பரிணாமவியலை கேள்வி கேட்டால் ஜாகிர்நாயக் பதிலாகி விடுமா!
குரங்குக்கும் மனிதனுக்கும் உள்ள இடைப்பட்ட படிமங்களின் ஆதாரத்தை விளக்கி இனி பதிவுகள் எழுதப் போகிறேன் என்று சில நாள் முன்பு சார்வாகன் சொன்னார். நானும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தால் அதைப் பற்றிய அறிவிப்பு எதையும் காணோம். ஆனால் சம்பந்தமில்லாமல் ஜாகிர் நாயக்கையும் பிஜேயையும் சம்பந்தப்படுத்தி காமெடி செய்து பரிணாமவியலின் தவறை மறைக்க பார்க்கும் தந்திரத்தை தற்போது செய்து வருகிறார். சரி அதிலாவது தனது தரப்பு வாதம் நிற்கும்படியான செய்திகளைத் தரப்படாதோ? இனி சார்வாகன் சொல்வதைக் கேட்போம்.
//ஜாகிர நாயக் மீது இபோது முஸ்லிம்களே ஒத்துக் கொள்ளும் இருகுற்றச்சாட்டுகள் உண்டு.
1.குரான் 79.30ல் டஹாஹ என்னும் அரபி சொல்லுக்கு இலாத த்வறான பொருள் நெருப்புக் கோழி முட்டை என்று சொல்லி உலகம் நெருப்புக் கோழி முட்டை போல் இருக்கிறது என பொய் சொன்னார்.
http://satyagni.com/science-zakir/
zakir Naik says:
The earth is not exactly round like a ball, but geo-spherical i.e. it is flattened at the poles. The following verse contains a description of the earth’s shape “And the earth, moreover, Hath He made egg shaped.” [Al-Qur'aan 79:30]
The Arabic word for egg here is dahaha, which means an ostrich-egg. The shape of an ostrich-egg resembles the geo-spherical shape of the earth. Thus the Qur’aan correctly describes the shape of the earth, though the prevalent notion when the Qur’aan was revealed was that the earth is flat// - சார்வாகன்!
இது பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
'பூமியை நாம் விரித்தோம்: நாம் அழகுற விரிப்பவர்கள்.'
-குர்ஆன் 51:48
'இதன் பின்னர் பூமியை விரித்தான்'
-குர்ஆன் 79:30
'பூமியை விரித்தான்' என்ற குர்ஆனின் வசனத்தில் வரும் 'தஹாஹா' என்ற சொல் 'தஹ்வு' என்ற சொல்லின் மூலத்திலிருந்து வந்தது. இங்கு 'விரித்தல்' என்ற ரீதியில் பொருள் கொள்வதுதான் அரபு இலக்கணத்தின் படி சரியாகும். ஜாகிர் நாயக்கும் இதை ஒத்துக் கொள்கிறார்.
மேலதிக விபரமாக தனது சொந்த விளக்கமாகத்தான் 'முட்டை' வடிவிலானது என்ற கருத்தை வைக்கிறார் ஜாகிர் நாயக். இவர் ஒரு டாக்டர். அறிவியல் அறிஞர் கிடையாது. எனவே இவரது கருத்தில் தவறும் இருக்கலாம்.
'சார்பியல்' தத்துவத்தை சொன்னபோது ஐன்ஸ்டீனே தவறிழைக்கவில்லையா? 1923 இல் ஐன்ஸ்டைன் மாறாத பிரபஞ்சத்தைப் பற்றி எழுதியதைத் 'தான் செய்த மாபெரும் தவறு ' என்று ஒப்புக் கொண்டார்! அலெக்ஸாண்டர் ஃபிரைட்மன் கருத்தை ஏற்றுக் கொண்டு விரியும் பிரபஞ்சக் கோட்பாடைப் பிரதி பலிக்க, ஐன்ஸ்டைன் தன் சமன்பாடுகளைத் திருத்தி எழுதினார்!
