Followers

Wednesday, August 22, 2012

குடிகாரன் பேச்சு- ஒரு கலக்கல் அனுபவம்!

20 வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம் இது. ஒரு முறை திருச்சியை சேர்ந்த குமார் எங்களோடு எப்போதும் ஒன்றாகவே இருப்பான். சவுதி வந்த புதிதில் கடைகளுக்கு ஏதும் வாங்க சென்றால் அங்கு பெப்ஸி, மற்றும் மிராண்டாவோடு பீரும் வைத்திருப்பார்கள். அதைப் பார்த்த எனககு அதிர்ச்சி. நம் ஊரில் கூட மதுவை பொதுவில் விற்பதில்லையே! இது ஒரு முஸ்லிம் நாடு என்று சொல்கிறார்கள். சிறுவர்கள் பெண்கள் எல்லாம் வந்து போகும் இந்த கடையில் இவ்வளவு பப்ளிக்காக விற்கிறார்களே! என்று எனக்கு ஆச்சரியம். சவுதி சட்டத்தை விமரிசித்தால் நமக்கு பிரச்னை என்பதால் யாரிடமும் கேட்காமல் மனதுக்குள் நினைத்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.

பிறகு எங்களுக்கு பல ஆண்டுகள் முன்பே சவுதி வந்தவரிடம் இது பற்றி கேட்டேன். அதற்கு அவர் சிரித்துக் கொண்டே 'இந்த பீரை ஹலால் பீர் என்று சொல்வார்கள். இதில் உள்ள போதை நீக்கப்பட்டு உடலுக்கு குளிர்ச்சியை மட்டுமே தருமாறு இந்த பானம் தயாரிக்கப்பட்டிருக்கும். நீயும் குடித்து பார். ஒன்றும் பிரச்னை இல்லை' என்று அவரே கடையில் வங்கிக் கொண்டு வந்து கொடுத்தார்.

பீர் பாட்டிலை கையில் பார்த்தவுடன் எனக்கு மனது திக் திக்கென்று அடித்துக் கொண்டது. ஒருக்கால் போதை வந்து விட்டால் என்ன செய்வது? என்று யோசிக்கலானேன். நண்பரோ 'சும்மா குடிப்பா.. ஒன்னும் ஆகாது' என்று சொல்லவே பீரை குடிக்க ஆரம்பித்தேன். அது லெமன் கலந்த பீர். புது ருசியாக நன்றாகவே இருந்தது. ஆனால் நான் குடித்ததை குமார் கவனிக்கவில்லை.

குமார்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) எப்போதுமே தான் தனது கிராமத்தில் சாராயத்தை மிக அனாயசமாக குடித்ததாகவும் எவ்வளவு குடித்தாலும் ஸ்டடியாக இருப்பேன் என்றும் பெருமை பேசுவான். தங்கள் கிராமத்தில் குடியால் வந்த சண்டைகளையும் அதனால் ஏற்பட்ட பஞ்சாயத்து தீர்ப்புகளையும் பல முறை சொல்லியிருக்கிறான். நாங்களும் அவன் சொல்லும் கதைகளெல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருப்போம். ஒரு முறை நானும் எனது நண்பன் முபாரக்கும் குமாரை கலாய்க்க முடிவு செய்தோம். இந்த ஹலால் பீரை யாருக்கும் தெரியாமல் கொண்டு வருவது போல் கொண்டு வந்து அனைவரும் அமர்ந்து குடிப்பது என்று முடிவு செய்தோம். நாங்கள் பேசியது குமாருக்கு தெரியாது.

புதன் கிழமை இரவு குமாரிடம் 'டேய் குமார்...நாளை விடுமுறை. எனவே ஒரு இடத்தில் ஒரு பார்ட்டியிடம் பீருக்கு ஆர்டர் பண்ணியிருக்கிறோம். இரவில் யாருக்கும் தெரியாமல் குடிக்கலாம். இதை வெளியில் யாரிடமும் சொல்லி விடாதே' என்றோம். அவனும் சந்தோஷமாக தலையாட்டினான்.

வியாழன் இரவும் வந்தது. இரவு சாப்பாடு முடிந்தவுடன் சிலர் சினிமா பார்க்க சென்று விட்டனர். முபாரக் கடைக்கு சென்று நான்கு பீர் பாட்டில்களை வாங்கி வந்தான். நான், குமார், முபாரக், அலி இந்த நான்கு பேரும் அறையை பூட்டிக் கொண்டு மிக்சர் சகிதமாக டேபிளில் அமர்ந்தோம்.

'முபாரக்! இங்க கொண்டு வரும் போது யாரும் பார்க்கல்லியே' - குமார்

'இல்லப்பா! மாட்டினால் அவ்வளவுதான். மறைத்துதான் கொண்டு வந்தேன்'- முபாரக்.

'இனிமேல் வாங்க போனால் துணி பை கையோடு கொண்டு செல்லவும். அப்பொழுதுதான் வெளியில் தெரியாது. பிளாஸ்டிக் பையில் ஒருக்கால் தெரிந்து விடும்'- சுவனப்பிரியன்.

இத்தனை களேபரங்களுக்கு இடையில் ஹலால் பீரை குடிக்க ஆரம்பித்தோம். ஹலால் பீர் என்ற ஒன்று உள்ளதை அறியாத குமார் ஒரிஜினல் மது என்ற நினைப்பில் குடிக்க ஆரம்பித்தான். நாங்கள் எல்லாம் சகஜமாக பேசிக் கொண்டிருந்தோம். சிறிது நேரம் கழித்து குமார், 'ரொம்ப நாளைக்கு அப்புறம் குடிப்பதால் போதை கொஞ்சம் லேட்டாத்தான் ஏறுது' என்று சொன்னவுடன் நானும் அலியும் முபாரக்கும் வாய் விட்டு சிரித்து விட்டோம். நாங்கள் சிரித்ததை போதையில் சிரிப்பதாக நினைத்துக் கொண்டு அவனும் ஒரு மாதிரியாக போதையோடு சிரித்தான். அதாவது போதை வருவதாக நினைத்துக் கொண்டு சிரித்தான். எங்களால் சிரிப்பை அடக்க முடியாமல் அவன் தலையில் தட்டி 'இது ஹலால பீர்டா...இதில போதையே கிடையாது. உனக்கு எங்கிருந்து வந்தது போதை?' என்று கலாய்க்கவும் பிறகு சுதாரித்துக் கொண்டு 'அதானே...போதையே ஏறலியேன்னு பார்த்தேன்' என்று அப்பாவியாக கேட்டான்.

இந்த சம்பவத்தை இன்று நினைத்தாலும் சிரிப்பு வரும். உடல் வலிக்காக மதுவை குடிக்கிறோம் என்று சொல்பவர்கள் ஆல்கஹால் நீக்கப்பட்ட மதுவை குடிக்கலாமே. அது குடலுக்கு குளிர்ச்சியை தரும். ஆல்கஹால் கலந்த மது குடலை அரிக்க ஆரம்பிக்கும்.

ஹலால் பீர் தயாரிக்கும் நிறுவனங்கள், "இந்த பீரில் 0.01% ஆல்கஹால் இருப்பதாக" விளம்பரம் செய்கின்றது. அதுதான் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் குழு அனுமதிக்கும் ஆல்கஹால் அளவு. இந்த அளவை மீறி ஒரு பானத்தில் ஆல்ஹகால் அதிகமாக கலக்கப்படுமானால் அது போதை ஏற்றக் கூடியதாக மாறி விடுகிறது. இதனை இஸ்லாம் தடை செய்கிறது.

“சாராயத்தைப்பற்றியும், சூதாட்டத்தைப்பற்றியும், அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள், நீர் கூறும், இவ்விரண்டிலும் பெரும் பாபம் இருக்கின்றது.மனிதர்களுக்கு சில பயன்களுமிருக்கின்றன. ஆனால் அவ்விரண்டிலுள்ள பாபம், அவ்விரண்டிலுள்ள பயனை விடப்பெரிது.” அல்குர் ஆன்-2:219

மது குடிப்பதால் சில பயனுண்டு என்று அல்குரான் கூறுவதை, இன்றைய நவீன அறிவியல் உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது.அதாவது இதய நோய் மற்றும் மாரடைப்பு (Coronary Heart Diesease) வராமல் தடுப்பதில் சிறிது பங்குண்டு.ஆயினும் இப்படி சிறிது மது குடிப்பவனின் நிலமை,ஒருவன் செங்குத்தாக வழுக்குப்பாறையில் ஏறுவதற்க்குச்சமம்.எந்த நிலையிலும் அவன் சறுக்கி விழலாம் உயிருக்கு ஆபத்து. ஆகவேதான் இதில் பல மடங்கு தீமை உள்ளது என்று அல்லாஹ் தடை செய்கின்றான்.

