
பாரதீய ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பான ஏ பி வி பியினைச் சேர்ந்தவர்கள் தம்மை வன்புணர்ந்து கொன்று விடுவதாக மிரட்டுவதாக பெண் பத்திரிகையாளர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பிரச்சினை குறித்து, தான் செய்தி வெளியிட்டதால், பாரதீய ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பை சேர்ந்தவர்கள் தன்னை டெலிபோனில் தொடர்பு கொண்டு, வன்புணந்து கொன்று விடுவதாக பிரபல பத்திரிகையாளர் பர்கா தத் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார்.
நேற்று டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். நாட்டை ஆளும் கட்சியின் மாணவர் அமைப்பிடமிருந்து பத்திரிகையாளருக்கு விடப்பட்டுள்ள இந்த மிரட்டல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இது வரை பொது மக்களை மிரட்டிக் கொண்டிருந்த பிஜேபியினர் இன்று தைரியமாக பத்திரிக்கையாளர்களை கொலை மிரட்டல் விடும் அளவுக்கு துணிந்து விட்டனர். மோடியும் அமீத்ஷாவும் இந்த குண்டர்களுக்கு எந்த கண்டனத்தையும் தெரிவிக்க மாட்டார்கள்.
எல்லா குற்ற செயல்களையும் செய்து விட்டு 'பாரத் மாதாகீ ஜே' என்று கோஷமிட்டு மனிதப் புனிதர்களாகி விடுவார்கள் இந்த நாசகாரர்கள்.
எனது தாய் நாட்டின் எதிர்காலத்தை நினைத்து உண்மையில் கவலையுறுகிறேன்.
1 comment:
Let her lodge a complain to the Police station
Post a Comment