Followers

Showing posts with label ஆப்கானிஸ்தான். Show all posts
Showing posts with label ஆப்கானிஸ்தான். Show all posts

Thursday, April 23, 2015

ஆப்கானிஸ்தானில் மதத்தின் பெயரால் பெண் கொடுமை!



ஆப்கானிஸ்தான் ஏற்கெனவே சோவியத் ரஷ்யாவாலும், அமெரிக்கர்களாலும் சிக்கி நிம்மதியிழந்து தவிக்கிறது. இது போதாதென்று இஸ்லாமிய மார்க்கத்தை சரியாக விளங்காத பல முல்லாக்கள் வேறு அந்த மக்களை கொடுமைபடுத்தி வருகின்றனர். அந்நாட்டு மக்களின் இஸ்லாமிய நம்பிக்கையை சில முல்லாக்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். தொடர்ந்த போர் காரணமாக பெரும்பாலான மக்களிடம் படிப்பறிவும் இல்லை. இஸ்லாமிய மார்க்க அறிவும் இல்லை. மந்திரம், தாயத்து போன்ற மூடப் பழக்கங்களில் அந்த மக்கள் மூழ்கி திளைக்கின்றனர். இதனைக் கண்டிக்க வேண்டிய மார்க்க அறிஞர்களோ மூடப்பழக்கங்களை மேலும் வளர்கின்றனர்.

சென்ற மாதம் 27 வயதே நிரம்பிய ஃபக்ருந்தா என்ற இளம் பெண்ணின் மேல் அபாண்டமாக பழியை சுமத்தினார் தாயத்துகளை விற்று பிழைப்பு நடத்தும் ஒரு மத வியாபாரி. இவரின் பேச்சை நம்பிய அந்த கிராமத்து மக்கள் அந்த பெண்ணை அடித்தே கொன்று விட்டனர். இது ஆப்கானிஸ்தான் முழுக்க சமூக ஆர்வலர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. குர்ஆனை விளங்காத மார்க்க அறிஞர்களின் ஃபத்வாக்களால் ஆப்கானிஸ்தானில் பல பெண்களின் வாழ்வு கேள்விக் குறியாகி உள்ளது.

முகத்தை முழுவதுமாக மூட வேண்டும்: கல்லூரிக்கு செல்லக் கூடாது: ஆண்களோடு பேசக் கூடாது என்று சகட்டு மேனிக்கு ஃபத்வாக்களை வாரி வழங்குவதில் இந்த முல்லாக்கள் கில்லாடிகள். இதற்கு குர்ஆனின் ஆதாரத்தையோ, நபிகளின் கட்டளைகளையோ சமர்ப்பிப்பதில்லை. இவர்களின் அடாவடிகளை தட்டிக் கேட்டால் இஸ்லாமிய நிந்தனையாகி விடுமோ என்ற அச்சத்தில் பலர் பலிகடா ஆக்கப்படுகின்றனர்.

'தாடியும் பெரிய தலைப்பாகையும் கட்டியவர்கள் எல்லாம் மார்க்க அறிஞர்களாகி விட முடியாது. குர்ஆனை சரியான முறையில் விளங்கியவர்களே மார்க்க அறிஞர்களாக முடியும். இதனை பொது மக்கள் நன்கு உணர வேண்டும்' என்று ஆப்கானின் மத விவகாரங்களுக்கான துணை மந்திரி தையுல் ஹக் ஆபித் மக்களுக்கு அறிவுருத்தி உள்ளார். படத்தில் அமர்ந்துள்ள கள்ள முல்லா ஜூம்மா கான் தனனை நாடி வரும் பக்தர்களுக்கு சகட்டு மேனிக்கு தட்டு தாயத்துகளை எழுதிக் கொடுத்த வண்ணம் உள்ளார். சிலருக்கு வெள்ளை பச்சை துணிகளில் அரபியில் எதையோ எழுதி ஊதி விட்டு தலையில் கட்டி விடுகிறார். மார்க்க அறிவு இல்லாத அந்த மக்களும் இதனை உண்மை என்று நம்பி தங்களின் பொருளாதாரத்தை இழக்கின்றனர்.