உலகப்புகழ் பெற்ற மருத்துவ ஆய்வுக்கழகமான அமெரிக்காவின் மாயோ மருத்துவ கழகமும் இதையே கூறுகின்றது.( Mayo Foundation for Medical Education and Research )
“Alcohol may offer some health benefits, Especially for your heart. On the other hand, alcohol may increase your risk of health problems and damage your heart. Certainly, you do not have to drink any alcohol,and if you currently do not drink, and do not start drinking for the possible health benefits. In some cases, its safest to avoid alcohol entirely – the possible benefits do not outweigh the risks. ” ——www.mayoclinic.com/health/alcohol

விசுவாசம் கொண்டோரே! நிச்சயமாக மதுவும் சூதாட்டமும் (வணக்கத்திற்காக) நாட்டப்பட்டுள்ளவைகளான சிலைகளும் குறிபார்க்கும்(சூதாட்ட) அம்புகளும் ஷைத்தானுடைய செயல்களிலுள்ள அருவருக்கத்தக்கவையாகும். ஆகவே இவைகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றிபெறுவீர்கள். (அல்குர்ஆன் 5:90)

நபி அவர்கள் கூறுகிறார்கள்: போதை தரும் அனைத்தும் மதுவாகும். போதை தரும் அனைத்தும் ஹராமாகும்.(அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: முஸ்லிம்)

கள் குடி பற்றித் திருமந்திரம்

உள்உண்மை ஓரார் உணரார் பசுபாசம்
வள்ளன்மை நாதன் அருளினன் வாழ்வுறார்
தென் உண்மை ஞான சிவயோகம் சேர்வுறார்
கள் உண்ணும் மாந்தர் கருத்தறியாரே.

திருக்குறள்

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

மனுதர்மசாஸ்திரம்

மருந்துக்காவது மதுபானம் அருந்தியவன் அப்பாபத்தைப் போக்க கந்தை வஸ்திரத்தைத் தரித்து, சடை முடியுடன் ஓராண்டு நெய்யை அல்லது பிண்ணாக்கை சாப்பிட்டு இருக்க வேண்டும்.

டிஸ்கி: நம் வீடுகளில் பெண்கள் சமையலுக்காக கசகசா என்ற ஒரு பொருளை சேர்ப்பார்கள். அது மிக வீரியமுள்ள போதைப் பொருளாம். இது தெரியாமல் சில பெண்கள் பார்சல் கட்டிக் கொண்டு சவுதி வந்து விடுவார்கள். விமான நிலையத்தில் இதனை மிகப்பெரும் பிரச்சினையாக்கி விடுவர் அலுவலர்கள். எனவே சவுதி வருபவர்கள் கசகசாவை எக்காரணத்தை முன்னிட்டும் கொண்டு வந்து விட வேண்டாம். யாரும் பார்சல் கொடுத்தாலும் பிரித்து சோதித்து விட்டே வாங்கிக் கொள்ளுங்கள்.

எழுத்தாளர் சுஜாதா துபாய் போகும் போது இந்த பிரச்னையை சந்தித்துள்ளார். அப்பொழுதுதான் அவருக்கே கசகசா போதைப் பொருள் என்பது தெரியுமாம். 'ஸ்ரீரங்கத்து திண்ணைகளில் பல அம்பிகள் கசகசாவை விழுங்கி விட்டு உருண்டு கிடந்தது ஏன் என்பதன் காரணம் இப்போது தான் விளங்குகிறது' என்று ஹாஸ்யமாக அதனை விளக்குவார். :-)

50 comments:

Nizam said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோதரே உங்கள் நகைசுவை அனுபவம் அருமை.

இதற்கு மைனஸ் ஓட்டுகளா? இதை நீங்கள் எழுதியதால் இந்த மைனஸ் ஓட்டு. இதே முனுசாமியோ அல்லது மாடசாமியோ எழுதிருப்பார்னால் மைனஸும் மைனஸும் பிளஸ் ஆகிஇருக்கும்.

Anonymous said...

.

Anonymous said...

இதுக்கு பிளஸ் ஒட்டா ?? ஒரே ஒரு கமெண்ட் ஆனா 8 பிளஸ் ஒட்டு. என்ன கொடுமை முருகா..?
பதிவர் முஸ்லிம் என்பதாலே இந்த 8 ஓட்டும் இங்க விழுந்து இருக்கு.. இதை மறுக்க முடியுமா. உங்க கும்பல் போடுற பதிவுல யாரவது ஒரு ஹிந்து பதிவர் பிளஸ் ஒட்டு போட்டு இருக்காங்கள.?
இல்லை நீங்க எப்பவாவது ஒரு ஹிந்து பதிவர் எழுதிய பதிவுக்கு பிளஸ் ஒட்டு போட்டு இருக்கீங்களா.
தைரியமா இந்த கமெண்ட்டை விடுவேன்னு நம்புறேன்.

ராஜ நடராஜன் said...

ஈத் முபாரக் சொல்ல வந்தா ஹலால் பீர் குடிச்சிகிட்டிருக்கீங்களே சகோ:)

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ நிஜாம்!

//இதற்கு மைனஸ் ஓட்டுகளா? இதை நீங்கள் எழுதியதால் இந்த மைனஸ் ஓட்டு. இதே முனுசாமியோ அல்லது மாடசாமியோ எழுதிருப்பார்னால் மைனஸும் மைனஸும் பிளஸ் ஆகிஇருக்கும்.//

சிலர் பதிவை படிக்காமலேயே கோபத்தில் குத்துவது உண்டு. அந்த வகையில் வருபவையே மைனஸ் ஓட்டுகள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

திரு மாயாவி!

//இதுக்கு பிளஸ் ஒட்டா ?? ஒரே ஒரு கமெண்ட் ஆனா 8 பிளஸ் ஒட்டு. என்ன கொடுமை முருகா..?//

அனைத்து தவறுகளுக்கும் மூல காரணம் இந்த குடி. வாகன விபத்துகள், பல கொலைகள், பல அடிதடிகள், பல கற்பழிப்புகள் பல திருட்டுகள் என்று சமூகத்தில் நடக்கும் அனைதது தவறுகளுக்கும் மூல காரணமாக அமைவது மது எனபதை நீங்களும் மறுக்க மாட்டீர்கள். எனவே மதுவை எதிர்த்து ஒரு பதிவு என்பதால் மதுவை எதிர்ப்பவர்கள் இந்த பதிவுக்கு ஓட்டளித்துள்ளர்கள். இதே போன்று சமூக கொடுமைகளை எதிர்த்து நீங்களும் பதிவிடுங்கள் முதல் ஆளாக நான் வந்து பின்னூட்டமும் ஓட்டும் இடுகிறேன்.

suvanappiriyan said...

சகோ ராஜநடராஜன்!

//ஈத் முபாரக் சொல்ல வந்தா ஹலால் பீர் குடிச்சிகிட்டிருக்கீங்களே சகோ:)//

உங்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்.

ஹலால் பீர் குடிப்பவர் நிதானமாகவே இருப்பர். எனவே எந்த நேரத்திலும் வாழ்த்து சொல்லலாம். ஆல்கஹால் கலந்த ஹராமான போதை தரும் பீரை அருந்தினாலே நிதானம் இழப்பர்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

K said...

சுவனப்பிரியன் அவர்களே!

தங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?

பஸ்மின் கபீர் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ..

அருமையான பதிவு. நகைச்சுவையுடன் குர்ஆன் மற்றும் பிற ஆதாரங்களும் அருமை..

என்ன தான் சொன'னாலும் குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு.
திருந்தவே மாட்டாங்க.;(

suvanappiriyan said...

நாம் மதத்தை தூரமாக்கியது போல் முஸ்லிம்களும் ஏன் தூரமாக்கவில்லை என்பதுதான் பலரின் பிரச்னையே. தருமி தனது மதத்தின் கொள்கைகள் கடவுளின் வாக்காக இருக்க முடியாது என்று ஆராய்ந்து நாத்திகத்துக்கு சென்றார். சார்வாகனும், இப்னு ஷகீரும் தங்களின் இந்து மதத்தின் வர்ணாசிர கொள்கையை எதிர்த்து வெளியில் வந்துள்ளனர். அதுபோல் நானும் வெளியில் வர குர்ஆனை சில காலம் ஆராய்ந்தேன். என்ன ஆச்சரியம். முன்பு இருந்த நம்பிக்கை குர்ஆனை ஆராய்ந்த போது மேலும் இறுகி விட்டது. மேலும் விளக்கம் கிடைக்க படிக்க ஆரம்பித்தால் இன்னும் பிடி இறுகுகிறது. இன்னும் வருடம் செல்லச் செல்ல தளரும் வழியைக் காணோம். என்ன செய்வது?

இதைப் பார்த்த இஸ்லாமிய எதிரிகள் எப்படியாவது குர்ஆனை பத்தோடு பதினொன்றாக ஆக்கி விடுவோம் என்று 1400 வருடங்களாக முயற்சித்து வருகின்றனர். கண்டிப்பாக சிறந்த பதிலை கொண்டு வருவார்கள் என்று நானும் வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கிறேன். :-)

suvanappiriyan said...

சகோ மாத்தியோசி மணி!

//சுவனப்பிரியன் அவர்களே!

தங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?//

தனி மனித தாக்குதல் இல்லாமல் ஆதாரத்தோடு எந்த கேள்வியும் கேட்கலாம். கூகுள்காரன் இலவசமாக கொடுத்த இந்த வாய்ப்பை ஆக்கபூர்வமாக பயன்படுத்துவோமே! தாராளமாக கேளுங்கள். தெரிந்தால் சொல்கிறேன்.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் ஃபஸ்மின் கபீர்!

//அஸ்ஸலாமு அலைக்கும் சகோ..

அருமையான பதிவு. நகைச்சுவையுடன் குர்ஆன் மற்றும் பிற ஆதாரங்களும் அருமை..//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

ராவணன் said...

போதைப் பழக்கமில்லா இஸ்லாமியர் என்றால் இஸ்லாமிய பெண்கள் மட்டுமே.

குடி என்றில்லை, கஞ்சா, ஹெராயின், ஓபியம் என்று போதையில் மிதக்கும் மக்கள்.

