Followers

Tuesday, August 14, 2012

காந்திஜிக்கு சுதந்திர உணர்வை ஊட்டியவர்கள் யார்?


'மேடம்! சுதந்திர தின வாழ்த்து கூறிட்டேன். கொடியை மடக்கிடட்டுமா?'

-----------------------------------------------------

முதலில் நண்பர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

இது ஒரு மீள் பதிவு. புதிதாக படிப்பவர்களுக்காக......



இன்றைக்கு சுதந்திரம் என்ற பெயர் கேட்டாலே அனைவருக்கும் நினைவில் வருவது மகாத்மா எனும் தேசப்பிதாதான். அந்த மகாத்மாவை தேசப்பிதாவாக மாற்றியவர்கள் யார் என்ற உண்மையை எல்லா வரலாற்றாசிரியர்களும் சாமர்த்தியமாக மறைத்து விட்டனர். ஆனால் மகாத்மா காந்தி தனது சுய சரிதையில் தனக்கு விடுதலை உணர்வை ஊட்டியவர்கள் யார் என்பதை மறக்காமல் குறிப்பிட்டுள்ளார். அவர்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை இப் பதிவில் பார்ப்போமா!

அப்துல்லாஹ் ஆதம் ஜவேரி, அப்துல் கரீம் ஆதம் ஜவேரி ஆகிய இருவரும் சகோதரர்கள். குஜராத்தில் போர்பந்தரில் பிறந்த இவர்கள் பல நாடுகளுக்குச் சென்று பெயர் சொல்லும் அளவுக்கு கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கினார்கள். 1865ம் ஆண்டு 'தாதா அப்துல்லாஹ் கம்பெனி' என்ற பெயரில் 50 சரக்கு கப்பல்களையும் 4 பயணிகள் கப்பல்களையும் கொண்ட மிகப் பெரிய நிறுவனத்தை இவர்கள் நிறுவினார்கள்.

இவர்களின் கம்பெனி அலுவலக வேலைகளை முறையாகச் செய்ய சட்டம் தெரிந்த ஒரு நபரை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் அப்துல் கரீம் ஆதம் ஜவேரி அவர்கள் போர்பந்தரில் தனது வீட்டிற்க்கு அருகாமையில் இருந்த சட்டம் படித்து முடித்த இளைஞர் காந்தி அவர்களை அலுவலகப் பணிக்காக தனது சகோதரர்களுடன் கலந்து ஆலோசித்து 105 பவுண்டு சம்பளத்திற்க்கு வேலைக்கு அமர்த்தினார்கள்.

காந்தி என்ற அந்த இளைஞர் தேசப்பிதாவாக உருவாக்க விதை விதைத்த நேரம் இதுதான்.

ஜாவேரி குடும்பமும் காந்தியும் சுதந்திர போராட்டமும்!.

மதுரை: சுதந்திர போராட்டத்தில் காந்திக்கு உதவியதால் கடலில் மூழ்கடிக்கப்பட்ட முஸ்லிம் சகோதரர்களின் கப்பலை மீட்டு, தமிழகத்தில் அருங்காட்சியகத்தில் வைக்க அவர்களது பேரன் கோரிக்கை வைத்துள்ளார்..

மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டத்திற்கும், அவரது தென் ஆப்ரிக்கா பயணத்தின் போதும் உதவியவர்கள் குஜராத் மாநிலம் போர்பந்தரைச் சேர்ந்த வியாபார சகோதரர்கள் அப்துல்லா ஆதம் ஜவேரி மற்றும் அப்துல் கரீம் ஆதம் ஜவேரி. இவர்களது பேரன் அப்துல்கரீம் அப்துல்லா ஜவேரி மதுரையில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டத்தில் எங்கள் தாத்தாக்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. காந்திக்கு உதவியாக இருந்ததுடன், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதால் எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான நான்கு கப்பல்கள் 1906ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் மூழ்கடிக்கப்பட்டது. அதில், ஒரு கப்பல் போர்பந்தர் கடலில் மூழ்கிய நிலையில் இருக்கிறது. இந்த கப்பலையும், போர்பந்தரிலுள்ள எங்கள் குடும்ப சொத்துக்களையும் அபகரிக்க இருவர் முயற்சித்தனர். அவர்கள் காந்தியின் வாழ்க்கை வரலாறு ஆவணங்களை திருத்தி மோசடியில் ஈடுபட்டனர். இவற்றை கோர்ட் மூலம் முறியடித்துள்ளேன். அந்த இருவர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க குஜராத் அரசிடமும், கோர்ட் மூலமும் கோரிக்கை வைத்துள்ளேன். இந்த நடவடிக்கையை நிறைவேற்ற காங்., தலைவர் சோனியா, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு கோரிக்கை வைத்துள்ளேன். அத்துடன் போர்பந்தரில் மூழ்கியுள்ள ரூ.10 கோடி மதிப்புடைய கப்பலை மீட்டு, தமிழகத்திலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அப்துல் கரீம் அப்துல்லா ஜவேரி கூறினார்.

அணுசக்தியால் இயங்கும் அமெரிக்க போர்க் கப்பல் நிமிட்ஸ், சென்னை துறைமுகத்துக்கு அருகே நங்கூரம் பாய்ச்சி நிற்க, அதையொட்டி ஆயிரம் சர்ச்சைகள்.. அமெரிக்காவின் கொடூரமான போர்முகத்தின் அடையாளம்தான் நிமிட்ஸ் கப்பல் எனக்கூறி, சில அரசியல் கட்சிகள் அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், போர்பந்தர் துறைமுகத்தில் 1897_ம் ஆண்டில் ஆங்கிலேயரால் மூழ்கடிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு கப்பலை மீட்க சத்தமில்லாமல் போராடி வருகிறது, போர்பந்தரை பூர்வீகமாகக் கொண்ட ஜவேரி என்கிற குடும்பம்.

வரலாற்றுப் பொக்கிஷங்களோடு மூழ்கிக் கிடக்கும் அந்தக் கப்பலை அரசும் கண்டுகொள்ளாமல் இருக்கிறதே என்ற வருத்தமும் ஜவேரி குடும்பத்தாருக்கு உள்ளது.

போர்பந்தர்! ‘பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்லே’ என்றெல்லாம் நாம் வசனம் பேச முடியாது. இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தி அவதரித்த அமைதியான இடம். குஜராத் மாநிலத்தில் உள்ள இந்தத் துறைமுக நகரம்தான், ஜவேரி குடும்பத்தாரின் பிறப்பிடம்.

