Followers

Monday, October 13, 2014

இந்தியா ஒளிர்கிறதாம்.... நம்புங்கண்ணே.... நம்புங்க......



மதுரை மாவட்டம் ராயபாளையத்தில் தேனீர் கடைக்கு செருப்பு அணிந்து சென்றதால் தலித் மாணவர்களை ஆதிக்க சாதி இந்து மாணவர்கள் தாக்கியுள்ளார்கள்.

ஆனந்த், பாண்டியராஜன் என்ற இரண்டு தலித் மாணவர்களுக்குத்தான் இந்த நிலை. இது பற்றி அவர்கள் கூறும்போது:

'செருப்பு அணிந்து இங்கெல்லாம் வரக் கூடாது. பெஞ்சின் மேல் உட்கார்ந்து டீ அருந்தக் கூடாது. எங்களுக்கு அடங்கித்தான் நடக்க வேண்டும். ஐயா, சாமி என்று எங்களை மரியாதையாகக் கூப்பிட வேண்டும் என்று தினமும் நாங்கள் மிரட்டப்படுகிறோம். நேற்று ஒருவர் இதே பிரச்னையை வைத்து என்னை அடித்து விட்டார்' என்கிறார் இந்த மாணவர்.

இவ்வாறு சாதி வெறி பிடித்து அலைவது மாணவர்கள் என்று நினைக்கும் போது நமக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. இஸ்லாத்தை எவராவது ஏற்றால் கூப்பாடு போடும் இந்துத்துவவாதிகளே இந்த சாதி வெறிக்கு என்ன பதிலை வைத்திருக்கிறீர்கள். இது ஏதோ 30 அல்லது 40 வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வு அல்ல. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த கணிணி யுகத்தில் நேற்று நமது மதுரையில் நடந்த நிகழ்வுதான் இது.

வெட்கித் தலை குனியுங்கள் இந்துத்வாவாதிகளே!

3 comments:

UNMAIKAL said...

தலித் என்பதால் இன்றும் என்னை தீண்டத்தகாகவராகவே நடத்துகின்றனர்: பீகார் முதல்வர் வேதனை

பாட்னா: சமுதாயத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பான மகாதலித் வகுப்பை சேர்ந்தவர் என்பதால் சில சக்தி வாய்ந்த மக்கள், தொடர்ந்து தன்னை தீண்டத்தகாதவராகவே நடத்துவதாக அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார் பீகார் முதல்வர் ஜிதன் ராம் மஞ்ஜி.

தீண்டாமையை ஒழித்து, ஜாதி, மத, நிற பேதமைகளை நீக்க தொடர்ந்து உலக நாடுகள் தொடர்ந்து போராடி வருகின்றன. ஆனபோதும், தீண்டாமை, சாதி, மதக் கொடுமைகள் அரங்கேறி வருகின்றன.

கல்வியரிவு இல்லாத ஒடுக்கப்பட்ட ஏழைகள் தான் இத்தகைய கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என்ற பிம்பத்தை உடைப்பதாக அமைந்துள்ளது பீகார் மாநில முதல்வரின் சமீபத்திய பேச்சு.

சமீபத்தில் பீகாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் ஜிதன் ராம் மஞ்ஜி, முதல்வராக பதவியேற்ற பிறகும் தொடர்ந்து தன்னை தீண்டத்தகாதவராகவே சில சக்தி வாய்ந்த மக்கள் நடத்துவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது :-

தீண்டத்தகாதவராக....
நான் மாநில முதல்வராக இருந்தாலும் கூட இப்போதும் கூட சில சக்தி வாய்ந்த மக்கள் என்னை தீண்டத்தாகாதவாராகத்தான் நடத்துகின்றனர். ஏனெனில் நான் மகாதலித் வகுப்பை சேர்ந்தவர் என்பதால் தான் இவ்வாறு செய்கின்றனர்.

கோவிலைக் கழுவினர்...

மாதுபானி மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சிறப்பு பிரார்த்தனை செய்ய வருமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை ஏற்று நான் கோவிலுக்கு சென்றேன். ஆனால் கோவில் சென்று திரும்பிய பிறகு கோவிலையும் அங்குள்ள சிலையும் கழுவப்பட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது.

காலைப் பிடிக்கின்றனர்...
சில வேலைகளை முடித்து கொள்வதாகவும் அல்லது சில சலுகைக்களுக்காவும் எனது காலை மக்கள் தொடுகின்றனர். ஆனால் சமுக அளவில் வருகையில் அவர்கள் என்னை இன்னும் தீண்ட தகாதவராகத்தான் நடத்துகின்றனர்.

அவமானம்...

