Followers

Saturday, August 18, 2012

ஹுசைனி பிராமணர்களும் கர்பலா யுத்தமும்!

ஒற்றுமையாக இருந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் குழப்பத்தை உண்டு பண்ணிய மறைக்கப்பட்ட ஒரு இனத்தைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். முதலில் யூதர்களுக்கும் பாரசீக நாட்டில்(தற்போதய ஈரான்) இருந்த நெருப்பு வணங்கிகளுக்கும் பிராமணர்களுக்கும் மூலம் ஒன்றே ஆனதால் இவர்களுக்குள் எழுதப்படாத உடன் பாடுகள் பல இருக்கும். தாங்களே உயர்ந்த குலம். தாங்களே இறைவனுக்கு நெருக்கமானவர்கள் என்ற எண்ணம் இவர்கள் அனைவரின் உள்ளத்திலும் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கும். இந்த நிலையில்தான் ஜனாதிபதி உமருடைய ஆட்சியில் பாரசிகம் வெற்றிக் கொள்ளப்பட்டது. காலா காலமாக ஆட்சி பதவியில் இருந்த பாரசீகர்கள் தாங்கள் தோல்வியுற்றதை கிரகிக்க முடியாமல் அதற்காக பழி வாங்கும் நேரத்தை எதிர்பார்த்து இருந்தனர்.

எந்த நாட்டுக்குச் சென்றாலும் அந்த நாட்டின் மன்னர்கள் முக்கியஸ்தர்களுக்கு தங்களின் பெண்களை திருமணம் பண்ணி கொடுத்து அதன் மூலம் உள் நுழைவது இவர்களின் தந்திரம். அதன்படி முகமது நபியின் பேரனான ஹுசைன் அவர்களுக்கு தங்களின் பெண்ணை மணமுடித்துக் கொடுத்தனர். ஷஹர்பானு என்ற பாரசீக பெண் இமாம் ஹுசைனுக்கு மணமகளாகிறார். இவர்களுக்கு பிறந்த குழந்தைதான் ஜெய்னுல்லாபுதீன். சாசனியர்களான இவர்களின் வாரிசு அலி அவர்களின் குடும்பத்தில் தோன்றியதால் அலியையும் அவரது குடும்பத்தவரையும் தெய்வீக அம்சம் பொருந்தியவர்களாக வழக்கம் போல் கதை கட்ட ஆரம்பித்தனர். ஷஹர்பானு நம் நாட்டை ஆண்ட சந்திர குப்த மௌரியரின் மனைவியின் தங்கையாகவும் அறியப்படுகிறார். இந்த ஹூசைனி பிராமணர்கள் குழுவில் இருந்து ரஹீப் என்பவரும் இவரது பல மகன்களும் இந்த போரில் கொல்லப்பட்டதாக சில தகவல்கள் சொல்லுகின்றன..

அப்துல்லா பின் ஸபா என்ற யூதன் முஸ்லிமாக மாறுவதாக நடித்தான். முஸ்லிம்களுக்குள் குழப்பத்தை உண்டு பண்ணி ஜனாதிபதி உஸ்மானுக்கு எதிராக மக்களை திரட்டினான். அலியை முன்னிலைப்படுத்தி அவருக்கு தெய்வீக அந்தஸ்தை கொடுத்து பிரசாரம் செய்தான். ஆனால் இதை அலி அவர்களே கடுமையாக மறுத்திறுக்கிறார்கள். தன் மீது சொல்லப்படும் இதுபோன்ற கட்டுக்கதைகளை நம்ப வேண்டாம் என்று மக்களை எச்சரித்தார். ஆனால் அப்துல்லா பின் ஸபாவின் கருத்தை மக்கள் நம்ப ஆரம்பித்தனர். முகமது நபியின் பெயரால் பல பொய்யான ஹதீதுகளை தயாரித்து புழக்கத்தில் விட்டதில் இவனுக்கும் இவனை பின்பற்றிய கள்ள முஸ்லிம்கள்(யூதர்களுக்கும்) மிகப் பெரிய பங்குண்டு.

ஷியாக்கள் எவ்வாறு உருவானார்கள் எவ்வாறெல்லாம் குரஆன் ஹதீஸ்களை வளைத்து பொருள் கொண்டார்கள் என்ற நீண்ட வரலாறை இந்த சுட்டியில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.

http://onlinepj.com/egathuvam/all_articales_in_egathuvam/shiyakal_kolkai_varalaru/
http://onlinepj.com/egathuvam/all_articales_in_egathuvam/

ஜனாதிபதி உஸ்மான் எகிப்திலிருந்து வந்த சில யூதர்களால் (முஸ்லிமாக நடித்த) கொல்லப்பட்டு பிறகு அலி ஆட்சிக்கு வருகிறார். அதன் பிறகு முஆவியாவுக்கு ஆட்சி அதிகாரம் செல்கிறது. அதன் பிறகு அவரது மகன் யஜீதிடம் அதிகாரம் செல்கிறது. இங்குதான் யூதர்கள், நெருப்பு வணங்கிகள், நம் நாட்டு ஹுசைனி பிராமணர்கள் போன்றோர் முகமது நபியின் பேரன் ஹுசைனை தூண்டி விட்டு முஆவியாவுக்கு எதிராக படை திரட்ட ஆலோசனை வழங்குகின்றனர். ஒரு ஆட்சித் தலைவருக்கு எதிராக கலகம் செய்தால் எந்த ஆட்சித் தலைவரும் எதிரிகளை ஒடுக்கவே முயற்ச்சிப்பர். அந்த வகையில் இவ்வாறு ஆட்சிக்கு எதிராக கலகம் செய்ய வேண்டாம் என்று பல நபித் தோழர்களும் தடுக்கின்றனர். ஒரு சில எகிப்தியர்களின் பேச்சை நம்பி கர்பலாவுக்கு வருகிறார் ஹூசைன். ஆனால் போர் துவங்கும் நேரம் எகிப்தியர்களான காரிஜியாக்கள்(முஸ்லிமாக நடித்தவர்கள்) ஹூசைனுக்கு உதவாமல் நயவஞ்சகமாக பின் தங்கி விடுகின்றனர்.

இந்த நாளில் நமது நாட்டில் சந்திரகுப்தர் என்ற அரசரின் ஆட்சி நடைபெற்றதாகவும் அவரிடம் ஹூசைன் அவர்கள் உதவி கேட்டதாகவும் சில செய்திகள் கூறுகின்றன. பஞ்சாப், பீஹார், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளில் இன்றும் சிறு சிறு குழுக்களாக ஹூசைனி பிராமணர்கள் வாழ்ந்து வருகின்றனர். முன்பு ஈராக்கின் கூபாவுக்கு பக்கத்தில் கூட்டமாக தங்கியிருந்த இவர்கள் போரில் ஹூசைன் அவர்கள் கொல்லப்பட்ட பிறகு இந்தியாவை நோக்கி வந்தனர். பிறகு இங்கேயே தங்கி விட்டனர். இவர்கள் தற்போதும் கர்பலா தினத்தன்று இமாம் ஹூசைனுக்காக ஷியாக்களோடு சேர்ந்து துக்கம் அனுஷ்டிப்பதை பரவலாக பார்க்கலாம்.

