Followers

Sunday, October 19, 2014

தங்கமணிக்கு மேலும் சில விளக்கங்கள்!

தங்கமணி!

//ஷாலி, ஐஐஎம் கணபதி ராமெனல்லாம் இப்போது எப்படி பரிணாமவியல் தப்பு, குரான் சொல்லும் creationதான் சரி என்று சுபியை தாங்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை.//

பரிணாமவியல் டார்வினின் ஒரு கற்பனை கோட்பாடே. நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை அல்ல. ஐரோப்பிய நாடுகளில் பல கல்லூரிகளில் பரிணாமவியல் பாடங்களை எடுத்து விட்டார்கள் என்ற செய்தி தங்கமணிக்கு தெரியுமா?

பரிணாமவியலை நிரூபிக்க அதன் அறிஞர்கள் எத்தகைய மோசடிகளில் எல்லாம் ஈடுபட்டார்கள் என்பதற்கு 10க்கும் மேற்பட்ட பதிவுகளை எழுதியுள்ளேன். அதை படித்து விட்டு அதன் பிறகு பரிணாவியலுக்கு வக்காலத்து வாங்க வரவும்.

suvanappiriyan.blogspot.com/2012/10/blog-post_18.html

//ஒரு இடத்தில் கூட உலகம் உருண்டை என்று நேரடியாக வரி குரானிலிருக்காது. அதே போல எந்த இடத்திலும் சூரியனைத்தான் பூமி சுற்றுகிறது. சூரியன் பூமியை சுற்றவில்லை என்று இருக்காது.//

'அவன் இரண்டு கிழக்கு திசைகளுக்கும் இறைவன். இரண்டு மேற்கு திசைகளுக்கும் இறைவன்'
-குர்ஆன் 55:17

'கிழக்குகளுக்கும் மேற்குகளுக்கும் உரிய இறைவன் மேல் ஆணையிடுகிறேன்'
-குர்ஆன் 70:40

ஒரு பொருள் உருண்டையாக இருந்து சுழலும் போதுதான் இரண்டு கிழக்குகளும் இரண்டு மேற்குகளும் உருவாக சாத்தியம் உள்ளது.

'அவனே பூமியை பயன்படுத்த எளிதானதாக உங்களுக்கு அமைத்தான்.எனவே அதன் பல பகுதிகளிலும் செல்லுங்கள்.'
-குர்ஆன் 67:15

பூமி தட்டையாக இருந்தால் ஒரே பகுதியில்(மேற்பரப்பில்) மட்டுமே மனிதர்கள் செல்ல முடியும். இந்த பூமி உருண்டையாக இருந்தால்தான் மேல்,கீழ்,பக்கவாட்டு என்று 'பல பகுதிகளிலும்' மனிதர்கள் செல்ல முடியும்.

'சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும்.'
-குர்ஆன் 36:38

ஓரளவு வானியல் அறிவு உள்ளவர்களுக்கு கூட சூரியனும் அதன் இடத்தை விட்டு நகர்கிறது என்ற செய்தி புதுமையாகவே இருக்கும். சூரியன் ஒரு இடத்தில் நிலையாக நிற்கிறது என்றும் அந்த சூரியனைச் சுற்றியே பூமி, செவ்வாய், சந்திரன் போன்ற கோள்களெல்லாம் அதனதன் பாதையில் சுற்றி வருகின்றன என்றும் நம்பி இருந்தோம். நாம் மட்டும் அல்ல... அறிவியல் அறிஞர்கள் கோபர் நிக்கஸ், கெப்ளர், கலிலியோ போன்ற மேதைகளெல்லாம் கூட சூரியன் நகர்வதில்லை என்ற கொள்கையையே கொண்டிருந்தனர்.

