'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Wednesday, February 28, 2018
இஸ்லாத்தில் மனித நேயம் நடைமுறையில் இருக்கின்றதா?
கேள்வி: இஸ்லாத்தில் மனித நேயம் இருக்கின்றது சரி. அது நடைமுறையில் இருக்கின்றதா? அப்படி இருந்தால் ஏன் இஸ்லாமிய நாடுகள் தங்களுக்குள் சண்டையிடுகின்றன. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போக வேண்டியது தானே என்று நண்பர் ஒருவர் வினவுகிறார். மேலும், உங்களை நீங்கள் சரி செய்து கொள்ளுங்கள் என்றார்.
– ஏ.ஆர். சைபுல்லாஹ், யு.ஏ.இ.
பதில்: இந்தக் கேள்விக்குரிய சரியான விடை நம்மைத் திருத்திக் கொள்வது தான்.
இஸ்லாமிய நாடுகளின் சண்டைகளை நம்மால் தடுக்க முடியாவிட்டாலும் நம்மிடையே பூரணமான சகோதரத்துவத்தைக் கடைப்பிடித்தால், ஒருவருக்கொருவர் உதவுவதில் மற்றவர்களை விட முன்னணியில் நாம் இருந்தால் அந்த நாடுகளின் நடவடிக்கைக்கும், இஸ்லாத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று நாம் கூறுவதை அவர்கள் நம்புவார்கள்.
எனவே முஸ்லிம் சமுதாயம் இது போன்ற கேள்விகளிலிருந்து 'மற்றவர்கள் நம்மை எந்த அளவுக்குக் கவனிக்கிறார்கள்? நம்மிடம் எந்த அளவுக்கு எதிர்பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இது நம்மவருக்குக் கூற வேண்டிய செய்தியாகும்.
முஸ்லிம்கள் என இன்று உலகில் வாழ்பவர்களில் தொன்னூறு சதவிகிதம் பேர் பல்வேறு மதங்களை ஆய்வு செய்து, இஸ்லாம் சரியான வாழ்க்கை நெறி என்று உணர்ந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் அல்லர்.
மாறாக தமது பெற்றோர் முஸ்லிம்களாக இருந்ததால் தம்மையும் முஸ்லிம்களில் சேர்த்துக் கொண்டவர்கள். இஸ்லாத்தின் அடிப்படை என்ன என்பதை அறியாதவர்கள் கூட இத்தகையோரில் உள்ளனர்.
அதாவது இஸ்லாத்தைப் புரிந்து கொண்டு ஏற்காதவர்களே பெரும்பாலான முஸ்லிம்களாகவுள்ளதால் தான் அந்த நண்பர் சுட்டிக்காட்டுகிற நிலைமை இருக்கிறது. அதிலும் முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்களின் நிலைமை இதை விட மோசமாகவுள்ளது.
அவர்களில் பலர் பெயரளவுக்குத் தான் முஸ்லிம்களே தவிர முழுக்க முழுக்க மேற்கத்தியக் கலாச்சாரத்தின் அடிமைகளாவே அவர்கள் உள்ளனர். எனவே தான் நாடு பிடிப்பதற்கும், இன்னபிற நோக்கத்திற்கும் அண்டை நாடுகளுடன் சண்டையிட்டு வருகின்றனர் என்பதை நண்பருக்கு விளக்குங்கள்!
முஸ்லிம்களை முஸ்லிம்களாக வாழச் செய்ய இன்னும் கடுமையாக நாம் உழைத்தால் இது போன்ற கேள்விகளை யாரும் கேட்க முடியாமல் செய்யலாம்.
(பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து)
Tuesday, February 27, 2018
காஞ்சிப் பெரியவர் ஜெயேந்திரர் இன்று காலை இறந்து விட்டார்!
காஞ்சிப் பெரியவர்
ஜெயேந்திரர் இன்று காலை இறந்து விட்டார்!
‘நீங்கள் எங்கிருத்த போதிலும் உங்களை மரணம்
வந்தடையும். பலமாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் நீங்கள் வசித்தாலும் சரியே!’
குர்ஆன்
(அந்நிஸா: 78)
மனிதர்கள் என்றுமே
மனிதர்கள்தான். அவர்கள் என்றுமே இறை தன்மையை அடைய முடியாது என்பதற்கு இது போன்ற இறப்புகள்
சான்று பகர்கின்றன. இறைவனுக்கென்று சில இலக்கணங்கள் உள்ளன.
