Followers

Sunday, January 03, 2016

ஜாகிர் நாயக்கிடம் இதை நான் எதிர்பார்க்கவில்லை!

மிகச் சிறந்த அறிவாளி! குர்ஆன் வசனங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர். ஆங்கிலத்தில் நல்ல புலமை. உர்து, சமஸ்கிரதம் போன்ற ம...

Posted by Nazeer Ahamed on Sunday, January 3, 2016

மிகச் சிறந்த அறிவாளி! குர்ஆன் வசனங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர். ஆங்கிலத்தில் நல்ல புலமை. உர்து, சமஸ்கிரதம் போன்ற மொழிகளையும் சரளமாக பேசக் கூடியவர். இந்து மத புராணங்களை வசன எண் முதற் கொண்டு மனனமாக சொல்லும் திறன் படைத்தவர். ஆயிரக்கணக்கான மக்கள் இவருடைய பேச்சின் மூலம் கவரப்பட்டு இஸ்லாத்தை ஏற்றுள்ளனர்.

இவரது மாற்று மதத்தவருக்கான கேள்வி பதில் நிகழ்ச்சியில் இரு முறை நேரிடையாக ரியாத்தில் கலந்து கொண்டுள்ளேன். நேரிடையாக பார்த்து பேசியும் இருக்கிறேன். சவுதி நாட்டவர் இவருக்கு ஏக மரியாதையை கொடுக்கின்றனர். உலகம் முழுக்க இதுதான் நிலை.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஒருவருக்கு ஷாருக்கான் போல் சல்மான் கான் போல் மேலிருந்து பறந்து வர வேண்டும் என்ற ஆசை எப்படி வந்தது என்று ஆச்சரியப்படுகிறேன். இவருடைய உருவத்தைப் பார்த்தோ அல்லது இவரது மேடை அலங்காரங்களைப் பார்த்தோ இந்த கூட்டம் கூடவில்லை. ஜாகிர் நாயக் பேசுவது இறைவனின் வார்த்தை. அதற்கு அழகிய முறையில் விளக்கம் கொடுக்கிறார் என்பதால்தான் மரியாதை தருகிறோம். வானத்திலிருந்து இறங்குவது போல் கோமாளித் தனங்களை செய்ய ஆரம்பித்தால் இருக்கும் மதிப்பு போய் விடும் என்று சொல்லி வைக்கிறோம். ஜாகிர் நாயக்கோடு தொடர்பில் இருக்கும் நண்பர்கள் இது விஷயமாக பேசி அவரை நேர்வழிப் படுத்துவார்களாக.

---------------------------------------

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
பேரீச்சம் நாறினால் நிரப்பப்பட்ட பதனிடப்பட்ட தோலே நபிகள் நாயகம் அவர்களின் படுக்கை விரிப்பாக இருந்தது.
நூல்: புகாரி - 6456.

அபூ புர்தா(ரஹ்) அறிவித்தார்.
ஆயிஷா(ரலி) எங்களிடம் ஒட்டுப் போட்ட (கம்பளி) ஆடை ஒன்றை எடுத்துக் காட்டி, 'இதை உடுத்திக் கொண்டிருக்கும்போது தான் நபிகள் நாயகம் அவர்கள் மரணமடைந்தார்கள்" என்று கூறினார்கள்.
நூல்: புகாரி - 3108.

No comments: