Followers

Tuesday, July 07, 2015

வியாபம் முறைகேடு தொடர்பாக அடுத்தடுத்து கொலைகள்!



வியாபம் முறைகேடு தொடர்பாக கடும் விமர்சனங்களுக்குப் பிறகு, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இது குறித்து அவர் கூறும்போது, “சில துரதிர்ஷ்டமான மரணங்களுக்குப் பிறகு மக்கள் மனதில் சந்தேகங்கள் எழுந்துள்ளன. கேள்விகளுக்கு நியாயமான விடை கிடைக்க வேண்டும். நான் இந்த விவகாரம் குறித்து இரவு முழுதும் சிந்தித்தேன், எழுப்பப்படும் கேள்விகளுக்கு விடைகள் தேவை. எனவே தற்போது சிபிஐ இந்த வழக்கை விசாரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது” என்றார்.

சிபிஐ விசாரணையில் வியாபம் தொடர்பாக நிகழ்ந்த சில அகால மரணங்களும் அடங்குமா என்ற கேள்விக்கு, “அனைத்து விஷயங்களையும் சிபிஐ விசாரிக்கும்” என்றார்.

மத்தியப் பிரதேசம் தொழில் முறை தேர்வு வாரியம் (எம்பிபிஇபி), மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பணியாளர் தேர்வு வாரியமாகச் செயல்படுகிறது. மருத்துவத் துறை நியமனங்களுக்கான தேர்வுகளையும் இது நடத்துகிறது. 'வியாபம்' எனவும் அறியப்படும் இந்த வாரியத்தில் ஏராளமான முறைகேடுகள் நடப்பது கண்டறியப்பட்டது.

வியாபம் முறைகேட்டில் தொடர்புடைய இளம்பெண் ஒருவர் ரயில்வே பாதை அருகே மர்மமான முறையில் கடந்த 2012-ம் ஆண்டு உயிரிழந்து கிடந்தார். அப்பெண்ணின் பெற்றோரிடம் 3 நாட்களுக்கு முன் பேட்டியெடுத்துக் கொண்டிருக்கும்போதே நிருபர் அக்ஷய் சிங் திடீரென வாயில் நுரைதள்ளி இறந்தார்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மறுநாளே மருத்துவக் கல்லூரி டீன் அருண் சர்மா இறந்தது பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது. 'வியாபம்' ஊழல் தொடர்பாக இதுவரை 34 பேர் திடீரென இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, வியாபம் மர்ம மரணங்களுக்குப் பொறுப்பேற்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பதவி விலக வேண்டும் என்றும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக, சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்வதாக முதல்வர் சவுகான் தெரிவித்ததை காங்கிரஸ் கடுமையாக எதிர்த்துள்ளது. இதுவும் உண்மையை மறைக்க செய்யும் முயற்சியே என்றும், உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரணை மட்டுமே நியாயம் வழங்கும் என்றும் காங்கிரஸ் தெரிவித்திருந்தது.

இதனிடையே, மத்தியப் பிரதேசத்தின் வியாபம் ஊழல் விவகாரத்தை சிபிஐ விசாரிக்கக் கோரும் திக்விஜய் சிங் உள்ளிட்டோரின் மனுக்களை ஏற்ற உச்ச நீதிமன்றம், இது தொடர்பான விசாரணை வரும் 9-ம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
07-07-2015

தற்போது 40 க்கும் மேல் இந்த கொலை பட்டியல் நீண்டு செல்கிறது. இந்திய வரலாற்றிலேயே இது போன்ற மோசமான படு கொலைகள் அரசு தரப்பில் நடந்திருக்குமா என்பது சந்தேகமே? இந்த கொலைகளுக்கு பின்னணியில் ஆர் எஸ் எஸ் ஸின் பங்கும் உள்ளதாக காங்கிரஸின் திக்விஜய் சிங் குற்றம் சாட்டியிருப்பதையும் ஒதுக்கி விட முடியாது. தங்களுக்கு ஒத்து வரவில்லை என்றால் சக அமைச்சர்களையே போட்டு தள்ளி விடுவது இந்துத்வாவாதிகளுக்கு புதிய செய்தி அல்ல. குஜராத்தில் ஹரேண் பாண்டியா கொலையே ஒரு சிறந்த உதாரணம். சிபிசிஐடி முறையாக விசாரித்தால் பல ஆர்எஸ்எஸ் தலைவர்களுக்கு இந்த மோசடியிலும் கொலைகளிலும் தொடர்பு உள்ளது வெட்ட வெளிச்சமாகும். மோடியின் ஆட்சி வந்தால் இந்துக்களுக்குத்தான் அதிக ஆபத்து என்று முன்பு பலர் கூறியது தற்போது நிரூபணமாகி வருகிறது. இன்னும் என்ன என்ன பயங்கர வாத செயல்களை ஆர் எஸ் எஸ் நிகழ்த்தப் போகிறதோ பொறுத்திருந்து பார்போம்.

