Followers

Saturday, January 04, 2020

கம்பெனியின் இந்த வருட விருந்து உபசார விழா!

கம்பெனியின் இந்த வருட விருந்து உபசார விழா!
வருடா வருடம் கணக்கெடுப்பு முடிந்தவுடன் ஸ்டார் உணவகங்களில் கம்பெனி சார்பில் விருந்து கொடுப்பது வழக்கம். அந்த முறையில் இன்று (04-01-2019) மதியம் கம்பெனி சார்பில் பார்ட்டி கொடுக்கப்பட்டது. அவரவர் தங்களுக்கு விருப்பமானதை ஆர்டர் செய்து தருவித்து உணவருந்தி மகிழ்ந்தோம்.
சவுதி, சிரியா, எகிப்து, இந்தியா, பாகிஸ்தான் என்று இனத்தாலோ, நிறத்தாலோ, மொழியாலோ பாகுபாடு காட்டப்படாமல் அனைவரும் சரிசமமாக அமர்ந்து உணவருந்துவதை பார்க்கிறோம். இது சவுதியை பொருத்தவரை அன்றாடம் நிகழும் சர்வ சாதாரணமான நிகழ்வு.
பல கோடிக்கு சொந்தமானவரும் மாத சம்பளத்தில் வேலை பார்க்கும் நபர்களும் ஒன்றாக அமர்ந்து எந்த உயர்வு தாழ்வும் இன்றி உணவருந்தும் பக்குவத்தை கொடுத்தது எது? அது தான் இஸ்லாம்.
--------------------------
அதே நேரம் நமது இந்தியாவையும் இங்கு நினைத்துப் பார்த்தேன். சில நாட்களுக்கு முன்பு உத்தரகாண்ட் மாநிலத்தில் காளிதாஸ் மகன் ஜிதேந்திரா. வயது 21. இவர் பலரால் அடித்துக் கொல்லப்படுகிறார். காரணம் என்ன?
ஆதிக்க சாதியினருக்கு சரிசமமாக அமர்ந்து விருந்து சாப்பிட்டதே அந்த தலித் இளைஞர் கொல்லப்பட காரணம். சாதிய வெறியானது அந்த அளவு இந்த அப்பாவி மக்களின் மேல் புகுத்தப்பட்டுள்ளது. அதனால்தான் அம்பேத்கார் ஒரு முறை சொன்னார் 'நான் இந்துவாக பிறந்து விட்டேன்: ஆனால் ஒரு இந்துவாக இறக்க மாட்டேன்' என்று சபதமெடுத்தார். வருங்காலத்திலாவது நாம் சவுதியில் கண்ட இந்த சகோதரத்துவம் நமது இந்தியாவிலும் பரவிட முயற்சி எடுப்போம். சாதி வெறியை களைய முயற்சிப்போம்.
--------------------------------------
நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவரிடம் அவருடைய பணியாள் அவரது உணவைக் கொண்டு வந்தால் அவர் அப்பணியாளைத் தம்முடன் அமர வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு அமர வைத்துக் கொள்ளவில்லையென்றாலும் அவருக்கு ஒரு பிடி அல்லது இரு பிடிகள் அல்லது ஒரு கவளம் அல்லது இரு கவளங்கள் உணவு கொடுக்கட்டும். ஏனெனில் அவர் அதை சமைத்த போது அதன் வெப்பத்தையும் அதன் சிரமத்தையும் சகித்துக் கொண்டார்''
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 5460


Friday, January 03, 2020

பாத்திமா பேகம் ஷேக் மற்றும் சாவித்திரி பாய் பூலே.

பாத்திமா பேகம் ஷேக் மற்றும் சாவித்திரி பாய் பூலே. இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்கள் என்றால் அது மிகையல்ல. பெண் கல்விக்காக சாவித்திரி பாய் பட்ட பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. பணிக்கு செல்லும் போது மற்றுமொரு சேலையை பையில் வைத்து எடுத்து செல்வாராம். காரணம், இவர் போகும் வழியில் நிற்கும் பார்ப்பனர்கள், பெண்களுக்கு கல்வி அளிப்பதின் மூலம் வேதங்களுக்கு எதிராக சாவித்திரி செயல்படுவதாக கூறி சேற்றை வாரி இறைப்பார்களாம். அதனாலேயே இன்னொரு சேலை.
இந்துமதத்திற்கு எதிராக செயல்படுவதாக கூறி தங்களின் சொந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர் சாவித்திரி பாயும் அவரது கணவருமான ஜோதிராவ் பூலேவும். அந்நேரத்தில் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர் ஜோதிராவின் நண்பரான உஸ்மான் ஷேக் மற்றும் அவரது சகோதிரியுமான பாத்திமா பேகம்.
பாத்திமா பேகம் ஏற்கனவே எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தார். இவர்கள் இருவரும் ஆசிரியர் பயிற்சியை முடிக்க உறுதுணையாக இருந்தார் உஸ்மான் ஷேக். இவருடைய வீட்டிலேயே 1849-ஆம் ஆண்டில் ஒரு பள்ளிக்கூடத்தை தொடங்கினர் சாவித்திரி பாய் பூலேவும், பாத்திமாவும். இதன் பிறகான இவர்களின் வளர்ச்சி அபரிமிதமானது. இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்கள் என்று இவர்களை சொன்னால் அது நிச்சயம் மிகையல்ல.