அது போக மதம் என்ற போதையில் வாழும் மக்கள் முஸ்லீம்களே.

மதுவெறியர்கள் மேல் இரக்கப்படலாம், மதவெறியர்களை என்ன செய்வது?

K said...

தனி மனித தாக்குதல் இல்லாமல் ஆதாரத்தோடு எந்த கேள்வியும் கேட்கலாம். கூகுள்காரன் இலவசமாக கொடுத்த இந்த வாய்ப்பை ஆக்கபூர்வமாக பயன்படுத்துவோமே! /////

இலவசம்??? இல்லை நான் 10 டாலர் கொடுத்துத்தான் டொமைன் வாங்கியிருக்கிறேன்! சரி சரி அது இங்கு முக்கியமில்லை! நான் கேள்விக்கு வருகிறேன்!

இப்பதிவில் நீங்கள் மற்றும் உங்கள் நண்பர்களான முபார, அலி ஆகியோர் சேர்ந்து, உங்களின் இன்னொரு நண்பராகிய குமாரைக் கலாய்த்த சம்பவத்தைச் சொல்லியிருக்கிறீர்கள்!

அதில் குமார் என்பவரின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள்! குமார் என்ற பெயர் தமிழ் பெயர் தானே! அதிலும் அது ஒரு இந்துவினது பெயர்!

ஆக, உங்கள் கதையைப் படிக்கும் போது, மூன்று முஸ்லிம்கள் சேர்ந்து, ஒரு குடிகார இந்துவைக் கலாய்த்திருப்பது போலவே தெரிகிறது!

மேலும் முஸ்லிம்கள் குடிப்பதில்லை என்பது போலவும், அதற்கு அடிமை இல்லை என்பது போலவும் தெரிகிறது!

அந்த நண்பரின் பெயரை மாற்றி பதிவை எழுதிய நீங்கள் ஏன் அவருக்கு குமார் என்று பெயர் சூட்ட வேண்டும்? ஒரு ரஹ்மான் என்றோ, அன்வர் என்றோ பெயரிட்டிருக்கலாமே?

அவரின் நிஜமான பெயரை மறைக்க முற்பட்ட நீங்கள், அவரது பெயர் மூலமாக, மறைமுகமாக அவரது மதத்தினை முன்னிலைப்படுத்தியமை, இப்பதிவினைப் படிக்கும் சாதாரண அறிவுள்ள எவருக்குமே புரியும்!

அல்லது அந்த நண்பர் உண்மையாகவே ஒரு இந்துவாக இருந்திருதால், அவரது பெயரைக் குறிப்பிடாமலேயே, “ நண்பர் ஒருவர்” என்று பொதுவாகக் குறிப்பிட்டிருக்கலாமே?

உங்களின் இப்பதிவு - இந்துக்களைச் சீண்டுவதாகவே எனக்குப்படுகிறது?

இது உண்மையா?

பூசி மெழுகாமல் பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன்! :-)

suvanappiriyan said...

ராவணன்!

//போதைப் பழக்கமில்லா இஸ்லாமியர் என்றால் இஸ்லாமிய பெண்கள் மட்டுமே.//

இஸ்லாமிய ஆண்களில் குடிக்காதவர்களே கிடையாது என்று நான் சொல்லவில்லை. அவ்வாறு குடிப்பவர்களை அதன் தீமையை விளக்கி பிரசாரம் செய்தே வருகிறோம்.

//அது போக மதம் என்ற போதையில் வாழும் மக்கள் முஸ்லீம்களே.

மதுவெறியர்கள் மேல் இரக்கப்படலாம், மதவெறியர்களை என்ன செய்வது?//

மார்க்க பிரியர்களாக மாற்றி விடலாம். இஸ்லாம் ஓர் இனிய மார்க்கமல்லவா? நானும் முன்பு மதவாதியாக இருந்தேன். தற்போது மார்க்கவாதியாக மாறி விட்டேன்.

suvanappiriyan said...

திரு மாத்தியோசி மணி!

//அந்த நண்பரின் பெயரை மாற்றி பதிவை எழுதிய நீங்கள் ஏன் அவருக்கு குமார் என்று பெயர் சூட்ட வேண்டும்? ஒரு ரஹ்மான் என்றோ, அன்வர் என்றோ பெயரிட்டிருக்கலாமே?//

நாங்கள் கலாய்த்த அந்த நண்பர் முன்பு தமிழ் பெயரையே வைத்திருந்தார். நான் ஊர் சென்றால் அவ்வப்போது சந்திப்பதும் உண்டு. ஒருக்கால் இதை அவர் விரும்பா விட்டால்? எனவே தான் பெயரை மாற்றினேன். அவர் சவுதியை விட்டு செல்லும் போது சுத்தமாக குடியை விட்டிருந்தார். இங்கிருந்த ஐந்து வருடமும் குடியை தொடக் கூட இல்லை. கிடைப்பதும் சிரமம். ஆனால் சமீபததில் சந்தித்தபோது திரும்பவும் குடிக்கு அடிமையாகி இருந்தார். 'ஏன்...இப்படி?' என்று கேட்டேன். 'என்ன செய்வது? நண்பர்கள் கூடினாலோ, அல்லது திருவிழா நாட்களிலோ அவசியம் மதுவை வைத்து விடுகின்றனர். சூழ்நிலைகளால் திரும்பவும் குடிக்கும் படி ஆகி விட்டது. குறைத்துக் கொள்ள முயற்ச்சிக்கிறேன்' என்றார்.

//மேலும் முஸ்லிம்கள் குடிப்பதில்லை என்பது போலவும், அதற்கு அடிமை இல்லை என்பது போலவும் தெரிகிறது! //

நான் அப்படி எங்கும் சொல்லவில்லையே? தமிழகத்தில் குடித்தே அழிந்த பல முஸ்லிம்களை நான் அறிவேன். ஆனால் இந்து, கிறித்தவ நண்பர்களோடு ஒப்பிடும்போது சதவீதம் மிகக் குறைவாகவே இருக்கும்.

//உங்களின் இப்பதிவு - இந்துக்களைச் சீண்டுவதாகவே எனக்குப்படுகிறது?//

மத கண்ணோட்டத்தில் அதை நான் எழுதவில்லை. இன்றும் கூட அவருக்கு அட்வைஸ் செய்து அவரை சிறந்த மனிதனாக்க முயற்ச்சித்தே வருகிறேன். நானும் தமிழன் அவரும் தமிழன். ஒரு இனத்தவன் தவறான வழியில் செல்லும் போது நேர் வழிக்கு கொண்டு வருவது உண்மை நண்பனின் கடமையல்லவா?

//பூசி மெழுகாமல் பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன்! :-)//

பூசி மெழுக இதில் என்ன இருக்கிறது? மேலும் தமிழர்களில் 70 சதவீதமான பேர் இந்துக்கள் என்றே தங்களை அழைத்துக் கொள்வதில்லை. பிராமணர்களும் மேலும் ஒரு சில உயர் சாதி இந்துக்களுமே தங்களை இந்துக்களாக அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். எனது நண்பன் ஒரு நாத்திகவாதி. அவனுக்கு மதம் இல்லை.

K said...

நன்றி சுவனப்பிரியன் அவர்களே! அழகான விளக்கம்! நன்றி!

thegreatindian said...

arumayana padhivu, aanal arandavan kannuku kaanpadellem iruttu yendru solvadu pola yellathlayum kutram kandupidippavargaluku padil solli ungal neram veenakkadirgal, ivargal yellam kodithu vittu yezuduvadal yosikka neramillai.

கிராதகன் said...

நலமா பாய்

தமிழகத்தில் சங்க காலத்திற்கு முன்பே மதுவை முறையாக அறிமுகப்படுத்தியவர்கள் ஆரியர்கள்தான். கைபர், போலன் கணவாய் வழியாக வரும்போதே சோமபானம், சுரபானம் போன்ற மது வகைகளையும் கையில் கொண்டு வந்தார்கள். மது அருந்தாததையே அடையாளமாகக் கொண்டு அசுரர்கள் என்று தமிழரை அழைத்தார்கள். சுரபானம் அருந்துகின்ற ஆரியர்கள் சுரர்கள் என்று அழைக்கப்பட்டு. சுரபானம் அருந்தாத திராவிடர்கள் அசுரர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டார்கள்.

அப்படிப்பட்ட ஒழுக்கமான அசுரர்களாகிய நாங்கள் இன்று பெரும் சுரர்கள் ஆகி விட்டோம்

suvanappiriyan said...

நலம் திரு கிராதகன். நீங்கள் நலமா?

//சுரபானம் அருந்துகின்ற ஆரியர்கள் சுரர்கள் என்று அழைக்கப்பட்டு. சுரபானம் அருந்தாத திராவிடர்கள் அசுரர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டார்கள்.

அப்படிப்பட்ட ஒழுக்கமான அசுரர்களாகிய நாங்கள் இன்று பெரும் சுரர்கள் ஆகி விட்டோம்//

புதிய தகவல். பழையபடி அசுரர்களாக மாறி விட வேண்டியதுதானே! இன்று ஆரியர்கள் இந்த குடியிலிருந்து ஓரளவு விலகி விட்டதாகவே எண்ணுகிறேன்.

அரசாங்கமே கடைகளை நடத்தி மக்களை மேலும் குடிகாரர்கள் ஆக்குவது வேதனையிலும் வேதனை.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ சார்வாகன்!

எதிர் பதிவா? சரி...