ஆக.. ஐன்ஸ்டீனுக்குக் கூட ஆராய்ச்சியில் தவறு மனிதன் என்ற முறையில் வரலாம். ஜாகிர் நாயக்குக்கும் வரலாம். பிஜேக்கு கூட வரலாம். ஆனால் இறை வேதத்தில் வராது.
'பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை கோள்களும் நமது பூமி உட்பட உப்பி விரிகிறது. அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு பொருள் என்று கருதக் கூடாது. அது சோப்புக் குமிழி போல உப்பிக் கொண்டே போகும் ஒரு கோளம்'
-விஞ்ஞானி ஹப்பிள்.
இதைத்தான் இறைவனும் 'பூமியை விரித்தான்' அதாவது பூமியை விரிவாக்கம் செய்தான் என்று கூறுகிறான்.. விஞ்ஞானி ஹப்பிளின் கருத்தை அப்படியே பிரதிபலிப்பதை பார்க்கவில்லையா!
'பிரபஞ்சம் இருவித முடிவுகளில் சிதைந்து போகலாம்! ஒன்று குமிழிபோல் உப்பிக் கொண்டு அது தொடர்ந்து விரியலாம்! அல்லது பெரும் வெடிப்பில் [Big Bang] தோன்றிய பிரபஞ்சம், ஒரு பெரும் நெருக்கலில் [Big Crunch] மறுபடியும் நொறுங்கி முடிந்து போகலாம்! எனது யூகம், பிரபஞ்சம் பெரும் நெருக்கலில் ஒரு சமயம் அழிந்து போய்விடும் என்பது! பிரபஞ்சத்தின் பிரளய முடிவுகளை முன்னறிவித்த முனிவர்களை விட எனக்கு ஓர் பெரிய சலுகை உள்ளது! இப்போதிருந்து பத்து பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு எது நிகழ்ந்தாலும், என் கருத்து பிழையான தென்று நிரூபிக்கப்பட நான் உயிரோடு இருக்கப் போவதில்லை ' என்று புன்னகை புரிகிறார், ஹாக்கிங்!
நான் போன பதிவில் கூறியது போல் ஆய்வுகளில் தவறுகள் வரலாம் அது இயற்கை. அதுதான் ஜாகிர் நாயக்கிடம் நடந்தது. ஆனால் பரிணாமவியலை நம்ப வைக்க வேண்டும் என்பதற்காக மனிதனின் மண்டை ஓட்டையும் குரங்கின் தாடையையும் ஒட்ட வைத்து பற்களுக்கு சாயங்களை பூசி 40 வருடம் அறிவியல் உலகை ஏமாற்றியிருக்கின்றனர் பரிணாமவியலார். ஒரு சாதாரண படிப்பறிவில்லாதவனை ஈஸியாக புரியாத மொழியில் பேசி சம்மதிக்க வைத்து விடலாம். ஆனால் ஒரு ஆய்வுக் கூடத்தில் அறிவியல் அறிஞரகள் நிறைந்த சபையில் 40 வருடம் இதை மறைக்க வேண்டும் என்றால் ஒரு பெரும் குழுவே வேலை செய்திருக்க வேண்டும். புதிய படிமங்கள் மட்டும் கிடைக்காமல் போயிருந்தால் பரிணாமவியல் உண்மைதான் என்று இன்று வரை சாதித்துக் கொண்டிருப்பர்.
