Followers

Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts

Monday, July 13, 2015

விம்பிள்டன் டென்னிஸ் கோப்பையை வென்றார் சானியா!



விம்பிள்டன் டென்னிஸ் கோப்பையை வென்றார் சானியா!

விம்பிள்டன் மகளிர் இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் வென்றதன் மூலம், மகளிர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை சானியா மிர்சா படைத்துள்ளார்.

வாழும் நபர்களில் நமது இந்திய நாட்டுக்கு உலக அளவில் பெயர் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கும் நபர்களில் சானியா மிர்ஸாவும் தற்போது சேர்ந்து கொண்டுள்ளார். ராக்கெட் தொழில் நுட்பத்தில் கொடி கட்டி பறந்த அப்துல் கலாம் ஒரு பக்கம்: ஆஸ்கார் விருது வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான் ஒரு பக்கம். உலக மக்களை இன்றும் கவர்ந்து இழுத்துக் கொண்டிருக்கும் தாஜ்மஹால், செங்கோட்டை ஒரு பக்கம். பாலிவுட் நட்சத்திரங்களாக வலம் வரும் ஷாருக் கான், சல்மான் கான், அமீர்கான் இது ஒரு பக்கம்..

மேலும் இன்னும் சில ஆண்டுகளில் இந்தோனேஷியாவை பின்னுக்கு தள்ளி விட்டு உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இஸ்லாமியர்கள் வாழும் நாடாக இந்தியா மாறி விடும் என்று கருத்துக் கணிப்புகளும் சொல்கின்றன. இது மட்டுமல்லமால் பிஸ்மில்லா கான், ஜாகிர் ஹூசைன் என்று வரிசையாக அடுக்கிக் கொண்டே போகலாம்!

இந்துத்வாவாதிகளின் ஆட்சியில் இப்படி இந்தியாவின் அடையாளங்களாக இஸ்லாமியர்கள் மாறி வருவது தற்காலங்களில் அதிகமாயுள்ளது. மோடியும், அமீத்ஷாவும் என்றைக்கு இவர்களை எல்லாம் பாகிஸ்தானுக்கு அனுப்பி விட்டு ராம ராஜ்யம் அமைக்கப் போகிறார்களோ! அந்த ராமனுக்கே வெளிச்சம்! :-)

Saturday, April 18, 2015

சானியா மிர்ஸாவுக்கு ஏ ஆர் ரஹ்மான் பாராட்டு!



டென்னிஸ் இரட்டையர் பிரிவில் உலகின் முதல் டென்னிஸ் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ள சானியா மிர்ஸாவை ஏ ஆர் ரஹ்மான் பாராட்டியுள்ளார்.

அன்பு நண்பர்களே!

பெண்களுக்கு சரியான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று சொல்லிக் கொண்டுள்ளோம். அதே நேரம் இந்திய கிராமங்களிலும் நகரங்களிலும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டு ஏதும் செய்ய இயலாதவர்களாக அதற்கு சாட்சியாகவும் நின்று கொண்டுள்ளோம்.

ஆனால் இந்திய மகளான சானியா மிர்ஷா இந்த தடைகளை உடைத்து இந்தியாவுக்கு உலக அரங்கில் ஒரு சிறந்த இடத்தைப் பெற்றுத் தந்துள்ளார். நம்முடைய குறிக்கோள் சிறந்ததாக இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதனை இவரது சாதனை மெய்ப்படுத்துகிறது. இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

இந்தியாவின் எனது சகோதரி சானியா மிர்ஸா என்னவொரு சாதனையை இன்று நிகழ்த்தியுள்ளார்! இவரது சாதனையை கண்டு பரவசத்தில் ஆழ்ந்துள்ளேன். இவரது இந்த சிறந்த சாதனையை நாமும் கொண்டாடுவோம்.

- ஏ. ஆர். ரஹ்மான்

Thursday, February 19, 2015

இந்திய கிரிக்கெட் வீரர்கள் புனித மக்காவில்!

இந்திய கிரிக்கெட் வீரர்கள் புனித மக்காவில்!



இந்திய அதிரடி கிரிக்கெட் ஆட்டக்காரர்களான சகோதரர்கள் இர்ஃபான் பதான் மற்றும் யூசுஃப் பதான் ஆகிய இருவரும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் சகிதம் உம்ரா செய்ய 12-02-2015 அன்று மக்கா வந்திருந்தனர். இவர்களின் உம்ரா பயணத்தை இறைவன் ஏற்றுக் கொண்டு இவர்களின் பாவங்களை மன்னிப்பானாக!

ஓர் உம்ராச் செய்வது மறு உம்ரா வரையில் உள்ள பாவங்களின் பரிகாரமாகும்... (நூல்கள்: புகாரி 1773. முஸ்லிம் 2624. திர்மிதீ 855. நஸயீ, அஹ்மத், இப்னுமாஜா. முஅத்தா ஆகிய நூல்களிலும் இடம்பெற்றள்ளது)

''ரமளானில் செய்யப்படும் ஓர் உம்ரா ஹஜ்ஜுக்கு நிகரானதாகும், அல்லது என்னோடு ஹஜ் செய்வதற்கு நிகரானதாகும்'' என்று நபி அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: புகாரி 1782, 1863. முஸ்லிம் 2408, 2409)

நபி அவர்கள் செய்த உம்ராக்கள்.

"நபி அவர்கள் நான்கு உம்ராக்கள் செய்துள்ளார்கள்!" என்ற அறிவிப்பு புகாரி 1778, 1780, 4148. முஸ்லிம் 2404, 2406, ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளன.

உம்ராவின் சிறப்பைக் குறித்து நபிகள் நாயகம் வலியுறுத்தியிருப்பதாலும், நபி அவர்கள் உம்ராச் செய்திருப்பதாலும் உம்ராச் செய்வது சிறப்பு மற்றும் நபிவழி. ஆனால், உம்ரா கட்டாயக் கடமை என்று நிறுவ மார்க்கத்தில் ஆதாரம் இல்லை! வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்வார்களாக!

Sunday, February 15, 2015

தொலைக்காட்சியை உடைக்கும் பாகிஸ்தானிய கிறுக்கர்கள்!



தொலைக்காட்சியை உடைக்கும் பாகிஸ்தானிய கிறுக்கர்கள்!

விளையாட்டு என்பது உடல் ஆரோக்கியத்திற்காக ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இந்த விளையாட்டை நாட்டின் கவுரவ பிரச்னையாக எடுத்துக் கொண்டு சில கிறுக்கர்கள் தொலைக் காட்சி பெட்டியை உடைப்பதைத்தான் இங்கு பார்கிறோம். அட கிறுக்கன்களா! விளையாட்டில் ஜெயித்தவனும் தோற்றவனும் கோடிகளில் புரளுவதை நீ அறிய மாட்டாயா? உடைத்த அந்த டிவியை வாங்க நீ இரண்டு மாதம் உடல் வியர்வை சிந்தி உழைக்க வேண்டுமே என்றாவது சிந்தித்தாயா? விளையாட்டு, இசை என்ற எந்த பொழுது போக்கு அம்சங்களையும் ஒரு அளவுக்கு மீறி நேசித்தால் அதன் முடிவு எவ்வாறு இருக்கும் என்பதற்கு இந்த நிகழ்வுகளே சாட்சிகளாக இருக்கின்றது.

இந்தியாவிலும் பகிஸ்தானிலும் தேச பக்திக்கு அடையாளமாக கிரிக்கெட்டின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் போக்கு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இந்த போக்கானது இரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் நல்லதல்ல. வறுமையான மக்களை அதிகம் கொண்ட இந்த நாடுகள் பொருளாதார முன்னேற்றத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பாகிஸ்தானிடம் ஜெயித்த சந்தடி சாக்கில் மோடி அரசு பெட்ரோல் விலையை மேலும் ஏற்றியுள்ளது. அது பற்றி எல்லாம் தேச பக்தி பேசுபவர்களுக்கு கவலையில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் பாகிஸ்தானை ஜெயித்து விட வேண்டும்.

இந்திய பாகிஸ்தானின் பெரும்பான்மை மக்கள் என்றுதான் சிந்திக்க தொடங்குவார்களோ! பொறுத்திருந்து பார்போம்.

Sunday, September 07, 2014

'இந்திய மகள் சானியா மிர்ஸா' - ஆம் ஆத்மி புகழாரம்



Congratulations, Indian Daughter Sania Mirza won US Open Mixed Doubles !

भारत की बेटी सानिया मिर्ज़ा की इस जीत पर सभी को ढेर सारी बधाइयाँ |

கலப்பு இரட்டையர் யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் பதக்கத்தை வென்ற சானியா மிர்ஸாவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம். (இனிமேலாவது குட்டை பாவாடையை குறைத்து கண்ணியமான உடையை உடுத்த முயற்சிக்கவும் சகோதரி.) :-)

ஆம் ஆத்மி பார்டி தனது இணைய தளத்தில் 'இந்திய மகள் சானியா மிர்ஸா' என்ற அடை மொழியோடு தனது பாராட்டை தெரிவித்துள்ளது. சில மாதங்கள் முன்பு தெலுங்கானா தூதுவராக சானியா மிர்ஸாவை நியமித்ததற்கு போலி தேச பக்தியால் பொங்கி வழிந்த காவிகள் எதிர்ப்பு தெரிவித்ததை நாம் மறந்திருக்க மாட்டோம். பாகிஸ்தானியை திருமணம் முடித்ததால் இந்த பெண் பாகிஸ்தானியாக மாறி விட்டார் என்று கோஷம் எழுப்பியதையும் நாம் மறந்து விடவில்லை. ராமாயண கதை நடந்ததாக கூறப்படும் பல சரித்திர இடங்கள் இன்று ஆப்கானிஸ்தானத்தில் உள்ள தாலிபான்களின் கைப்பிடியில் உள்ளது. எனவே இங்குள்ள இந்துத்வாவாதிகளை ஆப்கானிஸ்தானத்துக்கு அனுப்பி விடலாம் என்று யாராவது சொன்னால் அவனை கிறுக்கன் என்றுதான் சொல்லுவோம். அதே வாதத்தைத்தான் இந்துத்வாவாதிகளும் வைக்கின்றனர்.

இந்துத்வாவாதிகளுக்கு பதிலளிக்கும் முகமாகவே 'இந்திய மகள் சானியா மிர்ஸா' என்று கூறி பெருமைபடுத்தியுள்ளது ஆம் ஆத்மி பார்ட்டி. இவர் பெற்ற வெற்றி ஒட்டு மொத்த இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி. இனி வருங்காலங்களிலும் தான் இந்தியனாகவே இருப்பேன் என்றும் இந்தியாவுக்காகவே விளையாடுவேன் என்றும் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

தயிர்சாத பார்ட்டிகளுக்காகவே கிட்டத்தட்ட ஒதுக்கப்பட்டு விட்ட சோம்பேறிகளின் ஆட்டமான கிரிக்கெட்டுக்கு உள்ள முக்கியத்துவத்தை குறைத்து டென்னிஸ், வாலிபால், பேஸ்கட் பால், கால் பந்து, கபடி போன்ற உடல் உழைப்பு சார்ந்த விளையாட்டுக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க அரசும் மக்களும் முயல வேண்டும். முன்னேறிய நாடுகளான ஐரோப்பிய ஒன்றியம், சைனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற செல்வந்த நாடுகள் இந்த கிரிக்கெட்டைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கவில்லை.

காவிகளே! நேற்று முளைத்த ஆம் ஆத்மி பார்ட்டியிடமிருந்தாவது எவ்வாறு அரசியல் செய்வது என்று பாடம் எடுத்துக் கொள்ளுங்கள். இன்னும் ஆயிரம் முறை நீங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இந்தியா மத சார்பற்ற நாடாகவே மிளிரும். இந்துத்வாவாதிகளான உங்களை அரிசியலில் இருந்து முற்றாக ஓரங்கட்டும் நாளையும் இந்து மக்களே தீர்மானிப்பர். கூடிய விரைவிலேயே அதுவும் நடந்தேறும். அது வரை சற்று பொறுமையாக இருப்பீர்களாக! :-)

Thursday, August 21, 2014

இப்படியும் ஒரு இஸ்லாமியர்..!



இப்படியும் ஒரு இஸ்லாமியர்..!

இந்தியா-இங்கிலாந்து அணி இடையே (17-08-2014) அன்று நடந்த கடைசி டெஸ்ட் போடியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.அத்துடன் 3-1 என்ற கணக்கில் தொடரையும் கைபற்றியது.இந்த மகத்தான வெற்றியின் மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீரர்கள் ஒருவருக்கொருவர் மதுபானத்தை குலுக்கி அடித்து பகிர்ந்து கொண்டனர் .ஆனால் இங்கிலாந்து அணியின் ஒரே இஸ்லாமிய கிரிக்கெட் வீரரான மொயீன் அலி(MOEEN ALI) இஸ்லாத்தில் "மது ஹராம் என்பதன் காரணமாக" இதனை மறுத்து விலகி நின்றுக்கொண்டிருந்தார்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

Saturday, March 01, 2014

தொழுகைக்காக கிரிக்கெட்டை நிறுத்திய ஆப்கன் அணியினர்!



சென்ற பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் ஆசிய கோப்பை தொடர் போட்டி வங்க தேசத்தில் நடைபெற்றது. மார்ச் ஒன்றாம் தேதி வங்க தேச அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதின. போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மாலை (மஹ்ரிப்) நேர தொழுகைக்கான நேரம் வந்தது. நடுவர்களிடம் தாங்கள் தொழுது கொள்ள ஐந்து நிமிட நேரம் ஒதுக்க வேண்டும் என்று ஆப்கன் அணியினர் கேட்டுக் கொண்டனர்.

