதியாகவும் இருக்க வேண்டும். இது தான் கண்டுபிடிப்பிற்க்கான தேவை (Problem Statement)
இரும்பை உருக்கி அதை கொண்டு சிறு வளையங்கள் செய்து அந்த வளையங்களை கொண்டு ஆடை செய்யும் போது, நாம் விரும்பியது கிடைக்கின்றது.
இப்போது சாதாரண வெப்ப நிலையிலும் அதை நாம் அசைக்கலாம், வளைக்கலாம், விரும்பிய வகையில் நகர்த்தாலாம். கடினமான இரும்பு இப்போது மனிதனின் விருப்பப்படி அசையும் வகையில் மென்மையாகிவிட்டது (Problem solved)
உண்மையில் இது மிகவும் அற்புதமான கண்டுபிடிப்பு, இதற்க்குள் இன்னும் பல்வேறு கண்டுபிடிப்புகள் உள்ளன. (எழுதினால் எழுதி கொண்டே போகலாம்)
இந்த கண்டுபிடிப்பின் மூலம் நாடோடியாக பிறந்த தாவுத் (அலை) அவர்கள், மிகபெரும் சாம்ராஜியத்தின் அதிபதியானார்.
ஒரு கண்டுபிடிப்பாளர் (Inventor) எப்படி யோசிக்க வேண்டும் என்பதை தாவுத் (அலை) அவர்களின் கண்டுபிடிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்
இது மிக மிக கடினம், இதை யாராலும் செய்ய முடியாது என நினைக்கும் ஒன்றை, தொழில் நுட்பங்களின் மூலம் சாதித்து காண்பிப்பது தான் கண்டுபிடிப்பு (Invention).
அந்த தொழில்நுட்ப அறிவை அல்லாஹ் தான் அவருக்கு வழங்கினான்,
தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் கல்வியை அளித்தோம். "நம்பிக்கை கொண்ட தனது ஏராளமான அடியார்களை விட எங்களைச் சிறப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' என்று அவ்விருவரும் கூறினர். ....(குர்ஆன் 27:15)
அல்லாஹ்விடம் பிராத்தனை செய்யுங்கள் அல்லாஹ் உங்களுக்கும் கல்வி ஞானத்தை வழங்குவான் (அல்லாஹ் நாடினால்)
கல்வி அறிவை வளர்த்து கொண்டு, அறிவார்ந்த வகையின் சிந்தித்தால் எதையும் வெற்றி கொள்ளலாம் என்பதற்க்கு குர்ஆனில் கூறப்பட்ட தாவுத் (அலை) அவர்களின் வரலாறு ஒரு சான்று
ஆக்கம் : S. சித்தீக் M.Tech


Monday, May 04, 2020

ஆறு வருடங்களுக்கு முன்னால், 2014:

ஆறு வருடங்களுக்கு முன்னால், 2014:
நிசார் இப்ராஹிம் (படம் 1), உயிரியலாளர் மற்றும் உலகின் தலைச்சிறந்த தொல்லுரியலாளர்களில் ஒருவர். National Geographic இதழின் 'வளர்ந்து வரும் ஆய்வுப்பணியாளர்' விருதை வென்றவர். இவர் தலைமையிலான குழு, மொராக்கோவில் சில டைனாசர் படிமங்களை கண்டெடுக்கிறது. இவை, நீந்தும் டைனாசர்களின் (Spinosaurus) படிமங்கள் என வாதிட்டார் இப்ராஹிம். நீந்தக்கூடிய டைனாசர்களா? ஆம் கேட்பதற்கு விசித்திரமாக இருக்கும் இந்த செய்தி, உயிரியல் உலகில் அன்று பெரும் விவாதப்பொருளாக மாறியது.
நீந்தக்கூடிய டைனாசர்கள் குறித்த செய்திகள் பல ஆண்டுகளாக இருந்தாலும், அதற்கு தெளிவாக ஆதரவளிக்கும் படிமங்களை முதலில் கண்டறிந்தது இப்ராஹிம் குழுவினர் தான் என்ற வகையில் இந்த செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இருப்பினும், டைனாசர்கள் நீந்தின என்பதற்கு இந்த ஆதாரங்கள் போதாது என்று கூறியது அறிவியல் உலகம். விடவில்லை இப்ராஹிம், இன்னும் தெளிவான ஆதாரங்களை கொண்டுவர, மொராக்கோவின் ஹசன் பல்கலைக்கழக தொல்லுரியலாளர் சமீர் ஜுஹ்ரி (படம் 2) குழுவினருடன் கூட்டணி அமைத்து புறப்பட்டார்.
இன்று, 2020:
Flash News: நீந்தும் டைனாசர்களின் வால் பகுதி படிமங்ளை முழுமையாக கண்டுபிடித்தது இப்ராஹிம், சமீர் குழு. அறிவியல் உலகம் பரபரப்பிற்கு உள்ளானது. இந்த முறை முழு மனதோடு ஏற்றார்கள்.
வாலின் நீளம் எவ்வளவு என்றால் ஐந்து மேசைகளை ஒன்றோடு ஒன்று இணைத்தால் மட்டுமே அவற்றை நேர்கோட்டில் பரப்ப முடியும் என்றளவிற்கு நீளம். தண்ணீருக்கு அடியில் மிக ஆழம் வரைக்கூட வெகு நேரம் நீந்தக்கூடிய அளவில் இவற்றின் வால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. முதலைகளை தண்ணீரில் வேட்டையாடி இருக்கலாம் இந்த விலங்குகள். மொத்த எடை 7000 கிலோ வரையும், விலங்கின் மொத்த நீளம் ஐம்பது அடி வரையும் இருக்கலாம் என கணக்கிடப்படுகிறது. பாரம்பரிய 'நேச்சர்' இதழ் ஆய்வு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது.
ஒரு அற்புதமான கண்டுபிடிப்பிற்கு சொந்தகாரர்களாக ஆகியிருக்கின்றனர் இப்ராஹிம், சமீர் குழுவினர். வாழ்த்துகள்.
இதுக்குறித்த மேலதிக செய்திகளை இங்கே படிக்கலாம்: https://www.nationalgeographic.com/…/first-spinosaurus-tai…/



Sunday, May 03, 2020

உயிரற்ற வேதியியல் பொருட்களில் மின்னல் தாக்கியதால் உயிர் உருவானதா?

