Followers

Thursday, January 09, 2020

கூத்தாடி ரஜினி படம் வெற்றி பெற மண் சோறு சாப்பிட்ட தமிழர்கள்!

கூத்தாடி ரஜினி படம் வெற்றி பெற மண் சோறு சாப்பிட்ட தமிழர்கள்!

சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை கர்நாடகாவில் முதலீடு செய்து வரும் திறமையான இந்த கூத்தாடிக்கு தமிழர்கள் மண் சோறு சாப்பிடுகிறார்களாம்.

இன்னும் எத்தனை பெரியார் வந்தாலும் இவர்களை திருத்த முடியாது.


Wednesday, January 08, 2020

ஆரியர்கள் இந்தியாவில் ஊடுருவிய வரலாறு!


ஆஷிக் என்ற அன்பழகன் தரும் அழகிய விளக்கம்!

ஆஷிக் என்ற அன்பழகன் தரும் அழகிய விளக்கம்!
மோடியும் அமித்ஷாவும் கொண்டுவர துடிக்கும் குடியுரிமை சட்டத்தின்படி இந்தியாவில் இஸ்லாத்தை துடைத்தெறிந்து விடலாம் என்று பகல் கனவு காண்கின்றனர். தோல்வியடையப் போகும் இவர்களின் கோமாளி சட்டங்களை அழகிய முறையில் அன்பழகன் இந்த காணொளியில் விளக்குகிறார்.
"இறைவன் குர்ஆனிலே கூறுகிறான்
தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை ஊதி அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் இறை மறுப்பாளர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். (அல்-குர்ஆன் 9:32)
இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் முற்றாக துடைத்து வெளியேற்றி விட்டால் மட்டும் இஸ்லாம் இந்தியாவை விட்டு போய் விடுமா? கல்யாண வீட்டில் சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணத்தை நிறுத்தி விடலாம் என்று ஒருவன் நினைத்தால் எவ்வளவு அபத்தமோ அது போன்ற வாதம்தான் இது. எனது பெயர் அன்பழகன். இதோ எனது ஆதார் கார்டில் அன்பழகன் என்ற பெயர்தான் உள்ளது. மதமும் இந்து என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய சட்டப்படி நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாலும் மதம் என்ற பிரிவில் நான் இந்துதான். அன்பழகன் என்ற பெயரில் எனது நண்பர்களுக்கும் எனது உறவினர்களுக்கும் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லிக் கொண்டே இருப்பேன். என்ன செய்து விட முடியும் உங்களின் சட்டத்தால். சிவா, நந்தா, பிரபு, டேவிட் என்று பழைய பெயரிலேயே முஸ்லிம்களாக வாழ்ந்து வரும் பலரை என்னால் காட்ட முடியும். இவர்களை எப்படி தடுப்பீர்கள். எங்களின் பழைய பெயரிலேயே பள்ளி வாசலுக்கு சென்று தொழுகையை தலைமையேற்றும் நடத்திக் கொண்டுள்ளோம். யாரும் எங்களை 'நீ எந்த சாதி? பூணூல் போட்டுள்ளாயா?' என்றெல்லாம் கேட்பதில்லை.
'உனக்கு குர்ஆன் ஓத தெரியுமா? தொழுகையின் சட்டங்கள் தெரியுமா? வாங்க பாய். வந்து தொழுக வையுங்க பாய்' என்றுதான் கூறுகிறார்கள். இந்து பெயரிலேயே இஸ்லாத்தை பின் பற்றும் என்னைப் போன்ற லட்சக்கணக்கான மக்களை எந்த சட்டத்தை கொண்டு ஒடுக்குவீர்கள்? அபூஜஹில், ஃபிர்அவுன் போன்ற மிகக் கொடுமையான அரசர்களையே சந்தித்து அதில் வெற்றியும் கண்டது இந்த இஸ்லாமிய மார்க்கம். அதிகபட்சமா உன்னால என்ன பண்ண முடியும்? எங்களை கொலை செய்ய முடியும். அதுதான் எங்களின் வாழ்வின் ஆரம்பமே. ஒவ்வொரு தொழுகையிலும் 'இறைவா! எங்களை இஸ்லாத்திற்காக இஸ்லாத்தை நேசித்தவர்களான நிலையில் எங்களின் உயிரை எடுப்பாயாக' என்றுதான் கேட்டு வருகிறோம்.'
இவ்வாறாக சகோ ஆஷிக் என்ற அன்பழகனின் பேச்சு தொடர்கிறது. இஸ்லாத்தை பொருத்த வரை அரபியில்தான் பெயர் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அன்பழகன், அறிவழகன், சுவனப்பிரியன், மலர்கொடி, ஆரோக்கியம் போன்ற அழகிய பெயர்களிலேயே இஸ்லாமியராக வாழலாம். நமது இந்தியாவில் இந்து பெயரிலேயே தொடர்ந்தால் அடுத்து 'என்ன சாதி?' என்ற கேள்வி பிறக்கும். எனவே தான் இஸ்லாமியராக மாறியவுடன் அவரது பெயரை அரபியில் வைத்துக் கொள்கின்றனர் இஸ்லாமியர். அன்பழகன் சொல்வது போல் அரசு கெஜட்டில் இந்துவாக பதிந்து விட்டு இந்து பெயரிலேயே இஸ்லாத்தை கடை பிடித்தால் அவர்களை எப்படி மோடியால் தடுக்க முடியும்? 130 கோடி மக்களின் வணக்க வழிபாடுகளை கண்காணிக்க ரகசிய அலுவலர்களை நியமிப்பாரா? எனவே குழப்பத்தை தவிர இந்த சட்டத்தால் இந்திய அரசுக்கு ஒரு பலனும் விளையப் போவதில்லை. இந்துத்வாவாதிகள் தங்கள் லட்சியத்தில் எந்நாளும் வெற்றிப் பெறப் போவதுமில்லை.
---------------------------------------------------------
அல்லாஹ் கூறுகிறான் :
நபியே! நீர் கூறும்: ‘உங்கள் உள்ளத்திலுள்ளதை நீங்கள் மறைத்தாலும், அல்லது அதை வெளிப்படையாகத் தெரியப்படுத்தினாலும் அதை அல்லாஹ் நன்கறிகின்றான்.
(அல்-குர்ஆன் 3:29)
‘நிச்சயமாக அல்லாஹ் உங்கள் உடல்களையோ உருவங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும் செயல்களையுமே பார்க்கிறான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.