இவர்களின் கோரிக்கையை ஏற்ற நடுவர்கள் தொழுவதற்கு அனுமதி வழங்கினர். மைதானத்திலேயே கூட்டாக அந்த வீரர்கள் தங்கள் தொழுகையை நிறைவேற்றியது பார்த்தவரை மெய்சிலிர்க்க வைத்தது. கிரிக்கெட் போட்டியில் தொழுகைக்காக நேரம் ஒதுக்கியது வரலாற்றில் இதுவே முதல்முறை. இந்த போட்டியில் ஆப்கன் அணியினர் வெற்றியும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீரர்களுக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில்தான் தொழுகையை நிறைவேற்றினர் என்ற செய்தியும் ஒரு இணைய தளத்தில் உள்ளது. எப்படியோ கிரிக்கெட் வரலாற்றில் இது போன்ற ஒரு நல்ல நிகழ்வு நடைபெற முன்னுதாரணமாக விளங்கும் ஆப்கான் கிரிக்கெட் டீமை பாராட்டுவோம்.

'நான் கிரிக்கெட்டை மிகவும் விரும்புபவன். ஆப்கன் அணி பல வெற்றிகளைப் பெற பிரார்த்திக்கிறேன்' என்று தாலிபான்களின் செய்தி தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தற்போது தாலிபான்களிடம் அதிக மாற்றங்கள் தென்படுவதை இந்த பேட்டி உணர்த்துகிறது. துப்பாக்கிகளை தூரமாக்கி ஆப்கான் அரசியலில் தாலிபான்கள் தங்களின் முத்திரையை பதிப்பார்களாக!

நம்பிக்கை கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.

மேலும் அவர்கள் தம் தொழுகைகளைக் குறித்த காலத்தில் முறையோடு பேணுவார்கள்.

குர்ஆன்: 23:1,2 - 23:9


Thursday, September 19, 2013

குல்சும் அப்துல்லாஹ் - பாராட்டப்பட வேண்டியவர்.

குல்சும் அப்துல்லாஹ் - பாராட்டப்பட வேண்டியவர்.



பெண்கள் விளையாட்டு என்றாலே அது உடை குறைப்பாகத்தான் இருக்கும். அங்கு குழுமும் கூட்டமும் விளையாட்டை பார்க்க வராது. அந்த பெண்களின் அங்கங்களை ஆராய்வதற்கே வரும். ஆண்கள் போட்டிகளை விட பெண்கள் அரை குறை ஆடைகளோடு கலந்து கொள்ளும் போட்டிகளில் நமது ஆண் மக்கள் அரங்கு நிரம்பி வழிவதும் அதற்குத்தான்.



35 வயதான குல்சும் அப்துல்லா அமெரிக்க குடியுரிமை பெற்ற பாகிஸ்தானிய பெண். கம்யூட்டர் என்ஜினியரிங்கில் பிஎச்டி பண்ணியுள்ளார். சர்வதேச பளு தூக்கும் போட்டியில் பெண்கள் இவ்வாறுதான் அரை குறை ஆடை அணிய வேண்டும் என்ற நியதி உள்ளது. ஆனால் இவர் மேலதிகாரிகளோடு வாதிட்டு 'இஸ்லாமிய உடை, பளு தூக்கும் என்னைப் போன்ற பெண்களுக்கு எந்த சிரமத்தையும் கொடுப்பதில்லை. நான் இஸ்லாமிய உடைகளோடு மட்டுமே போட்டிகளில் கலந்து கொள்வேன்' என்று கூறி முடிவில் வெற்றியும் பெற்றுள்ளார். அதிகாரிகள் தற்போது போட்டியின் விதி முறைகளை திருத்தி இஸ்லாமிய உடை அணிந்தும் பளு தூக்கும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என்று மாற்றியுள்ளனர்.

தற்போது இந்த உடையில் இந்த பெண்ணை நாம் பார்க்கும் போது நம்மையறியாமல் மரியாதை வருகிறது. போராடினால் எந்த மாற்றத்தையும் கொண்டு வரலாம் என்பதற்கு இந்த பெண் முன்னுதாரணமாக உள்ளார். வாழ்த்துக்கள் சகோதரி...

இதே போல் ஈரானிய பெண்கள் முழு ஆடையோடு விளையாட வந்ததற்காக ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து வெளியேற்றப்பட்டது நமக்கு நினைவிருக்கலாம். இனி வரும் காலத்தில் இதை முன்னுதாரணமாகக் கொண்டு அனைத்து போட்டிகளிலும் பெண்கள் தங்கள் உடலை மறைத்து கலந்து கொள்ள அனுமதியளிக்கப்பட வேண்டும். இதை ஆரம்பித்து வைத்த அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டிக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.