உயிரற்ற வேதியியல் பொருட்களில் மின்னல் தாக்கியதால் உயிர் உருவானதா?
கேள்வி: அஸ்ஸலாமு அலைக்கும் சகோ. (ஒருவர் கேட்டுள்ள பின்வரும்) இந்த விடயம் பற்றிய உண்மை நிலை என்ன என்பதை பற்றி சற்று தெளிவு படுத்தமுடியுமா?

// Raj Siva
3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், ஆக்ரோசமாகப் பூகம்பப் பிரதேசமாகப் பூமி பிரளயித்துக் கொண்டிருந்தபோது, சற்றுக் காலத்தின் முன் உருவான நீரினில் தாக்கிய ஒளிக்கீற்று ஏற்படுத்திய ஏதோவொரு இரசாயனக் கூழ்நிலை, முதல் உயிர் வடிவத்தைத் தோற்றிவித்தது. உயிரே இல்லாத ஒரு வேதியல் கலவையிலிருந்து உயிர் தோன்றியிருக்கிறது. சரியான இடத்தில், சரியான சூழ்நிலையில், சரியான நேரத்தில் நடந்த தற்செயல் விளைவினால், இன்று உயிரெனும் மாபெரும் ஆற்றல் விரிவடைந்து போயிருக்கிறது.
உயிரில்லாத வேதிப் பொருளிலிருந்து எப்படி உயிர் தோன்றியது என்பதே அறிவியலால் இன்றுவரை விளக்க முடியாத பெருங்கேள்வி. இதற்கான பதில் யாருக்கும் தெரியாது.
//
-----------------------------------
பதில்:
வ அலைக்கும் சலாம். உயிர் உருவானது எப்படி என்பது குறித்து பல்வேறு கோட்பாடுகள் உள்ளன. அதில் ஒன்று கூட பொதுவாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது­ இல்லை. அறிவியல் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், உயிர் தோற்றம் (எப்படி என்பது இன்னும்) மர்மமாகவே இருக்கிறது. எந்தளவிற்கு என்றால், பூபியில் உயிர் தோன்றியிருக்க வாய்ப்பில்லை, பூமிக்கு வெளியே இருந்து தான் உயிர் வந்திருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் சொல்லும் அளவிற்கு குழப்பம் நீடிக்கிறது.
வேதியியல் கலவையுடன் மின்னல் சேர்ந்து உயிர் உருவாகி இருக்கலாம் என்பது அந்த பல்வேறு கோட்பாடுகளில் ஒன்று. நீங்கள் கேட்டுள்ள கேள்வியிலேயே அந்த சகோதரர் இதுக்குறித்து கூறும் போது, "உயிரில்லாத வேதிப் பொருளிலிருந்து எப்படி உயிர் தோன்றியது என்பதே அறிவியலால் இன்றுவரை விளக்க முடியாத பெருங்கேள்வி. இதற்கான பதில் யாருக்கும் தெரியாது" என்கிறார்.
அதுதான் அறிவியலால் விளக்க முடியவில்லையே, அப்புறம் எப்படி இதனை உண்மையென்று நம்புகிறீர்கள் என்று நாம் திருப்பி கேட்டால் பதில் இருக்காது. இது தொடர்பில் ஆய்வகத்தில் கூட இந்த கோட்பாட்டை நிரூபிக்க முடியவில்லை என்பதே உண்மை. ஒரு வேளை அப்படி நிரூபிக்கப்பட்டிருந்­தால், உயிர் தோற்றம் குறித்து இன்று வேறு பல கோட்பாடுகள் உருவாகியிருக்காது. இது தொடர்பில் நான் எழுதிய "தற்செயலாய் வீடு உருவாகுமா?" என்ற கட்டுரை மேலும் பல புரிதல்களை உங்களுக்கு கொடுக்கலாம். நிச்சயம் பாருங்கள். படிக்க: http://www.ethirkkural.com/2010/08/blog-post_07.html?m=1
ஆக, இந்த வேதியியல்/­மின்னல் கோட்பாடு நிரூபிக்கப்படாததும், உண்மையில்லாததும் ஆகும்.
நன்றி.

சகோ Aashiq Ahamed ன் பதிவிலிருந்து..... காப்பி பேஸ்ட் செய்யப்பட்டது.


Monday, November 26, 2018

ஆக்சிஜன் குறைவு பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது?

