இறைவன் துல்கர்னைன் என்ற ஒருவரைப் பற்றி குர்ஆனிலே விவரிக்கிறான். இவரைப் பற்றி ஊர்ஜிதமாகாத பல தகவல்கள் இன்று வரை இருந்து வருகிறது. இது பற்றி நிறையவே இங்கு விவாதித்து இருக்கிறோம். இறைவன் குர்ஆனிலே இவரைப் பற்றி என்ன கூறுகிறான் என்று பார்ப்போம்.
“(நபியே!), இவர்கள்(யூதர்கள்) உங்க ளிடம் துல்கர்னைன் பற்றி கேட்கிறார்கள். நீங்கள் கூறுங்கள்: நான் அவரைப் பற்றிய சில விபரங்களை உங்களுக்கு எடுத்துச் சொல்வேன்.
திண்ணமாக நாம் அவருக்கு பூமியில் ஆட்சியதிகாரத்தை அளித்திருந்தோம். மேலும், அவருக்கு எல்லாவிதமான சாதனங் களையும் வாய்ப்புகளையும் வழங்கியிருந் தோம்.”
அவர் இரு மலைகளுக்கிடையே சென்றார். அப் போது அவற்றின் அருகில் எந்தப் பேச்சையும் விளங்கிக் கொள்ள முடியாத ஒரு சமுதாயத்தார் வாழ்வதைக் கண்டார். அம்மக்கள் கூறினார்கள்: துர்கர்னைனே! யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார் இந்நாட்டில் (பரவலாக) அராஜகத்தை விளைவிக்கின்றார்கள். எனவே, நீங்கள் எங்களுக்கும், அவர்களுக்கும் இடையே ஒரு தடுப்புச் சுவரை எழுப்பித் தருவதற்காக நாங்கள் உமக்கு ஏதேனும் கப்பம் செலுத்த வேண்டுமா?. அதற்கு அவர் பதிலளித்தார்: என்னடைய இறைவன் எனக்குக் கொடுத்திருப்பவை மேலானவை. எனவே, உங்கள் உழைப்பின் மூலம் எனக்கு உதவி செய்யுங்கள். நான் உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு தடுப்புச்சுவரை எழுப்பித் தருகிறேன்; இரும்புப் பாளங்களை என்னிடம் கொண்டு வாருங்கள். இறுதியில் இரு மலைகளுக் கிடையிலான பகுதியை நிரப்பி விட்ட அவர் (மக்களை நோக்கி) கூறினார்: இப்பொழுது (நெருப்பை மூட்டுவதற்காக) ஊதுங்கள்! கடைசியில் அந்த இரும்புச் சுவர் முற்றிலும் நெருப்பாய்ப் பழுக்கக் காய்ந்த போது அவர் கூறினார்: கொண்டு வாருங்கள், இப்போது நான் உருக்கிய செம்புத்திரவத்தை! அதனைச் சுவற்றின் மேல் ஊற்றுவேன். யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரால் அதில் ஏறி வர முடியவில்லை. அவர்களால் அதில் துளையிடவும் இயலவில்லை. (அந்த அளவுக்கு அந்தச் சுவர் உயரமாகவும் வலுவாகவும் இருந்தது.) துல்கர்னைன் கூறினார்: இது என்னுடைய இறைவனின் கருணையாகும். என் இறைவன் வாக்களித்த நேரம் வந்து விட்டால், அவன் இதனைத் தூள்தூளாக்கி விடுவான். என்னுடைய இறைவனின் வாக்குறுதி உண்மையானதாகும். (18:83-98)
எதுவரையெனில், யஃஜூஜ் மஃஜூஜ் திறந்து விடப்பட்டு ஒவ்வொரு உயரமான இடங்களிலிருந்தும் அவர்கள் வெளியேறும் வரை. (21:96)
நாம் விவாதத்துக்கு எடுத்துக் கொண்ட அந்த சுவர் சம்பந்தமாக இனி ஆராய்வோம். தருமி, கும்மி போன்ற பதிவர்கள் ஏதொ குர்ஆனில் தவறு உள்ளதாகவும் அந்த சுவர் எங்கே இருக்கிறது காட்ட முடியுமா? காட்டி விட்டால் நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளத் தயார் என்கிற ரீதியில் பதிவிலே பதிலளித்திருந்தார்கள். அவருக்கு பதிலளிப்பதோடு இது சம்பந்தமாக குர்ஆனும் நபி மொழியும் அரபு மக்களின் நம்பிக்கையும் எப்படி இருந்தது என்பதைப் பார்ப்போம்.
குர்ஆன் தெளிவாக சொல்லி விடுகிறது அந்த சுவர் உலக முடிவு நாள் சமீபமாகத்தான் வெளிப்படுத்தப்படும். அது வரை மனிதர்களின் பார்வையிலிருந்து மறைத்து வைக்கப்படும். எனவே முஸ்லிம்களுக்கு அந்த சுவர் எங்கே இருக்கிறது என்ற ஆராய்ச்சியே தேவையில்லாதது.