http://www.coastaldigest.com/index.php/news/77100-vyapam-scam-a-rss-strategy-to-induct-its-cadres-in-jobs-digvijaya-singh

Monday, July 06, 2015

4 வயது சிறுவனுக்கு மது ஊற்றி கொடுத்த கொடூரம்:



இளைஞர்கள் சிலர், நான்கு வயது சிறுவனுக்கு டம்ளரில் மதுவை ஊற்றி கொடுக்கும் காட்சி “வாட்ஸ்அப்”, “பேஸ் புக்”கில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

1 நிமிடம் 37 விநாடிகள் ஓடிய காட்சியில், சிறுவனை வலுக்கட்டாயமாக மது குடிக்க வலியுறுத்துவதும், குடித்து முடித்ததும் டம்ளரை வேகமாக சிறுவன் வீசி எறிவதும் இடம்பெற்றுள்ளது.

சிறுவன் மற்றும் இளைஞர்கள் மது குடிக்கும் இடம் அருகே 2 இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு வாகனத்தில் “TN25 AJ 8209” என்ற பதிவு எண் இருந்தது. அந்த வாகனம், திருவண்ணாமலை மாவட்ட பதிவு எண் கொண்டது. இதனால், தி.மலை மாவட்டத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கும் இந்த வாட்ஸ்அப் காட்சிகள் நேற்று கிடைத்துள்ளது.

அந்த காட்சியை பார்த்த, திருவண்ணாமலை ஆட்சியர் அ.ஞானசேகரன் அதிர்ச்சி அடைந் துள்ளார். உடனடியாக, வாகன பதிவு எண் குறித்து விசாரணை நடத்தி, அந்த வாகனம், போளூர் வட்டம் மேல்சோழங்குப்பம் கிராமத்தில் வசிக்கும் செந்தில் என்பவருக்குச் சொந்தமானது என்பதை ஆட்சியர் உறுதி செய்தார். இதையடுத்து சிறுவன் மது குடிக்கும் காட்சி மற்றும் சேகரிக்கப்பட்ட தகவலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னியிடம் தெரிவித்து உடனடி யாக நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர் உத்தரவிட்டார்.

அதன்பேரில், போளூர் டிஎஸ்பி கணேசன், கடலாடி காவல்நிலைய ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொலை முயற்சி வழக்கு மற்றும் குழந்தை கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு செந்தில்(24), பிரேம்குமார்(22) ஆகிய 2 பேர் கைது செய்யப் பட்டனர்.

தனிப்படை போலீஸார் கூறும் போது, “4 வயது சிறுவனை மது குடிக்க வைத்ததாக மேல்சோழங் குப்பம் கிராமத்தில் வசிக்கும் செந்தில், பிரேம்குமாரை கைது செய்து விசாரித்ததில் முழு விவரம் தெரியவந்தது.

மது குடித்த சிறுவனின் தந்தை ஆனந்தன் மற்றும் தாய் ஈஸ்வரி ஆகியோர் கட்டுமானத் தொழிலாளி கள். சென்னையில் தங்கி வேலை செய்து வருகின்றனர். ஈஸ்வரியின் தந்தை சின்னபையன், தாயார் முனியம்மாள் ஆகியோரது பராமரிப்பில் சிறுவன் வளர்ந்து வருகிறான். அங்கன்வாடிக்கு சென்று படிக்கிறான்.

23-06-15 அன்று ஆடு மேய்க்கச் சென்ற பாட்டி முனியம்மாள், தனது பேரனையும் அழைத்துச் சென்றுள்ளார். மேல்சோழங்குப்பம் ஏரி அருகே உள்ள காலி இடத்தில், அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிறுவனை அவனது தாய்மாமன் முருகன் அழைத்துச் சென்றுள்ளார். மரத்தடியில் சிறுவனை உட்கார வைத்து, வாங்கி வைத்திருந்த பீர் நிரப்பப்பட்ட டம்ளரை கொடுத்து இளைஞர்கள் சிலர் குடிக்க செய்துள்ளனர். இந்த செயலில் ஏழுமலை மற்றும் பலர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த காட்சியை தனது செல்போன் மூலமாக பிரேம்குமார் படம் பிடித்துள்ளார். பின்னர் அவர், அதனை மணிகண்டன் என்ப வருக்கு அனுப்பி வைத்துள்ளார். அவர் மூலமாக சிறுவன் பீர் குடிக்கும் காட்சி வேகமாக பரவி உள்ளது. இந்த சம்பவத்தில் 6 பேர் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை தேடி வருகிறோம். ஏழுமலையின் இருசக்கர வாகனம், பிரேம்குமாரின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்றனர்.

வழக்கறிஞர் பாசறை பாபு கூறும்போது, “பள்ளி மாணவர்கள் மது குடிப்பதை பார்க்கும்போது அதிர்ச்சியாக உள்ளது. இந்த நிலையில் 4 வயது சிறுவனுக்கு குடி பழக்கத்தை ஏற்படுத்தும் செயல் மன்னிக்க முடியாதது. மது பழக்கத்தை அரசாங்கம் ஊக்குவிக்கிறது. ஏற்கெனவே 2 தலைமுறைகளை ஆட்சியாளர்கள் அழித்துவிட்டனர். இப்போது உருவாகும் புதிய தலைமுறையும் அழிவின் பாதைக்கு சென்றுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுவிட்டது. பள்ளிக்கூடங்களில் நீதிக் கதைகள் கற்றுத் தருவது இல்லாமல் போய் விட்டது. அதை கற்றுக்கொடுத்து நல் ஒழுக்கம் உள்ள சமுதாயத்தை பாட சாலைகள் உருவாக்க வேண்டும்” என்றார்.

கண்டனம்

இந்த சம்பவத்துக்கு கண்ட னம் தெரிவித்துள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆகியோர் குற்றவாளிகள் மீது கடும் நட வடிக்கை வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
07-07-2915

Sunday, July 05, 2015

ராணுவ சேவையிலும் தொழுகையை விடாத எகிப்தியர்கள்!



இறைவன் கடமையாக்கிய தொழுகைகளை நம்மில் பலர் அலட்சியப்படுத்துகிறோம். ஆனால் இங்கு எகிப்து நாட்டின் ராணுவ வீரர்கள் போர்க் களங்களிலும், ராணுவ ஒத்திகை நிகழ்ச்சிகளிலும் இறைவன் கொடுத்த கடமையான தொழுகைகளை தவற விடுவதில்லை.

Saturday, July 04, 2015

நமது இந்தியாவில் 'பொறுக்கிகளுக்கு' போலீஸ் பாதுகாப்பு!





மருத்துவமனையில் முத்துராமன் (படம் நன்றி: தி இந்து)

நீங்கள் பொம்பள பொறுக்கியாக இருக்கலாம் அல்லது கந்து வட்டி கும்பலாக கூட, ஏன் ஏழைகளின் நிலங்களை அபகரிப்பவராகக் கூட இருக்கலாம். உங்களது இந்த தேசியப் பணியில் உற்சாகத்துடன் ஈடுபட உங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்றால் பாஜகவிலோ அல்லது ஆர்.எஸ்.எஸ்.லோ இணைந்து முசுலீம் தீவிரவாதி அரிவாளால் தாக்கியதாக பிளேடால் அறுத்து கொண்டு மருத்துவமனையில் சென்று படுத்துக் கொண்டால் போதும். இத்தகைய மோசமான டிரண்ட் இன்று மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்து தேசியம், இந்துக்கள் ஒற்றுமை, இந்துக்கள் பாதுகாப்பு என பீற்றிக்கொள்ளும் இந்துத்துவ அமைப்புகளின் முக்கிய பொறுப்பாளர்களின் வணிகம் என்னவென்றால் கந்து வட்டி, நில மோசடி, நிதி மோசடி, கட்டப் பஞ்சாயத்து. இந்த சமூக தீமைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இவர்களுக்கு எச்சரிக்கை விடும்போது பயந்து ஒழிந்துகொள்ள இவர்கள் எடுக்கும் ஆயுதம் முசுலீம் தீவிரவாதம்.