இந்த ஜவேரி குடும்பத்தாரின் வழிவந்த அப்துல்கரீம் என்பவர், மதுரையில் மொத்த துணி வியாபாரம் செய்து வருகிறார். போர்பந்தரில் மூழ்கிக் கிடக்கும் தங்கள் குடும்பச் சொத்தான கப்பல் பற்றி பல அரிய தகவல்களை அவர் நம்மிடம் கொட்டினார்.

‘‘எனது கொள்ளுத் தாத்தா அப்துல்கரீம் ஹாஜி ஆதம் ஜவேரி. அவரது அண்ணன் அப்துல்லா ஹாஜி. இவர்கள் இருவரும் ‘அப்துல்லா அண்ட் கம்பெனி’ என்ற பெயரில் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் கப்பல் கம்பெனி நடத்தினர். அவர்களிடமிருந்த மொத்த கப்பல்கள் ஐம்பத்து நான்கு. அதில் நான்கு பயணிகள் கப்பல்.

1893_ம் ஆண்டு என் கொள்ளுத்தாத்தா அப்துல்கரீம், அவரது அம்மாவைப் பார்ப்பதற்காக போர் பந்தர் வந்திருக்கிறார். வந்த இடத்தில் காந்தியைச் சந்தித்தார். மகாத்மா காந்தி அப்போது சட்டப்படிப்பு முடித்த இருபத்து நான்கு வயது இளைஞர். அவர பண்பு என் கொள்ளுத்தாத்தாவைக் கவர்ந்ததால், டர்பனில் உள்ள அவரது கப்பல் கம்பெனியின் சட்டக்குழுவில் காந்தியைச் சேர்த்துக் கொள்ள விரும்பினார். காந்திக்கு சம்பளம் அப்போது நூற்று ஐந்து பவுன்.

அதே ஆண்டு அப்துல் கரீமுடன் காந்தி கப்பலில் புறப்பட்டு டர்பன் துறைமுகத்க்குப் போய்ச் சேர்ந்தார். மூத்தவர் அப்துல்லா ஹாஜி, காந்தியை துறைமுகத்துக்கு வந்து வரவேற்று இருக்கிறார். காந்தியின் அரசியல் வாழ்க்கைக்கு பிள்ளயார் சுழி போடுகிறோம் என்பது ஜவேரி சகோதரர்களான என் கொள்ளுத்தாத்தாக்களுக்கு அப்போது தெரியாது.

எங்கள் கம்பெனியின் வழக்கு தொடர்பாக டர்பனில் இருந்து பிரிட்டோரியா நகருக்கு காந்தி ரயிலில் சென்ற போதுதான், மாரிட்ஸ்பார்க் ரயில் நிலையத்தில் முதல் வகுப்புப் பெட்டியில் இருந்து ஒரு வெள்ளயரால் கீழே தள்ளப்பட்டார். பின்னாளில், இந்தியாவின் விடுதலைக்கே காரணமாக அமைந்தது, இந்தச் சம்பவம்.

1894_ம் ஆண்டு மே 22_ம் தேதி எங்கள் மூத்த கொள்ளுத் தாத்தா அப்துல்லா ஹாஜி ‘நேட்டால் இந்தியன் காங்கிரஸ்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அது டர்பனில் உள்ள எங்கள் கொள்ளுத்தாத்தாக்களின் வீட்டில்தான் ஆரம்பிக்கப்பட்டது. அதன் முதல் தலைவராக அப்துல்லாவும், பொதுச்செயலாளராக காந்தியும் இருந்தார்கள். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. 1896_ம் ஆண்டு அப்ல்கரீம் தலைவராகப் பொறுப்பேற்றார். காந்தி தொடர்ந்து செயலாளராகவே நீடித்து வந்தார்.

1897_ம் ஆண்டு காந்தி இந்தியாவுக்குத் திரும்பி, அவரது குடும்பத்தை எஸ்.எஸ். குர்லேன்ட் என்ற எங்கள் கப்பலின் மூலம் டர்பனுக்கு அழைத்து வந்தார். காந்தியின் மனவி கஸ்தூரிபாய் அம்மயார், இரண்டு மகன்கள், காந்தியின் சகோதரி மகன் ஆகியோர் அந்தக் கப்பலில் வந்தனர்.

காந்தி டர்பனுக்குள் நுழைவதை விரும்பாத பிரிட்டிஷ் அரசு, அவரை கப்பலில் இருந்து இறங்க அனுமதிக்கவில்ல. அவரைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று ஜவேரி சகோதரர்களை பிரிட்டிஷ் அரசு நிர்ப்பந்தித்தது. அதற்காக நஷ்ட ஈடு தருவதாக ஆசை காட்டியது. ஆனால், ஜவேரி சகோதரர்கள் இணங்கவில்ல. ‘எங்கள் விருந்தாளியாக வந்திருக்கும் காந்தியையும், அவரது குடும்பத்தையும் அனுமதித்தே ஆகவேண்டும்’ என்று பிடிவாதம் பிடித்தனர்.

இருபத்து மூன்று நாட்கள் இழுபறிக்குப் பிறகு டர்பன் துறைமுகத்தில் கால்பதிக்க காந்தி அனுமதிக்கப்பட்டார். இந்தத் தாமதத்தால் கப்பல் கம்பெனி பெரும் நஷ்டமடந்தது.

‘நேட்டால் இந்தியன் காங்கிரஸ்’ சார்பில் எனது கொள்ளுத்தாத்தாக்கள் ‘இந்தியன் ஒபீனியன்’, என்ற பத்திரிகையை வெளியிட்டனர். அது தென்னாப்பிரிக்க இந்தியர்கள் மத்தியில் பிரபலமடந்தது. ‘யங் இந்தியா’ என்ற செய்தித்தாள, எஸ்.எஸ். கேதிவ் என்ற கப்பலில் வைத்து என முன்னோர் அச்சடித்து வெளியிட்டனர். அது இந்தியாவில் பல இடங்களிலும் பரவி வெள்ளயர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. நான் சொல்லும் தகவல்கள் அனைத்தும் காந்தியின் சுயசரிதயான சத்திய சோதனயிலும் உள்ளது. (அதையும் நம்மிடம் காண்பிக்கிறார்.)

அப்துல்லா கப்பல் கம்பெனிக்காக தென்னாப்பிரிக்க நீதிமன்றம் ஒன்றில் காந்தி ஒரு முறை தலைப்பாகை அணிந்தபடி வாதிட்டார். அது வெள்ளக்கார நீதிபதியின் கண்ண உறுத்தியது. ‘அதை அகற்ற வேண்டும்’ என்று நீதிபதி கூறினார். காந்தியும் கழற்றத் தயாரானார். ஆனால் அருகில் இருந்த அப்துல்லா, ‘தலைப்பாகையை கழற்றி வைப்பது நம்நாட்டு மானத்தைக் கீழே இறக்குவதைப் போன்றது. எனவே கழற்றாதீர்கள்’ என்று கூறிவிட்டார். ‘அந்த வழக்கில் நமக்குப் பாதகம் ஏற்பட்டாலும் பரவாயில்ல’ என்றார். இப்படி காந்தியின் சுதந்திர உணர்வுக்கு உறுதுணயாக இருந்தவர்கள் ஜவேரி சகோதரர்கள்.

1906_ம் ஆண்டு காந்தி இந்திய விடுதலையில் மும்முரமாக இறங்கினார். இவருக்குப் பின்பலம் யார் யார் என்று ஆங்கிலேயர்கள் ஆராயத் தொடங்கினார்கள். அப்போது அப்துல்லா கப்பல் கம்பெனிதான் காந்தியின் அஹிம்சை போராட்டத்துக்கு அடித்தளமாக இருக்கிறது என்பது ஆங்கிலேயர்களுக்குத் தெரியவந்தது. எனவே, அப்துல்லா கப்பல் கம்பெனியின் நான்கு பயணிகள் கப்பலை அங்கங்கே மூழ்கடித்துவிட ஆங்கிலேயர்கள் திட்டம் தீட்டினார்கள்.

அதன்படி எஸ்.எஸ். வர்க்கா கப்பல் மகாராஷ்டிரா மாநிலம் அலிபாகு துறைமுகத்திலும், எஸ்.எஸ். நாதிரி கப்பல் டர்பன் துறைமுகத்திலும், எஸ்.எஸ். குர்லேண்ட் கப்பல் கராச்சி துறைமுகத்திலும், எஸ்.எஸ். கேதிவ் கப்பல் போர்பந்தர் துறமுகத்திலும் 1897_ம் ஆண்டு மூழ்கடிக்கப்பட்டன. போர் பந்தர் துறமுகத்தில் சுமார் நாற்பதடி, ஐம்பதடி ஆழத்தில் எஸ்.எஸ்.கேதிவ் ஜல சமாதியானது. இன்றும் கூட அதன் புகைபோக்கி வெளியில் தெரிகிறது.

முக்குளிப்பதில் கைதேர்ந்த சிலரை உதவியுடன் இந்தக் கப்பலில் இருந்த முத்துக்கள், அலங்கார வேலப்பாடு கொண்ட பீங்கான் பாத்திரங்கள், வெள்ளி ஜாடி, உலக வரலாறு குறித்த புத்தகம் போன்ற சில பொருட்களை வெளியே எடுத்தோம். அந்தக் கப்பலை வெளியே எடுத்தால், காந்தியின் ‘யங் இந்தியா’ பத்திரிகை அச்சடித்த இயந்திரம் கூட கிடைக்கும். இந்த கேதிவ் கப்பல் எகிப்திய அரசர் முகமது கேதிவிடம் இருந்து என் பாட்டனார்கள் ஒரு லட்சத்துப் பதினாறாயிரம் பவுன்டுக்கு வாங்கிய கப்பல். இது தொடர்பாக நான் சொல்லும் தகவல்கள் அனைத்தும் லண்டன் லாயிட்ஸ் பதிவேடுகளில் இன்றைக்கும் உள்ளது.

சுதந்திரப் போர் தொடங்குவதற்கு முன்பே அதற்காக ஏராளமான சொத்துக்களை நாங்கள் இழந்து விட்டோம். இப்போது கூட காந்தியை முன்னிறுத்தி எந்த உதவியையும் நாங்கள் கேட்டதில்லை. இனி கேட்கப் போவதுமில்ல. எங்கள் முன்னோர் தொடங்கிய ஓர் உயர்நிலைப் பள்ளி போர்பந்தரில் இன்றும் செயல்படுகிறது. எங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள் மதுரையில் மொத்தத் துணி வியாபாரம் செய்து வந்ததால், என் தந்தையின் மறைவுக்குப் பின்னர், 1970_ல் என் தாயாருடன் இங்கே வந்து சேர்ந்தோம். மதுரைவாசியாக நான் மாறிவிட்டாலும் போர்பந்தரை மறக்கவில்லை. 1985_ல் என் சகோதரியை போர்பந்தரில் திருமணம் செய்து கொடுத்தபோது, அங்கு நான் போயிருந்த நேரம்தான் மூழ்கிக் கிடக்கும் எங்கள் கப்பலை வேறு சிலர் உரிமை கொண்டாடி அபகரிக்கத் திட்டமிடுவதைத் தெரிந்து கொண்டேன். அதற்காக வழக்குத் தொடர்ந்தேன்.

உலகில் எங்கு கப்பல் வாங்கினாலும், அதனை லண்டன் லாயிட்ஸ் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். அதன்படி, மூழ்கிய கப்பல் எங்களுக்குச் சொந்தமானது என அந்த நிறுவனம் சான்றிதழ் அளித்தது. (அதைக் காண்பிக்கிறார்) அதனடிப்படையில் வழக்கு வெற்றியடந்து கப்பல் எங்களுடையது என கோர்ட்டில் தீர்ப்பு வாங்கிவிட்டோம்.

இந்தக் கப்பல் கிட்டத்தட்ட ஐம்பதடி ஆழத்தில் இருப்பதால் இதிலுள்ள பொருட்களை மற்றவர்கள் அபகரிக்க வாய்ப்புள்ளது. எனவே அரசே இந்தக் கப்பலை வெளியே கொண்டு வந்து அதில் உள்ள பொருட்களை எடுத்து அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். இது தொடர்பாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை நேரடியாகச் சந்தித்துப் பேசினேன். காந்திக்கு உதவியாக இருந்த காங்கிரஸ்காரர்களுக்கு நாம் ஏன் உதவ வேண்டும் என்று மோடி நினத்தாரோ என்னவோ, எதுவும் செய்யாமல் விட்டுவிட்டார்.

காங்கிரஸ் தலைவர்கள் சிலரிடமும் பேசினேன். அவர்கள் நான் காங்கிரஸில் சலுகைபெற முயல்வதாக தவறாகப் புரிந்து கொண்டார்கள். ஜனாதிபதி, பிரதமர், சோனியாகாந்தி என பலருக்கும் கடிதம் எழுதினேன். (கடித நகல்களக் காட்டுகிறார்) மூழ்கிய கப்பலை மீட்க வேண்டுமென்ற என போராட்டம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் மதுரை காந்தி மியூசியத்தில் நடந்த புகைப்படக் கண்காட்சியில் கூட என் கொள்ளுத் தாத்தாக்கள் படம் இடம் பெற்றிருந்தது. எங்கள் குடும்பச் சொத்துக்கள் தொடர்பாக காந்திஜி கைப்பட எழுதிய உயில் மற்றும் சில கடிதங்கள்கூட இன்றும் என்னிடம் உள்ளது.