//'I,' she said, 'told my mother about your comments regarding Husaini Brahamans //
and how I introduced myself as one. To that she said, did you tell him that we don't
perform the rituals the Brahmans are obliged to perform. That we don't go to the temples?'

'Should I presume from this,' I asked, 'that you have turned Muslim.'

'No, we are not Muslims,' she exclaimed.

'Then what are you?' I inquired.

'We are Husaini Brahmans,' she said with a certain sense of pride and added,
'Now, I will tell you about a sign each and every Husaini Brahman carries with him/her.

On his/her throat s/he bears a line of cutting, which is indicative of the fact that s/he is the descendant of those Brahmans whose throats were cut in the battle of Karbala.'

Then she told me about the ritual carried out on the birth of every child in her family.

She said, 'Among Brahmans, after child birth, the ritual of Moondan is performed.
In our family this ritual is performed in the name of Imam Husain.'//

இங்கு ஒரு ஹூசைனி பிராமணரின் பேட்டியைத்தான் பார்க்கிறோம். கோவிலுக்கு இவர்கள் செல்ல மாட்டார்களாம். இஸ்லாத்திலும் இவர்கள் இல்லையாம். ஆனால் இஸ்லாத்தை இரு கூறாக பிரித்து இன்று சண்டையிட்டுக் கொண்டிருக்கும் நிகழ்வுக்கு காரணமாக மாத்திரம் இருப்பார்களாம். உண்மையிலேயே இவர்களின் ராஜதந்திரம் பாராட்டப்பட வேண்டியதே. ஆனால் இந்த திறமையை ஆக்க சக்திக்கு பயனபடுத்தாமல் அழிவு வேலைகளுக்கும் சாம்ராஜ்ஜியங்களை கீழிறக்கும் வேலைகளுக்கும் பயன் படுத்துவதைத்தான் நாம் எதிர்க்கிறோம். பகவத் கீதையில் இமாம் ஹூசைன் கொல்லப்படுவதை கிருஷ்ணர் சொல்லியிருப்பதாகவும் சில பிராமணர்கள் நம்புகின்றனர். கலங்கி புராணா, மற்றும் அதர்வண வேதங்களிலும் இமாம் ஹூசைன் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளதாக சில பிராமணர்கள் நம்பிக் கொண்டுள்ளனர். இந்தி நடிகர்கள் சுனில்தத், சஞ்சய் தத் போன்றோர் ஹூசைனி பிராமணர்கள் பிரிவிலேயே வரக் கூடியவர்கள். ஷியாக்களுக்கு நெருக்கமானவர்கள்.

இதே போல் தமிழகத்திலும் இந்தியாவிலும் 1000 ஆண்டுகளுக்கு முன்னால் மொகலாயர்களின் ஆட்சியில் பலர் முஸ்லிம்களாக மாறினர். (மாறுவதாக நடித்துள்ளனர்) இவர்களில் பலர் அரபி மொழிகளில் நல்ல பாண்டித்தியம் பெற்று வர்ணாசிரமக் கோட்பாட்டை ஆதரிக்கும் முகமாக பல புத்தகங்களை எழுதினர். அது போன்ற இஸ்லாமிய புத்தகங்களை படித்தால் நமக்கு மனு ஸ்மிருதியை படிப்பது போன்ற உயர்வே ஏற்படும். அந்த அளவு சாதி வெறி ஏற்றப்பட்டுள்ளது. அவற்றை தற்போதுதான் மொழி பெயர்த்து அதன் உண்மை நிலையை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. சமீப காலம் வரை மத்ரஸாக்களில் இது போன்ற புத்தகங்கள் பாடமாகவும் வைக்கப்பட்டிருந்தது. சில புத்தகங்கள் மிகுந்த ஆபாசமாகவும் இருக்கும். தவ்ஹீத் எழுச்சி தமிழகத்தில் உண்டான பிறகு குர்ஆனுக்கு மாற்றமாக எழுதப்பட்ட அந்த புத்தகங்கள் இன்று குப்பைக் கூடைக்கு சென்று விட்டன. 'துர்ருல் முக்தார்' என்ற புத்தகம் இதற்கு சான்றாக இன்றும் இருந்து வருகிறது.

ஏதோ சில தவறான புரிதல்களால் இன்று ஷியாக்கள் என்றும் சன்னிகள் என்றும் இரு கூறாக சில நயவஞ்சகர்களால் பிரிக்கப்பட்டு விட்டோம். அதை இன்று நாம் விளங்கும் முகமாக பல தகவல்களும் நமக்கு கிடைக்கின்றது. ஆனால் இன்றும் அந்த கோபத்தை மனதில் வைத்துக் கொண்டு முஹர்ரம் 10 அன்று என்னுடைய உடலை கீரிக் கொள்வேன் என்று அடம் பிடிப்பது சரிதானா என்று ஷியாக்கள் சிந்திக்க வேண்டும். இது நபி அவர்களின் போதனைக்கும் குர்ஆனின் கட்டளைக்கு நேர் எதிராகவும் உள்ளதை ஷியா சகோதரர்கள் உணர்ந்து நேர் வழியை பெற வேண்டும்..

'கண்டவர் குலை நடுங்கும் சண்டாளன் யஜித் என்போன்...

கொன்றான் இமாம் ஹூசைனை .....குடியரசு சாய்ந்ததம்மா....

குடியரசு சாய்ந்ததம்மா.....'

என்று நம்ம நாகூர் அனீஃபா அண்ணன் கணீரென்ற குரலில் பாடும்போது சின்ன வயதில் நானெல்லாம் அழுதிருக்கிறேன். யார் சண்டாளர்கள் என்பதை இறைவன் முடிவு செய்யட்டும். அது வரை நாம் வாழும் நாட்களில் அமைதியாக வாழ்ந்து ஒற்றுமை எனும் கயிரான குர்ஆனை பிடித்து ஈடேற்றம் பெற முயற்ச்சிப்போம்.http://www.tamilbrahmins.com/general-discussions/6310-hussaini-brahmins.html
http://www.milligazette.com/Archives/2004/16-31May04-Print-Edition/1605200441.htm
http://www.imamreza.net/eng/imamreza.php?id=6530
http://onlinepj.com/egathuvam/all_articales_in_egathuvam/

-----------------------------------------------------
மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு – 24-----------------------------------------------------

சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்!


25 comments:

Nizam said...

எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டிய ஆக்கம்.
//எந்த நாட்டுக்குச் சென்றாலும் அந்த நாட்டின் மன்னர்கள் முக்கியஸ்தர்களுக்கு தங்களின் பெண்களை திருமணம் பண்ணி கொடுத்து அதன் மூலம் உள் நுழைவது இவர்களின் தந்திரம்.// சரியா சொன்னீர். இந்த தந்திரம் இப்பொழுதும் நடைமுறையில் உள்ளது.