http://en.wikipedia.org/wiki/Ultimate_fate_of_the_universe
http://simple.wikipedia.org/wiki/A_Brief_History_of_Time
------------------------------------------------------
//2. ஜாகிர் நாயக், பி.ஜேவின் " இயேசு இறைமகான என்னும் புத்த்கத்தை அப்படியே த்னது சொந்த சரக்காக் பி.ஜே விடம் அனௌமதி பெறாமல் ஆங்கிலத்தில் எழுதி விட்டார்
இப்போது ஜாகிர் நாயக்கின் மோசடிகள், தவறால் குரான் தவறாகி விடும் என்றால், பில்ட் டௌன் மோசடியால் பரிணாமமும் த்வறாகி விடலாம்
நன்றி//- சார்வாகன்
பி.ஜே யின் புத்தகத்தை அனுமதி பெறாமல் ஜாகிர் நாயக் ஆங்கிலத்தில் மொழி பெய்ர்த்தால் அது அவர்கள் இருவருக்குமிடையில் உள்ள காப்பீட்டு பிரச்னை. பிஜே தனது பதிவுகளை இவ்வாறு காப்பி செய்தால் அதை அதிகம் பெரிதுபடுத்துவதும் இல்லை. சவுதி அரசே கூட பிஜேயின் பல புத்தகங்களை அரபியிலும் ஆங்கிலத்திலும் இன்னும் உலகின் பல மொழிகளிலும் மொழி பெயர்ப்பு செய்துள்ளது. அதற்கு கூட எந்த பிரதிபலனையும் எதிர் பாராமல் இலவசமாகவே மொழி பெயர்க்க அனுமதி கொடுத்தார். ஜாகிர் நாயக் ஏசுவின் வாழ்வை தவறாக விமர்சித்து இருந்தால்தான் அல்லது பொய் சொல்லியிருந்தால்தான் அதை பிரச்னையாக்க முடியும்.
இதனால் பில்ட் டவுன் மோசடியை நியாயப்படுத்தப் பார்க்கிறார். என்ன ஆனது உங்களுக்கு சார்வாகன் உரிக்க உரிக்க வெங்காயம் போல் சென்று கொண்டிருக்கிறதே உங்கள் அனைத்து வாதங்களும்? :-)
---------------------------------------------------------
பிரபஞ்சம் விரிவடைதலைப் பற்றி நான் முன்பு இட்ட பதிவை மேலதிக விபரமாக தருகிறேன்.
பிரபஞ்சம் விரிவடைகிறது என்பது உண்மையா?
இதன் பின்னர் பூமியை விரித்தான்'
-குர்ஆன் 79:30
'வானத்தை நாம் ஆற்றலைக் கொண்டு படைத்தோம்: நிச்சயமாக நாம் அதை விரிவாக்கம் செய்பவராவோம்.'
-குர்ஆன் 51:47
'பூமியை நாம் விரித்தோம்: நாம் அழகுற விரிப்பவர்கள்.'
-குர்ஆன் 51:48
பூமியை நாம் விரித்து அதில் உறுதியான, மலைகளை நிலைப் படுத்தினோம்; ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளவின்படி அதில் நாம் முளைப்பித்தோம்.
-குர்ஆன் 15:19

மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
-குர்ஆன் 13:3
இன்னும், பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான்.
-குர்ஆன் 55:10
'பூமியை விரித்தான்' என்ற குர்ஆனின் வசனத்தில் வரும் 'தஹாஹா' என்ற சொல் 'தஹ்வு' என்ற சொல்லின் மூலத்திலிருந்து வந்தது. இங்கு தஹ்வு என்ற சொல்லுக்கு விரித்தல் என்ற பொருள் வரும்.
நாம் அமரும் பாயை சுருட்டுங்கள் என்கிறோம். பாயை விரியுங்கள் என்கிறோம். இங்கு சுருக்கப்பட்ட பொருள் விரிவடையும்போது என்ன வார்த்தையை பயன்படுத்துகிறோமோ அதே வார்த்தையை கொண்டு பூமியையும் இறைவன் கையாள்கிறான்.
பல காலமாகவே இந்த பிரபஞ்சம் நிலையான ஒன்று என்றுதான் அறிவியலார் கூறி வந்தனர். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான் ரஷ்ய இயற்பியல் விஞ்ஞானி அலெக்சாண்டர் ஃபிரைட்மேனும் பெல்ஜிய விஞ்ஞானி லேமைட்ரீயும் பிரபஞ்சத்தின் விரிவடைதலை கண்டறிந்தனர். இந்த உண்மை 1929ல் தொலைநோக்கி சோதனை மூலம் விஞ்ஞானி எட்வின் ஹப்பிளால் நிரூபிக்கப்பட்டது. மேலும் நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்கள் ஒன்றை யொன்று விலகிச் செல்வதையும் தனது சோதனையில் கண்டறிந்தார் ஹப்பிள்.
பிரபஞ்சம் விரிவடைவது சம்பந்தமாக மூன்று அமெரிக்கர்கள் நோபல் பரிசை பகிர்ந்து கொண்டனர். அதன் காணொளியைப் பார்ப்போம்.
உப்பி விரிகிறது. அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு பொருள் என்று கருதக் கூடாது. அது சோப்புக் குமிழி போல உப்பிக் கொண்டே போகும் ஒரு கோளம்'
-விஞ்ஞானி ஹப்பிள்.
இதைத்தான் இறைவனும் 'பூமியை விரித்தான்' அதாவது பூமியை விரிவாக்கம் செய்தான் என்று குர்ஆனில் கூறுகிறான். விஞ்ஞானி ஹப்பிளின் கருத்தை அப்படியே பிரதிபலிப்பதை பார்க்கவில்லையா
!
முன்பு பூமியில் இருந்த நிலப்பரப்பு அனைத்தும் ஒன்றாகவே இருந்தன. பூமியானது விரியத் தொடங்கியவுடன் ஒன்றாக இருந்த நிலப்பரப்புகள் கண்டங்களாகவும், நாடுகளாகவும், தீவுக் கூட்டங்களாகவும் பிரிகின்றன. இதனை இந்த காணொளி அழகாக விவரிக்கிறது.
ஹாக்கிங் கூறுகிறார்:
'இருபதாம் நூற்றாண்டிற்கு முன்னர் ஒருவர் கூட பேரண்டம் விரிந்து செல்கிறது அல்லது சுருங்கி வருகிறது எனும் கருத்தைத் தெரிவிக்கவில்லை. பேரண்டம் மாற்றமே இன்றி நாம் காண்பது போலவே எக்காலமும் இருந்திருக்கிறது என்றே பலரும் நம்பி வந்தனர். பெரும்பாலான மக்களின் மன நிலையும் இதை ஒட்டியே அமைந்திருந்ததும் காரணமாக இருக்கலாம்.'
-எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம் (பக்கம் 6)
“The discovery that the universe is expanding was one of the great intellectual revolutions of the 20th century.
(பேரண்டம் விரிவடைகிறது எனும் இக்கண்டுபிடிப்பு இருபதாம் நூற்றாண்டின் பெரும் அறிவுப் புரட்சிகளில் ஒன்றாகும்)
(அதே புத்தகம் பக்கம் 42)
உலகின் தலை சிறந்த விஞ்ஞானிகளான ஐசக் நியூட்டன் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற அறிஞர்கள் கூட பிரபஞ்சம் விரிவடைகிறது என்ற செய்தியை அறிந்திருக்கவில்லை. அது பற்றிய சிந்தனையும் அவர்களுக்கு எழவில்லை. இது போன்ற ஒரு வார்த்தைப் பிரயோகத்தை முகமது நபி என்ற ஒரு மனிதரால் சொல்லியிருக்க முடியுமா? என்று சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம். படிப்பறிவற்ற அந்த சமூகத்தையும் தனது தாய் மொழியையே எழுத படிக்க தெரியாத முகமது நபியையும் இங்கு நாம் நினைவில் நிறுத்தி பார்க்க வேண்டும். இந்த உண்மைகளை ஆராய்ந்தால் குர்ஆனின் வார்த்தைகள் நம்மைப் படைத்த இறைவனின் வார்த்தைகள் என்ற முடிவுக்கே வருவோம்.
மேலும் விபரங்கள் அறிய...
http://en.wikipedia.org/wiki/Universe