Followers

Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Sunday, August 13, 2017

பல குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய கஃபில் அஹமது கான்!

பல குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய கஃபில் அஹமது கான்!

கோரக்பூரில் உள்ள மருத்துவமனையில் ஆகஸ்ட் 10 அன்று ஆக்சிஜன் பைப் லைன் 'பீப்... பீப்' என்ற அபாய ஒலியை எழுப்பியது. இரண்டு மணி நேரமே வேலை செய்யும் என்பதை அங்குள்ள மருத்துவர்களும் நர்ஸூகளும் இதனை அறிந்திருந்தனர். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர்.

அதே நேரம் குழந்தைகள் வார்டுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத டாக்டர் கஃபில் அஹமது கான் நிலைமையை புரிந்து கொண்டு ஆக்சிஜன் சப்ளை செய்யும் நிறுவனத்தோடு தொடர்பு கொண்டுள்ளார். பழைய பாக்கியை கொடுத்தாலே புதிதாக சிலிண்டர் தருவோம் என்று கூறி விட்டனர். நிலைமையை புரிந்து கொண்டு சமயோஜிதமாக தனது காரில் இரண்டு மருத்துவ மனை ஊழியர்களை அழைத்துக் கொண்டு மூன்று சிலிண்டர்களை தனியார் மருத்துவமனையிலிருந்து வாங்கி வந்தார். வரும் வழியிலேயே செல் போன் மூலமாக பைப் லைனை தயாராக வைக்கும் படி மருத்துவமனை ஊழியர்களிடம் சொல்லியுள்ளார். அதன்படி உடன் ஆக்சிஜன் பொருத்தப்பட்டு செயல்பட தொடங்கியது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பல குழந்தைகளை அந்த நேரம் உயிர் பிழைத்தன். ஆனால் அவர் கொண்டு வந்தது அரை மணி நேரம் வரையே தாங்கும்.

பிறகு வேகமாக திரும்பி சென்று மேலும் 12 சிலிண்டர்களை தனது வாகனத்தில் சுமந்து வந்து பல குழந்தைகளை காப்பாற்றியுள்ளார். ஃபைஸாபாத்திலிருந்தும் பல சிலிண்டர்களை வரவழைத்துள்ளார். அனைத்து செலவுகளையும் தனது சொந்த செலவிலேயே செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நேரத்தில் வழக்கமாக ஆக்சிஜன் அனுப்பும் நிறுவனம் உடனடி பணம் கொடுத்தால் மேலும் சிலிண்டர்களை அனுப்புவதாக கூறியது. உடனே அஹமது கான் தனது ஏடிஎம் கார்ட் மூலமாக 10000 ரூபாய் எடுத்து அந்த நிறுவனத்திடம் அளித்தார். உடன் பல சிலிண்டர்கள் மருத்துவமனை நோக்கி வந்தன. இறந்து கொண்டிருந்த பல குழந்தைகளின் உயிர் இவரது சமயோஜித முயற்சியால் காப்பாற்றப்பட்டது.

'மற்ற மருத்துவர்கள் எல்லாம் நமக்கென்ன வந்தது என்று அலட்சியமாக இருந்த போது டாக்டர் அஹமது கான் தனது சொந்த முயற்சியில் பல உயிர்களை காப்பாற்றியது வாழ்வில் மறக்க முடியாதது' என்று கவுரவ் திரியாதி என்பவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்துத்வாக்கள்  கூறுவது போல் முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியிருந்தால் இன்னும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் தங்கள் வாழ்வை முடித்திருக்கும். 'பாரத் மாதா கீ ஜே' என்றும் 'வந்தே மாதரம்' என்றும் வாயளவில் சொல்வதல்ல தேசபக்தி. நாட்டு மக்களை காப்பதில் இருக்க வேண்டும். அதுதான் உண்மையான தேசபக்தி.





Tuesday, March 14, 2017

அசீமானந்தா விடுதலை - தீர்ப்பை எழுதியது மோடியா? நீதிமன்றமா?



காவி பயங்கரவாதம் மிக மூர்க்கத்தனமாக செயல்பட ஆரம்பித்து இருக்கின்றது. மோடியின் ஆட்சி முடிவதற்குள் தங்களுடைய அனைத்து சதி வேலைகளையும் நிறைவேற்றிக் கொள்ள திட்டங்கள் தீட்டி செயல்படுத்தி வருகின்றது. இந்தியா முழுவதும் மாட்டுக்கறி தின்பவர்களுக்கு எதிராக குறிப்பாக இஸ்லாமிய, தலித், கிருஸ்தவ மக்களுக்கு எதிராக அது மேற்கொண்ட வன்முறைத் தாக்குதல்கள், காவி பயங்கரவாதிகளை விமர்சனம் செய்த எழுத்தாளர்களைக் கொலை செய்தது, இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தியைத் திணித்தது, செத்த மொழியான சமஸ்கிருதத்தை திணித்தது எனத் தொடங்கிய அதன் பயங்கரவாதம் இப்போது பல்வேறு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தொடர்புடைய கேடி சாமியார் அசீமானந்தா விடுதலையில் வந்து நிற்கின்றது. யார் இந்த அசீமானந்தா? ஒரு ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி, ஐந்து குண்டுவெடிப்புகளுக்கு மூளையாக செயல்பட்டவன், 119 பேர் உடல் சிதறி உயிரிழக்கக் காரணமான இந்து பயங்கரவாதி. அப்படி குண்டுவைத்துப் பல பேரை கொன்றதைப் பெருமையாக ஒப்புக்கொண்டவன். அப்படிப்பட்டவனைத்தான் நீதிமன்றம் இப்போது விடுதலை செய்திருக்கின்றது.


2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ராஜஸ்தானில் உள்ள ஆஜ்மீர் தர்காவில் குண்டு வெடித்து மூன்று பேர் கொல்லப்பட்டனர், 17 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கு சம்மந்தமாக அசீமானந்தா உட்பட 13 பேர்மீது குற்றம் சாட்டப்பட்டது. இப்போது இந்த வழக்கில் இருந்து அசீமானந்தா உட்பட 7 பேரை ஜெய்பூர் என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் விடுவித்துள்ளது. 3 பேர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இன்னும் மூன்று பேரை பத்துவருடங்களாக தேடிக்கொண்டே இருக்கின்றது. குற்றம் உறுதி செய்யப்பட்டவர்களில் சுனில் ஜோசியும் ஒருவர் ஆவர். இவர் 2007 ஆம் ஆண்டு டிசம்பரில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். செத்துப்போனவனை குற்றவாளி என்றும், உயிரோடு இருப்பவனை குற்றமற்றவன் என்றும் நீதி மன்றம் விடுவித்துள்ளது. இது ஒன்றும் தற்செயலானது அல்ல. அசீமானந்தா விடுதலை தொடர்பாக நாம் பார்ப்பதற்கு முன்னால் ஏன் மோடி அரசால் திட்டமிட்டு அசீமானந்தா விடுதலை செய்யப்பட்டார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய காரவான் இதழில் வெளிவந்த அசீமானந்தாவின் பேட்டியைப் பார்த்தோம் என்றால், இதை ஒரளவு நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

2012 ஜனவரி 10, 2013 ஜூன் 22, 2014 ஜனவரி 9, 2014 ஜனவரி 17 ஆகிய நாட்களில் சிறையில் பத்திரிக்கையாளர் லீனா அவர்களால் எடுக்கப்பட்ட அந்தப் பேட்டியில் அசீமானந்தா ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கும், குண்டுவெடிப்புக்கும் உள்ள பல்வேறு திடுக்கிடும் பின்னணியை விளக்கியிருந்தார். மேற்குவங்கத்தில் இருக்கும் ஹூக்ளி மாவட்டத்தில் 1951 ஆம் ஆண்டு பிறந்த அசீமானந்தாவின் இயற்பெயர் நவகுமார் சர்க்கார் என்பதாகும். முதுகலை இயற்பியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மீது ஈடுபாடுகொண்ட அசீமானந்தவை இப்படி கொலைவெறியனாக மாற்றியது விவேகானந்தரின் சிந்தனைகள் தான். “ஹிந்துமதத்தை விட்டு வெளியே ஒருவன் செல்லும் போது ஒரு ஆள் குறைவது மட்டும் நடக்கவில்லை. எதிரிகள் எண்ணிக்கையில் ஒன்று கூடுவதும் நடக்கிறது” என்ற விவேகானந்தரின் இந்துத்துவா சிந்தனையைப் படித்த அசீமானந்தா தன்னை முழுவதுமாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்காக ஒப்படைத்துக் கொண்டார். தன்னுடைய 31 ஆம் வயதில் சன்யாசியானர். அன்று முதல் தன்னுடைய நவகுமார் சர்க்கார் என்ற பெயரை அசீமானந்தா என்று மாற்றிக்கொண்டார்.