1.மனிதர்களை தரம் பிரித்து
'நீ உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன்
என்று கூறுபவன் இறைவனாக முடியாது.
2. மல ஜலம் வியர்வை போன்றவற்றை
சுமந்திருப்பவர்கள் இறைவனாக முடியாது.
3.சமஸ்கிரதம் உயர்ந்தது:
தமிழ் மொழி தாழ்ந்தது. அது ஒரு நீச மொழி என்று சொல்வபர் இறைவனாக முடியாது.
4.ஒரு தாய்க்கு பிறந்து
சில காலம் ஆசாபாசங்களோடு வாழ்ந்து ஒரு மனிதனாக இறந்தவர் இறைவனாக முடியாது.
5. ஒரு பகுதிக்கு ஒரு
குறிப்பிட்ட இனத்துக்கு மட்டும் இறைவனாக இருந்து கொண்டு அருளாசி வழங்கிக் கொணடு இருப்பவர்
இறைவனாக முடியாது.
இது போன்ற இலக்கணங்களை
எல்லாம் நாம் இறை தன்மையோடு பொருத்திப் பார்க்காததாலேயே இறைவனைப் பற்றிய குழப்பங்கள்
இன்றும் பலருக்கு இருந்து வருகிறது.
ஜெயேந்திரரை பிரிந்து
வாடும் அவரது பக்தர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
கருணை இல்ல கொலை வழக்கு....
மனிதனை சூத்திரன் என்று வகைப்படுத்தி
தொட்டாலே தீட்டு என்று ஒதுக்கிய ஹெச் ராஜாக்கள் கருணை இல்லங்களுக்கு எதிராக அதிகம்
பொங்குவதை பார்க்க முடிகிறது. உண்மையில் என்னதான் நடக்கிறது. சற்று இந்த பதிவை படியுங்கள்.
#கருணைஇல்லகொலைவழக்கு
படிங்க...நீங்களும்
குழம்புவீர்கள்..
தலைய பிச்சுக்கலாம் போல இருக்கே... விளக்குங்கப்பா...
அய்யா நட்பு ராசாக்களா #மீடியாஓடியா?
கௌரவமாக சாவதற்கும் வழியில்லாமல் போய்விடுமோ?
தலைய பிச்சுக்கலாம் போல இருக்கே... விளக்குங்கப்பா...
அய்யா நட்பு ராசாக்களா #மீடியாஓடியா?
கௌரவமாக சாவதற்கும் வழியில்லாமல் போய்விடுமோ?
ஊடகங்களோடு விஷமிகளின் அறியாமை:
#புனிதவளனார்கருணையில்லம் (#StJoseph's Hospice) நிறுவனம் ஏதோ தவறு செய்துவிட்டதாக தங்கள் #TRP மதிப்பை அதிகப் படுத்தும் நோக்கில் செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள் தொலைக்காட்சி நிறுவனங்கள். சந்தர்ப்பத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சில விஷமிகள், ஏதோ புனித வளனார் கருணையில்லம் நிறுவனம் எலும்புகளை சேகரித்தும், உள் உறுப்புகளை அறுவடை செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வருவதாகவும் சமுகவலைதளங்களில் வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். ஆகவே மக்களுக்கு தெளிவு படுத்த எனது சிறு முயற்சி.