இது மகாதலித் வகுப்பை சேர்ந்தவர்களை அவமானப்படுத்துவது செயல் ஆகும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

http://tamil.oneindia.in/news/india/even-today-people-treat-me-as-an-untouchable-bihar-cm-211970.html

UNMAIKAL said...

தேசிய அவமானம்.

தெளிவாகத் தெரியும்வண்ணம் தாழ்த்தப்பட்டோர் மீது ஏவப்படும் தீண்டாமைக் கொடுமை, பல புதிய வடிவங்களை எடுத்தவண்ணம் உள்ளது.

இது ஜனநாயக நாடென்று அரசு செய்து வரும் பிரச்சாரம், கொடிக்கம்பத்தின் கீழேயே கிழிந்து தொங்கியது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தைச் சேர்ந்த கருவடத் தெரு ஊராட்சி மன்றத் தலைவர் அ. கலைமணி என்ற தலித் பெண்மணி, குடியரசு நாள் விழாவில் தேசியக்கொடி ஏற்றியபோது, அதே ஊராட்சி மன்றத் துணைத் தலைவரின் மகன் 20 பேருடன் திடீரென்று புகுந்து ஊராட்சி மன்றத் தலைவரின் சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசி, தாக்கி, தேசியக் கொடியை ஏற்றவிடாமல் தடுத்து தானே ஏற்றியிருக்கிறார்.("தி இந்து' 29.1.2012)

தென்மாவட்டங்களில் தாழ்த்தப்பட்டோருக்கென ஒதுக்கப்பட்டுள்ள பெரும்பாலான ஊராட்சி அமைப்புகளில் இதுதான் நிலைமை. தலைவராக ஆனாலும் நின்றுகொண்டேதான் கூட்டம் நடத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஊராட்சிமன்றப் பிரதிநிதிகளின் ஆணைகளை அவர்களுக்குக் கீழே பணியாற்றும் உதவி அலுவலர்கள் கூட செயல்படுத்துவதில்லை.


தாழ்த்தப்பட்டோரை, அதிகாரத்தில் பங்கெடுக்க வைக்கும் இட ஒதுக்கீடு சீர்திருத்தங்களைக் கூட ஆதிக்க சாதியினர் சகித்துக் கொள்வதில்லை.

பத்தாண்டுகளுக்கும் மேலாக பாப்பாப்பட்டி கீரிப்பட்டியில் ஆதிக்க சாதியினர், உள்ளாட்சி தேர்தலைக் கேலிக்கூத்தாக்கும் வண்ணம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை உடனே பதவி விலக வைத்து வந்தனர்.

அவர்களை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் தண்டிக்காத அரசோ, அடுத்தடுத்து இந்தக் கேலிக்கூத்துத் தேர்தல்களை நடத்தியது. அச்சாதி வெறியர்களிடம் பேரம் பேசி ரூ. 25 லட்சம் சிறப்பு ஒதுக்கீடு செய்து தாஜா செய்தது.

இன்றளவும் சமத்துவத்தைப் பேண இந்து சமூகம் தயாரில்லை என்பதுமட்டும் அல்ல; அத்தகைய சமத்துவத்தைப் பேணும் தலித் மக்களையும் அதனால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு :

ஒரிசா மாநிலத்தில் உள்ள போலாங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்த லாத்தூரில் 22.1.2012 அன்று 9 ஆம் வகுப்பு படிக்கும் தலித் மாணவன் கணேஷ் சுனா, தனக்கென ஒரு புதுச்சட்டை வாங்குவதற்காக உள்ளூரில் உள்ள ஒரு துணிக்கடைக்கு சென்றிருக்கிறார். கடையில் அந்த மாணவர் விசாரித்துக் கொண்டிருக்கும்போது, அவர் சட்டைக்கு உள்ளே பனியன் அணிந்திருப்பதை அந்த சாதி இந்து கடைக்காரர் கவனித்திருக்கிறார். இது, அவர் கண்ணை உறுத்தியிருக்கிறது. ஆனால், இதை வெளிப்படுத்தாமல் அந்த மாணவர் தன் கடைக்கு திருட வந்ததாகச் சொல்லி கடுமையாகத் தாக்கியிருக்கிறார். இதைக் கண்டித்த அவரது தாத்தாவும் தாக்கப்பட்டுள்ளார். மேலும், இம்மாணவர் வசிக்கும் சேரிக்கு திரண்ட சாதி இந்து கும்பல் 50 வீடுகளையும், அவர்களது உடைமைகளையும் எரித்துச் சாம்பலாக்கியுள்ளது ("தி இந்து', 25.1.2012).

