Followers

Showing posts with label பெண்கள். Show all posts
Showing posts with label பெண்கள். Show all posts

Monday, March 07, 2016

இந்திய பெண்களின் மார்புக்கும் வரி வசூலித்த நம்பூதிரிகள்!



புலையர் சாதி, சாணார் சாதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பார்பன நம்பூதிரிகள் கேரளாவில் செய்த கொடுமைகளை நாம் அறிவோம். கேரளாவிலும் கேரளாவை ஒட்டிய கன்யாகுமரி, நாகர் கோவில் போன்ற ஊர்களிலும் தாழத்தப்பட்ட மற்றும் நாடார் சாதி மக்களுக்கு 'முலை வரி' என்ற ஒன்றை வசூலித்தனர். ஒரு பெண்ணின் மார்பின் அளவுக்கேற்ப அந்த வரியானது போடப்படும். இதனை வசூலிப்பதற்கென்றே மானங்கெட்ட நம்பூதிரிகள் ஆட்களை நியமித்திருந்தனர். வரி கட்டாத பெண்களின் மார்புகள் அறுத்தெறியப்பட்டன. இதற்கு பயந்து கொண்டு தங்கள் உழைப்பில் பெரும் பகுதியை அக்கிரமக்கார நம்பூதிரிகளுக்கு கொடுத்து வந்தனர் தாழ்த்தப்பட்ட பெண்கள். உலகிலேயே இப்படி ஒரு கொடுமை நமது தமிழகத்திலும் கேரளாவிலும் தான் நடந்துள்ளது.

நாஞ்செலி என்ற அழகிய தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு முலை வரி பாக்கி இருந்தது. இதனால் அந்த பணத்தை வசூலிக்க மானங்கெட்ட அதிகாரிகள் நாஞ்செலியின் வீட்டின் கதவை தட்டினர். 'முலை வரி' கட்ட அந்த பெண்ணிடம் பணம் இல்லை. உடனே உள்ளே சென்று ஒரு இலையை எடுத்து வந்து தரையில் பரப்பினார். தனது இறைவனை நெஞ்சுறுக வணங்கி விட்டு உடன் தனது இரு மார்பகங்களையும் அறுத்து அந்த இலையின் மீது வைத்து அந்த அதிகாரிகளுக்கு காணிக்கையாக்கினார். இந்த தகவல்களை கண்ணூரைச் சேர்ந்த ஓவியர் முரளி பத்திரிக்கையாளர்களிடம் விவரித்தார்.

கேரளாவில் உள்ள செர்தாலா என்ற இடத்தில் இந்த கொடுமை அரங்கேறியது. இது நடந்து நூறு ஆண்டுகள் ஆகி விட்டது. தற்போது அந்த இடம் 'முலச்சிபுரம்' என்ற பெயரில் பலராலும் அறியப்படுகிறது.

ஓவியர் முரளி மேலும் தொடர்கிறார் 'செர்தாலா என்ற இந்த கிராமத்தில் உள்ள அனைவரும் நாஞ்செலியின் சோக வரலாறை அறிவர். இந்த காட்சிகளை ஓவியமாக வடித்துள்ளேன்' என்கிறார்.

இதே கிராமத்தைச் சேர்ந்த அசிஸ்டன்ட் புரபஸர் தாமஸ் புலிக்கல் (53) கூறும் போது 'சிறு வயதிலிருந்தே இந்த கொடுமைகளை எனது குடும்பம் பார்த்து வந்துள்ளது. நெஞ்செலி போன்ற வீர மிக்க பெண்களை பெற்றது இந்த மண்' என்று நினைவு கூறுகிறார்.

பார்பன நம்பூதிரிகளின் கொடுமை திருவிதாங்கூர் மன்னனின் கொடுமை இவற்றை எல்லாம் தாங்காமல் பெரும்பாலான நாடார் சாதி மக்கள் கிருத்துவத்தை தழுவினர். இதனால்தான் இன்றும் கன்யாகுமரி, நாகர் கோவில் போன்ற ஊர்களில் கிருத்தவ மக்கள் அதிகமிருப்பதை காணலாம்.

மார்புகள் திறந்த அந்த பெண்களின் புகைப்படத்தை நான் பதிய விரும்பவில்லை. எனக்கே இந்த உணர்வு இருக்கும் போது அந்த பெண்களின் கூச்ச உணர்வை நினைத்து பார்கிறேன்.

ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு பஞ்சம் பிழைக்க வந்த ஒரு கூட்டம் இந்திய நாட்டு மக்களை அடிமை படுத்தி அவர்களை என்னவெல்லாம் செய்தார்கள் என்பதற்கு இந்த சம்பவங்களெல்லாம் இன்றும் நமக்கு சாட்சி பகர்ந்து கொண்டுள்ளன.

Wednesday, January 27, 2016

இஸ்லாமிய பெண்கள் ஏன் புர்ஹா அணிகிறார்கள்?

இஸ்லாமிய பெண்கள் ஏன் புர்ஹா அணிகிறார்கள்?நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் நம்பிக்கை கொண்டவர்களின்...

Posted by Nazeer Ahamed on Wednesday, January 27, 2016

இஸ்லாமிய பெண்கள் ஏன் புர்ஹா அணிகிறார்கள்?

நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் நம்பிக்கை கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் கண்ணியமானவர்கள் என அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.

(அல் குஆன் 33:59)

நன்கு சம அழகுள்ள இரு பெண்களை கடைவீதியில் நடந்து செல்வதாக வைத்துக் கொள்வோம். ஒரு பெண் இஸ்லாமிய முறைப்படி உடையணிந்திருக்கிறாள். மற்றொரு பெண் உடலின் பாகங்களை வெளிக்காட்டும் மேற்கத்திய அடையான குட்டை பாவாடை அணிந்திருக்கின்றாள். இப்போது இவ்விரு பெண்களில் கடைத்தெருவில் இருக்கும் சிலரால் கேலிக்கும், கிண்டலுக்கும், தொல்லைக்கும் ஆளாவது இஸ்லாமிய உடையணிந்திருக்கும் பெண்ணா? அல்லது குட்டை பாவாடையணிந்திருக்கும் பெண்ணா? நிச்சயமாக குட்டை பாவாடையணிந்தவள் தான் கேவலத்திற்கு உள்ளாவாள். ஏனென்றாள் அவளுடைய ஆடை கடைத் தெருவிலிருக்கும் சிலரின் உணர்ச்சிகளைத் தூண்டி அவர்களை அவ்வாறு தவறு செய்யத் தூண்டுகிறது. பெண்களின் பாதுகாப்பிற்காக அற்புதமான திட்டத்தையல்லவா திருமறை கூறியிருக்கிறது.

Saturday, November 21, 2015

கேரள உள்ளாட்சி மன்ற தேர்தலில் முஸ்லிம் லீக் அமோக வெற்றி!



கேரள உள்ளாட்சி மன்ற தேர்தலில் 16 நகர சபைகளை முஸ்லிம் லீக் கைப்பற்றியுள்ளது. பாஜக பாலக்காடு நகரசபையை வென்றுள்ளது. வெற்றி பெற்றவர்களில் 12 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாம் பெண்களை வீட்டிலேயே பூட்டி வைத்துள்ளது என்று சொல்வோருக்கு இந்த முடிவானது தக்க பதிலை கொடுத்துக் கொண்டுள்ளது!

வாழ்த்துக்கள் சகோதரிகளே!...

Wednesday, August 26, 2015

பெல்ஜிய இள மங்கையையும் கவர்ந்த இஸ்லாம்!



பெல்ஜிய பெண்ணான வெரோனிக் கூல் எல்லோரையும் போல கல்லூரிக்கு சென்று வந்தார். கல்லூரியில் பயிலும் ஒரு சில இஸ்லாமிய மாணவிகளோடு தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் செய்து வரும் பழக்கங்கள் இவருக்கு வித்தியாசமாக படவே இஸ்லாத்தை அறிவதில் ஆர்வம் கொண்டார். இஸ்லாமிய தோழிகள் மூலமாக அவருக்கு குர்ஆன் மொழி பெயர்ப்பு கிடைத்தது. குர்ஆனை ஆழ்ந்து படித்தார். பிரஸ்ஸல்ஸில் உள்ள இஸ்லாமிக் சென்டருக்கு அடிக்கடி போய் வந்தார். இஸ்லாம் இந்த இள நங்கையை ஆட் கொண்டது. கலிமா மொழிந்து ஏக இறைவனை ஏற்று இஸ்லாமிய பெண்ணாக மாறினார். தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் இஸ்லாத்தை எத்தி வைத்தார். அவர்களும் ஏற்றுக் கொண்டனர். பிரஸ்ஸல்ஸில் உள்ள இஸ்லாமிக் சென்டருக்கு இது வரை கிட்டத்தட்ட ஆயிரம் பேரை அழைத்து வந்து இஸ்லாமியர்களாக மாற்றியுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் பெல்ஜிய படித்த பெண்மணிகள்.

பெல்ஜியத்தில் ஏறத்தாழ 450000 முஸ்லிம்கள் உள்ளனர். மொராக்கோ மற்றும் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலானவர்களாக உள்ளனர். பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் இருந்தும் இஸ்லாமியர்கள் பெல்ஜியத்தில் பல ஆண்டுகளாக தங்கியுள்ளனர்.