#Vault எனும் ஆங்கிலச் சொல்லுக்கு, தமிழ்ப்பதம்: பெட்டகம் என்று கொள்ளலாம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை போன்ற நகரங்களில் கல்லறைத் தோட்டங்கள் நிறம்பி விட்டதால், C.S.I. பேராயர் தேவசகாயம் அவர்கள் சென்னை போன்ற பெருநகரங்களில் கல்லறைகளுக்கு இடம் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருப்பதால், இறந்தைவர்களின் சடலங்களை எரிப்பதற்கும், பெட்டகத்தில் அடக்கம் செய்வதற்கும் பரிந்துறை செய்திருந்தார். இப் பெட்டகங்களில் அடக்கம் என்பது பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் உள்ள நிகழ்வு தான். இப்படிப் பட்ட 200 ஆண்டுகள் பழமையான பெட்டகம் ஒன்றை நான் திருச்சியிலுள்ள ஆலயத்தில் பார்த்திருக்கிறேன். இப்படிப் பட்ட பெட்டகம்-முறை அடக்கம் கேரளாவில் மிகவும் அதிகம். சில குடும்பங்கள் தாங்கள் இறந்த பின்னரும் குடும்பத்தாரோடு இருக்கவேண்டும் என்றெண்ணி குடும்பத்திற்கென்று ஒரு பெட்டகத்தை ஆலயத்திலுள்ள பகுதிகளில் கட்டி இருப்பார்கள். ஒராண்டிருக்கு முன்னர் நடிகை '#ப்ரியாங்காசோப்ரா' தனது பாட்டியை தங்கள் குடுப்பத்தின் பெட்டகத்தில் அடக்கம் செய்ய ஆர்தோடாக்ஸ் ஆலையம் மறுத்துவிட்டதென்று அங்காய்த்தது உங்கள் நினைவுக்கு வரலாம். ஆகவே பெட்டகம்-முறை அடக்கம் என்பது, இந்தியா உட்பட உலக்தின் அனைத்து நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது தான். The #Madras #Cemeteries Board (#MCB) Trust தங்கள் வசம் உள்ள கல்லறைத் தோட்டத்தில் பல அடுக்கு பெட்டகத்தை 2007ஆம் ஆண்டே அறிமுகம் செய்துள்ளது.

புனித வளனார் கருணையில்லம் நிறுவனம் தங்களை எவ்வாறு அடையாளப் படுத்தி இருக்கிறார்கள்? சாகும் தருவாயில் கைவிடப் பட்டவர்களின் இல்லம் (#Home #for #Dying #Destitute) என்று தானே!
புனித வளனார் கருணையில்லம் நிறுவனம் எதையுமே மறைக்க வில்லையே! தங்கள் வெப்சைட்டில் ( http://www.stjosephshospices.com/web/index.php... ) எவ்வாறு பெட்டகத்தில் இறந்தவர்கள் அடக்கம் செய்யப் படுகிறார்கள் என்பதை படத்துடன் வெளியிடிருக்கிறார்களே! யூடுபில் YouTube கூட இது பற்றிய காணொலிகள் (videos) உண்டு:
https://youtu.be/zwhLvMgDxuI
https://youtu.be/9gGDqbRl5m0
அருள்தந்தை R V தாமஸ் 2011ம் ஆண்டு ஆரம்பித்த பாதுகாப்பகத்திற்கு என் வயோதிகர்கள் வருகிறார்கள்? குடும்பத்தாரால் கைவிடப்பட்டவர்கள், அமைதியான சாவுக்காக புனித வளனார் கருணையில்லம் நிறுவனத்தை நாடி வருகிறார்கள் (They come to this hospice to have a peaceful death).
இப்படி மதிப்போடு மக்கள் இறப்பதற்கு செயல் பட்டுவரும் இடத்தை (A place for death and human dignity) #ஊடகங்களும், விஷமிகளும் கொச்சை படுத்தி வருவதை நினைத்து மனம் வெகுவாக வேதனைப் படுகிறது.
50 ஆண்டுகளாய் கத்திக்குத்து பற்றிய செய்தியை வெளியிடும் பொழுது, "சதக் சதக் என்று கத்தியால் குத்தினான்" என்று கோரமாய் செய்தி வெளியிடும் ஊடகத்திடம் இதைத் தவிற்று வேறு எதை ஏதிர் பார்க்க முடியும்?
அடுக்குமாடி கல்லறைகள்.. ஒரு விளக்கம்..
செங்கல்பட்டு அருகே தனியார் கிருஸ்துவ அமைப்பு ஒன்று நடத்தும் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில், மரணமடைந்தவர்களின் விவகாரத்தில் சட்ட மீறுதல்கள் நடந்திருந்தால், சட்டபடியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.. ஆனால், இந்த விஷயத்தில், சுவரில் புதைத்துவிடுகிறார்கள் என சொல்வது, சரியான புரிதல் இல்லாமல் சொல்வதாகும்..
இதுவும் இறந்தவர்களை புதைக்கும் முறைதான்.. கிருஸ்துவ கல்லறை தோட்டங்களில் இடப்பற்றாக்குறையால், இப்படி புதைக்கும் முறை பல ஆண்டுகளுக்கு முன்பாகவே கேரளா, சென்னையில் நடைமுறையில் உள்ளது..