Unknown said...

ஹிஸ்டிரியை நல்லா தெரிந்து கொண்டு எழுதும் சுவனப்பிரியன். சந்திரகுபத மௌரியர் காலம் கிறிஸ்துவுக்கு முன்னால் வந்த காலம்.

VANJOOR said...

.
.
CLICK >>>> 1.
வலீமா புறக்கணிப்பு சரியா...?
<<<< TO READ

CLICK >>>>> 2.

நிக்காஹ் புறக்கணிப்பு சரியா..?
<<<<< TO READ
.
.

Nasar said...

அஸ்ஸலாம் அலைக்கும் சகோஸ்...
எல்லோருக்கும் என் இனிய " ஈத் முபாரக் ".....
டியர் சு.பி., நான் முற்றிலும் கேள்விபடாத வரலாறு , மிகவும் intresting history ..
" Wah Dutt Sultan,
Hindu ka Dharm
Musalman ka Iman,
Adha Hindu Adha முசல்மான் "
தமிழ் பிராமின் ....ஹிந்தி பிராமின் வரிசையில் இப்போது ஹுசைனி பிராமின் அரிய தகவலை அறிய தந்தமைக்கு மிக்க நன்றி பாய்.......

suvanappiriyan said...

ஜெய்சங்கர்!

//ஹிஸ்டிரியை நல்லா தெரிந்து கொண்டு எழுதும் சுவனப்பிரியன். சந்திரகுபத மௌரியர் காலம் கிறிஸ்துவுக்கு முன்னால் வந்த காலம்.//

Another story, which seems less reliable, is related as to how the Dutts of Punjab came to be known as Hussaini Brahmins. According to this version, one of the wives of Imam Hussain, the Persian princess Shahr Banu, was the sister of Chandra Lekha or Mehr Banu, the wife of an Indian king called Chandragupta.

http://www.milligazette.com/Archives/2004/16-31May04-Print-Edition/1605200441.htm

வரலாற்றில் படித்ததால் மௌரிய வம்சத்து சந்திர குப்தரோ என்று தவறாக நினைத்து விட்டேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. ஆனால் கர்பலா யுத்தம் நடந்த போது சந்திர குப்தர் என்ற பெயரில் ஒரு அரசர் ஆட்சி செய்திருப்பதாகத்தான் இந்த சுட்டி சொல்கிறது.

suvanappiriyan said...

சகோ நிஜாம்!

//எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டிய ஆக்கம்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ நாஸர்!

//எல்லோருக்கும் என் இனிய " ஈத் முபாரக் ".....
டியர் சு.பி., நான் முற்றிலும் கேள்விபடாத வரலாறு , மிகவும் intresting history ..
" Wah Dutt Sultan,
Hindu ka Dharm
Musalman ka Iman,
Adha Hindu Adha முசல்மான் "
தமிழ் பிராமின் ....ஹிந்தி பிராமின் வரிசையில் இப்போது ஹுசைனி பிராமின் அரிய தகவலை அறிய தந்தமைக்கு மிக்க நன்றி பாய்.......//

உங்களுக்கும் எனது இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

எனக்கும் ஹூசைனி பிராமணர்கள் வரலாறு புதிதே.

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

suvanappiriyan said...

வாஞ்சூர் பாய்!

//CLICK >>>> 1.
வலீமா புறக்கணிப்பு சரியா...? <<<< TO READ

CLICK >>>>> 2.

நிக்காஹ் புறக்கணிப்பு சரியா..? <<<<< TO READ//

வருகைக்கும் சுட்டியை பகிர்ந்தமைக்கும் நனறி!

பாஹிம் said...

புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள், சுவனப்பிரியன். நான் இந்தோனேசியாவில் இருக்கிறேன். இங்கே நாளை புனித நோன்புப் பெருநாளென அறிவிக்கப்பட்டுவிட்டது. மலேசியாவிலும் இலங்கையிலும் இந்தியாவிலும் அப்படியே இருக்குமென நினைக்கிறேன்.

تقبل الله منا ومنكم

suvanappiriyan said...

சலாம் சகோ பாஹிம்!

//புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள், சுவனப்பிரியன். நான் இந்தோனேசியாவில் இருக்கிறேன். இங்கே நாளை புனித நோன்புப் பெருநாளென அறிவிக்கப்பட்டுவிட்டது. மலேசியாவிலும் இலங்கையிலும் இந்தியாவிலும் அப்படியே இருக்குமென நினைக்கிறேன்.//

உங்களுக்கும் எனது பெருநாள் வாழ்த்துக்கள். இந்தியாவிலும் இலங்கையிலும் இன்னும் முடிவு ஆகவில்லை. சவுதியில் நாளை பெருநாள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,

இதுவரை முற்றிலும் நான் அறிந்திராத ஒன்று ஹுசைனி பிராமணர்கள்..!

///இந்தி நடிகர்கள் சுனில்தத், சஞ்சய் தத் போன்றோர் ஹூசைனி பிராமணர்கள் பிரிவிலேயே வரக் கூடியவர்கள். ஷியாக்களுக்கு நெருக்கமானவர்கள்.///

---சஞ்சய் தத்துக்கும் மும்பை தொடர் குண்டு வெடிப்பிக்கும் உள்ள தொடர்பை நாம் அறிவோம்..!

ஆகவே... இந்தியாவில் நடந்த குழப்பமான இந்த முதல் குண்டு வெடிப்பு, இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான ஹுசைனி பிராமணர்களின் சூழ்ச்சி இருக்குமோ..?

suvanappiriyan said...

சலாம் சகோ முஹம்மது ஆஷிக்!

//---சஞ்சய் தத்துக்கும் மும்பை தொடர் குண்டு வெடிப்பிக்கும் உள்ள தொடர்பை நாம் அறிவோம்..!

ஆகவே... இந்தியாவில் நடந்த குழப்பமான இந்த முதல் குண்டு வெடிப்பு, இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான ஹுசைனி பிராமணர்களின் சூழ்ச்சி இருக்குமோ..?//

இருக்கலாம். உண்மை நிலையை இறைவனே அறிந்தவன். யூதர்கள் தங்களின் வேலைகளை இந்தியாவில் கச்சிதமாக நிறைவேற்ற இது போல் மதில் மேல் பூனையாக இருக்கும் ஹுசைனி பிராமணர்களை பயன்படுத்தியிருக்கலாம். சமீப காலத்தில்தான் இவர்களைப் பற்றி எனக்கும் தெரிய வந்தது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...


இங்கு காரசாரமாக விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. எந்த அரசும் குறை இல்லாத அரசாக இருக்க முடியாது. இங்கு சவுதியில் கூட தற்போதய அரசரை பலர் குறை கூறுவர். இதற்கு மாற்று என்ன என்று கேட்டால் பதில் சொல்ல தெரியாது. தற்போதய சூழலில் சவுதிக்கு மிக பொருத்தமானவர் தற்போதய மன்னர் அப்துல்லா என்பது எனது அபிப்ராயம்.

இதுபோல் அன்றைய கால கட்டத்தில் சுபாஷ் சந்தி போசை மலேசியாவில் நேரிலேயே சந்தித்து அவரிடம் தனது ஒரு மாத சம்பளத்தை இந்திய தேசிய ராணுவத்துக்காக கொடுத்தவர்தான் எனது தாத்தா. சமீபத்தில் சுதந்திர தினத்தன்று நான் வெளியிட்ட ஒரு பதிவு.
http://suvanappiriyan.blogspot.com/2012/08/blog-post_925.html

இவ்வாறு மறைக்கப்பட்ட வரலாறுகள் எத்தனையோ!

இங்கு நண்பர் ஜெயபாரதனை இந்திராவை ஆதரித்ததற்காக எதிர்ப்பவர்கள் அதற்கான மாற்றுத தீர்வாக எதை வைக்கின்றனர்? மலர் மன்னனிடம் கேட்டால் இந்துத்வா ஆட்சியே இந்தியாவுக்கு சிறந்தது என்பார். அதாவது ராஜாஜி கொண்டு வந்த குலக் கல்வித் திட்டத்திலிருந்து ஆர்எஸ்எஸ் வைக்கும் அனைத்து திட்டங்களையும் ஆதரிப்பார். இந்துக்கள் அதாவது மேல்சாதியினர் தவிர்த்து மற்ற சாதியினர் மற்றும் சிறுபான்மை மதத்தவர் அனைவரும் இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்பட வேண்டும் என்றும் விரும்புபவர். அவர் சார்ந்த சாதிக்கு அது ஓகே. ஆனால் மற்றவர்கள்?.

ஒருக்கால் மதசார்பற்ற கொள்கையை தூக்கிப்பிடித்த நேரு முன்னுக்கு வராமல் ஆர்எஸ்எஸ் அன்றே இந்த நாட்டை ஆண்டிருக்குமானால் இருக்கும் அத்தன மாநிலங்களும் சிதறுண்டு இன்று தனித்தனி நாடுகளாக காட்சியளித்துக் கொண்டிருக்கும். தமிழ்நாடு ஒரு தனி நாடாகவும், வட மாநிலங்கள் மொழி வாரியாக தனித்தனி நாடுகளாகவும் மாறி விட்டிருக்கும். இன்று நமது நாட்டை வல்லரசாக ஆக்க கனவு காண்பது என்றோ கானல் நீராக மாறி விட்டிருக்கும்.

நேருவும், இந்திராவும் செய்தது அனைத்தையும் சரி என்று சொல்ல வரவில்லை. பன்முக தன்மை கொண்ட மக்களை கொண்ட ராஜ்ஜியத்தை ஆட்சி செய்வது என்பது முள் மேல் நடக்கும் ஒன்றைப் போன்றது. ஏதோ ஒரு தரப்பு குறை சொல்லாமல் இருக்க மாட்டார். நமது நாடு இன்று வரை இந்த அளவு பல மக்களையும் அரவணைத்து செல்வதற்கு அடித்தளமிட்டவர் நேரு என்றால் மிகையாகாது.

மேலும் ஜின்னா செய்த மிகப் பெரிய தவறு நாட்டை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தது. அதற்கு நம் ஊர் ராஜ கோபாலச் சாரியார் எந்த அளவு உறுதுணையாய் இருந்தார் என்பதை எவரும் பேச மாட்டார். இப்படி ஆரம்பத்திலேயே நாம் தவறுகளை செய்து விட்டு இடையில் உள்ளவர்களை நாம் எவ்வாறு குறை காண முடியும்? இன்று வரை காந்தியை கொன்றதை நியாயப்படுத்தி பேசுபவர்களையும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதமே காந்தி படுகொலை அல்லவா? அவர் என்னதான் தவறான முடிவு எடுத்திருந்தாலும் அவரை கொல்வதுதான் நேர்மையாளர்கள் செயலா?

அனைவருக்கும் இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள். பெருநாள் தொழுகை முடிந்து வந்து தொடர்கிறேன்.

suvanappiriyan said...


//இஸ்லாம் அகிலம் என்பது வஹாபிசம். இது முஸ்லிம்கள் ஒரே இனம் என்னும் கருதுகோளை வலியுறுத்துவது. அதாவது தேசப் பிரிவுகள் கூடாது என்பது. இன்று பல இஸ்லாமிய நாடுகள் உள்ளன. இவை ஒரே தேசமாகிவிட வேண்டும் என்பது லட்சியம். ஆனால் நடக்கக் கூடியதா? இந்த அடிப்படையில் மேற்கு பாகிஸ்தான்-கிழக்கு பாகிஸ்தான் விவகாரத்தைப் பற்றி யோசிக்க வேண்டுகிறேன்.
வஹாபிஸம் பலவந்தமாக எங்கும் பரவி வருவது கவலைக் குரிய நிலைமை.
-மலர்மன்னன்//

உலகம் முழுவதையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதுதான் வஹாபியிசம் என்று உங்களுக்கு யார் சொன்னது? 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற கணியன் பூங்குன்றனாரின் வாக்கை நீங்கள் எவ்வாறு அர்த்தப்படுத்திக் கொள்வீர்கள்? உலகம் முழுவதும் தமிழர்கள் ஆளவேண்டும் என்று அர்த்தப்படுத்துவீர்களா?

உலகம் முழுவதும் பல்கிப் பெருகிய மனித இனத்தின் மூலம் ஒரு தாய் தந்தையர் என்கிறது இஸ்லாம். இதனால் மலர்மன்னனும், புனை பெயரிலும், ஜெயபாரதனும், தங்கமணியும், ஸ்மிதாவும் எனது சகோதரர்களாகின்றனர். இந்த கருத்து பரவுவதன் மூலம் உலக அளவில் மனித நேயம் பரவும்.

வஹாபியம் தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளாக வளர்ந்ததால் கிடைத்த நன்மைகள் என்ன?
முன்பெல்லாம் இஸ்லாமியர்கள் ஏழாம் வகுப்பு எட்டாம் வகுப்போடு படிப்பை முடித்துக் கொண்டு தொழில் செய்யவும், வெளி நாடுகள் சென்று உடல் உழைப்பில் சம்பாதிக்கவும் சென்று விடுவார்கள். ஆனால் வஹாபியம் வளர்ந்து பிறகு படிப்பின் அவசியத்தை வீடு வீடாக சென்று பிரசாரம் செய்தோம். பெரும் பெரும் வீடுகளை கிராமங்களில் கட்டுவதை விட உங்கள் மகனுக்கு கல்லூரி பட்டத்தை கொடுங்கள்: அதுதான் மதிப்பு மிக்கது: என்ற பிரசாரத்தின் பலனாக இன்று ஒவ்வொரு வீட்டிலும் பல முஸ்லிம் பட்டதாரிகள்.

இதே வஹாபியம் கலைஞரிடமும், ஜெயலலிதாவிடமும் போராடி தனி இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்து இன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் 3.5 சதவீதம் முஸ்லிம்கள் அமரக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.

தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் நகரங்களிலும் சென்று 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சிகளை வாரந்தோறும் நடத்துகிறோம். இதற்கு இந்து கிறித்தவ நாத்திக நண்பர்களை அன்பாக அழைத்து அவர்களை இஸ்லாத்தை பற்றிய தவறான புரிதல்களை கேள்விகளாக கேட்க வைக்கிறோம். எங்கள் தரப்பில் உள்ள நியாயங்களை அவர்களுக்கு விளக்குகிறோம். முடிவில் உண்மையை விளங்கியவர்களாக சந்தோஷத்தோடு அரங்கை விட்டு வெளியேறுவதை தொலைக்காட்சியிலேயே நீங்கள் பார்க்கலாம். இதனால் மதங்களுக்கிடையே உள்ள முறுகல் நிலை மாற்றப்பட்டு சகோதரர்களாக பாவிக்கும் தன்மையை ஏற்படுத்தியுள்ளோம். மற்ற மாநிலங்களிலெல்லாம் இந்து முஸ்லிம் கலவரம் வரும் போது தமிழகம் மட்டும் அமைதிப் பூங்காவாக இருப்பதற்கு காரணம் வஹாபியத்தின் வளர்ச்சி என்றால் அது மிகையாகாது.

அடுத்து தர்ஹாக்களில் பேய் பிடித்திருக்கிறது என்று பலரை கட்டி வைத்த போது, 'பேய் என்ற ஒன்றே இஸ்லாத்தில் கிடையாது' என்று தொடர் பிரசாரம் செய்து அவர்களை மனநல காப்பகத்தில் சேர்த்து வைத்தது வஹாபியம். புரோகிதத்தை ஒழித்து அனைவரும் நேரிடையாக இறைவனிடம் கேட்பதே இஸ்லாமிய வழிமுறை என்பதை விளக்கி இன்று அதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளோம்.

அதே போல் அரசோடு ஏதும் பிரச்னை என்றால் பஸ்களை உடைப்பது போன்ற வன்முறை செயல்களை தவிர்த்து போராட்டம் என்ற ஒரு வழிமுறையை கொண்டு வந்து இன்று முஸ்லிம் பெண்களும் போராட்டத்தில் கலந்து கொள்ளும் வழமையை உண்டாக்கி வைத்ததும் இந்த வஹாபியம்தான்.

அடுத்து வஹாபியத்தை ஓரளவு பின்பற்றும் சவுதி அரேபியாவில் அதிகம் குடும்பத்தோடு 10 வருடம் 20 வருடம் சிறந்த சம்பளத்தில் வேலை செய்து வருவது இந்து நண்பர்களே! ஒரு தலைமுறையே இங்கு வாழ்ந்து வருகிறது. சவுதி அரசு அவர்களுக்கு சிறந்த மதிப்பை கொடுபபதனால்தானே இத்தனை வருடம் அதுவும் குடும்பத்தோடு இருக்க முடிகிறது.

எந்த வகையில் வஹாபியம் உங்களுக்கு பிரச்னையாக இருக்கிறது என்பதை குறிப்பிட்டு சொன்னால் அதற்கான பதிலை நான் தர முயற்ச்சிக்கிறேன்.

உதயம் said...
This comment has been removed by the author.
உதயம் said...


Please visit here:

தீண்டாமைக்கு இது தான் தீர்வு.. இது மட்டுமே தீர்வு. (காணொளி)

http://meiyeluthu.blogspot.fr/2012/08/blog-post_19.html

Anonymous said...

என்னை ஒரு சாதி வெறியனாகக் கற்பிப்பதில் ஆர்வம் காட்டும் உங்களுக்கு ஹுசைனி பிராமணர் பற்றிய தகவலை நான் தந்ததைத் தெரிவிக்க மனம் வரவில்லையே, சினேகிதரே! உங்களுக்கே ஹுசைனி பிராமணர் பற்றி இப்போதுதான் தெரியும் என்று நீங்கள் பொதுவாகச் சொன்னதால் இதனைக் குறிப்பிடுகி றேன், அவ்வளவுதான். சாதிகளின் அவசியம் என்ற எனது கருத்தை சாதிகள் அவசியம் என்று திசை திருப்புவது வெகு சுலபம்தான். சிறிது நேரத்தைச் சிந்தனை செய்யச் செலவிட்டால் இரண்டிற்கும் உள்ள நுட்பமான வேறுபாடு புரியும். அதையும் நான்தானா சுட்டிக்காட்ட வேண்டும்? சரி, சாதிகள் கூடவே கூடாது. அது மகா கெடுதல் என்று சொல்கிறேன். உடனே சாதிகள் மறைந்துவிடுமா? உண்மையில் இன்று சாதிகளை அதிகம் பாராட்டுவது நீங்கள் மிகுந்த பரிவுடன் குறிப்பிடும் பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட சாதியார்தான் எனபதை அறிய மாட்டீர்களா?
- அன்புடன்,மலர்மன்னன்

suvanappiriyan said...

திரு மலர் மன்னன்!

//சினேகிதரே! உங்களுக்கே ஹுசைனி பிராமணர் பற்றி இப்போதுதான் தெரியும் என்று நீங்கள் பொதுவாகச் சொன்னதால் இதனைக் குறிப்பிடுகி றேன், அவ்வளவுதான்.//

உங்கள் மூலமாகத்தான் எனக்கு ஹூசைனி பிராமணர்கள் என்ற ஒரு பிரிவு இருப்பதே தெரிய வந்தது. அதற்கு முதற்கண் நன்றிகள். பதிவில் அது முக்கியமாக படவில்லையாதலால் தெரிவிக்கவில்லை.

//சாதிகளின் அவசியம் என்ற எனது கருத்தை சாதிகள் அவசியம் என்று திசை திருப்புவது வெகு சுலபம்தான். சிறிது நேரத்தைச் சிந்தனை செய்யச் செலவிட்டால் இரண்டிற்கும் உள்ள நுட்பமான வேறுபாடு புரியும். அதையும் நான்தானா சுட்டிக்காட்ட வேண்டும்? சரி, சாதிகள் கூடவே கூடாது. அது மகா கெடுதல் என்று சொல்கிறேன். உடனே சாதிகள் மறைந்துவிடுமா? உண்மையில் இன்று சாதிகளை அதிகம் பாராட்டுவது நீங்கள் மிகுந்த பரிவுடன் குறிப்பிடும் பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட சாதியார்தான் எனபதை அறிய மாட்டீர்களா? //

தேவர்கள், நாடார்கள், வன்னியர்கள் தான் அதிகம் சாதி பாகுபாடு காட்டுகிறார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் இப்படி ஒரு சாதி பிடிப்பு ஏற்பட இந்து மத வேதங்களும் ஸ்மிருதிகளும் காரணம் என்பதை மறுக்க இயலாது அல்லவா?

மற்றபடி முதல் வருகை புரிந்து கருத்தை பதிந்தமைக்கு நன்றி! அடிக்கடி வந்து ஆலோசனை தாருங்கள்.