‘அசீமானந்தம்’ என்றால் எல்லையற்ற மகிழ்ச்சி என்று பொருளாம். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பழங்குடியினப் பிரிவான வனவாசி கல்யாண் ஆசிரமம் என்ற அமைப்பில் தன் வாழ்நாளில் பெரும்பகுதியைக் கழித்தவர். இதன் மூலம் பழங்குடியின மக்கள் மதம் மாறாமல் தடுத்ததாகவும், கிறித்தவ மிஷனரிகளின் செல்வாக்கை தான் குறைத்தாகவும் அவரே பெருமை பட்டுக் கொள்கின்றார். இவரின் அடிப்படையான நோக்கம் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவது கிடையாது, அவர்கள் வேறு மதம் நோக்கி செல்லக்கூடாது என்பதுதான்.

இப்படி வனவாசி கல்யாண் ஆசிரமத்தில் சேர்ந்து தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த அசீமானந்தா ‘கார்வாப்சி’ செய்வதில் புகழ்பெற்றவர். ஆயிரக்கணக்கான மக்களை இவர் தாய்மதம் திரும்புதல் என்ற பெயரில் இந்து மதத்திற்கு மாற்றியிருக்கின்றார். இதனால் இவர் பெயர் ஆர்.எஸ்.எஸ் வட்டாரத்தில் மிகப்பிரபலம். வெறும் மதத்தைப் பரப்புதல் என்ற எல்லையில் இருந்து முஸ்லிம் மக்களை பழிவாங்க வேண்டும் என்ற திட்டத்துடன் லெப்டினண்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித், பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரீஷத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் பிரக்கியா சிங் தாகூர், இந்தூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ் முன்னாள் தலைவர் சுனில் ஜோஷி ஆகியோருடன் சேர்ந்து சதித்திட்டம் செய்து குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியுள்ளார். இதன்படி 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று டெல்லியில் இருந்து பாகிஸ்தான் புறப்பட்ட சம்ஜெளதா விரைவு வண்டியில் குண்டுவைத்தனர். இதில் 68 பேர் உயிரிழந்தனர். அடுத்து 2007 ஆம் ஆண்டு மெக்கா மசூதி அருகே இவர்கள் வைத்த குண்டுவெடித்து 11 பேர் உயிரிழந்தனர். அதே ஆண்டு அக்டோபர் மாதம் ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் தர்க்காவில் வெடித்த குண்டில் மூன்று பேர் உயிரிழந்தனர். செப்டம்பர் 2006 மற்றும் செப்டம்பர் 2008 இல் மலேகானில் நடந்த இரு தாக்குதல்களில் மொத்தம் 37 பேர் உயிழந்தனர்.

இந்தக் குண்டுவெடிப்புகள் அனைத்தும் மோகன் பகவத்தின் ஒப்புதலோடு செய்யப்பட்டது என்பதைத் தன்னுடைய பேட்டியில் அசீமானந்தா கூறியிருக்கின்றார். மோகன் பகவத் தன்னை சந்தித்து “இது நடப்பது மிக முக்கியம். ஆனால் இதில் சங்கம் சம்பந்தப்படாமல் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று தன்னிடம் கூறியதாக அசீமானந்தா தெரிவித்தார். இந்த வழக்கில் மிக முக்கிய குற்றவாளியான சுனில் ஜோஷி 2007 ஆம் ஆண்டு டிசம்பரில் 29 அன்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள அவரது அம்மா வீட்டருகே மர்ம நபர்களால் துப்பாக்கியில் சுடப்பட்டு உரியிழந்து கிடந்தார். மேலும் இந்த வழக்கு விசாரணையை நடத்திவந்த மும்பை பயங்கரவாத தடுப்புப்பிரிவின் தலைவர் ஹேமந்த் கர்காரே மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் நவம்பர் 26 அன்று மர்மமான முறையில் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஆரம்பம் முதல் மர்மமான பல சம்பவங்கள் நடந்துள்ளன. எப்படி மோடி, குஜராத் கலவர வழக்கில் இருந்து பல அசைக்க முடியாத வாக்குமூலங்கள் இருந்தும் மோசடியான முறையில் விடுவிக்கப்பட்டாரோ அதே போல இந்த அசீமானந்தாவும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இப்படி நூற்றுக்கணக்கான பேரை படுகொலை செய்த இந்த ஆர்.எஸ்.எஸ் பொறுக்கி ஒரு கோழையைப் போல ஹரித்வார் அருகே ஒரு கிராமத்தில் பதுங்கியிருந்த போது சி.பி.ஐ ஆல் கைது செய்யப்பட்டான். மறைந்திருந்து தனக்குப் பிடிக்காதவர்களைக் குண்டுவைத்தும், துப்பாக்கியால் சுட்டும் கொலைசெய்யும் இந்தப் பயங்கரவாதக் கும்பல் கோழைகளைப் போல ஓடி ஒளிந்து கொள்கின்றார்கள். தயிர் சோத்தையும், வெண்பொங்கலையும் தின்றுவிட்டு வீரம் பேசும் பொறுக்கிகளின் உண்மையான வீரம் இதுதான். மோகன் பகவத்துக்கு மட்டுமின்றி மோடி போன்றவர்களுக்கும் அசீமானந்தாவின் குண்டுவைப்புச் சதிகள் தெரிந்தே இருந்தன. 2005 டிசம்பரில் அசீமானந்தாவிற்கு ஒரு லட்சம் ரூபாய் விருது, கோல்வாக்கார் நூற்றாண்டையொட்டி கொடுக்கப்பட்டது. இந்த விழாவில் முரளி மனோகர் ஜோஷியும் கலந்துகொண்டார். ஆனால் வழக்கம் போல இப்போது ஆர்.எஸ்.எஸ் காலிகள் அசீமானந்தாவுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னாலும் சொல்வார்கள்.

இந்திய நீதிமன்றங்களைப் பொருத்தவரை ஆர்.எஸ்.எஸ் காலிகளைத் தண்டிப்பதற்கு ஒரு அளவுகோலையும், இஸ்லாமியர்களை தண்டிப்பதற்கு ஒரு அளவுகோலையும் எப்போதும் பயன்படுத்திவருகின்றன. அப்சல் குருவுக்கும், யாக்கூப் மேமனுக்கு ஒரு சட்டப் புத்தகத்தையும், மோடி, அமித்ஷா, அசீமானந்தா போன்றவர்களுக்கு மனுவின் சட்டப் புத்தகத்தையும் வைத்துத் தீர்ப்பு வழங்குகின்றன. இந்திய சமூகத்தின் பொது மனசாட்சி எப்போதும் முஸ்லிம்களின் உயிரையும், தலித்துகளின் உயிரையும் மட்டும் தான் காவு கேட்கின்றது. அது மோடி, அமித்ஷா, அசீமானந்தா போன்றவர்களை கடவுளுக்கு நிகராக பார்க்க பழக்கப்படுத்தப்பட்டு விட்டது. அசீமாந்தா மீது குற்றம் இல்லை என என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் இப்போது விடுவித்துவிட்டது. என்.ஐ.ஏ, சி.பி.ஐ போன்றவற்றிற்கு ஆதாரமே இல்லாமல் ஒருவனை சிக்கவைத்து அவன் கதையை முடிக்கவும் தெரியும், அனைத்து ஆதாரங்களும் இருந்தாலும் ஒருவனை அப்பாவி என தப்புவிக்கவும் தெரியும். அதன் வேலையே ஆளும் அரசுக்கு வாலாட்டி வேலை பார்ப்பதுதான். இனிமேல் என்ன நடக்கும், மோடி தன்னுடைய ராஜகுருவுக்கு எதாவது பதவிகள் தந்து அவரை கெளரவப்படுத்தலாம். இல்லை சுனில்ஜோஷி போன்றவர்களுக்கு நிகழ்ந்தது போன்ற நிலைமையை தன்னுடைய கூலிப்படையை பயன்படுத்தி அசீமானந்தாவிற்கும் செய்து முடிக்கலாம். ஆனால் கண்டிப்பாக ஏதாவது ஒன்று நிச்சயம் நடக்கும்.

இது எல்லாம் இந்தியா இனி ஜனநாயக நாடு என்ற கிழிந்து போன முகமூடியையும் கிழித்து எறிந்துவிட்டு அம்மணமாக பார்ப்பன சனாதன தர்மத்தைச் சட்டமாக ஏற்றுக்கொண்ட நாடு என்ற நிலையை எட்டுவதற்கான முன்னோட்டங்கள் ஆகும். இனிமேல் நீதிமன்றங்கள் மூலம் வழக்காடி தங்களுடைய காவிப்படையினரை வெளியே எடுப்பதைவிட நேரடியாக சிறையைத் தகர்த்து, சினிமா படத்தில் வருவது போன்று வெளியே எடுக்கும் நிலை தொலைவில் இல்லை என்பதைத்தான் இது காட்டுகின்றது. இனி யாரை எல்லாம் நாங்கள் கொல்லப் போகின்றோம் என்பதை மோடி ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் முன்கூட்டியே சொல்லிவிட்டுப் போட்டுத்தள்ளும் காலம் நம்மை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றது. வலதுசாரிப் பாசிசம் எல்லாம் ஒரே அணியில் திரண்டு வருகின்றது. ஆனால் இடதுசாரி சித்தாந்தம் தங்களுக்குள் நூற்றுக்கணக்கில் பிளவுபட்டுச் சண்டையிட்டுக்கொண்டு, மறைமுகமாக பாசிச சித்தாந்தத்தின் வெற்றிக்கு துணை செய்துகொண்டு இருக்கின்றது. இந்த நிலை நீடித்தால் அசீமானந்தாக்கள் சட்டத்தின் துணையுடன் அடுத்த குண்டுவெடிப்பை நிகழ்த்தத் தயங்க மாட்டார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

- செ.கார்கி

Wednesday, January 27, 2016

பழ கருப்பையாவை நீக்க காரணமான நேரலை பேட்டி!