பெண்கள் புர்கா அணிந்து வெளியில் வந்தால் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண முடியாது என்று சொல்பவர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் குல்சும் அப்துல்லா.

Friday, August 03, 2012

ஒலிம்பிக் அரங்கேற்றும் பாலியல் வக்கிரங்கள்!



சாதி மத பேதமற்று அனைவரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்வது விளையாட்டு துறை. நானும் பால் பேட்மிட்டனில் ஓரளவு விளையாடி பல சான்றிதழ்களை பெற்றுள்ளேன். அம்மாபேட்டை, ஒரத்தநாடு, வலங்கைமான், கும்பகோணம், அய்யம் பேட்டை என்று பல பள்ளிகளில் படிக்கும் காலங்களில் நான் படித்த பள்ளிக்காக விளையாடிய அனுபவம் உண்டு.

ஆனால் இன்று வெகு விமரிசையாக விளம்பரப்படுத்தப்பட்டு நடத்தப்படும் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் விளையாட்டின் நோக்கத்தையே சிதைக்கும் விதமாக நடந்து கொள்கிறது. ஒலிம்பிக் கிராமங்களில் பாலியல் வக்கிரங்களை கணக்கின்றி பரவ விடுவதை எவரும் கண்டிக்காமல் இருப்பது ஆச்சரியப்பட வைக்கிறது.

இவர்களின் நோக்கத்தை சரியாக புரிந்து கொண்ட சில இஸ்லாமிய நாடுகள் இந்த போட்டிகளிலிருந்து ஒதுங்கி இருந்தன. இது ஏதோ மிகப் பெரிய தவறு என்று மீடியாக்கள் விமரிசிக்கப் போய் வேண்டா வெறுப்பாக சிலரை இந்த வருடம் சவுதி அரேபியா தனது வீராங்கனைகளை அனுப்பி வைத்துள்ளது. ஆண் துணையோடும் ஹிஜாப் உடையோடும் கலந்து கொள்வார்கள் என்ற கண்டிஷனோடு தனது வீரர்களை அனுப்பி வைத்துள்ளது சவுதி அரேபியா. கற்பை இழந்து கண்ணியத்தை இழந்துதான் அந்த ஒலிம்பிக் மெடலை வாங்க வேண்டும் என்றால் அதனை தூக்கி எறியவும் தயாராக இருக்க வேண்டும். சாந்தி என்ற முன்னால் தமிழக வீராங்கனை இன்று செங்கல் சூளையில் தினக் கூலிக்கு வேலை செய்து வருகிறாராம். இதுதான் அவர்களுக்கு கிடைத்த கடைசி பரிசு.

ஒலிம்பிக் விளையாட்டை நடத்தும் சில கம்பெனிகள் உலகுக்கு சிறந்த விளையாட்டு வீரர்களை தருவதை விட அந்த வீரர்களை செக்ஸ் அடிமைகளாக மாற்றுவதில் அதிக அக்கறை காட்டுகின்றன. போதை மருந்துகள் மிக இலகுவாக புழக்கத்தில் விடப்படுகிறது. இங்கு நடக்கும் பல அநாச்சாரங்களைப் பற்றி முன்னால் இங்கிலாந்து ஒலிம்பிக் வீரர் புனை பெயரில் 'தி சீக்ரெட் ஒலிம்பிக்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதே போல் ஒரு அமெரிக்க பெண் உடற் பயிற்சியாளர் 'பட் ஆஃப்' என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். இந்த இரண்டு புத்தகங்களும் ஒலிம்பிக் கிராமங்களில் எந்த அளவு மோசமாக பாலியல் வக்கிரங்கள் அரங்கேற்றப்படுகின்றன எனபதை விரிவாக விளக்குகின்றன.

ஒலிம்பிக் நடைபெறும் லண்டனில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் தலா பதினைந்து ஆணுறை(காண்டம்) என 150000 காண்டங்கள் விநியோகிக்க இருப்பதாகவும் மேலும் தேவைப்பட்டால் ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள மருந்து கடைகளில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. நம் நாட்டு வீரர்கள் ஏன் தங்கத்தையும் வெள்ளியையும் அள்ளவில்லை என்ற ரகசியம் இப்போதுதான் தெரிகிறது. அனைத்து நாடுகளின் வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் காண்டம் விநியோகிப்பதின் அர்த்தம் என்ன? விளையாட்டுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

இது இந்த முறைதான் புதிது என்று நினைக்கவேண்டாம், அனுமதிக்கப்பட்ட இன்னும் சொல்லப்போனால் வலியுறுத்தப்பட்ட விபச்சாரம் 1988 சியோல் ஒலிம்பிக் போட்டியின் போதே தொடங்கிவிட்டதாம். அப்பொழுது 8500 காண்டமும், 1992 பார்சிலோனோ ஒலிம்பிக்கின் போது 50000 காண்டமும், 2000 சிட்னி ஒலிம்பிக்கின்போது 70000மும், கடந்த 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கின் போது 1 லட்சம் காண்டம் விநியோகித்து அது ஒரே வாரத்தில் தீர்ந்துவிட்டது என்று பெருமையோடு சொல்லிக்கொண்டு இப்பொழுது 150000 காண்டம் விநியோகித்துள்ளோம் தேவைப்பட்டால் மேலும் இலவசமாக தர தயாராக உள்ளோம் என்று பெருமையோடு கூறி ஆர்வப்படுத்தி உள்ளனர்.