ஆனால் அன்றைய அரபு மக்களிடமும்,யூத கிறித்தவர்களிடமும் துல்கர்னைனைப் பற்றி பல கதைகள் உலவி வருகிறது. தோராவிலும், பைபிளும் கூட இவரைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. அனைத்து வேதங்களிலும் இவர் இந்த நாட்டைச் சேர்ந்தவர், இந்த மக்களுக்காக அனுப்பப்பட்டவர்,இந்த நாட்டை ஆண்டவர் என்ற எந்த விபரமும் கிடைக்கவில்லை. ஆனால் மக்கள் மத்தியில் இவரின் வீரத்தைப் பற்றியும், இவர் எழுப்பிய சுவரைப் பற்றியும் பலவாறான கதைகள் மக்கள் மத்தியிலே இருந்து வந்தது. ஜனாதிபதி உமருடைய காலத்தில் அவருக்கும் இந்த செய்தி எத்தி வைக்கப்படுகிறது. அவரும் அப்துல் ரஹ்மான் என்ற தோழரின் தலைமையில் ஒரு படையை ரஷ்யாவுக்கு(காகஸஸ்) அனுப்பி உண்மையை கண்டு வரச் சொல்கிறார். ஆனால் அங்கு அப்படி எந்த சுவரையும் தங்களால் பார்க்க முடியவில்லை என்று அவர்களும் திரும்பி விடுகின்றார்கள். உமரும் இது வதந்தி என்று விட்டு விடுகிறார்.
உமரைப் பற்றியோ அல்லது முகமது நபியைப் பற்றியோ ஒரு செய்தியை சொல்வதாக இருந்தால் அது ஆதாரபூர்வமாக இருக்க வேண்டும். சொல்லக் கூடியவருக்கும் முகமது நபிக்கும் உள்ள இடைவெளி எவ்வளவு. செய்தி சொன்னவர் நம்பகமானவர்தானா என்பதை எல்லாம் பார்க்க வேண்டும. முகமது நபி காலததிலேயே யூதர்களில் சிலர் முஸ்லிமாக மாறுவதாக நடித்து முகமது நபியின் வரலாற்றையும் அறிவுரைகளையும் முகமது நபியின் காலத்துக்கு பிறகு திரிக்க ஆரம்பித்தனர். ஆனால் குரஆனில் அவர்களால் கை வைக்க முடியவில்லை. அதன் பிறகுதான் அறிஞர்களெல்லாம ஒன்று கூடி எவை எல்லாம் நம்பகத் தன்மை உடையவை எவை எல்லாம் ஒதுக்க வேண்டியவை என்பதை சொல்லக் கூடிய நபர்களின் ஒழுக்கத்தை வைத்து தீர்மானிக்க ஆரம்பித்தனர். இன்று வரை அது தொடர்கிறது. ஆனால் இணையத்தில் யாரும் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம் என்ற சுதந்திரம் இருப்பதால் முகமது நபியைப் பற்றிய கதைகள் நிறைய உலா வருகிறது.
அரபு அறிஞர் இப்னு இஸாக் என்பவர் துல்கர்னைனைப் பற்றி பல தகவல்களை கூறுகிறார். ஆனால் சிலர் சொல்வது போல் அலெக்சாண்டர்தான் துல்கர்னைன் என்று இவர் வாதிடவில்லை. ஒருக்கால் இவர் எகிபதியராக இருந்திருக்கலாம் என்று குறிப்பிடுகிறார்.
மங்கோலியாவுக்குப் பக்கத்தில் இந்த சுவர் இருப்பதாகவும் ஒரு கதை நிலவுகிறது. மெஸடோனியா என்ற நாட்டில் வாழ்ந்த அலெக்சாண்டர்தான் துல்கர்னைன் என்கிறார் பக்ருதீன் என்ற வரலாற்றாசிரியர்.
அரிஸ்டாட்டில்தான் துலகர்னைன் என்று சொல்வோரும் உண்டு. அரிஸ்டாட்டில் ஏசுவுக்கு 300 வருடங்கள் முன்பு வாழ்ந்ததாகவும், அலெக்சாண்டர் அவையில் மந்திரியாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
காகஸஸ் மலைத் தொடரில் உள்ள தார்பண்ட் என்ற இடத்தில்தான் குர்ஆன் சொல்லக் கூடிய மலை இருப்பதாக சிலர் சொல்கின்றனர். அஜர்பைஜான், ஆர்மீனியா, ஜார்ஜியா, ரஷ்யா போன்ற நாடுகள் இதன் எல்லைகளாக வருகிறது. சீனப் பெருஞ்சுவர்தான் குர்ஆன் கூறக் கூடிய சுவர் என்று சிலகாலம் குழம்பியவர்களும் உண்டு.
இத்தனையையும் நான் எடுத்துக் காட்ட காரணம் துல்கர்னைன் என்பரைப் பற்றிய கதைகள் மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றி இருப்பதை எடுத்துக் காட்டவே! அந்த நபரைப் பற்றியே நமக்கு சரியாக தெரியாத போது அந்த சுவரைப் போய் நாம் எங்கு தேடுவது? அப்படி தேடச் சொல்லி குர்ஆனும் கட்டளை இட வில்லை. அப்படி ஒரு சம்பவம் நடந்ததை நம்ப வேண்டும்.
மேலும் குர்ஆனில் இந்த இடத்தில் இந்த நாட்டில் அந்த சுவர் இருக்கிறது என்று கோடிட்டு காட்டியிருந்து அதை தேடி சிலர் சென்று அங்கு அந்த சுவர் தென்பட வில்லை என்றால்தான் குர்ஆனின் நம்பகத் தன்மையை நாம் அலச வேண்டியிருக்கும். அப்படி எந்த வாக்கியமும் குர்ஆனில் இடம் பெறவில்லை. எனவே இந்த சர்ச்சையே தேவையில்லாதது. உலக முடிவு நாளுக்கு சமீபமாக அந்த சுவரை யாஜுத், மாஜுத் என்ற கூட்டத்தினர் உடைத்துக் கொண்டு வெளியேறுவார்கள். அந்த நாளுக்காக நாமும், தருமியும்,கல்வெட்டும், கும்மியும் ராஜனும், சார்வாகனும் இன்னபிற பதிவர்களும் பொறுப்போம். அதுவரை நாமெல்லாம் உயிரோடு இருந்தால் அவசியம் இந்த காட்சிகள் நடந்தேறும். அதுவரை பொறுப்போமாக!
இறைவனே மிக அறிந்தவன்.
23 comments:
தருமி!
//இதைச் சொல்ல சுவனப்பிரியன் உங்களுக்கு 2011 ஆண்டும், உங்கள் கல்லூரி மக்களே ஒரு படி முன்னால் வைத்ததும் காரணமாயிருக்கிறது.பழைய பதிவுகளில் நாங்கள் சொன்ன இதே காரணங்கள் இஸ்லாமியப் பதிவர்களின் காதுகளில் முன்பு விழவில்லை என்பதற்கான சான்றுகள் நம் பழைய விவாதங்களில் குவிந்து கிடக்கின்றன.
எப்படியோ ஒரு வழி (உங்களையும் மீறி, தாண்டி) பிறந்துள்ளது!!//
பொங்கல் பண்டிகையைக் கூட முஸ்லிம்கள் முன்பு ஒதுக்கியதற்கு காரணம் இருக்கிறது. இந்தியாவை எடுத்துக் கொண்டால் கிறித்தவம்,பவுத்தம், சமணம், இஸ்லாம்,சீக்கியம் என்று இன்னும் பல மதங்கள் இருந்தாலும் இஸ்லாத்தைத் தவிர மற்ற மதங்கள் அனைத்தையும் ஆரியம் விழுங்கி விட்டது. எங்கள் ஊரின் அருகாமையில் தாழ்த்தப் பட்டவர்கள் ஒரு கும்பலாக கிறித்தவத்தை தழுவினார்கள். ஆனால் இன்றும் அவர்களின் பெயரில்தான் மாற்றம் இருக்கிறதே தவிர அதே தீண்டாமையை கிறித்தவத்திலும் அனுபவிக்கிறார்கள். பவுத்தத்தையும் சீக்கியத்தையும் பற்றி சொல்லவே வேண்டாம். இந்து மதத்தின் மறு வடிவமாகவே திகழ்கிறது. இதை எல்லாம் பார்த்த எங்களின் முன்னோர்கள் இந்து மதத்தின் சாயல் சிறிது கூட இஸ்லாத்தில் நுழையாமல் பார்த்துக் கொண்டனர். இன்று வரை இஸ்லாம் ஆரியத்தை நெருங்க விடவில்லை. எனவே தான் இந்துத்துவ வாதிகள் அவர்களின் முதல் எதிரியாக முஸ்லிம்களைப் பார்ப்பது. முஸ்லிம்கள் இந்திய கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டால் எங்களுக்கும் அவர்களுக்கும் எந்த பகையும் இல்லை என்று முன்பு இவர்கள் பகிரங்கமாகவே அறிவிப்பு செய்தனர்.
ஆனால் இணையம் தொலைக்காட்சி போன்ற சாதனங்களால் இஸ்லாம் என்றால் என்ன என்பதை பலரும் இன்று விளங்கி விட்டோம். இனி இந்துத்துவத்தை இஸ்லாத்தில் கலக்க முடியாது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் மத சடங்குகள் இல்லாத நம் இனத்துக்காக நடத்தப்படும் பொங்கலை கொண்டாடுவதில் தவறில்லை என்பது என் கருத்து.
//பொங்கலை கொண்டாடுவதில் தவறில்லை என்பது என் கருத்து.//
நானும் இதைத்தான் எப்போதும் சொல்லி வருகிறேன். ஆனால் நீங்கள் இந்தக் கருத்திற்கு இப்போது வருவதற்கு காரணம் என்ன என்பதைத்தான் நான் கூறியுள்ளேன். சரிதானே!
இதைப் போல தொலைக்காட்சியில் பர்தா பற்றிக் கேட்டிருந்தேனே அதையும் இங்குதான் பதில் சொல்வீர்களா?
//இணையம் தொலைக்காட்சி போன்ற சாதனங்களால் இஸ்லாம் என்றால் என்ன என்பதை பலரும் இன்று விளங்கி விட்டோம். //
ஆமாம் ! நிச்சயமாக!!
//அந்த சுவர் உலக முடிவு நாள் சமீபமாகத்தான் வெளிப்படுத்தப்படும். அது வரை மனிதர்களின் பார்வையிலிருந்து மறைத்து வைக்கப்படும். //
இதற்குரிய குரான் வசனம் எது?
‘என் இறைவன் வாக்களித்த நேரம் வந்து விட்டால்,..// - இதில் அப்பொருள் ஏதுமில்லை.
கும்மி!
//குர் ஆனில் எந்த வசனத்தில், அந்தச் சுவர் மனிதர்களின் பார்வையிலிருந்து மறைக்கப்படும் என்று கூறியுள்ளது என்றும், உலக முடிவு நாள் சமீபமாகதான் வெளிப்படுத்தப்படும் என்றும் கூறும் வசன எண்களை கொடுங்களேன். எதனடிப்படையில் நீங்கள் இந்த விளக்கத்தைக் கொடுக்கின்றீர்கள் என்பதை மக்கள் அறிந்துகொள்ளட்டும்.//
'முடிவில் யஃஜூத், மஃஜூத் கூட்டத்தினர் திறந்து விடப்பட்டு அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் விரைவார்கள். உண்மையான வாக்குறுதி நெருங்கி விட்டது.'
-குர்ஆன் 21:96,97
அந்த சுவரை யஃஜூத், மாஃஜூத் என்ற கூட்டத்தினர்தான் உடைப்பார்கள். அது உலக முடிவு நாளின் சமீபம் என்று இந்த குர்ஆன் வசனமும் கூறுகிறது, சில நபி மொழிகளும் உள்ளது.
தருமி!
//இதைப் போல தொலைக்காட்சியில் பர்தா பற்றிக் கேட்டிருந்தேனே அதையும் இங்குதான் பதில் சொல்வீர்களா?//
நீங்கள் குறிப்பிடும் நிகழ்ச்சிக்கு போராட்டம் அறிவித்த அந்த அமைப்பே முன்பு இதற்கு விளக்கம் அளித்து விட்டது. விஜய் டிவியின் தொகுப்பாளர் படப்பிடிப்பின்போது ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டார். புர்காவுக்கு ஆதரவாக பேச வந்த இஸ்லாமிய பெண்கள் எவரையும் அவர் கருத்தை சொல்ல அனுமதிக்கவில்லை.புர்காவுக்கு எதிராக பேசிய ஒரு பெண்ணை மட்டும் அதிக நேரம் பேச விட்டு தொகுப்பாளர் என்ன சொல்ல வந்தாரோ அதை நிலை நாட்ட முயற்ச்சித்தார். விவாதம் என்றால் இரு தரப்புக்கும் சம நேரம் ஒதுக்க வேண்டும்.அது மீறப்பட்டதால்தான் போராட்டத்தை அறிவித்தது அந்த அமைப்பு. தவறு நடந்திருப்பதை புரிந்து கொண்ட விஜய் டிவி நிர்வாகமும் பதிவு செய்த நிகழ்ச்சியை ஒளிபரப்புவதில்லை என்று முடிவு செய்தது. இதில் தவறு யார் பக்கம் என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
அடுத்து உங்கள் பதிவில் பின்னூட்டம் அதிகமாகி விட்டதால் கணிணி சில நேரங்களில் ஏற்க மறுக்கிறது. எனவேதான் என் பதிவில் இட்டேன். அந்த சுவரைப் பற்றிய கேள்விக்கு கும்மிக்கு அளித்த பதிலிலேயே விளக்கம் இருக்கிறது.
சம்பத்
January 20, 2011 at 3:14 pm
கிறித்தவம் இந்தியாவில் இந்து மதத்தின் கொடுமைக்கு மாற்றாக அருமருந்தாய் வந்தது. ஆனால் இன்று அழுமருந்தாய் மாற்றப்பட்டுக் கிடக்கின்றன. இப்படித் தான் 3ம் நூற்றாண்டில் வந்த பௌத்தமும், தனக்குள் பிரிந்து பிரிந்து நலிந்து ஒடிந்து நின்றது, இறுதியில் பிராமணம் எளிதில் அதை வென்று சாதியத்தை நிலை நிறுத்தியது. பிராமணம் இன்று இந்தியக் கிருத்துவ/இஸ்லாத்தில் புகுந்து தனது சேப்படி வேலைகளை செய்யத் தொடங்கி விட்டது. இது கிருத்துவம் இந்தியாவில் இல்லாமல் போகும் நிலைக்கு கொண்டு வரும், பொறுத்திருந்து பாருங்களேன்
ஞாயிறு, 16 ஜனவரி, 2011
5/5
ஷூட்டிங் ஆரம்பிக்கும் முன் அவரைத்தான் நடு மேடையில் நிறுத்தினார்கள் கேமரா பொஸிஷன் பார்க்க... "செல்வா....... நடுவுல வந்து நில்லு... பார்ட்டிசிபேன்ட்ஸ்..... க்ளாப்... ஒரு நிமிடம்.. கைதட்டல் ஸ்லோவாக...... க்ளாப்ஸ் அகெய்ன், எல்லாரும் நடுவுல நிக்கிறவரைப்பாருங்க... ரெண்டு நிமிடம்....... க்ளாப்ஸ் ப்ளீஸ்..... செல்வா இங்க பாரு... கேமரா த்ரீ...... ஜிம்மி ஜிப்பை பார்க்காத... எல்லாரும் நடுவுல நிக்கிறவரையே பாருங்க... க்ளாப்ஸ் ப்ளீஸ்...... க்ளாப்ஸ் வித் ஸ்மைல்........" புரிகிறதா?
அதாகப்பட்டது நீங்கள் நீயா? நானா? (அல்லது சாலமன் பாப்பையா பட்டிமன்றம்) வை டி.வியில் பார்க்கும் போது நடு நடுவே ஆடியன்ஸ் கைதட்டுவது, சிரிப்பதை எல்லாம் காண்பிக்கிறார்கள் அல்லவா? (குறிப்பாக சன் டிவியில் கலாநிதி மாறனை காண்பிக்கும் போதெல்லாம் ஆடியன்ஸ் கைதட்டல் கிழிக்குமே) அதையெல்லாம் இப்படித்தான் முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொண்டு எடிட்டிங்கில் சேர்த்துக்கொள்கிறார்கள்.
இரண்டு மணி நேரம் ஒளிபரப்பாகவிருக்கும் ஷோவுக்கு.. நாலு மணி நேரம் ஷூட்டிங். நான் பேசியதெல்லாம் எடிட்டிங், கட்டிங், வெட்டிங், ஒட்டிங் எல்லாம் போக மிச்சம், மீதி ஏதாவது இருந்தால் வரும். நாங்கள் போன அன்று எங்கள் ஷோவுக்கு மட்டும் என்ன கஷ்டமோ தெரியவில்லை. இரண்டு பக்கமும் ஆள் பற்றாக்குறை. இரண்டு டீமிலும் அவர்கள் யூனிட் ஆட்கள் இரண்டிரண்டு பேர் அமர வைக்கப்பட்டார்கள். ஷோ சென்சிடிவ்வாக போக வேண்டும் என்பது தான் ஒரே மோட்டோ..
பங்கேற்பவர்கள் ஷோவை பற்ற வைக்கவில்லையென்றால் அவர்களின் யூனிட் ஆட்கள் அதைச்செய்வார்கள். ப்ளூ ஸ்டிரைப்ட டீ ஷர்ட் காரர் ஒருத்தர் எங்கள் டீமில் கீழ் ரோவில் இருப்பார் பாருங்கள். அது அவர்கள் ஆள். திகுதிகுவென்று முழுதாகப் பற்ற வைத்தார். எதிர் டீமில் ஒரு நாற்பது வயது அப்பா கேரக்டருக்கும அவருக்கும் சரியான சண்டை.
about vijay tv
-yeskha-blogspot.com
யாருங்க அந்த அனானிமஸ்..கரீட்டா வந்துட்டார். எந்த ஒரு படப்பிடிப்பும் இப்படித்தான் இருக்கும் என்பது கொஞ்சம் கூறு உள்ள எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதைச் சொல்ல இங்கே வந்திட்டீங்களாக்கும் - மூஞ்சைக் கூட காண்பிக்காமல்!
சுவன்ப்பிரியன், இந்த பின்னூட்டம் உங்களுக்கு எந்த ஆதரவும் தராது. அதுவும் “இப்படிப்பட்ட” நிகழ்ச்சியையும் எதிர்த்து ஏனிந்த ஆர்ப்பாட்டம் என்பதுதான் என் கேள்வியே!
//தவறு நடந்திருப்பதை புரிந்து கொண்ட விஜய் டிவி நிர்வாகமும் பதிவு செய்த நிகழ்ச்சியை ஒளிபரப்புவதில்லை என்று முடிவு செய்தது. //
பூனை வெளியே வந்திருச்சி ...
குர்ஆனின் சில வசனங்களுக்கு நமக்கு வரலாறு தெரியவில்லை என்றால் முகமது நபியின் போதனைகளைப் பார்த்தால் தெரிந்து விடும். உலக முடிவு நாளின் பத்து அடையாளங்களை முகமது நபி பட்டியலிடுகிறார்.அதில் ஒன்று யஃஜூத், மாஃஜூத் கூட்டத்தினர் துல்கர்னைன் கட்டிய சுவரை உடைத்துக் கொண்டு வருவார்கள் என்று கூறியுள்ளார். இறைவன் குர்ஆனில் 'யஃஜூத், மாஃஜூதை ஒருவரோடு ஒருவராக மோத விடுவோம். ஸூர்(பெரும் சப்தம்) ஊதப்படும்.' -குர்ஆன் 18:19 என்கிறான். உலக முடிவு நாளில்தான் ஸூர் ஊதப்படும். துல்கர்னைனும் இறைவன் நாடும் அந்த நேரத்தில் இந்த சுவர் உடைபடும் என்கிறார். இவை எல்லாவற்றையும் ஒன்றாக்கிப் பார்த்தால் உலக முடிவு நாளின் சமீபமாக இந்த சுவர் உடைபடும். இதைத்தான் அனைத்து அறிஞர்களும் கோடிட்டுக் காட்டியுள்ளனர். அந்த சுவர் இப்பொழுதே கண்டுபிடிக்கப் பட்டால் உலக முடிவு நாள் சமீபித்து விட்டதாக அர்த்தம். இறைவன் அந்த நேரம் வரும் போது அவசியம் மனிதர்களின் கவனத்துக்கு கொண்டு வருவான். தருமியும்,கல்வெட்டும்,கும்மியும்,சார்வாகனும்,வால்பையனும் அந்த சுவரை எப்படியும் வெளியில் கொண்டு வர பெருத்த முயற்ச்சி எடுக்கின்றனர்.
உலக முடிவு நாள் என்பது மிப் பயங்கரமானது நண்பர்களே! அது நாம் வாழும் நாட்களில் வர வேண்டாமே!
//தருமியும்,கல்வெட்டும்,கும்மியும்,சார்வாகனும்,வால்பையனும் அந்த சுவரை எப்படியும் வெளியில் கொண்டு வர பெருத்த முயற்ச்சி எடுக்கின்றனர்.//
ஏன்தான் இல்லாத அந்த சுவரை வெளியில் கொண்டு வர இப்படி பெருத்த முயற்ச்சி எடுக்கின்றனரோ தெரியவில்லை ...
//உலக முடிவு நாள் என்பது மிப் பயங்கரமானது நண்பர்களே! அது நாம் வாழும் நாட்களில் வர வேண்டாமே!//
உங்க மதத்தில நீங்க சொல்ற பலதுமே ரொம்ப பயங்கரமான விஷயங்கள்தானே!
அட.. வர்ரது வரட்டுங்க ..!
//குர்ஆனில் இந்த இடத்தில் இந்த நாட்டில் அந்த சுவர் இருக்கிறது என்று கோடிட்டு காட்டியிருந்து அதை தேடி சிலர் சென்று அங்கு அந்த சுவர் தென்பட வில்லை என்றால்தான் குர்ஆனின் நம்பகத் தன்மையை நாம் அலச வேண்டியிருக்கும். அப்படி எந்த வாக்கியமும் குர்ஆனில் இடம் பெறவில்லை. எனவே இந்த சர்ச்சையே தேவையில்லாதது.// சொல்லப்பட வேண்டிய செய்திதான், தொடரட்டும் உண்மையாக உண்மையாக எடுத்துச் சொல்லும் பயணம.
//….While Indians, in the name of secularism have more or less been muzzeled and beaten to remain silent about such bigotry and supermacism, the Western liberal societies need not be constrained by such reasons. They have got centuries of freethought and liberalism behind them and can differenciate clearly between what is secularism and religious sadism! …..//
இந்து மத நம்பிக்கையாளர் எனது நண்பராக இருக்கிறார். அவரை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்க்காக 'நானும் உங்களோடு கோவிலுக்கு வந்து சிலைகளை வணங்குகிறேன்' என்று நான் சொன்னால் அவருக்காக நடிக்கிறேன் என்று அர்த்தம். அவர் நம்பிக்கை அவருக்கு. என் நம்பிக்கை எனக்கு. இதனால் நட்புக்கு எந்த பாதிப்பும் வந்து விடப் போவதில்லை. ஒரு உள்ளத்தில் இரணடு மாறுபட்ட நம்பிக்கை இருக்க முடியாது அல்லவா!
ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் உதாரணத்துக்கு இழுக்கிறீர்கள். அங்கு இன்னும் நிறவெறி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நமது நாட்டு சேரி குடியிருப்புகளைப் போல அமெரிக்காவிலும் கருப்பர்களின் குடியிருப்புகளைக் காணலாம். பல இடங்களில் வேலை வாய்ப்புகளிலும் அவர்கள் ஓரம் கட்டப் படுகிறார்கள்.
பத்து நாட்களுக்கு முன்பு கூட சென்னை தேவி தியேட்டரில் திரைப்படம் பார்க்க வந்த குறவர் இன மக்களுக்கு முதல் வகுப்பு டிக்கெட் தர மறுத்திருக்கிறார் டிக்கெட் கொடுப்பவர். அவர்கள் பிரச்னை பண்ணவே பிறகு நிர்வாகம் தலையிட்டு டிக்கெட் கொடுக்க சொல்லியிருக்கிறது. முதல் வகுப்புக்கான முழு கட்டணத்தையும் தர இருந்த அவர்களை தடுத்தது எது? வேதத்தில் கூறப்பட்ட வர்ணாசிரம கோட்பாடு அல்லவா? இதில் நீங்கள் யாரை குறை காண்பீர்கள். குறவர்களையா? டிக்கட் கொடுப்பவரையா? வேதங்களையா? அங்குள்ள சாதி தாங்க முடியாமல்தான் சில தலைமுறைகளுக்கு முன்புஇஸ்லாத்தை சுவீகரித்துக் கொண்டது தமிழகம். அதே கொள்கைகள் எந்த வழியிலும் இஸ்லாத்திலும் நுழைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை. இதற்கு நீங்கள் என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்.
இசாதீன் ரிள்வான்!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
//அட.. வர்ரது வரட்டுங்க ..!//
'மனிதர்களுக்கு அவர்களின் விசாரணை நெருங்கி விட்டது. அவர்களோ புறக்கணித்து கவனமின்றி உள்ளனர்.'
-குர்ஆன் 21:1
பைபிளிலும் 'காலம் நெருங்கி வந்து விட்டது' போன்ற பயமுறுத்தல்கள் உண்டு.
அவர்கள் 2000 வருஷங்களாக இதைச் சொல்லிப் பயமுறுத்துகிறார்கள்; நீங்கள் 1400 வருஷமாக பயமுறுத்துகிறீர்கள். .. ஒரே கதை!
அதுவும் உங்களைப் போன்ற நம்பிக்கையாளர்களின் கடவுளின் மேலுள்ள பயம் கொஞ்சம் ஆச்சரியத்துகுறியதுதான்!
சார்வாகன்!
//1.குரானின் சாமர்கண்ட் மூலப் பிரதிக்கும்,இப்போது உள்ள குரானுக்கும் வித்தியாசம் இருக்கிறதா? இருக்கிறது
சாஅமர்கண்ட் பிரதியில் உள்ள குரான் எழுத்து குயுஃபிக் வகை(8 ஆம் நூற்றாண்டு).ஆனால் முகமது எழுதிய கடிதம் வேறு வகையாக இருக்கிறது.ஏன்?//
மொழியின் வளர்ச்சி காரணமாக 1000 வருடங்களுக்கு முன்பு இருந்த எழுத்துக்கள் எல்லாம் பல மாற்றங்களைக் கண்டுள்ளன. நம் தமிழில் கூட திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் நாம் பயன் படுத்தும் தற்போதய எழுத்து முறையைப் பயன் படுத்தவில்லை. சில ஓலைச் சுவடிகளை நம்மால் இன்று படிக்க முடியாது. குர்ஆன் இறங்கிய காலத்திய அரபி மொழிக்கும் தற்போதய அரபி மொழிக்கும் வித்தியாசம் இருப்பதை உணரலாம். பண்டைய காலத்தில் அரபி எழுத்துக்களில் புள்ளிகள் கிடையாது. தற்போதய உலக நாடுகளில் உள்ள குர்ஆனில் புள்ளிகள் இடப்பட்டிருக்கும். அனைவரும் சிரமம் இல்லாமல் படிப்பதற்க்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் பொருளில் எந்நத மாற்றமும் ஏற்பட்டிருக்காது. 'இந்த குர்ஆனின் தெளிவான வசனங்கள் கல்வி வழங்கப்பட்டோரின் உளளங்களில் இருக்கிறது.'- 29:48 என்று குர்ஆன் கூறுவதும் இதனால்தான்.
அந்த கடிதங்களை முகமது நபி எழுதவில்லை. ஏனென்றால் அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அவர் சொல்ல அவரின் தோழர்கள் எழுதியதுதான் நீங்கள் குறிப்பிடும் கடிதங்கள். மேலும் குர்ஆனின் அரபி நடை மிக உயர்ந்த தரத்தில் இருக்கும். அதே சமயம் முகமது நபியின் போதனைகளை எடுத்துப் பார்த்தால் மிக சாதாரண நடையில் பேசப்படும் நாட்டுப்புற அரபி பாஷையாக இருக்கும். இதை அரபி மொழி தெரிந்த அனைவரும் அறியலாம். ஆங்கில, தமிழ் மொழி பெயர்ப்புகளிலும் இந்த வித்தியாசத்தைப் பார்க்கலாம். இதுவும் கூட முகமது நபி தனது சொந்த கற்பனையில் குர்ஆனை சொல்லவில்லை. அது இறைவனால் அருளப்பட்டது என்பதை சொல்லிக் கொண்டிருக்கிறது.
யாசிர்!