தொலை நோக்கியை கண்டுபிடித்த கலிலீயோ கூட சூரியன் நகர்வதில்லை என்ற நம்பிக்கையிலேயே இறந்தும் போனார். இரவும் பகலும் ஏற்படுவதற்கு சூரியனின் நகர்வு அவசியமில்லை என்பதனாலேயே பெரும்பாலான அறிஞர்கள் சூரியன் நகர்வதில்லை என்ற கோட்பாட்டைக் கொண்டிருந்தனர்.

இது போன்ற மெகா அறிவியல் உண்மைகளை முகமது நபியால் எவ்வாறு சொல்ல முடிந்தது? இது போன்று நூற்றுக்கணக்கான அறிவியல் வசனங்களை என்னால் காட்ட முடியும்.

suvanappiriyan.blogspot.com/2009/03/blog-post_13.html

நாம் வாழும் பூமி கோள வடிவமாகவே உள்ளது என்பதை இந்த பதிவில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. பார்த்துக் கொள்ளுங்கள்.

2 comments:

tamilan said...

இந்து மதத்தில் பூமியின் நிலை.

இந்துமதத்தின் வேர்களாக தூண்களாகக் கருதப்படும் வேதங்களும் புராணங்களும் சொல்லுவது என்ன?

இரணியாட்சன் என்கிற அசுரன், பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு சமுத்திரத்திற்குள் போய் பாதாளத்தில் ஒளிந்துகொண்டது.

திருமால் (மகாவிஷ்ணு, கிருஷ்ணன் ) பூமாதேவியின் வேண்டுகோளை ஏற்று பன்றி உரு எடுத்து கடலுக்குள் நுழைந்தார்.

அசுரனுடன் சண்டை போட்டு, அவனைக் கொன்று, பூமியை வெளிக் கொணர்ந்து விரித்தார் என்று புராணம் கூறுகிறது.

பூமி தட்டை எனக்கூறி எல்லாப் புராணங்களுமே எழுதப்பட்டன. ஆகவே பூமியைச் சுருட்டினான் என்றும், கடலில் புகுந்தான் என்றும், மகாவிஷ்ணு என்கின்ற கடவுள் பன்றி உருவம் எடுத்து, சமுத்திரத்திற்குள் புகுந்து அசுரனைக் கொன்று பூமியை எடுத்துக்கொண்டு வந்து விரித்துவிட்டது.

பூமியைப் பாயாகச் சுருட்டினான் என்றால் எதன்மீது நின்று சுருட்டினான்? பூமியில்தானே கடலும் இருக்கிறது? பூமியைப் பாயாகச் சுருட்டும்போது கடலும் அதற்குள் சுருண்டு விடாதா?
பூமி தட்டை என்று எழுதியது தானே இது?

இந்த விஷ்ணுப் பன்றியைக் கண்டு பூமிதேவி காம விகாரப்பட்டுப் போகித்துக் கலவி செய்தது.

இக் கலவியின் பயனாய் ஒரு பிள்ளை பிறந்து, அப்பிள்ளை ஒரு, அரக்கனாகி தேவர்களுக்கு (ஆரியர்களுக்கும், தன் தாய் தந்தையான கடவுளுக்கும்) கேடு செய்தது.

பிறகு, அந்த நரகாசுரனைக் கடவுளும் கடவுள் மனைவியும் கொன்றது.

அசுரன் சாகும்போது தான் செத்த தினத்தை உலகத்தார் கொண்டாடவேண்டுமென்று கேட்டுக் கொண்டானாம்.

மகாவிஷ்ணு (கிருஷ்ணன், திருமால்) அப்படியே ஆகட்டுமென்று வாக்களித்தாராம். அதற்காகவேண்டி மக்கள் எல்லோரையும் கொண்டாடும்படி கடவுள் செய்து விட்டாராம். ஆதலால் தீபாவளி கொண்டாடுகிறார்களாம்.

புராணங்களில் கண்டபடியே இந்தக் கதையை உண்மையென்று ஒப்புக்கொண்டுதானே இந்தத் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்.

Anonymous said...

you are a funny guy...