இந்த அழகில் இஸ்லாமிய நாடுகளை ஹிஜாபோடு ஒலிம்பிக் கிராமத்தில் ஏன் அனுமதித்தீர்கள்? இஸ்லாமிய நாடுகளுக்கு ஏன் அடி பணிந்தீர்கள் என்று லண்டனில் தங்களின் மேலாடையை கழட்டி நூதன போராட்டத்தை சில பெண் இயக்கங்கள் நடத்தியுள்ளன. போராட்டம் நடத்திய பெண்கள் எந்த அளவு ஒழுக்கமானவர்கள் என்பதற்கு அவர்களின் போராட்ட முறையே நமக்கு காட்டிக் கொடுத்துள்ளது. வெட்கங் கெட்ட விபசாரிகள் கும்பலாக வந்து மேலாடையை கழட்டி போராட்டத்தில் ஈடுபட்டதை லண்டன் காவல்துறை அனுமதிக்காமல் அவர்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியுள்ளது. சபாஷ் லண்டன் காவல் துறை! லண்டன் காவல் துறை மோசமாக நடந்து கொண்டதாக இக்பால் செல்வன் வேறு குறைபட்டுக் கொள்கிறார்....பாவம் அந்த பெண்கள்... இல்லையா இக்பால் செல்வன்?.

ஒலிம்பிக்கில் கலந்து கொண்டவர்களின் அனுபவங்களை பார்ப்போம்.:

அமெரிக்க பெண்கள் கால்பந்து அணியின் கோல் கீப்பர் ஹோப் சோலோ கூறுகையில், ஒலிம்பிக் போட்டிகளுக்கு இடையே அதிகளவில் செக்ஸ் உறவு கொள்ளும் சம்பவங்கள் நடைபெறுகிறது என்றார். மேலும் இது குறித்து இங்கிலாந்து சைக்கிள் வீராங்கனை விக்டோரியா பென்டில்டன் கூறியதாவது, ஒலிம்பிக் போட்டியின் போது, அங்குள்ள மக்கள் பொது இடத்திலேயே செக்ஸ் உறவு வைத்து கொண்ட சம்பவங்கள் நான் நேரில் பார்த்துள்ளேன். கட்டிடங்களுக்கு இடையே உள்ள புல் பகுதிகளில், அசுத்தமான இடங்களில் கூட செக்ஸ் உறவு கொள்கின்றனர். பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் போது எனது அறைக்கு செல்லும் போது, யாராவது உள்ளே இருக்கின்றனரா என்பதை அறிய ரகசியமாக உள்ளே நுழைந்தேன். ஆனால் அறையின் உள்ளே யாராவது இருந்தார்களா என்றால், அது ஒலிம்பிக் ரகசியம் என்று கூறி இப்பொழுது புதிதாக கலந்து கொள்பவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டுகிறார்.



பட் ஆஃப் புத்தகத்தில் என்ன உள்ளது என்று கொஞ்சம் பார்ப்போம்,. ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் பல போட்டியாளர்களும் ஒழக்கமற்ற முறையில் ஜோடி சேருகின்றனர். மதுபானங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளில் போதைப் பொருள் மற்றும் மதுபானங்கள் தாராளமாக விநியோகிக்கப்படுகிறது. ஒலிம்பிக் கிராமத்திற்குள் நடைபெறும் சம்பவங்களை பார்த்தால் எதை குறிப்பிடுவது என்ற குழப்பம் கூட ஏற்படும். விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட பிறகு, போட்டியாளர்களுக்கு தங்களின் ஆசையை தீர்த்து கொள்ள வேறு வழியில்லால் தவிக்கின்றனர். இதனால் செக்ஸ் உறவு கொள்ள கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்கின்றனர். வெளி உலகத்தின் கண்களுக்கு மறைவாக கடும் பாதுகாப்பு வளையத்திற்குள் போட்டியாளர்கள் இருப்பதாக நம்பப்படுவதால்(காட்டப்படுவதால்) ஒலிம்பிக் கிராமத்தினுள் நடைபெறும் அனைத்து சம்பவங்களும் அப்படியே புதைக்கப்படுகிறது. இதனால் ஒலிம்பிக் போட்டியாளர்கள் செய்யும் பல மோசமான நடவடிக்கைகள் வெளியே தெரிவதில்லை.