பிரஸ்ஸல்ஸில் மட்டும் கிட்டத்தட்ட 77 பள்ளிவாசல்கள் உள்ளன. பெல்ஜியம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் ஏக இறைவனை வணங்க ஏற்படுத்தப்பட்டுள்ளன. நாத்திகமும் கம்யூனிஷமும் தங்கள் வாழ்வில் நிம்மதியை தரவில்லை என்பதால் இன்று இந்த மக்கள் தங்கள் பார்வையை இஸ்லாத்தின் பக்கம் திருப்பியுள்ளனர்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

தகவல் உதவி
ஆன் இஸ்லாம். நெட்

http://www.onislam.net/english/news/europe/474897-belgian-woman-helps-1000-reverts-to-islam.html

Monday, August 10, 2015

டிவியில் சீரியல் பார்ப்பதை விட இப்படி முயற்சிக்கலாமே!



அமெரிக்காவில் மேல்படிப்புக்காக சென்ற இந்த பெண்கள் தங்களின் கல்லூரி ஓய்வு நாட்களை பயனுள்ள வகையில் கழிக்க திட்டமிட்டனர். அதன்படி இவர்கள் ஒரு அமைப்பாக ஒருங்கிணைந்து தன்னார்வ தொண்டு நிறுவனமாக பரிணமித்து பல அரிய பணிகளை தங்கள் நாடான சவுதி அரேபியாவில் செய்து வருகின்றனர். இந்த அமைப்பின் பெயர் Joy of Youth (JOY).

இந்த அமைப்பின் முக்கிய பொறுப்பிலுள்ள வாலா அபு சபீன் கூறுகிறார் 'ஜெத்தாவில் விவாகரத்து பெற்று மூன்று குழந்தைகளோடு வறுமையில் வாடி வரும் ஒரு பெண்ணைப் பற்றி கேள்வி பட்டோம். எங்கள் குழு அங்கு விரைந்தது. 30 பேர் கொண்ட எங்கள் குழு எட்டு மணி நேரம் அந்த வீட்டில் தொடர்ந்து வேலை செய்தோம். உடைந்த மர சாமான்களை சரி செய்துகொடுத்தோம். முழு வீட்டிற்கும் பெயிண்ட் அடித்து புது பொலிவாக்கினோம். பாத் ரூம், சமையல் அறை என்று அனைத்து இடங்களையும் மிக சுத்தமாக துடைத்து அழகாக்கினோம்.

ஆறு பேர் கொண்ட அந்த குடும்பத்துக்கு இவற்றை எல்லாம் செய்து கொடுக்க பெரும் தொகை செலவழிக்க வேண்டி வரும். அந்த ஆறு பேரையும் அவர்களது சொந்தக் காரர்கள் வீட்டில் எட்டு மணி நேரம் தங்க வைத்தோம். அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு அவர்களை அழைத்து தங்களின் வீட்டை பார்க்க வைத்தோம்' என்கிறார். சயீத் அஸ்கர் என்ற பெண்மணியும் இதனை ஆமோதித்தார்.

சயீத் அஸ்கர் மேலும் கூறும் போது 'இது எங்களுக்கு பெரும் சவாலான பணி. குறைந்த நேரத்தில் ஒரு வீட்டையே மாற்றி அமைப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. இதனை ஒரு சேலஞ்சாகவே எடுத்து செய்தோம். இது போன்று மேலும் பெரிய தொண்டுகளை செய்வதற்கு இது எங்களுக்கு ஒரு பயிற்சி களமாக இருந்தது.' என்கிறார்.

முஹம்மது அஃப்னான் கூறுகிறார் 'எட்டு மணி நேரத்தில் ஒரு வீட்டையே மாற்றி அமைப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. குழுக்களாக பிரித்துக் கொண்டு இதனை செய்வோம். வேலை முடிந்தவுடன் அவர்களிடம் சாவியை கொடுக்கும் போது நன்றிப் பெருக்கால் அவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகும். நாங்கள் பட்ட சிரமங்களுக்கு அதுவே கூலியாக எங்களுக்கு தெரியும். இது போன்று வசதியற்ற குடும்பங்களை தேடிச் சென்று உதவி வருகிறோம்' என்கிறார்.

சவுதி பெட்ரோல் பணத்திலேயே சிறு வயதிலிருந்து வாழ்ந்து பழக்கப்பட்ட இந்த பெண்மணிகள் வறியவர்க்கு உதவுவதை நோக்கமாக கொண்டு இந்த பணிகளை எடுத்துச் செய்கின்றனர். வறியவர்க்கு பொருளாலும் உடலாலும் உதவுவதை இஸ்லாம் வலியுறுத்துவதால் இவர்களின் பெற்றோரும் இந்த பெண்களை அனுமதிக்கின்றனர்.

தகவல் உதவி
சவுதி கெஜட்
10-08-2015

காலை எட்டு மணியிலிருந்து இரவு 11 மணி வரை தொடர்ந்து டிவி சீரியல்களாக பார்த்து வரும் நம் தமிழக பெண்கள் இந்த சவுதி பெண்மணிகளைப் போல மாறுவார்களா?

டாஸ்மாக் கடைகளில் மது குடிக்க ஆண்களுக்கு போட்டியாக வரிசையில் நிற்பதை இனியாவது குறைத்துக் கொள்வார்களா?

Friday, July 31, 2015

பெண்கள் இனி இப்படி இருந்தாலே அவர்களுக்கு எதிர்காலம்!









பாலியல் கொடுமை, வரதட்சணை கொடுமை, ஆசிட் வீச்சு, மத வெறியர்களின் கொடுமை என்று இன்று பல தரப்பிலும் பெண்கள் கொடுமைக்குள்ளாக்கப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக நமது இந்தியாவில் பெண் கொடுமை என்பது கருவில் அழிப்பதிலிருந்து தொடங்குகிறது. இதற்கெல்லாம் முடிவு கட்ட பெண்கள் இனி இது போன்று ஆயுத பயிற்சி பெறுவதே நிரந்தர தீர்வாக இருக்க முடியும். ஐந்து இடங்களில் பொதுவில் ஈவ் டீசிங் செய்பவர்களை விலாசி தள்ளினால் அடுத்த முறை கை வைக்க எவனும் தயங்குவான்.

வாழ்த்துக்கள் சகோதரிகளே!

Friday, June 12, 2015

பண்டமாற்றுப் பாலுறவு: 'ஹைத்தியில் ஐ.நா. அமைதிப்படை அட்டூழியம்'



'பாலுறவுக்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வோம்' என்று கூறி, ஹைத்தி பெண்களிடம் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதிப்படை வீரர்கள் 'பண்டமாற்றுப் பாலுறவு' செயல்களில் ஈடுபட்டதாக தகவல்கள் அம்பலமாகியுள்ளது.

வட அமெரிக்க நாடான ஹைத்தியில் வாழும் ஏழை மக்களுக்கான உதவிகளை கடந்த 2004-லிருந்து ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் அளித்த வந்தனர்.

இந்த நிலையில், தங்களது அமைதிக் குழு வீரர்கள் 'பண்டமாற்றுப் பாலுறவு' செயல்களில் ஈடுப்பட்டதை ஐ.நா. கண்காணிப்புக் குழு கண்டுபிடித்ததாகவும், அதன் விவரம் தங்களுக்கு தெரியவந்ததாகவும் 'தி அசோசியேடட் பிரஸ்' செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஐ.நா. அமைதிப் படைக் குழுவில் உலகெங்கும் சுமார் 125,000 பேர் பணியாற்றுகின்றனர். இவர்கள் உலக நாடுகளில் நடக்கும் மோசமான சூழல்களில் அதன் மக்களுக்காக சேவை செய்யும் பணிகளில் ஈடுபடுகின்றனர். அவர்களது பணியை கண்காணிக்கும் பொறுப்பில் ஐ.நா. மேற்பார்வை குழு செயல்பட்டு வருகிறது.

மேற்பார்வை குழுவின் ஆய்வின்படி, வட அமெரிக்க நாடுகளில் மிகவும் ஏழ்மையான நாடான ஹைத்தியில், அமைதிக் குழு பணியாற்றியபோது அங்கிருக்கும் பெண்களுக்கு உணவு, உடை, தண்ணீர், குழந்தைகளுக்கான வசதிகள் என அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு கைமாறாக தங்களுடன் பாலுறவு கொள்ள வலியுறுத்தியதை மேற்பார்வை குழு கண்டறிந்துள்ளது.

"கிராமப்புற பெண்களுக்கு பசி, வாழும் இடம், குழந்தைகளுக்கான தேவைகள், மருத்துவப் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் என எதுவும் இல்லை. இதுபோன்ற தேவைகளை அளிப்பதற்கு மாறாக அந்தப் பெண்களிடம் உறவுகொள்ளும் வழக்கத்தை அமைதிக் குழுவினர் வைத்துள்ளனர்.