யோகா வகுப்புக்கு சென்றேன்: இஸ்லாத்தை பெற்றுக் கொண்டேன்

யோகா வகுப்புக்கு சென்றேன்: இஸ்லாத்தை பெற்றுக் கொண்டேன்
'கத்தோலிக்க பிரிவில் பிறந்த நான் சிறு வயதாக இருக்கும்போது கடவுளைப் பற்றியும் பைபிளைப் பற்றியும் பல கேள்விகள் கேட்டுள்ளளேன். சரியான விடை கிடைக்கவில்லை. பெரியவளானதும் யோகா மையத்துக்கு பயிற்சிக்காக சென்ற போது உடன் பயிற்சியில் ஈடுபட்ட ஒருவர் 'அல்ஹம்துலில்லாஹ்' என்ற வார்த்தையை கூறக் கேட்டேன். அவரிடம் இதற்கு என்ன அர்த்தம் என்று வினவினேன். எது வாழ்வில் நடந்தாலும் முஸ்லிம்களாகிய நாங்கள் 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று இறைவனுக்கு நன்றி கூறுவோம். அதன் அரபி பதம்தான் அது' என்றார். அந்த வார்த்தை எனக்குள் அடிக்கடி ஒலித்துக் கொண்டிருந்தது. தொடர்ந்து நானும் சொல்ல ஆரம்பித்தேன். அதன் பிறகு இஸ்லாத்தை படிக்க ஆரம்பித்தேன். குர்ஆனின் வசனங்களும் நபிகள் நாயகத்தின் போதனைகளும் என்னை மிகவும் கவர்ந்தன. எனது பெற்றோரின் சம்மதத்தோடு சாரா என்று பெயர் மாற்றி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்.'


Tuesday, January 07, 2020

தனது குழந்தைக்கு 'முஹம்மது' என பெயரிட்ட இந்து

தனது குழந்தைக்கு 'முஹம்மது' என பெயரிட்ட இந்து
'நாங்கள் அனைவரும் மத வித்தியாசம் இல்லாமல் அண்ணன் தம்பிகளாக பழகி வருகிறோம். குடியுரிமை சட்டமானது மதத்தை கொண்டு எங்களை பிரிக்கப் பார்க்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக எனக்கு பிறந்த இரண்டாவது குழந்தைக்கு 'முஹம்மத்' என்று பெயரிட்டுள்ளேன்.'
மத வெறி பிடித்த அமித்ஷாவுக்கு மிக அழகிய பதிலை கொடுத்துள்ளார் இந்த இந்து சகோதரர்.