Followers

Showing posts with label பு(து)த்தகம். Show all posts
Showing posts with label பு(து)த்தகம். Show all posts

Sunday, March 10, 2013

"தாலிபான் பிடியில்" - யுவான்னி ரிட்லி

"தாலிபான் பிடியில்" - யுவான்னி ரிட்லி



[அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் இடிக்கப்பட்ட பின்னணியில் அமெரிக்காவினால் பழி சுமத்தப்பட்ட, தாலிபான்களைச் சந்திக்க புறப்பட்ட நங்கை நல்லாள் பிரிட்டன் நாட்டைச் சார்ந்த பத்திரிகையாளர் யுவான்னி ரிட்லி தாலிபானால் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்ட பின்லேதன்அவர்களைச் சந்திக்க வேண்டும், அவரைப்பற்றி எழுத வேண்டும் அதன் மூலம் பத்திரிகை உலகில் சாதனையை நிகழ்த்த வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டவர் தாலிபானின் கையில் சிக்கி, சிறைப்பட்டார்.

தாலிபான் யுவான் ரிட்லியை கொலை செய்துவிடுவார்கள் என்றே முழு உலகமும் எதிர்பார்த்தது. அவர் கொலை செய்யப்பட வேண்டும், அதன் மூலம் தாலிபான்களை காட்டுமிராண்டிகளாகக் காட்ட வேண்டும் என்பது அமெரிக்காவின் திட்டம். ஆனால் யுவான் ரிட்லி தாலிபான் பிடியில் இருந்து வெளியேறி மேற்கத்தியர்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதிராக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். தனது அந்த மகத்தான சாதனையை நூலாகவும் வெளியிட்டார். நாடறிந்த எழுத்தாளர் சகோதரர் மு.குலாம் முஹம்மது அவர்கள்"தாலிபான் பிடியில்" எனும் பெயரில் அதனை தமிழ் மொழியாக்கம் செய்துள்ளார்கள்.

நீங்கள் இங்கு காண்பது அதிலிருந்து சில பகுதிகளே ஆகும். இந்நூலைப்பற்றிய விபரங்கள் கட்டுரையின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நூலை ''விஸ்வரூபம்'' எனும் பெயரில் ஆஃப்கானிஸ்தானைப்பற்றி தப்பும் தவறுமாக படமெடுத்திருக்கும் கமலஹாஸனுக்கும் அவரது சகாக்களுக்கும் எவரேனும் அனுப்பி வைத்து அவர்களுக்கு உண்மை எது பொய் எது என்பதை அறிவுறுத்தினால் நல்லது. -adm. nidur.info ]

தாலிபான் பிடியில்" - யுவான்னி ரிட்லி

தமிழாக்கம்: மு. குலாம் முஹம்மது

ஆஃகானிஸ்தானியப் பெண்கள் புர்கா அணிந்திருக்கிறார்கள். ஆனால் தங்கள் வீரத்தை வெளிக்காட்டிட வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயமாக அதனை நழுவ விடமாட்டார்கள். அவர்களின் உறுதி, மனத்திடம் இவை என்னை வெகுவாகக் கவர்ந்தன.

குழி விழுந்த விழிகளைப் பெற்ற பெண்ணொருத்தி என்னிடம், ஒரு கேள்வியைக் கேட்டாள். அது மிகவும் நெருடலாக இருந்தது. அந்தக் கேள்வி, "உனக்கு எத்தனை குழந்தைகள்?" என்பதே!

நான் எனக்கு ஒரே ஒரு குழந்தைதான் என்றேன். சிரித்தாள் அவள். "உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?" என ஓர் எதிர் வினாவை வீசினேன். இதற்கு அந்தப்பெண்மணி பொட்டில் அறைந்தாற்போல் பதில் சொன்னாள்.

"அமெரிக்கர்களும், பிரிட்டன் நாட்டைச் சார்ந்தவர்களும் ஒரு குழந்தையைப் பெறும் அளவிற்கே பலமுடையவர்கள் ஆனால் எங்களால் 15 குழந்தைகள் வரை பெற்றிட முடியும். உங்களால் மிகக் குறைந்த அளவு ஆண்களையே இராணுவத்திற்கு அனுப்பிட இயலும். எங்களால் பல ஆண்களை போர்வீரர்களாகத் தந்திட இயலும். ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிராக ஒரு பெரும் படையையே எங்களால் அனுப்பிட இயலும்."

"எங்கள் குழந்தைகள் துப்பாக்கிகளோடு தான் பிறக்கின்றார்கள். துப்பாக்கிகளோடுதான் வளருகின்றார்கள். துப்பாக்கிகளோடுதான் விளையாடுகிறார்கள். அவர்கள் வீர விளையாட்டுகளைப் போர்க்களங்களிலே காட்டுபவர்கள். அங்கேதான் அவர்கள் தங்கள் மரணத்தையும் சந்திக்கின்றார்கள். போரும், பட்டினியும், போராட்டங்களும் எங்கள் வாழ்வின் பிரிக்கமுடியாத பகுதிகள். இப்படி என் பிள்ளைகளை அநியாயத்திற்கெதிரான போரிலே தந்துவிட்டு, தேவையானால் நானும் சென்று போராடுவேன்."

இப்படி அந்தப் பெண் பேசி முடித்ததும், அந்தப் பேச்சை ஆமோதிப்பது போல் சிரித்தாள், கிழவி ஒருத்தி தன் பொக்கை வாய் திறந்து. இந்த பொக்கைவாய் சீமாட்டி நூறு வயது நிரம்பியவள். அவள் பல போர்களைச் அச்ந்தித்து இருக்கிறாளாம். இந்தப் பெண்மணி என்னைப்பார்த்து ஏதோ உரக்கச்சொன்னாள். எல்லோரும் சிரித்தார்கள்.

அவள் என்ன சொன்னாள் என எனது 25 வயது தோழியிடம் கேட்டேன். அவள் அதனை மொழிபெயர்த்துச் சொன்னாள்...

அவள் ஆஃப்கானிஸ்தான் பெண்ணாம். அமெரிக்கர்களை எதிர்த்து போராடுவாளாம். ஆஃப்கானிஸ்தான் மக்களை அதுவும் குறிப்பாக பெண்களை யாரும் அடிமைப் படுத்திட இயலாதாம். இந்த மொழிபெயர்ப்பைக் கேட்டவுடன் நான் அந்தப் பெண்ணைப்பார்த்து பொறாமைப்பட்டேன்.

உண்மையில் அவர்களின் எண்ணங்கள் ஏற்றம் மிக்கவை. அவர்கள் காட்டும் வீரம் வைரம் பாய்ந்தது. விவேகம் நிறைந்தது.

இன்றுவரை ஆஃப்கானிஸ்தானிய பெண்களையோ அவர்களின் உணர்வுகளையோ நாம் புரிந்து கொள்ளவில்லை என்பதை நான் உணர்ந்தேன்.