Thursday, January 02, 2020

#பள்ளன் என்றான்., #பறையன் என்றான்.,

#பள்ளன் என்றான்.,
#பறையன் என்றான்.,
#சக்கிலியன் என்றான்.,
தொட்டாலே #தீட்டு என்றான்.,
#சூத்திரன் என்றான்.,
#ஆதி சூத்திரன் என்றான்.,
#வேசி மகன் என்றான்.,
#பஞ்சமன் பறையன் என்றான்.,
#ஹரிஜன்ஸ் என்றான்.,
ஆதி #திராவிடன் என்றான்.,
#தலீத் என்றான்.,
#லாயிலாஹா இல்லல்லாஹ்
#முஹம்மதுர் ரசூலுல்லாஹ்
''ஏக இறைவனைத் தவிர வேறு தெய்வம் இல்லை: முஹம்மது நபி அந்த இறைவனின் தூதராக உள்ளார்கள்'' என்று உறுதி மொழி எடுத்து இஸ்லாத்தை தழுவினேன்''
''#வாங்க பாய்'' - என்றான்.
என் இறைவா..!
உனக்கே புகழெல்லாம்.
-yahya



நான் பிறந்தபோது இந்தியா என்ற நாடில்லை. பாகிஸ்தானுமில்லை,

நான் பிறந்தபோது இந்தியா என்ற நாடில்லை. பாகிஸ்தானுமில்லை, பங்களாதேசுமில்லை.
அப்போது நான் குழந்தையாக இருந்தேன். வாளும் வேளும் கேடயமும் சிலநூறு வீரர்களையும் கொண்டிருந்த ஒருவரைக் காட்டி, இவர்தான் உனக்கும் இந்த சமஸ்தானத்துக்கும் அரசர் என்றார்கள். சரி என்றேன்.
அப்போது நான் சிறுவனாக இருந்தேன். எங்கிருந்தோ வாளும் வேலும் குதிரையும் கொண்டு படைதிரட்டி வந்த ஒருவன் என் அரசரின் தலையைக் கொய்து விடட்டு இனி நான்தான் உங்களுக்கும் உங்கள் சிற்றரசுக்கும் அரசன் என்றான். சரி என்றேன்.
அப்போது நான் இளைஞனாக இருந்தேன். துப்பாக்கிகளும் பீரங்கியும் கொண்டு கப்பலில் வந்த வியாபாரிகள் என் அரசனைக் கொன்றுவிட்டு சிலரை அடிமையாக்கி நாங்கள் தான் உங்களுடைய அரசாங்கம், நம்முடைய பேரரசின் அரசி பிரிட்டிசில் இருக்கிறார் என்றார்கள். சரி என்றேன்.
அப்போது நான் குடும்பத்தலைவனாக இருந்தேன். நாம் விடுதலை பெற்றுவிட்டோம். இனி நாங்கள் தான் உனக்கும் நம் இந்தியாவுக்கும் அரசாங்கம் என்றார்கள். சரி என்றேன்.
வெடிகுண்டுகள் விமானங்கள் ஏவுகணைகள் கொண்டு நிறைய சண்டைகள் நடந்தது, கொலைகள் நடந்தது, கொள்ளைகள் நடந்தது. இந்தியா என்றார்கள் பாகிஸ்தான் என்றார்கள் பங்களாதேஸ் என்றார்கள் தனித்தனி நாடுகள் தனித்தனி அரசாங்கம் என்றார்கள். சரி என்றேன்.
இப்போது நான் மரணிக்கும் வயதை எட்டிவிட்டேன். ஆவணங்கள் கேட்கிறார்கள். நீங்களாக சண்டையிட்டீர்கள், என்னைச்சுற்றி நீங்களாக எல்லைகளை வகுத்தீர்கள், நீங்களாக போர் புரிந்தீர்கள், எங்களைச்சுற்றி நீங்களாக எல்லைகளை மாற்றிக் கொண்டீர்கள். இப்போது மட்டும் என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் ஆவணங்களை..? என்று கேட்டேன்.
துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி முகாமுக்கு போகச்சொல்கிறார்கள். வேறு வழி என்ன இருக்கிறது. சரி என்று சொல்வதைத்தவிற..?


"தனக்கு வந்தா ரத்தம், அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி"

"தனக்கு வந்தா ரத்தம், அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி"
இங்கிலாந்தில் கள்ளத்தனமாக குடியேறிய ஒரு இலட்சம் வரையிலான இந்தியர்களை இந்தியாவிற்கே திருப்பி அனுப்பி வைக்கும் இங்கிலாந்தின் முடிவை ஏற்க மோடி மறுப்பு!
இந்தியாவில் NRC கொண்டுவந்த அதே மோடிதான் இங்கிலாந்தில் NRC வேண்டாம் என்கிறார்...😂😂
ஒன்றரை வருடத்திற்கு முந்தைய செய்திதான்....
"தனக்கு வந்தா ரத்தம், அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி" என்ற மோடி வகையறாக்களின் நிலைப்பாட்டை தோலுரித்துக்காட்ட, ஒரு சிறிய நினைவூட்டல்.
--------------------------------------------
The Telegraph
India rejects deal on return of illegal immigrants from UK amid fears of mass deportations
ndia recently declined to sign up to a bilateral agreement with Britain to facilitate the return of its illegal immigrants, following a host of unresolved concerns that are still being negotiated.
Official sources in New Delhi said the pact that was to have been signed for the return of thousands of illegal Indian immigrants during prime minister Narendra Modi’s visit to London last month for the Commonwealth leaders meet, “remains under discussion”.