இதற்கு வால்ட் முறை என்று பெயர். அதன்படி 30 அடி நீளம், 8 அடி அகலம், 10 அடிஉயரத்தில் சிமென்ட் அறை அமைக்கப்படுகிறது. இந்த அறை குறுக்குவாக்கில் 15பிரிவாக பிரிக்கப்படும்.
ஒவ்வொரு பிரிவும் மேலும், கீழுமாக 5 அடுக்குகளாக பிரிக்கப்படும். இப்படியாகமொத்தம் 75 வால்ட்டுகள் அதாவது கல்லறைகள் அமைக்கப்படும்.
ஒவ்வொரு வால்ட்டின் உட்புறமும் காற்றுப் புகாத அளவக்கு கதவுகளும்அமைக்கப்படும்.
இந்த வால்ட்டுகளுக்குப் பின்புறம் 8 அடி இடைவெளி விட்டு இதேபோன்றுஇனனொரு வால்ட் கல்லறை அமைக்கப்படும். இதிலும் 75 கல்லறைகள் இருக்கும்.இரண்டு வால்ட் கல்லறைகளுக்கும் இடையே முழுவதும் சிமென்ட்டால் ஆன கிணறுஅமைக்கப்படும்.
மொத்தம் 150 கல்லறைகளும் ஒரு கிணறும் சேர்ந்து பிளாக் எனப்படும்.
இந்த 150 கல்லறைகளில் ஒரு வால்ட்டுக்கு ஒரு உடல் என மொத்தம் 150 உடல்களைவைக்க முடியும். 2 ஆண்டுகள் கழித்து அந்த வால்ட் தேவைப்படுமானால் அதன்கதவுகள் திறக்கப்படும்.
2 ஆண்டுகள் ஆகியும், அழுகாமல் உள்ள உடலின் மீதப் பகுதிகள் அகற்றப்பட்டுஅருகே உள்ள கிணற்றில் விடப்படும். பின்னர் அந்த வால்ட் சுத்தம் செய்யப்பட்டுஅங்கு வேரு ஒரு உடலை வைக்கலாம்.

இணையத்திலிருந்து காப்பி
பேஸ்ட் செய்யப்பட்டது..
சிரிய மக்களுக்காக நாம் செய்ய வேண்டியது என்ன?
சிரிய மக்களுக்காக நாம்
செய்ய வேண்டியது என்ன?
அபூஹுரைரா (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள் :
நபி (ஸல்) அவர்கள் இஷாத்
தொழுகையின் இறுதி ரக்அத்தில் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்' என்று கூறிய பிறகு குனூத்' ஓதினார்கள். அதில்,
இறைவா! அய்யாஷ் பின் அபீ
ரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! வலீத் பின் வலீதைக் காப்பாற்றுவாயாக! இறைவா! சலமா
பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறை நம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர்களைக்
காப்பாற்றுவாயாக! இறைவா! முளர் குலத்தாரின் மீது உனது பிடியை இறுக்குவாயாக! இறைவா!
யூசுஃப் (அலை) அவர்களின் காலத்துப் பஞ்சம் நிறைந்த (ஏழு) வருடங்களைப் போன்று இவர்களுக்கும்
சில வருடங்களை அளிப்பாயாக!
என்று பிரார்த்தித்தார்கள்.
நூல் : புகாரி 6393
நபியவர்கள் செய்த பிராரத்தனையின்
அளவை மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
எனவே நாமும் இதே அளவிற்கு
மிகவும் நீண்டு விடாமல் சோதனைக்கால பிரார்த்தனையைச் செய்ய வேண்டும்.
“யா அல்லாஹ் ! சிரியாவில்
பாதிக்கப்படும் முஸ்லிமான பலவீனமான ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பாயாக!
அவர்களுக்கு உன் உதவியை
இறக்கி அவர்களைப் பலப்படுத்துவாயாக!
இறைவா சிரியாவில் அநியாயம்
செய்யும் சிரியப் படைகள், ரஷ்யப்படைகள், ஈரான் படைகள் மீது உன் பிடியை இறுக்குவாயாக! அவர்கள் மீது உன்
சாபத்தை இறக்குவாயாக.."
என்பது போன்ற பிரார்த்தனைகளை
நாம் செய்யலாம்.
கைகளை உயர்த்தி பிரார்த்திக்க
வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)