அன்புள்ள ரஜினிகாந்த்,
'அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவது வரலாறு ,' என்று அங்கே பயணித்து வந்த நீங்கள் தெரிவித்திருக்கிறீர்கள். அது உண்மைதான். அங்கே இப்போது ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது என்பதும் கட்டி முடிந்த பின்னர் கோலாகலமாக திறக்கப்படப் போகிறது என்பதும் வரலாற்றில் இடம் பெறத்தான் போகிறது. ஆனால் இந்த அத்தியாயத்துக்கு முன்பு வேறு சில அத்தியாயங்களும் வரலாற்றில் ஏற்கனவே இடம் பெற்று விட்டன. அந்த அத்தியாயங்களை நீங்கள் கண்டிப்பாக படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். மதவெறி கொண்ட லட்சக்கணக்கான இந்துத் தீவிரவாதிகளால் அங்கே இருந்த ஒரு பண்டைய மசூதி இடிக்கப்பட்ட அத்தியாயம். அதற்கு முன்பும் பின்பும் நிகழ்ந்த கலவரங்களில் தேசமெங்கும் சுமார் ஐந்தாயிரம் பேர் கொலையுண்ட அத்தியாயம். அதற்குப் 'பழி வாங்குவதற்காக' மும்பையில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் நூற்றுக்கணக்கான பேர் மடிந்து போன அத்தியாயம். இந்த அத்தியாயங்கள் எதுவுமே உங்களுக்குத் தெரிந்திராமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. அது தெரிந்தும் அந்த இடத்துக்குப் போய் வழிபாடு நடத்தி விட்டு வந்திருக்கிறீர்கள் எனில் ஒரே சாத்தியக்கூறுதான் தெரிகிறது: உங்களுக்கு அந்த ரத்த அத்தியாயங்கள் எல்லாமே உவப்பானதாகவே இருந்திருக்கின்றன. ராமர் பெயரைச் சொல்லி நடந்த அத்தனை படுகொலைகளும் உங்களுக்கு மன நிறைவையே தந்திருக்க வேண்டும். 'அவனுங்களுக்கு நல்லா வெச்சோம்யா ஆப்பு!' என்றுதான் தோன்றி இருந்திருக்க வேண்டும். உங்களுக்கு அப்படித்தான் தோன்றியதா சார்? காரணம், அந்த இடத்தில் தற்போது எழும்பி வரும் கட்டிடத்துக்குப் பின் வீழ்ந்திருந்த உயிர்களுக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ளாமல் உங்களால் அங்கே நிற்க முடியாது திரு ரஜினி. நீங்கள் மட்டுமல்ல, நாளை அங்கே வழிபடப் போகும் ஒவ்வொருவருக்கும் அது பொருந்தும். காரணம் உங்களைப் போன்றோருக்காகத்தான் அந்த மாபெரும் வரலாற்றுக் குற்றம் நிகழ்த்தப்பட்டது. அத்தனை உயிர்கள் வீழ்ந்து போயின. இந்து மதத்தின் மீதான 'அமைதி மதம்' எனும் பொய்ப் பிம்பம் நொறுங்கிப் போனது. ஒன்று மட்டும் புரியவில்லை: அங்கே செல்ல முடிந்ததன் மூலம் உங்கள் நீண்ட நாள் கனவு நிறைவேறியதாக சொல்லி இருக்கிறீர்கள். அந்தக் கனவு எது: அங்கே எழும்பி வரும் அந்தக் கட்டிடமா, அல்லது அதற்கு வித்திட்ட ஆயிரக்கணக்கானோரின் மரணமா? என்று தெளிவாக சொல்லவில்லை. இரண்டில் ஏதுவாக இருப்பினும் கனவு நிறைவேறியதற்கு வாழ்த்துகள் சார். இதே போல நீண்ட நாளாக நிறைவேறாத வேறு கனவுகள் நிலுவையில் இருந்தால் உங்கள் புதிய குருநாதர் யோகி ஆதித்யநாத் அவர்களிடம் சொல்லி வையுங்கள். நிறைவேற ஏற்பாடு செய்வார். இவண் உங்கள் ரசிகன் ஸ்ரீதர் சுப்ரமணியம்'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Tuesday, August 22, 2023
Monday, August 21, 2023
Saturday, August 19, 2023
முகமது அலியின் சுயமரியாதை..
முகமது அலியின் சுயமரியாதை...![]()
பெரும்பாலும் அலி தன் வெற்றிக்கு தேவையான அளவை விட ஒரு அடியும் எதிராளி மேல் விழக்கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பவர்.
எதிராளி மயங்கி விழும்போது அடிக்க மாட்டார்,
விழுந்து எழும் வரை சீண்ட மாட்டார். எதிராளிக்கு முடியாத நிலை வரும்போது அவரே நடுவரிடம் போட்டியை முடிக்க வேண்டுகோள் வைப்பார். அதனாலயே அலியிடம் தோல்வியுற்றவர்கள் கூட அவரை பெரிதும் நேசித்தனர்.
உலக பிரசித்தி பெற்ற George foreman என்னும் ஜாம்பவான் உடனான சண்டையில் தோல்வியுற்ற foreman "the greatest of all his
punch was the one not landed, when i was falling" என்பார்.அதாவது ஃபோர்மேன் நாக்அவுட் ஆகி நிலைதடுமாறி கீழே விழுகின்ற நேரத்தில் அலி முழு வேகத்தில் கையை ஓங்கி குத்த செல்வார்,ஒரு விநாடி சுதாரித்து ஃபோர்மேனின் நிலை கண்டு ஓங்கிய கையை அப்படியே நிறுத்தி விடுவார். அதை தான் ஃபோர்மேன் சிலாகித்து கூறுவார்.
இப்படியாகபட்ட அலி ஒரே ஒரு போட்டியில் மட்டும் எதிராளியை அவரின் நிலைக்கும் மீறி கடுமையாக தண்டித்தார்.நினைத்தால் நாக்அவுட் செய்து போட்டியை முடித்திருக்க முடியும்,ஆனால் அலி அதை செய்யவில்லை,என முகம் சுழித்தவாறே பத்திரிக்கைகள் கூட எழுதின.
போட்டிக்கு முன் நடத்தபடும் பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே"உன்னை நான் கடுமையாக தண்டிப்பேன்"என்ற சூளுரைத்தார்.
ஏன் அப்படி செய்தார் ?
ஒரே ஒரு காரணம் மட்டும் தான்.Terell,அலியை "முஹம்மது அலி"என்று தற்போதைய பெயரை சொல்லி அழைக்காமல் அவருடைய பழைய பெயரான Cassius clay என்று அழைத்தார்.பல தடவை அலி தன்னுடைய தற்போதைய பெயரை கூறுமாறு வற்புறுத்தியும் Terrell மறுத்துவிடுவார்.அது மட்டும் தான் காரணம்.
போட்டி நடைபெற்றது.அந்த போட்டியில் ஒவ்வொரு அடியின்போதும்"say my name","What is
my name" என்று ஆக்ரோசமாக தான் சண்டையிட்டார்.அந்த சண்டையே "whats my name fight” என்றே அடையாளப்பட்டு போனது.
அப்படி என்ன பழைய பெயரின் மீது அலிக்கு இவ்வளவு கோபம் ?
அந்த காலக்கட்டத்தில் ஒரு வழக்கம் கடைபிடிக்கபட்டு வந்தது.கருப்பினத்தவர்கள் பண்ணை அடிமையாக பயன்படுத்தபட்டு வந்தனர்,அப்படி எஜமானர்களுக்கு விசுவாசமான அடிமையாக வாழ்ந்த கருப்பர்களை விருப்பத்தின் பெயரில் விடுதலை செய்வார்கள் முதலாளி வெள்ளையர்கள்.
அப்படியாக விடுதலை பெற்ற கருப்பர்கள் தன் பெயருக்கு பின்னால் அந்த வெள்ளை எஜமானரின் பெயரை சேர்த்துக்கொள்ள வேண்டும்.அந்த பெயரே அவரது சந்ததியினருக்கு குடும்ப பெயராகவும் தொடரும்.அப்படி விடுதலை பெற்ற குடும்பம் தான் அலியின் குடும்பமும்,விடுதலையளித்த எஜமான வெள்ளையரின் பெயர் தான் "Clay".
அந்த பெயரை அடிமை சின்னத்தின் அடையாளமாக பார்த்தார் அலி.உண்மையில் அது அடிமைச்சின்னம் தான்.அதனாலயே தன்னுடைய பெயரை முதலில் Cassius X என்று மாற்றினார்.இது Malcom X உடன் ஏற்பட்ட நெருங்கிய நட்பால் மாற்றிய பெயர்.பின்னர் இஸ்லாமிய மதம் மாறிய பின் தன் பெயரை முஹம்மது அலி என்று மாற்றிக்கொண்டார்.
இந்த பெயரை கூற மறுத்து,அடிமை பெயரை கூறிய Terrell ஐ தான் அலி தண்டித்தார்.வெறும் பெயருக்கு கூட அலி அத்தனை போராட வேண்டியிருந்தது.
வெள்ளையர்களுக்கு எதிராக செயல்படுவதாக அவரை கைது செய்ய FBI திட்டம் தீட்டியது,அவரை பல நாட்களாக கண்காணித்தும் வந்தது.இத்தனையும் தனி ஆளாக எதிர்கொண்டார்.அலி அடிமைத்தனங்களை உடைத்தெறிந்தவர்.அவர் ஒரு கலகக்காரன்,
புரட்சியாளன்..
Ali is not just a
sportsperson,
he is a rebellion...
Perks:
முத்தமிழ் காவலரிடம் ஆசி பெற்ற
#முகம்மதுஅலி ..