துக்ளக்' பத்திரிகையின் ஆண்டு விழா மேடையில், சோ முன்னிலையில் பல கட்சிப் பிரமுகர்கள் அமர்ந்திருக்க, ‘தமிழகத்தில் இன்று மந்திரியும் தலைமைச் செயலாளரும் கூட்டுச்சேர்ந்து கொள்ளை அடிக்கும் நிலை வந்துவிட்டது. அமைச்சர்கள் என்றால், அடாவடித்தனம் வந்துவிடுகிறது; ஐந்தாறு பி.ஏ-க்கள் வைத்துக்கொள்கிறார்கள். சால்வை எடுக்கக்கூட ஒரு பி.ஏ தேவைப்படுகிறது’ எனப் பேசி அதிரவைத்தார் துறைமுகம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ பழ.கருப்பையா.

ஓர் ஆளும் கட்சி எம்.எல்.ஏ., இவ்வளவு வெளிப்படையாகப் பேசுவது ஆச்சர்யம். பழ.கருப்பையாவைச் சந்திக்கப்போனால், அதைவிடப் பல மடங்கு ஆச்சர்யங்களையும் அதிர்ச்சிகளையும் தருகிறார்...


``திடீரென உங்கள் கட்சியையே விமர்சனம்செய்ய ஆரம்பித்துவிட்டீர்கள். அதுவும் இவ்வளவு கடுமையான விமர்சனம். கட்சித் தலைமையில் இருந்து ஏதேனும் விளக்கம் கேட்டார்களா?''

அ.தி.மு.க-வைப் பற்றி உங்களது மதிப்பீடு என்ன?''

நான்கரை ஆண்டுகாலம் எம்.எல்.ஏ-வாக இருந்து நீங்கள் செய்தது என்ன?''

விமர்சனங்களை, நீங்கள் கட்சிக் கூட்டங்களில் பேசியிருக்கிறீர்களா... அல்லது ஏதோ ஒருவிதத்தில் தலைமைக்குத் தெரியப்படுத்தி இருக்கிறீர்களா?'' என்ற பல கேள்விகளுக்கு பதிலளித்த பழ. கருப்பையாவின் எக்ஸ்க்ளுசிவ் வீடியோ பேட்டி இதோ...

Friday, January 08, 2016

பிழைக்கத் தெரிந்த மனிதர்கள் இவர்கள்....



ஆட்சி மாறப் போகுதுன்னு பட்சி சொல்லுசுல்ல...

கட்சி மாறி உடனே எங்களையும் காப்பாத்திகனும்ல...

ராஜ ராஜ சோழனாகட்டும்: மொகலாயர்களாகட்டும்

வெள்ளைக்காரன் ஆட்சியாகவும் இருந்து விடட்டும்

யார் எங்கு ஆட்சியில அமர்ந்தாலும் அங்கே நாங்க

அதிகார மையத்தை எப்படியாவது புடுச்சசுடுவோம்ல...

Tuesday, January 05, 2016

நிரஞ்சனின் தந்தை தனது மகனைப் பற்றி உருக்கம்!



பஞ்சாபில் இறந்த நிரஞ்சனின் தந்தை சிவராஜனின் உருக்கமான பேட்டி.....

"பள்ளியில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்ற நிரஞ்சன் எம்.வி. இன்ஸ்ட்டியூட்டில் பி.இ. மெக்கானிக்கல் பிரிவில் சேர்ந்தான். அங்கும் சிறப்பாக படித்து முடித்ததால், கேம்பஸ் இண்டர்வியூ-வில் பெரிய தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆனால் அதையெல்லாம் வேண்டாமென சொல்லிவிட்டு, மலையேற்ற பயிற்சிக்கு போனான்.

நிரஞ்சன் 2003-ல் தன் விருப்பப்படியே புணேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் தேர்ச்சி பெற்றான். தேசியப் பாதுகாப்பு படையில் வெடிகுண்டு நிபுணராக சேர்ந்தான். 2012-ல் நிரஞ்சனுக்கும், பாலக்காட்டை சேர்ந்த பல் மருத்துவர் ராதிகாவும் திருமணம் நடந்தது. இப்போது ஒன்றரை வயதில் விஸ்வமாயா என்கிற பெண் குழந்தை இருக்கிறாள். கடந்த சனிக்கிழமை காலை போனில் பேசும்போது கூட, ''அப்பா, பதான்கோட் விமானப்படை தளத்துக்கு போகிறேன். நீங்கள் நேரத்துக்கு சாப்பிட்டு, மருந்துகளை முறையாக எடுத்துக்கொள்ளுங்கள். தைரியமாக இருங்கள்''என சொன் னான். நிரஞ்சனின் மரணத்தை தாங்க முடியவில்லை. இருப்பினும் நாட்டுக் காக, அவனது விருப்பப்படியே ராணுவ உடையிலே உயிர்த் துறந் திருக்கிறான். கடைசியாக செப்டம்பர் மாதம் ஓண‌ம் பண்டிகையின் போது வீட்டுக்கு வந்தான். மீண்டும் ஜனவரி 26-ம் தேதி நீண்ட விடுமுறையில் வந்து, பெங்களூருவில் தங்குவதாக சொல்லிவிட்டு போனான். இப்போது பிணமாக வந்திருக்கிறான்."

--------------------------------

இந்தியாவும் பாகிஸ்தானும் உயர் மட்ட அளவில் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டு கவலையற்று இருக்கிறார்கள். இந்தியாவின் ஸ்லீப்பர் செல்கள் பாகிஸ்தானிலும் பாகிஸ்தானின் ஸ்லீப்பர் செல்கள் இந்தியாவிலும் இருந்து கொண்டு பொது மக்களை கொன்று குவிக்கிறார்கள். இரு நாட்டு அரசுகளும் தங்கள் இடத்தில் பிர்சனை விஸ்வரூபம் எடுத்தால் உடன் எல்லையில் பத்ட்டத்தை உண்டு பண்ணி மக்களை திசை திருப்புகிறார்கள். பதான் கோட் தாக்குதலும் இவ்வாறே நிகழ்த்தப்பட்டுள்ளது. எல்லையில் ராணுவம் என்ன செய்கிறது. இத்தனை கிலோ மீட்டர் இத்தனை ஆயுதங்களோடு உள்ளே எப்படி வந்தார்கள். முன்பு கார்கில் யுத்தம் நடந்த போதும் பல கிலோ மீட்டர் உள்ளே வந்து கூடாரம் அடித்து தங்கியுள்ளார்கள். பாராளுமன்ற தாக்குதலும் நடந்து பல ஜவான்கள் உயிரிழந்தது ஞாபகம் இருக்கலாம். பிஜேபி ஆட்சியில் மட்டும் ஏன் தொடர்ந்து இவ்வாறெல்லாம் நடக்கிறது. உங்களின் வாக்கு வங்கியை தக்க வைத்து கொள்ள எதிரி நாட்டோடும் கூடிக் குலாவுவீர்களா? சொந்த மக்களையே பலிகடா ஆக்குவீர்களா?

இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒன்றாக்கி விடுங்கள். அல்லது இந்தியாவையும் பாகிஸ்தானையும் நிரந்தரமாக பிரித்து விடுங்கள். இனிமேலும் நீங்கள் கோடிகளில் புரள்வதற்காக அப்பாவி ராணுவ வீரர்களின் உயிரை காவு கொடுக்காதீர்கள்.

Sunday, December 27, 2015

மோடியின் பாகிஸ்தான் விஜயம் குறித்து....





'நம்முடைய ஜவான்கள் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தால் கொல்லப்படுகிறார்கள். நமது பிரதமர் மன் மோகன்சிங் பாகிஸ்தான் பிரதமரோடு கோழிக் கறி சாப்பிட்டுக் கொண்டுள்ளார்'

தேர்தல் பிரசாரத்தில் சென்ற ஆண்டு மோடி...

தற்போது நிலைமை ஏதாவது மாறியுள்ளதா? அதை விட அதிக முறுகல் நிலைதானே உள்ளது? தற்போது நவாஸ் ஷெரீஃபோடு மோடி சிக்கன் பிரயாணி சாப்பிடுகிறாரே? நவாஸ் ஷெரீஃபின் பேத்தியின் கல்யாணத்துக்கும் சென்று வருகிறாரே? மன்மோகன் சிங்கை விட நெருக்கமாக உள்ள மோடியை யார் கேள்வி கேட்பது?

முன்பு கேட்டது எந்த வாய்? தற்போது சிக்கன் பிரியாணி சாப்பிடுவது எந்த வாய்?

---------------------------------------------

ஒரு கற்பனை கலந்துரையாடல்....

நவாஸ் ஷெரீஃப்: வாங்க மோடி ஜீ.... சாப்பாடெல்லாம் நல்லா இருந்ததா?

மோடி: ஓ.... பிரமாதம்.... அது கடவுள் இது கடவுள் என்று சொல்லி ஒன்னுத்தயும் சாப்பிட உட மாட்டேங்க்றாய்ங்க.. இப்போ தான் வயிறு நிரம்ப நிம்மதியா சாப்பிட்டேன்....

நவாஸ் ஷெரீஃப்: நல்லது... நாட்டின் பாதுகாப்பை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மோடி: எந்த குறையும் இல்லை. இந்தியாவில் பாதுகாப்போடு செல்லும் நானே இங்கு சர்வ சுதந்திரமாக வந்துள்ளேன். இதிலேயே தெரியவில்லையா?

நவாஸ் ஷெரீஃப்: உங்க கட்சி ஆட்கள் பாகிஸ்தானை ஏகத்துக்கும் கலாய்க்கிறாங்களே.. நீங்க கொஞ்சம் கண்டிக்கக் கூடாதா?

மோடி: அதை எல்லாம் கண்டுக்காதீங்க... நம்ம இந்துத்வா பசங்களுக்கு உங்க நாட்டை பத்தி ஏதாவது சொன்னாத்தான் உணர்ச்சியே வருது.... 'பாரத் மாதாகீ ஜே' என்று அப்பதான் கத்துராய்ங்க... எங்களுக்கு சில மாநிலங்களில் ஓட்டு விழுவதே உங்க நாட்டு புண்ணியத்துல தான். அதனால இதெல்லாம் சீரியஸா எடுத்துக்காதீங்க...

நவாஸ் ஷெரீஃப்: சரியாக சொன்னீர்கள். எனக்கும் பிரச்னை வரும் போதெல்லாம் காஷ்மீர் பகுதியில் ராணுவத்தை அனுப்புவேன். உடன் மக்களின் அனைத்து கவனமும் உங்க நாட்டின் மீதுதான் இருக்கும். நாம் ரெண்டு பேரும் சேர்ந்து மக்களை மடையர்களாக்கிக் கொண்டே இருப்போம்.

மோடி: ஆஹா இந்த விஷயத்திலும் நாம ஒத்து போறோம். பலே பலே...

-------------------------

தொலைக் காட்சியில் நவாஸ் ஷெரீஃபும் மோடியும் பீஃப் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நிகழ்வை பார்த்த சென்னி மலையும் ராம் நிவாஸூம் 'ஆஹா.. மோடிஜியின் என்ன ஒரு ராஜதந்திரம் பாரத்தாயா... போலோ... பாரத் மாதாகி ஜே' என்று புளங்காகிதம் அடைந்தனர் மோடி நிறையவே இவர்கள் காதில் பூ சுற்றியதை அறியாதவர்களாக!. :-)

Friday, December 25, 2015

தேர்தலில் தோற்றதால் இஸ்லாத்தை தழுவ போகிறேன்!



உத்தர பிரதேசத்தில் உள்ள பிஜ்னோர் முனிசிபாலிடி. இங்கு சமீபத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தல் நடந்தது. 1300 குடும்பங்கள் அடங்கிய இந்த ஊரில் 800 குடும்பம் முஸ்லிம்கள். 300 குடும்பம் இந்துக்கள். தேர்தலில் தலைவருக்காக ஹர்பல் சிங் என்பவர் போட்டியிட்டார். கிராம மக்களுக்கு இவர் மேல் நம்பிக்கை இல்லாததால் இவரை தலைவராக தேர்ந்தெடுக்கவில்லை. எனவெ இந்துக்கள் இவருக்கு ஓட்டளிக்கவில்லை. தேர்தலில் தோல்வியுற்றார்.

ஹர்பல் சிங்குக்கு வந்ததே கோபம். பத்திரிக்கையாளர்களை அழைத்து அதிர்ச்சிகரமான ஒரு செய்தியினை வெளியிட்டார். 'எனது மக்கள் என்னை நிராகரித்து விட்டனர். எனவே நான் இந்து மதத்தில் இருக்க பிரியமில்லை. எனது குடும்பத்தவர் 13 பெரோடு ஒட்டு மொத்தமாக இஸ்லாத்துக்குள் சென்று விட இருக்கிறோம்' என்றார் காட்டமாக! பத்திரிக்கையாயளர்களுக்கும் ஒரே அதிர்ச்சி.

இஸ்லாத்தை ஏற்க முதலில் ஏக இறைவனை ஒத்துக் கொள்ள வேண்டும். முகமது நபியை இறைத் தூதராக ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த அடிப்படையாவது இல்லாமல் ஒருவர் தேர்தலில் தோற்றதற்கெல்லாம் இஸ்லாத்துக்குள் வர முடியாது என்று சென்னி மலை, டாக்டர் அன்பு ராஜ், ராம் நிவாஸ் போன்றவர்கள் ஹர்பல் சிங்குக்கு விளக்குவார்களாக... :-)

தகவல் உதவி
சியாஸத்
24-12-2015

The man named Harpal Singh after losing the gram pradhan election was upset by his community not voting for him therefore, wants to convert to Islam; the decision which shock the whole village

http://www.siasat.com/news/betrayed-hindu-voters-man-want-revert-whole-family-islam-890952/

Saturday, December 19, 2015

'லஸ்கர் இ தொய்பா' உறுப்பினர் பெயர் சுபாஷ் ராமச்சந்திரன்!



ஒடிசா ரயிலில் குண்டு வைத்த தீவிரவாதியின் பெயர் சுபாஷ் ராமச்சந்திரன். ஆனால் அவன் 'லஸ்கர் தொய்பா' இயக்கத்தோடு தொடர்புடைவன் என்று காவல் துறை கூறுகிறது. அதனை மாலை மலரும் செய்தியாக வெளியிடுகிறது. 'இந்தியன் முஜாஹிதின்' 'லஸ்கர் இ தொய்பா' போன்ற இயக்கங்களை இயக்குபவர்கள் யாரென்று இப்போது விளங்கியிருக்கும். இவனை ஒரு முஸ்லிமைப் போல தோற்றத்தை மாற்றியிருப்பதைக் கவனியுங்கள். அமீத்ஷா தனது வேலையை ஆரம்பித்து விட்டதாகவே எண்ணுகிறேன். தேர்தல் நெருங்க நெருங்க இது போன்ற தீவிரவாத செயல்கள் நிறைய எதிர்பார்க்கலாம். பொது மக்கள் நாம் தான் கவனமாக இருக்க வேண்டும். சந்தேகப்படும்படி எவனும் உலவினால் உடன் காவல்துறை வசம் ஒப்படையுங்கள்.

Sunday, December 06, 2015

'எங்களுக்கு 2,000 பாக்கெட் கொடுத்திருங்க..!' - அ.தி.மு.க அட்ராசிட்டி வீடியோ



https://business.facebook.com/awesomemachi/videos/799291430180218/

இதற்கு இவர்கள் பிச்சையெடுத்து பிழைக்கலாம். இவ்வளவு இக்கட்டான நிலையிலும் கமிஷன் கேட்க எப்படியப்பா உங்களுக்கெல்லாம் மனது வருகிறது?

Wednesday, November 25, 2015

அமீர்கானுக்கு ஆதரவும் எதிர்பும் - ட்விட்டர் தளத்தில்



இந்தியாவில் சகிப்பின்மை மற்றும் பாதுகாப்பின்மை அதிகரித்து விட்டதாக பாலிவுட் நடிகர் ஆமிர்கான் கூறியிருந்தார். ஏற்கெனவே நாட்டில் சகிப்பின்மையும் வெறுப்பு அரசியலும் அதிகரித்துவிட்டதாகக் கூறி, எழுத்தாளர்கள் பலர் தங்களது விருதுகளைத் திரும்ப ஒப்படைத்து வரும் நிலையில், ஆமிர்கானின் இந்த வெளிப்படையான பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து ஆமிர்கானுக்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் பிரபலங்கள் ட்விட்டரில் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ஆதரவுக் குரல்கள்:

மார்க்கண்டேய கட்ஜூ, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி

ஆமிர்கானின் கருத்துகள் திரிக்கப்பட்டிருக்கின்றன. அவர் இந்தியாவை விட்டு வெளியேறுவதாகக் கூறவில்லை. வளர்ந்து வரும் சகிப்பின்மை குறித்து மற்றவர்கள் ஏற்கெனவே தெரிவித்திருந்த, அவரின் பார்வையையே வெளிப்படுத்தினார். அப்பேச்சில், குழந்தைகளுக்காக அவரின் மனைவி பயந்ததையும், இந்தியாவை விட்டு வெளியேறி விடலாமா என்று கேட்டதையும் பகிர்ந்துகொண்டார். மொத்தத்தில் இது எதுவுமில்லாத விஷயத்துக்காக தேவையில்லாமல் மற்றவர்கள் பதற்றப்படுவதாக மட்டுமே உள்ளது.

பரேஷ் ராவல், நடிகர்

ஆமிர்கான் போராட்ட குணம் படைத்தவர். இந்த நாட்டை விட்டு அவர் வெளியேறக் கூடாது. தாய்நாட்டின் மீது உண்மையான பற்றுக் கொண்டவர்கள், இக்கட்டான சமயங்களில் நாட்டை விட்டு வெளியேற மாட்டார்கள். ஆகவே இங்கிருந்தபடியே சகிப்புத்தன்மை வளரப் போராடுங்கள்.

கவிதா கிருஷ்ணன், அகில இந்திய முற்போக்கு பெண்கள் சங்க செயலாளர்

பாஜகவைப் பொருத்தவரையில், நீங்கள் இந்தியாவில் வாழ்ந்தாலும், சிலிக்கன்வேலியில் வாழ்ந்தாலும், பாஜகவை ஆதரித்தால் நீங்கள் நாட்டுப்பற்று கொண்டவர். பாஜகவை எதிர்த்தால், தேசிய எதிர்ப்புவாதி. நான் ஆமிர்கானை ஆதரிக்கிறேன்.

சுதீந்தர குல்கர்னி, அரசியல்வாதி மற்றும் கட்டுரையாளர்

ஆமிர்கானுக்கு எதிராக சகிப்பின்மையை நிறுத்துங்கள். அவர் தேசப்பற்றுக் கொண்டவராகத்தான் பேசினார்.

ரகுராம், எம்டிவி

அமீர்கான் மீதான தனிப்பட்ட தாக்குதல்களும், கிண்டல்களும், ஏசல்களும் அவரின் கருத்துக்கு உடன்படாமல் இருப்பதைக் காட்டவில்லை. சகிப்பின்மையைத்தான் காட்டுகிறது.

வினோத் மேத்தா, பத்திரிகையாளர்

லட்சக்கணக்கான இந்தியர்களின் மனக் குரலைத்தான் ஆமிர்கான் எழுப்பியிருக்கிறார். 'உன்னதமான இந்தியா'வின் தூதர், சகிப்பின்மை இந்தியா எனக் கூறியிருக்கிறார். மோடி அரசு என்ன செய்கிறது?

எதிர்ப்புக் குரல்கள்:

முரளிதர் ராவ், பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர்

துரதிர்ஷ்டவசமாக ஆமிர்கான், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக தீங்கிழைக்கும் பிரச்சாரத்தை மேற்கொள்ள முயல்கிறார்.

அனுபம்கெர், நடிகர்

அன்புள்ள ஆமிர்கான், எந்த நாட்டுக்கு செல்லவேண்டும் என்று உங்கள் மனைவியிடம் கேட்டுவிட்டீர்களா? இந்த நாடுதான் உங்களை உருவாக்கி இருக்கிறது என்பதை அவர்களிடம் தெரிவித்துவிட்டீர்களா? பல மோசமான தருணங்களில்கூட இந்த நாட்டில்தான் வாழ்ந்து வந்தீர்கள். அப்போதெல்லாம் வேறு நாட்டுக்கு செல்ல வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை?

உன்னதமான இந்தியா எப்போது உங்களுக்கு சகிப்பின்மை இந்தியாவாக மாறியது? கடந்த 7- 8 மாதங்களிலா, மற்ற இந்தியர்களுக்கு என்ன சொல்கிறீர்கள்? நாட்டை விட்டு வெளியேறவா அல்லது ஆட்சி மாற்றத்துக்காகக் காத்திருக்கவா?

ராம்கோபால் வர்மா, இயக்குநர்

சகிப்பின்மை குறித்து சில பிரபலங்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். சகிப்பின்மை அதிகரித்துவிட்டதாக கூறப்படும் இதே நாட்டில்தான் அவர்கள் பிரபலமானவர்களாக ஆனார்கள் என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது. அமீர்கான், ஷாரூக், சல்மான் கான் ஆகிய மூன்று முஸ்லீம்களும் ஒரு இந்து நாட்டின் நட்சத்திரங்களாக இருப்பதிலிருந்தே இந்தியா சகிப்புத்தன்மை கொண்டது என்பது தெரிகிறது.

ரவீணா டாண்டன், நடிகை

மோடி பிரதமராக இருப்பதை விரும்பாதவர்கள், இந்த அரசையும் முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறார்கள். அரசியல் காரணங்களுக்காக, நாட்டையே அசிங்கப்படுத்துகிறார்கள். இந்த நாடு உங்களுக்கு என்ன செய்தது என்று கேட்பதற்கு முன்னால், நீங்கள் நாட்டுக்காக என்ன செய்தீர்கள் என்று கேட்டுக்கொள்ளுங்கள்.

ஜி.வி.எல். நரசிம்ம ராவ், பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர்

ஆமிர்கான், இந்தியாவில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருக்கிறார்களே, அதுவே சகிப்புத்தன்மையின் உச்சத்தை உங்களுக்கு எடுத்துக் காட்டவில்லையா?

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
26-11-2015

அமீர்கானுக்கு எதிராக கருத்து சொல்லும் அனைவரும் பாஜக எம்பிக்களும், மந்திரிகளும், கவர்னர்களும் 'முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும்' என்று சொன்னபோது வாய் மூடி மவுனியாக இருந்ததை கவனிக்க வேண்டும். இப்போது அமீருக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் அன்றே எதிர்த்திருந்தால் அமீர்கானுக்கு இத்தகைய பேட்டி கொடுக்க அவசியமே ஏற்பட்டிருக்காது அல்லவா?

Friday, November 13, 2015

லண்டனில் மோடிக்கு கடும் எதிர்ப்பு!








ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் மோடியால் தலைக் குனிவு! இனியாவது திருந்துங்கள் இந்துத்வாவாதிகளே!

Monday, November 09, 2015

பீஹார் தேர்தலில் வெற்றி வாகை சூடிய இஸ்லாமியர்!



பீஹார் தேர்தலில் வெற்றி வாகை சூடிய இஸ்லாமியர்!

ராஷ்ட்ரிய ஜனதாதள் - 12

ஐக்கிய ஜனதா தள் - 5

காங்கிரஸ் - 6

CPI(M) - 1

----------------

1- Ali Nagar - Abdul Bari siddiqui RJD

2- Amour - Abdul Jaleel Mastan Cong

3- Arriah - Abid ur Rehman Cong

4- Arra - Mohd Nawaz Alam RJD

5- Bahadu - Ganj Tausif Alam Cong

6- Basai - Abdul Subhan RJD

7- Balrampur Mahboob Alam CPI ML

8- Baruli Nematullah RJD

9- Bisfi Fayaz Alam RJD

10 Dehri Mohd Ilyas Hussain RJD

11-Dhaka Faisal ur Rehman RJD

12- Jokihat Sarfaraz Alam JDU

13- Kadwa Shakeel Ahmed Khan Cong

14- Kasba Afaq alam Cong

15-Keoti Faraz Fatimi RJD

16- Kishan ganj Mohd Javed Alam Cong

17- Kochadhaman Mujahid Alam JDU

18- Mahisi Abdul Ghafoor RJD

19- Narkatia Shamim Ahmed RJD

20- Samasti pur Akhtarul Islam Shaheen RJD

21- Sheohar Sharfuddin JDU

22- Sikta Khurdsheed Afroz Alam JDU

23- Sursana Syed Abu Dujana RJD

24- Thakurganj Naushad Alam JDU

வாழ்த்துக்கள் சகோதரர்களே.......

ஊழலை களைந்து சாமான்ய மக்களையும் அரசின் திட்டங்கள் சென்றடைய உறுதுணையாக இருங்கள். நமது நாட்டை காவிகளிடமிருந்து காப்பாற்ற ஊழலற்ற ஆட்சியைக் கொடுத்து ஒட்டு மொத்த மக்களின் நன் மதிப்பையும் பெறுங்கள்.

Monday, October 12, 2015

இருண்ட காலத்தை நோக்கிச் செல்கிறதா இந்தியா?



பாஜக ஆட்சியில் நிலைபெறும் அச்சுறுத்தல்கள் நீண்டகால விளைவுகளைக் கொண்டவை

இந்து மதத்தின் உருவ வழிபாடு குறித்து வெளிப்படையாக விமர்சித்துவந்த 77 வயதான எம்.எம். கல்புர்கி, கடந்த அகஸ்ட் மாதம் தனது வீட்டு வாசலிலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். பிப்ரவரி மாதம், மும்பை அருகே கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் கோவிந்த பன்ஸாரே கொல்லப்பட்டார். 2013-ல், மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்த சமூக ஆர்வலர் நரேந்திர தபோல்கர் கொலைசெய்யப்பட்டார். இந்தப் படுகொலைகள், மிகப் பெரிய அபாயத்தின் அறிகுறிகள்தான். மதச்சார்பற்ற குரல்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன; பிற அபாயங்கள் தொடரப்போகின்றன.

பேச்சுரிமைக்கு எதிரான தாக்குதல்கள் இந்தியாவில் அவ்வப்போது நடப்பவைதான் என்றாலும், இந்த முறை விஷயம் வேறு மாதிரியானது. இச்சம்பவங்கள் தொடர்பான செய்திகள் முதல் பக்கத்தில் இடம்பெறுகின்றன. ஆனால், அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறது அரசு. இவ்விஷயங்கள் தொடர்பான பிரதமர் மோடியின் மவுனம், அவற்றை மறைமுகமாக ஆதரிப்பதைக் காட்டுகிறது என்றே பலர் கருதுகிறார்கள். ஏனெனில், 2014-ல் அவர் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுபோன்ற தாக்குதல்கள் வலுப்பெற்றிருக்கின்றன.

இந்து பாகிஸ்தான்?

அண்டை நாடுகளை ஒப்பிடும்போது சுதந்திரமான ஜனநாயக நாடாகவும், உயர்ந்த எண்ணங்களை ஆதரிக்கும் நாடாகவும் பெருமிதம் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு இது மிக முக்கியமான தருணம். 2011-ல் பாகிஸ்தான் தாராளவாத அரசியல் தலைவர் சல்மான் தஸீர் படுகொலை செய்யப்பட்டபோது, இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் எம்.ஜே. அக்பர் (தற்போது பாஜக செய்தித் தொடர்பாளராக இருக்கிறார்) இவ்வாறு சொன்னார்: “சல்மான் தஸீர் மட்டும் இந்திய முஸ்லிமாக இருந்திருந்தால், இந்நேரம் அவர் உயிருடன் இருந்திருப்பார்.” வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலின்போது, அந்நாட்டின் ஜனநாயக அமைப்பின் எதிர்காலம் குறித்து இந்தியா கவலை தெரிவித்திருந்தது.

மாறாக, நாம் இந்தியாவில் நடக்கும் விஷயங்களைப் பற்றித்தான் கவலைப்பட வேண்டும். இந்தியா விமர்சிக்கும் அதன் அண்டை நாடுகளின் பாதையில் இந்தியாவும் சென்றுவிடலாம் என்பதையும் நாம் உணர வேண்டும். மும்பையைச் சேர்ந்தவரும் புகழ்பெற்ற பத்திரிகையாளருமான நிகில் வேகில் என்னிடம் சொன்னார், “மதச்சார்பின்மை இல்லையெனில், இந்தியா ஒரு ‘இந்து பாகிஸ்தா’னாக இருக்கும்.”

இந்தியாவில் நடந்திருக்கும் இந்தப் படுகொலைகளுக்கும் இந்த ஆண்டு வங்கதேசத்தில் வலைப்பூ எழுத்தாளர்கள் 4 பேர் கொல்லப்பட்டதற்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. ஆனால், வங்கதேசத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக உலகளாவிய விமர்சனங்கள் எழுகிறபோது, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு எனும் அங்கீகாரப் பூச்சுக்குப் பின்னே மறைந்துகொள்கிறது இந்தியா.

நீடிக்கும் அச்சுறுத்தல்கள்

கொலைகள் மற்றும் அச்சுறுத்தல்களின் விளைவாக, சுய தணிக்கையும், பயமும் கொண்ட சூழல் உருவாகி யிருக்கிறது.

கொலையாளிகளில் சிலர் இன்னமும் பிடிபடவில்லை. ஒரு கையில் துப்பாக்கியைச் சுமந்துசெல்லும் கொலையாளிகள் மறு கையில் பெயர்ப் பட்டியலை வைத்திருக்கிறார்கள். செப்டம்பர் 20-ல் சில தொலைபேசி அழைப்புகளை இடைமறித்துக் கேட்டவர்கள் மூலம் ஒரு முக்கியமான தகவலை, பத்திரிகையாளர் வாக்லே தெரிந்துகொண்டார். மற்றொரு வலதுசாரி அமைப்பான ‘சனாதன் சன்ஸ்தா’அடுத்து தன்னைக் குறிவைத்திருப்பதாக அவருக்குத் தெரியவந்தது. கல்புர்கியின் மரணத்தைக் கொண்டாடிய வலதுசாரித் தீவிரவாதிகள் பகிரங்கமாகவே பேசினர். இந்து மதத்தின் சாதி அமைப்பை விமர்சித்துவருபவரும், ஓய்வுபெற்ற பேராசிரியருமான கே.எஸ். பகவான்தான் அடுத்த குறி என்று ட்விட்டரில் மிரட்டல் விடுத்தனர்.

மதச்சார்பற்ற நாடான இந்தியாவை, ‘இந்து தேச’மாக மாற்றும் நோக்கம்தான் இக்கொலைகளுக்குக் காரணமாக இருக்கும் என்று தெரிகிறது. அரசியல் தலைவர்களின் மவுனம் மட்டுமல்லாமல், ஆளும் கட்சியான பாஜகவின் இந்து தேசியக் கொள்கைகளும் இந்நோக்கத்துக்குத் துணைபுரிகின்றன.

இந்துத்வா எனும் தகுதி

கடந்த சில மாதங்களாக, நேஷனல் புக் ட்ரஸ்ட் மற்றும் நாளந்தா பல்கலைக்கழகம் போன்ற முக்கிய நிறுவனங்களில் ஒலித்துக்கொண்டிருந்த மதச்சார்பற்ற குரல்களை ஒழித்துக்கட்டியிருக்கிறது இந்திய அரசு. ஏதோ சராசரியான ஆட்களைத் தூக்கியடிக்கவில்லை அரசு. நாளந்தா பல்கலைக்கழக வேந்தராகப் பதவி வகித்தவர் நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென். புகழ்பெற்ற ஆளுமைகளின் பதவியிடங்கள், இந்துத்வா கொள்கை மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை மட்டுமே தகுதியாகக் கொண்டவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டன.

இந்தியா எனும் மதச்சார்பற்ற நாட்டுக்கு அடித்தள மிட்டவரும் இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவாகர் லால் நேருவின் பாரம்பரியத்தைக் குறிவைப்பதுதான், இந்த அரசின் இலக்குகளில் மிக முக்கியமானது. கடந்த மாதம், புது டெல்லியில் உள்ள ‘நேரு அருங்காட்சியகம் மற்றும் நூலக’த்தின் இயக்குநரை வெளியேற்றிய அரசு, தற்போது அருங்காட்சியகத்தின் பெயரை மாற்றத் திட்டமிட்டிருப்பதாக அறிவித்ததுடன், பிரதமர் மோடியின் சாதனைகளை விளக்கும் பணிகளைச் செய்யவும் திட்ட மிட்டிருக்கிறது. வாஷிங்டன் நினைவிடத்தை, ஒபாமா அருங்காட்சியகமாக மாற்றுவதற்கு ஒப்பானது இது!

சுதந்திரச் சிந்தனை கொண்ட தலைவர்களின் பங்களிப்புகளை இருட்டடிப்புச் செய்யும் பணிகளில் ஈடுபட்டிருப்பதுடன், மூர்க்கமான இந்து தேசியத் தலைவர்களை முன்னிறுத்துவதிலும் முனைப்புடன் இருக்கிறார்கள் பாஜக தலைவர்கள். மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த நாதுராம் கோட்ஸே வைத் ‘தேசபக்தர்’ என்று விளித்தார் பாஜக எம்.பி. சாக்‌ஷி மகராஜ். பின்னர், தனது கருத்தை அவர் திரும்பப் பெற்றுக்கொண்டாலும், அவரது கருத்தை பாஜக தலைவர்கள் பலர் ஆதரித்தார்கள். காந்தியைப் படுகொலை செய்த கோட்ஸே, ஆயுதம் தாங்கிய இந்து அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.ஸின் முன்னாள் உறுப்பினர். அந்த அமைப்புடன் தனது 8-வது வயதிலிருந்தே தொடர்பில் இருப்பவர் மோடி. இந்து தேசியவாத அரசின் நிழலில் தாங்கள் பலம் பெற்றிருப்பதாக இந்து அடிப்படைவாதிகள் கருதுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

நசுக்கப்படும் பேச்சுரிமை

2010-ல் வெளியான தனது நாவலால் ஆத்திரமடைந்த இந்து அமைப்புகளிடமிருந்து தனக்கு மிரட்டல்கள் வந்ததாக, புகழ்பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகன், கடந்த டிசம்பர் மாதம் போலீஸுக்குத் தகவல் தெரிவித்தார். அவர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் வலியுறுத்தின. எங்காவது கண்காணாமல் போய்விடுவது நல்லது என்று போலீஸார் அவருக்கு அறிவுறுத்தினர். தனித்துவிடப்பட்டவராக உணர்ந்த பெருமாள் முருகன், தனது ஒட்டுமொத்த இலக்கிய வாழ்க்கையைவிட்டே விலகுவதாக ஜனவரி மாதம் அறிவித்தார். தனது குடும்பத்தின் பாதுகாப்பைக் கருதி, எழுதுவதையே கைவிடுவதாக ஃபேஸ்புக்கில் அறிவித்தார்.

இந்த அச்சுறுத்தல்கள் பாஜக ஆட்சியில் இருக்கும் வரைதான் தொடரும் என்றுகூட நினைக்கலாம். ஆனால், இந்தியாவின் கட்டுமானத்திலேயே நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த மாற்றம், நீண்டகால விளைவு களை ஏற்படுத்திவிடும் என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். இந்தியாவில் நடக்கும் இந்தத் தாக்குதல்களை, ஏதோ மதச்சார்பற்ற எழுத்தாளர்கள் அல்லது சுதந்திரச் சிந்தனையாளர்களுக்கு மட்டும் நடக்கும் பிரச்சினையாகப் பார்க்க முடியாது. ஜனநாயகத்தைக் கட்டமைக்கும் அமைப்பின் - இதயத்தின் - மீதான தாக்குதல் இது. இந்தத் தாக்குதல்களுக்கு எதிராக இந்தியர்கள் போராட வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டுமென்று வலியுறுத்த வேண்டும். நமது சொந்தக் குரலை இழப்பதற்கு முன்னர், அனைவரின் குரல்களைக் காக்க முன்வர வேண்டும்!

- சோனியா ஃபெலீரோ,

‘பியூட்டிஃபுல் திங்: இன்சைடு தி சீக்ரெட் வேர்ல்டு ஆஃப் பாம்பே’ஸ் டான்ஸ் பார்ஸ்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தமிழில் சுருக்கமாக: வெ. சந்திரமோகன்

© ‘தி நியூயார்க் டைம்ஸ்’

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
12-10-2015

Saturday, October 10, 2015

சுஷ்மா ஸ்வராஜின் ட்விட்டும் கஸ்தூரியின் உண்மை நிலையும்!



நமது வெளியுறவுக் துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் தளத்தில் 'இந்திய பணிப்பெண்ணின் வலது கை சவுதி முதலாளியால் வெட்டப்பட்டுள்ளது. இந்த காட்டுமிராண்டித் தனத்தை வன்மையாக கண்டிக்கிறோம்' என்று பொங்கியிருந்தார். உடனே இந்துத்வாவாதிகள் இணைய தளத்தில் மேலும் பொங்கினர். இது வழக்கமான பொய் பிரசாரம்.

இந்திய தூதரகத்தின் முக்கிய அதிகாரி அனில் நோடியல் அரப் நியூஸூக்கு அளித்த பேட்டியில் 'தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கஸ்தூரி என்ற வீட்டு வேலை செய்யும் பெண் தனது அறையை உள் பக்கமாக தாளிட்டு ஜன்னல் வழியாக கயிறு மற்றும் துணிகளை கட்டி கீழே இறங்க முயற்சித்துள்ளார். பேலன்ஸ் தவறி அந்த பெண் கீழே விழுந்ததில் கையில் முறிவு ஏற்பட்டுள்ளது. தற்போது ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டார்' என்று கூறியுள்ளார்.

இஸ்லாமிய நாடுகளையும் இஸ்லாமியர்களையும் அவதூறு செய்து அவப்பெயர் ஏற்படுத்த இந்துத்வாவாதிகள் என்னென்ன வழிகளை எஎல்லாம் உபயோகிக்றார்கள் என்று பாருங்கள்.

ஒரு வெளியுறவு மந்திரி செய்தியை போடுவதற்கு முன் பல முறை அதனை சரி பார்த்திருக்க வேண்டாமா? இந்திய தூதரகத்தோடு தொடர்பு கொண்டிருக்க வேண்டாமா?

சுஷ்மா ஸ்வராஜின் ட்விட்டர் தளத்தை பார்த்து இன்று உலக மீடியாக்கள் எள்ளி நகையாடுகின்றன.

இந்துத்வாவாதிகளுக்கு இது தேவையா? மோடியிலிருந்து ராமகோபாலன் வரை ஒருவர் விடாமல் பொய் செய்திகளை பரப்புவதில் கில்லாடிகள். ஆனால் அனைத்து பொய்களும் இணையம் மூலமாக ஒரே நாளில் வெளிச்சத்துக்கு வந்து விடுகிறது.

தகவல் உதவி
அரப் நியூஸ்
10-10-2015

Tuesday, September 29, 2015

சபாஷ்... சரியான போட்டி... - லல்லு பிரசாத்!



ஆர் எஸ் எஸ் போன்ற இந்துத்வா இயக்கங்கள் இந்து பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டை முழுவதுமாக தூக்க வேண்டும் என்று தற்போது பேச ஆரம்பித்துள்ளது. ஆர் எஸ் எஸ்ஸின் கவலை எல்லாம் இரண்டு சதமான பார்பனர்களின் நலனை சுற்றியே இருக்கும் என்பது நமக்கும் தெரியும். இது பற்றி பீஹாரின் லல்லு பிரசாத் யாதவ் சமீபத்தில் கூறியிருப்பதாவது..

'இந்துத்வாவாதிகளான நீங்கள் இட ஒதுக்கீட்டை ஒழித்து விடுவது பற்றி தற்போது பேசிக் கொண்டுள்ளீர்கள். நாங்கள் பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்வுக்காக இட ஒதுக் கீட்டை மேலும் அதிகப்படுத்துவோம். உண்மையில் நீங்கள் தாய்ப் பால் குடித்திருந்தால் இட ஒதுக்கீட்டை அகற்று பார்போம்' என்று வசால் விட்டுள்ளார்.

சபாஷ்...... சரியான போட்டி!

Thursday, September 10, 2015

இந்து - பவுத்த மாநாட்டில் நரேந்திர மோடி சொன்ன கதை!



புதுடெல்லியில் நடைபெற்ற "போராட்டத் தவிர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் உணர்வுக்கான இந்து-பவுத்த முனைப்பு" என்ற மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி நேற்று பேசியதாவது....

இந்தியாவில் அக்காலத்தில் இப்படித்தான் பல முக்கிய பிரச்சினைகளுக்கு அறிஞர்களிடையே வாதங்கள் நடைபெற்றன என்றாலும், அவை வீதிக்கு வரவில்லை. ஆதிசங்கரரும் மண்டன மிஸ்ராவுக்கும் இடையே நடந்த வாதங்களில் சங்கரரே வெற்றி பெற்றார். இதில் மிக முக்கியமானது வாதங்கள் பற்றியது அல்ல. ஆனால், அவை எவ்வாறு நடத்தப்பட்டன என்பதுதான். மனித இனம் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய வாதங்களில் மிக உயர்ந்தவை என்பதை இந்நிகழ்ச்சி விளக்கும்.

இந்த வாதங்களில் மண்டன மிஸ்ரா தோற்றுப்போனால், அவர், இல்லறத்தை விட்டு துறவறத்தை மேற்கொள்ள வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆதிசங்கரர் தோல்வியடைந்திருந்தால், துறவறத்தை விட்டுவிட்டு இல்லறத்திற்கு அவர் மாறவேண்டும்.

மண்டன மிஸ்ரா ஒரு சிறந்த அறிஞர். அவர், ஆதிசங்கரர் இளைஞனராக இருந்ததால், தமக்கு சமமாக அவரை கருதவில்லை ஆகவே தீர்ப்பு கூற சங்கரரே முடிவெடுக்க வேண்டும் கூறினார். அப்போது மண்டன மிஸ்ராவின் மனைவியும் அறிஞருமான அவரை தீர்ப்புக்கூற அழைத்தார்.

மண்டன மிஸ்ரா தோல்வியடைந்தால் அவரது மனைவியை அவர் இழப்பார். ஆனால் என்ன நடந்தது என்று பாருங்கள். மண்டன மிஸ்ராவின் மனைவி. சங்கரரையும், மிஸ்ராவையும் புதிய மலர் மாலைகளை அணியச் சொல்லி அவர்கள் வாதத்தை துவக்குமாறு கூறினார்.

யாருடைய மலர் மாலை வாடிப்போகிறதோ அவர்களே இந்த வாதத்தில் தோற்றவர்களாக கருதப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். ஏன்? ஒருவருக்கு கோபம் ஏற்பட்டால் அவரது உடல் உஷ்ணம் அடைகிறது. அதனால் மலர் மாலைகள் வாடிப்போகின்ற நிலை ஏற்படும். கோபம் என்பது தோல்வியின் அடையாளம். இதன் அடிப்படையில் மண்டன மிஸ்ரா வாதத்தில் தோற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆகவே அவர் துறவறத்தை மேற்கொண்டு சங்கரருக்கு சீடரானார். இந்த வாதங்களிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது என்றால், பேச்சுவார்த்தைகளின் தன்மையும், அப்போது கோபத்திற்கு இடம்கொடுக்காமல் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிகிறது.

தகவல் உதவி

தமிழ் இந்து நாளிதழ்

10-09-2015


'கோபம் என்பது தோல்வியின் அடையாளம்' என்கிறார் நரேந்திர மோடி. 2002ல் குஜஸராத்தில் இவரும் இவரது சங்பரிவாரும் கோபப்பட்டு வன்முறை இறங்கியதை இந்துத்வாவின் தோல்வி என்பதை ஒத்துக் கொள்கிறாரா?

ஊருக்கு உபதேசம் செய்யும் நரேந்திர மோடி அவர்கள் இதே பொறுமையை குஜராத் கலவரத்தில் காட்டியிருந்தால் 3000 முஸ்லிம்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். கோதரா ரயில் எரிப்பு ஒரு விபத்து என்பது அறிக்கை. ஆனால் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ள அந்த விபத்தை முஸ்லிம்கள் செய்ததாக கற்பனையாக ஜோடித்து நாட்டு மக்களை மோத விட்டு அன்று வேடிக்கை பார்தார் இதே நரேந்திர மோடி. அப்பாவிகளின் சாபம் யாரையும் சும்மா விடாது. இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒரு நாள் அதற்கான தண்டனையை இறைவன் கண்டிப்பாக கொடுப்பான்.