ஆக்சிஜன் குறைவு பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது?
வளி மண்டலத்தின் தோற்றம் உருவாக்கம் அதன் கால நிலை பற்றி 900 வருடங்களுக்கு முன்பு வரை மனிதனுக்கு போதிய அறிவு இல்லாமலேயே இருந்தது. பாஸ்கல் என்ற அறிவியல் அறிஞர்தான் வளிமண்டலத்தின் பல புதிர்களை அவிழ்த்தார். 1648 ஆம் ஆண்டு பாஸ்கல் தனது அறிவியல் ஆய்வுகளை வெளியிட ஆரம்பித்தார். இவரது ஆய்வானது கடல் மட்டத்திலிருந்து மேலே செல்லச் செல்ல வளிமண்டலத்தின் காற்றின் அழுத்தமானது குறைந்து கொண்டே வரும் என்று தனது ஆய்வின் மூலம் நிரூபித்தார். வளி மண்டல அளவு என்பது எண்ணிக்கையில் வராததும் நம்மால் சென்று விட முடியாத தூரமுமாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் நமது சூரிய குடும்பம் மட்டும் அல்லாது இது போன்ற எண்ணற்ற கேலக்சிகள் வளி மண்டலத்தில் பயணித்த வண்ணமே உள்ளன. அவற்றை எல்லாம் சென்று அடைந்து விடக் கூடிய கண்டுபிடிப்புகளை மனிதன் இதுவரை உருவாக்கவில்லை. இனி வருங்காலத்தில் சாத்தியப்படலாம்.
ஒரு விண்வெளி வீரன் கடல் மட்டத்திலிருந்து 15000 அடியிலிருந்து 25000 அடி வரை செல்வதாக வைத்துக் கொள்வோம். அவனது இந்த பயணத்தில் சுவாசத்தைப் பொறுத்தவரையில் எந்த சிக்கலுக்கும் உள்ளாக மாட்டான். ஏனெனில் அவனுக்கு தேவையான ஆக்சிஜன் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் தாராளமாக கிடைத்து விடுகிறது. ஆனால் அவன் 25000 அடிகளுக்கு மேலே சென்றான் என்றால் வளி மண்டலத்தில் ஆக்சிஜனின் அளவு குறைபாட்டால் அவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. ஆக்சிஜன் குறைவானாதால் அவனது இதயம் இறுக்கமாக ஆரம்பிக்கிறது. சுவாச அமைப்பு சுத்தமாக சீர்குலைந்து அந்த விண்வெளி வீரனை இறப்பு வரை கொண்டு சென்று விடுகிறது. எனவேதான் விண்வெளி பயணம் மேற் கொள்ளும் வீரர்கள் ஆக்சிஜன் சிலிண்டர்களை தங்களுக்கு பின்னால் கட்டிச் செல்கின்றனர்.
இது போன்று வளி மண்டலத்தில் உள்ள அடுக்குகளில் ஏற்படும் பிரச்னைகளைப் பற்றியும் அங்கு ஆக்சிஜன் குறைவாவதால் மனிதனின் இதயம் சுருங்கி இறப்பு வரை கொண்டு சென்று விடும் என்ற உண்மையையும் கடந்த 500 வருடங்களாகத்தான் அறிந்து வருகிறோம். குறைந்த அழுத்தம், அதிக அழுத்தம் என்ற இரு வேறு நிலைகள் வளிமண்டலத்தில் உள்ளதே விஞ்ஞானிகளுக்கு இதே கால கட்டத்தில்தான் தெரிய வருகிறது. 30000 அடிகளுக்கு மேல் மனிதன் வளி மண்டலத்தில் சென்றால் ஆக்சிஜன் சிலிண்டர்களோடு செல்ல வேண்டும். இல்லை என்றால் இறந்து விடுவான் என்பது தற்போது சிறு பிள்ளைகளுக்கும் தெரியும்.
இன்றும் கூட பலர் விண்வெளி பயணம் என்பது சுத்த கட்டுக் கதை: நமது பூமி தட்டையானது: உருண்டையானது அல்ல: என்று வாதிடுபவர்களை பார்க்கிறோம். மனிதன் விண்வெளி பயணம் மேற் கொள்வான் என்பதை 1400 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த மனிதன் கற்பனையில் கூட நினைத்திருக்க மாட்டான். ஆனால் இன்று நமக்கு இது அரிச்சுவடி பாடம். இனி குர்ஆனின வசனத்துக்கு வருவோம்.
'ஒருவனுக்கு நேர்வழி காட்ட இறைவன் நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான். அவனை வழி தவறச் செய்ய நாடினால் அவனது உள்ளத்தை வானத்தில் ஏறிச் செல்பவனின் உள்ளத்தைப் போல் இறுக்கமாக்கி விடுகின்றான்.'
-குர்ஆன் 6:125
எவ்வளவு அழகிய அறிவியல் முன்னறிவிப்பை மிக அலட்சியமாக சொல்லிச் செல்கிறது இந்த குர்ஆன் வசனம்! அன்றைய மக்களுக்கு இதயம் இறுக்கமாவதையும், மனிதன் விண்வெளியில் பயணிப்பான் என்பதையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு இல்லை. அது எப்படிப்பட்ட அனுபவம் என்பதும் அன்றைய மனிதர்களுக்கு தெரியாது. இன்றும் கூட விண்வெளி வீரர்களைத் தவிர மற்றவர்கள் அந்த அனுபவத்தை அறிய முடியாது. குர்ஆனை வாசிக்கும் இன்று நமக்கு அந்த இதயம் எந்த நிலையை அடையும் என்பதை விண்வெளி வீரர்களின் மூலம் அறிந்து கொள்கிறோம். பிற்கால அறிவியல் வளர்ச்சி பெற்ற நம்மைப் போன்ற மக்கள் இது இறை வேதம்தான் என்ற நம்பிக்கையை பெறுவதற்காகவே இது போன்ற வசனங்களை ஆங்காங்கே இறைவன் நமக்கு தந்திருக்கிறான். இது இறை வேதம்தான் என்பதற்கு இந்த வசனமும் நமக்கு சான்று பகன்று கொண்டிருக்கிறது.


Monday, July 30, 2018

கொசுவைப் பற்றி இன்று விரிவாக பார்ப்போமா?