அதுபோல் புர்காவை வெறுக்கக் கற்றுக்கொண்டுள்ளோம் அல்லாமல் புர்காவினுள்ளிருக்கும் பெண்மையையும் அதன் பொன்னறிய பண்புகளையும் நாம் புரிந்து கொள்ளவில்லை, என்பதையும் உணர்ந்தேன்.

நான் ஆஃப்காணிஸ்தானுக்குள் வருவதற்கு முன் தாலிபான்களைப் பற்றிப் படித்த நூல்கள் என் நினைவுக்கு வந்தன. "புர்காவிற்குள்" என்ற ஆவணப்படதைப் பார்ப்பவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும், தாலிபான்களைப்பற்றிய தவறான எண்ணங்களை மாற்றிக் கொள்ளவே மாட்டார்கள். இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள், தாலிபான்கள் கொடூரமானவர்கள் அவர்களை உடனேயே அழித்தாக வேண்டும் என்ற முடிவுக்கே வருவார்கள். ஷெய்ரா ஷா என்ற பெண்மணிதான் இந்த ஆவணப்படத்தை தயாரித்திருந்தார்.

"புர்காவுக்குள்" என்பது ஓர் ஆவணப்படம் என்றே உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. உண்மையில் அது உண்மைச் சம்பவங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆவணப்படமல்ல, மாறாக கற்பனைக்கதை.

ஆனால் அதனைத்தயாரித்தவர் அதை ஓர் ஆவணப்படம் எனக் குறிப்பிட்டிருந்தார். அதனால் பார்ப்பவர்கள் அத்தனையும் உண்மை என நம்பினார்கள். அதனால் தாலிபான்களை வெறுத்தார்கள்.

ஆனால் என் கண் முன்னால் நான் பார்க்கும் தாலிபான்கள் முற்றிலும் மாறுபட்டவ்ர்களாக இருந்தார்கள். என்னுள் ஓர் தணியாத ஆசை, இல்லை வேட்கை தலைதூக்கியது. அது தாலிபான்களைப்பறிய உண்மைகளை உலகுக்குச் சொல்லியாக வேண்டும் என்பதே.

அவர்கள் பண்பாளர்கள். அவர்களின் புத்திசாலித்தனம், பெருந்தன்மை இவற்றிற்கு முன் முட்டாளாக சிறுமைப்பட்டு நின்றேன், நான்.

....எத்துனை கள்ளங்கபடமற்ற உள்ளம் தாலிபான்களுக்கு. இந்த தாலிபான்களையா இதயம் இல்லாதவர்களாகக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள், உலக ஊடகங்களில், நொந்து போனேன்.

ஜெலாலாபாத் முதல் காபூல் வரை உள்ள வனப்பகுதி, வனப்பும், செழிப்பும் நிறைந்து கோலாகலமாக என்னை மகிழ்வித்தன. தாலிபான்களின் பூமிதான் எத்தனை ரம்மியமானது. இயற்கையின் எடுப்பும், எழிலும் அங்கே பள்ளிக் கொண்டிருந்தன. இயற்கை தன்னை அலங்கரித்துக் கொண்டு, காண்பவர்களை கவர்ந்திழுத்துக் கொண்டிருந்தது. மலையும், மடுவுமாக எங்கணும் இயற்கையின் கோலங்கள்.

குண்டு போட்டு புகை மண்டலத்தைக் கிளப்பி, நான் பின்லேடனை பிடித்து விடுவேன் என்ற புஷ்ஷின் பம்மாத்து இங்கே பலிக்காது என்பதை அந்த மலைகளைப் பார்த்த மாத்திரத்திலேயே நான் உணர்ந்தேன்.

.... நான் கொலை செய்யப்படவெண்டும் என சி.ஐ.ஏ என்ற அமெரிக்க உளவுத்துறை விரும்பியது.தாலிபான்கள் காட்டுமிராண்டிகள் என உலகிலுள்ள எல்லாப் பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் நம்பிட வேண்டும். அதற்காக பத்திரிகை துறையில் கொடிகட்டிப்பறந்த நான் கொலை செய்யப்பட வேண்டும் என அமெரிக்க உளவுத்துறை விரும்பியது. விரும்பியதோடு நின்றுவிடவில்லை. அதற்கான ஏற்பாடுகளையும் செய்தது.

...ஆனால் தாலிபான்கள் தங்களது சீரிய முயற்சியால் உண்மைகளைக் கண்டுபிடித்தார்கள். அவர்கள் என்னைப் பற்றிய உண்மையான தகவல்களைத் திரட்டியதோடு மட்டுமல்ல, அமெரிக்க உளவுத்துறையின் தகிடுதத்தங்களையும் கண்டுபிடித்து விட்டார்கள்.

சவால்களும், சோதனைகளும் நிறைந்த அவரது ஆஃப்காணிஸ்தான் பயணத்தைப் பற்றி மேலும்தெரிந்துகொள்ள இந்நூலை வாங்கிப்படியுங்கள். அமெரிக்க கைக்கூலிகளின் பொய்களுக்கு பதிலளியுங்கள்.

நூலைப்பற்றிய விபரங்கள் :

"தாலிபான் பிடியில்"

தமிழாக்கம்: மு. குலாம் முஹம்மது M.Com., M.A.,JMC.

VERGAL PUBLICATIONS

52/1, Mannady Street,

Konica Color Lab Building,

4th Floor, Room: 7

Mannady, Chennai - 600 001.

Website: www.darultrust.in

Thursday, January 17, 2013

தமிழகத்தின் தர்ஹாக்களைப் பார்த்து வருவோம்!

'தமிழகத்தின் தர்ஹாக்களைப் பார்த்து வருவோம்:

தூய வழி காட்டச் சொல்லி கேடடு வருவோம்'

என்று இஸ்லாத்தை சரியாக விளங்காத ஒரு பாடகரின் பாட்டு தமிழகமெங்கும் முன்பு பிரபலமாக இருந்தது. ஆனால் இந்த தர்ஹாக்களைப் பற்றி முகமது நபி என்ன சொல்லுகிறார் என்று பார்ப்போம்.

கப்ருகள் கட்டப்படுவதையும், பூசப்படுவதையும், அதன் மீது உட்காருவதையும் நபி அவர்கள் தடை செய்தார்கள். அறிவிப்பாளர் : ஜாபிர்(ரலி), நூல்கள் : அஹ்மது, முஸ்லிம், நஸயீ, அபூதாவூத், திர்மிதி.

யூத கிறிஸ்த்தவர்களில் ஒரு நல்ல மனிதன் இறந்து விடும் போது, அவனது கப்ரின் மீது ஒரு வணங்கும் இடத்தை கட்டிக் கொள்வார்கள். நாளடைவில் அதில் சில வடிவங்களையும் அமைத்துக் கொள்வார்கள். அல்லாஹ்விடம் இவர்களே மிகக் கெட்டவர்கள் என்று நபி அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி.

நீங்கள் எனது அடக்கத் தலத்தை விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கி விடாதீர்கள் என்று நபி அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பாளர் : அபூ ஹூரைரா (ரலி) நூல் : அபூதாவூத்.

உயரமான எந்த அடக்கத் தலத்தையும், இடித்து சமப்படுத்தாமல் விட்டு விடாதே! எனக் கூறி, நபி அவர்கள் என்னை அனுப்பிய பணிக்கே உம்மையும் அனுப்புகிறேன், என அலீ (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹய்யாஜீல் அஹ்தீ (ரலி) நூல்கள் : முஸ்லிம், திர்மிதி, நஸயீ, அபூதாவூத், அஹ்மது.


இஸ்லாம் எந்த அளவு தர்ஹாக்கள் கட்டுவதை எதிர்க்கிறது என்று பார்த்தோம். ஆனால் அதே இஸ்லாத்தின் பெயரால் நமது தமிழகத்தில் உள்ள தர்ஹாக்களின் பெயர்களைப் பார்ப்போம்.



தமிழகத்தின் தர்ஹாக்களின் பெயர்களைப் பாரீர்!

1. பீடி மஸ்தான் (பீமா பள்ளி)
2. கட்டி மஸ்தான் (பொறையார் )
3. சட்டி மஸ்தான் (பொதக்குடி)
4. சங்கிலி மஸ்தான் (கோயம்பத்தூர்)
5. மோனகுரு மஸ்தான் (ஊமைப்பிள்ளை அவ்லியா-தொண்டி)
6. குரங்கு மஸ்தான். தஞ்சை
7. அனுமான் அவ்லியா தஞ்சை
8. அணிப்பிள்ளை அவ்லியா தஞ்சை
9. பாஸ்போர்ட் அவ்லியா தஞ்சை
10. கப்ரடி அவ்லியா (திருவிதாங்கோடு)
11. காட்டு பாவா அவ்லியா (தக்கலை அருகில், பேட்டை )
12. வேப்ப மரத்து அவ்லியா (கோட்டார்)
13. மாமரத்து அவ்லியா (நீலவெள்ளி)
14. மரத்தடி அவ்லியா (கோட்டார் )
15. மரக்கட்டை அவ்லியா (சென்னை ராயபுரம்)
16. மோத்தி பாவா (சென்னை,அண்ணா சாலை)
17. மிஸ்கீன் அவ்லியா நெல்லை
18. பச்சை அவ்லியா நெல்லை
19. பக்கீர் மஸ்தான். நெல்லை
20. பிச்சை அவ்லியா (திலி பேட்டை)
21. அப்துர் ரஸ்ஸாக் மஸ்தான். (திருவனந்தபுரம்)
22. மலுக்கர்; மஸ்தான் (மஞ்சேரி, கேரளா)
23. மைதீன் பிச்சை அவ்லியா (பொட்டல் புதூர்)
24. ஆத்தங்கரை அவ்லியா (ஆத்தங்கரை)
25. அக்கரைப்பள்ளி அவ்லியா (குளச்சல்)
26. அம்பலத்து அவ்லியா (திருவிதாங்கோடு)
27. மக்கட்டி லெப்பை அவ்லியா (திருவிதாங்கோடு)
28. காத்தாடி அவ்லியா (ஆளூர்)
29. பல்லாக்கு அவ்லியா (கீழக்கரை)
30. ஸந்தூக் அவ்லியா திருவை)
31. கால்துட்டு அவ்லியா (காயல் பட்டணம்)
32. சாலை சாஹிப் அவ்லியா (புது ஆயங்குடி)
33. நிர்வாண அவ்லியா(மஜ்தூப் வலி)(காயல் பட்டணம்)
34. ஹயாத் அவ்லியா (கோட்டார்)
35. ஹயாத்தே அவலியா (திட்டு விளை,
36. பிரேக் ஷா அவ்லியா (கொடிக்கால பாளையம்)
37. ஹாஸ் பாவா அவ்லியா (கொடிக்கால பாளையம்)
38. கேத்தல் பாவா அவ்லியா (புதுப்பட்டினம்)
39. பட்டாணி சாஹிப் அவ்லியா (திலி பேட்டை)
40. கோட்டு மூஸா அவ்லியா (கூத்தா நல்லூர்)
41. மொட்டைப பக்கீர் அவ்லியா (சிவகங்கை)
42. கோதரிசா அவ்லியா (பொட்டல் புதூர் அருNயுள்ள மலை)
43. அப்பா ராவுத்தர் அவ்லியா (கூத்தா நல்லூர்)
44. படேஷா ஹஸ்ரத் அவ்லியா (மஞ்சக்குப்பம்)
45. வண்ணம் தீட்டும் அவ்லியா (நக்ஷபந்த் அவ்லியா)
46. கோயுன் பாபா அவ்லியா (ஆடுகளின் தந்தை, துருக்கி)
47. தக்கடி அப்பா அவ்லியா (பஸீர் வலி மேலப்பாளையம்) புலிகள் பாம்புகளிடையே வந்து காப்பாற்றியவர்)
48. ஜஹான்ஷா அவ்லியா (கொடிக்கால்பாளையம்)
49. ஒட்டகாஸ் அவ்லியா (உடன்குடி)
50. காட்டப்பா அவ்லியா ”
51. புளியடி அவ்லியா ”
52. காட்டானை அவ்லியா (வேதாளை)
53. கப்படா சாஹிப் அவ்லியா (காரைக்கால்)

இந்த பெயர்களை எல்லாம் பார்த்தாலே தெரியும் இது எந்த அளவு மோசடியான ஒரு வணக்கம் என்று. இஸ்லாத்தை அழிக்க இஸ்லாமிய எதிரிகளால் உண்டாக்கப்பட்டதே இந்த சமாதி வணக்கம். இதற்கு அறிந்தோ அறியாமலோ நமது சகோதர சகோதரிகள் அதிக அளவில் பலியாகிக் கொண்டுள்ளனர். இதில் அதிகமாக பெண்களே ஆர்வம் காட்டுகின்றனர்.

கடந்த 20 வருடங்களாக தவ்ஹீத் (வஹாபிகள்) வாதிகளின் அயராத முயற்சியால் இன்று ஓரளவு தமிழகத்தில் சமாதி வழிபாடு குறைந்துள்ளது. முற்றிலுமாக இந்த வணக்கத்தை இஸ்லாமியர்கள் விட்டொழிக்க வேண்டும்.

யாரை எல்லாம் நாம் இறை நேச செல்வர்களாக மதிதது வருகிறோம் என்பதற்குரிய விளக்கத்தையும் பார்ப்போம்.


1. வாயில் போட்டு மென்ற வெற்றிலையால் பிள்ளை வரம் கொடுப்பவர் அவ்லியா !
2. எச்சிலைத் தண்ணீரில் துப்பி வேண்டியது நடக்க துப்பிக்கொடுப்பவர் அவ்லியா !
3. பச்சைத் தலைப்பாகை, நீண்ட அங்கி, ஜபமாலை சகிதம் உலா வருவோர் அவ்லியா!
4. மாந்திரீகம்,இஸ்மு,தகடு,தாவீஸ்,இலை,பீங்கான் என ஏமாற்றும் தங்ஙள்கள் அவ்லியா!
5. தர்காக்களின் ஆதீன கர்த்தா, அவ்லியாவின் வாரிசு என வசூலுக்கு வருவோர் அவ்லியா!
6. செய்கு முஹ்யித்தீன், நாகூர் நாயகம் பரம்பரை என தம்பட்டம் அடிப்போர் அவ்லியா!
7. குழி தோண்டி (துணி நெய்யும் குழியில்) கஃபாவை காண்பவர் அவ்லியா (பீரப்பா)
8. காமமோகம் கொண்டு பெண்களை தனிஅறையில் சந்தித்து முரீது கொடுப்பவர் அவ்லியா!
9. பெண்களையும் ஆண்களையும் தடவிக்கொடுத்து ஓதி ஊதுபவர் அவ்லியா!
10. நிர்வாண கோலமாக அலையும் சன்னியாச பரதேசிகள் அவ்லியாக்கள் !
11. கஞ்சா அபின் போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்துவோர் அவ்லியாக்கள்!
12. இரவெல்லாம் கேளிக்கைகளிலும், சல்லாபங்களிலும் ஈடுபட்டுப் பகலிலே பத்தினிகளாக நடிப்போர் அவ்லியாக்கள்!

எவ்வளவு அழகிய வாழ்வு முறையை குர்ஆன் மூலம் இஸ்லாம் நமக்குத் தந்திருக்க இந்த தர்ஹாக்களை ஊருக்கு ஊர் கட்டி அதற்கு வணக்கத்தையும் செலுத்தி வரும் மக்கள் திருந்தும் நாள் எப்போது? ஏக இறைவனை மட்டுமே வணங்கப் பணிக்கப்பட்ட நமக்கு இந்த நூற்றுக் கணக்கான தர்ஹாக்கள் எதற்கு? சிந்திக்க வேண்டாமா தோழர்களே! தோழிகளே!

--------------------------------------------------


புதிய எழுத்தாளர்கள் பலர் இணைந்து தொகுத்திருக்கும் 'எதிர்க் குரல்' என்ற புத்தகம் வெளி வந்து விட்டது. பல அரிய தகவல்களைத் தாங்கி இந்த புத்தகம் வருகிறது. நீங்களும் படியுங்கள். மற்றவர்களுக்கும் புத்தகத்தை அறிமுகப்படுத்துங்கள்.


Monday, January 07, 2013

தலைவனும் தொண்டனும் - கார்ட்டூன்!



'என்னா தலைவரே! அரசியல்வாதியா இருந்து சேர்த்த லஞ்ச பணத்தை எல்லாம் ஜிம்முல வந்த கரைக்கீராரா! நல்லா இருக்குதுபா நியாயம்!'

---------------------------------------------


புதிய எழுத்தாளர்கள் பலர் இணைந்து தொகுத்திருக்கும் 'எதிர்க் குரல்' என்ற புத்தகம் விரைவில் வரவிருக்கிறது. பல அரிய தகவல்களைத் தாங்கி இந்த புத்தகம் வருகிறது. நீங்களும் படியுங்கள். மற்றவர்களுக்கும் புத்தகத்தை அறிமுகப்படுத்துங்கள்.

Friday, July 13, 2012

உண்டு சுகிக்கவில்லை: உடுத்தி மகிழவில்லை:


முகமது நபியின் எளிய வாழ்க்கை!

தன்னைச் சுற்றி ஒரு அதிகார வர்க்கத்தை உண்டாக்கிக் கொள்ளத்தான் தன்னை ஒரு இறைத் தூதராக அறிவித்துக் கொண்டார் என்று ஒரு சாராரும், தனக்கு பொருளை ஆன்மீகத்தின் பெயரால் சுருட்டிக் கொள்ளத்தான் தன்னை இறைத் தூதராக அறிவித்துக் கொண்டார் என்ற குற்றச்சாட்டை பொதுவாக பலரும் வைக்கின்றனர். ஆனால் இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு நேர் எதிராகத்தான் நபியவர்களின் வாழ்க்கை அமைந்திருந்ததை நபித் தோழர்களின் மற்றும் ஆதாரபூர்வமான நபிமொழிகளின் ஆதாரங்களோடு சகோ பி.ஜெய்னுல்லாபுதீன் 'மாமனிதர் நபிகள் நாயகம்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதன் ஒரு சில பகுதிகளை இங்கு பதிவாக தருகிறேன். படித்து பயன்பெறுங்கள்.

உடுத்தி மகிழவில்லை

அவர்கள் அணிந்திருந்த ஆடைகள், இன்றைக்குப் பரம ஏழை கூட அணிவதற்கு வெட்கப்படக் கூடியதாகத் தான் இருந்தன.

மேலே போர்த்திக் கொள்ளும் ஒரு போர்வை, கீழே அணிந்து கொள்ளும் முரட்டு வேட்டி ஆகிய இரண்டையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) எடுத்துக் காட்டி 'இவ்விரு ஆடைகளை அணிந்த நிலையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்' என்று குறிப்பிட்டார். நூல் : புகாரி 3108, 5818

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி போர்வை ஒன்றைக் கொண்டு வந்து 'இதை உங்களுக்கு அணிவிப்பதற்காக என் கையால் நெய்து கொண்டு வந்துள்ளேன்' என்றார். அவர்களுக்கு அது தேவையாக இருந்ததால் அதைப் பெற்றுக் கொண்டனர். பின்னர் அதை வேட்டியாக அணிந்து கொண்டு எங்களிடம் வந்தனர் என ஸஹ்ல் (ரலி) அறிவிக்கிறார்.
நூல் : புகாரி 1277, 2093, 5810

போர்வையை வேட்டியாக அணிந்து கொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு உடை பற்றாக்குறை இருந்துள்ளது என்பதையும், உபரியாக ஒரு ஆடை இருந்தால் நல்லது என்று ஆடையின் பால் தேவை உள்ளவர்களாக இருந்துள்ளனர் என்பதையும் இதிலிருந்து அறியலாம்.



மேலும் உடனேயே அதை வேட்டியாக அணிந்து கொண்டதிலிருந்து எந்த அளவுக்கு அவர்களுக்கு ஆடைத் தட்டுப்பாடு இருந்துள்ளது என்பதையும் இந்த நிகழ்ச்சியிலிருந்து அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓரிரு சந்தர்ப்பங்களில் இறுக்கமான கம்பளிக் குளிராடை அணிந்திருந்ததாகவும், மிகச் சில நேரங்களில் தைக்கப்பட்ட சட்டை அணிந்திருந்ததாகவும் சான்றுகள் உள்ளன. இதைத் தவிர மற்ற சந்தர்ப்பங்களில் ஒரு போர்வையை மேலே போர்த்திக் கொள்வார்கள். இரு கைகளும் வெளியே இருக்கும் வகையில் போர்வையின் வலது ஓரத்தை இடது தோளின் மீதும், இடது ஓரத்தை வலது தோளின் மீதும் போட்டுக் கொள்வார்கள். இதனால் அவர்களின் அக்குள் வரை முழுக் கைகளும் வெளியே தெரியும். பெரும்பாலும் அவர்களின் மேலாடை இதுவாகத் தான் இருந்துள்ளது. போர்வை சிறியதாக இருந்தால் கீழே ஒரு போர்வையைக் கட்டிக் கொள்வார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழும் போது (ஸஜ்தாவில்) தமது அக்குள் தெரியும் அளவுக்கு கைகளை விரித்து வைப்பார்கள். நூல் : புகாரி 390, 807, 3654

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழைத் தொழுகையின் போது தமது அக்குள் தெரியும் அளவுக்கு கைகளை உயர்த்துவார்கள். நூல் : புகாரி 1031, 3565

மக்கள் அனைவரையும் திரட்டி நடத்தப்படும் மழைத் தொழுகையின் போது கூட அக்குள் தெரியும் அளவுக்கு போர்வையைத் தான் சட்டைக்குப் பதிலாக அணிந்திருந்தனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸகாத் வரியைத் திரட்ட ஒருவரை அனுப்பினார்கள். நிதி திரட்டி வந்த அவர் 'இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இது உங்களுக்கு உரியது' என்றார். இதைக் கேட்டதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இவர் தனது வீட்டிலோ, தனது தாய் வீட்டிலோ போய் அமர்ந்து கொள்ளட்டும்! இவருக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா? என்று பார்ப்போம்' எனக் கோபமாகக் கூறினார்கள். பின்னர் அவர்களின் அக்குளை நாங்கள் பார்க்கும் அளவுக்கு தமது கைகளை உயர்த்தி 'இறைவா! நான் எடுத்துச் சொல்லி விட்டேனா?' எனக் கூறினார்கள். நூல் : புகாரி 2597, 6636, 6979, 7174, 7197

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மேலாடை பெரும்பாலும் சிறு போர்வையாகத் தான் இருந்தது என்பதையும் இதன் காரணமாகவே அவர்களின் அக்குள் தெரிந்துள்ளது என்பதையும் இந்தச் சான்றுகளிலிருந்து அறியலாம்.

மாமன்னராகவும், மாபெரும் ஆன்மீகத் தலைவராகவும் இருந்த நிலையில் தம் பதவியையும் அந்தஸ்தையும் பயன்படுத்தி அணிந்து கொள்ளும் ஆடைகளைக் கூட அவர்கள் போதிய அளவுக்குச் சேர்த்துக் கொள்ளவில்லை என்பதற்கு இவை சான்றுகளாக உள்ளன.

உணவு, உடை போன்ற வசதிகளுக்காகத் தான் மனிதன் சொத்துக்களைத் தேடுகிறான். எல்லாவிதமான முறைகேடுகளிலும் ஈடுபடுகிறான். மேனியை உறுத்தாத வகையில் மெத்தைகளையும் விரும்புகிறான். இந்த வசதிகளையெல்லாம் நாற்பது வயதுக்கு முன் அனுபவித்துப் பழக்கப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இப்போது நினைத்தால் அந்தச் சுகங்களை அனுபவிக்கலாம் என்ற நிலையில் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவற்றைத் தவிர்த்து வாழ்ந்திருக்கிறார்கள் என்பதும் அவர்களின் நேர்மைக்குச் சான்றாக அமைந்துள்ளது.


--------------------------------------------------

உணவு, உடை மட்டுமின்றி வகை வகையான வீட்டு உபயோகப் பொருட்களைப் பயன்படுத்தினார்களா? அல்லது அலங்காரப் பொருட்களை வாங்கிக் குவித்திருந்தார்களா?

'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போதும் தட்டில் வைத்து உணவைச் சாப்பிட்டதில்லை. ரொட்டியைத் துணி விரிப்பின் மீது வைத்துத் தான் சாப்பிடுவார்கள்'' என்று நபிகள் நாயகத்தின் பணியாளர் அனஸ் (ரலி) கூறுகிறார். நூல் : புகாரி 5386, 5415

கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணை தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாய்ந்து கொள்ளும் தலையணையாக இருந்தது என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார். நூல் : புகாரி 6456

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பாயின் மீது படுப்பது வழக்கம். அதனால் அவர்கள் மேனியில் பாயின் அழுத்தம் பதிந்து விடும். இதைக் கண்ட நாங்கள் 'அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அனுமதித்தால் இதன் மீது விரித்துக் கொள்ளும் விரிப்பைத் தயாரித்துத் தருகிறோம்; அது உங்கள் உடலைப் பாதுகாக்கும்' எனக் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'எனக்கும், இந்த உலகத்துக்கும் என்ன உறவு உள்ளது? மரத்தின் நிழலில் சற்று நேரம் இளைப்பாறி விட்டுச் செல்லக்கூடிய ஒரு பயணிக்கும், அந்த மரத்துக்கும் என்ன உறவு உள்ளதோ அது போன்ற உறவு தான் எனக்கும், இவ்வுலகத்துக்கும் உள்ளது' எனக் கூறி அதை நிராகரித்து விட்டார்கள். இதை அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார். நூல்கள் : திர்மிதி 2299, இப்னுமாஜா 4099, அஹ்மத் 3525, 3991

அனைத்து மனிதர்களிடமும் இருக்கக் கூடிய அத்தியாவசியப் பொருட்களில் படுத்துக் கொள்ளும் பாய் முக்கியமானதாகும். பிச்சை எடுத்து உண்பவர்கள் கூட தமது குடும்பத்திற்குத் தேவையான பாய்களை வைத்திருப்பார்கள். ஆனால் மாமன்னராக இருந்த நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் இருந்தது ஒரே ஒரு பாய் தான். அது பாயாக மட்டுமின்றி பல்வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தப்படும் நிலையில் இருந்துள்ளது.



'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பாய் இருந்தது. அதைப் பகலில் விரித்துக் கொள்வார்கள். இரவில் அதைக் கதவாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்' என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார். நூல் : புகாரி 730, 5862

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாயின் மேல் எதையும் விரிக்காமல் படுத்திருந்தார்கள். இதனால் விலாப்புறத்தில் பாயின் அடையாளம் பதிந்திருந்தது. கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணையைத் தலைக்குக் கீழே வைத்திருந்தார்கள். அவர்களின் கால் மாட்டில் தோல் பதனிடப் பயன்படும் இலைகள் குவிக்கப்பட்டு இருந்தன. தலைப் பகுதியில் தண்ணீர் வைக்கும் தோல் பாத்திரம் தொங்க விடப்பட்டிருந்தது. இதைக் கண்டதும் நான் அழுதேன். 'ஏன் அழுகிறீர்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! (பாரசீக மன்னர்) கிஸ்ராவும் (இத்தாலியின் மன்னர்) கைஸரும் எப்படி எப்படியோ வாழ்க்கையை அனுபவிக்கும் போது அல்லாஹ்வின் தூதராகிய நீங்கள் இப்படி இருக்கிறீர்களே?' என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இவ்வுலகம் அவர்களுக்கும், மறுமை வாழ்வு நமக்கும் கிடைப்பது உமக்குத் திருப்தியளிக்கவில்லையா?' எனக் கேட்டார்கள்.

இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் இரண்டாவது ஜனாதிபதியாகப் பதவி வகித்த உமர் பின் கத்தாப் (ரலி) அறிவிக்கிறார். நூல் : புகாரி 4913

இது போன்ற அற்பமான தலையணையும் கூட போதுமான அளவில் இருந்ததா என்றால் அதுவுமில்லை.

இப்னு அப்பாஸ் என்பவரின் சிறிய தாயாரை நபிகள் நாயகம் (ஸல்) மணந்திருந்தார்கள். இப்னு அப்பாஸ் சிறுவராக இருந்ததால் அடிக்கடி தனது சிறிய தாயார் வீட்டில் தங்கி விடுவார். அப்போது நடந்த நிகழ்ச்சியை அவரே கூறுகிறார்.

'நான் எனது சின்னம்மா வீட்டில் ஓர் இரவு தங்கினேன். நான் தலையணையின் அகல வாக்கிலும், நபிகள் நாயகமும், எனது சின்னம்மாவும் தலையணையின் நீள வாக்கிலும் படுத்துக் கொண்டோம்' என்று அவர் கூறுகிறார். நூல் : புகாரி 183, 992, 1198, 4572

கூளம் நிரப்பப்பட்ட இந்தச் சாதாரண தலையணை கூட அவர்களிடம் ஒன்றே ஒன்று தான் இருந்துள்ளது. அதனால் தான் நீளமான பகுதியில் நபிகள் நாயகமும், அவர்களின் மனைவியும் தலை வைத்துக் கொள்ள இப்னு அப்பாஸ் அகலப் பகுதியில் தலை வைத்துப் படுத்திருக்கிறார்.

அதிக மதிப்பில்லாத அற்பமான தலையணை கூட ஒன்றே ஒன்று தான் அவர்களிடம் இருந்தது என்ற இந்தச் செய்தி பதவியைப் பயன்படுத்தி எந்தச் சொகுசையும் நபிகள் நாயகம் அனுபவிக்கவில்லை என்பதைச் சந்தேகமற நிரூபிக்கிறது.

வலிமை மிக்க வல்லரசின் அதிபர் வாழ்ந்த இந்த வாழ்க்கையை மிக மிக ஏழ்மை நிலையில் இருப்பவர் கூட வாழ முடியுமா?


Sunday, November 27, 2011

இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறதா? பு(து)த்தகம்




தாம்பத்தியம் இன்றி விவாகரத்துச் செய்தால் பாதி மஹர்
அவர்களுக்கு மஹர் தொகையை முடிவு செய்து, தீண்டுவதற்கு முன் அவர்களை விவாகரத்துச் செய்தால் முடிவு செய்ததில் பாதி(யைக் கொடுப்பது கடமை). அப்பெண்களோ அல்லது திருமண ஒப்பந்தத்தில் அதிகாரம் உள்ள(கண)வரோ பெருந்தன்மையாக நடந்து கொண்டால் தவிர. (ஆண்களாகிய) நீங்கள் விட்டுக் கொடுப்பதே இறையச்சத்திற்கு நெருக்கமானது. உங்களுக்கிடையே (சிலருக்கு) இருக்கும் உயர்வை மறந்து விடாதீர்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன். (திருக்குர்ஆன் 2:237)

மறுமணம் செய்யும் உரிமை
பெண்களை விவாகரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப் பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள். (திருக்குர்ஆன் 2:232)

உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன். (திருக்குர்ஆன் 2:234)

(காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! (திருக்குர்ஆன் 2:235)

விவாகரத்துக்குப் பின் பொருளாதாரப் பாதுகாப்பு
அவர்களைத் தீண்டாத நிலையிலோ, அவர்களுக்கென மஹர் தொகையை முடிவு செய்யாத நிலையிலோ விவாகரத்துச் செய்வது உங்களுக்குக் குற்றமில்லை. வசதி உள்ளவர் தமக்குத் தக்கவாறும் ஏழை தமக்குத் தக்கவாறும் சிறந்த முறையில் அவர்களுக்கு வசதிகள் அளியுங்கள்! இது நன்மை செய்வோர் மீது கடமை. (திருக்குர்ஆன் 2:236)

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு நல்ல முறையில் வசதிகள் அளிக்கப்பட வேண்டும். (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை. (திருக்குர்ஆன் 2:241)

உங்கள் வசதிக்கேற்ப அவர்களை நீங்கள் குடியிருக்கும் இடத்தில் குடியமர்த்துங்கள்! அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி அவர்களுக்குத் தீங்கு செய்யாதீர்கள்! அவர்கள் கர்ப்பிணிகளாக இருந்தால் அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்காகச் செலவிடுங்கள்! உங்களுக்காக அவர்கள் பாலூட்டினால் அவர்களுக்குரிய கூலிகளை அவர்களுக்கு வழங்கி விடுங்கள்! உங்களுக்கிடையே நல்ல முறையில் (இது பற்றி) முடிவு செய்து கொள்ளுங்கள்! ஒருவருக்கொருவர் (இதைச்) சிரமமாகக் கருதினால் அவருக்காக இன்னொருத்தி பாலூட்டட்டும். வசதியுள்ளவர் தனது வசதிக்கேற்ப செலவிடட்டும். யாருக்கு செல்வம் அளவாகக் கொடுக்கப்பட்டதோ அவர் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து செலவிடட்டும். அல்லாஹ் எதைக் கொடுத்துள்ளானோ அதற்கு மேல் எவரையும் சிரமப்படுத்த மாட்டான். சிரமத்திற்குப் பின் வசதியை அல்லாஹ் ஏற்படுத்துவான். (திருக்குர்ஆன் 65:6, 7)

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள். (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு. (திருக்குர்ஆன் 2:233)


பிரியும் உரிமை
பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் தமக்குரிய காலக் கெடுவின் இறுதியை அடைவதற்குள் நல்ல முறையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் விட்டு விடுங்கள்! அவர்களைத் துன்புறுத்தி வரம்பு மீறுவதற்காகச் சேர்த்துக் கொள்ளாதீர்கள்! இவ்வாறு செய்பவர் தமக்கே அநீதி இழைத்துக் கொண்டார். அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக்குரியதாக்கி விடாதீர்கள்! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருட்கொடையையும், வேதம் மற்றும் ஞானத்தை வழங்கியதையும் எண்ணிப் பாருங்கள்! இது குறித்து அவன் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (திருக்குர்ஆன் 2:231)

