Followers

Saturday, October 26, 2013

பலதார மணத்துக்கு சவுதி பெண்கள் ஆதரவு!



ஒரு ஆண் வசதியும் உடல் ஆரோக்கியமும் இருக்கும் பட்சத்தில் விரும்பினால் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை திருமணம் முடிக்கலாம் என்று இஸ்லாம் அனுமதி அளிக்கிறது. இந்த அனுமதியை உலக முஸ்லிம்களில் 90 சதவீதமான பேர் பயன்படுத்துவதில்லை. ஏனெனில் ஒரு மனைவியையும் அதற்கு பிறக்கும் குழந்தைகளையும் படிக்க வைத்து ஒரு நிலைக்கு கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விடும் அனேக முஸ்லிம்களுக்கு. எனவே இஸ்லாம் அனுமதித்தாலும் இந்த வாய்ப்பை பலரும் பயன் படுத்துவதில்லை.

சவுதியில் கூட மிக சொற்பமான நபர்களே பலதாரமணம் புரிபவர்களாக உள்ளனர். உலகம் முழுவதுமே ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடே மிகைத்துள்ளதால் அது சவுதியிலும் பிரதிபலிக்கிறது. மேலும் குழந்தைகள் பெரியவர்களாக ஆனவுடன் தந்தைக்கு ஏற்பாடு செய்யப்படும் திருமணத்தை வெறுக்கின்றனர். முதல் மனைவியும் அனுமதிப்பதில்லை. நம் நாட்டிலும் இஸ்லாமியர்கள் இந்த பலதார மணத்தை சற்று தூரமாக்கியே வைத்துள்ளனர். இது பரவலாக உலகம் முழுவதும் உள்ளது.

ஆனால் சவுதியில் அதிசயமாக கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் சில கல்லூரிப் பெண்கள் பலதாரமணத்தை ஆதரித்து அறிக்கை விட்டுள்ளனர். ட்விட்டர் குழுமத்தில் இந்த செய்தி சுற்றுக்கு விடப்பட்டதால் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த கருத்துகளுக்கு சவுதி பெண்களிடையே ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியுள்ளது.

'இந்த நாட்டில் திருமணம் ஆகாமல் தேங்கி கிடக்கும் பல லட்சம் முதிர் கன்னிகளின் விடிவு பலதார மணத்திலேயே உள்ளது.' என்று பெண்கள் தரப்பிலிருந்தே கோரிக்கை வந்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பலதார மணத்தால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்: அவர்களின் உரிமை மறுக்கப்படுகின்றனது: என்ற வாதம் பெண்ணிய வாதிகளால் வைக்கப்படுகிறது. ஆனால் திருமணம் ஆகாமல் வீட்டிலே முடங்கிக் கிடக்கும் அந்த முதிர் கன்னிகளுக்கு என்ன பதிலை அவர்கள் வைத்துள்ளார்கள்?

மெக்காவில் மட்டும் 396248 முதிர் கன்னிகள் உள்ளதாக அரசு அறிக்கைகள் கூறுகின்றன. அதே போல் ரியாத் மற்றும் தம்மாம் ஏரியாக்களில் மட்டும் 327427 முதிர் கன்னிகள் இருப்பதாக அரசு கூறுகிறது. பெண்ணியம் பேசுபவர்கள் இந்த முதிர் கன்னிகளுக்கு என்ன பதிலைத் தரப் போகிறார்கள்?

சுலதான் அல் சுபயீ சவுதி நாட்டவர்: பலதார மணம் குடும்பத்தில் பல சிக்கல்களை கொண்டு வருகிறது. எனவே நான் ஒரு மனைவியுடனேயே வாழ்க்கையை ஓட்டுகிறேன்.

இகோயிங் சவுதி நாட்டவர்: முதல் மனைவியையும் பின்னால் கட்டக் கூடிய மனைவிகளையும் சமமாகவும் நீதமாகவும் நடத்தத் தெரிந்தவர்களே பலதார மணத்தின் பக்கம் செல்ல வேண்டும். இஸ்லாம் இதனையும் விரும்புகிறது.

சாமியா சவுதி பெண்மணி: பலதார மணம் வேறொரு சிக்கலையும் கொண்டு வரும். ஒவ்வொரு மனைவிக்கும் எட்டு குழந்தைகள் என்றால் ஒரு ஆணுக்கு 32 குழந்தைகள் ஆகி விடும். இந்த அதீத மக்கள் பெருக்கமானது மேலும் பல சிக்கல்களை கொண்டு வரும் என்கிறார்.

பெண்கள் அதிகமாக மஹர் கேட்பதும் வாழ்வாதார செலவுகள் அதிகரித்து விட்டதும் சவுதி இளைஞர்கள் திருமணம் முடிக்க தடையாக இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. எனவே அரசு சவுதி இளைஞர்ளுக்கு திருமண உதவி திட்டங்களை இன்னும் அதிகமாக்கி அந்த முதிர் கன்னிகளின் வாழ்வில் வசந்தம் வீசச் செய்வார்களாக!

தகவல் உதவி:

சவுதி கெஜட்


எனது நண்பர் ஒருவருக்கு திருமணம் ஆகி 20 வருடங்கள் ஆகி விட்டது. ஆனால் குழந்தை பாக்கியம் கிடையாது. குறை பெண்ணிடத்தில் உள்ளதாக மருத்துவ அறிக்கை கூறுகிறது. நான் அவரிடம் 'இஸ்லாம் பலதார மணத்தை ஆதரிப்பதால் உங்கள் மனைவியின் சம்மதத்தோடு ஏன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளக் கூடாது?' என்று வினவினேன். 'இஸ்லாம் அனுமதித்தாலும் எனது மனம் இடம் கொடுக்கவில்லை. எனது மனைவிக்கு செய்யும் துரோகமாக அதைப் பார்க்கிறேன்.தமிழ் முஸ்லிம்களாகிய நாம் இந்த பழக்கத்தை கடைபிடிப்பதில்லை' என்றார். நான் ஒன்றும் சொல்லவில்லை. அமைதியாகி விட்டேன்.

அந்த காலத்திலிருந்தே உலக மதங்கள் அனைத்தும் பலதார மணத்தை ஆதரித்தே வந்துள்ளன என்பதற்கு பின் வரும் ஆதாரங்கள் சாட்சிகளாக உள்ளன.

1. மன்னன் சாலோமோனிற்கு எழுநூறு மனைவிகளும் முன்னூறு வைப்பாட்டிகளும் இருந்தாகச் சொல்லப்படுகிறது. (இராஜாக்கள் 11:3).

2. மன்னன் தாவீதிற்கும் பல மனைவிகளும் பல வைப்பாட்டிகளும் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. (சாமுவேல் 5:13).


3. பல்வேறு மனைவிகளுக்குப் பிறந்த மகன்களுக்கிடையே சொத்துக்களை எவ்வாறு வினியோகிப்பது என்பது பற்றிய கட்டளைகளும் பழைய ஏற்பாட்டில் காணப்படுகின்றது. (உபாகமம் 22:7).

4. மனைவியின் சகோதரியை போட்டி மனைவியாக்கிக் கொள்வதற்கு மட்டுமே தடையுள்ளது. (லேவியராகமம் 18:8).

5. அதிகப்பட்சம் நான்கு மனைவிகள் இருக்கலாம் என 'தல்முதிக் (Talmudic) பரிந்துரைக்கிறது.

பதினாறாம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய யூதர்கள் பலதார மணப் பழக்கத்தைப் பின்பற்றியே வந்தனர். கிழக்கத்திய யூதர்கள், அவர்கள் இஸ்ரேலுக்கு வந்துக் குடியேறும் வரை, தொடர்ந்து பலதார மணத்தை அனுசரித்து வந்தனர். இஸ்ரேலில் சிவில் சட்டத்தின் கீழ் அங்கே பிற்பாடு அது தடைசெய்யப்பட்டது. இருப்பினும், சிவில் சட்டத்தை மிஞ்சும் மதச்சட்டத்தின் கீழ் பலதார மணத்திற்கு அனுமதி நடைமுறையில் இருக்கவே செய்கிறது.

6.'குழந்தையற்ற விதவை, மரணித்த கணவனின் சகோதரனை - அவன் திருமணமானவனாகி இருந்தால் கூட - அவளுக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மணக்க வேண்டுமெனக் கூறுகிறது. (ஆதியாகமம் 38: 8-10) (விதவையின் துன்பநிலைகள் என்ற பகுதி காண்க).

7.ஒரு பார்பனர் நான்கு மனைவியரை மணக்கலாம் (விஷ்ணுஸ்மிருதி 24:1)

8.கிருஷ்ணருக்குப் பதினாராயிரம் மனைவிகள் இருந்ததாக இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் கூறப்படுகின்றது.

9.அதுபோக ஒரு பெண்ணிற்குப் பல கணவர்கள் (பஞ்ச பாண்டவர்களுக்கு திரௌபதி என்கிற ஒரு மனைவி) இருந்ததாகவும் மகாபாரத்தில் கூறப்படுகின்றது.