பதிவர் திரு நம்பள்கி அவர்கள் போன பதிவில்
//எதை சொன்னாலும், மதத்துடன் சம்பந்தப் படுத்துகிறீர்கள்; சரி! கொசுவைப பற்றி எழுதி மதத்துடன் சமபந்தப் படுத்தி எழுதுங்கள் பார்க்கலாம் ...!//
என்று சலிப்போடு கேட்டிருந்தார். அவருக்காகவே இந்த பதிவை தருகிறேன்.
அன்றைய சிலையை வணங்கிக் கொண்டிருந்த அரபுகளை நோக்கி இறைவன் கூறுகிறான்
'மனிதர்களே! உங்களுக்கு ஒரு உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவி தாழ்த்தி கேளுங்கள். ஏக இறைவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும் தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.'
-குர்ஆன் 22:73
மற்றோர் இடத்தில்....
'ஏக இறைவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோரின் உதாரணம் சிலந்திப் பூச்சியைப் போன்றது. அது ஒரு வீட்டை அமைத்துக் கொண்டது. வீடுகளிலேயே சிலந்தியின் வீடுதான் மிகவும் பலஹீனமானது. அதை அவர்கள் அறியக் கூடாதா?'
-குர்ஆன் 29:41
இவ்வாறு இரண்டு இடங்களில் பல தெய்வ வணக்கம் புரிவோரைப் பார்த்து இறைவன் கேட்கிறான். இதனால் கோபமடைந்த அரபிகள் முகமது நபியிடம் கிண்டலாக 'உதாரணத்துக்கு உங்கள் இறைவனுக்கு வேறு உயிரினங்கள் கிடைக்கவில்லையா? அற்பமான ஈயையும் சிலந்திப் பூச்சியையும் உதாரணமாகக் காட்டுகிறானே?' என்றனர்.
இவர்களின் கிண்டலுக்கு மறுப்பு தெரிவிக்கும் முகமாக இறைவன் கீழ் கண்ட வசனத்தை இறக்குகிறான்.
'கொசுவையோ அதை விட அற்பமானதையோ உதாரணமாக கூற இறைவன் வெட்கப்பட மாட்டான். நம்பிக்கை கொண்டோர் 'இது தமது இறைவனிடம் இருந்து வந்த உண்மை' என்பதை அறிந்து கொள்கின்றனர்.'
-குர்ஆன் 2:26
அதாவது மனிதர்கள் நேர் வழி பெறுவதற்காக எந்த அற்ப உயிரினங்களையும் உதாரணமாகக் கூற இறைவன் தயங்க மாட்டான் என்று இந்த வசனம் நமக்கு அறிவுறுத்துகிறது. மனிதர்கள் அற்பமாக நினைக்கும் இந்த கொசுவை இறைவன் எவ்வளவு நேர்த்தியாக படைத்துள்ளான் என்பதை இனி பார்ப்போம்.
1. அது பெண்கொசு. 2. அதற்கு அதன் தலையில் 100 கண்கள். 3. அதன் வாயில் 48 பற்கள்.
4. அதன் உடலில் மாறுபட்ட மூன்று இதயங்கள். 5. அதன் தும்பிக்கை நுனியில் ஆறு அறைகள்.
6. அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அலுவல்கள் 7. ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று இறக்கைகள்.
8. எக்ஸ்ரே கருவி போன்ற நுண்ணிய தர்மோமீட்டர் பொருத்தப்பட்ட சிவப்பு நிறத்தில் ஒரு நுண்ணிய கருவி அதனுள் படைக்கப்பட்டுள்ளது. அதன் வேலை அது மனித உடலில் இருளில் வந்து அமர்ந்து இரத்தத்தை உறிஞ்சும் போது யாரும் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு மனிதனுடைய நிறத்திற்கேற்றவாறு தன் நிறத்தை மாற்றிக்கொள்கிறது..
9. மனித மூளையே வியக்குமளவுக்கு அதனிடமுள்ள கூரிய ஊசி முள்ளால் குத்தி சிறிஞ்சியைப் போல் உறிஞ்சிக் குடிக்கிறது. அது எப்படி பாய்ந்து உள்ளே செல்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியாது.
10. மனிதனின் இரத்த வாசனையை 60 மீட்டர் தொலைவிற்கு அப்பாலிருந்து நுகர்ந்து தெரிந்து கொள்ளும் அற்புத ஆற்றலை அது பெற்றிருக்கிறது.
11. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அதன் முதுகின் மேல் கண்களால் பார்க்கமுடீயாத அளவுக்கு மிகச்சிறிய ஒரு பூச்சி உள்ளது என இன்றைய அறிவியல் கண்டு பிடித்துள்ளது.
அப்போது தான் அல்லாஹ் இவ்வசனங்களை அருளி இப்படிக் கூறினான். நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ அதைவிட அற்பமானதையோ (அதன் மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற வெட்கப்படமாட்டான் (அல்பகரா :2:26) அதாவது சத்தியம் என வந்து விட்டால் அது எவ்வளவு அற்பமானதாக இருந்தாலும்,பெரிதாக இருந்தாலும் அதைக் கூறுவதற்கு அல்லாஹ் தயங்கமாட்டான். எனக்கூறிவிட்டு அறிவியலுக்கு ஒரு சவாலாக கண்ணுக்குப் புலப்படாத ஓர் அற்பமான ஒரு உயிரினத்தையும் அதன் மேல் படைத்துள்ளான். அது அதன் குழவிக்குஞ்சாகவோ அதை தூய்மைப் படுத்தும் ஒரு அரிய படைப்பாகவோ இருக்கலாம். அதை இறைவனே நன்கறிந்தவன்.
இதில் நூறு கண்கள் இருக்கமுடியுமா? என்ற ஐயம் நம்மில் எழலாம். அதற்கு விடையாக, படம்-1 கொசுவின் முகத் தோற்றத்தின் ஒரு பகுதியையும், படம்-2 . A. முகத் தோற்றத்தையும், B அதன் நுண்ணிய கண்களையும், C அதைப் பெரிது படுத்திக் காட்டிய கண்களையும் படத்தில் காணலாம். இறைவனே யாவற்றின் மீதும் ஆற்றலுள்ளவன்.வல்லமையுள்ளவன் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.
---------------------------------------------------------
கொசுக்களை விரட்டுவதற்காக ஒருவர் தொடர்ந்து கொசுவர்த்திச் சுருள், மேட்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி வந்தால், அவருக்கு நுரையீரலில் ஒருவகை ஒவ்வாமை ஏற்பட்டு, நுரையீரல் முழுமையாக விரிவடையாமலும், அதன் கொள்ளளவுக்கு உரிய காற்றை செயல்பாட்டுக்கு எடுத்துக்கொள்ள இயலாமலும் போய்விட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்று பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
கொசு மேட்டில் இருந்து வெளிவரும் புகையை, அப்போது பிறந்த, அல்லது பிறந்து சில மாதங்கள் ஆன குழந்தை தொடர்ந்து சுவாசித்தால் அதற்கு வலிப்பு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கிறது லக்னோ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு. மும்பையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், கொசு விரட்டிகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம் சிலருக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.
கொசு விரட்டிகளில் உள்ள `டையாக்சின்', புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது, `அலெத்ரின்', மனிதர் களின் எடையை குறையைச் செய்யக்கூடியது என்று எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
வேறு வழியில்லாமல்தான் கொசுவிரட்டிகளை நாடுகிறோம். வேறு என்னதான் வழி என்கிறீர்களா? சுற்றுப்புறத்தைத் தூய்மையாக, தண்ணீர் தேங்காமல் வைத்துக்கொள்ளுங்கள். கொசு வலையையும் பயன்படுத்தலாம்.




Tuesday, May 29, 2018

பொய் கூறிய முன் நெற்றி - ஓர் விளக்கம்!



'இறைவன் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா? அவ்வாறில்லை. அவன் விலகிக் கொள்ள வில்லையானால் முன் நெற்றியைப் பிடிப்போம். அது குற்றமிழைத்த பொய் கூறிய முன் நெற்றி.'

-
குர்ஆன் 96 : 14,15,16

இந்த வசனத்தில் முஸ்லிம்களை எந்த நேரமும் எதிர்த்துக் கொண்டும், அவர்கள் இறைவனை வணங்காமல் தடுத்துக் கொண்டும், பொய் பேசி திரிந்து கொண்டும் இருக்கும் நபர்களைப் பற்றி கூறப்படுகிறது.

குர்ஆன் இங்கு பொய் சொல்பவர்கள், தவறான நடத்தையில் ஈடுபடுபவர்கள் போன்றோரின் முன் நெற்றியைப் பிடிப்போம் என்று கூறுகிறது. பொய் சொல்வதற்கும், தவறான நடத்தை நடப்பவருக்கும் அந்த நபரின் முன் நெற்றிக்கும் என்ன சம்பந்தம் ?

