Followers

Saturday, July 03, 2021

இஸ்லாமும் மனிதநேயமும்


 


இஸ்லாமும் மனிதநேயமும்

 

ஆக்சிஜன் அளவு குறைவானதால் பதட்டத்துடன் ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறி அந்த இந்து பெண்ணை காப்பாற்றியுள்ளார் ஒரு முஸ்லிம் இளைஞர். அந்த பெண் அதனை நெகிழ்வோடு கூறுகிறார். நான் நலமானவுடன் அந்த இளைஞரை நன்றி சொல்ல செல்லில் தொடர்பு கொண்டேன். ஆனால் அவர் எடுக்கவில்லை. வேறெங்கோ யாருக்கோ உதவிக் கொண்டிருப்பார் என்று நினைத்துக் கொண்டேன் என்கிறார்.

 

எந்த சுயநலமும் இன்றி பொதுநலம் ஒன்றே குறிக்கோளாக கொண்டு செயல்படும் இத்தகைய ஆரோக்கியமான சூழலை கெடுக்கத்தான் சில சக்திகள் மும்முரமாக இயங்கிக் கொண்டுள்ளன. நாம் அவர்களை இனம் கண்டு சமூகத்திலிருந்து தூரமாக்க வேண்டும். மத நல்லிணக்கத்தில் இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக நாம் திகழ வேண்டும்.

--------------------------------------------

மனிதர்களுக்கு நாம் உதவி செய்வதை இறைவனுக்கு உதவி செய்வதைப் போன்றும், மனிதனுக்கு நாம் இரக்கம் காட்டாவிட்டால் இறைவனை வெறுத்துத் தள்ளியதைப் போன்றும் இறைவன் எடுத்துக் கொள்கிறான். இதை உணராத மக்கள் செல்வங்களை உண்டிய­ல் போடுகிறார்கள். பிச்சைக்காரனாக இருந்தாலும் அவனிடத்திலும் மனித நேயத்துடன் நடக்க வேண்டும் என்று இஸ்லாம் நமக்குக் கற்றுத் தருகிறது. ஏழைக்கு உதவுவது இறைவனுக்கு உதவுவதைப் போன்றது என்று இஸ்லாம் நமக்கு பின்வரும் செய்தியின் மூலம் உணர்த்துகிறது.

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில், ''ஆதமுடைய மகனே! நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை'' என்று கூறுவான். அதற்கு அவன், ''என் இறைவா! நீ அகிலத்தின் இறைவன். உன்னை நான் எப்படி நலம் விசாரிக்க முடியும்?'' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ''என்னுடைய இந்த அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான். ஆனால் நீ அவனை நலம் விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நலம் விசாரித்திருந்தால் அங்கே நீ என்னைக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா?

 

ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் உணவு வேண்டினேன். ஆனால் நீ எனக்கு உணவு அளிக்கவில்லை'' என்று கூறுவான். அதற்கு அவன், ''என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி என்னால் உணவளிக்க முடியும்?'' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ''என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் உணவு வேண்டி வந்தான். ஆனால் அவனுக்கு நீ உணவு கொடுக்கவில்லை. அவனுக்கு நீ உணவளித்திருந்தால் எனக்கு இதைச் செய்ததாகக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா?

 

ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டேன். ஆனால் நீ எனக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை'' என்று கூறுவான். அதற்கு அவன், ''என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி நான் தண்ணீர் கொடுக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ''என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டான். ஆனால் நீ அவனுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை. அவனுக்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அதை எனக்குக் கொடுத்ததாக நீ கண்டிருப்பாய்'' என்று கூறுவான்.

 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: முஸ்­லிம் (4661)

 

No comments: