Followers

Friday, April 29, 2011

மன்னர் பஹதின் இறப்பும்-இங்கிலாந்து இளவரசரின் திருமணமும்!


உலக கோடீஸ்வரர்களில் ஒருவர் உலக முஸ்லிம்களால் மரியாதையோடு பார்க்கப்பட்ட சவூதி முன்னால் மன்னர் பஹத் உடைய சமாதியைத்தான் நாம் பார்க்கிறோம். இந்த மன்னர் குடும்பத்துக்கு இருக்கும் செல்வத்தில் இந்த சமாதியை பல கோடிகள் செலவு செய்து பலரும் காணும் இடமாக ஆக்கியிருக்கலாம். அதுதான் மனித இயல்பு. ஆனால் இஸ்லாம் இது போன்ற ஆடம்பர செலவுகளையும் தேவையற்ற தனி மனித துதிபாடுதலை வெறுப்பதாலும் மன்னரை மிகவும் சாதாரணமாக எந்தவொரு மேடையும் அமைக்காமல் சமாதியை அமைத்துள்ளது சவூதி அரசு. மக்களுக்கு பயந்து இது போன்ற செய்கையை செய்யவில்லை இந்த அரசு. ஏனெனில் நமது ஜனநாயக நாட்டைப் போல் இங்குள்ளவர்கள் ஆட்சியாளர்களை தட்டிக் கேட்க முடியாது. ஆனால் இறைவனுக்கு பயந்தவர்களாக இந்த ஆட்சியாளர்கள் இருப்பதால் இது போன்ற எளிமை இங்கு பின்பற்றப்பட்டது.

இறந்தவர்களுக்காக உடலை முன்னால் வைத்து மசூதியில் அனைவரும் அவருக்காக பிரார்த்திதது ஒரு தொழுகை நடத்துவது வழக்கம். மன்னர் பஹதுடைய உடலை பள்ளிக்கு கொண்ட வந்தபோது இந்நாட்டு சாதாரண குடிமகனின் இறந்த உடலும் பள்ளிக்கு வருகிறது. உடனே இரண்டு உடல்களையும் அருகருகே வைத்து கூட்டாக அனைவரும் தொழுகை நடத்தினர். ஆண்டான் அடிமை என்ற பேதமில்லாமல் இருவருக்கும் ஒன்றாக தொழுகை நடத்தி இருவரையும் எந்த வித்தியாசமும் இல்லாமல் மண்ணில் புதைத்தனர் ஆட்சியாளர்கள்.

இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் நேரலையில் பார்த்து வந்த ஒரு கிறித்தவ பாதிரியார் இந்த நாளில் இப்படி ஒரு நிகழ்ச்சியா என்று வியந்து இஸ்லாத்தை தழுவிய செய்தியும் அன்றே வந்தது. ஆங்கிலத்தில் வந்த செய்தியை அப்படியே தருகிறேன்.

The funeral of King Fahd, which was conducted in a simple manner in Riyadh earlier this month, has encouraged a well-known Christian priest in Italy to embrace Islam, press reports said.

The priest, who watched the late king's funeral on satellite television, was impressed by the lack of pomp and pageantry in the royal funeral, Al-Riyadh Arabic daily reported without mentioning his name.

King Fahd was buried in Al-Oud graveyard the next day of his death after a solemn funeral ceremony attended by world leaders.

Islamic preacher Dr. Abdullah Al-Malik said the simple funeral of the king had a dramatic effect on the priest's mind, which led him to Islam. "Although he had read several Islamic books before, they didn't have the same impact."

This is the second high-profile reversion to Islam by an Italian involving Saudi Arabia. Four years ago, Italian Ambassador to Riyadh Torquato Cardilli embraced Islam.

"The priest watched the funeral of King Fahd and another person on television and did not find any difference," Malik said. "There was only a single funeral prayer for the two and both were buried in similar graves. This great example of equality influenced the priest and prompted him to embrace Islam," Malik said.

Muslim preachers in Italy had given the priest Islamic books and cassettes in the past 15 years, but what moved him was the simplicity of the royal funeral.

"I had read several Islamic books and heard many Islamic cassettes over the past years, they never moved me. But the simple royal funeral shook me and changed my mind," Malik quoted the priest as saying.

He said he believed the king's funeral would change the mind of many others. He urged Muslim media to focus on stories related to Islam's tolerance and equality in order to attract more people to the religion.

"I will work the rest of my life for the propagation of Islam," the 62-year-old former priest said.

Badr Al-Olayan, director of the Islamic Education Foundation in Jeddah, said the priest's reversion to Islam was "very good news." He narrated the story of another Italian who came to IEF office to embrace Islam after being impressed by the large and orderly congregation of Muslims at the Grand Mosque in Makkah to perform prayers.

"How can you assemble such a large number of people by just making a call. It's impossible. Only God can do that," he quoted the Italian as saying.

Olayan urged Muslims to do more in order to take the message of Islam to other people.

Ambassador Cardilli, 60, embraced Islam on Nov. 15, 2001. "I am fully convinced of the truth of Islam through my regular reading of God's final revelation, the Holy Qur'an," Cardilli was quoted as saying at the time.

இதே நேரம் நமது நாட்டையும் சற்று ஒப்பிட்டு பார்ப்போம். ஜனாநாயக நாடு என்கிறோம். உங்களுக்கு உழைக்க எங்களுக்கு ஓட்டளியுங்கள் என்று கூறி ஆட்சிக்கு வந்தவுடன் எத்தனை ஆடம்பரங்கள். வளர்ப்பு மகன் திருமணத்தை ஜெயலலிதா எவ்வளவு ஆடம்பரமாக நடத்தியதை பலரும் பார்த்தோம். சசிகலா நகைகளாலேயே தன்னை அலங்கரித்து கொண்டு வந்ததையும் பார்த்தோம். மெரினா பீச் முழுக்க சமாதிகளின் அணிவகுப்பு. செருப்பை வெளியிலேயே கழட்டி வைத்து விட்டு அண்ணாவையும் எம்ஜிஆரையும் பய பக்தியோடு பலரும் வணங்குவதை நான் பார்த்தேன். இன்னும் ஒருவருக்கும் அங்கு இடம் இப்போதே ரிசர்வ் செய்து வைத்திருப்பதாகவும் கேள்விப்பட்டேன். அடுத்த தலைமுறையில் இவர்களும் தெய்வங்களாக்கப் படலாம்.

சவுதி ஆட்சியாளர்களிடத்தில் ஒரு சில குறைகள் இல்லாமல் இல்லை. ஆனால் நம் நாட்டைப் போன்று இவ்வளவு கேவலமாக ஆட்சியாளர்களின் நடவடிக்கை எங்கும் இருந்ததில்லை.

அடுத்து எகிப்து, லிபியா, டுனீசியா வைப்போல் சவுதியிலும் ஏன் புரட்சி வெடிக்கவில்லை என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது. ஏற்கெனவே ஆட்சி செய்து வருபவர் எந்த குறையும் இல்லாமல் ஆட்சி செய்து வரும்போது என்ன காரணத்துக்காக மாற்றம் வர வேண்டும்? இங்கு மக்கள் அமைதியாக தனது வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். உயிருக்கு உத்தரவாதம் இருக்கிறது. வெளிநாட்டவர் அடியாட்களின் தொல்லை இல்லாமல் சுதந்திரமாக வியாபாரம் செய்ய முடிகிறது.

அடுத்து இங்கு ஜனநாயகம் இல்லையே என்ற கேள்வியையும் வைக்கிறார்கள். இத்தனை காலம் ஜனநாயக ஆட்சியினால் என்ன சாதனையை இந்தியர்களாகிய நாம் சாமான்ய மக்களுக்கு செய்து விட்டோம்? எந்த முறையில் ஆட்சி அமைந்தாலும் அது மக்களுக்கு நன்மை செய்யக் கூடிய ஆட்சியாக இருக்க வேண்டும். இதுதான் இங்கு நாம் கவனிக்க வேண்டியது.

அடுத்து இன்று இங்கிலாந்து இளவரசரின் திருமணத்தை நேரலையில் சிறிது நேரம் பார்த்தேன். என்ன ஆடம்பரம். எத்தணை கோடிகள் வீண். அதுவும் தற்போது இங்கிலாந்து ஜனநாயகத்து மாறி எத்தனையோ வருடங்களாகி விட்டது. இன்றும் இந்த குடும்பத்துக்கு அரசு பணம் கோடிக்கணக்கில் கொட்டப்படுகிறது. பொருளாதாரளத்திலும் சொல்லிக் கொள்ளும் படியாக தற்போதய அரசு இல்லை. நிதிப் பற்றாக் குறையினால் கல்லூரி மாணவர்களுக்கு கொடுத்து வந்த ஸ்காலர்ஷிப்பை தடாலடியாக நிறுத்தும் நிர்பந்தத்தில்தான் இன்றைய அரசு இருக்கிறது. படிப்பை விட இளவரசரின் திருமணம்தான் இவர்களுக்கு முக்கியமாகி விட்டது.

ஆட்சியில் இல்லாத இங்கிலாந்து அரச குடும்பத்துக்கு பணம் விரயமாக்கப்படுவதையும், அதே தற்போது ஆட்சியில் இருக்கும் மன்னர் குடும்பம் பஹதுடைய இறப்பை கைக் கொண்ட விதத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தேன்.


'உண்ணுங்கள்: பருகுங்கள்: வீண் விரயம் செய்யாதீர்கள்: விண் விரயம் செய்வோரை அவன் விரும்பமாட்டான்'
-குர்ஆன் 7:31

'இறைவன் உங்களை நிர்வாகிகளாக்கியுள்ள சொத்துக்களை அதன் உரிமையாளரான விபரம் அறியாதோரிடம் கொடுக்காதீர்கள்! அதில் அவர்களுக்கு உணவளியுங்கள்: உடையும் வழங்குங்கள்! அவர்களிடம் அழகான சொல்லைக் கூறுங்கள்'
-குர்ஆன் 4:5

டிஸ்கி: ரஜினிகாந்த் என்ற நடிகர் மூச்சுத் திணறலால் அவசரபிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக செய்தியில் பார்த்தேன். கைகளை பிளேடுகளால் கீறிக் கொள்வது, தீக்குளிப்பது, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது, தற்கொலையில் இறங்குவது போன்ற கேணத்தனமான செயல்களில் அவரின் ரசிக குஞ்சாமணிகள் ஈடுபட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் தமிழன் எதற்கெடுத்தாலும் உடன் உணர்ச்சிவசப்படக் கூடிய சுபாவம் உள்ளவன். அவர் நலம் பெற்று வர வாழ்த்துவோம்.

18 comments:

Unknown said...

அப்படியே முகலாய மன்னர்கள் இந்தியாவில் எப்படி வாழ்ந்தார்கள் என்று பாருங்கள். தாஜ்மஹால் எப்படி வந்தது?
அது ஆடம்பரம் இல்லையா?

suvanappiriyan said...

//ஆகவே இரு வசனங்களும் கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் சிறு சண்டையை பற்றியே பேசுகிறது.பெண் சிறு சண்டை செய்வாள் என்று ஆண் அஞ்சினால் ,அடிக்கலாம்
.ஆண் சிறு சண்டை செய்வான் என்று பெண் அஞ்சினால் ,சமாதானம் அல்லது
பிரிந்து செல்லுதல். ஏன் இந்த‌ பாகுபாடு?//-Sankar

//ஏன் பெண்களை மட்டும் வறுத்தெடுக்கிறார் உங்கள் கடவுள். ஆண்கள் அனைவரும் யோக்கியமானவர்கள்; பெண்கள் மட்டுமே மறைவானவற்றைக் காத்துக் கொள்ளாதவர்கள்; பெண்கள் மட்டுமே கணவனுக்கு துரோகம் இழைப்பார்கள் என்கிறீர்கள். ஆண்களின் துரோகங்கள் தான் சமுதாயத்தில் அதிகம் என்பது தெரியாதா உங்களுக்கு?//-Dharumy

'அவர்கள் உங்களுக்கு ஆடை: நீங்கள் அவர்களுக்கு ஆடை'
-குர்ஆன் 2:187

'சிலரை மற்றும் சிலரை விட இறைவன் மேன்மைபடுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள். ஆண்கள் அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்கள் அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு.'
-குர்ஆன் 4:32

'ஆண்களிலோ பெண்களிலோ நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.'
-குர்ஆன் 4:124

இங்கு ஆணும் பெண்ணும் நற்கருமங்கள் செய்தால் அதற்கேற்ற கூலி உண்டு என்று இறைவன் தெளிவுபட கூறுகிறான்.

தவறு செய்யும் பெண்களை அடிக்க சொல்லும் குர்ஆன் அதே அளவு கோலை ஆண்களை அடிக்க ஏன் சொல்லவில்லை என்ற கேள்வி வருகிறது.

உலகம் முழுவதும் நாம் எடுத்துக் கொண்டால் பெண்ணை விட ஆண் இயற்கையாகவே பலசாலியாக படைக்கப்பட்டுள்ளான். பெண்கள் மென்மையானவர்கள். அந்த மென்மை என்ற தன்மை பெண்மைக்கு இருப்பதால்தான் ஆம்பள பசங்க அவர்களை சுற்றி சுற்றி வருவதற்கு காரணம். சில ஆண்கள் மனைவிக்கு துரோகம் செய்கிறார்கள். இதனால் அந்த மனைவி அந்த கணவனை அடிக்க முடியுமா? அதற்குரிய சக்தியை அந்த பெண் இயற்கையாக பெற்றிருக்கிறாரா? இல்லை.

அன்பாக சொல்லலாம். அழுது சொல்லலாம். அடித்து சொல்ல ஆரம்பித்தால் அந்த மனைவி மேலும் கணவனிடம் அடி வாங்கத்தான் நேரும். ஏனெனில் கணவனை எதிர்க்கும் உடல் வலிமையை 90 சதவீத பெண்கள் இயற்கையாகவே பெற்றிருக்கவில்லை. பல குழந்தைகளை பெறுவதால் அந்த பெண் இருக்கும் வலிவையும் இழக்கிறாள். நான்கு குழந்தைக்கு தகப்பன் என்று சொல்லும் ஆண் அதே இளமையோடு இருப்பான். நான்கு குழந்தைக்கு தாய் என்று சொல்லும் பெண் திருமணத்துக்கு முன் இருந்த அதே இளமையோடும் வலிவோடும் இருப்பாளா? கண்டிப்பாக இருக்க முடியாது. வலிவிழந்த அந்த பெண்ணை கணவனை அடி என்று சட்டம் போட்டால் அது 'ஏட்டுச் சுரைக்காயாக' பயன் படுத்த முடியாத சட்டமாகத்தான் இருக்கும். முடிவாக எதற்கும் அந்த கணவன் மசியவில்லை என்றால் அந்த கணவனை பிரிந்து விட இஸ்லாம் பணிக்கிறது.

இதனால்தான் திருமணத்துக்கு முன்பு ஒரு லட்சம் இரண்டு லட்சம் என்று ஆண் பெண்ணுக்கு கட்டாயமாக மஹர் தர வேண்டும் என்று கட்டளையிடுகிறது. இந்த மஹரை கொடுக்க முடியாமல் 40 வயதிலும் கல்யாணமாகாத பல சவுதி இளைஞர்களை நாம் பார்க்கலாம். மேலும் இவ்வாறு தனது மனைவிக்கு துரோகம் இழைக்கும் ஆண்கள் கண்டிப்பாக இறைவனால் தண்டிக்கப்படுவார்கள். இங்கு மனைவிக்கு மேல் பலம் பொருந்தியவன் கணவன். கணவனுக்கு மேல் பலம் பொருந்தியவன் இறைவன். இந்த வித்தியாசங்களை புரிந்து கொண்டால் தெளிவான விளக்கம் கிடைக்கும்.

suvanappiriyan said...

//சுவனப்பிரியன்
இன்னொரு சந்தேகம்: நீங்களும் இந்திய முஸ்லீம்களும் சன்னியா, ஷியாவா?//

நான் எந்த பிரிவிலும் இல்லை. நான் தலைவராகவும் வழிகாட்டியாகவும் ஏற்றுக் கொண்டிருப்பது முகமது நபி அவர்களை. என் வாழ்க்கையை என்னால் முடிந்த வரை குர்ஆனின் படி அமைத்துக் கொள்ள முயற்ச்சிக்கும் ஒரு சாதாரண முஸ்லிம்.

//இப்பதிவில் உள்ள வரலாற்று உண்மைகளையும் கண்டு கொள்ள மாட்டேன் என்கிறீர்கள் ...//

குர்ஆனையும் நபி மொழியையும் சுட்டிக் காட்டி 'இப்படி இருக்கிறதே' என்று கேட்டால் விளக்கமளிக்கலாம். ஃபெரோஸ் ஷா ஏன் அப்படி நடந்தான், அக்பர் ஏன் இப்படி ஏன் நடந்தான், ஷாஜஹான் ஏன் தாஜ்மஹாலைக் கட்டி வீண் விரயம் செய்தான் என்ற கேள்விகளுக்கு அவரகள் குர்ஆனை விளங்க வேண்டிய முறையில் விளங்கவில்லை என்பதே பதிலாக இருக்கும்.

ஒரு கத்தி கொலைகாரனிடம் இருந்தால் அதை வைத்து கொலை செய்கிறான். அதே கத்தி ஒரு டாக்டரிடம் இருந்தால் ஒரு உயிரைக் காப்பாற்றுகிறார். இதே அளவு கோலை குர்ஆனுக்கும் வைத்துப் பாருங்கள். விடை எளிது.

//’கடவுளே’ அடிமைத்தனத்தை ஆதரித்தார்!!//

'தேவதாசி முறை, பொட்டு கட்டும் வழக்கம், தீண்டாமை, உடன்கட்டை ஏறுதல் நமது சமூகத்தில் புரையோடிப் போயிருந்தது. அதை நீக்க நமது தலைவர்கள் பாடுபட்டனர். இன்றும் இந்த கொடுமைகள் ஒழியவில்லை' என்று நமது வரலாற்று நூல்கள் கோடிட்டுக் காட்டினால் உடனே 'பார்த்தீர்களா! நமது அரசே அனைத்து தவறுகளுக்கும் அங்கீகாரம் அளித்து விடடது' என்று சொல்வோமா? அதே அளவு கோல்தான் இங்கும்.

4:92. தவறாக அன்றி, ஒரு முஃமின் பிறிதொரு முஃமினை கொலை செய்வது ஆகுமானதல்ல; உங்களில் எவரேனும் ஒரு முஃமினை தவறாக கொலை செய்துவிட்டால், அதற்குப் பரிகாரமாக முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; அவனுடைய குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் - அவனுடைய குடும்பத்தார் (நஷ்ட ஈட்டுத் தொகையை மன்னித்து) அதை தர்மமாக விட்டாலொழிய; கொல்லப்பட்ட அவன் உங்கள் பகை இனத்தைச் சார்ந்தவனாக (ஆனால்) முஃமினாக இருந்தால், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்தால் போதும் (நஷ்ட ஈடில்லை; இறந்த) அவன் உங்களுடன் சமாதான (உடன்படிக்கை) செய்து கொண்ட வகுப்பாரைச் சேர்ந்தவனாக இருந்தால் அவன் சொந்தக்காரருக்கு நஷ்ட ஈடு கொடுப்பதுடன், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்யவும் வேண்டும்; இவ்வாறு (பரிகாரம்) செய்வதற்கு சக்தியில்லாதவனாக இருந்தால், அல்லாஹ்விடம் மன்னிப்புப் பெறுவதற்காகத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு வைக்க வேண்டும் - அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவும், பூரண ஞானமுடையவனாகவும் இருக்கிறான்.

ஒவ்வொரு தவறுக்கும் பரிகாரமாக ஒரு அடிமையை விடுதலை செய்ய வைத்ததன் மூலமாக குறுகிய காலத்திலேயே அரபு நாடு முழுக்க அடிமைகளே இல்லாதொழிக்கப்பட்டனர்.

suvanappiriyan said...