//அல்லாவுக்கு இணையாக வேறு ஒரு கடவுள் இருந்து அதை வழிபடும் பொழுதுதான் அல்லா கோபப்பட வேண்டும்! இல்லாத ஒன்றை வணங்கிவழிபடும் பொழுது நியாயமாக (அல்லாவைத்தவிர வேறு கடவுள்கள் இல்லை என்பது உண்மை எனில்)அது அல்லாவைத்தானே சேரமுடியும்? பிறகு ஏன் அல்லா அச்சப்பட வேண்டும்? தம்மை விஞ்சிவிடவும் ஒருவன் உண்டு என யாருக்காக அல்லா அஞ்சுகிறார்?//
'உலக வாழ்வில் உங்களுக்கிடையே உள்ள நேசத்தின் காரணமாகவே இறைவனையன்றி நீங்கள் சிலைகளை ஏற்படுத்தி இருக்கிறீர்கள்.'- குர்ஆன் 29:25
எவ்வளவு அழகாக நமது நாட்டை படம் பிடித்து காட்டுகிறது குர்ஆன். தெருவுக்கு ஒரு கடவுளும், சாதிக்கு ஒரு கடவுளும் நம் நாட்டில் எப்படி வந்தது. நமக்கு மதிப்பு மிக்க ஒருவர் இற்ந்து விட்டால் அவருக்கு மாலை போட்டு சிலைகளையும் நிறுவுகிறோம். இரண்டு தலைமுறைக்கு பிறகு அவர் கடவுளாக்கப்படுகிறார்.
'மர்யமின் மகன் ஈசாவே(ஏசுவே)!இறைவனையன்றி என்னையும் என் தாயாரையும் கடவுளாக்கிக் கொள்ளுங்கள்! என நீர்தான் மக்களுக்குக் கூறினீரா? என்று இறைவன் மறுமையில் கேட்கும் போது 'நீ தூயவன். எனக்கு தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய்.' -குர்ஆன் 5:116
ஏசுவும் அந்த நாளில் கை விரித்து விடுவார். இந்த உலகைப் படைத்து அதில் மனித வர்க்கத்தையும் படைத்து இந்த பூமியை நாம் வாழ்வதற்கு ஏற்றவாறு படைத்ததன் நோக்கமே நாம் அந்த இறைவனை வணங்க வேண்டும் என்பதற்க்காகவே! இவ்வளவு வசதியை நமக்காக இறைவன் ஏற்ப்படுத்தி இருக்க அதை விடுத்து சிலைகளை வணங்கினால் படைத்த இறைவனுக்கு கோபம் வருமா? வராதா? நாம் மறுமையில் நஷ்டம் அடைந்து விடக் கூடாது என்பதற்க்காகத்தான் இத்தனை வேதங்களும், இத்தனை நபிகளும். ஏக இறைவனை வணங்காது போனால் நஷ்டம் இறைவனுக்கல்ல. நமக்குத்தான்.
அது சரி..அது என்ன யாசிர் என்ற பெயரில் ஒளிந்து கொண்டு எழுதுகிறீர்கள். :-( முஸ்லிம்களிலும் நாத்திகர்கள் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதற்க்காகவா!
//இத்தனை வேதங்களும், இத்தனை நபிகளும். ஏக இறைவனை வணங்காது போனால் நஷ்டம் இறைவனுக்கல்ல.//
மிக்க சரி...ஆனால் அடுத்து சொல்கிறீர்களே ..
//அதை விடுத்து சிலைகளை வணங்கினால் படைத்த இறைவனுக்கு கோபம் வருமா? வராதா?//
ஏன் வரணும்? இதுதான் ஒரு லாஜிக்கிலும் (என்னைப் போன்ற ஆட்களுக்கு) ஒத்து வருவதில்லை. இது மானிட நீதியை விட மோசமாகத் தோன்றுகிறது. கடவுள் படைக்கிறார். அதற்குப் பிறகு என்னை மட்டும் வணங்கு என்கிறார். (சரியான சுயநலம்!) அப்படியில்லாவிட்டால் கோபம்!! அவரை அறியாதவர் எத்தனை கோடி? இந்த காபிர்களுக்கு நரகம்... என்ன கதையோ. முன்பே சொன்னது போல் 'கண்விழித்துப் பார்த்தால்' மட்டுமே உண்மைகள் தெரியும். லாஜிக் ஏதுமில்லா கற்பனைகள்; கடவுளையும் ஒரு மனித உருவில் கண்டுகொள்வதும் வேடிக்கைதான்!
//ஆனால் பொருளில் எந்நத மாற்றமும் ஏற்பட்டிருக்காது. //
எனக்கு அராபி தெரியாது. ஆனால் கொடுக்கப்பட்ட மேற்கோள்களில் விட்டுப்போன சொற்களைக் கொடுத்திருக்கிறார்; வெறும் புள்ளிகள் அல்ல.
//'இந்த குர்ஆனின் தெளிவான வசனங்கள் கல்வி வழங்கப்பட்டோரின் உளளங்களில் இருக்கிறது.'- 29:48 என்று குர்ஆன் கூறுவதும் இதனால்தான்.//
குரானில் குற்றம் சொல்லும்போது அந்த குரானிலிருந்தே மேற்கோள் காட்டுவது நல்ல வேடிக்கை!
குரானை விட்டு சிந்திப்பதில்லை என்பதே உண்மை ........
விமர்சனம் என்றாலே இஸ்லாம் பயப்படும் ...
Post a Comment