Anonymous said...

நீங்கள் குறிப்பிடும் எந்த சாதிப் பிரிவுகளுக்கும் ஹிந்து சமய வேத வேதாந்த, உபநிடதங்களான ஸ்ருதிகளிலோ, மனு உள்ளிட்ட பல நீதி சாஸ்திரங்கள், புராணங்கள் முதலான ஸ்மிருதிகளிலோ ஆதாரம் ஏதும் இல்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள் என் அன்பார்ந்த நண்பரே. இந்த சாதிக் கட்டமைப்பு நமது சமூக தளத்தில் எப்போது, எப்படி நுழைந்தது என்பது நாம் அனைவரும் விருப்பு வெறுப்பின்றித் தீர ஆரய வேண்டிய ஒரு சமூகவியல் விஷயம். மேலை நாட்டு ஆய்வுக் கண்ணோட்டத்தின்படியே எதையும் பார்த்துப் பழகிவிட்ட நம் கண்களுக்கு இதன் சரியான தோற்றமும் பயனும் புலப்படவில்லை. முன்கூட்டியே ஒரு முடிவை எடுத்துவிட்டு ஆராய்ந்தால் எப்படி உண்மை தெரிய வரும்?
ஒன்று சொல்கிறேன் தயை செய்து செவி சாயுங்கள். தற்பெருமைக்காகச் சொல்லவில்லை,தகவலுக்காகத்தான் சொல்கிறேன். இஸ்லாம் உள்ளிட்ட முக்கியமான சமயங்களின் முக்கிய மான நூல்களையெல்லாம் ஆழ்ந்து படிப்பதிலேயே வாழ் நாளின் கணிசமான பகுதியைச் செலவிட்டு விட்டேன். என் அறிவுக்கு எட்டிய வரையில் அவற்றைப் புரிந்து கொண்டேன்.குறை காண்பதற்காக அல்ல. கண்டு தெளிவதற்காகத்தான். எனது ஆரம்ப கால எழுத்துகளைப் படித்திருப்பீர்களேயானால் நான் எந்தச் சமய நம்பிக்கையினையும் விமர்சித்த தில்லை என்பது தெரியவரும். என்னிடம் அவை பற்றிக் கேள்விகள் வரத் தொடங்கியதாலேயே அவை குறித்தும் பேசலானேன்.உங்களிடம் ஒன்று கேட்டுக் கொள்வேன். மற்ற சமயங்களில் உள்ள முக்கியமான நுல்களை முழுமையாகப் படித்த பின்னரே நான் எனது கருத்தைத் தெரிவிக்கத் துணிகிறேன். அதுவும் மிகவும் அவசியமாகும்போது மட்டுமே. நீங்களூம் அதுபோலப் படித்துத் தெளிந்த பிறகு, சுய சிந்தனையையும் பயன்படுத்தி ஆராய்ந்து அறிந்த பின், விவாதத்தில் நமது பேச்சுதான் இறுதியாக நிற்க வேண்டும் என்கிற பிடிவாதம் இன்றி, திறந்த மனத்துடன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள முனைவீர்களா?
இளமையில் நான் தீவிர நாத்திகனாகவும் மார்க்சியவாதி யாகவும் இருந்தேன். விருப்பு வெறுப்பின்றி அறிந்துகொள்ள வேண்டும் என்ற நாட்டத்துடனேயே பல தத்துவ நூல்களையும் படித்துத் தெளிவு பெற்று மனம் மாறினேன். சென்னை 24 பிரேமா பிரசுரம் வெளியிட்டுள்ள எனது நூல்கள் சிந்தனையாளர் நீட்சே, சிந்தனையாளர் ஷோபனேர் போன்றவை கிடைத்தால் படித்துப் பாருங்கள். அவற்றின் முதல் பதிப்பு வந்த போது நீங்கள் பிறந்திருப்பீர்களா என்பதே சந்தேகம்! இன்றும் அவை தொடர்ந்து பதிப்பாகி வருகின்றன. அதிலும் நீட்சே ரிகார்டை பிரேக் செய்துவிட்டது!
-மலர்மன்னன்

suvanappiriyan said...

திரு மலர் மன்னன்!

எனது பழைய பதிவுகளில் இந்து மத வேதங்களையும் இஸ்லாம் கிறித்தவ வேதங்களையும் ஒப்பிட்டு இவை அனைத்தின் மூலமும் ஒன்றுதான் என்று பல பதிவுகளை எழுதியுள்ளேன். சில வருடங்களுக்கு முன்பு தொடராகவே அதை எழுதி பலரின் பாராட்டையும் பெற்றேன். நான் அதில் சொன்னது பின்னால் வந்தவர்கள் தான் இந்து மத வேதங்களில் வர்ண பாகுபாடுகளை சாதி பாகுபாடுகளாக திரித்து விட்டனர் என்பதையும் எழுதியிருக்கிறேன். குர்ஆனிலேயே ஒரு வசனம் 'நீங்கள் ஒருவரை ஒருவர் விளங்கிக் கொள்வதற்காக குலங்களாவும் கோத்திரங்களாகவும் படைத்திருக்கிறேன்' என்ற வசனம் வருகிறது. இதனை முஸ்லிம்கள் சரியாக விளங்கிக் கொண்டனர். ஆனால் பின்னால் வந்த இந்துக்கள் தங்கள் வேதங்களில் வரும் வர்ண பேதத்தை தவறாக அர்த்தம் கொண்டனர்.

பொதுவாக ஆன்மீகத்தில் தேர்ந்த ஒரு மனிதன் மற்ற மதங்களை தூசிக்கவோ மற்ற மதத்தவரை ஏசவோ மாட்டான். குர்ஆனும் அதை தடை செய்கிறது.

மற்றபடி உங்களின் அனுபவமும் உங்களின் எழுத்துக்களும் பல முறை படித்துள்ளேன். நான் தமிழகம் வரும்போது நீங்கள் எழுதிய புத்தகங்களை வாங்கிப் படிக்கிறேன். சென்னை வந்தால் அவசியம் உங்களையும் சந்திக்கிறேன்.

Anonymous said...

//பின்னால் வந்தவர்கள் தான் இந்து மத வேதங்களில் வர்ண பாகுபாடுகளை சாதி பாகுபாடுகளாக திரித்து விட்டனர் //
இது தவறான புரிதல். சாதிக் கட்டமைப்பு முற்றிலும் வேறானது. பிராமண, க்ஷத்திரிய வைசியப் பிரிவுகளிலேயே பல பிரிவுகள் சாதி முறையில் அமைந்துள்ளன. மேம்போக்கான விமர்சனம் சரியில்லை. ஆழ்ந்த ஆய்வு தேவை. ஒரே சாதியிலேயே எத்தனை பிரிவுகள்? தாழ்த்தப்பட்டோரிலும் எத்தனை பிரிவுகள்? அவர்களிலும் ஏற்றத் தாழ்வு பாராட்டும் மனப்பான்மை உள்ளது! மதங்களைப் பற்றிய உங்கள் கட்டுரைகளை நான் படித்ததில்லை. ஆனால் கிறிஸ்தவ மதப் பிரசாரகர்கள் போல ஹிந்து மத தத்துவங்களும் ஏசுநாதரையும் எமது பரம் பிதாவையும்தாம் கொண்டாடுகின்றன என்று சாதிப்பதுபோல அவை இருக்காது என நம்புகிறேன். சாது செல்லப்பா என்கிற ஒரு பிராமண கிறிஸ்தவ மதப் பிரசாரகர் அதைத்தான் செய்து வருகிறார்!
-மலர்மன்னன்

Anonymous said...

