இந்திய விருந்தாளியான
ஈரான் கப்பலை நமது எல்லையில் கோழைத்தனமாக தாக்கியுள்ளது அமெரிக்கா.
இந்தியாவின்
அழைப்பின் பேரில் கூட்டு கடற்படைப் பயிற்சிக்காக இந்தியா வந்த ஈரானிய கடற்படைக்
கப்பலான ஐரிஸ் டெனா, ஈரானுக்குத்
திரும்பும் போது அமெரிக்காவின் டார்பிடோவால் குண்டு வீசப்பட்டதில் 100 க்கும் அதிகமானோர் கடலில் மூழ்கி மரணம்
அடைந்து இருக்கிறார்கள்... இது இந்திய கடல் எல்லை பகுதியில் நந்துள்ளது.
நமது
வீட்டிற்கு, நமது
அழைப்பில் வந்த விருந்தினர்களை, பத்திரமாக வழியனுப்பி வைப்பது நமது பண்பாடு!.... இது நமது நாட்டின் கவுரவம்
ஆண்மை.
இந்தியா
நடத்திய போர் ஒத்திகையில் கலந்து கொண்ட, ஈரான் நாட்டிற்கு சொந்தமான ராணுவ கப்பல்,
IRIS- Dena விசாகப்பட்டினத்தில்
ஒத்திகையை முடித்து விட்டு ஈரான் திரும்பும் வழியில், ஸ்ரீலங்காவிற்கு மிக அருகில் அமெரிக்க
நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்டு, அத்தனை பேர் பலியாகியுள்ளனர் இது அப்பட்டமான
படுகொலை.
மோடி அரசு
இதுவரை தனது வாயை திறக்கவில்லை....இது உலக அரங்கில் மிக பெரிய விவாதமாகவும் இந்திய
இறையான்மைக்கு வித்திட்ட சவாலாகவும் உள்ளது... அதுவும் உலகின் மிக பெரிய ஜனநாயக
மக்கள் தொகை கொண்ட இந்தியா வெறும் 5 ல் 1 பங்கு மக்கள் தொகை கொண்ட அமெரிக்காவுக்கு ஒரு
கண்டனம் தெரிவிக்காதது மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
உலகின் மிக
பெரிய கடல் எல்லையை கொண்ட இந்திய அரசின் செயல் இந்திய வலிமைக்கு வித்திட்ட பெரிய
சவால்.. இதே சூழ்நிலை நமது இந்திய கப்பல்களுக்கு உண்டானால் என்ன நிலை உண்டாகும்.
போர் நடப்பது
ஈரானில், ஆனால்
இரானியக் கப்பல் தாக்கப்பட்டது நமது நாட்டுக்கருகில்! அமெரிக்க போர் கப்பலுக்கு
இங்கு என்ன வேலை! நமது கடற்படை தளங்களை அமெரிக்க கடற்படை பயன்படுத்துகிறதா? இதை மோடி தட்டிக் கேட்க வேண்டாமா! இந்த
தைரியம் கூட மோடி அரசுக்கு இல்லையா!??
கண்டிப்பாக
உலகின் நான்காவது மிக பெரிய இராணுவ கட்டமைப்பு கொண்ட நாட்டிற்கு நல்லது அல்ல.
சிறிய நாடுகளே
அமெரிக்காவை எதிர்க்கும் போது... இந்தியா எதிர்த்து அறிக்கை கொடுக்குமா? கொடுக்காதா என்பதே இங்கே கேள்வி.
கண்டிப்பாக
எதிர்காலத்தில் பாதிப்பு நமக்கே.

No comments:
Post a Comment