தி சீக்ரெட் ஒலிம்பிக் புத்தகத்தில் உள்ளவற்றை கூறாவிட்டால் அவர்கள் கோபித்து கொள்ள போகிறார்கள் எனவே அதனையும் கொஞ்சம் பார்ப்போம். ஒலிம்பிக் கேம்ஸ் வில்லேஜ்களில் மதுவுக்கு தடை இருப்பது வழக்கம். அதேபோல போதை மாத்திரைகளுக்கும் அனுமதி கிடையாது. இருந்தாலும் வீரர்கள் விடுவார்களா என்ன... வாட்டர் பாட்டில்களில் நைசாக மதுவை நிரப்பிக் கொண்டு உற்சாகமாக இருப்பார்களாம். அதேபோல போதை மாத்திரைகளும் கூட ரகசியமாக புழங்குவது சகஜமாம். இதுபோன்ற நடவடிக்கைகளை அதிகாரிகள் பெரும்பாலும் கண்டு கொள்வதில்லையாம். அதேபோல கண்டிப்பதும் இல்லையாம். கேம்ஸ் வில்லேஜ்களில் நடக்கும் அத்தனை விஷயங்களும் அங்கேயே கமுக்கமாக மறைந்து போய் விடுமாம். அங்கு நடந்தது குறித்து யாரும் வெளியில் சொல்லிக் கொள்வதில்லையாம் என்று போகிறது அந்த நூல்.

2000ம் வருடம் ப்ரேசில் நடத்திய கால்பந்து விளையாட்டை விளம்பர படுத்த விபச்சாரிகளை இறக்குமதி செய்ததும், பெண்களுக்கு உடை அணியாமல் மார்பு, இடுப்பின் முன், பின் பகுதிகளிள் கால்பந்து படத்தை வரைந்து கடற்கரையில் நிர்வாணமாக கால்பந்து போட்டி நடத்தியதும் இந்த நேரத்தில் நினைவிற்க்கு வந்து தொலைக்கின்றது.


உலக மக்களை வருடம் ஒரு முறை மெக்காவுக்கு அழைத்து 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' 'ஒரு தாய் மக்கள்' 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று ஓங்கி ஒலிக்க வைக்கும் இஸ்லாமிய செயல்பாடுகள் எங்கே?

உலக விபசாரிகளை இறக்குமதி செய்து விளையாட்டு வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் காண்டங்களை இஷ்டம் போல் விநியோகித்து இளைஞர்களை வழி கெடுக்கும் மேற்கத்திய கலாசாரம் எங்கே?

நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்.


எனக்கு பின்னர் வேறு எவரும் உங்களுக்கு அறிவிக்க முடியாத நபிமொழி ஒன்றை (இப்போது) நான் உங்களுக்கு அறிவிக்கப் போகிறேன். “கல்வி குறைந்து போய் விடுவது, அறியாமை வெளிப்படுவதும், வெளிப்படையாய் விபச்சாரம் நடப்பதும், ஐம்பது பெண்களுக்கு அவர்களை நிர்வமிக்கும் ஒரே ஆண் என்ற நிலைமை வரும் அளவுக்குப் பெண்கள் மிகுதியாவது ஆண்கள் குறைந்துவிடுவதும் மறுமை நாளின் சில அடையாளங்களாகும்” என்று இறைத்தூதர் கூற கேட்டிருக்கிறேன் என நபித் தோழர் அனஸ் அறிவித்தார்கள். (நூல் புகாரி- அத்தியாயம்-1- ஹதீஸ்-81)

…..According to the anonymously authored expose ‘The Secret Olympics’, which is written by a former British competitor, organizers supplied 70,000 condoms to athletes at the 2000 Summer Olympics in Sydney, Australia. The stockpile ran out in a week.
While alcohol and drugs are banned at Olympic Villages, competitors often fill water bottles with booze and smuggle in weed and doping agents.
While officials don’t condone such behaviour, they don’t condemn it either, and the only thing that matters is that the image of the Olympics remains unsullied…….


http://books.hindustantimes.com/2012/07/rampant-sex-and-booze-secrets-at-olympic-village-exposed/

------------------------------------------------------------------------

மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு - 13


Wednesday, June 08, 2011

கால்பந்தாட்டம் விளையாட தலை திறந்திருக்க வேண்டுமா?