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அவர்களின் கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள். பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (திருக்குர்ஆன் 2:228)

தன் கணவனிடம் பிணக்கையோ, புறக்கணிப்பையோ ஒரு பெண் அஞ்சினால் அவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்து கொள்வது (அல்லது பிரிந்து விடுவது) இருவர் மீதும் குற்றமில்லை. சமாதானமே சிறந்தது. மனிதர்களிடம் கஞ்சத்தனம் இயல்பாகவே அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் (ஒருவருக்கொருவர்) உதவி செய்து (இறைவனை) அஞ்சிக் கொண்டால் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:128)

இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டு விடலாம். மனைவியருக்கு நீங்கள் கொடுத்தவற்றிலிருந்து எந்த ஒன்றையும் திரும்பப் பெறுவதற்கு அனுமதி இல்லை. அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர. அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால் அவள் எதையேனும் ஈடாகக் கொடுத்து பிரிந்து விடுவது இருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை மீறாதீர்கள்! அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோரே அநீதி இழைத்தவர்கள். (திருக்குர்ஆன் 2:229)


ஆன்மீக ஈடுபாட்டில் ஆணும் பெண்ணும் சமம்.
உங்களில் ஆணோ, பெண்ணோ எவரது செயலையும் நான் வீணாக்க மாட்டேன் என்று அவர்களது இறைவன் அவர்களுக்குப் பதிலளித்தான். உங்களில் சிலர் மற்றும் சிலரிடமிருந்து (தோன்றியவர்கள்.) (திருக்குர்ஆன் 3:195)

ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். (திருக்குர்ஆன் 4:124)

ஆணோ, பெண்ணோ நம்பிக்கை கொண்டு, நல்லறம் செய்தால் அவரை மகிழ்ச்சியான வாழ்க்கை வாழச் செய்வோம். அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றின் காரணமாக அவர்களின் கூலியை அவர்களுக்கு வழங்குவோம். (திருக்குர்ஆன் 16:97)

யாரேனும் ஒரு தீமையைச் செய்தால் அது போன்றதைத் தவிர அவர் கூலி கொடுக்கப்பட மாட்டார். ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டவராக நல்லறம் செய்வோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். அதில் கணக்கின்றி வழங்கப்படுவார்கள். (திருக்குர்ஆன் 40:40)

சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:32)

நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய்மையான வசிப்பிடங்களும் உள்ளன. அல்லாஹ்வின் பொருத்தம் மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி. (திருக்குர்ஆன் 9:72)

நம்பிக்கை கொண்ட ஆண்கள், மற்றும் பெண்களின் ஒளி அவர்களுக்கு முன்னேயும் வலப்புறமும் விரைவதை (முஹம்மதே!) நீர் காணும் நாள்! இன்றைய தினம் சொர்க்கச் சோலைகளே உங்களுக்குரிய நற்செய்தி. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பீர்கள். இதுவே மகத்தான வெற்றி. (திருக்குர்ஆன் 57:12)

முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான். (திருக்குர்ஆன் 33:35)

இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறதா?

ஆசிரியர் பி.ஜெய்னுல்லாபுதீன்.

Sunday, November 20, 2011

இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா? -பு(து)த்தக அறிமுகம்

உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. இஸ்லாத்தின் இந்த வளர்ச்சியால் கதிகலங்கிப் போன மேற்கத்திய உலகம் இஸ்லாத்தின் எந்தக் கொள்கையையும், கோட்பாட்டையும் குறை காண முடியவில்லை. அவர்கள் ஏற்றிப் போற்றும் எந்தச் சித்தாந்தத்தையும் விட இஸ்லாம் சிறந்து விளங்குவதால் அவர்களால் இஸ்லாத்தை விமர்சிக்க முடியவில்லை. இஸ்லாத்தை விமர்சித்து அதன் வளர்ச்சியைத் தடுத்திட இரண்டே இரண்டு விமர்சனங்களைத் தான் அவர்கள் செய்து வருகின்றனர்.

1. இஸ்லாம் தீவிரவாதிகளை உருவாக்குகிறது.
2. இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கிறது.

இந்த இரண்டுமே பொய்யான விமர்சனங்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கிறது என்ற பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையிலும் ஆண்களை விட பெண்களே அதிகமாக இஸ்லாத்தை ஏற்று வருகின்றனர்.

அத போல் தீவிரவாதம் என்ற பிரச்சாரத்துக்குப் பின் தான் உலகம் இஸ்லாத்தின் பால் தனது பார்வையைத் திருப்பியுள்ளது.

உலகில் இன்று கூட பெண்களுக்கு வழங்க முடியாத உரிமைகளை இஸ்லாம் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே வழங்கி விட்டது.

இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் கீழ்க்காணும் குற்றச்சாட்டுகளைத் தான் முன் வைக்கின்றனர்.

• ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து கொள்ள அனுமதிக்கிறது.
• மனைவியைப் பிடிக்காவிட்டால் சர்வ சாதாரணமக விவகரத்துச் செய்ய இஸ்லாம் ஆண்களூக்கு உரிமை வழங்கியுள்ளது
• விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு ஜீவனாம்சம் கொடுப்பதையும் இஸ்லாம் மறுக்கிறது.
• பெண்களை ஹிஜாப் எனும் ஆடையால் போர்த்தி அவர்களின் சஉதந்திரத்தைப் பறிக்கிறது.
• வாரிரிசுரிமைசச் சட்டத்தில் ஆன்களூக்கு இரு மடங்கும் பெண்களூக்கு ஒரு மடங்கும் என பாரபட்சம் காட்டுகிறது.
• இரண்டு பெண்களின் சாட்சி ஒரு ஆணுடைய சாட்ட்சிக்குச் சமமானது என்று பாரபட்சம் காட்டுகிறது.
• கணவன் இறந்து விட்டால் இத்தா என்ற பெயரில் குற்ப்பிட்ட காலம் பெண்களைத் தனிமைப்படுத்தி வைப்பது
• பெண்கள் ஆட்சித் தலைமை வகிக்கக் கூடாது எனக் கூறி பெண்களின் அரசியல் அதிகாரத்தைலப் பறிக்கிறது.
• முஸ்லிம் பெண்கள் கல்வி கற்பதில்லை
• முஸ்லிம் பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதில்லை.
• என்பன போன்ற குற்றச்சாட்டுக்கள் தான் பெண்கள் தொடர்பாக எடுத்து வைக்கப்படுகின்றன.

இந்தக் குற்றச்சாட்டுக்கள்அனைத்துக்கும் முழுமையாகவும், எந்த எதிர்க் கேள்வியும் கேட்க முடியாத வகையிலும் இந்நூல் அமைந்துள்ளது.

முஸ்லிம் அல்லாத மக்களுக்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்வோர் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்

முஸ்லிமாலாதவரக்ளுக்கு அன்பளிப்புச் செய்ய ஏற்ற நூல்

அறிமுகம்
இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா? என்ற இந்த நூலில் பெண்கள் குறித்து எழுப்பப்படும் அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் விளக்கம் தரப்பட்டுள்ளது.

இது தவிர நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மட்டும் மற்றவர்களை விட அதிகமான பெண்களை மணந்தது ஏன் என்ற கேள்வியும் பலரால் எழுப்பப்படுகிறது. இதற்கான விளக்கத்தை 'நபிகள் நாயகம்(ஸல்) பல திருமணங்கள் செய்தது ஏன்?' என்ற தலைப்பில் தனி நூலாக வெளியிட்டுள்ளோம்.

ஜிஸ்யா, முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிராகப் போர் செய்தல், கஃபாவை வணங்குதல், திசையை வணங்குதல், சகிப்புத் தன்மை இல்லாதவர்கள் போன்ற மற்ற குற்றச்சாட்டுக்கள் அனைத்துக்கும் விடையாக 'குற்றச்சாட்டுக்களும் பதில்களும்' என்ற தலைப்பில் தனி நூலை வெளியிட்டுள்ளோம்.

தத்துவ ரீதியாக இஸ்லாம் பற்றி முஸ்லிமல்லாதவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விடையாக 'அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள்' எனும் நூலில் விளக்கம் அளித்துள்ளோம். இந்த நான்கு நூல்களையும் வாசிப்பவர்கள் இஸ்லாம் குறித்த எந்தக் குற்றச்சாட்டுக்கும் விளக்கம் பெறலாம்.

பதிப்புரை
நல்லவை எங்கே கிடைத்தாலும் அதைத் தேடிப் பெற்றுக் கொள்பவர்களாகவே பெரும்பாலான மனிதர்கள் உள்ளனர்.

குறிப்பாக ஆன்மீகத்தின் பால் மனிதர்களின் தேடுதல் மிகவும் அதிகமாகவே உள்ளது. இவ்வாறு தேடியலையும் மக்களுக்கு நல்ல ஆன்மீக வழி தென்படுமானால் தயக்கமில்லாமல் அவ்வழியில் செல்ல அவர்கள் தயாராகவே உள்ளனர்.

அமைதியைத் தேடியலையும் மக்களின் பார்வையில் இஸ்லாம் சிறந்த வாழ்க்கை நெறியாகத் தென்படுகிறது. அதன் கொள்கைகள் அறிவுப்பூர்வமாக உள்ளன. அதன் சட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்திட எளிதாக உள்ளன.

இதன் காரணமாக அவர்களை இஸ்லாம் ஈர்த்தாலும் இஸ்லாத்தின் சில கொள்கைகளும், கோட்பாடுகளும் தவறானவை; காலத்துக்கு ஒவ்வாதவை என்று அவர்கள் எண்ணுகின்றனர்.

அவர்களுக்கு இருக்கும் சந்தேகங்களை உரிய விதத்தில் தெளிவுபடுத்தினால் அவர்களை இஸ்லாம் முழுமையாக ஈர்க்கும்.

முஸ்லிமல்லாத மக்களின் இந்தச் சந்தேகங்களை நீக்கும் வகையில் தமிழில் தகுதியான நூல் இல்லை என்ற குறையை நீக்கும் வகையில் இந்த நூலை வெளியிடுவதில் மனநிறைவு அடைகிறோம்.

இஸ்லாத்தில் பெண்கள் நிலை குறித்துத் தான் அவர்களுக்கு அதிகப்படியான சந்தேகங்கள் உள்ளன.

அந்தச் சந்தேகங்களை நீக்கும் வகையில் 'இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?' என்ற இந்த நூல் ஏழாவது பதிப்பாக உங்கள் கைகளில் தவழ்கிறது.
முந்தைய பதிப்புகளை விட மேலதிகமான விபரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தேவையான திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன.

முஸ்லிமல்லாத மக்களின் சந்தேகங்களை நீக்க இந்த நூல் பயன்பட வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம்.

இவன்,
நபீலா பதிப்பகம்

முன்னுரை

இன்றைய உலகில் பல்வேறு மதங்கள் மலிந்து கிடப்பதை நாம் காண்கிறோம். எல்லா மதங்களும், மதவாதிகளும் தங்கள் மதமே சிறந்தது' என்று அறிவித்துக் கொள்கின்றனர். தங்கள் மதத்தைப் பிரச்சாரமும் செய்கின்றனர்.

எனினும் மற்ற மதங்களை விட இஸ்லாம் பல வகையில் சிறந்து விளங்குவதை சிந்தனையாளர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். இஸ்லாம் வெறும் வணக்க வழிபாடுகளை மட்டும் சொல்லித் தரும் மதமாக இல்லாமல் மனித வாழ்வின் எல்லாப் பிரச்சனைகளையும் கவனிக்கிறது!

அதில் தலையிடுகிறது!

தக்க தீர்வையும் சொல்கிறது!

அன்றிலிருந்து இன்று வரை மனிதக் கரங்களால் மாசு படுத்த முடியாத மகத்தான வேதத்தை இஸ்லாம் மட்டுமே வைத்திருக்கிறது!

என்றெல்லாம் இஸ்லாத்தைப் பற்றி நற்சான்று வழங்குபவர்கள் இஸ்லாத்தின் ஒரு சில சட்டங்களைப் பற்றி அதிருப்தி அடைகிறார்கள்.

இத்தகையவர்களின் ஐயங்களைத் தர்க்க ரீதியாகவும், அவர்களின் அறிவு ஏற்றுக் கொள்ளும் வகையிலும் நீக்குகின்ற கடமை முஸ்லிம்களுக்கு இருக்கிறது.

ஏனெனில் இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமான மார்க்கமன்று. முழு உலகுக்கும் அருளப்பட்ட மார்க்கமாகும்.

எனவே, இஸ்லாம் பெண்ணுரிமைக்கு எதிரானது எனக் கூறுவோர் எடுத்து வைக்கும் அனைத்து வாதங்களுக்கும் விடையளிக்கும் வகையில் இந்நூலைத் தயாரித்துள்ளேன்.

ஏனைய குற்றச் சாட்டுக்களுக்கான விளக்கங்கள் மற்ற இரு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளன.

பெண்கள் குறித்து இஸ்லாத்திற்கு எதிராக எடுத்து வைக்கும் அனைத்து வாதங்களுக்கும் இந்த பாகத்தை வாசிப்பவர்கள் விடை காணலாம்.

மூன்று பாகங்களையும் வாசிப்பவர்கள் இஸ்லாம் குறித்த எந்தக் குற்றச்சாட்டுக்கும் உரிய விளக்கத்தைப் பெறலாம்.

முஸ்லிமல்லாத மக்களின் சந்தேகங்கள் விலக வேண்டும் என்ற ஒரே நோக்கத்திலேயே இந்நூலை எழுதியுள்ளேன். அந்த நோக்கம் நிறைவேற வல்ல இறைவனை இறைஞ்சுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
P.ஜைனுல் ஆபிதீன்