உங்கள் மனம் புண்படுமானால் மன்னியுங்கள். நீங்கள் அவசரப்பட்டு முடிவுக்கு வருபவராக இருக்கிறீர்கள். உங்களுடைய சந்திர குப்த மெளரியர் இதற்கு ஒரு உதாரணம். இதேபோல கர்ஷன் என்ற பெயரை ஒருவர் ஹர்ஷர் என்று நினைத்துக்கொண்டு நீளநீளமாக எழுதிக் கொண்டிருந்து விட்டுப் பின்னர் வருந்தினார். ஹுசைனி பிராமணர்களை வைத்துக்கொண்டு எவ்வளவு அனாயாசமாகப் பல கற்பிதங்களைத் தோற்றுவித்துவிடுகிறீர்கள்!
-மலர்மன்னன்

Anonymous said...

பிரியமுள்ளவரே,
எனக்கு எல்லாவற்றையும் படிக்க அவகாசமோ உடல் வலிமையோ இல்லை. எழுத்து வேலை ஏராளமாக இருப்பதால் படிக்க வேண்டியவையும் அதிகமாகவே உள்ளன. ஒரு மாற்றத்திற்காக வேண்டியே இணையத்தின் பக்கம் வருகிறேன். தற்செயலாக உங்கள் பக்கம் வந்தேன். ஹுசைனி பிராமணர் என்று படித்ததும் புதிதாக ஏதோ சொல்லப் போகிறீர்கள் என எதிர்பார்த்து வந்து ஏமாற்றம் அடைந்தேன். விஷயங்களை எல்லாக் கோணங்களிலிருந்தும் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவதே சரியாக இருக்கும். முஸ்லிம்களில் ஹிந்து சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கும் பல பிரிவுகள் இன்றும் உள்ளன.
தார், பண்டிட், நாயக், பட்டேல் என்கிற பின்னொட்டுகள் உள்ள முஸ்லிம்கள் எல்லாம் உள்ளனர். இதற்கெல்லாம் என்ன அவசியம் என யோசியுங்கள். ஏதேனும் ஒரு கட்டாயத்தின் பேரில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மத மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்றும் கருத முடியும் அல்லவா? இவை யாவும் சமூகவியலின் சுவாரசியமான அம்சங்கள். இவற்றையெல்லாம் புல்டோசர் போட்டு அழித்து விடுவது தான் வஹாபியம். அதுதான் பிரச்சினை. வஹாபியம் அந்தந்தப் பிரதேசங்களுக்கே உரித்தான கலாசாரங்களை அழித்துவிடுகிறது. இது ஒரு பெரிய சோகம். இதற்காக வருந்தும் பல இஸ்லாமிய அறிவுஜீவிகள் உள்ளனர். கலாசாரம் அழகியல் சார்ந்தது. இதை இழந்து வருகிறோம் என என்னிடம் வருந்தும் முஸ்லிம் எழுத்தாளர்கள் உள்ளனர்.அவர்களின் பெயர்களை வெளியிட எனக்கு அனுமதி இல்லை.
-மலர்மன்னன்

suvanappiriyan said...

திரு மலர் மன்னன்!

//இவை யாவும் சமூகவியலின் சுவாரசியமான அம்சங்கள். இவற்றையெல்லாம் புல்டோசர் போட்டு அழித்து விடுவது தான் வஹாபியம். அதுதான் பிரச்சினை. வஹாபியம் அந்தந்தப் பிரதேசங்களுக்கே உரித்தான கலாசாரங்களை அழித்துவிடுகிறது. இது ஒரு பெரிய சோகம். இதற்காக வருந்தும் பல இஸ்லாமிய அறிவுஜீவிகள் உள்ளனர்.//

தற்போது தமிழகத்தை எடுத்துக் கொள்வோம். தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர் அனைவரும் முன்பு இந்துக்களாக இருந்தவர்களே! கடற்கரையோரம் ஒரு சில பேர் கடல் வாணிபத்தின் மூலம் அரபு நாடுகளிலிருந்து வந்தவர்களாக இருக்கலாம். எங்கள் ஊரிலும் கிட்டத்தட்ட 10000 பேர் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். தெருக்களின் பெயர் ஞாயக்கர் தெரு, வடுகத் தெரு, பார்ப்பான் தெரு, செக்கடித் தெரு, கொல்லன் தெரு என்று வரிசையாக இந்து சாதிப் பெயரை கொண்ட தெருக்களாகவே இருக்கும். ஆனால் அங்கெல்லாம் ஒரு இந்துக்களும் இல்லை. அனைவரும் முஸ்லிம்களாக மாறி விட்டனர். சிலர் வீடுகளை விற்று விட்டு சென்னை போன்ற இடங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டனர்.

ஒரு முஸ்லிம் அன்பழகன், அறிவழகன், ஆரோக்கியம், மலர்க்கொடி என்ற அழகிய தமிழ்ப் பெயர்களை வைத்துக் கொண்டு இஸ்லாமியனாக இருக்கலாம். அவனது தாய் மொழியை உலக மொழிகள் அனைத்துக்கும் சமமாக பாவிக்கிறது. தேவ மொழி என்று ஒன்று இஸ்லாத்தில் இல்லை என்று குர்ஆனே விளக்குகிறது.

அதே போல் உடை விஷயத்தில் அந்தநத நாட்டு உடைகளையே இஸ்லாமும் அங்கீகரிக்கிறது. பிரத்யேக உடை என்று எதுவும் இஸ்லாத்தில் இல்லை. அண்டை வீட்டார்கள் இந்துக்களாக இருந்தாலும் அவர்களிடம் அன்பாக நடந்து சமைக்கும் பொருள்களையும் அவர்களுக்கு கொடுத்து சகோதர வாஞ்சையோடு நடக்கச் சொல்கிறது இஸ்லாம். உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்று போதிக்கிறது இஸ்லாம். சமூகத்தில் புரையோடிப் போயுள்ள மனிதனின் ஏற்றத் தாழ்வுகளை குலப் பெருமைகளை தனது காலடியில் போட்டு மிதிப்பதாக சொல்லி அதை செயல்படுத்தியவர் முகமது நபி. இவற்றை எல்லாம் நடைமுறையில் செயல்படுத்துபவர்களை வஹாபிகள் என்று கூறுகிறீர்கள். இந்த வஹாபிகளினால் நீங்கள் அடைந்த துன்பம் என்ன? எந்த வகையில் நமது இந்தியாவுக்கு வஹாபியம் அச்சுறுத்தலாக இருக்க முடியும்? இதை ஆதாரங்களோடு விளக்கினால் நானும் தெரிந்து கொள்வேன்.

