ஈரானியர்கள் கல்வி
கற்பதில் திறமையானவர்கள் என்று அன்றே நபிகள் நாயகம் கணித்தார்கள்.
உலகிலேயே
மிகச்சிறந்த அறிவாளிகள் "இஸ்ரேலியர்" என்று யார் பரப்பினார்கள்
தெரியாது. தற்போது பேசுபொருளாக இருக்கும் ஈரான் "பாரசீகர்கள்" குறித்து நபிகளாரின் கருத்து:
"கல்வியை 'ஸுரய்யா' (அடர்மீன் கூட்டம்/Pleiades)
எனும்
விண்மீனில் இருந்தாலும், பாரசீகத்தைச்
சேர்ந்தவர்களில் சிலர் அதனை அங்கிருந்து பெற்றுக் கொள்வார்கள்."
(ஆதாரம்: ஸஹீஹ்
புகாரி - 4897, ஸஹீஹ்
முஸ்லிம் - 2546)
மேற்சொன்ன
ஹதீஸில் பாரசீக/ஈரான் மக்களின் அறிவுத்திறன் மற்றும் மார்க்கப் பற்றை நபி அவர்கள்
முன்னறிவிப்பாகப் பாராட்டியுள்ளார்கள்.
பிற்காலத்தில்
இமாம் புகாரி, இமாம்
முஸ்லிம், இமாம் அபூ
ஹனீபா போன்ற மாபெரும் அறிஞர்கள் பாரசீகப் பின்னணியிலிருந்து தோன்றி இஸ்லாமிய
அறிவியலுக்கு ஆற்றிய தொண்டு இந்த ஹதீஸை மெய்ப்பிப்பதாக உள்ளது.
பாரசீகப்
பின்னணி கொண்ட நபித்தோழர்களில் முதன்மையானவர் ஸல்மான் அல்-பாரிஸீ (ரலி) அவர்கள். "ஸல்மான்
நம்மைச் சேர்ந்தவர்; அவர் (என்)
குடும்பத்தைச் சேர்ந்தவர்" என்று அண்ணல் நபி அவர்கள் கூறினார்கள்.
Pleiades (பிளியடீஸ்) என்பது வானவியலில் மிகவும் பிரபலமான ஒரு விண்மீன் கூட்டமாகும்.
இதனைத் தமிழில் 'அறுமீன்' அல்லது 'கார்த்திகை விண்மீன் கூட்டம்' என்று அழைப்பார்கள்.
நபிகள்
நாயகம் அவர்கள் இந்த விண்மீனை உதாரணமாகக் காட்டியதற்குப் பின்னால் உள்ள அறிவியல்
மற்றும் வரலாற்றுச் சிறப்புகள் உண்டு.
பூமியிலிருந்து
சுமார் 444 ஒளியாண்டுகள்
தொலைவில் உள்ள ஒரு திறந்த விண்மீன் கொத்தாகும் (Open Cluster). வெறும் கண்ணால் பார்க்கும்போது ஆறு அல்லது
ஏழு நட்சத்திரங்கள் மிக நெருக்கமாக ஒரு கொத்தாகத் தெரியும்.
மனித
வரலாற்றில் மிகப்பழங்காலத்திலிருந்தே (கி.மு. 1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே) இந்த நட்சத்திரக்
கூட்டம் கடற்பயணிகளுக்கும், விவசாயிகளுக்கும்
வழிகாட்டியாக இருந்துள்ளது.
அக்கால அரபு
இலக்கியங்களில் 'ஸுரய்யா' என்பது எட்ட முடியாத மிக உயர்ந்த இடத்தைக்
குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு குறியீடு.


No comments:
Post a Comment