அவை மட்டுமல்லாமல், செல்போன், லேப்டாப், பணம் உள்ளிட்ட பொருட்களையும் அந்தப் பெண்களுக்கு குழுவினர் அளித்தனர்" என்று மேற்பார்வை குழுவின் விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹைத்தியில் 231 பெண்களிடம் கடந்த வருடம் மேற்பார்வை குழுவினர் ஆய்வில் ஈடுபட்டதில் இந்த விவரம் அம்பலமானது. அதனை 'தி அசோசியேடட் பிரஸ்' செய்தி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

இந்தச் செயல் எந்த சமயத்தில் நடந்தது, அதில் ஈடுப்பட்ட குழுவினரது விவரங்கள் என எதுவும் தெரியாத நிலையில் இது குறித்து பேச ஐ.நா. அதிகாரிகள் மறுத்துவிட்டனர். ஆனால், இந்த அதிர்ச்சிச் தகவல் தொடர்பான அறிக்கையை ஒரு சில மாதங்களில் ஐ.நா. வெளியிடும் என்று எதிர்பார்ப்பதாக அந்தச் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
11-06-2015

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

விபசாரம் புரிகிறவன் விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி அதைச் செய்யமாட்டான். (மது அருந்துகிறவன்) மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி மது அருந்தமாட்டான். திருடன் திருடும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி திருடமாட்டான். (மக்களின் மதிப்புமிக்க) செல்வத்தை, மக்கள் தம் விழிகளை உயர்த்திப் பார்த்துக் கொண்டிருக்கக் கொளளையடிப்பவன் இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி கொள்ளையடிக்கமாட்டான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 86 Buhari 6772

விபசாரியும், விபசாரனும் – இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.

(அல் குர்ஆன் 24:2)

Monday, May 18, 2015

வன் புணர்வு செய்யப்பட்ட நர்ஸ் 42 வருடங்களாக கோமாவில்!



1973 ஆம் வருடம் அருணா சண்பக் என்ற செவிலியர் சக மருத்தவ ஊழியர்களால் கற்பழிக்கப்பட்டார். அன்றிலிருந்து கோமாவில் தனது வாழ்நாளை கிட்டத் தட்ட 42 வருடங்களாக கழித்து வருகிறார். தற்போது அவரது உடல் நிலை மோசமாகி வருவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனது வாழ்நாளில் பெரும் பகுதியை மருத்துவ மனையிலேயே கழித்து விட்டார் அருணா. குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நீக்க வேண்டும் என்று குரல் எழுப்புபவர்கள் இந்த பெண்ணின் இழந்து போன வாழ்வுக்கு என்ன பதிலை வைத்திருக்கிறார்கள்?

இன்றைய செய்தியில் அவர் இறந்து விட்டதாக செய்தி வந்துள்ளது.

தகவல் உதவி

NDTV NEWS
May, 16, 2015

Friday, May 08, 2015

சொர்க்கத்தில் கிடைக்கும் பெண்களை பற்றி குர்ஆன் கூறுவதென்ன?

கேள்வி : குர்ஆனின் கூற்றுப்படி ஒரு ஆண் சொர்க்கத்தில் ‘ஹுர்’ என்னும் பெண்ணைத் துணையாகப் பெருவான். அப்படியெனில் சொர்க்கத்தில் ஒரு பெண்ணுக்குத் துணையாக என்ன கிடைக்கும்?

பதில்: 1. ‘ஹுர்’ பற்றி அருள்மறை குர்ஆன் குறிப்பிடுகிறது.

அருள்மறை குர்ஆனில் ‘ஹுர்’ பற்றி நான்கு இடங்களில் சொல்லப்படுகிறது. அத்தியாயம் 44 ஸுரத்துத் துகானின் 54வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது.

‘..மேலும் அவர்களுக்கு ஹுருல் ஈன்களை நாம் மணம் முடித்து வைப்போம்.’.

அத்தியாயம் 52 ஸுரத்துத் தூரின் 20வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது.
‘..மேலும் நாம் அவர்களுக்கு நீண்ட கண்களையுடைய (ஹுருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்.’.

அத்தியாயம் 55 ஸுரத்துர் ரஹ்மானின் 72வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது.
‘..ஹுர் (என்னும் அழகானவர்கள்) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்.’.

அத்தியாயம் 56 ஸுரத்துல் வாகிஆவின் 22வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது.
‘(அங்கு இவர்களுக்கு) ஹுருல் ஈன் (என்னும் நெடிய கண்களையுடையவர்கள்) இருப்பர்’.

2. ‘ஹுர்’ என்ற அரபி வார்த்தைக்கு ‘அழகிய கன்னியர்’ என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
அருள்மறை குர்ஆனை மொழிபெயர்த்த பல மொழிபெயர்ப்பாளர்கள் – குறிப்பாக உருது மொழியில் மொழி பெயர்த்த மொழிபெயர்ப்பாளர்கள் ‘ஹுர்’ என்ற அரபி வார்த்தைக்கு ‘அழகிய கன்னியர்’ என்று மொழியாக்கம் செய்துள்ளனர். ‘ஹுர்’ என்ற அரபி வார்த்தைக்கு ‘அழகிய கன்னியர்’ என்று பொருள் கொண்டால் – அது ஆண்களுக்கு மட்டும்தான் என்று ஆகிவிடும். அப்படியெனில் பெண்களுக்கு என்ன கிடைக்கும்?.

3. ‘ஹுர்’ என்ற அரபி வார்த்தையின் பொருள்.
‘ஹுர்’ என்ற அரபி வார்த்தை ‘அஹ்வார்’ என்ற அரபிவார்த்தைக்கும் (ஆண் பாலருக்கு பயன்படுத்தப்படக் கூடியது) ‘ஹவ்ரா’ என்கிற அரபி வார்த்தைக்கும் (பெண் பாலருக்கு பயன்படுத்தப்படக் கூடியது) உரிய பன்மையான (PLURAL) வார்த்தை ஆகும். குறிப்பாக சொர்க்கத்தில் இருக்கக் கூடிய அழகிய கண்களை உடைய ஆண்பாலரையோ அல்லது பெண் பாலரையோ குறிப்பிடுவதற்கு மேற்படி வார்த்தையை பயன்படுத்துவர்.
அருள்மறை குர்ஆன் வேறு சில வசனங்களில் சுவர்க்கத்தில் நீங்கள் ‘முத்தஹ்ரதுன்’ தூய்மையான மற்றும் புனிதமான ‘அஸ்வாஜ்’ – இணை, அல்லது துணை அல்லது ஜோடியினைப் பெருவீர்கள் என்று குறிப்பிடுகிறது. ‘முத்தஹ்ரதுன்’ என்கிற அரபி வார்த்தைக்கு தூய்மை மற்றும் புனிதம் என்று பொருள் கொள்ளலாம்.

அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 25வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றது:

‘(ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக: சதா ஓடிக் கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு: அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும் பொதெல்லாம் ‘இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது’ என்று கூறுவார்கள்: ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்திற்) கொடுக்கப்பட்டிருந்தன: இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைகளும் உண்டு: மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள். (அல்-குர்ஆன் 2:25)

அதே போன்று அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துல் நிஷாவின் 57வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றது:

(அவர்களில்) எவர்கள் ஈமான் கொண்டு நன்மையான காரியங்களைச் செய்கின்றார்களோ அவர்களை சுவனபதிகளில் புகுத்துவோம். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்: அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர்: அங்கு அவர்களுக்குப் பரிசுத்தமான துணைகளும் உண்டு: அவர்களை அடர்ந்த நிழலிலும் நுழையச் செய்வோம். (4:57)

மேற்படி அருள்மறை குர்ஆனின் வசனங்களிலிருந்து நாம் அறிவது என்னவெனில் ‘ஹுர்’ என்ற அரபி வார்த்தை குறிப்பாக எந்த பாலை (ஆண்பால் அல்லது பெண்பால்) குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப் படவில்லை என்பதுதான். அருள்மறை குர்ஆனை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த முஹம்மத் அஸாத் ‘ஹுர்’ என்ற அரபி வார்த்தைக்கு ளுpழரளந (கணவருக்கு மனைவியும் – மனைவிக்கு கணவரும்) என்று மொழியாக்கம் செய்துள்ளார். அருள்மறை குர்ஆனை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த யூசுப் அலி ‘ஹுர்’ என்கிற அரபி வார்த்தைக்கு ஊழஅpயnழைளெ (இணை அல்லது துணை ) என்று மொழியாக்கம் செய்துள்ளார். இன்னும் பல மார்க்க அறிஞர்களின் கருத்துப்படி – சொர்க்கத்தில் ஒரு ஆணுக்கு அழகிய கண்களை உடைய பெண்ணும், ஒரு பெண்ணுக்கு அழகிய கண்களை உடைய ஒரு ஆணும் இணையாக அல்லது துணையாக அல்லது ஜோடியாக கிடைப்பார்கள்.

4. பெண்கள் இவ்வுலகில் கிடைக்கப்பெறாத ஒன்றை, சொர்க்கத்தில் கிடைக்கப் பெறுவார்கள்.
அருள்மறை குர்ஆனில் ‘ஹுர்’ என்கிற அரபி வார்த்தை பெண்பாலை குறிப்பிடத்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை சில மார்க்க அறிஞர்கள் ஆணித்தரமாக நம்பி வருகிறார்கள். அவர்களுக்கு பதிலளிக்கும் முகமாக ஹதீஸ் ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் சொர்க்கத்தில் ஆண்களுக்கு அழகிய கண்களையுடைய பெண்கள் துணையாக கிடைப்பார்கள் எனில் – சொர்க்கத்தில் பெண்கள் எதை கிடைக்கப்பெறுவார்கள் என்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும்போது – சொர்க்கத்தில் பெண்கள் மனித கண்கள் எதுவும் கண்டிராத – மனித காதுகள் எதுவும் கேட்டிராத – மனித மனங்கள் எதுவும் எண்ணிப்பாராத ஒன்றினைப் பெறுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். மேற்படி பதில் சொர்க்கத்தில் பெண்கள் – மிகவும் சிறப்பான ஒன்றினைப் பெறுவார்கள் என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது.

