Followers

Saturday, May 12, 2012

உலக மார்க்கங்களிடையே சமூக நல்லிணக்கம் சாத்தியமா?

உலக மார்க்கங்களிடையே சமூக நல்லிணக்கம் சாத்தியமா?


சவுதி அரேபியாவின் வெளி விவகாரத்துறை சவுதி-இந்திய இளைஞர்களின் கூட்டமைப்பின் (Saudi-Indian Youth Forum) நிறைவு நாளை வியாழக்கிழமை ரியாத்தில் இனிதே நிறைவு செய்தது. வெளி விவகாரத் துறையை கவனித்து வரும் நிஜார் மதனி, கலாசார பிரிவை நிர்வகித்து வரும் யூசுப் அல் சதோன், சவுதி அரேபியாவுக்கான இந்திய தூதர் ஹமீத் அலி போன்ற முக்கியஸ்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு கௌரவித்தனர். இதற்கு முன்னால் 26 பேர் அடங்கிய சவுதி அரேபிய இளைஞர் குழுமம் ஒன்று சென்ற மார்ச் மாதம் ஹைதராபாத், டெல்லி, பெங்களூர் போன்ற முக்கிய கணிணி நகரங்களுக்கு விஜயம் அளித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக இந்த நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது போன்ற நிகழ்வுகள் பல தரப்பட்ட மார்க்கங்களை பின்பற்றும் இளைஞர்கள் கலந்துரையாடி தங்களுக்கிடையே உள்ள கசப்புகளை நீக்க துணை புரிகிறது.

இந்தியாவுக்கான சவுதி தூதர் இது பற்றி கூறும் போது 'மன்னர் அப்துல்லாவின் ஏற்பாட்டின் படி இந்த இரண்டு நாடுகளின் வேறுபட்ட கலாசார இளைஞர்கள் சமூகங்களுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்த பாடுபடுவர். இஸ்லாமின் உண்மையான தத்துவம் சகல மார்க்கங்களையும் மதித்து அவர்களோடு முறுகல் நிலையை உண்டாக்காமல் சகோதரத் தன்மையோடு வாழ வேண்டும் என்று போதிப்பதே! அத்தகைய இலக்கை எட்டுவதற்கு இது போன்ற அமைப்புகள் தற்போது அவசியம்' என்கிறார்..




இந்த அமைப்பு இதற்கு முன் மூன்று கலந்தாய்வுகளை இதற்கு முன் மூன்று நாடுகளில் நடத்தி முடித்துள்ளது. சைனா, பிரேசில், ஜெர்மனி போன்ற மூன்று நாடுகளில் இந்த கூட்டம் முன்பு வெற்றிகரமாக நடத்தப் பட்டு நான்காவது மாநாடாக சவுதி அரேபியா ரியாத்திலும் சென்ற வியாழக்கிழமை நடந்து முடிந்துள்ளது.

நிஜார் மதனி தனது பேச்சில் 'இளைஞர்கள் அமைதியையும், சகோதரத்துவத்தையும், இந்த உலகம் முழுக்க எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு இந்த மாநாடு பயன்பட வேண்டும்' என்று குறிப்பிட்டார்.



யூசுப் அல் சதோன் தனது பேச்சில் 'இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் சவுதி இளைஞர் இளைஞிகளை நான் வெகுவாக பாராட்டுகிறேன். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் இளைஞர்களோடு ஒரு அமைப்பாக செயல்பட்டு பல முன்னேற்றங்களை இந்த அமைப்பு பெற்றுள்ளது. இந்த அமைப்பு இவ்வளவு சிறப்பாக தனது பணியினை செய்வதற்கு உறுதணையாக இருக்கும் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.

இந்த விழாவில் மார்ச் மாதம் சவுதி மாணவர்கள் குழு இந்தியாவில் ஹைதரபாத், பெங்களூர், மற்றும் டெல்லி சென்று அங்கு கலந்து கொண்ட நிகழ்வுகளை எல்லாம் காணொளியாக காண்பிக்கப்பட்டது. மேலும் இந்த மாணவர்கள் குழு அரசியல் தலைவர்களையும், கணிணி வல்லுநர்களையும், சந்தித்த நிகழ்வுகளும் காணொளியாக காட்டப்பட்டது.

சவுதி அரேபியாவும் இந்தியாவும் பல துறைகளில் ஒன்றிணைய வேண்டும். இதன் மூலம் இரு நாடுகளும் பலன் பெற பல வாய்ப்புகள் உண்டு என்ற செய்தியை சகோதரர் தாவூத் அறிக்கையாக சமர்ப்பித்தார். ஐநாவின் பான் கி மூனுக்கும் இந்த அமைப்பின் சார்பில் உலக அமைதிக்கான கருத்துரைகள் அனுப்பப்பட்டது.

இந்த விழாவில் நமது முன்னால் ஜனாதிபதி ராக்கெட் விஞ்ஞானி அப்துல் கலாமுக்கும் புகழாரம் சூட்டப்பட்டது. பல அறிவு ஜீவிகளும் கௌரவிக்கப்பட்டதோடு விழா இனிதே நிறைவுற்றது.

-அரப் நியூஸ்
12-05-2012

இது போன்ற அமைப்புகள் இன்னும் ஊக்கப்படுத்தப்பட்டு இரு நாடுகளின் கலாசாரம் மற்றும் வர்த்தகம் பற்றிய புரிந்துணர்வு ஏற்பட வேண்டும். இதில் இரு நாடுகளுக்குமே பலன் உண்டு. படித்த மக்கள் அதிகம் கொண்ட நமது நாடும் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் சவுதியும் கை கோர்த்தால் இரு நாடுகளும் பல வெற்றிகளை அடையும் சாத்தியம் உண்டு..

மேலும் ஒரு சிறந்த ஆட்சியாளரான அப்துல்லாவை அந்த நாடு பெற்றிருப்பதும் இது போன்ற முன்னேற்றங்களுக்கும் காரணம். வானளாவிய அதிகாரம் இவருக்கு இருந்தும் 'சூரா' கவுன்சில் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதில் அறிவு ஜீவிகளை அங்கத்தினர்களாக்கி (நம்மூர் மாநிலங்களவை போல) யுள்ளார். அந்த சூரா கவுன்சிலும் குர்ஆனின் சட்டத்தின் படி தங்களின் கருத்துக்களை சட்டமாக்குகின்றன. நவீன பிரச்னைகளையும் எதிர் கொள்கின்றன.

வஹாபியம் வளர்ந்தால் எல்லோரும் ஒரு முழத்துக்கு தாடியுடனும், ஒரு கையில் கத்தியுடனும் மறு கையில் துப்பாக்கியுடனும் வெறி கொண்டு அலைவார்கள் என்ற கருத்து பரவலாக பரப்பப்பட்டு வருகிறது. இது எந்த அளவு பொய்யான பரப்புரை என்பதை இந்த நிகழ்வுகள் நமக்கு காட்டுகின்றன. வஹாபியத்தை அதாவது குர்ஆன் ஹதீஸின் படி முடிந்த வரை ஆட்சி செய்ய ஆசைப்பட்டு அதனை உரிய முறையில் செயல்படுத்தி வரும் சவுதி அரேபியாதான் மாற்று கலாசார மக்களை அரவணைத்து செல்ல வேண்டும் என்ற போதனையையும் பண்ணுகிறது.



இவர்கள் பாஷையில் வஹாபியம்(குர்ஆனின் வழி) வளர்ந்தால் மூடப் பழக்கங்கள் ஒழியும்: மதங்களுக்கிடையே நல்லுறவு நிகழும்: முஸ்லிம்கள் அனைவரும் படித்த மக்களாக மாறுவர்: பெண்களின் முன்னேற்றம் மிகுதமாக இருக்கும்: அறிவார்ந்த சமூகம் ஒன்று உருவாகும். அப்படி ஒரு சமூகம் நமது நாட்டில் உருவானால் இந்தியன் என்ற வகையில் அனைவரும் பெருமைப்படக் கூடிய நிகழ்வாகுமல்லவா!

-----------------------------------------

சவூதி மன்னரின் உயர்ந்த உள்ளம்!

மன்னர் அப்துல்லா என் தாய் நாட்டுக்கு அரசு முறைப் பயணத்தை முடித்து விட்டு வந்திருக்கும் இந்த தருணத்தில் என் எண்ணங்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன். என் பெயர் வி.ஆர்.சோன்டி. இந்து மதத்தைச் சேர்ந்தவன்.. தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறேன்.

முதலாவதாக 1955 ஆம் வருடம் மதிப்பிற்குரிய மன்னர் அப்துல் அஜீஸ் இந்தியா விஜயம் செய்திருந்தார். மும்பை நகரத்தில் திறந்த காரில் வலம் வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த மக்களுக்கு நிறைய தங்க காசுகளை இலவசமாக அளித்தார். ஏழை மக்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்க காசுகளை வாங்கிச் சென்றார்கள. அது போல் தங்க நாணயம் பெற்றவர்களில் நானும் ஒருவன். ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்காமல் மக்களோடு மக்களாக அனைவரையும் ஒன்றாக நினைத்து அன்பு செலுத்தியது என் மனக்கண் முன் இன்றும் நிழலாடுகிறது.

இரண்டாவது நிகழ்வு 1976 ஆம் ஆண்டு நடந்தது. உலக வங்கி துங்கபத்ரா அணையின் பாக்கி உள்ள கட்டுமான பணிகளை முடிப்பதற்கு 120 மில்லியன் டாலரை இந்திய அரசிடம் கேட்டது. இதை கேள்விப் பட்ட மன்னர் காலித் அப்போதய இந்திய தூதரை அழைத்து அதற்கான ஒரு மாபெரும் தொகைக்கான காசோலையை தன்னுடைய சொந்த பணத்தில் இருந்து கொடுத்தார். இந்த தொகை சவூதி மக்கள் இந்திய மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்பு என்று மன்னர் காலித் அப்போது கூறினார். அவருக்கு இந்திய மக்களின் பால் உள்ள அன்பை எண்ணி அப்போது வியந்தேன்.

அந்த அணை உள்ள நிலப் பரப்புக்கு பக்கத்தில் தான் என் கிராமம் உள்ளது. அந்த அணையைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு மன்னர் குடும்பத்தின் அந்த அன்பளிப்புதான் ஞாபகத்துக்கு வரும். அந்த அணையினால் எத்தனையோ ஆயிரம் பேர் தற்போது பயனடைகிறோம்.

சமீபத்தில் இறந்த மன்னர் பஹதுக்காக சொர்க்கம் கிடைப்பதற்காக இறைவனைப் பரார்த்திக்கிறேன். தற்போதய மன்னர் அப்துல்லாவின் ஆட்சியும் சிறப்புற பிரார்த்தித்து, தீராத தலைவலியாய் இருக்கும் இந்தியா காஷ்மீர் பாகிஸ்தான் பிரச்னையும் ஒரு முடிவுக்கு வர பிரார்த்தித்தவனாக இம் மடலை முடிக்கிறேன்.


வி.ஆர்.சோண்டி, இந்தியானா

வாசகர் கடிதம், அரப் நியூஸ், 1-2-2006

இது போன்ற நல்ல உள்ளங்களைப் பெற்றதால்தான் இந்தியா இன்றும் உலகில் தலை சிறந்த நாடாக மிளிர்கிறது.

-------------------------------------------

இந்த முறை உம்ராவுக்காக மெக்கா இரண்டு மாதம் முன்பு சென்றபோது ஒரு வித்தியாசத்தை உணர்ந்தேன். கஃபாவுக்கு அருகில் மன்னரின் வீடு ஒன்று இருந்தது. ஹஜ்ஜூக்கோ உம்ராவுக்கோ வந்தால் அங்குதான் மன்னர் தங்குவது வழக்கம். இந்த முறை அந்த அரண்மனை போன்ற வீடு இடிக்கப்பட்டு கஃபாவின் விரிவாக்கம் நடந்து கொண்டிருந்தது. அங்கு வேலை செய்து கொண்டிருந்த பாகிஸ்தானியிடம் இது பற்றிக் கேட்டேன். 'நாளுக்கு நாள் உலக மக்கள் ஹஜ்ஜூக்கு வருவது அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போதய இடம் போதவில்லை யாதலால் அருகில் உள்ள ஹோட்டல்கள் அரண்மனைகள் அனைத்தும் இடிக்கப்பட்டு உலக முஸ்லிம்களின் வசதிக்காக கஃபா விஸ்தரிக்கப்படுகிறது. எனவே மன்னர் தனது வீட்டை சற்று தூரத்துக்கு மாற்றிக் கொண்டார். அவரின் வீட்டை இடிக்கும் பணிதான் தற்போது நாங்கள் பார்த்து வருகிறோம்' என்றார்.

நம் ஊரில் ரோட்டை அகலப்படுத்தவதற்காக ஆக்கிரமித்து புறம் போக்கு இடத்தில் கட்டப்பட்ட பல வீடுகளை கடைகளை அதிகாரிகள் இடிக்கச் சென்றால் 'நான் வட்டம். நான் மாவட்டம்' என்று திமுக கொடியையோ அதிமுக கொடியையோ ஏற்றிக் கொண்டு தர்ணா செய்யும் உடன் பிறப்புக்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் பணம் கொடுத்து கட்டிய வீட்டை உலக முஸ்லிம்களுக்காக இடிக்கச் சொல்லி இன்னும் சற்று தூரம் சென்று விட்ட இந்த மன்னர் குடும்பத்தையும் இங்கு நினைத்துப் பார்க்கிறேன்.

சவுதி அரேபியாவைப் பற்றிய சில புதிய செய்திகளை நண்பர் கலையரசன் தொகுத்துள்ளார். அதையும் பார்த்து விடுங்கள்.

டிஸ்கி: உடனே 'பாலாறும் தேனாறும் சவுதியில் ஓடுவதாக நான் பதிவிட்டு விட்டேன்' என்று எதிர் பதிவு போட வேண்டாம். சவுதியிலும் பல குறைகள் இருந்தாலும் நிறைகள் அதிகம் இருக்கிறது. அதாவது 'பாலாறும் தேனாறும் ஓடா விட்டாலும் குறைந்தபட்சம் கூவம் ஓடுவதில்லை' என்பதே நான் சொல்ல வருவது. :-)





24 comments:

ஹுஸைனம்மா said...

//பாலாறும் தேனாறும் ஓடா விட்டாலும் குறைந்தபட்சம் கூவம் ஓடுவதில்லை//

எப்படிங்க இப்பிடிலாம்!! :-))))))

(”கூவம் எனது தவம்”- எதிர்ப்பதிவு தலைப்பாக இருந்தா நல்லாருக்கும்ல?)

suvanappiriyan said...

//(”கூவம் எனது தவம்”- எதிர்ப்பதிவு தலைப்பாக இருந்தா நல்லாருக்கும்ல?)//

ஹா..ஹா..நீங்க பதிவாகப் போடப் போறீங்களோ!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,

//உலக மார்க்கங்களிடையே சமூக நல்லிணக்கம் சாத்தியமா?//---நிச்சயமாக சாத்தியமே, அது... 'ஒருகை ஓசையாக' இருக்காவிட்டால்..!


சகோ.வி.ஆர்.சோன்டி போன்றவர்களும் மன்னர் காலித் போன்றவர்களும்தான் இதனை சாத்தியமாக்குகின்றனர்..!

மிகவும்அருமையான பயனுள்ள புதிய தகவகளை கொண்ட சிறந்ததொரு சமூக நல்லிணக்கம் நாடும் பதிவை அளித்தமைக்கு மிக்க நன்றி சகோ..!

//டிஸ்கி//--- :-)) உண்மைதான்..!

அதிரை சித்திக் said...

சவுதி அரேபியா இளைஞர்கள் ..

இந்தியா வந்து அறிவு ஜீவிகளாய் ..,கருத்து பரிமாற்றம்

செய்து கொண்டது மகிழ்வான ஒன்று ..,இந்தியாவின்

தொழில் நுட்பம் அறிவு சார்பான விளக்கம் கேட்க முனைதல்

சந்தோசமான விஷயம் ..சவுதிய மன்னர் இந்தியா வந்த போது

வழியில் தென் பட்ட மக்களுக்கு தங்க காசு கொடுத்ததாக ..,

சொன்ன சேதி ..ராஜா ..ராஜாதான் ..மதம் அவரவர் நம்பிக்கை..,

நாடு ..அதை சார்ந்த கலாசாரம் பொதுவானது ..நாம் இந்தியர்

இந்தியாவில் எல்லோரும் இன்புற்றிருப்போம் ..

வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் ..,கூவம் நதியில்

குளுகுளு படகு சவாரி செல்லும் நாள் வெகு விரைவில் கான்போம்

suvanappiriyan said...

சகோ அதிரை சித்திக்!

//கூவம் நதியில்

குளுகுளு படகு சவாரி செல்லும் நாள் வெகு விரைவில் கான்போம் //

அந்த நாளை நானும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன். முன்பு ஸ்டாலின் இதற்கான திட்டத்தை அறிவித்தார். அதுவும் கிடப்பில் போடப்பட்டு விட்டது. முந்தய ஆட்சியில் அரைகுறையாக உள்ள திட்டங்களை முடிக்காமல் புதிய ஆட்சி எந்த திட்டங்களையும் அறிவிக்கக் கூடாது என்று சட்டம் போட்டால் மக்களின் வரிப்பணம் இப்படி பாழாய்ப் போவதிலிருந்து தடுக்க முடியும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

suvanappiriyan said...