இதே போன்ற நிலைதான் முன்பு தமிழகத்திலும் இருந்தது. கடந்த 25 ஆணடுகளாக தொடர்ந்த பிரசாரத்தின் காரணமாக இன்று ஓரளவு மக்களிடையே மிகப் பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நான் சிறுவனாக இருந்தபோது எனது வீட்டிலேயே தட்டு தாயத்துகள் எல்லாம் பிரபலம். நாகூர் தர்ஹாவுக்கும் வருடம் ஒருமுறை பெண்கள் சென்று வந்து விடுவர். இன்று அந்த நிலை எனது தீவிர முயற்சியால் 90 சதவீதம் மாற்றப்பட்டு விட்டது. இதே போன்று ஒட்டு மொத்த தமிழக இஸ்லாமிய குடும்பங்களில் சத்தமில்லாத ஒரு புரட்சி ஏற்பட்டுள்ளது. மார்க்க அறிஞர்கள் எதைச் சொன்னாலும் அதற்கு குர்ஆனின் ஆதாரத்தை கேட்கும் மக்களாக தமிழக முஸ்லிம்கள் மாறி உள்ளனர். இதே போன்ற ஒரு எழுச்சி ஆப்கானிஸ்தானத்தில் ஏற்படாத வரை அந்த நாட்டுக்கு எந்த அரசியல் கட்சிகளாலும், அல்லது எந்த அண்டை நாடுகளாலும் விமோசனம் ஏற்பட வாய்பில்லை என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

தகவல் உதவி
சவுதி கெஜட்
23-04-2015

Wednesday, October 15, 2014

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இல்லையா?

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இல்லையா?

தங்கமணி!

//வஹாபிகளின் வழித்தோன்றல்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் என்று சிரியாவில் சவுதி அரேபியா, பஹ்ரேன், ஷேக்குகளின் ஆதரவுடன் அங்குள்ள சியா, யாஜிதி ஆண்களை கழுத்தை வெட்டிக்கொன்று, அவர்களின் மகள்கள், மனைவிகள், பெண்களை விலைக்கு வாங்கி விற்று, பாலுறவு அடிமைகளாக வைத்துகொண்டிருக்கிறார்களே, அதெல்லாம் சுன்னாவா?
அவர்களுக்கெல்லாம் அநீதி இழைக்கப்படவில்லையா? அல்லது அதெல்லாம் அல்லாவின் வழியில் நடக்கும் ”அறப்போரா”?//

இஸ்லாத்தின் பெயரால் யார் எந்த காரியத்தை செய்தாலும் அதற்கு குர்ஆனின் கட்டளை இருக்க வேண்டும். அது அல்லாமல் தனி மனிதர்கள் செய்யும் எந்த காரியத்துக்கும் இஸ்லாமோ முஸ்லிம்களோ பொருப்பாக மாட்டார்கள்.

ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பே சிஐஏவும், மொஸாத்தும் சேர்ந்து அவர்களின் காரியங்களை சாதித்துக் கொள்ள உருவாக்கிய அமைப்புகளே! எந்த நாட்டின் ஆதரவும் இல்லாமல் இத்தனை இடங்களை இவர்களால் எப்படி பிடிக்க முடிந்தது? அதிலும் பல லட்சம் டாலருக்கு பெட்ரோலை விற்கின்றனர் இந்த தீவிரவாத குழுவினர். இதனை வாங்குபவர்கள் யார்? உங்கள் வீட்டில் உங்களையே கண்காணிக்கும் வசதிபடைத்த அமெரிக்காவால் இதனை கண்டுபிடிக்க முடியாதா? சதாம் ஹூசைனை சில வாரங்களிலேயே முடிவுக்கு கொண்டு வந்தனர். கடாஃபியையும் சில வாரங்களிலேயே ஒரு முடிவுக்கு கொண்டு வந்தனர்.