ஜெய்சங்கர் ஜகன்நாதன்!

//அப்படியே முகலாய மன்னர்கள் இந்தியாவில் எப்படி வாழ்ந்தார்கள் என்று பாருங்கள். தாஜ்மஹால் எப்படி வந்தது?
அது ஆடம்பரம் இல்லையா?//

சரியாக சொன்னீர்கள். முகலாய மன்னர்கள் அதிகமானோர் மது, மாது இரண்டிலும் தங்களின் வாழ்க்கையை தொலைத்தவர்கள். தாஜ்மஹாலைக் கட்டியது மிகப் பெரிய தவறு. அந்த பணத்திலும் உழைப்பிலும் கங்கையையும் காவிரியையும் இணைத்திருக்கலாம். பல தொழில்களை நிறுவியிருக்கலாம்.

'உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும், அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேயடியாக வீண் விரயம் செய்து விடாதீர்'
-குர்ஆன் 17:26

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

சரியானது - இஸ்லாத்தில் மரணத்துக்குப் பின்னான கல்லறைகளில் ஆடம்பரமும், பிரிவுகளையும் உண்டாக்கமல் செய்தது மிகவும் நல்லது தானுங்க.. ஆனால் மத்தியக் கிழக்கில் இருக்கும் மன்னர்வாழ் எல்லாம் எளிமையான வாழ்க்கையில் வாழ்வதாக சொல்ல வேண்டாமுங்க ... அவங்களும் பல்வேறு கோடி சொத்துக்களை அனுபவித்தும் சேர்த்தும் வைத்து ராஜபோகமாய் வாழ்கின்றார்கள். இஸ்லாமிய மன்னராட்சி தவழும் புருனே சுல்தானும் உலகின் மிகப் பெரியக் கோடிஸ்வரன். அவர்களில் கத்தார் நாட்டினைத் தவிரவும் வேறு யாரும் charity கொடைக்கு பணம் அளவிடுதலே இல்லைங்க .... கிருத்தவ நாடுகளில் இருக்கும் மன்னராட்சியில் இங்கிலாந்து காரங்க தானுங்க. இப்படி பந்தாப் பண்றாங்க. ஏனைய மன்னர்கள் அனைவரும் இப்படி உலகக் கோடிஸ்வரனாய் எல்லாம் யாரும் வாழவில்லை ...................
நம் நாட்டின் கதையே வேறுங்க.. முடி சூடா மன்னர்கள் - மத்தியக் கிழக்கு சுல்தான்களைப் போலத் தானுங்க வாழ்கின்றார்கள். எல்லாம் விதியுங்க

suvanappiriyan said...

//ஆனால் மத்தியக் கிழக்கில் இருக்கும் மன்னர்வாழ் எல்லாம் எளிமையான வாழ்க்கையில் வாழ்வதாக சொல்ல வேண்டாமுங்க ... அவங்களும் பல்வேறு கோடி சொத்துக்களை அனுபவித்தும் சேர்த்தும் வைத்து ராஜபோகமாய் வாழ்கின்றார்கள்.//

இதை நான் மறுக்கவில்லை. அரபு நாடுகளில் அந்நாட்டு மக்களே கோடிகளில் புரளும்போது அரசர்கள் புரள்வது ஒன்றும் விந்தையல்ல. இதுவும் கண்டிக்கத் தக்கதே! நம்மைப் போன்ற ஏழைகள் அதிகம் உள்ள நாட்டில் இது போன்ற ஆடம்பரங்கள் தேவையா என்பதே என் கேள்வி.

//நம் நாட்டின் கதையே வேறுங்க.. முடி சூடா மன்னர்கள் - மத்தியக் கிழக்கு சுல்தான்களைப் போலத் தானுங்க வாழ்கின்றார்கள். எல்லாம் விதியுங்க//

என்ன ரொம்ப விரக்தியாக பேசுகிறீர்கள். மாற்றத்தைக் கொண்டு வருவோம்.

suvanappiriyan said...

//வரலாறு மிகவும் முக்கியம், சுவனப்பிரியன்!!//

வரலாறு என்று எதை சொல்கிறீர்கள்? இஸ்லாத்துக்கு மாற்றமாக நடந்த அக்பர் இந்திய வரலாற்று ஆசிரியர்கள் பார்வையில் நல்லவர். இஸ்லாமிய சட்டங்களின் படி ஓரளவு ஆட்சி நடத்திய ஒளரங்கஜேப் எவ்வளவுதான் நல்லவராக இருந்தாலும் வரலாற்று ஆசிரியர்கள் பார்வையில் கொடுங்கோலர். ஒளரங்கஜேப் சிறந்த ஆட்சியாளர் என்பதற்கு நான் வரலாற்று ஆதாரங்களை கொடுத்தாலும் நீங்கள் ஒத்துக் கொள்ளப் போவதில்லை. ஏனெனில் உங்கள் நிலைப்பாடு அப்படி. எனவே ஒரு ஆட்சியாளர் செய்யும் நிறை குறைகளை மார்க்கத்தோடு சம்பந்தப்படுத்தக் கூடாது. குர்ஆன் வசனங்களில் உள்ள உங்களின் ஆட்சேபனைகள்தான் இங்கு விவாதிக்க முடியும்.

//இது ஏதோ தவறு போல் ஒதுங்கிக் கொள்கிறீர்கள்! இதில் எப்பிரிவில் நீங்கள் வருகிறீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆவல்.//

அரசு கணக்கெடுப்பின் படி நான் சன்னி பிரிவில் வருகிறேன். குர்ஆனிலோ ஹதீஸிலோ ஷியா, சன்னி என்ற பிரிவுகளுக்கு இடமில்லை. என் தாய் வழி சொந்தங்கள் எல்லாம் வெள்ளை நிறத்தில் இருப்பர். முன்னால் பிராமணர்களாகவோ சௌராஷ்டிரர்களாகவோ இருக்கலாம். என் தந்தை வழி சொந்தம் அனைத்தும் மாநிறம். அதாவது இந்திய நிறம். முன்னால் மூப்பனார்களாகவோ, செட்டியார்களாகவோ இருந்திருக்கலாம். ஏனெனில் எங்கள் ஊரைச் சுற்றி அவர்கள்தான் அதிகம்.

ஒரு வேடிக்கையான செய்தி. எங்கள் ஊரின் தெருக்களின் பெயர்கள் முறையே பாப்பான் தெரு, செக்கடித் தெரு, ஞாயக்கர் தெரு, வடுகத் தெரு, கொல்லன் தெரு. ஆனால் வசிப்பது அனைவரும் இஸ்லாமியர்கள். அங்கிருந்த அனைத்து சாதியினரும் இஸ்லாம் என்ற ஒரு கொடியின் கீழ் வந்து விட்டனர். யாரிடமாவது சென்று உங்களின் முந்தய சாதி என்ன என்று கேட்டுப் பாருங்கள். 'தெரியாது' என்ற பதில்தான் வரும். 100 பெரியார் வந்தும் இன்றும் ஒழிக்க முடியாத சாதி, அவன் இஸ்லாத்தை ஏற்றவுடன் பறந்து விடுகிறதே. நமது நாடு இஸ்லாத்தினால் பெற்ற பயன்களில் தலையாயது இந்த மாற்றம்.

//(இன்னும் இருக்கிறது; உங்கள் பாஸ்போர்ட் உங்களிடம் இப்போது இருக்காதே; அரசிடம்தானே இருக்கும்; இதுவும் ஒரு அடிமைத்தனம்தானே?)//

தவறு. என் பாஸ்போர்ட் முதற்கொண்டு என் கம்பெனியின் அனைவரின் பாஸ்போர்ட்டும் என் கஸ்டடியில்தான் இருக்கிறது. சில நபர்களை என் கம்பெனியில் கடைகளின் பொறுப்புதாரியாக நியமிக்கிறார்கள். விற்ற பொருள்களின் பணத்தை பேங்கில் போடாமல் இந்தியாவுக்கு பல லட்சங்களை அனுப்பிய சில இந்திய குடிமகன்களும் என் கம்பெனியில் இருந்ததுண்டு. இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்கத்தான் பாஸ்போர்ட்களை வாங்கி வைப்பது. நிர்வாக வசதிக்காக செய்வது எப்படி அடிமைத்தனமாக முடியும்?

//அடிமைத்தனத்தைப் பட்டியலில் அல்லா சேர்த்துள்ளது அடுத்த ஆச்சரியமே. கடவுள் அன்றே இதெல்லாம் தப்புன்னு சொல்லியிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு பட்டியலிடுவது ஒரு மனிதன் மட்டுமே செய்வது; செய்யக் கூடியது. நிச்சயமாக ஒரு கடவுள் இப்படி பட்டியலிட மாட்டார்; பட்டியலிடக் கூடாது.//

மதுவை ஒரே உத்தரவில் ஒழித்துக் கட்டியது இஸ்லாம். அது போல் அடிமைமுறையை ஒரே உத்தரவில் ஒழிக்க முடியாது. ஏனெனில் அன்றைய காலத்தில் ஆடு, மாடுகளைப்போல் மனிதர்களும் அடிமைகளாக விற்க்கப்பட்டார்கள். திடீரென்று சட்டம் இயற்றினால் வாங்கிய அடிமை வியாபாரிகளுக்கு நஷ்ட ஈட்டை யார் கொடுப்பது? எனவேதான் குற்ற பரிகாரமாக அடிமை விடுதலை கொண்டு வரப்பட்டு சில ஆண்டுகளிலேயே அடிமை முறை முற்றாக ஒழிக்கப்பட்டது. இதனால் யாருக்கும் நஷ்டம் இல்லை.

suvanappiriyan said...

//1. ஏன் கடவுள் முஃமீனுக்கும், காபிருக்கும் தனித்தனி வரி விதித்தார் என்பதுவும்,//

ஜகாத் வரி முஸ்லிம்களுக்கு, ஜிஸியா வரி முஸ்லிம் அல்லாதவர்களுக்கு. இது ஏற்கெனவே விவாதித்த விஷயம். திரும்பவும் திருப்பி...திருப்பி...

//2. //5 : 51 - நம்பிக்கையாளர்களே! யூதர்களையும், கிறித்துவர்களையும் நண்பராகக் கொள்ளாதீர்கள். (அட! ஒரு கடவுள் தன்னை நம்புகிறவர்களுக்குக் கொடுக்கிற அறிவுரை இப்படியும் கூட இருக்குமா? அடக் கடவுளே!! )//

முகமது நபி பிரசாரத்தை துவங்கியிருந்த காலத்தில் பல குடும்பங்கள் இஸ்லாத்தை தழுவின. இஸ்லாத்தை தழுவிய பல குடும்பத்தின் சில உறுப்பினர்கள் கிறித்தவர்களாகவும் யூதர்களாகவும் தொடர்ந்தனர். சொந்தங்கள் என்ற வகையில் அவர்களோடு உறவாடி வந்தனர். அந்த நேரம் போர் உச்சகட்டமாக நடந்து வந்தது. இவர்கள் உறவாடுவதால் சில போர் உத்திகள் எதிரி தரப்புக்கும் தெரிய ஆரம்பித்தது. இதை தடுக்கவே கிறித்தவர்களிடமும் யூதர்களிடமும் நட்பு பாராட்ட வேண்டாம் என்ற வசனம் இறங்கியது.

'மார்க்க விஷயங்களில் உங்களிடம் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் இறைவன் உங்களுக்கு தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை இறைவன் விரும்புகிறான்.'
-குர்ஆன் 60:9

அதே நேரம் கிறித்தவர்களிலும், யூதர்களிலும் முஸ்லிம்களிடம் நட்போடு பழகியவர்களை பழைய விரோதத்தை வைத்து நல்லவர்களை இம்சிக்கக் கூடாது என்பது அடுத்த கட்டளை. முகமது நபி ஒரு யூதரிடம் கடன் வாங்கி இருந்தார்கள். மாற்று மதத்தவரோடு நல்லிணக்கத்தோடு செல்லத்தான் இறை கட்டளை பிறப்பிக்கிறது. எனவே நல்லவர்களோடு நட்பு பாராட்ட வேண்டும். தீயவர்களோடு நெருக்கமாவதை தவிர்த்து கொள்ள வேண்டும். இதுதான் இங்கு சொல்லப்பட்டுள்ளது. இது போல் இன்னும் நிறைய வசனங்கள் உண்டு.

//3. ‘ஏன் ’இஸ்லாம் கத்தியால் பரப்பப்பட்டது’ என்பது அடிக்கடி சொல்லப்படும் வார்த்தையாக உள்ளது என்பதைக் காண்பிக்கவும்,//

இதற்கும் ஏற்கெனவே பதில் சொல்லியாகி விட்டது. திரும்பவும் திருப்பி...திருப்பி...

//4. கடவுள் பெயரால், மதத்தின் பெயரால் ஏனிந்த கொலைகள்; கொள்ளைகள்; கட்டாய மத மாற்றங்கள் என்பதுவும் என் சில கேள்விகள்.//

இதற்க்கெல்லாம் மனிதர்கள்தான் காரணம். இறை வசனம் தெளிவாக இருக்க அதற்கு மாற்றமாக தன் மனோ இச்சைப்படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டது மனிதனின் தவறல்லவா!

//இன்று நடந்த ஆங்கில அரசுக் கல்யாணத்தில் மணப்பெண் to obey and love my husband என்று வழக்கமாக எடுக்கும் உறுதியை மாற்றி to love and cherish my husband சொன்னதைப் பார்த்தது மிக நன்றாக இருந்தது. அதுதானுங்க திருமணம்... இரண்டும் ஒன்று... அதில் ‘சிறுசு’- ‘பெருசு’, strong – weak, அடிக்கிறது – வாங்கிக்கிறதுன்னு வேறுபாடு இல்லைங்க! இதையல்லவா ‘ஒரு சாமி’ சொல்லிக் கொடுக்கணும்! அத உட்டுட்டு ....//

'அவர்கள் உங்களுக்கு ஆடை: நீங்கள் அவர்களுக்கு ஆடை'
-குர்ஆன் 2:187

'அவர்கள் வெளிப்படையான வெட்கக்கேடானதை செய்தால் தவிர அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள். நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் இறைவன் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்.'
-குர்ஆன் 4:19

obey, love, cherish

நீங்கள் குறிப்பிடும் வார்த்தைகளுக்கும் மேலாக இறைவன் கணவன் மனைவி உறவைப் பற்றி இரண்டு வசனங்களிலும் கூறுகிறான். மனிதனின் கருத்துக்கும் இறைவனின் கருத்துக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.

suvanappiriyan said...

தருமி!

//* இஸ்லாமியர் வந்தால் எழுந்து நின்று மரியாதை தரவேண்டும்.
* குதிரையில் சேணம் இல்லாமல் ஓட்ட வேண்டும். (செருப்பு போடாதே என்று சில சாதியினரை இங்கே இன்னும் சில “சாதி இந்துக்கள்” சொல்கிறார்களே, அதுபோல்.)
* எந்த வித ஆயுதங்களையும் வைத்திருக்கக் கூடாது.
* தலையின் முன் முடியை சிறைத்திருக்க வேண்டும்.
* இஸ்லாமியரின் வீடுகளை விட பெரிதாகக் கட்டக் கூடாது .//

முகமது நபியின் காலில் விழ அனுமதி கேட்டபோது 'எந்த மனிதரும் எவரின் காலிலும் விழக் கூடாது' என்ற பொதுவான விதியை அன்றே அமைத்து சென்று விட்டார் முகமது நபி. ஆதாரம் அபூதாவூத் 1828.

முகமது நபிக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்ஜியத்தின் ஐந்தாவது அதிபராகத் திகழ்ந்தவர் முஆவியா. அவர் வெளியே வந்தபோது அவரைக் கண்ட மற்றவர்கள் மரியாதை நிமித்தம் எழுந்து நின்றனர். உடனே ஜனாதிபதி அவர்கள் 'அமருங்கள்' என்றார். 'தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார்' என்று முகமது நபி கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்றும் முஆவியா கூறினார்கள்.
ஆதாரம் திர்மதி: 2769, அபூதாவூத் 4552


"எவர் (முஸ்லிமல்லாத) உடன்படிக்கை செய்து கொண்டிருக்கின்ற ஒருவருக்கு அநீதியிழைக்கின்றாரோ அல்லது அவரின் உரிமையை குறைக்கின்றாரோ அலலது அவரது சக்திக்கு மேல் அவருக்கு பொறுப்புக்களை சுமத்துகின்றாரோ அல்லது அவரின் மனவிருப்பின்றி அவரிடம் இருந்து ஏதேனுமொன்றை பெறுகின்றாரோ அவருக்கு எதிராக மறுமையில் நான் வாதிடுபவனாக இருப்பேன்". (ஆதாரம்: அபூதாவூத்)

• "எவர் உடன்படிக்கை செய்து வாழும் ஒரு முஸ்லிமல்லாத ஒருவரைக் கொலை செய்கிறாரோ அவர் சுவனத்தின் வாடையைக் கூட நுகரமாட்டார்". (ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி)

• "எவர் முஸ்லிமல்லாத சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை இம்சிக்கின்றாரோ நான் அவரது எதிரியாவேன். நான் எவரது எதிரியாக இருக்கின்றேனோ மறுமையில் அவருக்கெதிராக வாதிடுபவனாக இருப்பேன்". (ஆதாரம்: தாரீகு பக்தாத் – அல்கதீபுல் பக்தாதி)

நீங்கள் கொடுத்த செய்திகளுக்கும் நான் கொடுத்திருக்கும் இஸ்லாத்தின் உண்மையான நடைமுறைக்கும் ஏதும் சம்பந்தம் உள்ளதா? நிச்சயமாக இல்லை.

நீங்கள் கொடுத்த செய்தி உண்மையாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றி தெரியவில்லை என்று அர்த்தம். அல்லது இஸ்லாத்தை அழிக்க இஸ்லாமிய எதிரிகள் இஸ்லாத்தின் பெயரால் கட்டி விட்ட கதைகள். இந்த இரண்டில் ஒன்றுதான் இருக்க முடியும்.

மேலே நீங்கள் குறிப்பிடும் குர்ஆன் வசனங்கள் பல போர்கலங்களில் சொல்லப்பட்டது. முழு வாக்கியத்தையும் படித்தால் விளங்கும். இதுவும் முன்பே விளக்கப்பட்ட செய்தி.

அடுத்து உங்களிடம் ஒரு கேள்வி இஸ்லாத்தை தவிர்த்து நீங்கள் வைக்கும் சிறந்த வாழ்க்கை முறை எது என்பதையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். கிறித்தவத்திலும் சாதி புகுந்து விட்டது. இந்து மதத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். நாத்திகமும் திக வைப்பார்த்து, திமுக வைப் பார்த்து தெரிந்து கொண்டு விட்டோம்.
எனவே இஸ்லாத்தை களங்கப் படுத்த பகீரத முயற்சி எடுத்து பல பதிவுகளை எழுதும் நீங்கள் அதற்கான மாற்று ஏற்பாடு என்ன? என்பதையும் சொல்லலாமே!

இஸ்லாத்தின் எதிர்ப்பான உங்கள் முயற்சியில் ஒரு சதவீதம் கூட வெற்றிபெற போவதில்லை என்பதும் உங்களுக்கே தெரியும். :-)

Anonymous said...

//4. கடவுள் பெயரால், மதத்தின் பெயரால் ஏனிந்த கொலைகள்; கொள்ளைகள்; கட்டாய மத மாற்றங்கள் என்பதுவும் என் சில கேள்விகள்.//

இதற்க்கெல்லாம் மனிதர்கள்தான் காரணம். இறை வசனம் தெளிவாக இருக்க அதற்கு மாற்றமாக தன் மனோ இச்சைப்படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டது மனிதனின் தவறல்லவா!//

திரு சுவனப்பிரியன்,
மூசாவிடம் கடவுள் கொடுத்த தோராவின் வழிகாட்டுதல் படி மக்கள் நடக்கவில்லை அதனால் கடவுள் ஈசா மூலம் இன்ஜீலை இறக்கினார். ஆனால் பரிதாபம், இன்ஜீலையும் மக்கள் ஒழுங்காக பின்பற்றவில்லை. மனித கரம் விளையாடிவிட்டது. மனித கரம் விளையாடும் வரை வேடிக்கை பார்த்து விட்டு பின்னர் பதறியபடி வந்து முகமது மூலம் குரானை கொடுத்தார். மேலும் பரிதாபம் இறை வசனம் தெளிவாக இருந்த போதும் தங்கள் மனோ இச்சைபடி வாழ்க்கையை அமைத்து மனிதன் குரானையும் மதிக்கவில்லை. அதனால் தனது முடிவை மாற்றிக்கொண்டு வேறு எதாவது இறை தூதரை கடவுள் இன்னொரு இறை வேதத்தை கொடுப்பதற்காக அனுப்ப வாய்ப்பு இருக்கிறதா?

M. Jaya Prakash
Kanyakumari

George said...

இறப்பதற்கு முன் மன்னர் பஹது ஓலை குடிசையில் வாழ்ந்தாரா அல்லது ஓட்டு வீட்டில் வாழ்ந்தாரா? மன்னர் பஹதும் திருமணம் செய்திருப்பாரே? அவர் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று மிக எளிமையாக தன்னுடைய நான்கு திருமணங்களையும் முடித்துக் கொண்டாரா? இறப்பு என்பது கொண்டாடப்படும் நிகழ்வு அல்ல, அதை எளிமையாக செய்ததில் என்ன வியப்பு என்பது புரியவில்லை. கொண்டாடப்படும் நிகழ்வை சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைப்பது மனித இயல்பு. நடந்தது அரச குடும்ப திருமணம். அவர்கள் பிரமாண்டமாக திருமணம் செய்ததில் என்ன தவறு. இளவரசர் ஒன்றும் ஒரு மனைவி இருக்கும்போது அடுத்து ஒரு பெண்ணை திருமணம் செய்யவில்லையே.
திரு சுவனம் அவர்களே எளிமை எளிமை என்று சொல்கிறீர்கள் கொஞ்சம் இஸ்லாமிய மசூதிகளை பாருங்கள் பல கோடி ரூபாய் பணத்தில் பளபளப்பாக கட்டப்பட்டு கண்ணை பறிக்கும் விதத்தில் காட்சி அளித்து கொண்டு இருக்கின்றன. எல்லா விசயத்திலும் எளிமையாக இருக்க சொன்ன இறைவன், தனக்கான ஆலயத்தை எளிமையாக அமைப்பது பற்றி எதுவும் கூறவில்லையா

//இதை நான் மறுக்கவில்லை. அரபு நாடுகளில் அந்நாட்டு மக்களே கோடிகளில் புரளும்போது அரசர்கள் புரள்வது ஒன்றும் விந்தையல்ல. இதுவும் கண்டிக்கத் தக்கதே! //
முதலில் உங்களுக்குள் (இஸ்லாமியர்களுக்குள்) ஒரு ஒற்றுமைக்கு வாருங்கள் சுவனப்பிரியன் அவர்களே, பின்னர் ஊருக்கு உபதேசம் செய்யலாம்.

suvanappiriyan said...

ஜெய பிரகாஷ்!

//மேலும் பரிதாபம் இறை வசனம் தெளிவாக இருந்த போதும் தங்கள் மனோ இச்சைபடி வாழ்க்கையை அமைத்து மனிதன் குரானையும் மதிக்கவில்லை. அதனால் தனது முடிவை மாற்றிக்கொண்டு வேறு எதாவது இறை தூதரை கடவுள் இன்னொரு இறை வேதத்தை கொடுப்பதற்காக அனுப்ப வாய்ப்பு இருக்கிறதா?//

மற்ற வேதங்கள் மாற்றப்பட்டது போல் குர்ஆன் மனிதர்களால் மாற்றப்படவில்லை. குர்ஆனை மதித்து அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கெண்டு சிறப்புடன் அதிகமான மக்கள் இன்றும் நம் தமிழகத்திலும் வாழ்ந்து வருகிறார்கள். இறை கட்டளையை மீறக் கூடியவர்கள் எல்லா சமூகத்திலும் எல்லா கால கட்டத்திலும் இருந்தே வந்திருக்கிறார்கள். இதற்காக இனி ஒரு தூதர் வரப் போவதில்லை. ஏனெனில் முகமது நபி உலக மககள் அனைவருக்குமான தூதர் என்று குர்ஆன் கூறுகிறது.

'மனிதர்களே! முஹம்மத் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு உண்மையைக் கொண்டு வந்துள்ளார். எனவே நம்பிக்கை கொள்ளுங்கள்.'
-குர்ஆன் 4:170

'இறைவனின் தூதராகவும், நபிமார்களில் முத்திரையாகவும் இருக்கிறார்.'
-குர்ஆன் 33:40

எனவே புதிதாக இறைத்தூதர்கள் வருகைக்கு முத்திரை வைத்து விட்டான் இறைவன்.

மஸ்தூக்கா said...

இங்கிலாந்து இளவரசரின் திருமணத்தை தொலைக்காட்சியில் கண்டபோதே இது பற்றி சுவனப்பிரியன் தமது பதிவில் எழுதுவார் என நினைத்தேன். சுப்ஹானல்லாஹ் இன்று தங்கள் பதிவைத்திறந்த போது எமது எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. தமிழ் முஸ்லிம் வலைப்பதிவர் உலகம் நிறைய எதிர்பார்க்கிறது

suvanappiriyan said...

//அது நல்ல ஏற்பாடுன்னா வந்திருவீங்களோ?//

கண்டிப்பாக! நான் இப்போது பின் பற்றும் கொள்கையை விட எந்த வகையில் சிறந்தது என்பதை ஆதாரத்தோடு விளக்கி விட்டால் போதும்.

