Followers

Sunday, July 22, 2012

மனக் குழப்பத்திற்கு தீர்வு! அது எங்கே?

மனக் குழப்பத்திற்கு தீர்வு! அது எங்கே?

இன்று உலக மனைத்தும் ஒரு பிரச்னை பலரையும் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது என்றால் அது மன நோயாகத்தான் இருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் மனநோயால் பாதிக்கப்பட்ட பலரை பார்க்கிறோம். காதலில் தோல்வி: மதிப்பெண் குறைவாக வாங்கியது: படிப்பு வரவில்லை: வியாபாரத்தில் தோல்வி: மேலதிகாரி கொடுக்கும் ஓவர் டார்ச்சரால் வரும் மனக் குழப்பம்: கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும் மனக் குழப்பம். இது போன்ற தோல்விகள் ஒரு மனிதனுக்கு ஏற்படும் போது சிலர் தாங்கிக் கொள்கிறார்கள். தாங்கிக் கொள்ள முடியாத பலஹீன இதயம் உடையவர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்க்கையை தொலைத்து விடுவதை பார்க்கிறோம்.

மனக் குழப்பத்தற்கு தீர்வு - 1,2,3




இதை சில பாமர மக்கள் பேய் பிடித்திருக்கிறது என்ற காரணத்தை கற்பித்து பாதிக்கப்பட்டவர்களை ஏர்வாடி, நாகூர், வேளாங்கண்ணி, கோவில்கள் என்று அவர்களை கொண்டு சென்று கட்டி போட்டு அவர்களின் வியாதியை அதிகமாக்குவதைப் பார்க்கிறோம். ஓரளவு விஷயம் தெரிந்தவர்கள் மனநல மருத்துவர்களை அணுகி பல வருடங்கள் மாத்திரைகளை சாப்பிட்டு வருவதை பார்த்து வருகிறோம். சிலருக்கு மின்சாரத்தின் மூலமாக ஷாக் கொடுத்து அவர்களை நார்மலுக்கு கொண்டு வருவதையும் பார்க்கிறோம்.

இது போன்ற மன நோய்கள் எதனால் வருகின்றன? அப்படி வந்தால் அதற்கு என்ன தீர்வு உள்ளது? குடும்பத்தில், மத விஷயங்களில், நண்பர்கள் மத்தியில், நம்மை படைத்த இறைவனைப் பற்றிய நம்பிக்கையில் என்று எங்கெல்லாம் இந்த மனக் குழப்பங்கள் வரும் என்பதை மிக தெளிவாக சகோ பி.ஜெய்னுல்லாபுதீன் இந்த ரமலான் மாதம் முழுவதும் மெகா டிவியில் தொடர்ந்து பேசி வருகிறார். சாதி மத வித்தியாசம் இன்றி அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு சிறந்த நிகழ்ச்சி இது என்றால் மிகையாகாது. இது வரை மூன்று நாள் பேசிய பேச்சுக்கள் onlinepj.com யில் சென்று டவுன் லோடு செய்து கொள்ளுங்கள். மெகா டிவி பார்க்க வாய்ப்புள்ளவர்கள் தொலைக் காட்சியிலும் சென்னையில் உள்ளவர்கள் நேரிடையாகவே இந்த நிகழ்ச்சியையும் பார்க்கலாம்.

நம் பதிவர்களில் தருமி, சார்வாகன், கோவி கண்ணன், நரேன், இக்பால் செல்வன் போன்றவர்களுக்கு ஒரு எண்ணம் இருக்கிறது. தாங்கள்தான் மிகச் சிறந்த அறிவாளிகள் என்றும் முஸ்லிம்கள் சிந்திக்க தெரியாமல் இன்னும் குர்ஆனையே அனைத்துக்கும் தீர்வாக பார்க்கிறார்கள். சொந்த புத்தியைக் கொண்டு சிந்திப்பதில்லை. நம்மைத்தான் அல்லா படைத்தார் என்றால், அல்லாவை படைத்தது யார்? என்ற கேள்விக்கு முஸ்லிம்களின் பதில் என்ன? என்றெல்லாம் பதிவுகளில் கேட்டு வருகின்றனர்.