மூல நூல்: டாக்டர். ஜாகிர் நாயக் அவர்களுடன் அனைத்து மதத்தவர்களும்
ஆங்கில மூலம்: டாக்டர் ஜாகிர் நாயக்
தமிழாக்கம்: அபூ இஸாரா

சில பதிவர்கள் இஸ்லாத்தை குறை கூறுகிறோம் என்ற பெயரில் ஆதாரமற்ற சில நபி மொழிகளை காட்டி 'பார்த்தீர்களா? இதுதான் இஸ்லாம்' என்கின்றனர். ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். குர்ஆனுக்கு மாற்றமாக எந்த நபி மொழி வந்தாலும் அது நபிகள் நாயகம் சொன்னதாக இருக்காது. ஏனெனில் குர்ஆனின் படியே தனது வாழ்வை அமைத்துக் கொண்டவர்கள் நபிகள் நாயகம். குர்ஆனுக்கு மாற்றமாக வரும் எந்த நபி மொழியும் யூதர்கள் புனைந்தது என்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் குர்ஆனின் படி நமது வாழ்வை அமைத்துக் கொள்வோமாக!

Friday, May 01, 2015

பாலஸ்தீன மக்களின் கல்வி தேடலில் உள்ள ஆர்வம்!



எத்தனை கொலைகள்: எத்தனை குண்டு வெடிப்புகள் எத்தனை காயங்கள்: எத்தனை வீடு இடிப்புகள்: அனைத்தையும் தங்களின் வெற்றிப் படிக்கட்டுகளாக மாற்றி இடிந்த பள்ளி அறையிலும் ஆர்வத்துடன் கல்வி கற்கும் பாலஸ்தீன மக்களிடம் நமக்கும் பாடம் இருக்கிறது. இத்தனை தோல்விகள் கண்டும், அமெரிக்காவும், இஸ்ரேலும், ஐரோப்பாவும் வஞ்சகமாக பாலஸ்தீனியர்களை பழி வாங்கினாலும் கிடைக்கும் சந்தர்பங்களை நன்கு பயன்படுத்திக் கொள்பவர்கள் பாலஸ்தீனியர்கள்.

தோற்றத்திலும் நிறத்திலும் நம் ஊர் பார்பனர்களை ஒத்திருக்கும் பாலஸ்தீனியர்கள் எப்பாடு பட்டாவது ஒரு டிகிரி எடுத்து விடுவார்கள். கல்வி கற்பதை அந்த அளவு நேசிப்பர். அதிகமாக அலுவலக வேலைகளையே விரும்புவர். சவுதியில் பல பாலஸ்தீனியர்களை நண்பனாக பெற்றவன். பழகுவதற்கு மிக இனிமையானவர்கள். மிக தைரியசாலிகள்: பெண்களும் ஆண்களுக்கு நிகராக படிப்பதிலும், வேலை வாய்ப்பை பெறுவதிலும் போட்டி போடுவர். அதே வேகத்தில் தொழுகையிலும் மிக கவனமாக இருப்பர்.

தோல்விகளையும் சிரமங்களையுமே வாழ்க்கையாக கொண்டுள்ள இந்த மக்களின் வாழ்வில் வசந்தம் வீச நம்முடைய பிரார்த்தனையை இறைவனிடத்தில் வைப்போம்.

'என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்து' எனக் கூறுவீராக!

குர்ஆன் 20:114

Thursday, April 30, 2015

'ஆண் குழந்தைக்கான லேகியம்' விற்றுக் கொண்டிருக்கும் பாபா ராம்தேவ்!



ஆயுர்வேத மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட 'புத்ரஜீவக் பீஜ்' (ஆண் குழந்தையை தரும் லேகியம்) பாபா ராம் தேவ் ஆசிரமத்தில் தயாரிக்கப்பட்டு தற்போது மார்க்கெட்டில் விநியோகிக்கப்படுகிறது. பாபா ராம் தேவ் ஹரியானா மாநிலத்தின் விளம்பர தூதுவராகவும் பிஜேபி அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே பெண் குழந்தைகள் கருவிலேயே சமாதியாக்கப்படுகிறது. பிறந்த பெண் குழந்தைகள் வறுமைக்கு பயந்து கழுத்து நெரித்து கொல்லப்படுகின்றன. இந்த நிலையில் அரசின் தூதுவர் ஒருவரே ஆண் குழந்தை பெற்றுக் கொள்ள லேகியம் விற்பது பலரின் விமரிசனத்துக்கு உள்ளாகியுள்ளது.

பெண் குழந்தைகளை காக்க வேண்டும் என்று ஒரு பக்கம் மோடி பிரசாரம் செய்து கொண்டிருக்க மறுபுறம் ஆண் குழந்தைகளை பெற்றுக் கொள்ள லேகியம் விற்பது எந்த வகை நியாயம். பெண் குழந்தை பெற்றுக் கொள்வது பாவம் என்பது பாபா ராம் தேவின் எண்ணமா? அறிவியல் ரீதியாகவும் இது மக்களை ஏமாற்றும் புரட்டு வேலை. பாராளுமன்றத்தில் ஜனதா தள் மூத்த தலைவர் தியாகி தான் ஒரு மருந்து கடையில் இந்த லேகியம் வாங்கியதாக அனைவருக்கும் காட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். பாராளுமன்ற உறுப்பினர் ஜெயா பச்சன் அந்த மருந்து பாக்கெட்டை சுகாதார மந்திரி நத்தாவிடம் அளித்தார். காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத் பேசும் போது 'ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் பெண் குழந்தைகள் கொடுமை படுத்தப்படும் சூழலில் அதனை தடுக்க வேண்டிய அரசு அதற்கு எதிர் மறையாக செயல்படுவது வருத்தத்தை அளிக்கிறது' என்றார். இந்த மூடப்பழக்கத்தை உடன் நிறுத்த வேண்டும் என்று பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.

ஹரியானாவில் இந்த மருந்தை வாங்க பலரும் போட்டியிடுகின்றனர். மருந்து கிடைப்பதும் அரிதாக இருக்கிறது. பாபா ராம் தேவ் மக்களின் மூடப் பழக்கத்தை பயன் படுத்தி அருமையாக கல்லா கட்டுகிறார். :-)

சாமியார்களின் ஆட்சியில் இன்னும் என்னவெல்லாம் கோமாளித் தனங்கள் நிறைவேறப் போகிறதோ பொறுத்திருந்து பார்போம்.

தகவல் உதவி
ஜீ நியூஸ்
30-04-2015

http://www.financialexpress.com/article/industry/companies/controversy-hits-ramdev-drug-promising-birth-of-male-child-hits-modis-beti-bachao-campaign/68323/

http://zeenews.india.com/news/india/uproar-in-rajya-sabha-over-baba-ramdevs-infertility-medicine-divya-putrajeevak-seed_1587536.html

Thursday, April 23, 2015

ஆப்கானிஸ்தானில் மதத்தின் பெயரால் பெண் கொடுமை!



ஆப்கானிஸ்தான் ஏற்கெனவே சோவியத் ரஷ்யாவாலும், அமெரிக்கர்களாலும் சிக்கி நிம்மதியிழந்து தவிக்கிறது. இது போதாதென்று இஸ்லாமிய மார்க்கத்தை சரியாக விளங்காத பல முல்லாக்கள் வேறு அந்த மக்களை கொடுமைபடுத்தி வருகின்றனர். அந்நாட்டு மக்களின் இஸ்லாமிய நம்பிக்கையை சில முல்லாக்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். தொடர்ந்த போர் காரணமாக பெரும்பாலான மக்களிடம் படிப்பறிவும் இல்லை. இஸ்லாமிய மார்க்க அறிவும் இல்லை. மந்திரம், தாயத்து போன்ற மூடப் பழக்கங்களில் அந்த மக்கள் மூழ்கி திளைக்கின்றனர். இதனைக் கண்டிக்க வேண்டிய மார்க்க அறிஞர்களோ மூடப்பழக்கங்களை மேலும் வளர்கின்றனர்.

சென்ற மாதம் 27 வயதே நிரம்பிய ஃபக்ருந்தா என்ற இளம் பெண்ணின் மேல் அபாண்டமாக பழியை சுமத்தினார் தாயத்துகளை விற்று பிழைப்பு நடத்தும் ஒரு மத வியாபாரி. இவரின் பேச்சை நம்பிய அந்த கிராமத்து மக்கள் அந்த பெண்ணை அடித்தே கொன்று விட்டனர். இது ஆப்கானிஸ்தான் முழுக்க சமூக ஆர்வலர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. குர்ஆனை விளங்காத மார்க்க அறிஞர்களின் ஃபத்வாக்களால் ஆப்கானிஸ்தானில் பல பெண்களின் வாழ்வு கேள்விக் குறியாகி உள்ளது.