இந்தத் தகவல்கள எல்லாம் பி.பி.சி.யில் பேட்டியாக கொடுத்தேன். இங்கிலாந்து அரசு அதைத் தெரிந்து கொண்டு, என்னை அந்த நாட்டின் குடிமகனாக ஏற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்தது. ஆனால், என் சொந்த நாடான இந்தியாவை விட்டு நான் எங்கேயும் போகத் தயாராக இல்லை. ஆனால், காந்தி தொடர்பான வரலாற்று ஆவணங்களைத் தேடும் விஷயத்தில் அரசு ஏன் அசிரத்தையாக இருக்கிறது என்பதுதான் தெரியவில்லை.



இந்தக் கப்பலை மீட்டு அதிலுள்ள பொருட்களை காட்சியகத்தில் வைத்தால், என்வசமுள்ள காந்தியின் கடிதம் போன்ற அரிய ஆவணங்களை அதற்குத்தர தயாராக இருக்கிறேன். எனக்கு எதுவும் வேண்டாம். காந்தியின் சுதந்திரப்போராட்டத்தில் என் முன்னோர்களின் பங்களிப்பும் இருக்கிறது என்ற பெயர் மட்டும் போதும்! என வேதனயுடன் சொல்லி முடித்தார் அப்துல் கரீம்.

இதற்கான முயற்சிகளில் அப்துல் கரீமுக்கு உதவி வரும், இந்திய யூனியன் முஸ்லிம்லீக்கின் மதுரை மாவட்ட பொதுச்செயலாளர் எம். அலி அக்பரிடம் பேசினோம்.

‘‘காந்தியின் அரசியல் வாழ்வுக்கு அடித்தளமிட்ட ஜவேரி சகோதரர்கள், அதற்காகவே சொத்துக்களை இழந்தவர்கள். அவர்களுக்கு தபால் தலை வெளியிட வேண்டும் என்று அப்போதைய மத்திய அமைச்சர் தயாநிதிமாறனிடமும், இப்போதைய அமைச்சர் ராஜாவிடமும் கோரிக்கை வைத்துள்ளோம்.

ஜவேரி சகோதரர்களின் வாரிசுகள் பற்றி காங்கிரஸ் பேரியக்கம் கூட கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையாக உள்ளது. இது தொடர்பாக வேலூர் எம்.பி. காஜாமொய்தீன், வெளியுறவுத்துறை அமைச்சர் அகமதுவிடம் பேசியிருக்கிறார். நம் கண் எதிரே கிடக்கும் ஒரு பொக்கிஷத்தை யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையாக உள்ளது’’ என்றார் அக்பர் அலி.

அரசியல்வாதிகளுக்கு ஆயிரம் வேலை இருக்கும். அதற்கிடையே மகாத்மா காந்தியை நினப்பதற்கெல்லாம் அவர்களுக்கு ஏது நேரம்!
"KUMUDAM REPORTER" 12.07.07

http://www.hindu.com/2004/04/03/stories/2004040305100500.html

இன்றைய மதிப்பின்படி கிட்டத்தட்ட 150 கோடி தொகையை ஜாவேரி சகோதரர்கள் இந்திய விடுதலைக்காக இழந்தனர். மூழ்கடிக்கப்பட்ட 4 பயணிகள் கப்பலில் ஒன்று எஸ்.எஸ். கேத்திவ் கப்பல் குஜராத் மாநிலம் போர்பந்தர் துறைமுகத்தில் மூழ்கடிக்கப்பட்டு இன்று வரை கடலுக்கடியில் இருக்கிறது.

நாட்டு சுதந்திரத்திற்க்காக தங்கள் நிறுவனத்தையும் பணம் பொருள் அனைத்தையும் இழந்த இந்த ஜாவேரி சகோதரர்களை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? ஒருக்கால் இவர்கள் இந்து மதத்தில் அதுவும் உயர் சாதியில் பிறந்திருந்தால் இன்று நமக்கெல்லாம் அறியப்பட்டவர்களாக ஆகியிருப்பார்கள். உண்மைதானே!

___________________________________________________________

மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு – 22



அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்

21 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,

இந்திய சு'தந்திர' வரலாற்று பாடத்தில் மாணவர்களிடம் சொல்லாமல் மறைக்கப்பட்ட அத்தியாயங்கள் ஏகப்பட்டவை..! அவற்றில் ஒரு அத்தியாயத்தின் ஒரு பக்கம்தான் இது..!

இந்திய காந்தி ஏன் தென்னாப்ரிக்கா போனார்..? அங்கே என்ன வேலை அவருக்கு..? யாரிடம் வேலை பார்த்தார்..? இந்தியாவில் யார் அவருக்கு பின்புலம்..? காந்தி மீது தென்னாப்பிரிக்க வெள்ளையனுக்கு என்ன காண்டு..?

.......என்றெல்லாம் கேள்வி கேட்கும் முன்னரே.....

பள்ளி வரலாற்றை முடித்து மூட்டை கட்டி விடுகின்றனர்..! உங்கள் பதிவில் அவற்றுக்கு விடைகள்..! மிக நன்றி சகோ.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

இன்னும் கேள்விகள் உள்ளன..!

சுபாஷ் சந்திர போஸ் ராணுவத்துக்கு பண உதவி செய்தது யார்..?

வ உ சி ஓட்டிய கப்பலை அவருக்கு காசு குடுத்து வாங்கி தந்தது யார்..?

1700 களிலேயே ஆங்கிலேயருடன் வங்காளத்தில் சிராஜ்-உத்-தவ்ளாவும்... மைசூரில் அப்பா ஹைதர் அலியும் மகன் திப்பு சுலதானும் தீரமுடன் 'உலகின் முதல் ஏவுகணை' மற்றும் 'இந்தியாவின் முதல் பீரங்கி' எல்லாம் வைத்து போரிட்டனரே..?

ஆனால், 1857 தான் முதல் சுதந்திர போராட்டம் ஆரம்பம் என்கின்றனரே நம் வரலாற்று பாடநூலில்..!

.......என்றெல்லாம் கேள்வி கேட்கும் முன்னரே..... பள்ளி வரலாற்றை முடித்து மூட்டை கட்டி விடுகின்றனர்..!

நீதிமான்களே... வாருங்கள்..! இந்தியாவின் மறைக்கப்பட்ட வரலாற்றை அம்பலப்படுத்தி எழுதுவோம்..! திரிக்கப்பட்ட வரலாற்றை தீரமுடன் அழிப்போம்..!

VANJOOR said...

