Followers

Tuesday, January 11, 2011

நண்பர் கல்வெட்டின் சந்தேகங்களுக்கு சில மாதிரிகள்!

//ஆனால் சக காலத்தில் பிறந்த சில குழந்தைகள் துரதிர்ஷ்டத்தால் , உடல் வளர்ந்திருந்தாலும் மூளை வளர்ச்சி இல்லாமல் அதே 7 வயதின் அறிவு நிலையிலேயே தேங்கிவிட்டார்கள் ( எல்லாம் இறைவன் செயல். அவன் அனுமதி இல்லாமல் ஒன்றும் நடக்காது. சாந்தி நிலவட்டும்) அவர்கள் இன்னும் பாட்டி வடை சுடுவதாக நம்புகிறார்கள். :-(((

நான் அவர்களிடம் தோற்கவே விரும்புகிறேன்.\\

நண்பர் கல்வெட்டு தனது பின்னூட்டத்தில் முஸ்லிம்கள் எல்லாம் நிலவில் பாட்டி வடை சுடுவதாக நம்புவதாகவும் அவர் தெளிவாக இருப்பதாகவும் கூறுகிறார். இது முஸ்லிம்களின் நம்பிக்கை அல்ல நண்பரே! அது இந்துக்களின் நம்பிக்கை.

பல நல்ல கருத்துக்களை கூறிய வள்ளுவர் கூட

கண்டது மன்னும் ஒருநாள் அலர் மன்னும்
திங்களைப் பாம்பு கொண்டற்று. – குறள்

பொருள்: நான் என் காதலரைக் கண்டது ஒருநாள்தான். ஆனால் அதனால் உண்டான உணர்வோ, நிலாவை பாம்பு கவ்வியது போல் எங்கும் பரவியுள்ளது.

அவர் காலத்தில் நமது நாட்டில் சந்திர கிரகணம் ஏற்படுவது பாம்பு நிலாவை முழுங்குவதால்தான் என்ற நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் வள்ளுவரும் உதாரணத்தை எடுத்தாண்டிருக்கிறார். இதற்கு என்ன பதிலை சொல்லப் போகிறார் நண்பர் கல்வெட்டு.

அதே நேரம் 1400 ஆண்டுகளுக்கு முன்பு இறக்கப்பட்ட குர்ஆனில் இது போன்ற அறிவியலுக்கு முரணான ஒரு கருத்தையும் காண முடியாது. வான் வெளியைப் பற்றி குர்ஆன் கூறும் சில கருத்துக்களைப் பட்டியலிடுகிறேன் நண்பர்கள் பார்த்துக் கொள்ளட்டும்.

பூமியின் வடிவம் எத்தகையது?

இரவும் பகலும் மாறி மாறிவருவதைக் கண்ட மனிதன், இதைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினான். அறிவியல் அறிஞர் அரிஸ்டாட்டில் பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு 'புவி மையக் கோட்பாட்டை உருவாக்கினார். அதாவது பூமியைச் சுற்றியே சூரியன், சந்திரன் போன்ற மற்ற கோள்கள் சுற்றுவதாகவும் இதனாலேயே இரவு பகல் ஏற்படுவதாகவும் தனது ஆராய்ச்சி முடிவை வெளியிட்டார். அரிஸ்டாட்டில் சொன்னதால் உலகமும் ஒத்துக் கொண்டது.

ஆனால் இவரின் ஆராய்ச்சி தவறு என்றும் சூரியனைச் சுற்றியே மற்ற கோள்கள் இயங்குகின்றன என்ற உண்மையை குர்ஆன் வெளியிடுகிறது. ஆனால் அறிவியல் உலகம் குர்ஆன் இறங்கி பல நூற்றாண்டுகளுக்குப் பிறகே இந்த உண்மையை ஒத்துக் கொள்கிறது. அறிவியல் அறிஞர் கோபர் நிக்கஸ்(1473-1543), ஜோஹன்னஸ் கெப்ளர்(1571-1630) போன்றோர் குர்ஆன் இறங்கி பல நூற்றாண்டுகளுக்குப் பிறகே இந்த உண்மையை உணருகின்றனர்.

உலகம் கோள வடிவமானது என்ற உண்மையை நாம் கடலில் கப்பலின் வரவை வைத்தே எளிதாக கண்டு கொள்ளலாம். அந்த காலத்தில் பூமியின் வடிவத்தை காண இது ஒன்றுதான் வழியாக இருந்தது. அறிவியல் வளர்ந்த இந்த காலத்தில் வேண்டுமானால் கப்பலின் உதாரணம் தேவைப்படாமல் இருக்கலாம். அந்த காலத்திய மக்களுக்கு உண்மையை உணர்த்துவதற்க்கு குர்ஆன் கப்பலையே உதாரணமாக எடுத்துக் கொள்கிறது.

இனி குர்ஆன் வசனத்தைப் பார்ப்போம்.

'அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான வெளியில் நீந்துகின்றன.'
-குர்ஆன் (21:33)

'வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும் மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும் .......விளங்கும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.'
-குர்ஆன் 2:164


மேற்கண்ட குர்ஆன் வசனம் வானில் எதுவும் ஓய்ந்திருக்கவில்லை என்றும் விண்ணகப் பொருட்கள் யாவும் விண்ணில் நீந்துகின்றன என்றும் பறை சாற்றுகிறது. இதன் மூலம் பூமி நிலைத்திருக்கவில்லை அதுவும் நீந்துகிறது என்ற உண்மையை கூறி புவி மையக் கோட்பாட்டை நிராகரிக்கிறது குர்ஆன்.

அறிவியல் அறிஞர்களையே திகைக்க வைத்த குர்ஆன் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. நான் சொன்னது ஒரு உதாரணம் மடடுமே! இது போல் பல நுர்று வசனங்களை என்னால் பட்டியலிட முடியும். புவியீர்ப்பு விசை, மனிதன் நிலாவுக்கு செல்ல முடியும், பெரு வெடிப்பு கொள்கை என்று அறிவியலில் எந்த துறைக்கும் சவால் விட்டுக் கொண்டிருக்கும் குர்ஆனை 'நிலவில் பாட்டி வடை சுடும்' கதைக்கு கல்வெட்டு ஒப்பிடுகிறார். யாருடைய அறிவு இன்னும் வளராமல் இருக்கிறது என்பதை படிப்பவர்களின் கவனத்துக்கே விட்டு விடுகிறேன்.

32 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.சுவனப்பிரியன்,

தங்கள் மீது ஸலாம் உண்டாவதாக.

தெளிவான பதிவு.
//யாருடைய அறிவு இன்னும் வளராமல் இருக்கிறது என்பதை படிப்பவர்களின் கவனத்துக்கே விட்டு விடுகிறேன்.//
அழகான முடிவு.

suvanappiriyan said...

ஆசிக்!

//பதில்களையே படிக்காமல் திரும்பத்திரும்ப திரும்பத்திரும்ப திரும்பத்திரும்ப கேள்விகள் மட்டுமே கேட்பதை மட்டுமே பொழுதுபோக்காக நினைப்பவர்களை கேள்விகளை விற்பதற்கென்றே அதற்காகவே 'கடை' வைத்திருப்பவர்களை விட்டுவிடுங்களேன்... ப்ளீஸ்.//

தருமி போன்றவர்களின் பதிவுகளை படித்து விட்டு அரை குறை இஸ்லாமிய அறிவு உடைய ஒரு சில முஸ்லிம்கள் நாத்திகத்தின் பக்கம் சென்று விடக் கூடாதல்லவா! எனவே தருமிக்காக இல்லாவிட்டாலும் நடுநிலையாளர்களுக்காகவாவது இத்தகைய விளக்கங்கள் அவசியம் என்றே கருதுகிறேன். இவர்களின் கேள்விகளால் எனது இஸ்லாமிய அறிவு மேலும் விரிவடைகிறது. தற்போது வேலை நேரம் போக ஓய்வும் அதிகம் கிடைப்பதால் அதை பயனுள்ள வழியில் செலவழிக்கலாமே என்றுதான்.....

வருகைக்கும் கருத்தக்கும் நன்றி!

suvanappiriyan said...

வால் பையன்!

//நான் நாடியிருந்தால் என்று வசனம் வந்திருந்தால் தானே அது இறைவனின் வசனம், இறைவன் நாடியிருந்தால் என்றால் அது இரண்டாம் நபர் முன்றாம் நபருக்கு சொல்லும் செய்தி அல்லது கடவுளை பற்றிய அவரது கூற்று!//

தந்தை தனது மகனிடம் கோபத்தில் 'உனக்குத் திமிர் அதிகமாகி விட்டது' என்று முன்னிலையாகப் பேசிக் கொண்டே வந்து திடீரென்று 'இவனை வீட்டை விட்டு வெளியேற்றினால்தான் நிம்மதி' எனக் கூறுவார்.

அதேபோல் 'இது என் வீடு' என்று கூறும் இடத்தில் 'இது நம்ம வீடு' என்று கூறுகிறோம். இதை மற்றவர்களுக்கும் பங்கு உண்டு எனப் புரிந்து கொள்ள மாட்டோம்.

முன்னிலையிலிருந்து படர்க்கைக்கு மாறுவதும், படர்க்கையிலிருந்து முன்னிலைக்கு மாறுவதும் பேச்சு வழக்கில் எல்லா மொழிகளிலும் சர்வ சாதாரணமாகக் காணலாம். குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை. மக்களை நோக்கிப் பேசும் ஒலி வடிவமாகவே அருளப்பட்டது. எனவேதான் இது போன்ற மாற்றங்களை ஒரு சில இடங்களில் நம்மால் காண முடிகிறது.

குர்ஆன் பல இடங்களில் முகமது நபியைப் பார்த்து பேசும். சில இடங்களில் முஸ்லிம்களைப் பார்த்து பேசும். சில இடங்களில் தருமியையும், வால் பையனையும் பார்த்து கூட பேசும். குர்ஆனை நீங்கள் முழுவதும் வாசித்தால் இந்த பேசும் வழக்கு முறையை பல இடங்களில் காணலாம்.

suvanappiriyan said...

சார்வாகன்!

//இரண்டாவது ஏறத்தாழ எல்லா மதங்களின் புத்தகங்களில் குறிப்பிடும் மனிதர்கள், சம்பவ்ங்கள்,அத்தாட்சிகள் போன்ற விஷயங்கள் வரலாற்று ஆதாரம் இல்லாத்வை.

அப்படி ஏதாவது வரலாற்று ஆதாரம் இருந்தால் கூறுங்கள்.//

குர்ஆன் முதன்முதல் முகமது நபிக்கு இறக்கப்பட்ட ஹீரா குகையை இன்றும் நாம் பார்க்கலாம். இஸ்லாமிய வரலாற்றில் குறிப்பிடப்படும் அனைத்து இடங்களும் இன்றும் மெக்கா, மதீனா நகரங்களில் நாம் காணலாம். மோஸே என்ற இறைத்தூதர் எகிப்திலிருந்து விரட்டப்பட்டு கடல் பிளந்து(டென் கமாண்டஸ் திரைப்படம்) மறு கரையான சவூதியை அடைகிறார். அங்கு அவரோடு வந்த முஸ்லிம்கள் அவரிடம் குடிக்க தண்ணீர் கேட்கின்றனர். மோஸேயின் பிரார்த்தனையை ஏற்ற இறைவன் பன்னிரண்டு இடங்களில் இருந்து தண்ணீரை வரவழைக்கிறான். அனைத்தும் மலைகள் அடர்ந்த பாறைகள். அந்த ஊற்றுகளில் இருந்து இன்றும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நானும் எனது நண்பர்களும் அந்த இடங்களை எல்லாம் சென்று பார்த்தோம்.

அதே போல் இறைத்தூதர் ஸாலிஹூம் அவரைப் பின்பற்றிய மக்களும் மலைகளையே குடைந்து வீடுகள் அமைத்திருந்தனர். இதுவும் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது. அதையும் நாங்கள் சென்று பார்த்து பிரம்மித்து நின்றோம். 3000 வருடங்களுக்கு முன்பே அந்த மக்கள் நாகரிகத்தின் உச்சத்தில் இருந்திருக்கிறார்கள். என்ன அழகிய வீடமைப்பு! அனைத்தும் ஒரே மலையில் எப்படித்தான் வடிவமைத்தார்களோ? சவூதி அரசு அந்த இடங்களை எல்லாம் புராதனச் சின்னமாக பாதுகாத்து வருகிறது. தபூக் நகரைச் சுற்றி இந்த இடங்களெல்லாம் அமைந்துள்ளது.

ஏசு நாதர் பிறந்து, வளர்நத இடங்களெல்லாம் ஜோர்டான், இஸ்ரேல் போன்ற நாடுகளில் இன்றும் நீங்கள் சென்றால் பார்க்கலாம். இறைவன் நாடினால் அந்த இடங்களையும் பார்க்க எண்ணியுள்ளேன். முன்பு இதைப் பற்றி விரிவாக ஒரு பதிவே போட்டிருக்கிறேன்.

Anonymous said...

தங்கள் மீது ஸலாம் உண்டாவதாக.



Jinna

suvanappiriyan said...

வால் பையன்!

//முகமதை பார்த்து குரான் பேசினால் அது முகமதுக்கு மட்டும் தான் என அர்த்தம், முஸ்லீம்களை பார்த்து பேசினால் அது முஸ்லீம்களுக்கு, என்னையும், தருமியையும் பார்த்து பேசினால் அது எங்களுக்கு, எங்களுக்கு சொன்னதை நாங்கள் ஏன் எல்லோருக்கும் சொல்லி குழப்ப வேண்டும்!//

'முஹம்மதே!அழகியவற்றையே பேசுமாறு எனது அடியார்களுக்குக் கூறுவீராக!' - குர்ஆன் 17:53

இங்கு மக்களுக்கு அழகியவற்றையே பேசுமாறு உபதேசம் செய்ய இறைவன் முஹம்மதுக்கு கட்டளை இடுகிறான். எனவே இது முகமது நபிக்கு மாத்திரம் என்று நம்மால் ஒதுக்க முடியாது.

'இந்த குர்ஆன் மனித குலத்துக்குச் சென்றடைய வேண்டியதாகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப் படவும் வணக்கத்துக்குரியவன் ஒரே ஒருவனே இருக்கிறான் என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்க்காகவும் அறிவுடையோர் சிந்திப்பதற்க்காகவும் இது அருளப்பட்டுள்ளது.' -குர்ஆன் 14:52

எனவே குர்ஆனை அறிந்திருக்கும் முஸ்லிம்கள் அதனை அறியாத மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று முஸ்லிம்களைப் பார்த்து குர்ஆன் கட்டளை இடுகிறது.

'இறைவனை மறுக்கும் அவர்களுக்கு உண்மை தெளிவாக வேண்டும் என்பதற்க்காக பல பாகங்களிலும் அவர்களுக்கு உள்ளேயும் நமது சான்றுகளை அவர்களுக்குக் காட்டுவோம்' -குர்ஆன் 41:52

இறை மறுப்பிலிருக்கும் தருமி, வால்பையன் போன்றோருக்கு தெளிவடையும் பொருட்டு இணையம் மூலமாக, எஸ்எம்எஸ் மூலமாக, பத்திரிக்கை வாயிலாக என்று பல வழிகளில் இந்த தூதுச் செய்தியை இறைவன் எத்தி வைக்கிறான். இதனால் குழப்பம் நீங்கி தெளிவே கிடைக்கும்.

ashik anvar said...

சுவனப்பிரியன்!

கல்வெட்டு இது வரை எந்த பதிலையும் கொடுக்கவில்லையே! திருக்குறளைப் பற்றியும் நீங்கள் சுட்டிக்காட்டிய தவறைப் பற்றி ஒருவரும் பதிலளிக்கவில்லையே! சரிதான் பதில் இருந்தால்தானே வருவதற்க்கு.

தொடருங்கள் உங்கள் பணியை. நாங்களும் ஆவலோடு காத்திருக்கிறோம்.

குடுகுடுப்பை said...

'அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான வெளியில் நீந்துகின்றன.'
-குர்ஆன் (21:33)

'வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும் மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும் .......விளங்கும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.'
-குர்ஆன் 2:164//
இதுலிருந்து பூமி கோள வடிவம் என்று எங்கே இருக்கிறது. மதப்புத்தகங்கள் மீது நான் கேள்வி எழுப்புவதில்லை ஏனென்றால் அவற்றை நான் படித்ததும் இல்லை படிக்கப்போவதும் இல்லை. ஆனால் நீங்கள் குறிப்பிட்டவை கோள வடிவத்தை கூறுகிறது என்பதாக எனக்குப்படவில்லை.

குடுகுடுப்பை said...

கல்வெட்டு கூறியிருப்பது ஒரு உதாரணம் மட்டுமே என்று நினைக்கிறேன்.மற்றபடி மதங்களை குறியிட்டு நிலா விசயத்தை சொல்லவில்லை என்றும் கருதுகிறேன்.

குடுகுடுப்பை said...

இறை மறுப்பிலிருக்கும் தருமி, வால்பையன் போன்றோருக்கு தெளிவடையும் பொருட்டு இணையம் மூலமாக, எஸ்எம்எஸ் மூலமாக, பத்திரிக்கை வாயிலாக என்று பல வழிகளில் இந்த தூதுச் செய்தியை இறைவன் எத்தி வைக்கிறான். இதனால் குழப்பம் நீங்கி தெளிவே கிடைக்கும்.
//
இணையத்தை கண்டுபிடித்தவன் கூட அல்லா அல்லாத வேறு கடவுளை நம்புபவர் என்றே நினைக்கிறேன், அவருக்கும் அனுப்பிவிடுங்கள்.

குடுகுடுப்பை said...

ஆபிரகாமிய மதங்களின் அடிப்படையே வேறு மதத்தை ஏற்றுக்கொள்ளாத தன்மைதான். சகிப்புத்தன்மை என்பது அதன் அடிப்படையிலேயே கிடையாது.நீங்கள் மறுத்தாலும் ஆபிரகாமிய மதங்களின் ஆதிக்கப்போட்டியில் இன்னும் நிறைய அழிவு காத்திருக்கிறது.

suvanappiriyan said...

அன்வர்!

நானும் உங்களைப்போல் கல்வெட்டின் பதிலுக்காக காத்திருக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

ஜின்னா!
உங்களுக்கும் சாந்தி நிலவட்டும். முதல் முறையாக வருகை புரிந்திருக்கிறீர்கள். உங்கள் கருத்துக்களை தொடர்ந்து அளித்து வாருங்கள். தபூக்கில் நமது நண்பர்கள் அனைவரையும் விசாரித்ததாக சொல்லுங்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

குடுகுடுப்பை!

//இணையத்தை கண்டுபிடித்தவன் கூட அல்லா அல்லாத வேறு கடவுளை நம்புபவர் என்றே நினைக்கிறேன், அவருக்கும் அனுப்பிவிடுங்கள்.//

'தான் நாடியோருக்கு ஞானத்தை இறைவன் வழங்குகிறான்.'-குர்ஆன் 2:269

எனவே உலக ஞானம் அனைத்தும் எல்லாம் வல்ல இறைவன் புறத்திலிருந்துதான் வருகின்றன. மனிதர்கள் இறைவனை பலவாறாக பிரித்து விட்டனர்.

//ஆபிரகாமிய மதங்களின் அடிப்படையே வேறு மதத்தை ஏற்றுக்கொள்ளாத தன்மைதான். சகிப்புத்தன்மை என்பது அதன் அடிப்படையிலேயே கிடையாது.//

இநது,கிறித்தவம்,இஸ்லாம்,புத்தம்,யூதம் என்று எதை எடுத்துக் கொண்டாலும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையவைகளே! இந்த உலகுக்கு இறைவன் கொடுத்த ஒரே மார்க்கத்தை தவறான புரிதலால் இன்று பலவாறாக ஆக்கி விட்டோம். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற நம் முன்னோர்களின் கூற்று இன்று நம்மவர்களில் எத்தனை பேரால் செயல்படுத்தப்படுகிறது?

//இதுலிருந்து பூமி கோள வடிவம் என்று எங்கே இருக்கிறது.//

முன்பு நமது அறிவியல் அறிஞர்கள் பூமி அசையாது ஒரு இடத்தில் இருப்பதாகவே சொன்னார்கள். குர்ஆன் 'பூமியும், சந்திரனும், சூரியனும் வான வெளியில் நீந்துவதாக' ஒரு மிகப் பெரும் அறிவியல் உண்மையை உலகுக்கு உணர்த்தியது. பூமி உருண்டையாக இல்லாமல் தட்டையாக இருந்தால் இரவு பகல் உங்களுக்கு மாறி மாறி வர வாய்ப்பில்லை. அதைத்தான் குர்ஆன் 'இரவு பகல் மாறி மாறி வருவதிலும்' என்று கூறுகிறது. அதே போல் உலகில் எத்தனையோ பொருட்கள் இருக்க கப்பலை உதாரணத்திறகு எடுத்துக் கொள்கிறது குர்ஆன். கடலில் நாம் கரையை நெருங்கும் கப்பலை முழுவதுமாக பார்த்து விட முடியாது. முதலில் அதன் கொடி தென்படும். பிறகு அதன் மேல்தட்டு நமக்கு தெரிய வரும, முடிவில் முழு கப்பலையும் நாம் காண்கிறோம். இப்படி ஒரு மாற்றம் பூமி கோள வடிவமாக இருந்தால்தான் சாத்தியப்படும். 'எனவேதான் பூமியைப் பற்றி பேசி வந்த குர்ஆன் அதற்கு உதாரணமாக கப்பலை சொல்கிறது.

இன்னொரு வசனத்தில் 'இறைவன் பூமியை பயன்படுத்த எளிதானதாக உங்களுக்கு அமைத்தான்.எனவே அதன் பல பகுதிகளிலும் செல்லுங்கள்.' - குர்ஆன் 67:15 என்று வருகிறது. பூமி தட்டையாக இருந்தால் அதன் மேற் பரப்பில் மட்டுமே நடமாட முடியும். பக்கவாட்டிலோ அடிப்பகுதியிலோ நடமாட முடியாது. இதன் மூலமும் பூமி உருண்டை என்பதை நமக்கு விளக்குகிறது குர்ஆன்.

suvanappiriyan said...

கும்மி!
//குர் ஆனில் துல்கர்னைன் கட்டியதாகக் கூறப்படும் சுவர் உலகில் எங்குள்ளது?//

உலகம் மிக விசாலமானது நண்பரே! நமது முழு ராணுவமும் முயற்ச்சித்தும் நம்ம வீரப்பன் அண்ணாச்சியை காட்டுக்குள் பிடிக்க முடிந்ததா? வஞ்சகமாக பேசி காட்டுக்கு வெளியில் கொண்டு வந்துதான் அவனை பிடிக்க முடிந்தது. ஆப்ரிக்க காடுகள் இதை விட அடர்த்தியதானவை. மனிதனின் காலடி படாத இடங்கள் இன்னும் எத்தனையோ உள்ளது. உலக முடிவு நாளில்தான் அந்த செம்பினால் ஆன அந்த சுவர் உடைக்கப்படும் என்பது குர்ஆனின் கூற்று. அது வரை பொறுப்போமே!

//சவுதியில் இஸ்லாமியர் இஸ்லாத்தைத் துறப்பதை வெளிப்படையாக அறிவிக்க முடியுமா என்று கேட்ட கேள்வியை சாய்ஸில் விட்டது போல் இந்த கேள்வியை விட மாட்டீர்கள் என்று எண்ணுகின்றேன்.//

நமது நாடு மதசார்பற்ற நாடு.(அப்படி சொல்லிக் கொள்கிறோம்:-)) சவுதி மத சார்புடைய நாடு. முன்பே சொன்னதுபோல் இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறி. சவுதி மக்கள் விரும்பி இந்த வாழ்க்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அமைதியாகவும் வாழ்கிறார்கள். இதை விட ஒரு சிறந்த வாழ்க்கை முறையை உலகில் நீங்கள் காண்பித்தால்தான் கேள்வியே எழும். வயித்து வலிக்காக மதம் மாறிய ஏ.ஆர்.ரஹ்மானுக்கு திரும்பவும் தாய் மதம் திரும்புவதில் என்ன பிரச்னை? பெரியார்தாசன்(கருத்தம்மா புகழ்) அப்துல்லாவாக மாற என்ன அவசியம் வந்தது? யாரும் வற்புறுத்தினார்களா? இல்லையே! எனவே ஒரு மார்க்கத்தை வலுக்கட்டாயமாக நெடு நாட்களுக்கு பின் பற்ற வைக்க முடியாது. மக்கள் மனது வைக்க வேண்டும்.

suvanappiriyan said...

வால் பையன்!

//உலகெங்கும் மனிதர்களை படைத்த கடவுள், மத்தியகிழக்கு பகுதிகளில் மட்டும் தொடர்ச்சியாக நபிகளை தேந்தேர்டுத்தது ஏன் என்ற காரணமே இன்னும் புரியவில்லை!//

'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்க்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.'-குர்ஆன் 14:4

இதன் மூலம் நம் நாட்டுக்கும் நம் மொழிக்கும் கூட நபி வந்திருக்கிறார். ஆனால் அவரையும் நாம் கடவுளாக்கி விட்டோம். நம் நாட்டுக்கு அனுப்பப்பட்ட தூதர் யார் என்ற விபரம் கிடைக்கவில்லை.

//எவற்றையும் ஆராய்ச்சி கண்ணோடு பார்த்தே பழகிவிட்டது, அல்லா தான் உண்மையான கடவுள் என நிருபித்தேயேர்களானால், இல்லை என்று நாங்கள் மறுக்கப்போவதில்லை,//

'இறைவன் தான் நாடியோருக்கு ஞானத்தை வழங்குகிறான். ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டு விட்டார். அறிவுடையோரைத் தவிர யாரும் சிந்திப்பதில்லை.'-குர்ஆன் 2:269

//கடலை பிளக்க வைக்க முடிந்த கடவுளால் ஏன் இபிலீஸை அழிக்க முடியவில்லை, இபிலீஸ் கடவுளை விட சக்தி வாய்ந்தவனோ!//

'இறைவா! அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் தருவாயாக!' என்று சைத்தான் கேட்டான்.'
'குறிப்பிட்ட நேரம் வரும் நாள் வரை நீ அவகாசம் அளிக்கப்பட்டவன்' என்று இறைவன் கூறினான்.'
-குர்ஆன் 15:36,37,38
எனவே இறைவனின் அனுமதியைப் பெற்றே சைத்தான் உலகுக்கு வருகிறான்.

suvanappiriyan said...

வேலைக்குச் செல்லும் பெண்கள்!சார்வாகன்!
//திரு முகமதுவே செய்யாத வேலையை நீ ஏன் செய்ய முயல்கிறார் என்று மறுமொழி வருகிறது.//

இது முகமது நபியை அந்த மக்கள் எந்த அளவு மரியாதை வைத்திருந்தார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறது. மார்க்க விஷயங்களில் முகமது நபி சொல்லாத எந்த ஒன்றையும் அவர்கள் செய்ததில்லை. ஆனால் முந்தய வேதங்களில் ஏற்பட்டது போல் குர்ஆனிலும் மனிதர்களின் கரம் பட்டு விடக் கூடாது என்பதற்க்காக பலமுறை ஆலோசித்து குர்ஆனை தொகுக்க முயற்ச்சிக்கின்றனர். குர்ஆனை மனனம் செய்திருந்த பலரும் போரில் கொல்லப்பட்டிருந்தாரகள். எனவே குர்ஆனை தொகுப்பது அவசியம் என்றாகி விட்டது. அபுபக்கரும் உமரும் செய்த அந்த முயற்ச்சிதான் இன்று வரை மனிதக் கரங்கள் புகாமல் குர்ஆன் பாதுகாக்கப்பட்டுள்ளது.

//குரானை முழுமையாக்கி அதனை பிற மொழிகளில் மொழி பெயர்க்க அவர் எந்த முயற்சியுமே செய்ய வில்லை.//

முகமது நபி காலத்திலேயே பல தோழர்களும் உலகின் பல இடங்களுக்கும் தங்கள் நெஞ்சிலே குர்ஆனையும் முகமது நபியின் போதனையையும் சுமந்தவர்களாக பயணித்தனர். மாலிக் இப்னு தீனார் என்ற தோழர் முகமது நபி காலத்திலேயே கடல் மார்க்கமாக கேரளத்துக்கு வருகிறார். முதல் பள்ளியையும் அங்கு கட்டுகிறார். அந்த பள்ளி இன்றும் இருக்கிறது. அப்பொழுது சேரமான் பெருமாள்(கண்ணதாசனின் சேரமான் காதலி) இஸ்லாத்தை ஏற்று முகமது நபியை காணும் பொருட்டு மெக்கா நோக்கி சென்றதாக வரலாறு. அரபு மொழி தெரியாத கேரள மக்களும் தமிழக மக்களும் அந்த அரபுகளின் நாணயத்தையும் நேர்மையையும் ஒழுக்கத்தையும் பார்த்து இஸ்லாத்தை ஏற்க்கின்றனர்.

முகமது நபி காலத்திலேயே மன்னர் ஹெர்குலிஸ், மன்னர் நஜ்ஜாஸ் போன்றோருக்கு இஸ்லாத்தின் கொள்கைகளை விளக்கி கடிதங்கள் முகமது நபி சொல்ல எழுதப்பட்டது. அக்கடிதங்கள் இன்றும் பாதுகாக்கப்பட்டுள்ளன.

தருமி said...

///யாருடைய அறிவு இன்னும் வளராமல் இருக்கிறது என்பதை படிப்பவர்களின் கவனத்துக்கே விட்டு விடுகிறேன்.//
அழகான முடிவு.//

ஆமாம் .. மிக அழகான முடிவு!

தருமி said...

//இன்னொரு வசனத்தில் 'இறைவன் பூமியை பயன்படுத்த எளிதானதாக உங்களுக்கு அமைத்தான்.எனவே அதன் பல பகுதிகளிலும் செல்லுங்கள்.' - குர்ஆன் 67:15 என்று வருகிறது. பூமி தட்டையாக இருந்தால் அதன் மேற் பரப்பில் மட்டுமே நடமாட முடியும். பக்கவாட்டிலோ அடிப்பகுதியிலோ நடமாட முடியாது. இதன் மூலமும் பூமி உருண்டை என்பதை நமக்கு விளக்குகிறது குர்ஆன்.//

great interpretation!!! :)

suvanappiriyan said...

//ஆமாம் .. மிக அழகான முடிவு!//

ஒத்துக் கொண்டதற்கு நன்றி! :-(

//great interpretation!!! :)//

மொழி பெயர்ப்பில் தவறுகள் இருந்தால் ஆசிரியரான நீங்கள் திருத்தலாம்தானே!

தருமி said...

//ஒத்துக் கொண்டதற்கு நன்றி! :-( //

ஒத்துக் கொண்டதற்கு நன்றி என்று கூறி ஒரே ‘சோகமாக” ஆகிவிட்டீர்களே! அதுவும் சரிதான்!!

தருமி said...

//மொழி பெயர்ப்பில் தவறுகள் இருந்தால் ஆசிரியரான நீங்கள் திருத்தலாம்தானே!//

நான் சொன்னது மொழிபெயர்ப்பை அல்ல! கருத்தாக்கத்தை சொன்னேன்.

ஷாஹுல் said...

சலாம் சுவனப்பிரியன்...

உங்கள் அனுமதியோடு திரு.வால் பையனுக்கும் திரு. தருமி அவர்களுக்கும்

//உலகெங்கும் மனிதர்களை படைத்த கடவுள், மத்தியகிழக்கு பகுதிகளில் மட்டும் தொடர்ச்சியாக நபிகளை தேந்தேர்டுத்தது ஏன் என்ற காரணமே இன்னும் புரியவில்லை!//
*/ (http://dharumi.blogspot.com/2010/06/396-sam-silas-vs.html) /*

இஸ்லாம் அரபுலகத்தில் துவங்காமல், அமெரிக்காவில் துவங்கி இருந்தாலும் இந்த கேள்வி இருக்கும். ஏன் இஸ்லாம் அமெரிக்காவில் துவங்கியது? ஆக எதோ ஒரு இடத்தில் தான் துவங்க வேண்டும் என்பது நியதி. அது அரேபியாவில் துவங்கியது.

இஸ்லாம் என்பது ஹழ்ரத் இப்ராஹீம் அலை.... அவர்களின் தூய மார்கத்தை பின்பற்றிய மார்க்கம் ஆகும். ஹழ்ரத் இப்ராஹீம் அலை.... அவர்களின் புதல்வரான ஹழ்ரத் இஸ்மாயில் அலை.... அவர்கள் அரபுலகில் தான் வாழ்ந்தார்கள். மேலும் ஹழ்ரத் இப்ராஹீம் அலை... அவர்கள் தான் காபாவை கட்டினார்கள் அதனால் இஸ்லாம் அரேபியாவில் இருந்து துவங்கியது.

ஒவ்வொரு மொழி பேச கூடிய இடத்திலும் ஒரு நபி அருளப்பட்டார்கள். எல்லா நபியும் ஒரே இடத்தில் அருளப்படவில்லை. இந்தியாவில் ஹழ்ரத் ஆதம் அலை... இருந்தார்கள். அதே போல எல்லா பகுதியிலும், அந்தந்த மொழி பேச கூடிய ஒரு நபி இருந்தார்கள். உலகம் முழுதும் பல நபிகள் வியாபித்து இருந்தார்கள்.

எல்லா நபிமார்களும் ஒரு சமுதாயத்திற்கு தான் அனுப்பப்பட்டார்கள். ஆனால் நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் உலக சமுதாயம் அனைத்திற்கும் அனுப்பப்பட்டார்கள்.


ஒரு நபி ஒரு சமூதாயத்தின் பக்கம் வர வில்லை என்றால் அந்த நபியின் சட்ட திட்டம் அந்த பகுதி மக்களுக்கு பொருந்தாது. உதாரணம் ஹழ்ரத் ஈசா அலை.... அவர்கள் மக்காவிற்கு வர வில்லை. அதனால் மக்காவில் ஹழ்ரத் ஈசா அலை... அவர்களின் சட்டம் பொருந்தாது. மேலும் மக்காவில் உள்ளவர்களுக்கு ஹழ்ரத் இப்ராஹீம் அலை... அவர்களின் சட்டம் தான் பொருந்தும். ஆனால் நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் வந்த பிறகு உலகத்தில் உள்ள அனைவருக்கும் இஸ்லாத்தின் இந்த தூய சட்டத்தின் படி தான் வாழ வேண்டும். நபி ஸல்.. அவர்கள் அமெரிக்கா விற்கு செல்ல வில்லை என்றாலும், அந்த மக்களும் இஸ்லாம் ஆக வில்லை என்றால் அல்லாஹ்விடம் கேள்வி உண்டு.

ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் பல நபிகள் இருந்து ஒரு சமயம் பற்றி கூறினாலும் உங்களை போன்றவர்களால் ஏற்று கொள்ள இயலாது... உங்களுடைய அடுத்த கேள்வி ஏன் உங்கள் அல்லாஹ்வால் ஒரு தூதர் மூலம் மட்டுமே அருளா முடியாத என்பீர்கள்....

தருமி அவர்கள் உலகம் தழுவிய சமயம் எப்படி இருக்க வேண்டும் என்று கூறினால் நாங்களும் தெரிந்து கொள்வோம்.

நன்றி: மதுரை நாபிஈ (http://thisistruth.tk)

suvanappiriyan said...

உங்களின் நீண்ட விளக்கத்துக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே! நேரமின்மையால் சிலரின் கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியவில்லை. உங்களைப் போன்றவர்கள் அதை பூர்த்தி செய்கிறார்கள். முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

தருமி said...

//இஸ்லாம் என்பது ஹழ்ரத் ... இருந்து துவங்கியது.//
என்னவென்றே புரியலை.

//ஒவ்வொரு மொழி பேச கூடிய இடத்திலும் ஒரு நபி அருளப்பட்டார்கள்.//
அதாவது அகமதியாக்கள் சொல்வது போல் எல்லாம் ஒரே லிஸ்ட். இல்லீங்களா? ஆனால், அவர்கள் சொன்னதும் முகமது சொன்னதும் ஒன்றுதானோ? இல்லையே!

//நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் உலக சமுதாயம் அனைத்திற்கும் அனுப்பப்பட்டார்கள்.//
ஏனிப்படின்னு கேட்டா கோபப்படக்கூடாது.
அப்போ மத்த நமிகள் எல்லாம் யாருக்காக அனுப்பப்பட்டாங்க?

//ஏன் உங்கள் அல்லாஹ்வால் ஒரு தூதர் மூலம் மட்டுமே அருளா முடியாத என்பீர்கள்....//
இது ஒரு நல்ல கேள்வியா இருக்கே. பதிலையும் சொல்லிடுங்களேன்!

தருமி said...

சலாம் ஷாஹுல்

எனக்கு ஒரே ஒரு கேள்வி:

ஒருவர் திடீரென்று கடவுள் என்முன் தோன்றி சில ஆணைகள் எல்லா மனிதருக்கும் கொடுத்தார் என்று சொன்னால் ... அதை எப்படி நம்புவது?

தருமி said...

சென்ற 18ம் தேதி இந்து தினசரியில் Know Your English பகுதியிம் இறுதியில் ஒரு மேற்கோள் இருந்தது. அதை வாசித்த பின் முந்திய பின்னூட்ட கேள்வி என் மனதில் தோன்றியது.

தருமி said...

//ு. பூமி தட்டையாக இருந்தால் அதன் மேற் பரப்பில் மட்டுமே நடமாட முடியும். //

ரவுண்டா இருந்தா எல்லா இடத்திலும் நடமாட முடியும்; தட்டையா இருந்த நடமாட முடியாது.

நல்ல லாஜிக்... குரானில் அறிவியல்...!

ஷாஹுல் said...

//என்னவென்றே புரியலை//
சந்தேகத்திற்குரிய விசயங்களை தெளிவுபடுத்தி கொள்ளுங்கள், ஒன்றுமே புரியாதவற்றை பிறகு பார்க்கலாம்

//அதாவது அகமதியாக்கள் சொல்வது போல் எல்லாம் ஒரே லிஸ்ட். இல்லீங்களா? ஆனால், அவர்கள் சொன்னதும் முகமது சொன்னதும் ஒன்றுதானோ? இல்லையே!//

அல்லாஹ்வின் அருளால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலமாக இஸ்லாம் முழுமை பெற்றுவிட்டது... அவர்களே இறுதி தூதர்... இதன் பிறகு இஸ்லாம் மார்க்கத்தின் பெயரால் புகுத்தப்படுபவை வழிகெட்ட/ குழப்பவாதி மனிதர்களால் மட்டுமே... மேலும் நபிமார்கள் கூறியவைகளை தொகுத்து கூறுபவர்கள் அனைவரையும் நபிகள் என்று கூற இயலாது. இதை அறிந்தவர்கள்/புரிந்தவர்கள் இறைதூதர்களையும், சாதாரண மனிதர்களையும் ஒப்பிட்டு பார்க்க மாட்டார்கள் - இங்கு அதுவே பொருந்தும்.

//ஏனிப்படின்னு கேட்டா கோபப்படக்கூடாது.
அப்போ மத்த நமிகள் எல்லாம் யாருக்காக அனுப்பப்பட்டாங்க? //

இன்னொருமுறை இதை படியுங்கள்...
எல்லா நபிமார்களும் ஒரு சமுதாயத்திற்கு தான் அனுப்பப்பட்டார்கள். ஆனால் நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் உலக சமுதாயம் அனைத்திற்கும் அனுப்பப்பட்டார்கள்(தூதுத்துவத்தை கூற).

//ஏன் உங்கள் அல்லாஹ்வால் ஒரு தூதர் மூலம் மட்டுமே அருளா முடியாத என்பீர்கள்....//
இது ஒரு நல்ல கேள்வியா இருக்கே. பதிலையும் சொல்லிடுங்களேன்!

மேலும் ஒருமுறை படிக்க
எல்லா நபிமார்களும் ஒரு சமுதாயத்திற்கு தான் அனுப்பப்பட்டார்கள். ஆனால் நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் உலக சமுதாயம் அனைத்திற்கும் அனுப்பப்பட்டார்கள் அதுவும் ஒருமுறை மட்டுமே... மற்றவர்கள் ஒவ்வேரு கால கட்டத்திற்கும் ஒரு குறிப்பிட்ட சமுகத்திற்கும் இறைவனின் தூதுத்துவத்தை கூற அனுப்பப்பட்டவர்கள்.

அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்

ஷாஹுல் said...

உண்மைதான் நீங்கள் சொல்வது போல திடீரென்று கடவுள் சொன்னதாக சொன்னால் நம்புவது கடினம்தான்... ஆனால் நபி (ஸல்) அவர்கள் வருவதையும், அவருடைய கடமைகளையும், சிறப்புகளையும் முந்தைய நபிமார்கள் கூறியுள்ளார்கள் (குரான் அல்லாத மற்ற இறை வேதம்களில்). மேலும் இறுதி தூதரான நபி (ஸல்) அவர்கள் இறுதி நாட்களின் அருகில் மறுபடியும் தோன்ற போகும் ஈசா நபி அவர்கள் பற்றியும் கூறியுள்ளார்கள்...குரானில் கூறியுள்ளது போல அதுவும் நடக்கும். அப்போதும் நம்பாதவர்கள் இருக்கத்தான் போகிறார்கள்...

நீங்கள் சொல்வது போல இங்கு எதுவும் திடீரென்று தோன்றவோ, வரவோ இல்லை( அப்படி எதுவும் இருந்தால் சொல்லுங்கள் நாங்களும் தெரிந்து கொள்கிறோம்). எல்லாம் அல்லாஹ்வின் நாட்டபடி ஒரு தொடராகவே நடக்கிறது... சில விஷயங்கள் நமது அறிவுக்கு எட்டுவது போல பல விஷயங்கள் நமக்கு புரிவது இல்லை.

அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்

தருமி said...

//பல விஷயங்கள் நமக்கு புரிவது இல்லை.


அல்லாஹ்வே மிக்க அறிந்தவன் //

சந்தோஷம்

suvanappiriyan said...

//ரவுண்டா இருந்தா எல்லா இடத்திலும் நடமாட முடியும்; தட்டையா இருந்த நடமாட முடியாது.

நல்ல லாஜிக்... குரானில் அறிவியல்...!//

முன்பு உலக மக்கள் அனைவரும் பூமி தட்டையாக இருப்பதாகத்தான் நம்பியிருந்Nதூம். பூமி தன்னைத்தானே சுற்றுவதையும் சூரியனைச்சுற்றி வருவதையும் நம்பாமல் இருந்தோம். இந் நிலையில் பூமியின் கீழ் பாகத்துக்கும் செல்ல முடியும் என்று சொன்னால் நம்மால் நம்ப முடியுமா? உலகம் உருண்டை என்பதை தெரிந்து கொண்டவர்கள் வேண்டுமானால் ஒத்துக் கொள்ளலாம். எழுதப்படிக்கத் தெரியாத முகமது நபிக்கு பூமியின் மேலும் கீழும் நம்மால் செல்ல முடியும் என்று எவ்வாறு சொல்ல முடிந்தது? என்பது தான் நமக்கு முன் உள்ள கேள்வி.