முதலில் சவுதி அனுமதிப்பதால் இதனை நான் ஆதரிப்பதாக சொல்வது தவறு. குர்ஆனும், நபி மொழிகளும்தான் ஒரு முஸ்லிமுக்கு முன்னால் வர வேண்டுமேயொழிய நாடுகளையும் அதனை ஆள்பவர்களையும் முன்னிலைப் படுத்த தேவையில்லை. இங்கு சவுதியில் விற்கப்படும் பானத்தை நாமாகவே ஹலால் பீர் என்று பெயரிட்டுக் கொள்கிறோம். இங்கு விநியோகிக்கப்படும் பானம் மால்ட் மற்றும் ஃபிஸி கலவைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. பர்பிகான், மூஸே போன்ற தனிப் பெயர்களைக் கொண்டே அனேகப் பேர் இதனை அடையாளப் படுத்துவர். நாம் இன்று பயன்படுத்தும் அனேக பொருட்களில் ஆல்கஹால் கலந்தே உள்ளது.

அவ்வாறு ஒதுக்க ஆரம்பித்தால் அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றை கைகழுவ வேண்டி வரும். நார்மலான ஒரு மனிதனுக்கு போதை ஏறும் விதமாக எந்த பொருள் இருந்தாலும் அது தடை செய்யப்பட்டதே. இன்றும் கூட நமக்கு தெரியாமல் கசகசா என்ற பொருளை சமையலில் பயன்படுத்தி வந்தோம். அதில் போதை இருப்பது தெரிந்தவுடன் எங்கள் வீட்டில் அதை சுத்தமாக பயன்படுத்துவது இல்லை. அது போல் அரபு நாடுகளில் விற்கப்படும் குளிர்பானத்தில் போதை இருப்பதாக நிரூபணமானால் உடன் நிறுத்தி விடப் போகிறோம். அல்லது சந்தேகமாக உள்ள விஷயமாக உள்ளதால் இது போன்ற பானங்களை குடிப்பதை தவிர்த்து கொண்டு பழ ரசங்களை அருந்தலாமே. இதில் குழப்பமடைய ஒன்றுமில்லை.
------------------------

There's no beer sold in Saudi. There's only non-alcholic malt beverage which is basically malt flavoured fizzy water. It's not beer, never has been beer, and the European legislation forbids it from being called beer, it's not allowed even to be called alcohol free beer, because it's not beer, hence it being called non-alcholic malt beverage.

Alcohol free beer is beer with the alcohol removed, i.e. it's still beer and it used to be alcoholic. Non-alcoholic malt beverage is just fizzy water with malt flavouring in, to make it taste vaguely like beer (but I'll wait to see what the non-Muslims say about that because as I understand it, the taste is not the same as beer)

I've never even seen alcohol free beer on sale in Saudi, just non-alcoholic malt beverage which is no more beer than 7-up is beer.
---------------------


Praise be to Allaah.
It is essential to differentiate between the two kinds of beer:

The first is the intoxicating beer that is sold in some countries. This beer is khamr (an intoxicant) and it is haraam to sell it, buy it and drink it. The Prophet (peace and blessings of Allaah be upon him) said: “Every intoxicant is khamr and every intoxicant is haraam.” Narrated by Muslim, 2003.

It is haraam to drink a lot or a little of it, even a single drop, because the Prophet (peace and blessings of Allaah be upon him) said: “Whatever intoxicates in large quantities, a little of it is haraam.” Narrated by al-Tirmidhi, 1865; classed as saheeh by al-Albaani in Saheeh al-Tirmidhi.

The second type is beer that is not intoxicating, either because it is completely free of alcohol, or because it contains a minuscule amount of alcohol that does not reach the level of causing intoxication no matter how much a person drinks of it. The scholars have ruled that this is permissible.

Shaykh Ibn ‘Uthaymeen said:

The beer that is on sale in our marketplaces [in Saudi Arabia] is all halaal, because it has been inspected by the officials and is completely free of alcohol. The basic principle concerning all kinds of food, drink and clothing is that they are permissible until and unless proof is established that they are haraam. Allaah says (interpretation of the meaning):

சகோ ராஜநடராஜனிடம் இந்த குளிர்பானங்களையும் அதில் போதை இருக்கிறதா என்பதையும் கேட்டு தெளிவு பெறுங்கள்.

suvanappiriyan said...

சலாம் நூருல் அமீன் பாய்!

//29:69. "மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்" என்று இறைவன் கூறுகின்றான்.ஒரு வழி என்று கூறவில்லை. பல வழி என்று கூறுகின்றான்.//

அந்த வழி எவை என்று காட்டித் தருவதற்காககத்தானே இறைத் தூதரை இறைவன் அனுப்பினான்? அந்த இறைத் தூதரின் பொன் மொழிகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு விட்டதே! பிறகு எதற்கு இந்த ஷெய்குகளின் பாராட்டு மழை. நபி அவர்களை விட சிறந்த ஞானம் கொண்டவர்களா இவர்கள்?

சமாதிகளை இடித்து தரை மட்டமாக்கச் சொல்லி ஆதாரபூர்வமான நபி மொழிகள் கிடைத்தும் அந்த சமாதிகளை பய பக்தியோடு பதிந்ததின் நோக்கம் என்ன பாய்? தெரிந்து கொள்ளவே கேட்கிறேன்.


suvanappiriyan said...

'நானும் குடிச்சிருக்கேன்:(ஹலால் பீர்) குடிப்பாரை பார்த்திருக்கேன்:

நல்ல புத்தி வருவதில்லை குடியிலே........

ஒரு நாய் கூட மதிப்பதில்லை தெருவிலே...

சொன்னாலும் புரிவதில்லை... சொந்த புத்தி ஏதுமில்லை....

பட்டால்தான் தெளிவு வரும் அறிவிலே.....(கண்ணதாசனைப் போல்)

பட்டால்தான் தெளிவு வரும் அறிவிலே....'

வர்ட்டா ......:-)))))))))))

Anonymous said...

1. .0.01 % ஆல்கோஹால் அளவு உள்ள மதுவைக் குடிக்கலாம் என சொன்ன அந்த இஸ்லாமிய அறிஞர்(கள்) யார் என்று சொல்ல முடியுமா ?

2. ஹலால் பியர் என்று சொன்னீர்கள் - குரானில் எந்த இடத்தில் ஹலால் பியருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது எனக் கூற முடியுமா ?

3. இந்த ஹலால் பியரை சௌதியில் பெண்களும் வாங்கி சுவைக்கலாமா ?

இதற்கு பதில் சொல்லுங்கள் - பின்னர் விவாதத்தைத் தொடர்வோம் ?

Anonymous said...

@ கிராதகன் - // தமிழகத்தில் சங்க காலத்திற்கு முன்பே மதுவை முறையாக அறிமுகப்படுத்தியவர்கள் ஆரியர்கள்தான். //

தமிழகத்தில் ஆரியர்கள் தான் மதுவை அறிமுகம் செய்தார்கள் என்று சொல்கின்றீர்களே ! அதற்கான ஆதாரமுண்டா ---- !!!

தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதும் மது வகைகள் தொன்று தொட்டே இருந்து வருகின்றன என்று தான் மானுடவாய்வாளர்கள் கூறுகின்றார்கள் ... !!!

UNMAIKAL said...

பெண்களுக்கு ‘கரு'ப்பை சுதந்திரம் வேண்டும் என்று பெண்ணுரிமைவாதிகளும் ஊடகங்களும்,

செயல்படுத்திக் காட்டிய இந்தப் பெண்ணையும் பாராட்டுவார்களோ?


சொடுக்கி >>> படம் பார்க்கவும்


"என் மனைவி, என் மனைவி'' என்று இளைஞர்கள் போட்டா போட்டி.

50 வாலிபர்களை மணந்து சாதனை படைத்த அழகி.

கமிஷனர் அலுவலகத்தில் புகார்கள் குவிகின்றன


சென்னை, ஆக.23-

காதலித்து, திருமண ஆசைகாட்டி அப்பாவி இளைஞர்களிடம் பணம் பறித்த கேரள அழகி மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

அந்த மயக்கும் சாகச அழகி இதுவரை 50 வாலிபர்களை மணந்து சாதனை படைத்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

பட்டதாரி இளைஞர்கள் இந்த மயக்கும் மோகினியிடம் மனதை பறிகொடுத்து, திருமண பந்தத்திலும் விழுந்து, தங்களது லட்சக்கணக்கான பணத்தையும் இழந்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து புகார் கொடுத்தனர்.


இதுதொடர்பாக வெளியான செய்தியைப் பார்த்து, கேரள அழகியிடம் ஏமாந்த இளைஞர்கள் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வந்து கண்ணீர்விட்டு அழுதபடி புகார் கொடுத்தார்கள்.


50 பேரை மணந்து சாதனை

மோசக்காரி சகானா சட்டையை கழற்றுவதுபோல, மாப்பிள்ளைகளை கழற்றி இருக்கிறாள்.

இதுவரை அவளது மாப்பிள்ளை கணக்கை பார்த்தால், 50-ஐ தொடும் என்று சொல்லுகிறார்கள்.

கமிஷனர் அலுவலகத்தில் மட்டும் அல்லாது வேப்பேரி, அடையாறு, திருவொற்றிïர், புளியந்தோப்பு போன்ற போலீஸ் நிலையங்களிலும் அவளது மாப்பிள்ளைகளின் புகார்கள் உள்ளன.

மத்திய குற்றப்பிரிவு போலீசிலும் அவளிடம் ஏமாந்த புருஷன்கள் 15 பேர் புகார் கொடுத்துள்ளனர்.