ஒரு மனிதனின் மூளையின் அமைப்பையும் அதன் முன் பக்கத்தையும் ஆராய்ந்து பாருங்கள். அங்கு நமது தலையின் முன் பகுதியில் பெரு மூளை அமைந்துள்ளதைக் காணலாம். இதைப் பற்றி உயிரியல் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? Essential of Anatomy & Physiology என்ற புத்தகம் மூளையின் செயல்பாடுகளை விரிவாக விவரிக்கிறது. மனிதன் அதிகம் உணர்ச்சி வசப்படுதல், பொய்,கோபம், முதலான உணர்வு சம்பந்தப் பட்டவைகள் அதிகம் நிகழ்வது மூளையின் முன் பக்கத்தில். இந்த முன் பக்கம் என்பது காதுகளின் ஓரத்துக்கும், தலையின் முன் பக்கத்திற்கும் அதாவது நெற்றியில் அமைந்துள்ள நரம்புகளால் இந்த செயல்கள் செயல் படுத்தப் படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த நெற்றிப் பகுதியின் நரம்புகள் மனிதனின் அநேக செயல்களுக்கு காரணமாக அமைகிறது. இந்த இடமே ஒரு மனிதன் பொய் பேசுவதற்கும் உண்மை பேசுவதற்கும் தூண்டுகோலாய் இருக்கிறது.

இந்த உண்மை கண்டறியப்பட்டது சுமார் எழுபது வருடங்களுக்கு முன்புதான். இந்த உண்மையைத் தான் குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்பே உண்மைப் படுத்துகிறது. எனவே தான் 'பொய் பேசிய அந்த முன் நெற்றியை நாம் பிடிப்போம்' என்று இறைவன் கூறுகிறான். இந்த குர்ஆன் நம்மைப் படைத்த இறைவனின் வார்த்தைகள் தான் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக் காட்டு.


Sunday, May 06, 2018

ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது?

ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது?
ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா?
அல்குர்ஆன் 88:17
இது அல்லாஹ் எழுப்புகின்ற கேள்வியாகும். மனித சிந்தனையைத் தூண்டுகின்ற, மனிதனை அறிவியல் ஆய்வுக்குக் கொண்டு செல்கின்ற அற்புதமான கேள்வி இது!
தன்னுடைய பாலைவனப் படைப்பான ஒட்டகத்தின் அற்புதத்தைப் பற்றி மனிதனை சிந்தித்துப் பார்க்கச் சொல்கிறான். ஒட்டகத்தின் அற்புத ரகசியங்களின் முடிச்சுகளை அவிழ்க்கின்ற ஒரு கட்டுரை அண்மையில் இந்து தமிழ் நாளிதழில் வெளியானது. அந்தக் கட்டுரை இதோ:
50 டிகிரியிலும் வியர்க்காது
ஆடுகளையும், மாடுகளையும் பார்த்துப் பழகிய நமக்கு ஒட்டகம் என்பது விந்தையான விலங்காக இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால், ராஜஸ்தான் மாநிலத்தில் ஒட்டகங்கள் மந்தை மந்தையாகச் சுற்றித் திரிகின்றன.
இந்தியாவில் காணப்படும் ஒட்டகங்கள் ஒற்றைத் திமில் ஒட்டகங்கள். அரேபியன் வகையைச் சேர்ந்தவை. சராசரியாக 300 கிலோ எடை முதல் ஆயிரம் கிலோ எடைவரை வளரும். உயரம் 7 முதல் 8 அடி உயரம் வரை. சாதுவாகக் காணப்படும் ஒட்டகங்கள், மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் திறன் படைத்தவை என்பது ஆச்சரியம்.
ஒட்டகம் குறுகிய கால இடைவெளியில் 30 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப மாற்றத்தைத் தாங்கும் உடல் அமைப்பைப் பெற்றது. 50 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில்கூட இதன் உடலில் இருந்து வியர்வை வெளியேறாது. அதனால்தான் பாலைவனத்தில் தாக்குப்பிடிக்க முடிகிறது.
பாலைவன மணல் பகுதியில் சுற்றித் திரியும் விலங்கினம் என்பதால், இயற்கையாகவே ஒட்டகங்களுக்கு வித்தியாசமான சுவாச உறுப்புகள் அமைந்துள்ளன. மூக்கு, வாய்ப் பகுதிகள் மிகவும் தடிமனாக இருப்பதால், இதன் மூக்குக்குள் எளிதாக மணல் புகாது. முன்னங்கால்களையும் பின்னங்கால்களையும் வித்தியாசமாக மடக்கிவைத்து இது படுத்திருப்பது வித்தியாசமான காட்சி.
ஒட்டகத்தின் தண்ணீர்
பாலைவனங்கள் என்றால் தண்ணீரே இருக்காது. அங்கு வாழும் ஒட்டகங்களுக்குத் தண்ணீர் தாகம் எடுத்தால் என்ன செய்யும்? தண்ணீர்த் தேவையை எப்படிப் பூர்த்தி செய்துகொள்ளும்?
உலகில் வாழும் பல உயிரினங்களுக்கும், வாழ்வதற்கு ஏற்ற உடலமைப்பை இயற்கையே கொடுத்திருக்கிறது. அதில் ஒட்டகமும் ஒன்று. ஒட்டகத்தின் முதுகுப் பகுதியில் திமில் போன்ற மேட்டுப் பகுதியைப் பார்த்திருக்கிறீர்களா? இந்த இடத்தில் கொழுப்பு உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்படுகின்றன.
ஒட்டகத்தின் இரைப்பையில் 3 அறைகள் உள்ளன. முதல் இரு அறைகளின் சுவர்களில் தனித்தன்மை வாய்ந்த நீர்ச் செல்கள் உள்ளன. இதில்தான் ஒட்டகம் நீரைச் சேமித்து வைக்கிறது. இதோடு, ஒட்டகத்தின் தசைகளிலும் இணைப்புத் திசுக்களிலும் நீர் சேமித்து வைக்கும் அமைப்பு உள்ளது. திமிலில் சேமிக்கப்படும் கொழுப்பு உணவுப் பொருட்களின் மூலம் வளர்சிதை மாற்றம் ஏற்படும். இந்த வளர்சிதை மாற்றம் மூலம் ஒட்டகத்துக்குத் தானாகவே நீர் கிடைத்துவிடும்.
இதை வைத்தே சில வாரங்கள் வரை நீர் அருந்தாமல் ஒட்டகத்தால் தாக்குப்பிடிக்க முடியும். இப்படி மீண்டும் மீண்டும் நீரைச் சேமித்து வைத்துக் கொள்ளவும் ஒட்டகத்தால் முடியும். உடலுக்குள்ளே நீரைத் தேக்கி வைத்துக் கொள்வதால் தான் ஒட்டகத்தைப் "பாலைவனக் கப்பல்' என்றழைக்கிறார்கள்.
நன்கு வளர்ந்த ஒட்டகம் ஏழு அடி உயரமும், 400 முதல் 600 கிலோ எடையும் இருக்கும். ஒரு நன்கு வளர்ந்த ஒட்டகத்தின் திமில் 75 செ.மீ. உயரம் இருக்கும். 40 முதல் 50 ஆண்டுகள் இவை உயிர் வாழும். அதிகப்பட்சமாக 65 கி.மீ. வேகத்தில் ஓடும் இவற்றால் சராசரியாக 40 கி.மீ. வேகத்தில் தொடர்ந்து ஓட இயலும். பெரும்பாலான நாடுகளில் ஒட்டகங்கள் பொதி சுமக்கும் விலங்குகளாகவும், வண்டி இழுக்கவும் பயன்படுத்துகின்றனர். பாலைவனப் பகுதிகளில் இராணுவத்திலும் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
இவை இந்து தமிழ் நாளிதழில் வெளியான தகவல்களாகும். இந்தக் கட்டுரை ஒட்டகத்தின் அற்புதத்தை ஒரு குறுகிய கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்கின்றது. நாம் இதை இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போம்.
30 டிகிரி முதல் 40 டிகிரி வரை வெப்பத்தைத் தாங்கும் ஒட்டகத்தின் உடல்வாகையும் வலிமையையும் இந்தக் கட்டுரை விவரிக்கின்றது.
மனித உடலில் இயல்பான வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும். கோடையில் வளிமண்டல வெப்பநிலை 40 முதல் 45 டிகிரி செல்சியஸ் ஆகும். இந்த வெப்பத்தை மனித உடல் தாங்காது என்பதற்காக, அதைக் குளிர்விப்பதற்காக வியர்வை சுரப்பிகள் மூலம் வியர்வை மழையை இறைவன் கொட்டச் செய்கிறான்.
இதனால் மனித உடலில் தண்ணீர் இருப்பு குறைகின்றது. அதைச் சரிகட்ட தாகம் எடுக்கின்றது. குடம் குடமாக நீரை உடலில் கொட்டி இழந்த நீர்ச்சத்தை மனிதன் ஈடுகட்டி விடுகின்றான். கோடையில் மனிதனின் நிலை இது!
ஆனால் ஒட்டகத்தின் நிலை இப்படி இருந்தால் என்னாவது? பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு மனிதனை அது சுமந்து செல்கின்றது. அதனுடைய உடலில் எப்ங்ஷ்ண்க்ஷப்ங் பட்ங்ழ்ம்ர்ள்ற்ஹற் எனும் எளிதில் வளையத்தக்க வெப்ப நீர்நிலைக் கருவி போன்ற அமைப்பு உள்ளது. அதனால் அதன் உடல் 42 டிகிரி வெப்பநிலையை அடைகின்ற வரை அதற்கு வியர்ப்பதில்லை. 50 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு 8 நாட்கள் உணவு, நீர் இன்றி ஒட்டகம் உயிர் வாழும்.
ஒட்டகம் ஒரு தடவை தண்ணீர் குடித்தால் தனது உடலின் மூன்றில் ஒரு பகுதி அளவுக்கு சுமார் 137 லிட்டர் தண்ணீரைக் குடித்துக் கொள்கிறது. ஒட்டகம் குடிக்கின்ற தண்ணீர் அதன் உடலில் எங்கே சேமித்து வைக்கப்படுகின்றது? இந்தத் தண்ணீர் ஒட்டகத்தின் திமில்களில் தான் சேமித்து வைக்கப்படுவதாகப் பரவலாக நம்புகின்றார்கள். ஆனால் உண்மை அதுவல்ல!
திமில்களில் இருப்பது சுமார் 40 கிலோ அளவிலான கொழுப்பாகும். இந்தக் கொழுப்பு, ஒட்டகத்தின் உடலில் உள்ள தண்ணீர் ஆவியாகிவிடாமல் தடுக்கின்றது. வெப்பத்தின் தாக்கம் உள்ளே பாயாமல் காக்கும் அரணாகத் திகழ்கின்றது. இந்தக் கொழுப்பு ஙங்ற்ஹக்ஷர்ப்ண்ள்ம் - வளர்சிதை மாற்றம் அடைகின்ற போது, அதாவது உடலுக்குத் தேவையான சத்தாக மாறுகின்ற போது, அப்பொழுதும் அங்கு ஓர் அற்புதம் நிகழ்கின்றது.