பதிவர் தருமியோ இன்னும் ஒரு படி மேலே போய் 'எப்படி படித்தவர் முதல் பாமரர் வரை இந்த குர்ஆனை வரிக்கு வரி முக்கியத்துவம் கொடுத்து இறைவன் அருளியது தான் என்று முஸ்லிம்களால் நம்ப முடிகிறது'? என்று ஒரு முறை தனது பதிவிலே ஆச்சரியப்பட்டு கேட்டார். ஏனெனில் இந்து மதத்திலும் கிறித்தவ மதத்திலும் வேதங்களுக்கு இந்த அளவு முக்கியத்துவம் அவர்கள் கொடுப்பதில்லை. இதை எல்லாம் பார்த்த தருமி முஸ்லிம்களிடம் மட்டும் ஏன் இந்த நாத்திகம் ஊடுருவவில்லை என்று ஆச்சரியப்படுகிறார். இஸ்லாத்தை எதிர்த்து இதுவரை 30 பதிவுகளாவது எழுதியிருப்பார். நான் பதிவுலகில் நுழைந்த காலத்திலிருந்து சொர்க்கத்து கன்னிகள், கில்மான்கள் சந்தேகம் இன்னும் அவருக்கு தீர்ந்த பாடில்லை. :-)

இவர்கள் கேட்கும் இந்த கேள்வியை அன்றே நபியின் தோழர்கள் முகமது நபியிடம் நேரிடையாகவே கேட்டுள்ளனர். ஒரு நபர் முகமது நபிக்கு முன்னால் வந்து மக்கி போன மனித எலும்பை எடுத்து தனது கையில் கசக்கி தூசியாக்கி அதை தனது வாயால் ஊதுகிறார். ஊதி விட்டு 'முகம்மதே! இவ்வாறு நான் தூசியாக காற்றில் கலந்தவுடன் என்னை திரும்பவும் யார் உயிர்ப்பிப்பார்?' என்று கிண்டலாக கேட்ட வரலாறும் உண்டு. எனவே முகமது நபியின் தோழர்கள் இன்றுள்ள பகுத்தறிவாளர்களை விட அதிக விஷய முடையவர்களாகவே இருந்துள்ளனர். அன்றே பெரியார்களும் சித்தர்களும் அரபுலகில் இவர்களை விட சிறந்த கேள்விகளை கேட்டு பதிலையும் பெற்றுள்ளார்கள். தான்தான் அறிவாளி என்று சதா நினைத்துக் கொண்டிருப்பதும் ஒரு வகையான மன நோயே! பெரியார் தாசனிடம் (அப்துல்லா) கேட்டால் இந்த மன நோய்க்கும் ஒரு பெயரை சொல்லுவார். :-)

எனவே இந்த மாதம் முழவதும் இந்த டிவி தொடரை தொடர்ந்து பார்த்து எழும் சந்தேகங்களை அவரிடம் நேரிடையாகவே கேட்டு குர்ஆன் மூலம் தெளிவு பெற்ற மக்களாக நம்மை ஆக்க இந்த ரமலானில் அந்த ஏக இறையை பிரார்த்தித்து இந்த பதிவை முடிக்கிறேன்.





18 comments:

Unknown said...

ஜெய்னுல்ஆபிதீன் சீடர்கள், தங்களைத்தவிர மற்ற எல்லோரும் இணைவைப்பாளர்கள் என்ற மனக் குழப்பத்தில் இருக்கிறார்களே, அதற்க்கு தீர்வு சொல்வார??

சிராஜ் said...

சலாம் அண்ணன் சுவனப்பிரியன்,

பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி... நான் தினமும் டிவியில் பார்த்து வருகிறேன்...

அண்ணன் பிஜெ அவர்கள் வழக்கமான முறையில் ரொம்ப அழகாக விளக்கம் கொடுத்து வருகிறார்... நிகழ்ச்சி ரொம்ப நல்லா இருக்கு...