சம்சுதீன், திருவள்ளூர் ராஜேஷ், அடையாறு சீனிவாசன், கோவை சரவணன், திருச்சி ராகுல், அம்பத்தூர் சந்திரபாபு என்று, சகானாவின் காதல் கணவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

கேரளாவிலும் அவளிடம் ஏமாந்த கணவன்கள் உள்ளனர். இப்போது இந்த புகார்கள் மீது சென்னை அடையாறு அனைத்து மகளிர் போலீசார்தான் விசாரித்து வருகிறார்கள். மாயக்காரி சகானாவை போலீசார் தேடி வருகிறார்கள்.

சாகச அழகி சகானா 5 மாதம் கர்ப்பமா?

சகானாவிடம் ஏமாந்த கால்பந்து வீரர் இப்போது கூட அவளை மறக்கமுடியவில்லை என்கிறார்.

அவரிடம் தான் 5 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறி இருக்கிறாள். உங்கள் குழந்தை எனது வயிற்றில் வளர்கிறது என்று, வயிற்றையும் காட்டினாளாம்.


SOURCE: http://www.dailythanthi.com/article.asp?NewsID=753275&disdate=8/23/2012

UNMAIKAL said...

குடிபோதையில் ரூ.200 கடனுக்காக நண்பனைக் குத்திக் கொன்ற வாலிபர்: மக்கள் மறியல்

Published: வியாழக்கிழமை, ஆகஸ்ட் 23, 2012, 10:58 [IST]

நெல்லை: பாளையங்கோட்டை அருகே 200 ரூபாய் கடனுக்காக கூலித் தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முருகன். அவரும் புதுக்குளத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரும் நண்பர்கள். ஆறுமுகத்திடம் முருகேசன் 200 ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

நேற்று இருவரும் பாரில் அமர்ந்து மது அருந்தியபோது ஆறுமுகம் கடனை திருப்பிக் கேட்டார்.

முருகேசன் பிறகு தருவதாக கூறியதும் அவர் சமாதானம் அடைந்தார்.

ஆனால் மீண்டும் முருகேசன் வீட்டுக்கு வந்து கடனை திருப்பித் தருமாறு வற்புறுத்தி தகராறு செய்த ஆறுமுகம் திடீரென முருகேசனை கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டு ஓடிவிட்டார்.

இதில் படுகாயம் அடைந்த முருகேசனை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் வழியிலேயே இறந்தார்.

இந்த சம்பவத்தைக் கண்டித்து நேற்று இரவு தெருமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ஜெயபாலன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக குற்றவாளியை கைது செய்வதாக கூறியதும் அவர்கள் கலைந்து சென்றனர்.

http://tamil.oneindia.in/news/2012/08/23/tamilnadu-youth-stabs-friend-death-rs-200-loan-160117.html

suvanappiriyan said...

இக்பால் செல்வன்!

முதலில் சவுதியில் விற்கப்படும் போதையற்ற பானங்களை நாம் பீர் என்று அழைப்பதே தவறு. இங்கு சவுதியில் விற்கப்படும் பானத்தை நாமாகவே ஹலால் பீர் என்று பெயரிட்டுக் கொள்கிறோம். இங்கு விநியோகிக்கப்படும் பானம் மால்ட் மற்றும் ஃபிஸி கலவைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. பர்பிகான், மூஸே போன்ற தனிப் பெயர்களைக் கொண்டே அனேகப் பேர் இதனை அடையாளப் படுத்துவர். நாம் இன்று பயன்படுத்தும் அனேக பொருட்களில் ஆல்கஹால் கலந்தே உள்ளது.

குர்ஆன் தடுத்த பொருட்களை தவிர்த்து மற்ற எந்த பொருட்களிலும் மனிதனுக்கு போதை தராத வகையில் உள்ள பொருட்களை உண்ணலாம் பருகலாம் என்பதே குர்ஆனின் சட்டம். இந்த பானங்களை விரும்பியவர் பருகலாம்: விரும்பாதவர் பருகாமல் இருக்கலாம்.

பெண்கள் அவசியம் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை.

ஷேக் உதைமீன் அவர்கள் தற்போது சவுதி கடைகளில் விநியோகிக்கப்படும் குளிர் பானங்களில் மனிதனுக்கு போதை தரும் ஆல்கஹால் இல்லை என்றே சொல்கிறார். அவ்வாறு ஆல்கஹால் இருப்பது தெரிய வந்தால் நாம் குடிக்காமல் இருந்து கொள்வோம். வேறு பழச்சாறுகளை சாப்பிட்டு நமது உடலை சீராக்கிக் கொள்ளலாமே!

suvanappiriyan said...

சகோ உண்மைகள்!

//பெண்களுக்கு ‘கரு'ப்பை சுதந்திரம் வேண்டும் என்று பெண்ணுரிமைவாதிகளும் ஊடகங்களும்,

செயல்படுத்திக் காட்டிய இந்தப் பெண்ணையும் பாராட்டுவார்களோ?//

இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும். பதிவுக்கு சம்பந்தமான அழகிய இரண்டு செய்திகளை அளித்தமைக்கு நன்றி.

suvanappiriyan said...


தங்கமணி!

//முகம்மது அலி ஜின்னா ஒரு சியா பிரிவை சார்ந்தவர். அவர் இறந்தபோது சியா பிரிவினரின் வழக்கப்படி ஓதினார்கள்.//

ஜின்னா ஷியா பிரிவை சேர்ந்ததனால்தான் ராஜாஜி ஜின்னாவோடு கை கோர்த்துக் கொண்டு இந்தியாவை துண்டாட முயற்சித்தாரோ. பெரும்பான்மை முஸ்லிம்கள் இந்திய பிரிவினைக்கு எதிராகவே இருந்தனர். எனவே தான் எல்லையில் இருந்த மாகாணங்கள் மட்டுமே பாகிஸ்தான் ஆனது. ஜின்னா கூப்பிட்டும் தேசப் பற்றின் காரணமாக இங்குள்ள எங்களின் முன்னோர்கள் இந்தியாவிலேயே தங்கி விட்டனர்.

ஷியாக்களுக்கும் பிராமணர்களுக்கும் எந்த அளவு வரலாற்று ரீதியாக தொடர்பு உள்ளது என்பதை இங்கு சென்று பார்த்து கொள்ளவும்.

http://suvanappiriyan.blogspot.com/2012/08/blog-post_18.html

Nizam said...

இக்பால் செல்வன் பழைய புகைப்படத்திற்கு பதில் புதிய புகைப்படம் உங்களுக்கு பொறுத்தமாக இருகிறாது. வாழ்த்துக்கள்.

இக்பால் செல்வன் said...

//தமிழகத்தில் ஆரியர்கள் தான் மதுவை அறிமுகம் செய்தார்கள் என்று சொல்கின்றீர்களே ! அதற்கான ஆதாரமுண்டா ---- !!!//

தமிழ் அகராதி படி சோமபானம் என்றால் வேள்வியில் குடிக்கும் சோமச்சாறு.

வேள்வி முடிந்த பிறகு இவர்களின் சோறுவு நிங்க இந்த பானத்தை அருந்துவார்கள்.

இந்திரலோகத்தில் தேவர்கள் சோமபானமருந்தி மயங்கிக் கிடந்தார்கள் என்று இந்திரலோக கதையில் வருகிறாது.

"ராமர் சோமபானம் என்ற மதுபானம் அருந்துகிறவர் என்று வால்மீகி எழுதியிருக்கிறார்' இதற்கும் ஆதாரம் வேண்டுமென்றால் வால்மீகி ராமயணம் படித்துதெரிந்துகொள் அல்லது துக்ளக் ஐயாவிடம் போய் கேட்டுகொள்ளுங்கள்.

//உலகம் முழுவதும் மது வகைகள் தொன்று தொட்டே இருந்து வருகின்றன என்று தான் மானுடவாய்வாளர்கள் கூறுகின்றார்கள் ... !!!//

இதற்கு எதாவது கி.மு., கி.பி. இருக்கிறாதா?

இக்பால் செல்வன் நான் உங்களிடம் பல நாட்களுக்கு முண்ணால் ஒர் ஆதாரம் கேட்டேன் நீங்கள் தரவில்லை. மறுபடியும் நினைவுபடுத்துகிறேன். உங்களுடைய உன்மையான பெயர்தான் இக்பால் செல்வன் என்று உங்கள் நிருபிக்கமுடியுமா?

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும் தோழரே! இது என் முதல் வருகை.. மது எந்த வகையில் இருந்தாலும் எந்த வடிவத்தில் இருந்தாலும் அது கேடு விளைவிக்கும் விஷயமே! உங்களின் பதிவு அருமை..

"அந்தி நேர பூக்கள்" - இது காமக்கதை அல்ல, இருளில் வாழும் விலைமாதர்கள் பற்றிய கதை.
என் சிறுகதையை படிக்க உங்களை அன்புடன் அழைக்கிறேன், உங்கள் கருத்துகளையும் பதியவும்! நன்றி

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ ஆயிஷா ஃபாரூக்!

//மது எந்த வகையில் இருந்தாலும் எந்த வடிவத்தில் இருந்தாலும் அது கேடு விளைவிக்கும் விஷயமே! உங்களின் பதிவு அருமை..//

நன்றி!

