Followers

Monday, January 04, 2016

பாத்திரம் அறிந்து பிச்சை இடுவோமாக!

"ஒரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களுக்காக மக்களிடம் அலைபவன் ஏழையல்லன்; ஏழை யாரெனில் அவன் தன் தேவையைப் பூ...

Posted by Nazeer Ahamed on Monday, January 4, 2016


"ஒரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களுக்காக மக்களிடம் அலைபவன் ஏழையல்லன்; ஏழை யாரெனில் அவன் தன் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள எச்செல்வத்தையும் பெற்றிருக்க மாட்டான்; பிறரும் அவனுடைய நிலையை அறிந்து தர்மம் செய்ய மாட்டார்கள், தானும் வலியச் சென்று கேட்கமாட்டான்." இத்தகையவனே உண்மையான ஏழையாவான்

(புஹாரி-1479)

இறைத்தூதர் நபி அவர்கள், மிம்பர் (வெள்ளிக்கிழமை ஜும்மா அன்று சொற்பொழிவு மேடை) மீதேறி, தர்மம், சுயமரியாதை, யாசகம் ஆகியவற்றைப் பற்றி உபதேசம் செய்துவிட்டு, ‘உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்ததாகும்; உயர்ந்த கை என்பது தர்மம் செய்யக்கூடியதும்; தாழ்ந்த கை என்பது யாசிக்கக் கூடியதும்” என்றும் கூறினார்கள்.

(புஹாரி-1429)

என்ன ஒரு அருமையான விளக்கம். இரண்டு நபி மொழிகளையும் நன்றாக உள் வாங்கிக் கொண்டால் பிச்சை எடுப்பவர்கள் குறைவார்கள். உண்மையிலேயே வறுமையில் வாடுபவர்கள் பலனடைவார்கள்.

பிச்சை போடுபவர்கள் கூட சில்லரை பணங்களாக மாற்றி வைத்துக்கொண்டு 100 அல்லது 200 பேருக்கு தர்மம் செய்கின்றனர். இது பிச்சைக்காரர்களை அதிகம் உருவாக்கும். ஒவ்வொரு வசதியுள்ளவனும் தனது வாழ்நாளில் ஒரு ஏழையை தேர்ந்தெடுத்து அவனது வாழ்வாதாரத்துக்கு 10000 அல்லது 20000 என்று கொடுத்து அவனை பிச்சை எடுக்கும் தொழிலிருந்து விடுவிக்க முயற்சிக்க வேண்டும். ஜகாத், பைத்துல் மால் என்று இஸ்லாம் கடமையாகவே ஆக்கியது இதனை கருத்தில் கொண்டுதான்.

No comments: