Followers

Friday, October 17, 2014

சூரியன் வெளிச்சங்களாகவும் சந்திரன் ஒளியாகவும் மாறிய விநோதம்!

சூரியன் வெளிச்சங்களாகவும் சந்திரன் ஒளியாகவும் மாறிய விநோதம்!

ஆண்டுகளின் எண்ணிக்கையையும் காலக் கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும் சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். சந்திரனுக்கு பல நிலைகளை ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் இறைவன் இதைப் படைத்துள்ளான்.அறிகிற சமுதாயத்திற்கு வசனங்களை அவன் தெளிவாக்குகிறான்.

-குர்ஆன் 10:5


என்ன அழகிய ஒரு இறைவனின் வார்த்தை!. 'லியா அன்' என்ற அரபிச் சொல்லை அரபு இலக்கணத்தின் படி மொழி பெயர்த்தால் 'வெளிச்சம்' என்றும் பன்மையில் 'வெளிச்சங்கள்' என்றும் இரண்டையுமே ஒரே வார்த்தையில் அரபு அகராதி குறிப்பதை பார்க்கலாம்.

அரபு மொழியில் நல்ல பாண்டித்தியம் உள்ளவர்களிடம் நாம் இதைப்பற்றிய தெளிவை அடையலாம். இணையத்திலும் கூகுளில் தேடினால் ஒருமையும் பன்மையும் ஒரே வார்த்தையில் குறிப்பிடப்படுவதை நாம் அறிய முடியும்.

சூரியனின் சாதாரண வெந்நிற ஒளி மாறுபட்ட அதிர்வெண்களையும் மாறுபட்ட நிறங்களையும் கொண்ட ஒளிகளின் கலவை என நியூட்டன் தனது சோதனைகள் மூலம் நிரூபித்தார். அவர் சூரிய ஒளியை ஒரு முப்பட்டைக் கண்ணாடிக்குள் செலுத்தி ஒளிப் பிரிகையை செய்து காட்டினார். அவற்றை மாறுபட்ட நிறங்களை உடைய ஒளிக் கற்றைகளாக வெளிப்படுத்திக் காட்டினார். அதன் பிறகு அந்த மாறுபட்ட வர்ணங்களை உடைய ஒளிக் கற்றைகளை ஒன்று குவித்து வெண்ணிறமுள்ள ஒரே ஒளிக் கற்றையாக மீண்டும் மாற்றிக் காட்டினார். இந்த முப்பட்டைக் கண்ணாடியும் அதன் துணைக் கருவிகளும் இணைந்த கருவியையே நாம் 'நிறமாலை' (spectrascope) நோக்கி என்கிறோம்.

இங்கு சூரியன் பல ஒளிகளை உமிழ்ந்து ஒரு ஒளியாக நமது கண்ணுக்கு தெரிகிறது. சூரியனை நாம் சாதாரணமாக பார்த்தால் அதில் ஏழு வர்ணங்களை உள்ளடக்கிய ஒரே வெளிச்சத்தை நாம் காணக் கூடியதாக இருக்கிறது. அதாவது ஏழு வெளிச்சங்களை சுருக்கி நம் கண்ணுக்கு ஒரு வெளிச்சமாக தருகிறது. எனவே 'லியாஅன்' என்ற இந்த வார்த்தை பிரயோகம் ஒருமைக்கும் பொருந்தி வருகிறது. ஏழு வண்ணங்களின் கூட்டுக்கும் பொருந்தி வருகிறது.

குர்ஆனில் பயன்படுத்தப் பட்டிருக்கும் 'அஸ்ஸ்ம்ஸ லியாஅன்' என்ற அரபி வார்த்தையை அரபு மொழியும், ஒளிப்பிரிகையையும் நன்கு அறிந்த ஒருவர் ஆழ்ந்து சிந்தித்தாரானால் இது இறைவனின் வார்த்தைதான் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ள மாட்டார். ஏனெனில் 'நூர்' என்ற வார்த்தையும் 'லியாஅன்' என்ற வார்த்தையும் மேலோட்டமாக பார்க்கும் போது ஒரே பொருளையே தரும். சந்திரனுக்கு போட்ட 'நூர்' என்ற வார்த்தையை சூரியனுக்கு குர்ஆன் பயன்படுத்தியிருந்தால் பொருளே மாறி விடும்.

ஆனால் எந்தக் குழப்பமும் இல்லாமல் சூரியனுக்கு எந்த வார்த்தையை பயன் படுத்த வேண்டும். சந்திரனுக்கு எந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்று நிதானித்து வார்த்தைகள் கையாளப்பட்டிருக்கிறது. இயற்பியலை ஓரளவு அறிந்த எந்த மனிதரும் இந்த வார்த்தை பிரயோகத்தை பார்த்து ஆச்சரியப் படாமல் இருக்க முடியாது. எழுதப் படிக்கத் தெரியாத முகமது நபி இப்படி ஒரு வார்த்தையை இந்த இடத்தில் பயன்படுத்தியிருக்க முடியுமா என்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.




இனி குர்ஆன் சந்திரனுக்கு 'நூர்' என்ற வார்த்தையை ஏன் பயன்படுத்தியது என்பதையும் பார்ப்போம். அதற்கு முன்பாக எதிரொளிப்பு என்பதற்கு விக்கி பீடியா தரும் விளக்கத்தையும் பார்ப்போம்.

எதிரொளிப்பு அல்லது ஒளித்தெறிப்பு (Reflection) என்பது ஒளிக்கதிரானது சென்று ஒரு பொருளில் பட்டு எதிர்வது ஆகும்.
நாம் கண்ணாடியில் பார்க்கும் பொழுது நம் முகம் நமக்கு எவ்வாறு தெரிகின்றது? இருட்டான ஓர் அறையிலே கண்ணாடியில் நம் முகம் தெரியுமா? ஏன் தெரியவில்லை? வெளிச்சமான ஓரிடத்தில் நாம் கண்ணாடி முன்னர் நின்றால், நம் முகத்தில் ஒளிக்கதிர்கள் பட்டு எதிருவுற்று பின்னர் அவ்வொளி அலைகள் சென்று கண்ணாடியில் பட்டு கண்ணாடியால் எதிர்வுற்று நம் கண்களில் வந்து சேர்வதால் நாமே நம் முகத்தைப் பார்க்க இயலுகின்றது. இப்படி கண்ணாடியிலும், பிற பொருள்களிலும் ஒளி பட்டு எதிர்வது (தெறிப்பது) ஒளியெதிர்வாகும்.

இனி 'நூர்' என்ற அரபி வார்த்தைக்கு அரபு அகராதியில் வரும் சில ஆங்கில வார்த்தைகளைப் பார்ப்போம்.
Illumination- ஒளியூட்டுதல்
Glow- ஒளிர்வு, பிரகாசம்
Gleam - பிரதிபலிக்கும் ஒளி
Flare – வெளிப்பாடு




சந்திரனின் ஒளியானது அதன் சொந்த ஒளியல்ல. சூரியனிடமிருந்து பெறப்பட்ட ஒளியையே பிரதிபலிக்கிறது. இங்கு நூர் என்ற வார்த்தைக்கு கிடைக்கும் அநேக விளக்கங்களும் பிரதிலிப்புக்கு கையாளப்படும் வார்த்தைகளாகவே உள்ளதை எண்ணி வியக்கிறோம். முந்தய காலங்களில் சந்திரன் தனது ஒளியையே பிரதிபலிப்பதாகத்தான் நம்பி வந்தோம். சூரியனின் ஒளியையே சந்திரன் பிரதிபலிக்கிறது என்ற உண்மை சமீப காலமாகத்தான் அறியப்பட்டது.

'அவற்றில் சந்திரனை ஒளியாக அமைத்தான்: சூரியனை விளக்காக அமைத்தான்'
-குர்ஆன் 71;16


திருக்குர்ஆனில் சூரியனுக்கு பயன்படுத்தப்படும் அரபுச் சொல் ‘ஷம்ஸ்’ இதனை ‘ஸிராஜ்’ (ஒளிவிளக்கு) ‘வஹ்ஹாஜ்’ (பிரகாசிக்கும் விளக்கு) ‘தியா’ (ஒளிரும் மகிமை) என்றும் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. சூரியன் தனக்குள் எரிந்துகொண்டே இருப்பதால், அது கடுமையான உஷ்ணத்தையும் வெளிச்சத்தையும் உண்டு பண்ணிக்கொண்டே உள்ளது.

சந்திரனை குறிக்கும் அரபுச் சொல் ‘கமர்’ என்பதாகும். குர்ஆன் இந்த சந்திரனை ‘முனீர் என்றும் வர்ணிக்கிறது. ‘முனீர்’ என்றால் ஒளியை (நூர்) வழங்கும் கோளம் என்று பொருள். எந்த இடத்திலும் சந்திரனை குறித்திட ‘வஹ்ஹாஜ்’ ‘தியா’ ‘ஸிராஜ்’ ஆகிய சொற்கள் பயன்படுத்தப்படவே இல்லை. அதே போல் சூரியனை குறித்திட ‘நூர்’ அல்லது ‘முனீர்’ என்ற சொற்களும் பயன்படுத்தப்படவில்லை. இரண்டு கோள்களும் ஒளியை உமிழ்ந்தாலும் அதன் தன்மைகள் மாறுபடுவதால் அங்கு வார்த்தைகளும் மிக துல்லியமாக தேர்ந்தெடுத்து பயன்படுத்தப்படுகிறது. இந்த அறிவை எல்லாம் முகமது நபி தனது கற்பனையால் யூகித்து குர்ஆனை உருவாக்கியிருக்க முடியுமா என்பதை படிப்பவர்களின் சிந்தனைக்கே விட்டு விடுகின்றேன். மேலும் தற்போது நம் வசதிக்கேற்ப குர்ஆனில் மாற்றி விட்டோம் என்றும் சொல்ல முடியாது. ஏனெனில் முகமது நபியால் சரி பார்க்கப்பட்டு உஸ்மான் அவர்களால் பிரதி எடுக்கப்பட்ட குர்ஆனின் இரண்டு பிரதிகள் இன்றும் நம் கைவசம் உள்ளது. அதை வைத்து உறுதி செய்து கொள்ளலாம்.

இறைவனே அறிந்தவன்.

2 comments:

tamilan said...

இந்து மதத்தில் சந்திரன் நிலை.

"சோமன்' என்றால் "சந்திரன்'. அவனை தலையில் சூடிய சிவனை "சோமசுந்தரர்' என்பர்.

சந்திரனை சிவன் தன் தலையில் சூடிக்கொண்டு சந்திரசேகரானார் .

‘பித்தா, பிறை சூடி பெருமானே’ ‘தூவெண் மதி சூடி’ என்றெல்லாம் திருமறைகள் இறைவன் தன் தலையிலேயே சந்திரனைச் சூடியிருப்பதைப் பாடுகின்றன. அம்பிகையும் தன் திருமுடியில் சந்திரனைச் சூடியிருக்கிறாள்.

தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்திற்காகவும் இன்னும் பல செல்வங்களுக்காகவும் திருப்பாற்கடலைக் கடைந்தனர் ,அதிலிருந்து பல அரிய பொருட்கள் தோன்றின .ஆலகாலம் ,மூதேவி ,ஸ்ரீதேவி ,காமதேனு,நவநிதி புஷ்பகவிமானம் ,வெள்ளையானை, வெள்ளைக்குதிரை ,நீலமணி பாரிஜாதம்,,காமதேனு ,அமிர்தம் இவைகளுடன் சந்திரன் மிகவும் பிரகாசத்துடன் தோன்றினான்.

சந்திரன் தன் குலகுருவான பிரகஸ்பதி மனைவி தாரையை அபகரித்துச் சென்று வாழ்க்கை நடத்தி அவளைக் கருவுறச் செய்தான்

குருவின் மனைவியையே அபகரித்துச் சென்று அவளுடன் வாழ்க்கை நடத்தி குழந்தையும் பெற்றுக்கொண்டதால் சந்திரன் புராணங்களில் குருதுரோகி என்று அழைக்கப்படுகிறான்.குருவுக்கு துரோகம் செய்த முதல் சிஷ்யனுமாகிறான்.

மாமனாரின் சாபம்
பிரஜாபதி தட்சனுக்கு மொத்தம் அறுபது பெண்கள். அவர்களில்பத்துபேரை தருமனுக்கும் பதின்மூன்று பேரை காசிபருக்கும் இருபத்தேழு நட்சத்திரப்பெண்களை சந்திரனுக்கும் ,மீதிப் பெண்களை ஆங்கீசர் ,அரிஷ்டநேமி ,கிரிஷஷ்வர் வாஹுபுத்திரர்க்கு திருமணம் செய்து வைத்தான்.தட்சன் தன் இருபத்தியேழு நட்சத்திரப் பெண்களை (அஷ்வினி முதல் ரேவதி வரை )சந்திரனுக்கு திருமணம் செய்கையில் சந்திரனைப் பார்த்து தன் இருபத்தியேழு பெண்களையும் சமமாகப் பாவித்து அனைவரிடமும் அன்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொண்டார் .சந்திரனும் அதற்கு சம்மதித்து திருமணம் செய்து கொண்டான்.திருமணம் நடந்த புதிதில் சந்திரன் எல்லோரிடமும் அன்பாகவே நடந்து கொண்டான்.ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவன் ரோஹிணியிடம் மட்டும் அதிக அன்பு காட்டி மற்றவர்களை வெறுக்கத் தொடங்கினான்.இதனால் கோபம் கொண்ட மற்ற இருபத்தாறு மனைவிகளும் சந்திரனின் மீது கோபமும் ரோகிணியிடம் பொறாமையும் அசூசையும் கொண்டு தங்களது தகப்பனாரிடம் முறையிட்டனர்.இதைக்கேட்ட தட்சன், சந்திரன் அவனது வாக்குறுதியை மீறுவதைப் பார்த்து தன் மக்களின் நிலை கண்டு வருத்தமும் கோபமும் கொண்டான்.தன் பெண்கள் கண்ணீரும் கம்பலையுமாய் நிற்பதைப் பார்த்த தட்சன் கோபம் அதிகரித்தது.கோபம் கொண்ட தட்சன், சந்திரனுடைய கலைகள் படிப்படியாய் தேய்ந்து போகும் என்று சாபம் கொடுத்தான்.இப்படியாக சந்திரன் தனது தவறுகள் காரணமாகவும்,தனது வாக்குறுதியை மீறியதனாலும், மனைவிமார்களின் புகாரின் அடிப்படையில் தட்சனின் சாபம் பெற்று தனது கலைகளை இழக்க ஆரம்பித்தான் .

சந்திரன் என்ற சொல்லுக்கு பொருள் இல்லாமல் தனது பிரகாசத்தை இழக்கத் தொடங்கிய சந்திரன் தேவர்களிடம் முறையிட அவர்கள் அவனை பிரமனிடம் அழைத்துச் சென்றனர்.பிரம்மன் சந்திரனுக்கு அறிவுரை கூறி புண்ணியத் தலமான பிரபாசத்திற்குப் போய் பரமசிவனை வணங்கினால் அவர் அவனது குறையை நீக்குவார் என்று கூறி மறைந்தார் .சந்திரனும் உடன் பிரபாசத்திற்கு சென்று சிவலிங்கத்தை பிரதிஸ்டை செய்து மிருத்யுஞ்ச மந்திரத்தை உச்சரித்து வணங்கினான்.சந்திரன் செய்த பூசையைக் கண்டு மகிழ்ந்த சிவன் அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்க, சந்திரனும் தனது மாமனாரின் சாபத்தால் தனக்கு ஏற்பட்ட நிலையை எடுத்துச்சொன்னான். அதற்கு சோமசுந்தரேஸ்வரர் தட்சன் கொடுத்த சாபத்தை தன்னால் மாற்ற முடியாது என்றும் அந்த சாபத்திலிருந்து சந்திரன் தப்பவும் முடியாது என்று கூறினார் .ஆனால் சந்திரன், இறைவனிடம் நெக்குருகி ,நெஞ்சுருகி கண்ணீர்மல்கி இறைஞ்சி தான் செய்த தவறுகளை மன்னித்து தனக்கு அருள் புரிந்து கருணை காட்டுமாறு கேட்டுக்கொண்டான். சந்திரனின் பக்தியில்/ வேண்டுகோளில் நெகிழ்ந்த சிவன் அவனுக்கு அருள் புரிய திருவுள்ளம் கொண்டார்.