10.ராமரின் தகப்பனார் தஸரதன் ஒன்றுக்கு மேற்பட்ட (கிட்டத்தட்ட அறுபதாயிரம்) மனைவிகளைக் கொண்டிருந்தார்.

11.முருகனுக்கும் வள்ளி, தெய்வாணை என இரண்டு மனைவிகள் இருந்தனர்.

இந்த பதிவை எழுதியதால் எல்லோரும் பலதார மணம் செய்து கொள்ளுங்கள் என்று நான் சொல்ல வருவதாக யாரும் நினைக்க வேண்டாம். இறைவனின் கட்டளையானது எந்த காலத்திலும் ஏதோ ஒரு வகையில் மனித குலத்துக்கு நன்மை பயப்பதாகவே இருக்கும் என்ற கருத்தையே சொல்ல வந்தேன்.

7 comments:

Anonymous said...

கேள்வி: போலீஸ் பக்ருதீன் கைது விவகாரம் பெரிதாகிக் கொண்டு போகிறதே?

பதில்: அதைப்பற்றி நான் முன்பே விரிவாக எழுதியிருக்கிறேன். கொலைக் குற்றவாளிகள் போலீஸ் பக்ருதீன் குழுவினரா? அல்லது ஏற்கனவே டி.ஜி.பி. அறிக்கையில் தெரிவித்திருந்த நபர்களா? பக்ருதீன் எந்த இடத்தில் கைது செய்யப்பட்டார்? கைது செய்த போலீஸ் அதிகாரி யார்? என்பதற்கான விளக்கங்களையெல்லாம் அரசு தெளிவுபடுத்த வேண்டுமென்று எழுதியிருந்தேன். ஆனால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களைப் போக்கிடும் வகையில் அரசு அதைப் பற்றி விளக்கமளிக்கவில்லை.

இதற்கிடையே வேலூரில் செய்தியாளர்களிடம் போலீஸ் பக்ருதீன்; தான் கொலையாளி அல்ல என்றும், அவ்வாறு சொல்லக் காவல் துறையினர் வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெ.அப்துல் ரகிம் தாக்கல் செய்த மனுவில், பக்ருதீன் தனது நண்பர் என்றும், அவரைப் போலீசார் சுட்டுக் கொன்று விடுவார்களோ என்று அச்சமாக உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும் அவருடைய வழக்கறிஞர் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் வாதாடும்போது, பக்ருதீனின் கைது குறிப்பாணையின் நகலை வேலூர் கோர்ட்டிலிருந்து வாங்கிப் பார்த்ததாகவும், அதில் பக்ருதீனை கைது செய்ததாகக் கூறி, திருவண்ணாமலை சி.பி., சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் கே.அண்ணாதுரை கையெழுத்திட்டிருப்பதாகவும், ஆனால் 15-10-2013 அன்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், பக்ருதீனைக் கைது செய்த காவல்துறையினரான லெட்சுமணன், ரவீந்திரன் மற்றும் வீரகுமார் ஆகியோருக்கு பரிசு வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், அது உண்மையென்றால் வேலூர் நீதிமன்றத்தில் பக்ருதீனை கே. அண்ணாதுரை கைது செய்ததாகக் குறிப்பிடும் குறிப்பாணை தவறானது என்று தெரிய வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

பக்ருதீனை எந்த இடத்தில் எப்போது கைது செய்தனர் என்பதை உறுதி செய்வதற்காக அருகிலே உள்ள சாட்சிகளிடம் கையெழுத்து வாங்க வேண்டும்; ஆனால் அப்படிப்பட்ட சாட்சிக் கையெழுத்து எதுவும் கைதுக் குறிப்பாணையில் காணப்படவில்லை என்றும், பக்ருதீனை கைது செய்தது குறித்து அவருடைய தாயாருக்கு தகவலை காவல் துறையினர் அனுப்பியதாகத் தெரிவித்த போதிலும், அந்தத் தகவலைக் கொடுத்ததற்கான ஆதாரம் எதையும் அரசு தாக்கல் செய்யவில்லை என்றும், ஒருவரைக் கைது செய்யும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதற்கு, ‘டி.கே.பாசு வழக்கில்’ உச்சநீதிமன்றம் வரையறுத்த விதிகளை மீறி பக்ருதீனைக் காவல் துறையினர் கைது செய்திருக்கிறார்கள் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் அப்துல் ரகிம் அவர்களின் வழக்கறிஞர் கோரியிருக்கிறார்.