அதன் ஒவ்வொரு கிராம் கொழுப்புக்கு ஈடாக ஒரு கிராம் தண்ணீரை ஒட்டகத்தின் உடல் பெறுகின்றது. ஒட்டகம் சுவாசிக்கின்ற ஆக்ஸிஜன் இந்த எதிர் வினையாக்கத்தை நிகழ்த்துகின்றது.
குடிக்கும் நீரில் குறிப்பிட்ட அளவு நீரை முதலில் இரத்தத்தின் சிகப்பு அணுக்களுக்கு அனுப்புகிறது. அதற்காக இரத்தத்தின் சிகப்பு அணுக்கள் அதன் உண்மையான அளவை விட 200 மடங்கு பிரிந்து இடமளிக்கிறது. குட்டி போட்டுப் பாலூட்டும் மற்ற பிராணிகள் அனைத்திற்கும் இரத்தத்தின் சிகப்பு அணுக்கள் வட்ட வடிவமாக இருக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் முட்டை வடிவத்தில் இருக்கும். ஒட்டகத்தின் உடலில் 40% நீர் குறைந்தாலும் கூட எந்த பாதிப்பும் இல்லாமல் வாழும் சிறப்பம்சம் கொண்டது.
நீர்ச்சத்து வீணாவதை விட்டும் தடுக்கக்கூடிய வகையில் தான் ஒட்டகத்தின் குடலும், சிறுநீரகமும் மிக வலுவாக அமைக்கப்பட்டுள்ளன. ஒட்டகத்தின் சிறுநீர் மிகவும் அடர்த்தியானதாகும். இதன் அடர்த்தி கடல்நீரை விட அதிகமானது. அதன் சிறுநீர் மருந்துத் திரவம் அல்லது பழச்சாறு போன்று அமைந்திருக்கின்றது. ஒட்டகத்தின் சிறுநீரில் மருத்துவ குணம் இருக்கின்றது என்று இன்றைய அறிவியல் உலகம் கூறுகின்றது.
"உக்ல்' அல்லது "உரைனா' குலத்தாரில் சிலர் (மதீனாவிற்கு) வந்தனர். அவர்களுக்கு மதீனாவின் தட்ப வெப்பநிலை ஒத்துக் கொள்ளவில்லை. எனவே (அவர்கüன் வேண்டுகோளுக்கிணங்க) பால் ஒட்டகங்களைச் சென்றடைந்து, அவற்றின் சிறு நீரையும் பாலையும் பருகிக்கொள்ளுமாறு அவர்களை நபியவர்கள் பணித்தார்கள். அவ்வாறே அவர்களும் (ஒட்டகங்களை நோக்கி) நடந்தனர். (அவற்றின் சிறுநீரையும் பாலையும் பருகி) அவர்கள் உடல் நலம் தேறினார்கள்.
நூல்: புகாரி 233
நபி (ஸல்) அவர்கள் உரைனா கூட்டத்தினரை ஒட்டகத்தின் சிறுநீர் குடிக்கச் சொன்னதன் அறிவியல் உண்மையும் நமக்குப் புலனாகின்றது.
ஒட்டகம் ஓர் அனைத்துண்ணி ஆகும். சைவம், அசைவம் என அனைத்தையும் சாப்பிடுகின்ற கால்நடைப் பிராணி ஆகும்.
பெரும்பான்மையான பாலைவன உணவு உலர்ந்த, முள்ளடர்ந்த தாவர இனங்கள். எத்தகைய கூரிய முட்செடிகளையும் இழுத்து வளைத்து சாப்பிடக்கூடிய அளவுக்கு அதனுடைய உதடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஜீரண உறுப்புக்களும் சவால்களைச் சந்திக்கின்ற வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. மாமிசம், எலும்பு, உப்பு, இனிப்பு என அனைத்து வகை உணவுப் பொருட்களிலும் ஒட்டகம் பாரபட்சம் காட்டுவது கிடையாது. தண்ணீரில் நல்ல தண்ணீர், உப்புத் தண்ணீர் என பேதம் கொள்வதில்லை.
பாலைவனங்களில் வீசுகின்ற பாலைவனப் புயல் ஒரு வித்தியாசமான புயலாகும். தூசியையும் மணல் துகள்களையும் மணற்பரப்பின் அடிப்பகுதியிலிருந்து அப்படியே வாரியிறைக்கும். கண் இமைகளை மூடவில்லை என்றால் கண்ணின் கருவிழிகளில் ஊடுறுவி பதம் பார்த்துவிடும். மணிக்கு பல கிலோ மீட்டர் வேகத்தில் வீசுகின்ற பாலைவனப் புயலின்போது ஒட்டகம் தன் இமைகளை இறுக மூடிக் கொள்கிறது. அப்படியானால் பயணம் எப்படி என்று பயப்படத் தேவையில்லை. இமைகள் மூடினாலும் பார்வையை மறைப்பதில்லை. இமைகளின் தோல்கள் கண்ணாடிகள் போன்று ஒளி ஊடுறுவும் (பழ்ஹய்ள்ல்ஹழ்ங்ய்ற்) தன்மை கொண்டதாகும். அதனால் அவை கண்களை மூடிக் கொண்டு வெளியே பார்க்கும் சக்தி கொண்டவை. ஒட்டகத்தின் இந்தப் பார்வையிலும் அல்லாஹ்வின் அற்புதங்கள் ஒளிந்திருக்கின்றன.
ஒட்டகத்தின் உடலமைப்பு
ஒட்டகத்தின் உடல் மெல்லிய மயிர் தோலில் அமைந்துள்ளது. இந்தத் தோலமைப்பு ஒட்டகத்தைப் பகல் நேரத்தில் கரித்துப் பொசுக்குகின்ற சூரிய வெப்பக்கதிர்களின் பிரதிபலிப்பிலிருந்து காப்பதற்காகத் தான். அதே சமயம் இரவு நேரத்தில் வெப்பநிலை பூஜ்யத்திற்கும் கீழே போகும் போது அந்தக் குளிரின் கோர ஆட்டத்திலிருந்தும் இந்தத் தோலமைப்பு காக்கின்றது.
ஒட்டகம் பாலைவனத்தின் தரையில் படுக்கின்ற போது, தரைச் சூடு அதன் உடலில் தாவி, வாட்டி வதைத்துவிடக் கூடாது என்பதற்காக அதன் உடல் அமைப்பில் சில குறிப்பிட்ட தோல் பகுதிகள் பல அடுக்குகளால் ஆகியிருக்கின்றது.
மனிதனின் பாதங்களின் அடிப்பகுதியில் தோலமைப்பு உடலின் இதர தோலை விட முற்றிலும் வேறுபாடானது. சற்று தடிமனாக அமைந்திருக்கின்றது. இந்தத் தடிமனான பாதப் பகுதி நடந்து, நடந்து காய்த்துப் போவதால் ஏற்பட்டதல்ல. பிறக்கும் போதே அப்படியே அமைந்துள்ளது.
இதுபோன்றே ஒட்டகமும் பிறக்கும் போதே அதன் தோல் பகுதி வெப்பம், குளிர் போன்றவற்றைத் தாக்குப்பிடிக்கும் அளவுக்குத் தடிமனாக அமைந்துள்ளது.
மனிதன் பயணிக்கின்ற இந்த பாலைவனக் கப்பலில் தான் அல்லாஹ்வின் எத்தனை தொழில்நுட்பங்கள் அமைந்துள்ளன.
அல்லாஹு அக்பர்! இது மிகப் பெரிய இறை ஏற்பாடாகும்.
ஒட்டகத்தின் உயிரணுக்கள்
பாலூட்டிகளின் இரத்த அணுக்கள் வட்ட வடிவமானவை! ஆனால் ஒட்டகத்தின் உயிரணுக்கள் முட்டை வடிவமானவை! நீர்ச்சத்து குறையும் போது அதன் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு!
ஒட்டகம் அதிகமான தண்ணீர் பருகும் போது இந்த உயிரணுக்களில் தண்ணீர் ஊடுறுவுகின்ற போது அது பாதிப்புக்குள்ளாகிவிடக் கூடாது என்பதற்காக அல்லாஹ் இப்படி ஓர் அமைப்பை ஆக்கியுள்ளான்.
மூக்கு துவாரத்தை மூடும் கதவுகள்
பாலைவனப் புயலின் போது பொடிப்பொடி மணல் துகள் மூக்கில் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக, மூக்கை மூடக்கூடிய விஷேச மூடிகள் உள்ளன. அவற்றை வைத்து மூக்கு துவாரத்தை மூடிக் கொள்கின்றன.
நாசித்துவாரத்தைக் குளிரூட்டுவதற்காக இறைவனின் தனி ஏற்பாடும் நாசிப் பகுதியில் அமைந்துள்ளது. அந்த அலாதியான அற்புத ஏற்பாடு, ஒட்டகம் சுவாசிக்கின்ற மூச்சுக் காற்று மூக்கின் வழியே கடந்து சொல்லும் போது அதன் நீர்ச்சத்தைக் குறைத்துவிடக் கூடாது என்பதற்காகத் தான்.
ஒட்டகத்தின் பாதங்கள்
இந்த ஒட்டகத்தின் பாதங்கள் மனிதர்கள் அணிகின்ற ஷூக்கள் போன்று தரைச் சூட்டின் தாக்குதலிலிருந்து அதைப் பாதுகாக்கின்றது. அதிக எடை கொண்ட பாரங்களை ஒட்டகம் சுமந்து செல்கின்ற போது பாலை மணலில் புதைந்து உள்வாங்கிவிடக் கூடாது என்பதற்காக ஒரு பிரத்தியேக தொழில்நுட்பத்தில் அதன் பாதங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இப்படி ஒட்டகத்தின் ஒவ்வொரு உள், வெளி உறுப்புகளும் தனித்தனி அற்புதத்தைத் தாங்கி நிற்கின்றன.
இதனால் தான் அல்லாஹ், "ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா?'' (88:17) என்று கேட்கின்றான்.