இந்துத்துவா தலைவர்களுக்கு முசுலீம் தீவிரவாதிகளால் ஆபத்து என்ற வலுவான போலி பிம்பம் இந்திய அளவில் ஆர்.எஸ்.எஸ் ஆல் உருவாக்கப்பட்ட ஒரு கட்டுக்கதை என்பதை பல சம்பவங்கள் நிரூபித்துள்ளன. மாலேகான், சம்ஜோத்தா, ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இந்துத்துவ பயங்கரவாதத்தின் கொடூரமான இருப்பை உறுதிபடுத்தின. மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறவும், பாஜகவில் முக்கிய பொறுப்புகளில் அமரவும், சொந்த எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு பெறவும், இந்துத்துவ தலைவர்கள் கையில் எடுத்திருக்கும் ஆயுதம்தான் "முசுலீம் பயங்கரவாதிகளால் உயிருக்கு ஆபத்து" என்ற சொற்பதம். கொடூரமான இன ஒடுக்கலை உள்ளடக்கிய இந்த சொற்பதத்தை நாம் எளிதில் கடந்து போய்விட முடியாது. பாமர இந்துக்களிடம் இந்த சொற்பதம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது ஆங்காங்கே நடக்கும் வன்முறைகள் உணர்த்துகின்றன. இந்த வாக்கியம் குறித்து உண்மையான ஆய்வை ஜனநாயக வாதிகள் வெகுஜன ஊடகங்கள் மூலமாக மக்கள் மன்றத்திற்கு கொண்டு வரவேண்டும்.

நாட்டின் எந்த மூலையில் இந்துத்துவ தலைவர்கள் அவர்களது சொந்த எதிரிகளால் தாக்கப்படும்போதோ அல்லது தாக்குதல் நாடகத்தை அவர்களே அரங்கேற்றும்போதோ அனைத்து பாமர இந்துக்கள் மட்டுமல்லாமல் முசுலீம் மக்களின் மனதிலும் இசுலாமிய பயங்கரவாதிகளின் கொடூர செயல் என்ற பின்னூட்டமான வார்த்தை மேற்கூறிய சொற்றொடரின் மூலம் அவர்களது ஆள்மனதில் பதிந்து போய்விடுகிறது. காட்சிகள் நடக்கும்போது காரணங்களை அவர்களது மூளை அவர்களுக்குத் தெரிவித்து விடுகிறது. மிக நுட்பமான இந்த ஆபத்தின் மூலம் எளிதாக ஒரு இனம் ஒடுக்கப்படுகிறது. இந்த சதியின் காரணகர்த்தாக்களுக்கு அனுதாபமும் ஆதாயமும் கிடைக்கிறது.

ஜனவரி 2ம் தேதி நாகர்கோவில் பார்வதிபுரத்தைச் சேர்ந்த பாஜக வர்த்தகப் பிரிவின் மாநில துணைத் தலைவர் வேல்சந்திரன் திசையன் விளை அருகே உள்ள கஸ்தூரி ரெங்கபுரத்தில் தனது தோட்டத்திற்குச் சென்று காரில் திரும்பிக் கொண்டிருக்கும்போது இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் வந்து குத்தியதாக வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொண்ட வள்ளியூர் போலீசார் நடத்திய விசாரணையில் இது வேல்சந்திரன் போலீஸ் பாதுகாப்புக்காக நடத்திய நாடகம் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதே போன்று பாஜகவில் முக்கிய பொறுப்பு கிடைப்பதற்காகவும் தேர்தலில் சீட் கிடைப்பதற்காகவும் கோவை வடவள்ளி சோமையம்பாளையம் தாயுமானவர் வீதியைச் சேர்ந்த பாஜக முன்னாள் மண்டலச் செயலாளர் ராமநாதன் என்பவர் கூலிப்படையினரை வைத்து தனது வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு அல் உம்மா அமைப்பினர் மீது பழியை போட்டார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவரது நாடகம் அம்பலமானது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 5, 2014 அன்று அவர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அனுமன் சேனா பிரமுகர் சக்தி வேல் என்பவரும் இதே போன்ற போலி நாடகத்தை அரங்கேற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக நாகர்கோவிலில் கடந்த டிசம்பர் 17ம் தேதி நடந்த சம்பவம் பெரும் வேடிக்கையானது. பாஜகவின் மூத்த பிரமுகரான எம்.ஆர்.காந்தி என்பவர் முசுலீம்கள் அதிகமாக வசிக்கும் இடலாக்குடி என்ற பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தனது வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது தெருவில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த தண்ணீர் நிரம்பிய பலூன் ஒன்று அவரது வாகனத்தில் லேசாக பட்டுவிட்டது. உடனே அவர் செய்த அலப்பறை மிகவும் கொடூரமானது. ஊடகங்களுக்கு தவறான தகவல்கள் பரப்பபட்டன. எம் ஆர் காந்தியின் வாகனத்தின் மீது கல் வீச்சு என்றும் ஆசிட் வீச்சு என்றும் செய்திகள் பரப்பப்பட்டு கலவர சூழ்நிலை உருவாக்கப்பட்டது.