A high-powered delegation led by Abdullah Al-Asheikh, president of the Shoura Council, arrived in India yesterday to boost cooperation in parliamentary affairs and to open a new chapter in Indo-Saudi relations.

The 11-member delegation, which includes senior Shoura members, will hold wide-ranging talks with high-ranking Indian officials in New Delhi today and tomorrow in a bid to further promote bilateral relations, Indian Ambassador Hamid Ali Rao said in Riyadh yesterday.

"This high-powered Saudi delegation will hold interactions with Indian parliamentarians and compare different parliamentary practices in an effort to boost cooperation between the two legislative bodies," he said.

This is the first visit of a Shoura president to New Delhi. Somnath Chatterjee, then speaker of India's Lok Sabha, visited Riyadh in 2007.

Referring to the progressively growing relations between the Kingdom and India, Rao said: "The friendship and close cooperation between the two countries are at a high point, having been nurtured in recent times through regular consultations between our top officials.".....

http://arabnews.com/saudiarabia/article628440.ece
arab news 08-05-2012

suvanappiriyan said...

சலாம் சகோ ஆஷிக்!

//சகோ.வி.ஆர்.சோன்டி போன்றவர்களும் மன்னர் காலித் போன்றவர்களும்தான் இதனை சாத்தியமாக்குகின்றனர்..!//

ஆம் சகோ. நரேந்திர மோடி போன்ற இந்துத்வ வாதிகள் உள்ள நாட்டில்தான் சோன்டி போன்ற நல்லவர்களும் உள்ளனர். இந்து மக்களில் பெரும்பான்மையோர் சோன்டியின் மன நிலையிலேயே உள்ளனர். இவர்களை போன்றவர்களால்தான் நமது நாடு மத சார்பின்மையில் இன்றும் நிலைத்து நிற்கிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

suvanappiriyan said...

அந்தப் பிரியன் இந்தப் பிரியன் என்று அநாகரிகமாகப் பின்னூட்டமிட்ட நபருக்கு!

//அல்லா ஒரு ......அவனை முடிஞ்சா தண்டிக்க சொல்லு பாப்போம்! அப்பால சொர்கத்தில் கீழே சுவனம் ஓட மேல ஒரு சோபா போட்டுகினு எல்லாரும் குந்துவான்கலாம்!எம்புட்டு நேரம் அப்படியே குந்த?போரடிக்காதா? நீ ப்ளாகை மூடும் வரை இப்படிதாண்! இல்லைன்னா வேற எத பத்திநா எழுது
குடும்ப கட்டுப்பாடு பண்ணிகொன்னு சொன்னா மனித இனம் அழிஜிடுமாம்? இருக்குரவனுக்கே சோறு கிடைக்காது இனி நீங்க பாபுலேஷனை எத்திகினு போனா எவண் சோறு போடுவான்?

எப்பவுமே மதம் மதம் மதம் இது பத்தியே பேசிக்கினு இருக்கீங்க?உனக்கு வேற வேளை வேட்டி கிடையாதா? இந்தியா வல்லரசு ஆகிடும்!

முகமது நபி ........... சொல்வேன் அல்லா ஆம்புலையா இருந்தா தண்டிக்க சொல்லு பாப்போம்)

சோ பிட்டி! ஒரு ஆண் நாலு பெண்களை கட்டிக்கொள்ளலாம் என்றால் ஒரு பெண் ஐந்து ஆண்களை ஏன் கட்டிகொள்ள கூடாது?//

என்ன ஒரு நரகல் நடை. என்ன செய்வது சிறந்த வழிகாட்டி இல்லாமல் போனால் தான்தோன்றியாக இப்படித்தான் பின்னூட்டம் இடச் சொல்லும். உம்மை போன்ற மத வெறியர்கள் முழு இந்தியாவிலும் எடுத்துக் கொண்டாலும் 2 சதவீதம் கூட தேற மாட்டீர்கள். உங்களைப் போன்ற இந்த 2 சதவீத நபர்களால்தான் மற்ற 98 சதவீத மக்கள் பாதிப்புக்கு உள்ளாகிறோம். ஆனால் இந்த பாரதம் உன்னைப் போன்ற மத வெறியர்களையும் தாண்டி முன்னேற்றப் பாதையில் செல்லும். அதற்கு முஸ்லிம்களாகிய நாங்கள் தோளோடு தோள் கொடுப்போம் என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

அநாகரிகமாக எழுதிய ஐந்து இறை நிந்தனை பின்னூட்டங்களுக்கும் அந்த இறையிடம் பாவ மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவும். வேறு ஒன்றும் சொல்வதற்க்கில்லை.

suvanappiriyan said...

மான்டெரரரி: மெக்சிகோவில் போதை மருந்து கடத்தல் கும்பல்களிடையே ஏற்பட்ட மோதலில் தேசிய நெடுஞ்சாலையில்‌ கொடூரமாக கொலை செய்யப்பட்ட 49 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.மெக்சிகோ நாட்டிற்கு பெரும் தலைவலியாக இருப்பது போதை மருந்து கடத்தல் கும்பல்கள் தான். இவர்களால் அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. மெக்சிகோவின் வடக்கு மாகாணத்தின் அமெரிக்க எல்லைப்பகுதியில் மான்டெரரி நகரில் ரெய்னோசா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை 49 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் 43 ஆண்கள், 6 பெண்கள் ஆவர். அவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டும்,சிலரின் உடல்கள் தலை, உடல் என கண்டந்துண்டமாக வெட்டப்பட்டும் கிடந்தன. சாலைகளில் உடல்கள் சிதறி கிடந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இம்மாதம் முதல் வாரத்தில் தான் கெளடாலஜாரா நகரில் 23 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன என்பதும், கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பாலம் ஒன்றில் 9 பேர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

-பத்திரிக்கை செய்தி
13-05-2012

போதை மருந்துக்கு அடிமையான ஒரு சமூகம் எந்த அளவு சீரழிக்கப்படும் என்பதற்கு இந்த செய்தி ஒரு உதாரணம். நாமோ இதைப்பற்றிய கவலை இல்லாமல் 10 ம் வகுப்பு மாணவர்களெல்லாம் போதை மருந்து அதுவும் தமிழகத்தில் சாப்பிடுவதாக ஒரு அறிக்கை கூறுகிறது. அரசின் முக்கிய வருமானமே டாஸ்மார்க் வருமானம்தான். இது எங்கு போய் முடியுமோ தெரியவில்லை.

VANJOOR said...

.
.

சொடுக்கி >>> திகிலூட்டும் அதிர்ச்சி ரிப்போர்ட். போதை! போதை! போதை! Kalki Bhagavan Criminal Activities
.
<<<<< பார்க்கவும்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
naren said...

நண்பர் சு.பி.

நலமா. தளத்திற்கு வந்து ரொம்ப நாளாகிவிட்டது. கவிதை எல்லாம் எழுதியிருக்கிறீர்கள் அருமை.

உலக மார்க்கங்களிடையே சமூக நல்லிணக்கம் சாத்தியமா?

என்ன கேள்வி இது. இது பதிலாக வரவேண்டும். இஸ்லாம் என்ற மார்க்கம் முதன்மையாக இருந்தால் உலக மார்க்கங்களிடைய நல்லிணக்கம், சாந்தி, சமாதானம் உண்டாகும். இதுதான் சரி.

அவ்வளவு கஷ்டமாக இருந்தால் இன்னொரு சுலபமான வழியும் இருக்கின்றது. உலக மக்கள் தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை இவ்வளவு என்பதை இமாமகள் சொல்வதை பார்த்தால், ஒவ்வொரு முஸ்லிமும் தனது வலது பக்கம் தனது இடதுபக்கம் இருக்கும் காஃபிர்களின் கையை பிடித்து(வெட்டாமல்) கலிமா சொல்லி தந்துவிட்டால் போதும். உலகமே ஒரே மார்க்கமா போய்விடும். ஒரே மார்க்கமா இருந்தால் அங்கே எங்கே நல்லிணத்திற்கு வேலை.

சின்ன பிரச்சனை:- உண்மையான முஸ்லிம் = (வாஹாபி - முஸ்லிம்). விடை negative ஆக வருகிறது.

2020 இந்தியா வல்லரசாக வேண்டும் என்று யார்யாரோ கனவுகள் காண்கிறார்கள். அவர்களுக்கு தெரியாது அமெரிக்காவை மிஞ்சி சவுதி வல்லரசாகிவிட்டது என்பதை.

suvanappiriyan said...

கோவி கண்ணன்!

//வெறுமனே குரான் ஆண்களை உட்கார்ந்து கழிக்கச் சொல்கிறது என்கிற மதவாத சிந்தனைகளை//

தவறான தகவல். குர்ஆனில் அப்படி எந்த கட்டளையும் இல்லை. முகமது நபியே அவசியம் ஏற்படும் போது சில நேரங்களில் நின்று கொண்டு சிறுநீர் கழித்திருக்கிறார்.

//ஆண் பெண் சமம் என்பதை முடிவு செய்யும் இடமாக கழிவறையில் நின்று கொண்டு கழிப்பதைப் பற்றி பேசுவது புரட்சி கிடையாது, அது வசதியைப் பொருத்தது,//

இந்த பதிலைத்தான் உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன். ஆணும் பெண்ணும் உடற்கூறு ரீதியாக சில மாற்றங்கள் இருக்கும் போது ஆணைப் போலவே பெண்ணும் உடை அணிய வேண்டும் என்ற வாதம் வைக்கப்படுகிறது. பெண்களின் உடற்கூறுக்குத் தக்கவாறு சில உடைகளை மேலதிகமாக இஸ்லாம் இடச் சொல்லும் போது அதை பலர் குறை கூறுவதைப் பார்க்கிறோம். இங்கும் பெண்களின் உடல் அமைப்பில் நின்று கொண்டு அவர்களால் சிறுநீர் கழிக்க முடியாது. என்னதான் சமத்துவம் பேசினாலும் ஆணுக்கென்று சில சிறப்புகள் உண்டு. பெண்ணுக்கென்று சில சிறப்புகள் உண்டு. இரண்டும் எக்காலத்திலும் சமமாக முடியாது. இதைச் சொல்லவே வந்தேன்.

Anonymous said...

//நரேந்திர மோடி போன்ற இந்துத்வ வாதிகள் உள்ள நாட்டில்தான் சோன்டி போன்ற நல்லவர்களும் உள்ளனர். இந்து மக்களில் பெரும்பான்மையோர் சோன்டியின் மன நிலையிலேயே உள்ளனர்.//
இந்து மக்களில் பெரும்பான்மையோர் நல்லவர்களாக இருப்பதால் தான் உங்கள் கூட்டம் இங்கே தைரியமாக தாவா செய்ய முடிகிறது.

//இவர்களை போன்றவர்களால்தான் நமது நாடு மத சார்பின்மையில் இன்றும் நிலைத்து நிற்கிறது.//
அடேயப்பா, இந்தியாவில் பாலைவன மதத்தை பரப்பியே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரியும் கூட்டம் மதசார்பின்மை பற்றி பேசுவது வியப்புதான்.

//இஸ்லாமின் உண்மையான தத்துவம் சகல மார்க்கங்களையும் மதித்து அவர்களோடு முறுகல் நிலையை உண்டாக்காமல் சகோதரத் தன்மையோடு வாழ வேண்டும் என்று போதிப்பதே//
நல்ல நகைச்சுவை. பிற மதங்களை தனது நாட்டில் அனுமதிக்காத இவர்கள் உலக மார்க்கங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை பற்றியும் சகோதரத்துவத்தை பற்றியும் பேசுகிறார்களா. புல்லரிக்கிறது.

//உங்களைப் போன்ற இந்த 2 சதவீத நபர்களால்தான் மற்ற 98 சதவீத மக்கள் பாதிப்புக்கு உள்ளாகிறோம். ஆனால் இந்த பாரதம் உன்னைப் போன்ற மத வெறியர்களையும் தாண்டி முன்னேற்றப் பாதையில் செல்லும். அதற்கு முஸ்லிம்களாகிய நாங்கள் தோளோடு தோள் கொடுப்போம் என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.//
திரு சுவனம், உங்க வேதனை புரியுது. பின்னூட்டம் போட்டவர் ரொம்ப கேவலமா பின்னூட்டமிட்டு உங்கள ரொம்ப நோகடித்து விட்டார் என்று நினைக்கிறன். ஆனால் அதற்காக உணர்ச்சி வசப்பட்டு. உங்க மதவெறியை மறந்து நீங்களும் மத சார்பற்றவர்கள் ஆகி விட்டால் எப்படி இந்த நாட்டை அல்லாவின் பாதையில் கொண்டு செல்ல முடியும். சவுதியை போல இந்தியாவையும் மாற்றவது சிரமம் ஆகி விடும். எனவே நீங்கள் உணர்ச்சி வசப்பட வேண்டாம். உங்கள் கூட்டத்தவரின் மத வெறியும் நாட்டு பற்றும்! எப்படி என்று இங்கு எல்லோருக்கும் தெரியும்.

////பாலாறும் தேனாறும் ஓடா விட்டாலும் குறைந்தபட்சம் கூவம் ஓடுவதில்லை////
கூவம் ஓடும் இந்த நாட்டில் உங்கள் கூட்டமும் இருகிறதே திரு சுவனப்ரியன். அந்த கூவத்தின் நாற்றத்தை அகற்றவேண்டும் என்று உங்கள் கூட்டமும் கொஞ்சம் முயற்சி எடுத்திருக்கலாமே. ஏன் நீங்கள் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா அல்லது இந்த நாட்டின் குடிமக்களாக இருக்க பிடிக்க வில்லையா? உங்களுக்கு தான் உங்கள் மார்க்கத்தை பற்றியும் முகமதுவின் திருமணத்தை பற்றி விளக்கவுமே நேரம் சரியாக இருகிறதே பிறகு எப்படி உங்களால் இந்த நாட்டிற்கு கடமையாற்ற முடியும். என் வீட்டின் உள்ளே சாக்கடை ஓடினால் நான் அதை அகற்ற தான் முயற்சி செய்ய வேண்டுமே தவிர ''ஹை.. என் வீட்டில் சாக்கடை ஓடுது'' என்று கை தட்டி சிரிக்க கூடாது தயவு செய்து உங்கள் கூட்டத்தினர் உங்கள் மன நிலையை மாற்றி கொள்ளுங்கள். அப்படி உங்களுக்கு சாக்கடை கூவம் ஓடும் இந்த நாட்டில் இருக்க பிடிக்கவில்லை என்றால் தாராளமாக நீங்கள் உங்கள் சொர்க்க பூமியான சவுதியிலேயே இருக்கலாம் யாரும் அதை தடை செய்ய போவது இல்லை. ஒரு விசயம் புரிந்து கொள்ளுங்கள். அந்த கூவத்தில் உங்கள் கூட்டத்தினரின் கழிவுகளும் கலந்தே இருக்கிறது.
அடிக்கடி சவூதி அப்படி இருக்கிறது இப்படி இருக்கிறது ஆனால் இந்த நாட்டில் கூவம் ஓடுகிறது என்று கூறாதீர்கள்.

--Anandan--

Anonymous said...

உண்மை தான். அங்கு பாலாறு, தேனாறு மற்றும் கூவம் ஆறும் ஓடவில்லை. ஆனால் சவூதியை சுற்றி ஓடுகிறதே - யேமன், சிரியா என்று பல நாடுகளில் ரத்த ஆறு. வெட்கக்கேடு இல்லையா? இத்தனைக்கும் ஓர் இறை மக்கள்.

suvanappiriyan said...

திரு ஆனந்த்!

//உங்கள் கூட்டத்தவரின் மத வெறியும் நாட்டு பற்றும்! எப்படி என்று இங்கு எல்லோருக்கும் தெரியும்.//

எப்படி....? ஹேமந்த் கர்கரே என்ற நேர்மையான அதிகாரி அத்தனை கயவர்களையும் பிடித்து உள்ளே தள்ளினாரே? மறந்து விட்டீர்களா? மேலே ஒரு ராணுவ வீரர் எவ்வாறு காஷ்மீரில் நமது ராணுவம் நடந்து கொள்கிறது என்ற பதிவின் சுட்டியை தந்துளேன் கொஞ்சம் படித்து தெளிவு பெறவும.

//அந்த கூவத்தின் நாற்றத்தை அகற்றவேண்டும் என்று உங்கள் கூட்டமும் கொஞ்சம் முயற்சி எடுத்திருக்கலாமே. ஏன் நீங்கள் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா அல்லது இந்த நாட்டின் குடிமக்களாக இருக்க பிடிக்க வில்லையா?//

நீங்கள் இது வரை என்ன செய்திருக்கிறீர்கள்? நானாவது பதிவிட்டு விழிப்புணர்வை உண்டாக்க முயற்ச்சிக்கிறேன். நீங்கள் அதைக் கூட செய்வதில்லையே?
//அப்படி உங்களுக்கு சாக்கடை கூவம் ஓடும் இந்த நாட்டில் இருக்க பிடிக்கவில்லை என்றால் தாராளமாக நீங்கள் உங்கள் சொர்க்க பூமியான சவுதியிலேயே இருக்கலாம் யாரும் அதை தடை செய்ய போவது இல்லை//

நான் பிறந்த மண்ணில் வாழ்வதற்கு எவரது அனுமதியையும் கேட்கப் தேவையில்லை. எங்கிருந்தோ நாடோடியாக வந்து இந்த நாட்டிலே டேரா போட்ட உங்கள் கும்பலைப் பார்த்து அதே கேள்வியை நான் கேட்டிருக்க வேண்டும். ஆனால் நான் கேட்க மாட்டேன். இஸ்லாம் என்னை அவ்வாறு கேட்கச் சொல்லவில்லை.
//அந்த கூவத்தில் உங்கள் கூட்டத்தினரின் கழிவுகளும் கலந்தே இருக்கிறது.
அடிக்கடி சவூதி அப்படி இருக்கிறது இப்படி இருக்கிறது ஆனால் இந்த நாட்டில் கூவம் ஓடுகிறது என்று கூறாதீர்கள்.//

ஒரு தகப்பன் தனது பிள்ளையிடம் 'பக்கத்து வீட்டு பையன் எவ்வளவு சமர்த்தா இருக்கான். அதுபோல நீயும் படிக்கனும்' என்று சொன்னால் தனது பிள்ளையின் மேல் உள்ள பாசத்தினால் அந்த ஒப்பீடு என்பதைக் கூட புரிந்து கொள்ளாமல் நீங்கள் இருப்பதைப் பார்த்து அதாவது உங்களைப் பார்த்து பரிதாபப்படுகிறேன்..
.

.

suvanappiriyan said...

சகோ நரேன்!

//என்ன கேள்வி இது. இது பதிலாக வரவேண்டும். இஸ்லாம் என்ற மார்க்கம் முதன்மையாக இருந்தால் உலக மார்க்கங்களிடைய நல்லிணக்கம், சாந்தி, சமாதானம் உண்டாகும். இதுதான் சரி.//

சரியாகவே சொன்னீர்கள். இந்த இஸ்லாம் மார்க்கமானது முகமது நபி புதிதாக கொண்டு வந்தது அல்லவே! ஆதாமிலிருந்து நோவாவிலிருந்து ஆப்ரஹாமிலிருந்து ஏசு வரை அனைத்து இறைத் தூதர்களும் எதை போதித்தார்களோ அதுதானே இஸ்லாம். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பதுதானே நமது முன்னோர்களின் வழிமுறை!

//2020 இந்தியா வல்லரசாக வேண்டும் என்று யார்யாரோ கனவுகள் காண்கிறார்கள். அவர்களுக்கு தெரியாது அமெரிக்காவை மிஞ்சி சவுதி வல்லரசாகிவிட்டது என்பதை.//

எனது தாய் நாடான இந்தியா வல்லரசானால் என்னை விட வேறு யார் சந்தோஷப் பட முடியும்? அதற்காகத்தானே நமது நாட்டின் குறைகளை சுட்டிக் காட்டி வருகிறோம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ அனானி!

//உண்மை தான். அங்கு பாலாறு, தேனாறு மற்றும் கூவம் ஆறும் ஓடவில்லை. ஆனால் சவூதியை சுற்றி ஓடுகிறதே - யேமன், சிரியா என்று பல நாடுகளில் ரத்த ஆறு. வெட்கக்கேடு இல்லையா? இத்தனைக்கும் ஓர் இறை மக்கள்.//

சவுதியை சுற்றித்தானே ஓடுகிறது. சவுதியைப் போன்று குர்ஆனை பின் பற்றி சிரியாவையும் லெபனானையும், ஈராக்கையும் ஆட்சி செய்ய சொல்லுங்கள். சவுதியை போன்ற அமைதியை அந்த தேசங்களும் காணும். எனவே பிரச்னை இஸ்லாத்தில் இல்லை. அதை பின்பற்றாத முஸ்லிம்களிடம்தான் இருக்கிறது.

Anonymous said...

கலையக தளத்தை வாசித்தேன். அங்கே அனானிக்கு அனுமதி இல்லாததால் இங்கே அதற்கான பின்னூட்டத்தை தருகிறேன். இங்கேயும் பொருந்தக்கூடிய பின்னூட்டமே.

ஆதி நாளில் யூதர்களை கிறிஸ்தவர்கள் கொன்றார்கள். கிறிஸ்தவர்களை யூதர்கள் கொன்றார்கள். பின்னாளில் அவர்கள் இருவரையும் முஸ்லீம்கள் கொன்று வெற்றி களிப்பில் மிதந்தார்கள். இன்றைய நாளில் மதக்குண்டுகள், மனிதக்குண்டுகளாக மாறி அவர்களே ஒருவரை ஒருவர் அழித்து கொண்டு சாகிறார்கள். சரியா சு.பி.

ராஜ நடராஜன் said...

சகோ.சுவனப்பிரியன்!அழகான தலைப்புடன் முரண்பாடான சவுதியின் பிம்பத்தையும் உள்ளடக்கியிருக்கிறீர்கள்.பொதுவாக வளைகுடா நாடுகளுக்கு சவுதி உட்பட இந்திய கலாச்சாரத்துடன் இணைந்து செல்வதில் பிரச்சினையில்லை என்பதை அனைத்து வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களும் நீங்கள் குறிப்பிடுவது போன்ற வார இறுதி நிகழ்வுகளுமே சாட்சி.