Nizam said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அருமையான பதிவு மிகவும் அருமையாக தொகுத்து வழங்கியுள்ளீர். அல்லாஹ் உங்களுக்கு கேள்வி ஞானத்தையும், கல்வியை தந்தருளுவானகாக.
உன்மையையில் இது எல்லோரும் கேற்காவேண்டியா தலைப்பு. ஏரளாமான ஹதீஸ்களை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக கேட்டேன். மாஷா அல்லாஹ். சாதரான மனிதனுக்கு வர கூடிய கேள்விகளை நபி அவர்கள் அப்பொழுதே எழியமுறையில் விளக்கம் கொடுத்ததை பீ.ஜே. பேச்சில் கேற்க நேர்ந்தாது.

suvanappiriyan said...

உகாண்டா தோழன்!

//ஜெய்னுல்ஆபிதீன் சீடர்கள், தங்களைத்தவிர மற்ற எல்லோரும் இணைவைப்பாளர்கள் என்ற மனக் குழப்பத்தில் இருக்கிறார்களே, அதற்க்கு தீர்வு சொல்வார??//

இதை பிஜேயிடம் சென்னையில் இருந்தால் நேரிடையாகவே கேட்கலாமே? :-)

suvanappiriyan said...

சலாம் சகோ சிராஜ்!

//பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி... நான் தினமும் டிவியில் பார்த்து வருகிறேன்...

அண்ணன் பிஜெ அவர்கள் வழக்கமான முறையில் ரொம்ப அழகாக விளக்கம் கொடுத்து வருகிறார்... நிகழ்ச்சி ரொம்ப நல்லா இருக்கு...//

மிக சிறந்த தலைப்பு. அனைவரும் பார்க்க வேண்டிய நிகழ்ச்சி. தெரிந்தவர்கள் அனைவரிடமும் அறிமுகப்படுத்தி இந்த நிகழ்ச்சி பலரையும் சென்றடையச் செய்ய வேண்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ நிஜாம்!

//உன்மையையில் இது எல்லோரும் கேற்காவேண்டியா தலைப்பு. ஏரளாமான ஹதீஸ்களை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக கேட்டேன். மாஷா அல்லாஹ். சாதரான மனிதனுக்கு வர கூடிய கேள்விகளை நபி அவர்கள் அப்பொழுதே எழியமுறையில் விளக்கம் கொடுத்ததை பீ.ஜே. பேச்சில் கேற்க நேர்ந்தாது//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

salam

//இதை எல்லாம் பார்த்த தருமி முஸ்லிம்களிடம் மட்டும் ஏன் இந்த நாத்திகம் ஊடுருவவில்லை என்று ஆச்சரியப்படுகிறார். இஸ்லாத்தை எதிர்த்து இதுவரை 30 பதிவுகளாவது எழுதியிருப்பார். நான் பதிவுலகில் நுழைந்த காலத்திலிருந்து சொர்க்கத்து கன்னிகள், கில்மான்கள் சந்தேகம் இன்னும் அவருக்கு தீர்ந்த பாடில்லை.//
நானும் என் பங்கிற்கு தருமிக்கு ஒரு முழுமையான ஆய்வுக் கட்டுரையை பதிலாக அனுப்பினேன்(சொர்கத்து கண்ணிகளை பற்றிய முழு பதிலுடன்) மனுஷன் இன்னும் தான் அதற்க்கு வாய திறக்காமல் இருக்கிறார்.

பார்க்க:http://tvpmuslim.blogspot.in/2011/11/blog-post_24.html

http://tvpmuslim.blogspot.in/2012/05/blog-post_09.html


நீங்களாவது அத பத்தி என்னனு கேட்டு சொல்லுங்க சகோ.



புனித ரமளானில் பாவங்களில் இருந்து மீண்டு நன்மைகளை அதிகமதிகம் செய்யும் நல் வாய்ப்பினை உங்களுக்கும் எனக்கும் அந்த அல்லாஹ் தந்தருளுவானாக-ஆமீன்

புதிய வரவு: குடிதண்ணீரை எப்போ குடிக்கனும்னு உங்களுக்கு தெரியுமா?
www.tvpmuslim.blogspot.com

suvanappiriyan said...

சலாம் திருவாளப்புத்தூர் முஸ்லிம்!

