Followers

Saturday, November 25, 2017

சகோதரி ஹதியாவுக்கு வெற்றி கிடைக்க பிரார்த்திப்போம்!

சகோதரி ஹதியாவுக்கு வெற்றி கிடைக்க பிரார்த்திப்போம்!

கேரள அரசாங்கம், மத்திய அரசாங்கம் என்று இரு அரசுகளும் சேர்ந்து சகோதரி ஹதியாவுக்கு பல நெருக்கடிகளை இன்று வரை கொடுத்து வருகிறது. அவர் செய்த ஒரே தவறு குர்ஆனை படித்து விளங்கி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதுதான்.

போலீஸ் காவலில் தனக்கு கிடைத்த சொற்ப நேரத்தை மிக அழகாக பயன்படுத்திக் கொண்டார். 'யாருடைய நிர்பந்தமும் எனக்கு இல்லை. நான் குர்ஆனை படித்து விளங்கியே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளேன். எனக்கு எனது கணவர் வேண்டும். என்னை நிம்மதியாக வாழ விடுங்கள்' என்று அத்தனை கூட்டத்திலும் உரத்து கூறுகிறார். யாராலும் நிர்பந்திக்கப்படவில்லை என்பதற்கு அவரது வாக்கு மூலமே சாட்சியாக உள்ளது.

மோடிக்களும் அமீத்ஷாக்ளும் இனியாவது ஒரு உண்மையை உணர வேண்டும். இந்து மதத்தில் உள்ள குறைகளை களைய பாடுபடுங்கள். அதை விடுத்து இஸ்லாத்தை ஏற்பவர்களை சட்டம் கொண்டு தடுத்தால் அது இன்னும் பலரை போய் சென்றடையும். இன்று உலகம் முழுவதும் ஹதியாவின் வாக்கு மூலத்தை நேரலையாக பார்த்துக் கொண்டுள்ளனர். மோடி, அமீத்ஷாக்களின் எதிர்ப்புக்கு கிடைத்த பரிசுகளே இவை.

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.

அல்குர்ஆன் 61:8




சகோதரி ஹதியாவின் மலைக்க வைத்த உறுதி!



சகோதரி ஹதியாவின் மலைக்க வைத்த உறுதி!

நான் ஒரு முஸ்லிம். எனக்கு நீதி கிடைக்க வேண்டும். நான் என் கணவருடன் செல்ல வேண்டும்” 

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஹதியா இன்று கொச்சி விமான நிலையத்தில் டெல்லிக்கு பயணமாகிறார். அப்போது பத்திரிக்கையாளர்களிடம் சொன்ன வார்த்தைகளே இவை. இறை நம்பிக்கை என்பது இதுதான்.  அவரது விருப்பத்தைப் போலவே இஸ்லாமிய வாழ்வு கிடைக்க நாமும் பிரார்த்திப்போம்.







ஆச்சரியப்பட வைத்த ராகுல் காந்தி!



ஆச்சரியப்பட வைத்த ராகுல் காந்தி!

சமூக வலைத்தளங்களில் இன்று வைரலாகிக் கொண்டிருக்கும் படம். நேற்று, குஜராத்தில், ஆசிரியர்கள் கூட்டம் ஒன்றிற்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்தது. கூட்டத்தின் நடுவே இருந்து வந்த ஒருவருடைய பேச்சு எல்லோரையும் கண்கலங்க வைத்தது. அவர் பெயர் ரஞ்சனா அவஸ்தி. சமஸ்கிரகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர் கடந்த 22 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியராக உள்ளார். அனைத்து் தகுதிகளும் இருந்தும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. சம்பளம் 12,000 ரூபாய் மட்டுமே. இவர் போல பலரும் குஜராத்தில் இருப்பதாக தழுதழுத்த குரலில் தன் ஆதங்கத்தை பதிவு செய்த ரஞ்சனா அவஸ்தி, தங்களுக்கு பிரசவ விடுமுறை கூட கிடையாது என்றும், ஒய்விற்கு பிறகு பென்ஷனும் வழங்கப்படாது என்றும் தெரிவித்தார்.