முகத்தை முழுவதுமாக மூட வேண்டும்: கல்லூரிக்கு செல்லக் கூடாது: ஆண்களோடு பேசக் கூடாது என்று சகட்டு மேனிக்கு ஃபத்வாக்களை வாரி வழங்குவதில் இந்த முல்லாக்கள் கில்லாடிகள். இதற்கு குர்ஆனின் ஆதாரத்தையோ, நபிகளின் கட்டளைகளையோ சமர்ப்பிப்பதில்லை. இவர்களின் அடாவடிகளை தட்டிக் கேட்டால் இஸ்லாமிய நிந்தனையாகி விடுமோ என்ற அச்சத்தில் பலர் பலிகடா ஆக்கப்படுகின்றனர்.

'தாடியும் பெரிய தலைப்பாகையும் கட்டியவர்கள் எல்லாம் மார்க்க அறிஞர்களாகி விட முடியாது. குர்ஆனை சரியான முறையில் விளங்கியவர்களே மார்க்க அறிஞர்களாக முடியும். இதனை பொது மக்கள் நன்கு உணர வேண்டும்' என்று ஆப்கானின் மத விவகாரங்களுக்கான துணை மந்திரி தையுல் ஹக் ஆபித் மக்களுக்கு அறிவுருத்தி உள்ளார். படத்தில் அமர்ந்துள்ள கள்ள முல்லா ஜூம்மா கான் தனனை நாடி வரும் பக்தர்களுக்கு சகட்டு மேனிக்கு தட்டு தாயத்துகளை எழுதிக் கொடுத்த வண்ணம் உள்ளார். சிலருக்கு வெள்ளை பச்சை துணிகளில் அரபியில் எதையோ எழுதி ஊதி விட்டு தலையில் கட்டி விடுகிறார். மார்க்க அறிவு இல்லாத அந்த மக்களும் இதனை உண்மை என்று நம்பி தங்களின் பொருளாதாரத்தை இழக்கின்றனர்.

இதே போன்ற நிலைதான் முன்பு தமிழகத்திலும் இருந்தது. கடந்த 25 ஆணடுகளாக தொடர்ந்த பிரசாரத்தின் காரணமாக இன்று ஓரளவு மக்களிடையே மிகப் பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நான் சிறுவனாக இருந்தபோது எனது வீட்டிலேயே தட்டு தாயத்துகள் எல்லாம் பிரபலம். நாகூர் தர்ஹாவுக்கும் வருடம் ஒருமுறை பெண்கள் சென்று வந்து விடுவர். இன்று அந்த நிலை எனது தீவிர முயற்சியால் 90 சதவீதம் மாற்றப்பட்டு விட்டது. இதே போன்று ஒட்டு மொத்த தமிழக இஸ்லாமிய குடும்பங்களில் சத்தமில்லாத ஒரு புரட்சி ஏற்பட்டுள்ளது. மார்க்க அறிஞர்கள் எதைச் சொன்னாலும் அதற்கு குர்ஆனின் ஆதாரத்தை கேட்கும் மக்களாக தமிழக முஸ்லிம்கள் மாறி உள்ளனர். இதே போன்ற ஒரு எழுச்சி ஆப்கானிஸ்தானத்தில் ஏற்படாத வரை அந்த நாட்டுக்கு எந்த அரசியல் கட்சிகளாலும், அல்லது எந்த அண்டை நாடுகளாலும் விமோசனம் ஏற்பட வாய்பில்லை என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

தகவல் உதவி
சவுதி கெஜட்
23-04-2015

Wednesday, April 15, 2015

மகள் டாக்டர்- மகன் விமானி- தந்தையோ ஆட்டோ டிரைவர்!



மது ராதா என்ற பெண்மணி தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

'நான் ஆட்டோவில் ஏறினால் அந்த டிரைவர்களிடம் அதிகம் பேசுவதில்லை. சில நாட்களுக்கு முன் எனது தாயாரோடு கரூரில் ஒரு ஆட்டோவில் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த ஆட்டோவில் அவரது பிள்ளைகள் ஒருவர் மருத்துவராகவும் மற்றவர் விமானியாக வேலை செய்து வருவதாகவும் எழுதப்பட்டிருந்தது. இது எனக்கும் எனது தாயாருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. இதனை படித்த எனது தாயார் அந்த ஆட்டோ டிரைவரிடம் பேச்சுக் கொடுத்தார்.

எனது தாயார்: உங்களின் மகள் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவராக பணிபுரிவதாக எழுதியுள்ளீர்களே? அவர் எங்கு படித்தார்?

ஆட்டோ டிரைவர்: எனது மகள் அரசு பள்ளியில் எங்களது கிராமத்தில் படித்தாள். அனால் கடுமையாக உழைத்தாள். சென்ற மாதம் ஒரு மருத்துவரை திருமணமும் செய்து கொண்டுள்ளார். என்னுடைய மற்றொரு மகன் விமானியாக லண்டனில் வேலை செய்து வருகிறார். அவரும் திருமணம் முடித்து தனது குழந்தைகளோடு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

எனது தாயார்: தவறாக எண்ண வேண்டாம்! உங்களின் குழந்தைகள் நல்ல நிலையில் இருக்கும் போது இன்னும் ஏன் ஆட்டோ ஓட்டி வருகிறீர்கள்?

ஆட்டோ டிரைவர்: இந்த வேலைதான் எனது பிள்ளைகளுக்கு இவ்வளவு சிறந்த அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது. எந்த காலத்திலும் இந்த தொழிலை நான் மறக்க மாட்டேன். தற்போது எனது பொருளாதார நிலை சிறப்பாக உள்ளது. தற்பொது ஆட்டோ ஓட்டுதலை எனது ஹாபியாக செய்து வருகிறேன். வறியர்கள், வயதானவர்கள் போன்றோருக்கு உதவும் வகையில் எனது தொழிலை செய்து வருகிறேன். இதில் எனக்கு பூரண திருப்தி கிடைக்கிறது.

ஆட்டோ டிரைவரின் இந்த பதிலைக் கேட்டு நான் ஆச்சரியமடைந்து போனேன். வருங்காலத்தில் எனது பொருளாதார நிலை உயர்ந்தாலும் எனது பழைய வேலையையும் அங்கு பணியாற்றியவர்களையும் எக்காலத்திலும் மறக்கக் கூடாது என்ற படிப்பினையையும் பெற்றுக் கொண்டேன்."

-மது ராதா

தமிழில் மொழி பெயர்த்தது
சுவனப்பிரியன்

Tuesday, April 07, 2015

இந்து முண்ணனி ராம கோபாலனின் திட்டம் தவிடு பொடியானது!

நெகிழ வைத்த நிகழ்வு - மத மாற்றம்.... இது ஒரு மீள் பதிவு...

இந்து முண்ணனி தலைவர் ராம கோபாலன் தனது இயக்கத்தவருக்கு ஒரு அன்பு கட்டளையை சில ஆண்டுகளுக்கு முன்பு இட்டார். 'முஸ்லிம் பெண்களை காதலித்து கடைசியில் அவர்களை இந்துக்களாக மாற்றி விடுங்கள்' என்ற கட்டளையே அது. இந்து மதம் வளர இது ஒன்றே வழி என்று முடிவெடுத்துள்ளார் போல் தெரிகிறது. ஏனெனில் கொள்கையை சொல்லி அவரால் இந்து மதத்தை வளர்க்க முடியாது என்பது அவருக்கும் தெரியும். திராவிடர் கழக தலைவர் வீரமணி கேட்கும் பல கேள்விகளுக்கு இராம கோபாலனிடம் எந்த பதிலும் இன்று வரை இல்லை. எனவே ராம கோபாலன் இட்ட இந்த கட்டளையை நிறைவேற்ற பல இந்து முன்னணி இளைஞர்கள் இஸ்லாமிய பெண்களை படிக்கும் இடங்களில் சீண்டுவது ஆங்காங்கே அரசல் புரசலாக நடந்து வருகிறது.

அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் எனது கிராமத்துக்கு அருகில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு கிராமத்தில் இது போன்று கல்லூரிக்குச் சென்ற ஒரு இஸ்லாமிய பெண்ணை ஒரு இந்து முன்னணி இளைஞன் ஒருவன் எப்படியோ ஆசை வார்த்தைகள் காட்டி மயக்கி விட்டான். ஒரு மத போதகரின் மகள். வறிய குடும்பம். அந்த பெண்ணும் காதலில் வீழ்ந்து விட்டாள். தனது தந்தைக்கோ அல்லது தனது ஊர் ஜமாத்துக்கோ தெரிந்து விட்டால் பெரும் பிரச்னையாகி விடும் என்று கல்லூரியிலிருந்து அந்த இளைஞனோடு ஓடி விட்டாள் அந்த பெண்.

இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் அந்த ஊரே கொதித்தது. ஊரில் பல கட்டுப்பாடுகளையும் விதித்தனர். மத போதகரான அந்த பெண்ணின் தந்தையை பலரும் கேவலமாக பேச ஆரம்பித்தனர். அவரும் கூனிக் குறுகிப் போய் அவமானத்தில் தனது மகளை கை கழுவி விட்டு வாழ்க்கையை ஓட்டி வந்தார். அந்த பெண் ஓடிப் போன நேரம் ரமலான் மாதம். மிகவும் கட்டுப்பாடாக இஸ்லாமிய மார்க்க சூழலில் வளர்ந்த பெண் என்பதால் தொழுகையையும் நோன்பையும் அங்கு சென்றும் விடாமல் நிறைவேற்றி வந்துள்ளார். அந்த இந்து முன்னணி இளைஞனின் குடும்பம் இந்த பெண்ணின் நடவடிக்கைளை ஆச்சரியத்தோடு பார்க்க ஆரம்பித்தது. அந்த பையனின் தாயார் இரவில் எழுந்து நோன்பு வைக்க உணவுகள் சுடச் சுட தயார் செய்து கொடுத்துள்ளார். இஸ்லாமிய வீட்டு உணவுகள் எப்படி இருக்கும் என்று அக்கம் பக்கத்தில் விசாரித்து அந்த தாய் அந்த பெண்ணுக்கு எந்த குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டுள்ளார். புகுந்த வீட்டில் தான் எந்தக் குறையும் இல்லாமல் வாழ்ந்து வருவதாக தனது தாயாரிடம் அந்த பெண் கைபேசி மூலம் கூறியுள்ளார். இதனை எல்லாம் எனது ஒன்று விட்ட தங்கை என்னிடம் சொல்ல நானும் ஆச்சரியப் பட்டுக் கேட்டுக் கொண்டிருந்தேன்..

தனது திட்டம் நிறைவேறினாலும் இந்த பெண்ணின் இஸ்லாமிய நடவடிக்கைகளை மட்டும் அந்த இளைஞனால் மட்டுப் படுத்த முடியவில்லை. அந்த பெண்ணை எதுவும் சொல்லக் கூடாது என்று மாமியாரின் கட்டளை வேறு. நாட்கள் இப்படியே ஓடியது. தான் தவறிழைத்து விட்டோமோ என்று அந்த இளைஞன் சற்று சஞ்சலப்பட ஆரம்பித்தான். திடீரென்று ஒரு நாள் அந்த பெண் ஓதிக் கொண்டிருந்த தமிழ் குர்ஆனை வாங்கி படிக்க ஆரம்பித்தான் அந்த இளைஞன். அவனுள் இனம் புரியாத மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியது. தினமும் இரண்டு பக்கம் மூன்று பக்கம் என்று படிக்க ஆரம்பித்தான். படிக்கும் போது ஏற்படும் சந்தேகங்களை அந்த பெண்ணிடமும், இஸ்லாமிய நண்பர்களிடமும் கேட்டு தெளிவடைந்து கொண்டான். காலப் போக்கில் தானும் இஸ்லாமியனாக மாறி விட வேண்டும் என்ற உந்துதல் அவனது மனதில் நிழலாடியது. இது அவனது இந்து முன்னணி இயக்கத்துக்கு தெரிந்தால் கொலையும் செய்து விடுவார்கள் என்பதால் இரவோடு இரவாக தனது சொந்த ஊரை காலி செய்து விட்டு பெண்ணுடைய இஸ்லாமிய கிராமத்துக்கு வந்து நடு இரவில் கதவை தட்டினான்.

பெண்ணின் தகப்பனார் கதவை திறந்தார். அவனை பார்த்தவுடன் கோபத்தில் 'ஏண்டா என் குடும்பத்தை இப்படி சீரழிச்சே...' என்று கேட்கத் தொடங்கினார்.

'மன்னித்துக் கொள்ளுங்கள். அதற்கு பிராயச்சித்தம் தேடவே வந்துள்ளேன். நான் முஸ்லிமாக மாற தீர்மானித்துள்ளேன். உங்கள் மகளையும் நாளை அழைத்து வருகிறேன்.'

பெண்ணின் தந்தை சந்தோஷத்தோடு 'அப்படியா! எல்லா புகழும் இறைவனுக்கே! நாளை என் மகளை அழைத்து வந்து விடு! பள்ளி வாசலில் வைத்து ஊர் மக்கள் முன்னிலையில் உன்னை முஸ்லிமாக்கி விடுகிறோம்' என்றார்.

'உள்ளே வாங்க' மாமியாரும் ஆசையோடு அழைத்தார். பாலும் சில பலகாரங்களும் வைத்தனர். சாப்பிட்டு விட்டு 'நாளை வருகிறேன்' என்று சொல்லி சென்று விட்டான்.

மறுநாள் தனது மனைவியோடு அந்த இஸ்லாமிய கிராமத்தில் காலடி எடுத்து வைத்தான் அந்த இந்து முண்ணனி இளைஞன். பள்ளியில் வைத்து இஸ்லாமியனாக உறுதி மொழி எடுக்க வைக்கப்பட்டது. 'இறைவன் ஒருவன்தான் என்பதை உறுதியாக நம்புகிறேன். அந்த இறைவனைத் தவிர வேறு யாரையும் வணங்க மாட்டேன் என்றும் உறுதி கூறுகிறேன். முகமது நபி கடைசி இறைத் தூதர் என்றும் நம்புகிறேன்' என்று தமிழிலும் அரபியிலும் அந்த இளைஞன் சொல்ல வைக்கப்பட்டான். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற நமது தமிழர்களின் ஆதிகால கொள்கை அங்கு நடைமுறைப் படுத்தப்பட்டது. பின்னர் திருமணம் எனும் நிக்காஹ்வும் நடத்தப்பட்டது.

அந்த பள்ளியிலேயே இனிப்பு பலகாரங்கள் வழங்கி மிக சிம்பிளாக திருமணம் முடிக்கப்பட்டது. மறுநாளிலிருந்து ஒவ்வொரு இஸ்லாமியர் வீட்டிலும் ஒரு நாள் அந்த தம்பதிகளுக்கு விருந்தும் கொடுக்கப்பட்டது. இன்று அந்த தம்பதிகள் சந்தோஷமாக தங்கள் வாழ்வை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர்.

ராமதாஸைப் போல அந்த மக்களை தூண்டி விட்டு அந்த கிராமத்தை அழிக்க இங்கிருந்து யாரும் படையை அனுப்பவில்லை. வசதியுள்ள இந்த இஸ்லாமிய கிராமத்துக்கு அதனை செய்வதற்கு அதிக நேரமும் ஆகாது. ஆனால் இஸ்லாமியர்கள் பொறுமை காத்தார்கள். அந்த பொறுமைக்கு பலன் கிடைத்தது. ராம கோபாலனின் திட்டமும் தவிடு பொடியானது.

‘அவர்களும் சூழ்ச்சி செய்தார்கள். இறைவனும் சூழ்ச்சி செய்தான்; சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் சிறந்த சூழ்ச்சி செய்பவன் இறைவனேயாவான்’

(அல்-குர்ஆன் 3:54)

Saturday, April 04, 2015

'பகவத் கீதை' போட்டியில் முதலிடம் பெற்ற மரியம் ஆஷிஃப் சித்திகி!



ஆறாம் வகுப்பு படித்து வரும் பன்னிரண்டே வயதான மரியம் ஆஷிஃப் சித்திகி 'பகவத் கீதை' தொடர்பாக வைக்கப்பட்ட போட்டியில் முதலாவதாக வந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். 4500 பேர் கலந்து கொண்ட இந்த போட்டியில் இவர் முதலிடத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. iskcon என்ற அமைப்பு இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. உபி முதல்வர் அகிலேஷ் யாதவும் இந்த சிறுமியை வெகுவாக பாராட்டியுள்ளார். 'அனைத்து மதத்தின் கருத்துக்களையும் படிக்க வேண்டும். அனைத்து மதத்தவரையும் மதிக்க வேண்டும் என்ற எண்ணம் பரவலாக்கப்பட வேண்டும்' என்ற கருத்துப்பட தனது எண்ணத்தை வெளிப்படுத்தினார் அகிலேஷ் யாதவ்.

மரியம் ஆஷிஃப் சித்திக்கியின் பெற்றோர் இஸ்லாமிய மார்க்கத்தை முழுமையாக பின்பற்றி வாழ்ந்து வருபவர்கள். உலகில் உள்ள அனைத்து மத நூல்களும் ஒரு காலத்தில் இறைவனிடமிருந்து வந்தவையே! காலப் போக்கில் மனிதர்களால் மாசுபடுத்தப்பட்டதால் அதனை சரி செய்ய புதிய வேதங்களை இறைவன் மனிதக் குலத்துக்கு வழங்கி வந்தான். எனவே உலகில் உள்ள அனைத்து மத நூல்களையும் படிக்க வேண்டும். உலக மதங்களின் புனித வேதங்களின் ஒற்றுமையை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அதன் மூலம் உலக மக்கள் யாவரும் நமது சகோதரர்களே என்ற பரந்த மனப்பான்மைக்கு வந்தால் மக்களிடையே உள்ள குரோதங்கள் மறைய வாய்ப்புண்டு.

தகவல் உதவி
press trust of india
04-04-2015

ஆண்கள் பெண்கள் விஷயத்தில் பலகீனமானவர்களே - நந்திதா தாஸ்



அலுவலகங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் குறித்து கடந்த 2013-ம் ஆண்டு ஓர் ஆங்கில நாளிதழில் செய்திக் கட்டுரை ஒன்று வெளியானது. அதில், அலுவலக சூழல்களின் பெண்களின் நிலை தொடர்பான சமூக ஆர்வலரும் நடிகையுமான நந்திதா தாஸின் கருத்தும் இடம்பெற்றிருந்தது.

அந்தக் கட்டுரையின் தொடக்கத்தில், "எல்லா ஆண்களும் பலாத்காரர் ஆவதற்கான சாத்தியம் உடையவர்களே" என்று நந்திதா தாஸ் கூறியதாக அடிக்கோடிடப்பட்டிருந்தது.