//புனித ரமளானில் பாவங்களில் இருந்து மீண்டு நன்மைகளை அதிகமதிகம் செய்யும் நல் வாய்ப்பினை உங்களுக்கும் எனக்கும் அந்த அல்லாஹ் தந்தருளுவானாக-ஆமீன்

புதிய வரவு: குடிதண்ணீரை எப்போ குடிக்கனும்னு உங்களுக்கு தெரியுமா?
www.tvpmuslim.blogspot.com //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

சீனு said...

//தான்தான் அறிவாளி என்று சதா நினைத்துக் கொண்டிருப்பதும் ஒரு வகையான மன நோயே!//

என்னையும் அறியாமல் சிரிச்சுட்டேன்...

suvanappiriyan said...

நண்பர் சீனு!

//என்னையும் அறியாமல் சிரிச்சுட்டேன்..//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Nizam said...

திருவாளப்புத்தூர் முஸ்லீம்,

//நானும் என் பங்கிற்கு தருமிக்கு ஒரு முழுமையான ஆய்வுக் கட்டுரையை பதிலாக அனுப்பினேன்//

WHY I AM NOT A MUSLIM?ன் இதை சொல்ல ஒன்று பாத்ததா? 23+1+.....Etc., கூடிகிட்டே போரதா பார்த்தா அவர்க்குள் அடிக்கடி தடுமாற்றம் நிகழ்கிறாது போலும். அல்லாஹ் தான் அறிவான்.

suvanappiriyan said...

சகோ நிஜாம்!

//WHY I AM NOT A MUSLIM?ன் இதை சொல்ல ஒன்று பாத்ததா? 23+1+.....Etc., கூடிகிட்டே போரதா பார்த்தா அவர்க்குள் அடிக்கடி தடுமாற்றம் நிகழ்கிறாது போலும். அல்லாஹ் தான் அறிவான். //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

UNMAIKAL said...

// சார்வாகன் said ….23 July 2012 08:59
உண்மை கூறிய காஃபிர் அறிவியலாளர்களில் எவர் மூமின் ஆனார் என்ற தகவல்களையும் சகோக்கள் அளிக்க வேண்டுகிறேன்.நன்றி /////

சார்வாகனுக்கு இதோ பதில்.

தந்திருப்பது நதியில் சில துளிகளே. சிந்திப்பவர்களுக்கு இது போதுமானது.

விஞ்ஞானிகள் ஏன் இஸ்லாத்தை தழுவுகிறார்கள்?

முகம்மது நபி அவர்களைப்பற்றியும், தற்போதே கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகள் 1400 வருடத்துக்கு முன்னரே திருக்குரானில் வெளிப்பாடாகி இருப்பதையும் கண்டு வியக்கும் உலகளாவிய விஞ்ஞானிகள்.

சுட்டிகளை சொடுக்கி விடியோ காணவும்

1.>>>>> Top Scientists Comments on Scientific Miracles in the Quran <<<<<


2.>>>>> NASA confirmed islam is The correct Religion <<<<<

3.>>>>> a Scientist explains why he become a muslim, interesting <<<<<

4.>>>>> 52 Great Famous People Converted to Islam 2010,2011 <<<<<

5.>>>>> Glenn Beck admits islam is the truth <<<<<

6.>>>>> A Priest rejects christ's and appreciate IslamAn consistent Roman Catholic Priest rejects christ's salvation, yet apprectiate Islamic values and teachings <<<<<

7.>>>>> Scientist converted to islam after reading Quran. <<<<<

8.>>>>> American Scientist converts to Islam <<<<<

9. >>>>> Christian Professor converts to Islam.Professor Fidelma O'Leary is an Irish former Catholic who embraced Islam.. Islam is the fastest growing religion in the world. Islam is going to dominate many Places in USA and Europe in the next few years, and is now a fiery revival sweeping much of the planet from Africa to Asia to Latin America to Europe to USA. The number of Europeans, Americans, Latinos and Africans converting to Islam is growing rapidly <<<<<

10 >>>>> Czech Scientist Woman Converted to Islam <<<<<

11. >>>>> Science students in america convert to islam <<<<<

12. >>>>> Top American Surgeon embraced Islam - "I was trying very hard to be a Christian" <<<<<

13. >>>>> Dr.Maurice Bucaille ( why i'm muslim) <<<<<

14. >>>>> German scientist and his wife converted to Islam <<<<<

15. >>>>> An American scientist explains how he found a new way of life .American Scientist converts to Islam <<<<<

.