ஆனால் எந்த நாட்டின் ஆதரவும் இல்லாத ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை ஒரு முடிவுக்கு கொண்டு வர இன்னும் இவர்களால் முடியவில்லையாம். தாலிபான்களை உருவாக்கியதும் அமெரிக்காவும், இஸ்ரேலும்தான். அதே போல் அல்காயிதா, உசாமாபின்லேடன், என்று அனைவரையும் உருவாக்கியது சிஐஏவும் மொசாத்தும் என்று பல அறிக்கைகள் கூறுகின்றன. இதை ஏன் இவர்கள் செய்ய வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம்.

அமைதியிழந்த அமெரிக்க ஐரோப்பிய மக்கள் இன்று லட்சக்கணக்கில் இஸ்லாத்தில் சேர்ந்த வண்ணம் உள்ளனர். இன்றும் 10 ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் இஸ்லாமியர் பெரும்பான்மையாக வாழும் தேசங்களாக மாறினால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று பல அறிக்கைகள் கூறுகின்றன. எனவே இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு அந்த தேசங்கள் தள்ளப்பட்டுள்ளன. அதற்கான முதல்படிதான் அல்காயிதா, ஐஎஸஐஎஸ போன்ற அமைப்புகள். இந்த அமைப்பின் பெயரால் அராஜகங்களை அரங்கேற்றினால் இஸ்லாத்தின் வளர்ச்சியையும் தடுக்க முடியும். அதோடு தீவிரவாதிகளை ஒடுக்குகிறேன் என்ற போர்வையில் அரபு நாடுகளின் பெட்ரோல் வளத்தையும் சுரண்ட முடியும். ஒரு கல்லில் இரண்டு மாங்காய். தற்போது ஆப்கானிஸ்தானத்தில் அந்த நாட்டை பாதுகாக்கிறேன் என்ற போர்வையில் சென்ற மாதம் அமெரிக்கா புதிதாக பாதுகாப்பு ஒப்பந்தம் போட்டதை நாம் பத்திரிக்கையில் பார்த்தோம்.

நமது நாட்டிலும் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்க 'இந்தியன் முஜாஹிதீன்' என்ற அமைப்பை உளவுத்துறையே உருவாக்கியதாக ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேய காட்ஜூ கூறியதையும் நாம் மறந்து விட முடியாது.

இந்தியாவில் தங்களின் கிளைகளை திறக்கப் போவதாக அல்காயிதாவின் தலைவர் ஜவாஹிரி கொடுத்த அறிக்கையை நாம் பத்திரிக்கைகளில் பார்த்தோம். இந்தியாவில் உள்ள எந்த முஸ்லிமும் எந்த ஒரு கோரிக்கையும் வைக்காமல் இருக்கும் போது திடீரென்று இவர் அறிவிக்க காரணம் என்ன? இந்த செய்தி எங்கிருந்து கசியவிடப்பட்டது?

SITE என்ற செய்தி ஸ்தாபனத்திலிருந்து இந்த செய்தி கசிய விடப்பட்டுள்ளது. இந்த செய்தி ஸ்தாபனமானது இஸ்ரேலுடைய மொசாத்தின் அங்கத்தினர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு மேலும் நெருக்குதல்களைக் கொடுக்கவும் இந்துத்வாவாதிகளுக்கு இந்து மக்களின் ஆதரவை பெற்றுத் தரும் முகமாகவே இந்த செய்தியை மொசாத் கசிய விட்டுள்ளது.

அஸ்ஸாம் காஷ்மீர் குஜராத் போன்ற மாநிலங்களில் ராணுவத்தாலும் ஆட்சியாளர்களாலும் பல கொடுமைகள் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டிருக்கலாம். அதனை எவ்வாறு எதிர் கொள்வது என்பது இந்திய முஸ்லிம்களுக்கு தெரியும். காவல்துறையும், நீதித் துறையும் இந்தியாவில் முற்றாக சிதைந்து விடவில்லை. எனவே அல்ஜவாஹிரி போன்ற அமெரிக்க கைக் கூலிகளின் உதவி எந்த இந்திய முஸ்லிமுக்கும் தேவையில்லை என்பதை இங்கு பதிவு செய்து கொள்கிறோம்.