Sunday, September 06, 2015

ஐஎஸ் அமைப்பை உருவாக்கியதே அமெரிக்காதான் - சிரிய தூதர்



சிவில் யுத்தம் காரணமாக இஸ்லாமிக் ஸ்டேட் என்ற சர்வாதிகார தீவிரவாதம் எழுச்சியுற்றது. இந்நிலையில் சிரியா அதிபர் பஷார் அல் அசாத் சார்பாக இந்தியா வந்துள்ள தூதர் ரியாத் கமெல் அப்பாஸ், தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பேட்டியின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

கேள்வி: ஐ.எஸ்.க்கு எதிரான போரில் இந்தியா பங்கேற்க வேண்டும் என்று கருதுகிறீர்களா?

ரியாத் கமல் அப்பாஸ்: அது இந்தியாவின் முடிவைப் பொறுத்தது. ஆனால் பயங்கரவாதத்தை ஆதரித்து வளர்க்கும் நாடுகளுக்கு எதிராக இந்தியா உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

கேள்வி: உங்கள் பார்வையில், ஐ.எஸ். அமைப்பு சக்தி வாய்ந்த பயங்கரவாத அமைப்பாக சில ஆண்டுகளில் உருவெடுத்தது எப்படி?

ரியாத் கமல் அப்பாஸ்: ஆப்கானிஸ்தானில் அல் கய்தாவை உருவாக்கியவர் யார்? ஏன்? என்பதை கூறுங்கள். அமெரிக்காதான் அல்கய்தாவை உருவாக்கியது என்பது தெளிவு. அரபு நாடுகளின் உதவியுடன், ஆப்கனில் சோவியத் யூனியனை முறியடிக்க அல் கய்தாவை உருவாக்கினர். அமெரிக்கர்கள் ஆப்கானில் படையெடுத்த போது நிறைய சவப்பெட்டிகள் ஊர் திரும்பிக் கொண்டிருந்தன. பல ஆண்டுகள் போருக்குப் பிறகு ராணுவ வீரரை தரையில் பயன்படுத்துவதன் வியர்த்தத்தை அவர்கள் உணர்ந்தனர். எனவே பிற நாடுகளில் அழிவை ஏற்படுத்தும் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு கொடுப்பதே சிறந்தது என்று அமெரிக்கா நினைத்தது. இப்படியாகத்தான் ஐ.எஸ். அமைப்பு உருவாக்கப்பட்டது. துருக்கி, கத்தார் ஆகிய நாடுகளும் இதற்கு ஆதரவு தெரிவித்தன.

தற்போது ஐ.எஸ். மிகவும் பலமாக உள்ளது. ஏன் அவர்கள் வலுவாக உள்ளனர், புறச்சக்திகள் அவர்களுக்கு ஆதரவு அளிக்கின்றனர். என்னுடைய சொந்தக் கருத்து என்னவெனில் ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக அமெரிக்கா சீரியசாக சண்டையிடவில்லை என்பதே. ஐ.எஸ். அமைப்பை அமெரிக்கா தோற்கடிக்க விரும்பவில்லை. அவர்களை கட்டுப்படுத்த விரும்புகின்றனர். இராக்கி குர்திஸ்தானில் உள்ள எர்பிலை ஐ.எஸ். தாக்கியவுடன் அமெரிக்கா உடனே சிகப்பு கோடு இட்டது. அதனை கடக்காதீர்கள் என்று ஐ.எஸ் அமைப்பை எச்சரித்தது. இதனையடுத்து சிரியாவின் மேற்குப் பகுதியிலும் ஐ.எஸ். விரிவு படுத்தியது.

கேள்வி: ஐ.எஸ்.க்கு எதிராக போர் என்ற துருக்கியின் சமீபத்திய அறிவிப்பு பற்றி உங்கள் கருத்தென்ன?

பதில்: இது சும்மா ஒரு கேம் பிளான். பொதுமக்களிடத்தில் கருத்தை உருவாக்க செய்யப்படும் தந்திரம். ஐ.எஸ். விரிவாக்கத்தில் துருக்கியின் பங்கு இருப்பதற்கான சாட்சியங்கள் எங்களிடம் உள்ளன. மொசூலில் துருக்கிய தூதரகத்திலிருந்து ஐ.எஸ். அமைப்பு சிலரை பிடித்தது, ஆனால் உடனடியாக அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதனால்தான் கூறுகிறேன், துருக்கிக்கும் ஐ.எஸ்.க்கும் நெருங்கிய நட்புறவு உள்ளது என்று. ஐ.எஸ். க்கு எதிராக போர் என்ற பெயரில் அவர்கள் உண்மையில் குர்திஷ் மக்களை எதிர்த்தே போரிடுகிறது துருக்கி.

கேள்வி: சரி இதற்கு தீர்வுதான் என்ன?

பதில்: சிரியா மக்களுக்கு ஒரு புறம் அரசு உள்ளது, மறுபுறம் ஐ.எஸ். மற்றும் அல் நுசுரா பயங்கரவாத அமைப்பு. இந்த இரண்டுதான் மக்களின் தெரிவாக உள்ளது.

ஆனால் தீர்வு எளிதானதே. பயங்கரவாதிகளுக்கு ஆயுத உதவிகளை நிறுத்த வேண்டும். எல்லைகளை மூடுங்கள், பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அகற்றுங்கள். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் துருக்கி, கத்தார், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்தப் பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

தகவல் உதவி

தமிழ் இந்து நாளிதழ்

07-09-2015

Thursday, September 03, 2015

பார்பனர்களும் இஸ்லாத்தை தழுவப் போகிறார்களாம்!



பார்பனர்களும் இஸ்லாத்தை தழுவப் போகிறார்களாம்!

உத்தரபிரதேசத்தில் கோரக்பூர் மாவட்டத்திலும் மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள கஸ்தூரிபா வித்யாலயாவில் பகுதி நேர ஆசிரியர்களாக சமஸ்கிரத ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த பணியில் 99 சதவீதம் பார்பனர்களே பணிபுரிகின்றனர். இவர்களுக்கு மாத சம்பளமாக முன்பு 7200 அரசு தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது நிதி நிலையை காரணம் காட்டி அரசானது 5000 மாத ஊதியமாக கொடுக்கிறது.

இது பற்றி பகுதி நேர சமஸ்கிரத ஆசிரிய சம்மேளனத்தைச் சேர்ந்த தீபக் துபே கூறுகிறார் 'வெங்காய விலையிலிருந்து விலைவாசி அனைத்தும் விஷம் போல் ஏறியுள்ளது. ஆனால் அரசோ 7500 லிருந்து தற்போது 5000 மாக மாத சம்பளத்தை குறைத்துள்ளது. செப்டம்பர் 14 அன்று டெல்லியின் ஜந்தர் மந்தரில் பெரும் போராட்டம் நடத்தவுள்ளோம். 3000 பகுதி நேர ஆசிரியர்கள் 746 சென்டர்களில் பணிபுரிபவர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். எங்கள் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை என்றால் ஒட்டு மொத்தமாக அனைவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வது என்று தீர்மானித்துள்ளோம்' இந்த காலத்தில் 5000 என்பது மிக சொற்ப சம்பளமே. அரசு இவர்களின் சம்பளத்தை உயர்த்திக் கொடுக்க வேண்டும்.


தலித்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் தான் முன்பு இஸ்லாத்தை நோக்கி வந்தனர். தற்போது பார்பனர்களின் கவனமும் இஸ்லாத்தின் பக்கம் திரும்பியுள்ளது. 'நான் தலையில் பிறந்தேன்: நீ காலில் பிறந்தாய்: நான் பிராமணன்: நீ சூத்திரன். நீ தொட்டால் தீட்டு' என்றெல்லாம் இந்த காலத்திலும் சொல்லிக் கொண்டிருக்காமல் உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற பரந்த மனப்பான்மைக்கு பிராமணர்களும் வந்தால் அவர்களையும் வரவேற்க இஸ்லாம் காத்துக் கொண்டுள்ளது.

அன்றைய அரபுலகில் குறைஷிகளும் நம் ஊர் பார்பனர்களைப் போல் பிறப்பின் பெருமையை பேசித் திரிந்தார்கள். மக்களை அடிமைகளாக நடத்தினர். ஆடு மாடுகளைப் போல் மனிதர்கள் சந்தைகளில் விற்கப்பட்டனர். இது அனைத்தையும் உடைத்தெறிந்தது இஸ்லாம். இறைவன் நாடினால் அதே நிலையை நமது தமிழகத்திலும் பார்க்கலாம்.

தகவல் உதவி:
டைம்ஸ் ஆஃப் இந்தியா
03-09-2015

Monday, August 31, 2015

இந்திய பொருளாதாரம் தற்போது யோகாவில் :-)



இந்திய பொருளாதாரம் சரிந்து விட்டது என்று இனிமேல் யாரும் சொல்லாதீர்கள்! இந்திய பொருளாதாரம் தற்போது யோகாவில் திளைத்திருக்கிறது. கூடிய விரைவிலேயே யோகா, சமஸ்கிரத வாரம், ராம ஜென்ம பூமி, போன்ற முன்னேற்ற திட்டங்களால் விரைவில் நிமிர்ந்து விடும்.