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்! – PART 1

ஏகாதிபத்திய வெள்ளையர்களின் கீழ் அடிமைப்பட்டு கிடந்த இந்தியா, சுதந்திரக்காற்றைச் சுவாசித்து 65 வருடங்கள் கடந்து விட்டன.

இன்று இந்தியர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு 65 -வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்ற இவ்வேளையில்,

இந்தியச் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட அந்தத் தியாகிகளின் ஈடு இணையற்றச் செயல்பாடுகளை நினைவு கூர வேண்டியது அவசியமாகும்.

இன்று சுவாசிக்கும் இந்தச் சுதந்திரக்காற்று அவ்வளவு எளிதாக கிடைத்து விடவில்லை.

வியாபாரத்திற்காக நாட்டில் நுழைந்த வெள்ளை ஏகாதிபத்திய வெறியர்கள், உள்நாட்டு பிரச்சனைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு நாட்டை தங்களின் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர்.

தாய்மண்ணை ஆக்ரமித்துள்ள அந்நியர்களிடமிருந்து நாட்டை மீட்க இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைந்துப் போராடினர்.

தேச விடுதலை என்று வரும் போது அதில், ஜாதி, மதம், இனம் என்பதற்கெல்லாம் இடம் இல்லை.

வெள்ளையன் வருகைக்கு முன்னர் பல்வேறு இன, மொழி மக்களாகப் பிரிந்து வாழ்ந்திருந்த இந்தியர்கள்,
வெள்ளையனை எதிர்க்க, தங்களிடையிலான அனைத்து வேற்று விருப்பு, வெறுப்புகளையும் களைந்து ஓரணியில் நின்றுப் போராடினர்.

எனினும் எப்பொழுதும் போல் அற்பக் காசிற்காகவும் அடிமைப் பதவிக்காகவும் விலைபோன சில துரோகிகளும் நாட்டில் இருக்கவே செய்தனர்.

அனைத்துப் பிரச்சனைகளையும் எதிர்கொண்டு இறுதியில் வெள்ளையனை நாட்டை விட்டு விரட்டி, 15 ஆகஸ்ட் 1947 அன்று இன்பமான சுதந்திரக்காற்றைச் சுவாசித்தனர் மக்கள்.

வெள்ளையன் நாட்டை விட்டு வெளியேறிய நிமிடத்திலிருந்து அதுவரை மறைமுகமாக இருந்து சதிராடிய மற்றோர் எதிரியை..

இல்லை... துரோகியைச் சமாளிக்க வேண்டிய நிலைக்கு இக்கட்டான நிலைக்கு நாடு வந்து விட்டது.

ஆனால் உள்ளுக்குள்ளே வளர்ந்து வந்த அந்த எதிரியைக் குறித்தத் தெளிவான சிந்தனை இன்மையோ என்னமோ நாடு அந்தத் துரோகிகளைச் சரியாகக் கவனிக்கத்தவறி விட்டது.

அதன் விளைவை நாடு சுதந்திரம் அடைந்த ஒரு வருடத்திலேயே பெற ஆரம்பித்து விட்டது.

ஆம்... சுமார், 35 வருட காலம் வெள்ளையனை எதிர்த்து அவனின் அடக்குமுறை அடிமை ஆட்சியில் போராடி வந்தத் தேசத்தந்தை எனப் போற்றப்படும் மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற காந்தியடிகள், சுதந்திர இந்தியாவில் ஒரு வருட காலம் கூட உயிரோடு வாழ இயலாமல் போனது.

இந்த ஒன்று மட்டுமே துரத்தப்பட்ட எதிரியை விட, அழிக்கப்பட வேண்டிய துரோகியின் வலிமையையும் வெறியையும் பறை சாற்றும்.

அப்பொழுதும் அந்தத் துரோகியினால் நாடு எதிர்கொள்ளப் போகும் பிரச்சனைகளைச் சரியாக உணர்ந்து நடவடிக்கை எடுக்கப்படாததன் விளைவு இன்று நாடு அனுபவித்துக் கொண்டிருக்கின்றது.

இந்தத் துரோகிகளின் சதி வேலைகளினால் மிகக் கொடூரமாகப் பாதிக்கப்பட்டவர்களும்

பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பவர்களும் முஸ்லிம்கள் தான்.

இந்தியச் சுதந்திரத்திற்குத் தனது சதவிகிதத்தையும் மிஞ்சும் விதத்தில் உயிர்களையும் உடமைகளையும் தியாகம் செய்த இஸ்லாமிய சமுதாயம்,

இன்று இந்தத் துரோகிகளின் கைங்கர்யத்தால் நாட்டின் தேசிய நீரோட்டத்திலிருந்து ஒதுக்கப்பட்டு இரண்டாந்தரக் குடிமக்களை விடத் தரம் தாழ்த்தப்பட்டவர்களாக,

தேசவிரோதிகளாகச் சித்தரிக்கப்பட்டு கேவலப்படுத்தப்பட்டுள்ளனர்.

அன்று நாட்டு மக்களுடன் ஒரே அணியில் இணைந்துச் சுதந்திரத்திற்காகப் போராடிய முஸ்லிம் சமுதாயம்,

இன்று எதுவுமில்லாதவர்களாக அரசு, அதிகாரம், நீதி, கல்வி, பொருளாதாரம் என அனைத்திலும் ஒதுக்கப்பட்டுப் பிந்தங்கிவர்களாக நாட்டின் விரோதிகள் போன்று சித்தரிக்கப்பட்டு பலிகடாவாக்கப்பட்டுள்ளனர்.



மேலும் படிக்க இங்கே >>>> இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்! - 1 <<<<< சொடுக்குங்கள்

THANKS TO : satyamargam.com


Continued…..

VANJOOR said...

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்! – PART 2

ஆனால் அதே நேரம், அன்று நாட்டு மக்கள் ஒரே அணியில் நின்று வெள்ளையனை எதிர்த்துப் போராடிய வேளையில்,

சுதந்திரப்போராட்டத்திலிருந்து விலகி நின்று வெள்ளையனுக்கு வெண் சாமரம் வீசியர்கள்,

சுதந்திரப் போராட்ட தியாகிகளைக் காட்டிக் கொடுத்தவர்கள்,

கேவலமான அடிமை பதவிகளுக்காக அந்நியனுக்கு அடிமைச் சேவகம் செய்தவர்கள் எல்லாம்

இன்று ஆட்சிக் கட்டிலிலும் அதிகார இடங்களிலும் ஏன் பாராளுமன்றத்தில் சிலை வைத்து மதிக்கப்படுவது வரை அதிகாரங்களின் உயர் இடங்களை ஆக்ரமித்து அமர்ந்து கொண்டு

தேசப்பற்றாளன் வேடம்பூண்டு,

சுதந்திரத்திற்காகத் தங்கள் எதிர்கால சந்ததியினரின் நலன்களை அர்ப்பணித்த முஸ்லிம் சமுதாயத்தை அடக்கி, ஒடுக்குகின்ற அவலநிலை.