1. சைபல் எட்மண்ட்ஸ் என்ற எஃப்பிஐ அங்கத்தினர் விவரிக்கும் போது அல்ஜவாஹிரி நேடோவில் வேலை செய்த முன்னால் அதிகாரி என்ற உண்மையை போட்டு உடைத்திருக்கிறார். அல்காய்தா என்ற இந்த அமைப்பும் அமெரிக்காவின் சிஐஏ வால் உருவாக்கப்பட்ட அமைப்பு என்றும் தெளிவுபடுத்துகிறார். வளைகுடாக்களில் கால் ஊன்றவும் இந்தியா போன்ற நாடுகளில் இந்துத்வாவாதிகளின் கைகளை பலப்படுத்தவும் தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளவே அல்காயிதாவை இஸ்ரேலிய மொசாத் உருவாக்கியதாக விவரித்து கூறுகிறார்.

2. SITE என்ற இந்த செய்தி ஸ்தாபனமானது ரிடா கட்ஸ் என்ற முன்னால் இஸ்ரேலிய ராணுவ வீரரின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. தற்போது இந்த யூதன் மொசாத்தில் வேலை செய்து வருகிறார். இந்த செய்தி ஸ்தாபனமானது அல்காய்தாவின் முக்கிய செய்திகளை வெளியிடுவதும் மேலும் அமெரிக்காவுக்கு தோதான செய்திகளை தேர்ந்தெடுத்து வெளியிடுவதும் இதன் முக்கிய பணியாகும்.

Saturday, March 01, 2014

தொழுகைக்காக கிரிக்கெட்டை நிறுத்திய ஆப்கன் அணியினர்!



சென்ற பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் ஆசிய கோப்பை தொடர் போட்டி வங்க தேசத்தில் நடைபெற்றது. மார்ச் ஒன்றாம் தேதி வங்க தேச அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதின. போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மாலை (மஹ்ரிப்) நேர தொழுகைக்கான நேரம் வந்தது. நடுவர்களிடம் தாங்கள் தொழுது கொள்ள ஐந்து நிமிட நேரம் ஒதுக்க வேண்டும் என்று ஆப்கன் அணியினர் கேட்டுக் கொண்டனர்.

இவர்களின் கோரிக்கையை ஏற்ற நடுவர்கள் தொழுவதற்கு அனுமதி வழங்கினர். மைதானத்திலேயே கூட்டாக அந்த வீரர்கள் தங்கள் தொழுகையை நிறைவேற்றியது பார்த்தவரை மெய்சிலிர்க்க வைத்தது. கிரிக்கெட் போட்டியில் தொழுகைக்காக நேரம் ஒதுக்கியது வரலாற்றில் இதுவே முதல்முறை. இந்த போட்டியில் ஆப்கன் அணியினர் வெற்றியும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீரர்களுக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில்தான் தொழுகையை நிறைவேற்றினர் என்ற செய்தியும் ஒரு இணைய தளத்தில் உள்ளது. எப்படியோ கிரிக்கெட் வரலாற்றில் இது போன்ற ஒரு நல்ல நிகழ்வு நடைபெற முன்னுதாரணமாக விளங்கும் ஆப்கான் கிரிக்கெட் டீமை பாராட்டுவோம்.

'நான் கிரிக்கெட்டை மிகவும் விரும்புபவன். ஆப்கன் அணி பல வெற்றிகளைப் பெற பிரார்த்திக்கிறேன்' என்று தாலிபான்களின் செய்தி தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தற்போது தாலிபான்களிடம் அதிக மாற்றங்கள் தென்படுவதை இந்த பேட்டி உணர்த்துகிறது. துப்பாக்கிகளை தூரமாக்கி ஆப்கான் அரசியலில் தாலிபான்கள் தங்களின் முத்திரையை பதிப்பார்களாக!

நம்பிக்கை கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.

மேலும் அவர்கள் தம் தொழுகைகளைக் குறித்த காலத்தில் முறையோடு பேணுவார்கள்.

குர்ஆன்: 23:1,2 - 23:9