இசை ஒரு மனிதனை எந்த அளவுக்கு சிந்திக்க விடாமல் செய்கிறது என்பதற்க்கு இந்த காணொளி ஒரு சிறந்த உதாரணம்.
பரிசினை வாங்க ரஹ்மான மேடைக்கு வருகிறார். தொகுத்து வழங்கிய கதாநாயகர்கள் இம்ரான் ஹாஸ்மியும், குமார் கவுரவும் மேடைக்கு அருகிலேயே சாஸ்டாங்கமாக கீழே விழுந்து மரியாதை செய்தனர். அமிதாப்,ஐஸ்வர்வாய் முதற்கொண்டு அனைவரும் ஒரு கணம் எழுந்து மரியாதை செய்தனர். 'ப்ளீஸ்....ஸ்டேண்ட் அப்' என்று ரஹ்மான் மைக்கில் சொன்னவுடன்தான் இருவரும் எழுந்தார்கள். மனிதனுக்கு மனிதன் காலில் விழுந்து மரியாதை செய்யும் இந்த பழக்கத்தை எப்பொழுது விடுவார்களோ தெரியவில்லை.
இந்திப் படவுலகின் சிறந்த கதாநாயகர்கள் நமது ஏ.ஆர். ரஹ்மானுக்கு அடிமை என்பதை எப்படி விளக்குகிறார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது. இசை ஒரு மனிதனை எந்த அளவுக்கு ஆட்டி வைக்கும் என்பதையும் நாம் நேரிடையாகப் பார்க்கிறோம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைத்தான் இது உணர்த்துகிறது.
'மதறாசிகள்' என்று ஹிந்தி தெரியாத நம்மைப் பார்த்து ஏளனம் செய்த வட நாட்டவர்களை வசியம் செய்து விட்ட நம் ரஹ்மானை ஒரு வகையில் பாராட்டத்தான் வேண்டும்.
No comments:
Post a Comment