//‘ஒரு கடவுள்’ சொன்னது எக்காலத்திற்கும், எந்த வகையிலும், பொருத்தமானதாகவும், சமாதானத்தை நிறுவுவதற்காகவும் இருக்க வேண்டும்.// -- என்று சொல்லியிருந்தேன். இந்த statement-யை இதுவரை பத்து முறைகளுக்கும் மேலும் சொல்லியிருக்கிறேன். பயனேது!//

குர்ஆன் என்பது பயபக்தியோடு படித்து கண்களில் ஒத்திக் கொள்வதற்காக வழங்கப்பட்டது அல்ல. வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வேண்டும். ஒருவன் வாழ்க்கையில் போர், மனைவி, ஆட்சி, அதிகாரம் அனைத்தும் குறிக்கிடும். அனைத்திற்கும் தீர்வை சொல்லக் கூடியதே வேதப்புத்தகம். போர்க்கலத்தில் சொல்லப்பட்டதை போர்கலத்தில் வைத்துதான் பார்க்க வேண்டும். குடும்ப சூழலில் இறங்கிய வசனத்தை அதே சூழலில் வைத்துதான் பார்க்க வேண்டும். இன்று போர் நடந்தால் அந்த வசனங்கள் இன்றும் பொருந்தும்.

அடுத்து எங்கோ உள்ள அரபு நாட்டில் இறங்கிய வசனம் உசிலம்பட்டியில் உள்ள சாமான்யனுக்கும் பொருந்துகிறதா இல்லையா?

//இஸ்லாமியரல்லாதாரிடம் என் பதிவுகள் என்ன செய்யும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?//

உங்கள் பதிவை படித்து விட்டு அந்த நண்பர் பார்க்க ஆரம்பிப்பார். அரசர்கள் செய்த தவறுகளுக்கும் குர்ஆனின் வசனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லாததைப் பார்த்து அவருக்கு குர்ஆனின் மேல் மதிப்பு உயரும்.

//பல மதங்களைப் பற்றிச் சொல்லியுள்ளீர்கள். எந்த மதக் கடவுளாவது உங்கள் அல்லா போல் அவனை வெட்டு; இவனை விலக்கி வை, நட்பு பாராட்டாதே; பெண்ணை, அடிமைகளை அடக்கி வை ... இப்படியெல்லாம் சொல்லியுள்ளதா என்று மட்டும் கூறுங்கள்.//

1.இராமன் என்ற கடவுள் தனது மனைவியை மீட்க குரங்கு கடவுள் ஹனுமனிடம் உதவி கோருகிறான். அதற்கு பரிகாரமாக தனது சகோதரன் வாலியை கொல்ல வேண்டும் என்ற நிபந்தனை விதிக்க அதை ஏற்ற கடவுள் வாலியை மறைந்திருந்து கோழைத்தனமாக கொல்கிறான்.

2.சூர்ப்பநகை, அய்யம்முகி போன்ற பெண்களின் அவயங்களை வெட்டியதும் இதே கடவுள் ராமன்தான்.

3. ராமன் என்ற கடவுள் சம்புகா என்பவனை கொலை செய்தான். காரணம் அவன் தவம் செய்தான். அவன் தவம் செய்வதுஅவனுக்குத் தடை செய்யப்பட்டது. அதற்கு காரணம் அவன் சூத்திரன்.
-உத்தர காண்டம், அத்தியாயம் 76

சூழ்ச்சி, வஞ்சகம், காமம், கொலை போன்றவற்றை கண்ணன், பாரதப்போர், பிள்ளையார் உருவான விதம் என்று வரிசையாக சொல்லிக் கொண்டே போகலாம்.
----------------------------------------------------------------------------
உன் தேவனாகிய கர்த்தர் அதை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, அதிலுள்ள புருஷர்கள் எல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டி…. (உபாகமம் – 20:13)
ஒரு நாட்டின் மீது அத்து மீறி படையெடுத்துச் சென்றால் அங்கு சிறைபிடிக்கப்பட்ட எல்லா ஆண்களையும் வெட்டி சாய்க்க வேண்டும். இதுவே இறைகட்டளை.

பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஒப்புக்கொடுத்த உன் சத்துருக்களின் கொள்ளைப்பொருளை அநுபவிப்பாயாக (உபாகமம் – 20:14)
இணைச்சட்டம் (உபாகமம்) 20 ஆம் அத்தியாயம் 16 ஆம் வசனம் கூறுகிறது.

”ஆனால் இந்த மக்களின் நகர்களை உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமைச் சொத்தாகக் கொடுத்துள்ளதால், அதில் உயிர் வாழும் எதையும் கொல்லாமல் விடாதே”
”ஆகவே சென்று அமலேக்கியரைத் தாக்கி, அவர்கள் உடமைகள் அனைத்தையும் அழித்தொழியும். அவர்கள் மீது இரக்கம் காட்டாமல் ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும், பாலகர்களையும், மாடுகள், ஆடுகள், ஒட்டகங்கள், கழுதைகள் அனைத்தையும் கொன்றுவிடும்” சவுல் வீரர்களைத் திரட்டி அவர்களைத் தொலாயிமில் கணக்கெடுத்தார். இரண்டு இலட்சம் காலாள் படையினரும், பத்தாயிரம் யூதாவினரும் இருந்தனர்” (1 சாமுவேல் 15: 3,4)

"நான் அரசனாக இருப்பதை விரும்பாத என் பகைவர்களை இங்கு கொண்டு வந்து என் முன் படுகொலை செய்யுங்கள்'' என்று சொன்னார்.
லூக்கா 19:27

தருமி சார்! இதைச் சொல்வது சாந்த சொரூபியான ஏசுநாதர்தான். இது போதுமா? தேவை என்றால் 'வீட்டுக்கு குஷ்டம்' போன்ற சனாதன தர்மங்களையும் பைபிளிலிருந்து எடுத்து தரவா? எழுதவே கூசப்படும் பல ஆபாச கதைகளை பைபிளிலிருந்து தரட்டுமா?

suvanappiriyan said...

ஜார்ஜ்!

//எல்லா விசயத்திலும் எளிமையாக இருக்க சொன்ன இறைவன், தனக்கான ஆலயத்தை எளிமையாக அமைப்பது பற்றி எதுவும் கூறவில்லையா//

தொழுவதற்கு இடம் தூய்மையாக இருக்க வேண்டும். மழை காற்றுகளில் இருந்து அந்த இடம் பாதுகாக்கப்பட சிறு கொட்டகை வேண்டும். இது அல்லாமல் பள்ளிவாசல்களில் கொண்டு கோடிகளை கொட்டுவது தவறுதான். அந்த பணத்தை ஏழைகளின் வறுமையை ஓட்ட பயன்படுத்தலாம்.

suvanappiriyan said...

//சுப்ஹானல்லாஹ் இன்று தங்கள் பதிவைத்திறந்த போது எமது எதிர்பார்ப்பு வீண்போகவில்லை.//

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி நண்பர் மஸ்தூக்கா!

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

சில இஸ்லாமியர்களின் செயல்களை இஸ்லாமாக பார்க்கும் அதிக கருத்துக்களை காண முடிகிறது

உங்களின் விளக்கங்களில் அதை தெளிவு
படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்
நன்றி சகோ

suvanappiriyan said...

அலைக்கும் சலாம் சகோ. ஹைதர்அலி!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!