// "அந்தி நேர பூக்கள்" - இது காமக்கதை அல்ல, இருளில் வாழும் விலைமாதர்கள் பற்றிய கதை.
என் சிறுகதையை படிக்க உங்களை அன்புடன் அழைக்கிறேன், உங்கள் கருத்துகளையும் பதியவும்! நன்றி //

வருகிறேன்.

எனக்கொரு சந்தேகம். மூன்றாம் பாலினத்தவராக மாறக் கூடியவர்களை சவுதியில் சிகிச்சை மூலம் நிறுத்தி அவர்களை முழு ஆணாகவோ அல்லது முழு பெண்ணாகவோ மாற்றி விடுகிறார்களாமே! இதை ஏன் நம் நாட்டு மூன்றாம் பாலினத்தவர் முயற்சி செய்வதில்லை. இதனால் அவர்களுக்கு சமூக அங்கீகாரம் தடையின்றி கிடைக்குமல்லவா?

எனது வீட்டுக்கு நேர் எதிர் வீட்டில் வசித்து வந்த ஃபாரூக் என்ற நபர் இது போல் பாதிக்கப்பட்டு மும்பை சென்று விட்டார். பிறகு 20 வருடம் கழித்து எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு எங்கள் ஊருக்கு வந்து இரண்டு மாதத்தில் இறந்தும் விட்டார். ஏன் இவர்கள் மருத்துவ சிகிச்சை செய்து கொள்வதில்லை. இது எனது சந்தேகமே...

suvanappiriyan said...

பிரெஞ்சுத் தேசத்தின் புகழ் பெற்ற “எனிசி கோனியாக்” எனும் உயர்ரக பிராந்தி பிரான்சிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு எலைட் கடைகளில் கிடைக்க அம்மா ஏற்பாடு செய்திருக்கிறார். 700 மி.லி கொண்ட ஃபுல் பாட்டிலின் விலை ரூ. 3.425 ஆகும். பிரெஞ்சு நாட்டின் கோனியாக் நகரத்தில் உயர்ரக திராட்சையில் செய்யப்பட்டு இரு ஆண்டுகள் ஊறப் போட்டு ஸ்பெஷலாக தயாரிக்கப்படும் இந்த பிராந்தியெல்லாம் தமிழன் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத தேன் சொட்டும் அமுதமாகும்.

ஒரு நாளைக்கு 28 மணிநேரமும் உழைக்கும் புரட்சித் தலைவயின் பொற்பாத ஆட்சியில் மட்டுமே இத்தகைய சாதனைகள் நடக்கும் என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொண்டு அடங்கி ஒடுங்கி நடக்க வேண்டும்.

வாழ்க புரட்சித் தலைவி அம்மா அவர்கள்!

ஜெய் டாஸ்மாக், ஜெய ஜெய எலிட் டாஸ்மாக்!

http://www.vinavu.com/2012/08/23/elite-tasmac/-

நம்பள்கி said...
This comment has been removed by a blog administrator.
நம்பள்கி said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

நம்பள்கி said...

எங்கு வேண்டுமானலும் சொல்வேன்! எந்த ஆதாரம் வேண்டுமானால் காட்டுவேன்! குடி கெடுதல்! கெடுதல்! கெடுதல்! கெடுதல் தான் !!!

அப்ப குடிப்பவர்கள் கெட்டவர்களா? இல்லை! இல்லை!! இல்லீங்கோவ்! ஆனால், இந்த உலகில் காணப்படும் முக்கால்வாசி குற்றங்களில் மதுவுக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு; அது உண்மை!

ஆனால், இதை எல்லாம் விட மதம் மோசம். மோசம் மோசமுங்கோவ்!!! இங்கு யாரும் நீ என்ன மதம் என்று கேட்பதில்லை? தேவையும் இல்லை (நான் சொல்வது 99 விழுக்காடு மக்கள்); எனது மகன் மகளுக்கு அவர்கள் மதம் பற்றி ஒன்றும் தெரியாது; அவர்களே அது தேவையில்லை என்று சொல்லிவிட்டார்கள்

ஆனால், மதத்தையும் தூக்கி சாப்பிடும் கொடுமை ஜாதி இந்தியாவில்! மற்ற மதத்தை பற்றி நான் கவலைப் படைத் தேவையில்லை; அது என் வேலையும் இல்லை. நான் வருத்தப் படுவது எனது புடலங்காய் இந்து மதத்தில் உள்ள ஜாதியைப் பற்றித்தான். முதலில் நம்ம புடலங்காய் இந்து மதத்தில் உள்ள ஜாதி வித்யாசத்தை ஒழியுங்க!

வாழ்க்கைக்கு தேவை மதமல்ல! ஜாதியல்ல! நிறமல்ல! கலறல்ல! பணம் அல்ல! பின் என்ன?

ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும். அவ்வளவுதான்.

---------------

PS: அறிவுள்ள எந்த டாக்டரும் குடி உடம்புக்கு நல்லது என்று கூற மாட்டார்கள்; உடம்பை நன்றாக வைத்துக்கொள்ள 1008 வழி முறைகள் உள்ளது. அளவாக குடித்தால் நல்லது என்று சிலர் சொல்லுகிறார்கள்; This is nothing bull shit; This is a correlation study; and NOT a "cause and effect" study. It has its own merits and demerits, by the way!.

அப்ப நான் குடிப்பதில்லையா? குடிக்க மாட்டோம்; ஆனால் நான் எனது நண்பர்கள் Foreign தீர்த்தம்(!) மட்டும் சாப்பிடுவோம். பேர் தான் வித்யாசம். எல்லாம் ஒன்னு தான். எங்கள் மனைவிகள் கேட்டால் உடம்புக்கு நல்லது என்று புளுகுவோம்; சொல்லிவிட்டு நாங்கள் எல்லோரும் அது வழியாக சிரிப்போம். (அவர்களுக்கு தெரியும் நாங்கள் எல்லாம் பக்கா பிராடு; பொய் சொல்கிறோம் என்று!)

வாழ் நாளில் குடிக்காதவன் தவன்/குடிக்காகதவள் இவர்களிடம் எந்த டாக்டர் குடிக்க சொன்னாலும், நாம் என்ன செய்வது?

டாக்டரை மாத்தி விடுங்கள்...
10:26 AM

suvanappiriyan said...

திரு நம்பள்கி!

//அப்ப நான் குடிப்பதில்லையா? குடிக்க மாட்டோம்; ஆனால் நான் எனது நண்பர்கள் Foreign தீர்த்தம்(!) மட்டும் சாப்பிடுவோம். பேர் தான் வித்யாசம். எல்லாம் ஒன்னு தான். எங்கள் மனைவிகள் கேட்டால் உடம்புக்கு நல்லது என்று புளுகுவோம்; சொல்லிவிட்டு நாங்கள் எல்லோரும் அது வழியாக சிரிப்போம். (அவர்களுக்கு தெரியும் நாங்கள் எல்லாம் பக்கா பிராடு; பொய் சொல்கிறோம் என்று!)//

பல பெண்களும் எனது பதிவை தொடர்ந்து படிக்கிறார்கள் என்பதால் உங்களின் பின்னூட்டத்தை சிறிது திருத்தி வெளியிட்டேன்.

மற்றபடி குடி பல தவறுகளுக்கு காரணம் என்பதை பலமாக ஒத்துக் கொண்டதற்கு நன்றி. பதிவர் மீட்டிங்கை இந்த பாழாய்ப் போன குடி இல்லாமல் அழகிய முறையில் நடத்துங்கள் என்று சிலர் சொன்னதற்கு ஒரு சிலர் கோபப் பட்டனர். தற்போது சாந்தமானது அறிந்து மகிழ்ச்சி. பதிவர் மீட்டிங் போதை யில்லாமல் பல ஆக்கபூர்வ பணிகளை செய்ய வாழ்த்துக்கள்.

அடுத்து ஒரு மருத்துவராக இருந்து கொண்டு நானும் சிறிது குடிப்பேன் என்று சொல்லலாமா? அடுத்து மனைவியிடமும் பொய் சொல்லலாமா? :-) வித்தியாசமான டாக்டர் சார் நீங்க!

Anonymous said...

காவி பயங்கரவாதங்களை மக்களுக்கு நிரூபித்த Times Of India நாளிதழ்!
----------------------------------------------------------------------
"தடை செய்யப்பட்ட இணையத் தளங்களில் 20 சதம் இந்துத்துவ அமைப்புகளுடையவை"-டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ்
by Marx Anthonisamy

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி ஒன்று கீழே தரப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலத்தவர் பயந்தோடும்படியும், அதேநேரத்தில் அத்தகைய அச்சுறுத்தலுக்குக் காரணமானவர்கள் முஸ்லிம்கள் என்கிறவாறும் பொய்ச் செதிகளைப் பரப்பியதற்காக இன்று தடை செய்யப்பட்டுள்ள இணையத் தளங்களில் 20 சதம் இந்து அடிப்படைவாத அமைப்புகளுடையவை என்கிறது இச் செய்தி.

முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வண்ணம் பொய்யாகத் திருத்தி அமைக்கப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் இவை சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புக் கருத்துக்களைப் பரப்பின.

சீன ஆக்ரமிப்பிற்கு எதிராக தீக்குளிக்கும் திபெத்தியரின் படங்களை, “அஸ்ஸாம் மாநில இந்துக்களுக்கு எதிரான வங்கதேச முஸ்லிம்களின் வன்முறை” எனத் தலைப்பிட்டு வெளியிட்டன.