எனவே ,ஒரு மாதத்தில் பதினைந்து நாட்கள் சந்திரனின் கலைகள் குறைந்து(தட்சனின் சாபப்படி ) மீதிப் பதினைந்து நாட்களில் அது மீண்டும் வளர பரமன் அருள் புரிந்தார்.இவ்வாறாக சந்திரன் தன் இழந்த காந்தியைப் பெற்றான் .


சந்திரனில் ஆம்ஸ்ட்ராங் இறங்கியதுமே சிவன் சடாமுடியில் சந்திரன் குடி இருக்கிறான் என்பதை சுக்குநூறாக்கி இந்து மதத்தையே அம்மணமாக்கி நிலைகுழைய செய்தது.

சிவன் தலையில் இருக்கும் சந்திரன் நம் கண்களுக்குப் புலப்படுகிறது, சிவனின் தலை மட்டும் ஏன் புலப்படமாட்டேன் என்கிறது?

tamilan said...

இந்து மதத்தில் சூரியன் நிலை.

தட்சனின் மகள் அதிதிக்கும் காசியப்ப முனிவருக்கும் சூரியன் பிறந்தார். சூரியனுக்கு சாயா என்ற மனைவியும், இந்த தம்பதிகளுக்கு ச்ருதஷர்வ, ச்ருதசர்மா, தபதி என குழந்தைகளும் உள்ளதாக பாவிஷ்ய புராணம் கூறுகிறது.

சூரியனுக்கு உஷாதேவி, பிரத்யுஷாதேவி என்று இரு மனைவிகள். எமன், சனி, அசுவினித் தேவர், சுக்கிரீவன், கர்ணன் முதலியோர் மகன்கள். யமுனை, பத்திரை முதலியோர் மகள்கள்.

சூரியன் ஏறி வரும் தேருக்கு ஒரே ஒரு சக்கரம் தான் உண்டு. அத்தேரை ஏழு குதிரைகள் இருக்கின்றன.

சூரியனுடைய தேர் ஓட்டியின் பெயர் அருணன். இவன் இருகால்களும் அற்ற முடவன். தாயால் அவயங் காக்கப் பட்ட முட்டையிலிருந்து இவன் பிறந்தவன். இவன் இந்திர சபை விநோதங்களைக் காண்பதற்கு பெண் வேடம் பூண்டு அங்குச் சென்றான். இதைக் கண்ட இந்திரன் பெண் வேடத்திலிருந்த அருணனை மோகித்துப் புணர்ந்தான். இதனால் வாலி என்பவன் பிறந்தான். இந்நிகழ்ச்சியால் அருணன் வேலைக்குத் தாமதித்து வர சூரியன் காரணம் கேட்டு நடந்ததை அறிந்து மீண்டும் அருணனைப் பெண் வேடத்தில் வர வேண்டி அவன் அப்படியே வர அவனைச் சூரியன் புணர்ந்தான். இதனால் சுக்ரீவன் பிறந்தான்.

சூரியன் பெட்டைக் குதிரையாயிருந்த சஞ்சிகையைக் கூடியதன் பயனாக, அஸ்வினி தேவர்கள் பிறந்தனர்.