இது சம்பந்தமாக சமூக வலைத் தளங்களில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இவரது கருத்துக்கு ஆதரவாக சிலரும் மற்றும் சிலர் இவரது கருத்து பிற்போக்குத் தனமானது என்றும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
04-04-2015

சமூகத்தில் எவ்வளவு பெரிய பொருப்பில் உள்ள ஆண்களும் பெண் என்று வந்து விட்டால் தங்களின் சமூக பொருப்பை மறந்து சாதாரணமான ஆண்களாக மாறி விடுவதைப் பார்க்கிறோம். சில சமூகங்களால் கடவுளுக்கு நிகராக போற்றப்படும் ஆசிரியர்களும் தங்களின் மாணவிகளோடு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு விடுவதை தினமும் நாம் பத்திரிக்கையில் பார்த்து வருகிறோம். வாழும் தெய்வங்கள் என்று போற்றப்பட்ட பல ஆதீனங்கள் பெண்கள் விஷயத்தில் தவறிழைத்து தங்களின் பொருப்பை மறந்து சிறை தண்டனை பெற்றதையும் நாம் வாழும் காலங்களிலேயே பார்த்தோம்.

எனவேதான் இஸ்லாம் ஆணையும் பெண்ணையும் கல்வி கற்பதாகட்டும், ஆன்மீகத்தில் ஈடுபடுவதாகட்டும் வேலைக்கு செல்வதாகட்டும் எந்த நிலையிலும் தனித் தனியாகவே செயல்பட தூண்டுகிறது. அத்தியாவசியமான சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்திருந்தாலும் கூடியவரை தனித் தனியே செயல்படுவதால் தவறுகள் நடப்பது தடுக்கப்படும் என்கிறது இஸ்லாம். ஏனெனில் ஆண் இயற்கையிலேயே பெண்களால் கவரப்படும் தன்மையிலேயே படைக்கப்பட்டுள்ளான். இதை உணராது ஆணையும் பெண்ணையும் தேவையில்லாமல் ஒன்றாக்கியதால்தான் சமூக சீரழிவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கணவன் மனைவிக்கிடையே சந்தேகங்களும் கொலைகளும் நடப்பது அதிகமாக வேலைக்கு செல்லும் பெண்கள் வீட்டிலேயே நடந்து வருவதை நாம் தினமும் செய்தித்தாள்களில் பார்த்து வருகிறோம். அணும் பெண்ணும் தேவையில்லாமல் கலப்பதால் பாதிப்பு பெண்ணுக்குத்தான் என்பதை ஏனோ பெண் உரிமை ஆர்வலர்கள் மறந்து விடுகின்றனர்.


“எந்தவொரு ஆணும் அந்நியப் பெண்ணோடு தனித்திருக்க வேண்டாம். ஏனெனில் மூன்றாவதாக ஷைத்தான்(தீய எண்ணங்களை நம் மனதில் விதைப்பவன்) இருக்கிறான்” என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள். (நூல்: அஹ்மத் 109)

“ஷைத்தான்(தீய எண்ணங்களை நம் மனதில் விதைப்பவன்) மனிதனின் இரத்த நாளங்களில் ஓடுகிறான்” என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: ஸஃபிய்யா (ரலி), நூல்: புகாரி 3281

Sunday, March 15, 2015

இஸ்லாமிய பெண்கள் தலையில் ஸ்கார்ஃப் அணியலாம் - ஜெர்மனி!



இஸ்லாமிய பெண்கள் ஆசிரிய பணிக்கு வரும் போது தலையில் முக்காடு அணிந்து வர முன்பு ஜெர்மனியில் தடை இருந்தது. இந்த தடையானது 2003 ஆம் ஆண்டு அமுலுக்கு வந்தது. ஜெர்மனியின் சுறுஹியில் உள்ள நீதி மன்றம் இதற்கான தடையை விதித்திருந்தது. விதிக்கப்பட்ட தடையை அந்த நீதிமன்றமே தற்போது விலக்கிக் கொண்டுள்ளது. ஜெர்மனிய முஸ்லிம்கள் இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனி தலையில் முக்காடு இட்டு பள்ளிக்கு வரலாம் பாடங்களும் நடத்தலாம்.

எதிர்க் கட்சியினர் வழக்கம் போல் 'ஜெர்மன் இஸ்லாத்தை நோக்கி செல்கிறதா' என்று கேட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாட்டை ஆள்பவர் ஒரு பெண்மணி என்பதால் பெண்மைக்கு கண்ணியம் கொடுக்க நினைக்கிறார். சார்ளி ஹெப்டோ துப்பாக்கிச் சூட்டில் முழு உலகமும் இஸ்லாத்துக்கு எதிராக நின்றபோது 'இஸ்லாம் ஜெர்மனியின் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மார்க்கம்' என்று லட்சக்கணக்கான மக்களுக்கு முன்பு ஜெர்மன் அதிபர் கூறியதை நாம் மறந்து விடவில்லை. இதனால் யூதர்கள் அவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தையும் நாம் அறிவோம். சிறந்த நாடு: சிறந்த தலைவர்.

தகவல் உதவி
சவுதி கெஜட்

Thursday, March 12, 2015

வங்கி அதிகாரி சென்னையில் காதலியைக் கொன்றார்!



ஆணும் பெண்ணும் கூடிய வரை படிப்பு, வேலை போன்ற இடங்களில் தனித் தனியாக செயல்படுங்கள். மேலும் காதல் என்ற பெயரால் திருமணத்துக்கு முன்பே ஆணும் பெண்ணும் வெளியே சுற்றாதீர்கள் என்று நாம் சொன்னால் நம்மை பிற்போக்கு வாதிகள் என்கிறார்கள். கீழே வரும் செய்தியை படித்து விட்டு யார் பிற்போக்குவாதிகள் என்ற முடிவுக்கு வருவோம்.

வங்கி அதிகாரி சென்னையில் காதலியைக் கொன்றார்

தினேஷும் அருணாவும் காதலித்து வந்தனர். தினேஷ் நேற்று முன்தினம் மாலை அருணாவுக்கு போன் செய்து, தன் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஸ்கூட்டரில் அருணா அங்கு சென்றுள்ளார். தினேஷின் வீட்டில் இருவரும் 3 மணி நேரத்துக்கு மேல் இருந்துள்ளனர். இரவில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் மோதலும் நடந்திருக்கிறது. வீட்டில் இருந்த கண்ணாடி பூந்தொட்டியை எடுத்து அருணாவின் தலையில் தினேஷ் அடித்திருக்கிறார். தொட்டியின் உடைந்த கண்ணாடித் துண்டாலும் அவரைத் தாக்கியுள்ளார். சிறிது நேரத்தில் அருணா இறந்துவிட்டார்.

காதல் எப்போது விபரீதம் ஆகிறது?

இருவர் இடையிலான காதல் உணர்வு எப்போது விபரீதமாகிறது? இதுகுறித்து சென்னை கீழ்ப்பாக்கம் மனோதத்துவ நிபுணர் சந்திரலேகா கூறியது:

‘இம்பல்ஸ் கன்ட்ரோல்’

காதலர்கள் இருவரில் ஒருவருக்கு சந்தேக எண்ணம் இருந்தாலோ, இருவரில் ஒருவர் ஏமாற்ற முயற்சி செய்தாலோ பிரச்சினை உருவாகிறது. இந்த சூழ்நிலையில் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் ‘இம்பல்ஸ் கன்ட்ரோல்’ கோளாறு ஏற்படுகிறது. அப்போது, கையில் கிடைக்கும் பொருளைக் கொண்டு மற்றவர்களைத் தாக்குவார்கள். வெளிநாடுகளில் துப்பாக்கி எளிதாக கிடைப்பதால், துப்பாக்கிச் சூடு நடக்கும். இங்கு கத்தி, சுத்தியல், அரிவாள்மனையால் தாக்குகின்றனர்.

பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியது:

தனிமை சந்திப்பு ஆபத்து

ஆண் நண்பர்களை பெண்கள் பொது இடங்களில் சந்தித்துப் பேசுவதால் பெரிய பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. தனிமையில் சந்திக்கும்போதுதான் கொலை, பாலியல் குற்றங்கள் நடக்கின்றன. ஆண்களை தனிமையில் சந்திக்காமல் தவிர்த்தாலே 99 சதவீத பிரச்சினைகள் ஏற்படாது. தனிமையில் சந்தித்து, பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உருவானால் முதலில் அந்த இடத்தில் இருந்து பெண்கள் வெளியேற வேண்டும். உடல் பலத்தில் ஆண்களைவிட பெண்கள் பலவீனமானவர்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். பிரச்சினை ஏற்பட்டால் முடிந்தவரை சத்தம் போட்டு மற்றவர்களை உதவிக்கு அழைக்க வேண்டும். சத்தம் போடத் தயங்கக் கூடாது. இக்கட்டான சூழலில் எதிராளி மீது வீசிவிட்டுத் தப்பிக்க, பெண்கள் எப்போதும் ‘பெப்பர் ஸ்பிரே’ தயாராக வைத்திருப்பது கூடுதல் பாதுகாப்பாகும்.