சுதத்திரத்திற்கு வாளேந்தி மடிந்தச் சமுதாயத்தின் சந்ததியினர் வாழ்வுரிமை கேட்டு வீதியில் நிற்கும் அவலம் உலகில் இங்கு மட்டுமே காணக்கிடைக்கும் அதிசயமாகும்.


"தன் வரலாற்றை அறியாத சமுதாயம் வரலாற்றிலிருந்தே துடைத்தெறியப்படும்" என்பதற்கு இந்திய முஸ்லிம் சமுதாயத்தைச் சரியான உதாரணமாக கூறலாம்.

கடந்த 65 ஆண்டு காலமாக தேச விடுதலைப் போராட்டத்தில் கலந்துக் கொள்ளாமல்,

வெள்ளையனின் தொடையப் பிடித்து விட்டு அற்ப வாழ்வு வாழ்ந்த துரோகிகளின் சதிப்பிரச்சாரத்தில் இஸ்லாமிய சமூகமும் கட்டுண்டுத் தன்னைத் தானே தேசிய நீரோட்டத்திலிருந்து விலக்கிக் கொண்டு விட்டது.

கோயபல்ஸின் தத்துவத்தைச் சரியாகக் கடைபிடித்து, முஸ்லிம்கள் இந்த நாட்டிலேயே வாழத்தகுதியற்றவர்கள் என்ற ஒரு மாயையை முஸ்லிம்களின் மனதிலேயே இந்தப் படுபாவி துரோகிகள் விதைத்து விட்டனர்.


இதற்கானக் காரணம், தாய் நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றையும் அதில் தனது சமுதாய வேங்கைகள் செய்தத் தியாகங்களையும் இந்தப் பரிதாபகரமான முஸ்லிம் சமுதாயம் சரிவர அறிந்துக் கொள்ளாமையே ஆகும்.

நாட்டைக் காட்டிக் கொடுத்தத் துரோகிகளின் திட்டமிட்ட வரலாற்று இருட்டடிப்பே இதற்கும் காரணம்.

"ஆதவனைக் கரம் கொண்டு மறைத்து விடலாம்" என்று, கிழக்கிந்திய கம்பெனிக்குக் கிஸ்தி வசூலித்து தந்து அதன் மூலம் சுகபோகம் அனுபவித்த அந்தத் துரோகிகள் நினைக்கலாம்.

ஆனால் எப்படி "ஆயிரம் கரம் கொண்டு மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லையோ"

அதே போன்று, இந்திய மண்ணுக்காக இந்தச் சமுதாயம் செய்த தியாகங்களும் மறையப் போவதில்லை.

இந்திய மண்ணின் கடைசி இஸ்லாமியர் இருக்கும் வரை இந்தியாவின் விடுதலைக்கு இஸ்லாமியர்கள் ஆற்றிய அரும்பணிகள் மறையாது; மறையவும் கூடாது.

அதற்காக,

இந்திய சுதந்திரப் போரில் இஸ்லாமியர்களுக்கும் மிகச்சிறந்த பங்குண்டு என்றச் சத்தியத்தையும்

இன்று தேசப்பற்றாளர்களாக நாட்டுக்குச் சொந்தம் கொண்டாட உரிமை கொண்டவர்களாகக் காட்டிக் கொண்டு வலம் வரும் துரோகிகளின் வரலாற்றையும்

ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

எவ்வளவு தான் வரலாற்றை மறைத்தாலும் மைசூர் வேங்கை திப்பு சுல்தான், கான் அப்துல் கபார் கான் போன்றவர்களை வரலாற்றால் மறைக்க முடியவில்லை.

நாடு பிரிக்கப்பட்டபோது "என் நாட்டை விட்டு நான் எங்கும் செல்ல மாட்டேன்" என்ற தேசப்பற்றோடு உறுதியான முடிவெடுத்த அபுல் கலாம் ஆசாத் போன்ற முஸ்லிம் தலைவர்களைத் துரோகிகளின் வஞ்சகத் திட்டங்கள் மக்கள் மனதிலிருந்து கிள்ளி எறியச் செய்ததை இனிமேலும் அனுமதிக்க இயலாது.

நாட்டு விடுதலைக்காகப் போராடிய பல இஸ்லாமிய தலைவர்கள், நவாப்புகள், போர் வீரர்கள் பெயர்கள் இன்று வாய்வழியாக முஸ்லிம்களுக்குத் தெரிந்தாலும் இந்திய வரலாறு துல்லியமாக தொகுக்கப்படாத காரணத்தால் பல முஸ்லிம்களின் ஈடு இணையற்றத் தியாகங்கள் மறைந்து விட்டது
என்றே கூறலாம்.


மேலும் படிக்க இங்கே >>>> இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்! - 1 <<<<< சொடுக்குங்கள்

THANKS TO : satyamargam.com

சிகரம் பாரதி said...

Wow. Super post. Ariya, pudhiya thagavalgal. Vaalththukkal ullame. Appadiye namma pakkamum konjam vaangalen?

http://newsigaram.blogspot.com

Anonymous said...

// தமிழானவன் 15 August 2012 01:52 Said………

இகபால்,
அடிப்படைவாதம், இஸ்லாமிய அடிப்படைவாத நாடுகளை எதிர்ப்பது என்பதில் ஒன்றுபடுகிறேன்.

இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற இஸ்லாமோபோபியா அரசியல் - இதனுடன் மாறுபடுகிறேன்.

இந்த இஸ்லாமியத் தீவிரவாதத்தை வளர்த்து விட்டதே அமெரிக்கா.

சோவியத் ஒன்றியம் ஆப்கனை ஆக்ரமித்திருந்த போது, கம்யூனிச நாத்திகர்கள் என்ற எதிரிகளை குறித்து இஸ்லாமை ஆதாரமாகக் கொண்டு தாலிபான்கள் உருவாக்கப்பட்டார்கள்.

ரஸ்யா வெளியேறி சோவியத் யூனியன் என்ற எதிரி இல்லாமல் போனது.

பின்பு அமெரிக்கா, மேற்குலக வல்லரசுகள் தனது ஆக்ரமிப்பை நியாயப்படுத்த ஒரு எதிரியை உண்டாக்க வேண்டிய கட்டாயத்தினால்தான் இஸ்லாமோஃபோபியாவை உண்டாக்கினார்கள்.