Wednesday, February 28, 2018

உலகம் அழிவதைப் பற்றி அறிவியல் உலகம் என்ன சொல்கிறது?


உலகம் அழிவதைப் பற்றி அறிவியல் உலகம் என்ன சொல்கிறது?

சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்து கோள்களும் தன்னைத்தானே சுற்றிக் கொள்வதை நாம் அறிவோம். அவ்வாறு சுற்றும் போது அவை ஆண்டி க்ளாக் வைஸில் சுற்றுகின்றன. அதாவது கடிகார முள் எத்திசையில் செல்கிறதோ அதற்கு எதிர் திசையில் சுழல்கின்றன. வெள்ளி(வீனஸ்), நெப்டியூன் என்ற இந்த இரண்டு கிரகங்கள் மட்டும் வழக்கத்துக்கு மாற்றமாக க்ளாக் வைஸில் சுற்றுகின்றன. இது எப்படி ஏற்பட்டது? அறிவியல் ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

வீனஸூம், நெப்டியூனும் பல ஆண்டுகளுக்கு முன்பு மற்ற கிரகங்களைப் போல ஆண்டி க்ளாக் வைஸில் சுற்றியதாகவும் அந்த கிரகங்களில் காந்த மண்டலங்களில் நடந்த பல மாற்றங்களினால் க்ளாக் வைஸில் தற்போது சுற்றுவதாக கண்டு பிடித்திருக்கின்றனர். இதே போன்ற மாற்றங்கள் மற்ற கோள்களுகளுக்கும் நடக்கும். அதில் பூமிக்கு நடக்கப் போவது மிக சமீபத்தில் என்றும் கண்டு பிடித்திருக்கிறார்கள். அவ்வாறு பூமி எதிர் திசையில் சுழல ஆரம்பித்தால் என்னவெல்லாம் நடக்கும்?

நாற்பது மைல் வேகத்தில் செல்லக் கூடிய ஒரு பேருந்து திடீரென நிறுத்தப்பட்டால் அதில் பயணம் செய்தவர்கள் தூக்கி எறியப்படுவதை நாம் அனுபவித்திருக்கிறோம். திடீரென நிறுத்தப்படுவது மட்டுமின்றி உடனேயே பின்புறமாக அதே வேகத்தில் இந்தப் பேருந்து செல்வதாக கற்பனை செய்து பாருங்கள்! இது இன்னும் மோசமான விளைவை ஏற்படுத்தும்.

அப்படியானால் ஆயிரம் மைல் வேகத்தில் சுழலும் இந்தப் பூமி திடீரென நிறுத்தப்பட்டு எதிர்த் திசையில் அதே வேகத்தில் சுழன்றால் அதன் விளைவு எத்தகையதாக இருக்கும் என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். கட்டிடங்கள் மலைகள் மனிதர்கள், விலங்குகள் என்று அனைத்து பொருட்களும் தூக்கி வீசப்படும். இது இன்றைய அறிவியல் கண்டுபிடித்துள்ள மகத்தான உண்மை. இதனைக் குறித்து இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதையும் பார்போம்.


சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதற்கு முன் கியாமத் நாள் ஏற்படாது. அதைக் கண்டவுடன் மக்கள் இறைவனை நம்புவார்கள். ஆயினும் அதற்கு முன்பே நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு அந்த நம்பிக்கைபயனளிக்காது என்று நபிகள் நாயகம்  அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி),
நூல்: புகாரி 4635, 4636, 6506, 7121

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியையும்,அவன் படைத்துள்ள ஏனைய பொருட்களையும், அவர்களின் காலக்கெடு அருகில் இருக்கக் கூடும் என்பதையும் அவர்கள் கவனிக்கவில்லையா?இதன் பிறகு எந்தச் செய்தியைத் தான் அவர்கள் நம்பப் போகிறார்கள்?
(திருக்குர்ஆன் 7:185)

நபிகள் நாயகம்  அவர்கள் தமது ஆட்காட்டி விரலையும்,நடு விரலையும் இணைத்துக் காட்டிநானும் யுக முடிவு நாளும் இவ்விரல்கள் அருகருகே இருப்பது போல இருக்கிறோம்'' எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி),
நூல்: புகாரி 4936, 5301, 6503