கால்பந்தாட்டம் விளையாடுவதற்கு உடல் ரீதியாக எந்த பாதிப்பும் இல்லாமல் இருப்பதுதான் தகுதியாக இதுவரை இருந்து வந்தது. ஆனால் தற்போது ஃபிஃபாவின் ஒரு அறிவிப்பு பெரும் கண்டனத்துக்கு உள்ளாயிருக்கிறது. கால்பந்தாட்டம் ஆடுபவர்கள் இனி தலையை மூடாமல் திறந்தவாறு விளையாட வேண்டும். இந்த சட்டத்தை கடை பிடிக்காதவர்கள் போட்டியிலிருந்து விலக்கப்படுவார்கள். தலையில் முக்காடிட்டு விளையாடுவது வீராங்கனைகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதே பிரதான காரணம்' என்கின்றனர் ஃபிஃபா அமைப்பினர்.

2012ல் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்றில் ஜோர்டான் அணியோடு மோத விடாமல் ஈரான் பெண்கள் அணியை திருப்பி அனுப்பியுள்ளது ஃபிஃபா அமைப்பு. திறமையிருந்தும் போட்டியிலிருந்து விலக்கியதால் அந்த வீராங்கனைகள் மனம் உடைந்து கலங்குவதைத்தான் மேலே நாம் பார்க்கிறோம். இது எந்த வகை நியாயம்? உடையை தேர்ந்தெடுப்பது சம்பந்தப்பட்டவரின் உரிமையல்லவா? வீராங்கனைகளின் உயிருக்கு இதனால் ஆபத்து என்று எந்த மருத்துவராவது விளக்கியுள்ளனரா? ஒன்றும் இல்லை. விளையாட்டில் ஈடுபடும் வீராங்கனைகள் யாரிடமாவது வந்து 'எங்களுக்கு முக்காடு அணிவது விளையாட்டுக்கு சிரமமாக இருக்கிறது' என்ற கோரிக்கையாவது வைத்தார்களா என்றால் அதுவும் இல்லை. கிரிக்கெட்டில் நமது நாட்டில் ஹர்பஜன் சிங் தலையை மறைத்து விளையாடியதில் ஏதும் சிரமம் இருப்பதாக சொல்லியிருக்கிறாரா. இல்லை.

இஸ்லாத்தை கொச்சைப் படுத்த வேண்டும் என்ற கீழ்த்தரமான நோக்கத்தைத் தவிர இவர்களுக்கு வேறு காரணங்கள் இல்லை.

ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் செய்தியாளர்களிடம் கூறும்போது 'எங்கள் நாட்டு பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. தங்களின் ஆபாசமான உடையை மற்றவர்களின் மீது திணிக்கும் சர்வாதிகார நடவடிக்கை என்றே இதனை பார்க்கிறேன். சட்டப்படி இதனை கொண்டு சென்று எங்கள் நாட்டு வீராங்கனைகளுக்கு நியாயம் கிடைக்கச் செய்வோம்' என்கிறார்.

'எங்களை போட்டியிலிருந்து விலக்கினாலும் எங்களின் குர்ஆன் கூறும் கட்டளைக்கு முன்னால் உங்களின் கட்டளை எங்களின் கால் தூசுக்கு சமானம்' என்று கூறும் இந்த வீராங்கனைகள் கண்டிப்பாக பாராட்டத்தக்கவர்கள். இதனால் ஒலிம்பிக்கில் மெடல் கிடைக்கும் சந்தர்ப்பம் வீணாணாலும் சொர்க்கத்தில் நிச்சயம் இவர்களுக்கு இதைவிட சிறந்த பரிசை இறைவன் தந்தருள்வான்.

சானியாமிர்ஸா முதற் கொண்டு பல வீராங்கனைகள் விளையாடும்போது விளையாட்டை விட அவர்களின் உடலை ரசிக்கத்தான் கூட்டம் கூடுகிறது. இதை இந்த ஆர்வலர்களின் வக்கிரத்தை யுடியூபில் எந்த மாதிரி போஸ்களை வெளியிடுகிறார்கள் என்பதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

உடலை கவர்ச்சியாக காட்டினால்தான் விளையாட அனுமதிப்பேன் என்பது போட்டி நடத்துபவர்களின் வக்கிரபுத்தியையும் காட்டுகிறது. வழக்கில் வென்று ஈரானிய பெண்கள் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள நாமும் வாழ்த்துவோம்.

'உங்களுக்கு நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. உங்களுக்குத் தீங்கு ஏற்பட்டால் அதனால் அவர்கள் மகிழ்கின்றனர். நீங்கள் சகித்துக் கொண்டு இறைவனை அஞ்சினால் அவர்களின சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீங்கும் தராது. அவர்கள் செய்வதை இறைவன் முழுமையாக அறிபவன்'

-குர்ஆன் 3:120