வழக்கு விசாரணை அடுத்த வாரத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு போலீஸ் பக்ருதீன் கைது விவகாரம் இடியாப்பச் சிக்கலாகிக் கொண்டிருக்கும் நிலையில், முதல்வர் ஜெயலலிதாவும், காவல்துறைத் தலைவரும் விளக்கமேதும் தராமலிருப்பது விந்தையாக இருக்கிறது! என்று கூறியுள்ளார் கருணாநிதி.

kannan said...

iraNdu manaivikaLum orE nEraththil kaNavanidam sekS vaikka virumBinaal enna seivathu?

regards from

kannan
abu dhabi.
http://samykannan.blogspot.ae/

suvanappiriyan said...

சாமி கண்ணன்!

//iraNdu manaivikaLum orE nEraththil kaNavanidam sekS vaikka virumBinaal enna seivathu?//

24 மணி நேரத்தில் இதற்கு நேரம் ஒதுக்க முடியாதா? ஒரு மனைவியிடம் இருந்தாலும் அதிகபட்சம் அரை மணி நேரத்துக்குள் அவனது வேலை முடிந்து விடும். அதன் பிறகு சிறிது ஓய்வுக்கு பிறகு மற்ற மனைவியிடம் செல்லலாமே. ஆணுக்கு அத்தகைய வலிமையை இறைவன் இயற்கையிலேயே கொடுத்துள்ளான். எனவே இது ஒரு பிரச்னையே இல்லை. இங்கு சவுதியில் ஒரே நாளில் நான்கு மனைவியிடமும் கலவி வைத்துக் கொள்ளும் சவதிகளை சாதாரணமாக பார்க்க முடியும்.

SNR.தேவதாஸ் said...

பாட்னா குண்டு வெடிப்பு?

suvanappiriyan said...

//பாட்னா குண்டு வெடிப்பு?//

கொஞ்ச நாள் முன்னாடி தமிழகத்துல ஒரு பா.ஜ.க பிரமுகர் அவர் வீட்டு மேல அவரே குண்டு எறியவச்சு பப்ளிக்குட்டி பண்ணினதுதான் இப்ப நினைவுக்கு வந்து தொலைக்குது.....அரசியல்ல இதெல்லாம்.....

-mu.saravanakumar

மோடிக்கு ஆதரவு இருப்பதுபோல் தீவிர எதிர்ப்பும் இருக்கிறது. என்ன காரணம் என்ற கேள்விதான் மேலோங்குகிறது.அவரது உரைகளை உற்று நோக்குவோருக்கு சிருபான்மையினற்பற்றி அவரிடத்தில் பெரிய மாற்றம் ஒன்றும் தென்படவில்லை. மக்களுக்கு அவரைப்பற்றிய பயமும், சந்தேகமும் தொடர்வதுபோல் தெரிகிறது. அக்டோபர் 26, 2013 நியூ யார்க் டைம்ஸ்இல் எழுதப்பட்ட கட்டுரை ஒன்று இந்த பயத்தை பிரதிபலிக்கிறது. "மோடிஇக்கு மற்றவர்களோடு ஒத்துழைக்கும் திறமையோ, மாற்று கருத்துகளை மதிக்கும் தன்மையோ இல்லை. குஜராத்தில் வியக்கத்தக்க மாற்றம் ஒன்றுமில்லை. அங்குள்ள முஸ்லிம்கள் நாட்டின் பிறபகுதியில் உள்ள முஸ்லிம்களைவிட ஏழைகளாக இருக்கலாம். இந்த பயத்தை போக்கினால் அன்றி அவர் தலைமை தாங்கமுடியாது" என்கிறது நியூ யார்க் டைம்ஸ்.

-Packiaraj

இந்த பின்னூட்டங்கள் ஹிந்து நாளிதழில் தமிழ் பதிப்பில் வெளியானது. கருத்தை சொன்னவர்கள் நடுநிலை இந்துக்கள்.

http://tamil.thehindu.com/india/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/article5278277.ece?utm_source=vuukle&utm_medium=notification_email&utm_campaign=vuukle_referral

Unknown said...

என் கமெண்டின் உண்மை சுட்டுடுச்சாக்கும்

suvanappiriyan said...

//என் கமெண்டின் உண்மை சுட்டுடுச்சாக்கும் //

பெண்களும் எனது பதிவுகளை அதிகம் படிக்கிறார்கள். எனவே ஆபாசங்களை நான் அனுமதிப்பதில்லை.