UNMAIKAL said...

// சார்வாகன் said ….23 July 2012 08:59
உண்மை கூறிய காஃபிர் அறிவியலாளர்களில் எவர் மூமின் ஆனார் என்ற தகவல்களையும் சகோக்கள் அளிக்க வேண்டுகிறேன்.நன்றி /////

சார்வாகனுக்கு இதோ பதில். தந்திருப்பது நதியில் சில துளிகளே. சிந்திப்பவர்களுக்கு இது போதுமானது.

விஞ்ஞானிகள் ஏன் இஸ்லாத்தை தழுவுகிறார்கள்?
முகம்மது நபி அவர்களைப்பற்றியும், தற்போதே கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகள் 1400 வருடத்துக்கு முன்னரே திருக்குரானில் வெளிப்பாடாகி இருப்பதையும் கண்டு வியக்கும் உலகளாவிய விஞ்ஞானிகள்.

சுட்டிகளை சொடுக்கி விடியோ காணவும்

16. >>>>> Czech Scientist Woman Converted to Islam <<<<<

17. >>>>> Scientist from Czech Converts To Islam <<<<<


18. >>>>> Science students in america convert to islam <<<<<


19. >>>>> Anatomy : Scientist converted to islam after reading Quran. <<<<<


20. >>>>> Scientist's Comments On The Qur'an <<<<<

21. >>>>> Scientific Truth In The Quran: Earths Atmosphere .In this video one shall see how the scientific fact that the atmosphere protects Earth was revealed in the glorious Quran more than 1400 years before scientists discovered it. According to recent science discovery the atmosphere acts like a protected roof from x-rays and wide variety of dangers that would make like impossible on earth if there was no atmosphere. <<<<<

22. >>>>> The Qur'an Leads The Way To Science .Scientific observation introduces man to the mysteries of creation, and ultimately, to God's eternal knowledge, wisdom and power. As stated by Albert Einstein, "science without religion is lame", which is to say, that science, unguided by religion, cannot proceed correctly, but rather, wastes much time in achieving results, and worse, is often inconclusive. Islam is a religion of reason that encourages science. Watch this film to see how the Qur'an leads the way to science by calling on people to reflect upon and examine the signs of creation around them. <<<<<

Flavour Studio Team said...

//தான்தான் அறிவாளி என்று சதா நினைத்துக் கொண்டிருப்பதும் ஒரு வகையான மன நோயே! பெரியார் தாசனிடம் (அப்துல்லா) கேட்டால் இந்த மன நோய்க்கும் ஒரு பெயரை சொல்லுவார். :-) //

ஹஹஹா செம்ம செம்ம...
அருமையான பகிர்வு அண்ணே.. இன்னும் அந்த நிகழ்ச்சி பார்க்கும் சந்தர்ப்பம் அமையவில்லை.. கண்டிப்பா பாக்கணும் போல இருக்கே.. :)இன்ஷா அல்லாஹ்

suvanappiriyan said...

சகோ ஷர்மிளா ஹமீத்!

//ஹஹஹா செம்ம செம்ம...
அருமையான பகிர்வு அண்ணே.. இன்னும் அந்த நிகழ்ச்சி பார்க்கும் சந்தர்ப்பம் அமையவில்லை.. கண்டிப்பா பாக்கணும் போல இருக்கே.. :)இன்ஷா அல்லாஹ் //

இரண்டு நாள் நிகழ்ச்சியை யுட்யூபிலிருந்து எடுத்து பேஸ்ட் செய்துள்ளேன். நேரம் கிடைக்கும் போது அவசியம் பாருங்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ உண்மைகள்!

//சார்வாகனுக்கு இதோ பதில்.

தந்திருப்பது நதியில் சில துளிகளே. சிந்திப்பவர்களுக்கு இது போதுமானது.//

உண்மைகளை உலகுக்கு உரத்து சொல்லும் உண்மையான பின்னூட்டத்தை தந்தமைக்கு நன்றி!

Anonymous said...

Home இஸ்லாம் ஜகாத் அல்லாஹ்வின் பாதையில் ஜகாத்