

இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக் கொண்ட மாணிக் வீரமணி சென்ற வாரம் தம்மாம் வந்துள்ளார். முதல் வெள்ளிக் கிழமை ஜூம்ஆ தொழுகைக்கு சென்றுள்ளார். அவரது முந்தய மதத்தில் கோவிலின் குறிப்பிட்ட பகுதி வரைதான் போக முடியும். ஆனால் இன்று முதல் ஆளாக பள்ளியில் நுழைந்தால் முதல் வரிசையில் சென்று கம்பீரமாக அமர முடியும். மன்னர் சல்மானே தொழ வந்தாலும் மாணிக் வீரமணியை நகரச் சொல்ல மாட்டார்கள். மன்னரும் அதனை விரும்ப மாட்டார். தொழுகையானது அத்தகைய பக்குவத்தை அரபுகளுக்கும் கொடுத்துள்ளது.
இதே மாணிக் வீரமணி சில மாதங்கள் முன்பு தமிழகத்தின் ஒரு பள்ளியில் தொழுகைக்கு இமாமாக (தலைவராக) இருந்து தொழ வைக்கும் காட்சியையும் பாருங்கள். இவரை பின்பற்றி பல தலைமுறைகளாக இஸ்லாத்தில் இருக்கும் நண்பர்கள் அவரை பின் பற்றி தொழும் அழகையும் பாருங்கள்.
மாணிக் வீரமணி தனது பெயரை அரபியில் மாற்றிக் கொள்ளவில்லை. அவசியம் மாற்றிக் கொள் என்று இஸ்லாமும் சொல்லவில்லை.
மார்க்க பற்றுள்ள இஸ்லாமிய பெண் அவருக்கு வாழ்க்கை துணையாக அமைந்து மேலும் பல வெற்றிகளைப் பெற அந்த ஏக இறைவனை பிரார்த்திக்கிறேன்.
1 comment:
நபியின் பெற்றோர் குறித்த அறியாமை வாதம்!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெற்றோர் சொர்க்கம் செல்வார்கள் என்ற கருத்தில் ஒருவர் வாதிடும் வீடியோ ஒன்று பரவி வருகிறது.
அந்த வீடியோ:
https://www.facebook.com/177584309270086/videos/200319553663228/
இதில் பேசுபவர் என்ன வாதிடுகிறார் என்றால் திருக்குர்ஆனின் 17:24 வசனத்தில், கீழ்க்கண்டவாறு அல்லாஹ் நபிக்குக் கூறுகிறான் :
சிறுவனாக இருக்கும்போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக!'' என்று கேட்பீராக
நபியவர்கள் தமது பெற்றோருக்காக துஆ செய்யுமாறு அல்லாஹ் கூறுவதால் அவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான் என்று தெரிகிறது.
இவ்வசனத்தின் அடிப்படையில் நபியின் பெற்றோர் சொர்க்கம் செல்வார்கள் என்பது தெரிகிறது.
நபியின் பெற்ரோருக்கு நரகம் என்று வரும் ஹதீஸ்கள் இவ்வசனத்துக்கு முரணாக உள்ளது. குர்ஆனின் கருத்துப்படி நபியின் பெற்றோர் சொர்க்கவாசிகளே என்பது இவரது வாதம்.
அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவர்களுக்கு பாவமன்னிப்பு கேட்கக் கூடாது என்பதை இவர் ஏற்றுக் கொள்கிறார்.
இவர் கூறுவது போல் குர்ஆனில் இருந்தால் இவரது வாதம் ஏற்கத்தக்கது தான். குர்ஆனுக்கு முரணாக உள்ள ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்ற அடிப்படை சரியானது தான்.
ஆனால் இவர் குர்ஆனை தனக்கு விருப்பமான கருத்துக்கு ஏற்ப வளைத்துள்ளதால் இப்படி ஒரு வாதத்தை வைத்துள்ளார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது தாயும், தந்தையும் பற்றி ஹதீஸ்களில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை முதலில் பார்ப்போம்.