“வெளியிடப்பட்ட பல படங்களில் இத்தகைய உண்மைகளை வெளிப்படுத்தக் கூடிய பின்புலங்கள் வெட்டி நீக்கப்பட்டுள்ளன” என்று ஒரு அதிகாரி கூறியுள்ளார்.

புனே, பெங்களூரு, சென்னை முதலான இடங்களிலிருந்து வடகிழக்கு மாநிலத்தவர் பலரும் ஓடுவதற்குக் காரணமாக இருந்த குறுஞ்செய்திகள் பலவும் கூட இத்தகைய அமைப்புகளாலேயே கொடுக்கப்பட்டிருந்தன.

“தங்களது வெறுப்பு அரசியல் நோக்கத்திற்காகப் பலரும் அஸ்ஸாம் பிரச்சினையைப் பயன்படுத்திக் கொண்டனர். வலது சார்புடைய இந்து அமைப்புகள் இதில் பெரும்பங்கு வகித்தன” என்ரார் ஒரு அதிகாரி. அஸ்ஸாமிய போடோக்கள் அனைவரும் இந்துக்கள் என அவர்கள் பரப்பிய செய்தியும் முழு உண்மையன்று. போடோக்களில் கிறிஸ்தவர்களும் உள்ளனர்.

பெங்களூரிலிருந்து பலரும் ஓடுவதற்குக் காரணமாக இருந்த, ‘நான்கு வடகிழக்கு மாநிலத்தவர் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு எதிராக ஃபட்வா ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது’ எனப் பரப்பட்ட செய்தியும் இத்தகைய வலதுசாரி இந்து அமைப்புகளுடைய வேலையாகவே இருக்கலாம் எனச் சந்தேகம் உள்ளது.

பெங்களூரில் ரயில் ஒன்றில் மூன்று பெண்கள் குண்டு வைக்கத் திட்டமிட்டதாகப் பரப்பப்ப்ட்ட செய்தி பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த ஒருவரால் பதியப்பட்டது என்பது பின்னர் வெளியாகியது.

சுதந்திர தினத்தன்று ஐதராபாத்தில் பாகிஸ்தான் கொடி ஏற்றிக் கொண்டாடப்பட்டது என்றொரு செய்தி பரப்பப்பட்டது நினைவிருக்கும். இந்திய முஸ்லிம்களின் தேசபக்தியைச் சந்தேகிக்கும் நோக்குடன் இச்செய்தி பரப்பப்பட்டது. இந்த ‘ஐதராபாத்’ பாகிஸ்தானிலுள்ள ஐதராபாத் என்பதும், அங்கு ஏற்றப்பட்ட கொடி தொடர்பான வீடியோ காட்சிதான் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான அவதூறுப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரிசாவில் மருத்துவப் பணி ஆற்றிக் கொண்டிருந்த மருத்துவர் கிரஹாம் ஸ்டெய்ன்சையும் அவரது இரு குழந்தைகளையும் உயிருடன் எரித்துக் கொன்ற தாராசிங்கிற்கு ஆதரவான இன்னொரு இணையத் தளம், அஸ்ஸாம் கலவரத்திற்குக் காரணம் கிறிஸ்தவ மிஷனரிகள் எனவும், அவர்களே போடோக்களுக்கு ஆயுதங்களை அளித்தார்கள் எனவும் பொய்ச் செய்தியைப் பரப்பியது.

“வலது அமைப்புகள் பலவும் வடகிழக்கில் கால் பதிக்க விரும்புகின்றன. பழங்குடியினரைத் தம் பக்கம் ஈர்க்க விரும்புகின்றன. இன்றைய பிரச்சினையை அவை இந்த நோக்கில் பயன்படுத்த முயற்சிக்கின்றன. இந்தியர்களுக்கு எதிராகப் புலம் பெயர்ந்த முஸ்லிம்கள் என்பதாக ஒரு பிரச்சாரத்தைச் செய்து அரசியல் லாபம் பெற முயல்கின்றன” என அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

ஆர்.எஸ்.எஸ் முதலான இந்து அமைப்புகள் பலவும் பயந்தோடிய வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு உணவு முதலியவற்றை வழங்கின. பஜ்ரங்தளம் அஸ்சாமில் கலவரப் பகுதிகளில் கடை அடைப்பிற்கும் அழைப்பு விடுத்தது.

http://timesofindia.indiatimes.com/india/20-of-banned-hate-sites-put-up-by-Hindu-groups/articleshow/15609191.cms

Anonymous said...

@ நிஜாம் - // தமிழகத்தில் ஆரியர்கள் தான் மதுவை அறிமுகம் செய்தார்கள் என்று சொல்கின்றீர்களே ! அதற்கான ஆதாரமுண்டா //

அந்த சகோ. மது என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். மது என்றால் கள்ளும், அரக்கும் கூட மது தான். ஆரியர்களின் மதுவகைகள் சோமபானம் என்பதாக இருக்கலாம்.

உதாரணத்துக்கு : மேற்கத்தயவர்கள் தான் விஸ்கி, பிராண்டியை தமிழகத்துக்கு அறிமுகம் செய்தார்கள் --- அதற்காக தமிழகத்தவர்களுக்கு அதற்கு முன் மது அருந்தும் பழக்கமே இல்லை என நிறுவ முடியாது ... அதே போல தான் இதுவும் ... !!!

ஆரியர்களுக்கு முன்னரே தமிழகத்தில் மது வகைகள் இருந்துள்ளன !!! சோமபானம் இல்லாமல் இருந்திருக்கலாம் ஆனால் கள்ளும், அரக்கும் இருந்திருக்கு !!!

//உங்களுடைய உன்மையான பெயர்தான் இக்பால் செல்வன் என்று உங்கள் நிருபிக்கமுடியுமா?//

அதை நிரூபிப்பதால் உங்களுக்கு என்ன லாபம் என்று சொல்லுங்கள் --- நிரூபிக்கின்றேன் !!!

உங்களிடமும் ஒரு கேள்வி :

முகம்மது தான் கடவுளின் தூதர் என்பதை நிரூபிக்க முடியுமா ???

:)

Anonymous said...

// ”அதிகம் சாப்பிட்டால் போதை தரக்கூடிய பொருளில் குறைவானதும் தடுக்கப்பட்டது (ஹராம்) தான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர் ஜாபிர் (ரலி)
நூல் திர்மிதீ 1788, நஸயீ 5513 //

இதற்கு உங்கள் விளக்கம் என்ன ?

அல்கோஹால் ஹராம் எனக் இஸ்லாம் சொல்லுது .. அந்த அல்கோஹாலில் குறைவானதுக் கூட ஹராம் என்றே சொல்லுகின்றது .. ஆனால் உலகில் பெரும்பாலான முஸ்லிம்கள் அல்கோஹால் குறைவான பியர் முதல் எண்ணற்ற பொருட்களைப் பயன்படுத்துகின்றார்கள் ... !!!

ஒரு துளி நஞ்சும் நஞ்சு தான், கோப்பை நஞ்சும் நஞ்சு தான் !!!

சௌதிக்காரர்களின் வியாபாரங்களுக்கு மதம் ஊறுகாய் என்பதை நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள். உண்மையான முஸ்லிம் 0.01 % அல்கோஹால் உடைய எந்தவொரு பொருளையும் பயன்படுத்த மாட்டான் என்றே நான் நினைக்கின்றேன். அப்படி பயன்படுத்துவோர் உண்மையான முஸ்லிம் இல்லை என்றே தோன்றச் செய்கின்றது.

Anonymous said...

@ நிஜாம் - // இக்பால் செல்வன் பழைய புகைப்படத்திற்கு பதில் புதிய புகைப்படம் உங்களுக்கு பொறுத்தமாக இருகிறாது. வாழ்த்துக்கள். //

முகமே இல்லாமல் இருப்பதற்கு எதாவது ஒரு முகம் இருப்பது எவ்வளவோ மேல் !!!

:)

அஜீம்பாஷா said...

அஸ்ஸலாமு அழைக்கும் பதிவும் அருமை பின்னுட்டங்களுக்கு பதிலும் அருமை, உங்கள் பொறுமை கலந்த பதில்கள் என்னை உங்கள் தஹ்வீத் ஜாமத்தில் சேர்ந்தது விடலாமா என்று தூண்ட வைத்திருக்கிறது.

இன்ஷாஅல்லாஹ்.

suvanappiriyan said...

இக்பால் செல்வன்!

//ஒரு துளி நஞ்சும் நஞ்சு தான், கோப்பை நஞ்சும் நஞ்சு தான் !!!

சௌதிக்காரர்களின் வியாபாரங்களுக்கு மதம் ஊறுகாய் என்பதை நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள். உண்மையான முஸ்லிம் 0.01 % அல்கோஹால் உடைய எந்தவொரு பொருளையும் பயன்படுத்த மாட்டான் என்றே நான் நினைக்கின்றேன். அப்படி பயன்படுத்துவோர் உண்மையான முஸ்லிம் இல்லை என்றே தோன்றச் செய்கின்றது.//

நான் முன்பே கூறியிருக்கிறேன். தற்போது சவுதியில் பயன்படுத்தப்படும் குளிர்பானம் பீரே அல்ல. பெயர் தெரியாததால் நாமாக வைத்துக் கொண்டது ஹலால் பீர். அதில் ஆல்கஹால் கலக்கப்பட்டதாக நிரூபிக்கப்படும் பட்சத்தில் அதை அருந்தாமல் இருந்து கொள்வோம். அப்படி உறுதி ஆனால் சவுதி அரசும் இந்த பானங்களை தடை செய்து விடும். முடிந்தது பிரச்னை.