ஒரு கவுரவமான ஒய்வு வாழ்க்கையை வாழ எங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று அவர் கூறிய போது, உணர்ச்சிவசப்பட்ட ராகுல் காந்தி, "சில நேரங்களில் சில கேள்விகளுக்கு பதிலளிக்க நம்மிடம் வார்த்தைகள் இருக்காது" என்று கூறி தன் மைக்கை மேடையில் வைத்து விட்டு, சடாரென அந்த பெண்மணி இருந்த இடம் நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டார். யாருமே இதனை எதிர்பார்க்காததால் அரங்கத்தில் சலசலப்பு நிலவியது. ரஞ்சனா அவஸ்தியிடம் சென்ற ராகுல் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அவரை அரவணைத்துக் கொண்ட போது எல்லோரிடமும் ஆச்சர்யம் தொற்றிக்கொண்டது. "அவர் என்னை தழுவிய போது, கஷ்டங்களை முழுமையாக புரிந்துக்கொண்ட ஒரு இளைய சகோதரனை போல நான் உணர்ந்தேன்" என்று கூறியிருக்கிறார் அவஸ்தி. இத்தகைய செய்கை மூலம் பலருடைய பாராட்டையும் பெற்று வருகிறார் ராகுல். தங்கள் மனதை இந்த சம்பவம் நெகிழ செய்துவிட்டதாக பலரும் தங்கள் கருத்தை பதித்து வருகின்றனர்.

நன்றி சகோ ஆஷிக்!


Friday, November 24, 2017

தாயைப் போல பூமியின் அரவணைப்பு! - -குர்ஆன்

தாயைப் போல பூமியின் அரவணைப்பு!

'உயிருடன் உள்ளோரையும், இறந்தோரையும் அணைத்துக் கொள்ளக் கூடியதாக பூமியை ஆக்கவில்லையா?'
-
குர்ஆன் 77:25,26

பூமிக்கு உள்ள ஈர்ப்பு விசையை இந்த குர்ஆனின் வசனம் மெய்ப்பிக்கிறது. இதை ஒரு சிறு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம். கடைத் தெருவில் ஒரு தாய் தன் குழந்தையை கைகளைப் பிடித்தவாறு நடந்து அழைத்துச் செல்கிறாள். அந்த குழந்தை ஒரு கடையைப் பார்த்து விட்டு அங்கு செல்ல எத்தனிக்கும். உடனே தாயானவள் அந்த குழந்தையை தன் பக்கம் தன் கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டு வருவதைப் பார்க்கிறோம். அப்பொழுதுதான் அந்த குழந்தை தான் தனது தாயின் கட்டுப்பாட்டில் இருப்பதையே உணருகிறது.

அதே போல் தாயின் மார்போடு ஒரு குழந்தை அமர்ந்திருக்கும்போது தலையை அங்கும் இங்கும் அசைக்கும். அதை ஒரு பொருட்டாக அந்தத் தாய் எடுத்துக் கொள்வதில்லை. அதே சமயம் தாயின் அரவணைப்பிலிருந்து துள்ளிக் குதித்து இறங்க முயற்ச்சிக்கும் போது அந்த தாயின் பிடி மேலும் இறுகி தன் குழந்தையை அவளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறாள். இது நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சாதாரண ஒரு நிகழ்வு.

இதையே நாம் பூமிக்கும் பூமிக்கு மேல் வசிக்கும் கோடிக்கணக்கான ஜீவராசிகளையும் பொருத்திப் பார்ப்போம். நம்முடைய அன்றாட வாழ்வில் பூமி நம்மை அரவணைத்திருப்பதை நாம் உணருவதில்லை. எப்படி ஒரு குழந்தை தன் தாயின் அரவணைப்பை உணருவதில்லையோ அதைப் போல. அதே குழந்தை சில வருடங்களில் பெரிதானவுடன், அதே தாய் அந்த குழந்தையை தனியே வெளியில் சென்று விளையாட அனுமதிக்கிறாள். இனி குழந்தைக்கு தனது பாதுகாப்பு தேவையில்லை என்று தாய் உணருவதால் குழந்தையை தனியே விட்டு விடுகிறாள்.