இது பற்றிய ஹதீஸ்கள் என்ன என்பதை அறிந்து கொள்வதுடன் தமது பெற்றோரை நரகவாசிகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதில் தான் அவர்களின் சிறப்பும் கொள்கைத் தெளிவும் மிளிர்கிறது என்பதை மாமனிதர் நபிகள் நாயகம் என்ற நூலில் பீஜே அவர்கள் பின்வருமாறு விளக்கியுள்ளார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'என் தந்தை எங்கே இருக்கிறார்' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நரகத்தில்' என்றார்கள். அவர் கவலையுடன் திரும்பிச் சென்றார். அவரை மீண்டும் அழைத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'என் தந்தையும், உன் தந்தையும் நரகத்தில் தான் இருப்பார்கள்' என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 302
கேள்வி கேட்டவரின் தந்தை ஒரு கடவுளை நம்பாமல் சிலைகளைக் கடவுளாக கருதி வணங்கி வந்தார். அந்த நிலையிலேயே மரணித்தும் விட்டார். நபிகள் நாயகம் (ஸல்) கூறிய ஆன்மீக நெறியின் படி அவர் நரகத்தில் தான் இருப்பார் என்று தயக்கமின்றி விடையளிக்கிறார்கள். யாருடைய மனமும் புண்படக் கூடாது என்பதற்காக எந்த விதமான சமரசமும் அவர்கள் செய்யவில்லை.
ஆனால் வந்தவர் நபிகள் நாயகத்தின் தந்தை பற்றி எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. வேறு யாரும் இத்தகைய கேள்விகளைக் கேட்கவில்லை. ஆனாலும் வலிய வந்து 'தமது தந்தையும் நரகத்தில் தான் இருப்பார்' என்று கூறுகிறார்கள்.
இது அவர்களின் மாசு மருவற்ற நேர்மைக்கும், கொள்கைப் பிடிப்புக்கும் எடுத்துக் காட்டாக உள்ளது.
கேள்வி கேட்டவரின் தந்தை எவ்வாறு பல தெய்வ நம்பிக்கையுடையவரோ, அது போல் தான் நபிகள் நாயகத்தின் தந்தையும் இருந்தார். பல தெய்வ நம்பிக்கையுடையோரை இறைவன் நரகத்தில் தள்ளுவான் என்ற விதியில் எனது தந்தை என்பதற்காக எந்த விதி விலக்கும் இல்லை என்று அறிவிக்கிறார்கள்.
தந்தையைப் பற்றி மட்டுமின்றி தமது தாயாரைப் பற்றியும் இவ்வாறே அறிவிப்புச் செய்தார்கள்.
'என் தாயாரின் பாவங்களை மன்னிக்கும் படி பிரார்த்திக்க இறைவனிடம் நான் அனுமதி கேட்டேன். அவன் மறுத்து விட்டான்' என்று அவர்கள் கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 1621, 1622
அவர்களின் தந்தையைப் போலவே தாயாரும் பல தெய்வ நம்பிக்கையுடையவராகவே இருந்து மரணித்திருந்தார். நபிகள் நாயகத்தின் தாயார் என்பதற்காக எவ்வித விதி விலக்கும் அளிக்கப்பட மாட்டாது என்று தெளிவுபடுத்துகிறார்கள்.
ஆன்மீகத் தலைவர்கள் மற்றவர்களுக்கு விலக்கு அளிக்கிறார்களோ இல்லையோ தங்களுக்கு விலக்கு அளித்துக் கொள்வார்கள்.
எதைப் போதித்தார்களோ அதற்கு மாற்றமாக நடப்பார்கள். யரேனும் கேள்வி எழுப்பினால் நாங்கள் தனிப் பிறவிகள் என்பார்கள்.
ஆனால் நபிகள் நாயகம் அவர்கள் 'இந்தக் கொள்கையை நான் மீறினாலும் எனக்குக் கிடைப்பது நரகமே' என்று தெளிவான வார்த்தைகளால் பிரகடனம் செய்தார்கள்.
நபியை பெத்தவா்களுக்கு நரகம் என்கிறாா் நபி.
நியாயத் தீா்ப்பு நாளுக்கு பிறகுதானே இவருக்கு சொா்க்கம் இவருக்கு நரகம்எ ன்று அல்லா தீா்ப்பான் என்று கூறுகின்றீா்கள். மின் மனமி் போன போக்கில் அவருக்கு சொா்க்கம் இவருக்கு நரகம் என்பது வெட்டிப் பேச்சு.அல்லாவிற்கு இணை வைத்தல் அல்லவா ? நபி செய்திருப்பது பெரும் பாவம் அல்லவா
Post a Comment