மிகவும் முதிர்ந்த வயதை அடைந்த பிறகும் இவ்வளவு மோசமாக எம் ஆர் காந்தி நடந்து கொள்ள காரணம் என்ன? இதே பலூன் இந்து சிறுவர்கள் எறிந்திருந்தால் அவர்களைப் பார்த்து சிரித்து விட்டு டாட்டாகாட்டி சென்றிருப்பார். ஆனால் முசுலீம் சிறுவர்கள் என்பதால் ஒரு கேவலமான அரசியல் நாடகத்தை நடத்தியிருக்கிறார். இதன் மூலம் இடலாக்குடி முசுலீம்கள் மீது ஒரு சந்தேகப்பார்வையை பாமர இந்துமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கம்.

கடந்த 2ம் தேதி இதே நாகர்கோவில் இடலாக்குடியில் நடந்த சம்பவமும் மிகுந்த சந்தேகங்களை எழுப்புகிறது. அன்று காலை 8.30 மணிக்கு பாஜகவின் மாவட்ட வர்த்தகப் பிரிவுத் தலைவர் முத்துராமன் என்பவரை மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று முகமூடி அணிந்த மர்ம நபர்கள் தாக்கியதாக தனியார் மருத்துவமனைக்கு சென்று படுத்துக் கொண்டார். இந்த சம்பவங்கள் நடந்த சில நிமிடங்களிலேயே வெள்ளாடிச்சி விளை என்ற பகுதியில் உள்ள முசுலீம் குடியிருப்புகள் மீது ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். பேருந்துகள் மற்றும் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. ஷேக் அலி என்ற அப்பாவி கூலித் தொழிலாளி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. சம்பவம் நடந்த உடன் முத்துராமன் சிகிச்சை பெற்று வந்த தனியார் மருத்துவமனைக்கு வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இதன் பின் விளைவு தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும் என்று வன்முறையைத் தூண்டி விட்டுச் சென்றார்.

இது குறித்து விசாரணை நடத்திய கோட்டாறு போலீசாரிடம் முகமூடி அணிந்து வந்த நபர்கள் அரிவாளால் வெட்டியதாகத்தான் கூறினார். ஆனால் அவர்கள் தாடி வைத்திருந்ததை முத்துராமன் அந்த பதட்டமான சூழ்நிலையிலும் எப்படி கவனித்தார் என்று தெரியவில்லை. இதில் எந்த சம்பந்தமும் இல்லாத அப்பாவி முசுலீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு போலீசாரால் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். முசுலீம்களிடம் மிகவும் நட்புறவுடன் பழகி வந்த முத்துராமன் முசுலீம்கள் மீது அபாண்ட பழியை சுமத்தியது இந்துத்துவ அரசியலின் கொடூர சித்தாந்தத்தை வெளிப்படுத்துகிறது. ஏற்கனவே பல்வேறு நில மோசடி வழக்குகள், கொலை வழக்குகளில் தொடர்புடைய முத்துராமனுக்கு எதிரிகள் அதிகம். இதனால் ஏற்கனவே இவர் போலீஸ் பாதுகாப்பு கேட்டிருந்தார். பொறுக்கிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க முடியுமா? என போலீசார் மறுத்து விட்டனர். இந்த நிலையில்தான் சிராய்ப்பு காயங்களுடன் மருத்துவமனையில் அரிவாளால் வெட்டியதாக சென்று அலப்பறையை உருவாக்கி உள்ளார்.