மகாராட்டிர மாநிலத்தில் உள்ள முல்கான் கிராமத்தில் 42 வயதான தலித் பெண்ணின் ஆடைகளை அவிழ்த்து, தாக்கி, நிர்வாணமாக நடக்கவிட்டுள்ளனர். சாதி இந்துக்கள், பட்டப்பகலில் அனைவரின் முன்னிலையிலும் இக்கொடுமையை நிகழ்த்தியுள்ளனர்.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் இப்பெண் அளித்த புகாரை போலிஸ் வாங்க மறுத்திருக்கிறது. பாதிக்கப்பட்ட அப்பெண்மணி கூறுகிறார் : "சாதி இந்து பெண்கள் என்னை கீழே தள்ளி என் புடவையை உருவி நிர்வாணமாக்கினர். அதற்குப் பிறகு என்னைச் செருப்பாலும் கம்புகளாலும் அடிக்கத் தொடங்கினர். இரண்டு மணி நேரம் என்னை இப்படியே துன்புறுத்தினர்' ("தி இந்து', 12.1.2012)

இவ்வாறு தொடர்ச்சியாக தாழ்த்தப்பட்டோர் மீது, வன்கொடுமையை ஏவுவதில் இந்துத்வா ஆதிக்க சாதியினர் தீவிரமாக உள்ளனர்.

வன்கொடுமையைத் தடுப்பதற்கென கொண்டுவரப்பட்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை இச்சாதிவெறியர்களுக்கு எதிராக அதிகார வர்க்கம் ஏவுவதில்லை.

வன்கொடுமையைத் தடுக்கத் தவறுகின்ற மாவட்ட ஆட்சியாளர், காவல்துறை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கடந்த ஏப்ரலில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பும் கூறியுள்ளது.

காகிதத் தீர்ப்பு சாதிவெறியைக் கட்டுப்படுத்திவிடவில்லை.

ஏழு தலைமுறை என்ன? எழுபது தலை முறை ஆனாலும் சாத்தியப்படாது, இன இழிவு நீங்காது, ஒழியாது

தாழ்த்தப்பட்ட மக்கள் படித்து, பட்டங்கள் பெற்று பல உயர் பதவிகளை அடைந்தும், அரசியலில் உயர்ந்த நிலைக்கு உயர்ந்தும், பெரும் பணம் படைத்தவர்களாக ஆகியும் சாதிக்க முடியாததை, பிறப்பால் அவர்களை ஒட்டிக் கொண்டிருந்த இன இழிவை அம்பேத்கார், பெரியார், அண்ணா இன்னும் இவர்கள் போல் பலர் பெரும் முயற்சிகள் செய்தும், அறிவார்த்த சோனைகள் செய்தும் சாதிக்க முடியாததை

பிறப்பால் ஒட்டிக் கொண்டிருந்த இன இழிவு, இஸ்லாத்தைத் தழுவியதும் இருந்த தெரியாமல் காணாமல் போய்விட்டது.

இஸ்லாத்தை தழுவிய யாரும் அவர்களின் முன்னைய இழி நிலையை நினைவுபடுத்தி அடையாளம் காட்டப்படுவதில்லை.

Anonymous said...

கடந்த மாதம் உத்திரபிரதேசத்தில் கடைவீதியால் வந்த தன்னை கடத்தி மதரசாவுக்குள் அடைத்து வைத்து ஒரு கும்பல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகவும் இந்து மதத்தில் இருந்து இஸ்லாமுக்கு மாற கொடுமை படுத்தியதாகவும் இளம்பெண் கொடுத்த புகாரால் அம்மாநிலம் மட்டுமின்றி முழு இந்தியாவுமே அதிர்ச்சிக்கு உள்ளாகியது......
தான் ஒரு முஸ்லிம் இளைஞனை விரும்பியது தெரிந்து தனது குடும்பத்தினர் அடித்து துன்புறுத்தியதன் காரணமாகவே லவ் ஜிகாத் என்னும் போலியான புகார் அளித்ததாக அந்த இளம்பெண் ஒப்புக்கொண்டுள்ளார்........
இத்தகவலை மீரட் நகர எஸ்பி ஒம்காரசிங் தெரிவித்துள்ளார்.....
இதை காரணம் காட்டி
வி ஹெச் பி....
ஆர் எஸ் எஸ்....
இந்து அமைப்புகள்
முழு மாநிலத்தையும் ஸ்தம்பிதம் அடைய வைத்து முஸ்லிம் கடைகளை நொறுக்கி
அந்த பிரதேசத்தை கலவர பூமியாக்கி அழகு பார்த்தன........
இப்போ ஒருத்தனையும் காணோம்.
ரகுநந்தன் வசந்தன் யவன ஆதித்தன்.