அதே போன்றுதான் ஓரளவு அறிவு வளர்ச்சி அடைந்த மனிதன் பூமியின் ஈர்ப்பாற்றலுக்கு மேலே அதாவது ராக்கெட்டில் சென்றால், இனி தனது ஈர்ப்பாற்றல் மனிதனுக்கு தேவையில்லை என்று கருதி ராக்கெட்டின் பிடிப்பை பூமி தளர்த்தி விடுவதையும் பார்க்கிறோம்.

இந்த இடத்தில் குர்ஆனின் 'அணைத்தல்' என்ற வார்த்தைப் பிரயோகம் மிகவும் இலக்கியத்துடனும், அறிவியல் சார்ந்தும் மிகவும் கவனமாகக் கையாளப்பட்டுள்ளதை நினைத்து நாம் ஆச்சரியப்படுகிறோம்.

மனிதர்கள் மட்டுமின்றி, விலங்கினங்களாயினும் அல்லது உயிரற்ற பொருட்களாயினும் சிதறடிக்கப்படாமல் அவைகளை இருக்கும் இடத்திலேயே இருக்க வைப்பது பூமியின் ஈர்ப்பு விசையே ஆகும்.


மேலும் இந்த பூமி நாம் வாழ்வதற்க்கென்றே விஷேசமாக படைக்கப்பட்ட ஒரு கோளாகும். இதன் காரணமாகவே அதனுடைய ஈர்ப்பு விசை ஒரு இழு விசையாக நமக்குத் தோன்றாமல் நாம் அணிந்திருக்கும் உடை போன்று ஒரு இதமான அணைப்பாகத் தென்படுகிறது. இதற்கு மாறாக பூமியின் ஈர்ப்பு விசை நமக்கு ஒரு இழு விசையாக தென்பட்டால் நம்மால் இதன்மீது ஒரு போதும் வாழ இயலாது.


பூமியும் அசுர வேகத்தில் சுற்றுகிறது. அது சுற்றுவதோடு அல்லாமல் சூரியனையும் குற்றி வருகிறது. அதோடல்லாமல் மொத்த கேலக்ஸியுமே ஒரு இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. இவ்வளவு காரியங்கள் நடந்தும் நம்மால் அதை உணர முடிகிறதா?

ஒரு பொருள் பூமியில் நிலையாக நிற்க வேண்டுமானால் நான்கு கால்கள் அல்லது குறைந்த பட்சம் மூன்று கால்களாவது தேவைப்படும். ஆனால் மனிதர்களாகிய நாம் இரண்டு கால்களைக் கொண்டு எவ்வாறு நிற்கிறோம்? நாம் கீழே விழ வேண்டிய தருணத்தில் நம் உடல் சமன் செய்து புவி ஈர்ப்பு விசைக்கு தோதாக கனத்தை சமன் செய்வதாலேயே நாம் நிலையாக பூமியில் நிற்க முடிகிறது. இதுவும் இறைவனின் விந்தைகளில் ஒன்றல்லவா?


ஆஹா... இறைவன் நம் மீது பொழிந்த கருணைக்கு அளவு உண்டோ?

'உயிருடன் உள்ளோரையும், இறந்தோரையும் அணைத்துக் கொள்ளக் கூடியதாக பூமியை நாம் ஆக்கவில்லையா?'
-குர்ஆன் 77:25,26


Thursday, November 23, 2017

அஸ்ஸலாமு அலைக்கும் அருமை சகோதரர்களே !..

அஸ்ஸலாமு அலைக்கும் அருமை சகோதரர்களே !..
கடந்த ஒரு மாதமாக விடுப்பில் தாயகமான தமிழகம் சென்றிருந்தேன். இறைவனின் கிருபையால் நேற்று நல்ல முறையில் ரியாத் வந்து சேர்ந்தேன். கிடைக்கும் ஒரு மாதத்தில் இணையத்தில் இருந்தால் மற்ற வேலைகள் பாதிக்கப்படும் என்பதால் முகநூல் மற்றும் பிளாக்கரிலிருந்து ஒதுங்கியிருந்தேன். இனி இறைவன் நாடினால் எனது எண்ணங்களையும் அவ்வப்போது பகிர்கிறேன்.
எல்லா புகழும் இறைவனுக்கே!