முக்கிய பாஜக மற்றும் இந்துத்துவ தலைவர்களின் மக்கள் விரோத செயல்பாடுகளால் ஏராளமான எதிரிகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். பாஜகவின் தேசியச் செயலாளரும் ஏதோ அப்பழுக்கற்ற ஒழுக்கவாதி என்றும் ஊடகங்களில் தன்னை காட்டிக் கொள்ளும் மேனாமினுக்கி ஹெச்.ராஜா லோட்டஸ் பெனிபிட் பண்ட் என்ற நிறுவனத்தை நடத்தி பாஜகவினரிடமே மோசடியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் பாதிக்கப்பட்ட திருச்சி மாவட்ட முன்னாள் பாஜக தலைவர் பழனியப்பன் இவர் மீது காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வெளியே அரை டவுசர்களை அணிந்து தேசியவாதி என காட்டிக்கொள்ளும் இந்துத்துவ தலைவர்களின் சொந்த வாழ்க்கை என்பது முடை நாற்றம் வீசும் பாதாள சாக்கடையை விட மோசமானது. இந்த பொறுக்கிகளைத்தான் முசுலீம்கள் தாக்க முயற்சிக்கிறார்களாம். இவர்களுக்குத்தான் போலீஸ் பாதுகாப்பாம்.

- ஷாகுல் ஹமீது (ibnsheik@gmail.com)
எழுத்தாளர்: ஷாகுல் ஹமீது
தாய்ப் பிரிவு: சமூகம் - இலக்கியம்
பிரிவு: கட்டுரைகள்
வெளியிடப்பட்டது: 20 ஜனவரி 2015

நடிகர் விக்னேஷ் இஸ்லாத்தை ஏற்றதால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்!





இஸ்லாத்தை ஏற்றதால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நடிகர் விக்னேஷ் என்கின்ற அபூபக்கர் சித்தீக்!

"ரங்கூன்", "போடா ஆண்டவனே", "நம்ம பக்கம்" போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள விக்னேஷ் எனும் இளம் நடிகர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதால் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

இளம் நடிகர் விக்னேஷ் அவர்களுக்கு சில தினங்களுக்கு முன்பு திருக்குர்ஆன் வழங்கியதாக செய்தி வெளியிட்டிருந்தோம்.

வாங்கிச் சென்ற குர்ஆனை கதவைத் தாழிட்டு படித்து வந்து இருக்கிறார். ஒருநாள் கதவை மறந்து தாழிடாமல் படித்த போது அவருடைய தாய் வந்து பார்த்து கத்திக் கதறி வீட்டில் பிரச்சனையாகி விட்டது.

ஒரு கட்டத்தில் ஆம் நான் முஸ்லிமாகி விட்டேன். அதன் படித்தான் வாழப் போகிறேன் எனக் கூற தாயும் தந்தையும் வீட்டை விட்டு வெளியேறு எனச்சொல்ல, என்ன செய்வது எனத் தெரியாத நிலையில் போன் செய்தார்.

"நான் தவறான வழியில் செல்லவில்லை என முடிந்தவரை பெற்றோரை சமாதானம் செய்து பாருங்கள். முடியாத பட்சத்தில் வந்து விடுங்கள், இறைவன் இருக்கிறான் இலட்சக்கணக்கான என்னைப்போன்ற உங்கள் உடன் பிறவாத சகோதரர்கள் இருக்கிறோம்" எனக் கூறியதும் "இல்லை அங்கு இருக்க முடியாது நான் வந்து விடுகிறேன்" என இன்று காலை வந்து விட்டார்.

ஏற்கனவே குடும்பத்தை விட்டு வந்து இங்கு தங்கி உள்ள இரு திண்ணைத் தோழர்கள் நம்மோடு உள்ளார்கள் அவர்களோடு தங்கிக் கொள்ளலாம் என பள்ளியில் அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தோம்.

பொறியியல் படித்துள்ள தனக்கு தன்மானத்துடன் வாழ எனக்கு ஒரு உடனடி வேலை தேவை என்றார். இன்ஷா அல்லாஹ் ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளோம்...

கொண்ட கொள்கைகைக்காக குடும்பத்தைத் துறக்கும் முஹாஜிரீன்கள் இன்றைக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். அல்லாஹ் அவருக்கு அருள் புரியட்டும்! அல்ஹம்துலில்லாஹ்...

(குறிப்பு : முன்பாகவே அவர் நமது மதரஸாவில் கலிமா சொல்லி விட்டார், அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அதை வெளியிடாமல் குர்ஆன் வழங்கியதாக மட்டும் செய்தி வெளியிட்டு இருந்தோம், ஆனால் இறைவனின் நாட்டம் நாம் வழங்கிய குர்ஆன் அதை வெளிப்படுத்தி விட்டது)
தகவல் -செங்கிஸ் கான்