இஸ்லாம், அடிப்படைவாதம் என்பதை எல்லோருக்கும் எதிரி என்று கற்பித்தார்கள்.

ஆனால் இஸ்லாமிய அடிப்படைவாத சவூதியைப் பங்காளியைப் போல நடத்துகிறார்கள்.

இங்கு நான் சொல்ல வருவது, பாகிஸ்தான், ஈராக், சிரியா இசுலாமியர் நாடுகளில் உள்நாட்டுப் போர்கள் நடக்கின்றன.

இங்கு வெவ்வேறு பிரிவு முஸ்லிம்கள் அரசியல் காரணங்களுக்காக தங்களுக்குள்ளேதானே மோதிக் கொள்கின்றனர்.

இதில் இஸ்லாமியத் தீவிரவாதம் என்று சொல்லப்படுவதில்லை.

இஸ்லாமியர் பல பிரிவுகளாக மோதிக்கொள்ளும் இதில் குறிப்பாக சிரியா, முன்பு லிபியாவில், ஈராக்கில் முக்கியக் காரணிகளாக இருந்தவர்கள் அமெரிக்கா, நேட்டோ இதில் மதவாதிகளாக இராத இந்நாடுகளின் அதிபர்களை சர்வாதிகாரிகள் என்றும் இவர்களை எதிர்த்துப் போராடிய மதத் தீவிரவாத குழுக்களை புரட்சிப் படையினர், ரெபெல் என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. தமிழ் ஊடகங்கள் உட்பட.

அதே அமெரிக்கா ஆக்ரமிப்பிலிருக்கும் ஆப்கானில் அரசுக்கு எதிராக குண்டு வைப்பதை இவர்கள் தீவிரவாதம் என்று அழைக்கின்றனர்.

இந்தியாவில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்புதான் பல குண்டுவெடிப்புக்கள் நிகழ்ந்தன.

இதனை இந்துத்தீவிரவாதத்தின் எதிர்த் தீவிரவாதமாகத்தான் கருத முடியும்.

மசூதி இடிக்கப்பட்டபோது ஆயிரக்கணக்கானோர் கலவரத்தில் கொல்லப்பட்டனர்.

அதே போல் குஜராத்தில் சில ஆயிரம் பேர் கொல்லப்பட்டு பல பத்தாயிரம் பேர் அகதிகளாக்கப்பட்டனர்.

இதை நடத்திய இந்துத் தீவிரவாத அமைப்புக்கள் இன்று வரை தடை செய்யப்பட வில்லை, தண்டிக்கப்பட வில்லை.

பாகிஸ்தானுக்கு எதிராக வளர்த்து விடப்பட்ட காலிஸ்தானிகள் இந்தியாவிற்கெதிராக திரும்பும் வரை அவர்கள் தீவிரவாதிகள் என்றழைக்கப்படவில்லை.

3000 சீக்கியர்களை டெல்லியில் கொலை செய்த காங்கிரஸ்காரர்களைத் தீவிரவாதிகள் என்று அழைக்கப்படவில்லை.

அதே போல 3 வருடங்களுக்கு முன்பு ஒரிஸ்ஸாவின் கந்தமால் மாவட்டத்தில் கிறித்தவர்கள் மீது மாதக்கணக்கில் தாக்குதல் நடத்தப்பட்டது.

சில பேர் கொல்லப்பட்டனர்.
ஆனாலும் அந்த இயக்கங்களைத் தீவிரவாதமாக யாரும் சித்தரிக்கவில்லை.

காஷ்மீர் என்றாலே தீவிரவாதம் அல்லது இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற சொல்தான் பொதுப்புத்தியில் இருக்கிறது.

இந்திய இராணுவத்தால் பல பத்தாயிரம் காஷ்மீரிகள் கொல்லப்பட்டுள்ளதை யாரும் நம்பக்கூடத் தயாரில்லை.

ஐரோப்பிய நாடுகளில் வந்தேறிகளால் பிரச்சனைகளாகப் பேசப்படுகிறது.

அதே நேரம் ஐரோப்பியர்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலிய கண்டங்களில் மண்ணின் மைந்தர்களை மிகப்பெரும் இன அழிப்பை நடத்தித்தான அதைக் கைப்பற்றினர்.

ஆனால் அது கிட்டத்தட்ட மறக்கடிக்கப்பட்டே வருகிறது.

அணுகுண்டு வீசிய அமெரிக்காவின் கொடுஞ்செயலைக் காட்டிலும் 9/11 அதிகமாக விளம்பரப்படுத்தப் பட்டும் வருகிறது.

இந்தத் தீவிரவாத லேபிள் குறிப்பிட்ட அரசியல் காரணங்களுக்காக சிலர் மீது மட்டும், சில இஸ்லாமியர் மீது மட்டும் திணிக்கப்படுகிறது என்பது என்வாதம். //

உதயம் said...


மறைக்கப்பட்ட இந்திய முஸ்லிம்களின் தியாகங்களையும் அவர்களின் சுதந்திர தாக உணர்வுகளையும் இந்த சுட்டியில் மேலும் அறிந்துக்கொள்ளலாம்.

http://meiyeluthu.blogspot.fr/2012/08/blog-post.html

சுதந்திர போராட்டத்திற்கு அள்ளிக் கொடுத்த முஸ்லிம்கள்

உதயம் said...

VANJOOR said...

பஹ்ரைன் தவ்ஹீத் ஜமாஅத் - மாற்று மத சகோதரருக்கு விமான டிக்கட் உதவி –

செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, August 7, 2012, 16:45

பஹ்ரைன் மண்டலத்தில் பணிபுரியும் ஒரு மாற்று மத சகோதரர் வேலைக்கு வந்த இடத்தில் சரியான வேலை இல்லாததால் பெரும் சிரமத்திற்கு தள்ளப்பட்டு நமது ஜமாஅத்தை அணுகினார்.

அவரது நிலைமையை அறிந்த பஹ்ரைன் மண்டல தவ்ஹீத் ஜமாஅத் அவருக்கு தாயகம் செல்வதற்காக விமான டிக்கெட் (பஹ்ரைன் தினார் 90.000) எடுத்து கடந்த 02-08-2012 அன்று ஜாமஅத் சார்பாக கொடுக்கப்பட்டது.

suvanappiriyan said...

சலாம் சகோ ஆஷிக்!

//இன்னும் கேள்விகள் உள்ளன..!

சுபாஷ் சந்திர போஸ் ராணுவத்துக்கு பண உதவி செய்தது யார்..?

வ உ சி ஓட்டிய கப்பலை அவருக்கு காசு குடுத்து வாங்கி தந்தது யார்..?//

என் குடும்பத்திலேயே ஒரு வரலாறு மறைக்கப்பட்டுள்ளது: மறக்கப்பட்டுள்ளது. எனது தந்தையின் தந்தை அதாவது எனது தாத்தா மலேசியாவில் வேலை செய்த போது சுபாஷ் சந்திர போசின் ராணுவத்துக்காக தனது ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக கொடுத்துள்ளார். நேரிலேயே அவரை பார்த்து பேசியும் இருக்கிறார். சில காலம் பர்மாவிலும் எனது தாத்தா வேலை செய்துள்ளார். இறந்து போகும் சில ஆண்டுகளுக்கு முன்னால் இதை என்னிடம் நேரிலேயே சொன்னார். இவரது நண்பர்களும் பணம் வசூலித்துக் கொடுத்துள்ளனர். இது பற்றி இன்னும் நான் கேட்டிருந்தால் பல விபரங்கள் தெரிந்திருக்கும். இப்படி பல வரலாறுகள்.

suvanappiriyan said...

வாஞ்சூர் பாய்!

//இன்று இந்தத் துரோகிகளின் கைங்கர்யத்தால் நாட்டின் தேசிய நீரோட்டத்திலிருந்து ஒதுக்கப்பட்டு இரண்டாந்தரக் குடிமக்களை விடத் தரம் தாழ்த்தப்பட்டவர்களாக,

தேசவிரோதிகளாகச் சித்தரிக்கப்பட்டு கேவலப்படுத்தப்பட்டுள்ளனர்.//

அருமையான வரலாற்று நிகழ்வுகளை ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி.

suvanappiriyan said...

சகோ உதயம்!

//மறைக்கப்பட்ட இந்திய முஸ்லிம்களின் தியாகங்களையும் அவர்களின் சுதந்திர தாக உணர்வுகளையும் இந்த சுட்டியில் மேலும் அறிந்துக்கொள்ளலாம்.

http://meiyeluthu.blogspot.fr/2012/08/blog-post.html//

வருகைக்கும் தகவலுக்கும் நன்றி!

NKS.ஹாஜா மைதீன் said...

சலாம் சகோ....எவ்வளவு அநியாயமாக இந்த அத்தியாயங்களை மறைத்துவிட்டார்கள்...வரலாற்று உண்மையை தெரிந்து கொள்ள உதவியதற்கு நன்றி...

அருள் said...

மகாத்மா காந்தியை உருவாக்கியவர்கள் இஸ்லாமியர்களா? சுவனப்பிரியனுக்கு ஒரு பதிலடி!

http://arulgreen.blogspot.com/2012/08/blog-post.html

suvanappiriyan said...

திரு அருள்!

//மகாத்மா காந்தியை உருவாக்கியவர்கள் இஸ்லாமியர்களா? சுவனப்பிரியனுக்கு ஒரு பதிலடி! //

வன்னியர்கள் சுதந்திரத்திற்காக எதுவும் செய்யவில்லை என்று எனது பதிவு இருந்தால்தான் எனக்குரிய பதிலடியாக இருக்கும். சுதந்திரத்திற்காக பல இனத்தவர்களும் தங்கள் பங்கை செலுத்தியிருக்கிறார்கள். அதில் இஸ்லாமியர்களின் பங்களிப்பை நமது அரசும் மீடியாக்களும் திட்டமிட்டு மறைத்ததை எடுத்துக் காட்டுவதே எனது பதிவின் நோக்கம். மற்றபடி வன்னியர்களின் பங்களிப்பை நான் மறுக்க வில்லை. நன்றி.

kaathir said...

நாட்டின் சுதந்திர தாகம் வளர்ந்துவிடாதபடி துரோகம் செய்த ஒரு துரோகிக்கு உங்களின் முன்னோர்கள் தெரியாமல் உதவி செய்துவிட்டார்கள், அது உங்களுக்கு தெரிகிறதா?

அருள் said...

சுவனப் பிரியன் சொன்னது…

// //வன்னியர்கள் சுதந்திரத்திற்காக எதுவும் செய்யவில்லை என்று எனது பதிவு இருந்தால்தான் எனக்குரிய பதிலடியாக இருக்கும்.// //

எனது பதிவின் தலைப்பில் 'பதிலடி' என்று குறிப்பிட்டது 'சும்மா' கவனத்தை ஈர்ப்பதற்காகத்தான். மற்றபடி உங்களது கருத்தை நான் எந்த இடத்திலும் மறுக்கவில்லை.

இஸ்லாமியர்கள், தமிழர்கள், வன்னியர்கள் என்கிற காரணங்களுக்காக தியாகங்கள் மறைக்கப்படுவதைத்தான் நான் சுட்டிக்காட்ட விரும்பிகிறேன்.

அதிக அளவு தியாகங்களை செய்தவர்கள் இருட்டடிப்பு செய்யப்படுவதும், பெரிய தியாகங்களைச் செய்யாதவர்கள் பெருமளவு புகழப்படுவதும் அவர்கள் சார்ந்த மதம் அல்லது சாதியின் காரணமாகவே என்பதுதான் எனது கருத்து.

அருள் said...

சுவனப் பிரியன் சொன்னது…

// //வன்னியர்கள் சுதந்திரத்திற்காக எதுவும் செய்யவில்லை என்று எனது பதிவு இருந்தால்தான் எனக்குரிய பதிலடியாக இருக்கும்.// //

எனது பதிவின் தலைப்பில் 'பதிலடி' என்று குறிப்பிட்டது 'சும்மா' கவனத்தை ஈர்ப்பதற்காகத்தான். மற்றபடி உங்களது கருத்தை நான் எந்த இடத்திலும் மறுக்கவில்லை.

இஸ்லாமியர்கள், தமிழர்கள், வன்னியர்கள் என்கிற காரணங்களுக்காக தியாகங்கள் மறைக்கப்படுவதைத்தான் நான் சுட்டிக்காட்ட விரும்பிகிறேன்.

அதிக அளவு தியாகங்களை செய்தவர்கள் இருட்டடிப்பு செய்யப்படுவதும், பெரிய தியாகங்களைச் செய்யாதவர்கள் பெருமளவு புகழப்படுவதும் அவர்கள் சார்ந்த மதம் அல்லது சாதியின் காரணமாகவே என்பதுதான் எனது கருத்து.

Ask360° said...

எனக்கு ஐயா வ உ சி க்கு உதவியவர்கள் பற்றிய வரலாறு தேவை

Ask360° said...

எனக்கு ஐயா வ உ சி க்கு உதவியவர்கள் பற்றிய வரலாறு தேவை

Ask360° said...

எனக்கு ஐயா வ உ சி க்கு உதவியவர்கள் பற்றிய வரலாறு தேவை