அடுத்து இந்த போதை நீக்கப்பட்ட குளிர் பானங்களை வைத்து பொருளாதாரத்தை பெருக்கும் நிலையில் சவுதியின் நிலை இல்லை. நல்ல வளமாகவே இருக்கிறது. அப்படி வருமானம் பெருக்க நினைத்தால் மெக்காவுக்கு வரும் ஒவ்வொரு வெளி நாட்டவரும் 2000 ரியால் நிர்வாக செலவுகளுக்காக கட்ட வேண்டும் என்று ஒரு சட்டம் போட்டால் அதை வைத்தே அரசை நடத்தி விடலாம்.

தற்போது கஃபாவில் எத்தனை முறை வேண்டுமானாலும் நீங்கள் இலவசமாக போய் வரலாம். எந்த கட்டணமும் இல்லை.

suvanappiriyan said...

சகோ அஜீம் பாஷா!

வஅலைக்கும் சலாம்!

// பதிவும் அருமை பின்னுட்டங்களுக்கு பதிலும் அருமை, உங்கள் பொறுமை கலந்த பதில்கள் என்னை உங்கள் தஹ்வீத் ஜாமத்தில் சேர்ந்தது விடலாமா என்று தூண்ட வைத்திருக்கிறது.//

நல்ல விஷயங்களை தள்ளிப் போடாதீர்கள். இன்றே இணைந்து விடுங்கள். தனி மனிதர்கள் யாரையும் கண்ணை மூடிக் கொண்டு பின் பற்றாமல் தமிழ் குர்ஆனையும் நபிகளின் ஆதாரபூர்வமான செய்திகளையும் தொடர்ந்து படித்து வாருங்கள். எங்கேயும் எப்போதாவது சந்தேகம் வந்தால் தவ்ஹீத் அறிஞர்களின் இணைய தளங்களை பார்வையிடுங்கள். நபிகளின் அனுமதி இல்லாமல் மார்க்க விஷயங்களில் எந்த முடிவையும் எடுக்காதீர்கள். உண்மையை உணர்வீர்கள் இன்ஷா அல்லாஹ்.

suvanappiriyan said...

இக்பால் செல்வன்!

//முகம்மது தான் கடவுளின் தூதர் என்பதை நிரூபிக்க முடியுமா ???

:)//

முகமது நபி அவர்கள் இறைவனின் தூதர்தான் என்பதற்கு எங்களுக்கு உள்ள முக்கிய ஆதாரமே குர்ஆன் தான். காய்ந்த பேரித்தம் பழங்களை உண்டு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த எழுதப் படிக்க தெரியாத ஒரு அரபி உலக மக்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக பின் பற்றக் கூடிய ஒரு சட்ட புத்தகத்தை எக்காலத்திலும் கொண்டு வர முடியாது. இது ஒன்றே இன்று வரை அவரை இறைத் தூதராக நான் பின் பற்றக் காரணம்.

தமிழ் நாட்டுக்கும் அரபு நாட்டுக்கும் எந்த வகையிலாவது கலாசாரத்திலோ பண்பாட்டிலோ ஒத்து வரக் கூடிய அம்சங்களைப் பார்க்க முடியுமா?

ஒரு கந்தசாமி அப்துல் காதராக மாறியவுடன் அவனது வாழ்வே குர்ஆனாகி விடுகிறதே! அது எப்படி என்று என்றாவது சிந்தித்ததுண்டா?

பெரியார் தாசன் அப்துல்லாவாக மாறியவுடன் ஒரு நாத்திகர்: ஏதோ பல ஆண்டுகள் பல தலைமுறைகள் இஸ்லாத்தில் இருந்த தொனியில் அந்த குர்ஆனோடு ஒன்றிப் போய் பிரசாரம் செய்யும் அழகை யுட்யூபில் பார்த்து தெளிவுறுங்கள்.

Anonymous said...

Nizam said...


சகோதரே...,

//// இக்பால் செல்வன் said... உங்களுடைய உன்மையான பெயர்தான் இக்பால் செல்வன் என்று உங்கள் நிருபிக்கமுடியுமா?// அதை நிரூபிப்பதால் உங்களுக்கு என்ன லாபம் என்று சொல்லுங்கள் --- நிரூபிக்கின்றேன் !!! // //

நிரூபிததால் அமெரிக்கவில் இராட்டை கோபுரத்தில் விமானம் மோதியாது நீங்கள் இல்லை என்று ஒத்துக்கொள்ளுவேன். ஒருவேலை நீங்கள் நிரூபிக்காலா உங்களைப் போல் போலி முஸ்லீம் பெயரில் சென்றிப்பார்கள் ஊர்ஜிதம் ஆகிவிடும்.

//உங்களிடமும் ஒரு கேள்வி : முகம்மது தான் கடவுளின் தூதர் என்பதை நிரூபிக்க முடியுமா ??? //

இதற்கு சகோதரார் சுவனப்பிரியன் பதில் கூறிவிட்டார் இருந்தலும் உங்களுக்கு தலைக்கு எறாது. இன்றே நீங்கள் கலிமா சொல்லி முஸ்ல்மான் ஆகிவிடுங்கள் நான் நிரூபிக்கின்றேன்.

//முகமே இல்லாமல் இருப்பதற்கு எதாவது ஒரு முகம் இருப்பது எவ்வளவோ மேல் !!!//


அடுத்தவன் முகத்தை போட்டால் நீங்கள் மேல். உங்களுடைய சொந்த போட்டோவை போட்டால் நீங்கள் ரொம்பா மட்டமா நல்ல இருக்குதையா உங்களுடைய சித்தந்தாம். வாழ்த்துக்கள். on குடிகாரன் பேச்சு- ஒரு கலக்கல் அனுபவம்!

Anonymous said...

அருமையான பதிவு சகோ. இதை படித்துவிட்டு குடிகாரர்களின் மப்பு பாதியிலேயே இறங்கிவிட்டது என் நினைக்கிறேன்.நல்லதை சொன்னால்கூட மதவெறியர்கள் என்கிறார்கள் இஸ்லாம் எதிர்ப்பு வெறியர்கள்.நீங்கள் இதுபோன்ற நல்ல பதிவுகளை போடுங்கள் அவர்களும் எதிர்கிறேன் பேர்வழி என்று சமூக கேடுகளுக்கு துணை போய் மக்களிடம் நன்றாக வாங்கிகட்டிகொள்ளட்டும்
kalam.

Anonymous said...

//முகமது நபி அவர்கள் இறைவனின் தூதர்தான் என்பதற்கு எங்களுக்கு உள்ள முக்கிய ஆதாரமே குர்ஆன் தான். //

சுத்தப் பைத்தியகாரத் தனம் !!! அவரே அவரை இறைத் தூதர் என்று அறிவித்துக் கொண்டதை எழுதிவைத்துக் கொண்டு, அதனையே அதற்கான ஆதாரம் என்பது .... நகைப்பதை விட வேறு என்ன செய்ய முடியும் ....

இதேப் போல் தான் உலகம் முழுவதும் அவரவர் ஒன்றை எழுதிவைத்துக் கொண்டு தாமே கடவுள், கடவுளின் மகன், கடவுளின் தூதர் என்றெல்லாம் கூறி அலைகின்றார்கள் ....

அனைத்தும் ஒரேக் குட்டையில் ஊறிய மட்டைகள் தான் !!!

பெரியார்தாசன் இஸ்லாமுக்கு மாறினால் நாமும் மாற வேண்டுமா என்ன ?!!! நல்ல காமெடி ... !!!

Anonymous said...

@ நிஜாம் - // நிரூபிததால் அமெரிக்கவில் இராட்டை கோபுரத்தில் விமானம் மோதியாது நீங்கள் இல்லை என்று ஒத்துக்கொள்ளுவேன். ஒருவேலை நீங்கள் நிரூபிக்காலா உங்களைப் போல் போலி முஸ்லீம் பெயரில் சென்றிப்பார்கள் ஊர்ஜிதம் ஆகிவிடும். //

நல்லா சுத்துங்க காதுல பூ !!!

உங்களைப் பொறுத்தவரை உலகமெல்லாம் குண்டு வைக்கும் முஸ்லிம் தீவிரவாதிகள் அனைவரும் போலி முஸ்லிம் பெயரில் அலைபவர்கள் தானே !!! இதனையே அனைத்து மதத்தினரும் செய்ய ஆரம்பித்தால் நாசமாய் போகும் இந்த உலகம் !!!

//அடுத்தவன் முகத்தை போட்டால் நீங்கள் மேல். உங்களுடைய சொந்த போட்டோவை போட்டால் நீங்கள் ரொம்பா மட்டமா நல்ல இருக்குதையா உங்களுடைய சித்தந்தாம். வாழ்த்துக்கள். on குடிகாரன் பேச்சு- ஒரு கலக்கல் அனுபவம்!//

சொந்தப் போட்டோவை போடுவதும், வேறு போட்டோவை போடுவதும் என்னுடைய விருப்பம். சுவனப்பிரியன் மட்டும் என்ன சொந்தப் போட்டோவையா போட்டு இருக்காரு. ....

அடுத்தவன் சொன்னதை எல்லாம் காப்பியட்டித்து உளறிவிட்டு, இறைவாக்கு என சொல்பவர்களையே இந்த உலகம் இன்னும் நம்பிக் கொண்டு இருக்கு .. யார் குடிகாரன் பேச்சு என்பதை புத்தியுள்ளவர்கள் சிந்தித்து அறிவார்கள்.