தமிழ்நாட்டின் கலாசாரம் என்று எதைச் சொல்கிறீர்கள்? டாஸ்மார்க் இல்லாத கிராமமே இன்று தமிழகத்தில் கிடையாது. ஆனால் 10000 பேருக்கு மேல் உள்ள எங்கள் கிராமத்தில் சாராயக் கடை கிடையாது. ஏனெனில் குடிக்க ஆளில்லை.

எல்லா தமிழக கிராமங்களிலும் அரிஜனங்கள் அவ்வளவு சுலபமாக சுதந்திரமாக சென்று விட முடியாது. ஆனால் 10 கிராம அரிஜன மக்கள் வேலை முடிந்து எங்கள் கிராமத்தை தாண்டித்தான் செல்ல வேண்டும். எனக்கு தற்போது 45 வருடம் ஆகிறது. ஒரு முறை கூட அரிஜனங்களை தவறாக பேசியோ அவமானப்படுத்தியோ நான் பார்த்ததில்லை. அரிஜனப் பெண்கள் அனைவரும் எங்கள் கிராம வீடுகளில் வீட்டு வேலை செய்பவர்களாக உள்ளனர். வீட்டில் அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு இருக்கும். சில அரிஜன பிள்ளைகளின் படிப்பு செலவுகளை பல முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டு செயல்படுத்தி வருவதையும் நான் பார்த்துள்ளேன்.

அக்ரஹாரத்திலோ சாதி இந்துக்கள் உள்ள தெருக்களிலோ இன்று வரை இந்த அளவு சுதந்திரமாக அரிஜனங்கள் போனது கிடையாது. போக முயற்ச்சித்தால் எந்த அளவு அவர்கள் பாதிக்கப்படுவார்கள என்பதை அறியாவர் அல்ல நீங்கள்.

வஹாபியம் வளர்ந்ததால் கடந்த இருபது வருடமாக தமிழகத்தில் மதக் கலவரம் பெரிதாக ஏதும் ஏற்படவில்லை. ஏனெனில் வஹாபியம் அந்த அளவு மாற்று மதத்தவர்களை கவர்ந்துள்ளது. புரோகிதத்தால் வயிறு வளர்த்து வந்த ஒரு சில பெயர் தங்கி முஸ்லிம்கள் வஹாபியம் வளர்வதை வருத்தமாக உங்களிடம் சொல்லியுள்ளார்கள. ஆனால் பெரும்பான்மை முஸ்லிம்கள் வஹாபியத்தை இருகரம் நீட்டி வரவேற்பவர்காகவே உள்ளனர்.

suvanappiriyan said...

திரு மலர் மன்னன்!

//உங்கள் மனம் புண்படுமானால் மன்னியுங்கள். நீங்கள் அவசரப்பட்டு முடிவுக்கு வருபவராக இருக்கிறீர்கள். உங்களுடைய சந்திர குப்த மெளரியர் இதற்கு ஒரு உதாரணம். இதேபோல கர்ஷன் என்ற பெயரை ஒருவர் ஹர்ஷர் என்று நினைத்துக்கொண்டு நீளநீளமாக எழுதிக் கொண்டிருந்து விட்டுப் பின்னர் வருந்தினார். ஹுசைனி பிராமணர்களை வைத்துக்கொண்டு எவ்வளவு அனாயாசமாகப் பல கற்பிதங்களைத் தோற்றுவித்துவிடுகிறீர்கள்!//

பல வேலைகளுக்கு நடுவில் நான் பதிவு எழுதுகிறேன். அலுவலக வேலைகளை முடித்து விட்டு இந்த பதிவுகளின் பக்கம் வருவேன். அதுபோன்ற நேரங்களில் சில தவறான புரிதல்கள் ஏற்படுவது அனைவருக்கும் சகஜமே. சந்திர குப்தர் என்றவுடன் நான் வரலாறுகளில் படிக்க சந்திரகுப்த மொளரியரோ என்று தவறாக விளங்கி விட்டேன். எனவேதான் ஜெய்சங்கர் சுட்டிக் காட்டியவுடன் ஒத்துக் கொண்டு திருத்தி விட்டேன்.

//தார், பண்டிட், நாயக், பட்டேல் என்கிற பின்னொட்டுகள் உள்ள முஸ்லிம்கள் எல்லாம் உள்ளனர். இதற்கெல்லாம் என்ன அவசியம் என யோசியுங்கள். ஏதேனும் ஒரு கட்டாயத்தின் பேரில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மத மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்றும் கருத முடியும் அல்லவா? இவை யாவும் சமூகவியலின் சுவாரசியமான அம்சங்கள். இவற்றையெல்லாம் புல்டோசர் போட்டு அழித்து விடுவது தான் வஹாபியம். //

இந்து மதத்தில் உள்ள சாதிக் கொடுமையை போக்கவே பலர் இஸ்லாத்தில் நுழைகின்றனர். இங்கு வந்தும் அந்த சாதிப்பெயரை தனது பெயருக்கு பின்னால் போட்டால் மதம் மாறியதில் என்ன அர்த்தம் இருக்கிறது. அதற்கு அங்கேயே இருந்திருக்கலாமே! அதைத்தான் எதிர்க்கிறோம். கிறித்தவ மதத்தில் அவ்வாறு சாதிகளை பெயர்களுக்கு பின்னால் போட்டதால் இன்று அனைத்து கிறித்தவ ஊர்களிலும் அரிஜனங்களுக்கு தனி கல்லறை. இது இஸ்லாத்திலும் வர வேண்டும் என்று விரும்புகிறீர்களா? எனவே இஸ்லாத்தில் சாதிகளை நுழைக்க எவர் முயற்ச்சித்தாலும் அது இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும். இதில் சமரசத்துக்கு என்றுமே இடமில்லை.

// மதங்களைப் பற்றிய உங்கள் கட்டுரைகளை நான் படித்ததில்லை. ஆனால் கிறிஸ்தவ மதப் பிரசாரகர்கள் போல ஹிந்து மத தத்துவங்களும் ஏசுநாதரையும் எமது பரம் பிதாவையும்தாம் கொண்டாடுகின்றன என்று சாதிப்பதுபோல அவை இருக்காது என நம்புகிறேன். சாது செல்லப்பா என்கிற ஒரு பிராமண கிறிஸ்தவ மதப் பிரசாரகர் அதைத்தான் செய்து வருகிறார்!//

எனது பதிவுகள் குர்ஆன், பைபிள், தோரா, ருக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் அனைத்தையும் தந்தது ஒருவரே என்ற ரீதியில் ஆதாரங்களோடு அமைந்திருக்கும். நேரம் கிடைக்கும் போது படித்துப் பாருங்கள். உங்களின் எழுத்துப் பணிக்கும் அது உபயோகமாக இருக்கும்.