நன்றி தமிழ் இந்து நாளிதழ்
11-03-2015

இஸ்லாம் பெண்களை அடக்கி ஒடுக்கி வைக்கிறது என்று கூப்பாடு போடுபவர்கள் இந்த சம்பவத்துக்கு என்ன பதிலை வைத்துள்ளார்கள்? அந்த பெண்ணும் கொலையுண்டாள். கொலை செய்த இளைஞனின் வாழ்வும் போனது. இது ஒரு சம்பவம் மட்டும் அல்ல. தினமும் நாட்டில் எங்காவது ஒரு மூலையில் கொலை கற்பழிப்பு நடந்து கொண்டுதான் உள்ளது. பாதிப்படைவது அதிகமாக பெண்களே! இதனால்தான் இஸ்லாம் பெண்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது. வேலைக்கு சென்றாலும், படிக்க சென்றாலும் கூடிய வரை அந்நிய ஆடவர்களோடு தனித்திருப்பதை தவிர்த்துக் கொள் என்று கட்டளையிடுகிறது. இது அந்த பெண்களின் பாதுகாப்பைக் கருதியே!
----------------------------------------------------

"உரிய துணை (மஹ்ரம்) இன்றி ஒரு பெண், ஒரு பகல் ஓரிரவுக்குக் கூடுதலாகப் பயணிக்க வேண்டாம்" என்று நபி அவர்கள் வரையறை செய்திருக்கிறார்கள் (திர்மிதீ 1089, புகாரி 1088, முஸ்லிம் 2608)

"(மஹ்ரமல்லாத) ஓர் ஆணும் ஒரு பெண்ணும் தனித்திருந்தால் ஷைத்தான் அவர்களோடு மூன்றாமவனாகச் சேர்ந்து கொள்வான்"

திருமணம் செய்யத்தகாத ஆண் உறவினருடன் தவிர மூன்று நாட்கள் ஒரு பெண்மணி பயணம் மேற்கொள்ளக் கூடாது என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1086, 1087

தெரு விளக்குகளை உடைத்த கேரள பெண்கள்!



கேரளாவில் ஈ.எம்.எஸ்.நம்பூதிரி முதல்வராக இருந்த சமயம் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்தது.

ஒரு கிராமத்தில் ஆண்கள் அனைவரும் கூடிப்பேசி தெருவிளக்குகள் அமைத்தார்கள். அன்றிரவே அந்தக் கிராமத்து பெண்கள் அந்த விளக்குகளை உடைத்தெறிந்தார்கள்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இரவில் வெளிச்சம் அதிகம் இருந்தால் பெண்களால் தங்களின் இயற்கைத் தேவைகளுக்காக வெளியில் செல்ல முடியாதென்பதால்தான் தெருவிளக்குகளை உடைத்துவிட்டதாக தெரிவித்தார்கள். இதைத் தெரிந்து கொண்ட இ.எம்.எஸ். அந்தக் கிராம சபைக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘உங்கள் கிராமத்தில் முதலில் கட்டப்பட வேண்டியது கழிப்பிடம்தான். சபையில் ஆண்கள் மட்டுமே எல்லா முடிவுகளையும் எடுப்பதால் நம்மால் பெண்களின் பிரச்சனைகளை புரிந்துகொள்ள முடியவில்லை. நாம் ஆண்களின் சபையாக சமூகத்தை வைத்திருக்கிறோம். எனவே அடுத்தக் கூட்டத்தில் இருந்து பெண்களையும் கலந்து பேசுங்கள். அவளால் தான் அவளது தேவைகளைப் பேச முடியும்’ என்று எழுதினார்.

இந்த சம்பவத்திலிருந்து நமக்கு தெரிவது இந்த நாட்டுக்கு தற்போது சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் தேவையில்லை. நம் நாட்டு பெண்களுக்கு முறையான கழிப்பிட வசதிதான் முதல் தேவை. . இந்து மத காவலராக தன்னைக் காட்டிக் கொள்ளும் நரேந்திர மோடி முதலில் கழிவறைகள் நாடு முழுக்க இலவசமாக கட்டிக் கொடுக்க முன் வரட்டும். பெண்களின் பிரச்னையை புரிந்து கொள்ளட்டும்.

Sunday, March 08, 2015

நாட்டுக்காக உயிரிழந்து இன்று பெண்ணுக்காகவும் உயிரிழந்த குடும்பம்!





நாகாலாந்த் திமாபூர் சிறைச் சாலையிலிருந்து சையத் சரீபுத்தீன் கான் என்ற இளைஞரை பொது மக்களே சிறையை உடைத்து அவரை வெளியே இழுத்து அடித்து கொன்றது ஞாபகமிருக்கலாம். ஒரு பெண்ணை பலமுறை கற்பழித்தார் என்பது இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. இவர் பங்களாதேஷிலிருந்து ஊடுருவியவர் என்று இவரை கொன்றவர்கள் பத்திரிக்கைக்கு பேட்டியளித்தனர். இது சென்ற வியாழக் கிழமை நடந்தது.

ஆனால் நேற்றும் இன்றும் செய்திகள் வேறு விதமாக வருகிறது. அஸ்ஸாம் முதல்வர் தருண் 'அந்த பெண் கற்பழிப்பு செய்யப்படவில்லை என்று மருத்துவ அறிக்கைகள் கூறுகிறது' என்று சனிக்கிழமை அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அந்த பெண் கற்பழிக்கப்படவில்லை என்றால் அவரை சிறையில் அடைத்தது ஏன்? பெரும் கும்பல் சிறைக் கதவை உடைத்து அவரை கொன்றது ஏன்? என்ற கேள்வி எழுகிறது. பல நாட்களாக பல முறை யாராவது ஒரு பெண்ணை கற்பழிக்க முடியுமா? அந்த பெண்ணின் அனுமதியோடுதான் அந்த இளைஞன் அவளோடு சல்லாபித்திருக்கிறான். இந்த செய்தி உண்மையாக இருந்தால் இது ஒரு விபசாரமே. இது கற்பழிப்பல்ல. சம்பந்தப்பட்ட பெண்ணும் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறாள்.

கொல்லப்பட்ட சர்புத்தீன் கானின் சகோதரர் ஜமாலுத்தீன் கான் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் பின் வருமாறு கூறுகிறார்:

'இந்த அரசு காட்டுமிராண்டி தனமாக நடந்து கொள்கிறது. அரசியல் காரணங்களுக்காக எனது சகோதரன் பலிகடா ஆக்கப்பட்டுள்ளான். வன் புணர்வு செய்யப்பட்டதாக சொல்லப்படும் பெண் எனது சகோதரனின் மனைவியில் பெரியப்பா மகளாவார். நெருங்கிய உறவினர். மருத்துவ அறிக்கையும் இவர் வன்புணர்வு செய்யப்படவில்லை என்று கூறுகிறது.

அடுத்து எங்கள் குடும்பம் பங்களாதேஷிலிருந்து புலம் பெயர்ந்த வந்தேறிகள் என்ற செய்தியும் பரப்பப்படுகிறது. எங்கள் குடும்ப உறுப்பினர்கள் பரம்பரையாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறோம். எங்களின் தந்தை சையது ஹூசைன் கான் இந்திய விமான படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். எனது தாயாருக்கு இன்று வரை அதன் பென்ஷன் வந்து கொண்டிருக்கிறது. எனது மற்றொரு சகோதரன் இமாமுத்தீன் ராணுவத்தில் வேலை செய்து 1999ல் கார்கில் போரில் பாகிஸ்தான் ராணுவத்தால் கொல்லப்பட்டார். நாட்டைக் காக்க உயிர் துறந்த எனது குடும்பத்தை அநியாயாமாக அந்நிய தேசத்தவர் என்று எப்படி கூறுகிறீர்கள்? நாங்கள் அஸ்ஸாமின் கரீம்கஞ்ச் மாகாணத்தில் பல தலைமுறைகளாக வசித்து வருகிறோம்' என்கிறார்.

நாகா கவுன்சிலின் ஜெனரல் செகரட்டரி ஜோஸ் நாகா கூறுகிறார் 'அவர்களிடம் முறையான ஆவணங்கள் இருந்தாலும் நம்பப் போவதில்லை. அவர்கள் வந்தேறிகளே' என்கிறார். அதாவது இவர்கள் எதனை நினைக்கிறார்களோ அதுதான் சட்டமாக்கப்பட வேண்டுமாம். கூர்காலாந்து அமைக்க தடையாக இருப்பது முஸ்லிம்களே! சவுதியில் பல நேபாளிகள், நாகாலாந்து மக்கள் பலரும் இஸ்லாத்தை ஏற்ற வண்ணம் உள்ளனர். இது போல் அஸ்ஸாம் நாகாலாந்து நேபாளம் போன்ற மாநிலங்களிலும் மக்கள் இஸ்லாத்தில் இணைந்த வண்ணம் உள்ளனர். இது போன்ற சம்பவங்களின் மூலம் இஸ்லாத்தின் பெயரை களங்கப்படுத்தி ஒட்டு மொத்த மக்களையும் இஸ்லாத்துக்கு எதிராக திருப்பி விடும் யுக்தியாகவே இதனை நான் பார்க்கிறேன்.

எப்படியோ கூட்டு மனசாட்சியின் படி அப்ஸல் குருவை தூக்கிலிட்டது போல் ஷர்புத்தீன் கானையும் அடித்தே கொன்று விட்டது இந்திய அரசியல்.

வாழ்க இந்திய அரசின் கூட்டு மனசாட்சி தத்துவம்.

தகவல் உதவி:
என்டிடிவி
07-03-2015