மொத்த வளைகுடாவின் எதிர்மறையான பிரதிபலிப்பான விமர்சனமாக சவுதியாக விளங்குவதன் காரணம் நீங்கள் கூறும் வஹாபியிச தன்மையாக கூட இருக்ககூடும்.ஒருபுறம் சவுதி வஹாபியிசத்துக்கு எதிராக யூத மற்றும் மேற்கத்திய ஊடகங்கள் விளங்குவதையும் கூட எதிர்கொள்ளாத நிலையிலேயே இஸ்லாமியத்தின் மேன்மையான பண்புகள் பின் தள்ளப்பட்டு வஹாபியசத்தின் எதிர்மறையான கூறுகளாக ஊடகங்களில் வெளிப்படுகிறது.இதனை எதிர்கொள்ள அல்ஜசிரா நிறுவனம் தவிர வேறு ஏதாவது ஊடகங்கள் உலகளாவிய அளவில் மத்திய கிழக்கு நாடுகளின் பிரச்சினைகளை அலசுகிறதா என்றால் இல்லையென்றே கூறலாம்.

மத்திய கிழக்கு நாடுகளை ஆட்சி செய்பவர்கள் சென்ற தலைமுறையானர்வர்களாகவும் அவர்களின் புதிய தலைமுறையினர்களுக்கான உலக பார்வை விரிவடையும் காலகட்டத்தில் வசிப்பதாலும் மத்திய கிழக்கு நாடுகளின் மாற்றஙகள் அரேபிய வசந்தமாக மெல்ல துவங்கியுள்ளது.அரேபிய நாடுகளின் எந்த மாற்றங்களுடனும் நாணல் புல் மாதிரி ஆசியநாடுகள் இணைந்து செல்லும்.ஆனால் அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு மற்றும் உங்கள் விமர்சனத்திற்கெல்லாம் உட்படாத சிங்கள பேரினவாதத்திற்கு சற்றும் குறையாத முரண்டு பிடிக்கும் யூதர்களால் உலக மார்க்கங்களிடையே சமூக நல்லிணக்கம் சாத்தியமா? என்பது தற்போதைய நிலையில் இன்னும் கேள்விக்குறியே.

ராஜ நடராஜன் said...

டிஸ்கி நல்லாத்தான் இருக்குது!

நீங்க பாலாறும் தேனாறும் சொற்பதத்திற்கு நிச்சயம் காப்புரிமை கொண்டாடலாம்:)

பக்கத்துல அவ்வளவு பெரிய கடலை வைத்துக்கொண்டு கூவத்தின் கழிவுகளை வெளியேற்ற முடியாமல் போவது தமிழகத்தின் இயலாமையையே காட்டுகிறது.

suvanappiriyan said...

சகோ ராஜநடராஜன்!

//பக்கத்துல அவ்வளவு பெரிய கடலை வைத்துக்கொண்டு கூவத்தின் கழிவுகளை வெளியேற்ற முடியாமல் போவது தமிழகத்தின் இயலாமையையே காட்டுகிறது.//

கூவத்தை கடக்கும் போது எப்போதாவது செல்லும் நமக்கு எந்த அளவு சிரமத்தைக் கொடுக்கிறது என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். அதற்கு பக்கத்திலேயே வாழ்வை ஓட்டிக் கொண்டிருக்கும் அந்த ஏழைகளை நினைத்தால் பரிதாபமாக இருக்கும். நீங்கள் சொல்வது போல் இவ்வளவு பெரிய கடலை பக்கத்திலேயே வைத்துக் கொண்டு இது வரை ஏன் ஒரு மாற்று ஏற்பாட்டை ஆட்சியாளர்கள் செய்யவில்லை என்பதை சொன்னால் பலர் அதனை தவறாக விளங்கிக் கொள்கிறார்கள். நீங்களாவது புரிந்து கொண்டீர்களே!

//வஹாபியிசத்துக்கு எதிராக யூத மற்றும் மேற்கத்திய ஊடகங்கள் விளங்குவதையும் கூட எதிர்கொள்ளாத நிலையிலேயே இஸ்லாமியத்தின் மேன்மையான பண்புகள் பின் தள்ளப்பட்டு வஹாபியசத்தின் எதிர்மறையான கூறுகளாக ஊடகங்களில் வெளிப்படுகிறது.//

வஹாபியம் என்பதை மிகவும் தவறாக மேற்கத்திய ஊடகங்கள் உலகம் முழுவதும் பரப்பி வருகின்றன. இங்கு சவுதியில் குடும்பத்தோடு பல இந்து சகோதரர்கள் 20 வருடம் 25 வருடமாக சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். தங்கள் குழந்தைகளை ஒன்றாம் வகுப்பிலிருந்து கல்லூரி படிப்பு வரை சவுதியிலேயே படிக்க வைத்த பல இந்து குடும்பங்களை நான் அறிவேன். ஒரு வஹாபியத்தை கொள்கையாக கொண்ட ஒரு நாட்டில் இது எப்படி சாத்தியப்படுகிறது?

//ஆனால் அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு மற்றும் உங்கள் விமர்சனத்திற்கெல்லாம் உட்படாத சிங்கள பேரினவாதத்திற்கு சற்றும் குறையாத முரண்டு பிடிக்கும் யூதர்களால் உலக மார்க்கங்களிடையே சமூக நல்லிணக்கம் சாத்தியமா? என்பது தற்போதைய நிலையில் இன்னும் கேள்விக்குறியே.//

சிங்கள பேரின வாதத்தை நான் என்றுமே ஆதரித்ததில்லை. அதே போல் புலிகளின் தீவிரவாதத்தையும் நான் ஆதரிப்பதில்லை. இந்த இருவரையும் ஒதுக்கி விட்டு நடு நிலையாளர்களைக் கொண்டு இந்தியா முன்னிலையில் ஒரு தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதே எனது நிலை.

மேலும் இன்று உலக பயங்கரவாதத்துக்கு அடித்தளம் இடுபவர்களே யூதர்கள்தான். இதனால் பாதிக்கப்பட்ட சில முஸ்லிம்கள் தீவிரவாதத்தை கையில் எடுக்கின்றனர். அமெரிக்காவின் இரட்டை நிலை என்று மாறுமோ அன்றுதான் உலகிலும் சுபிட்சம் ஏற்படும். அதுவரை ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டியே நாட்கள் நகரும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

khaleel said...

//இந்த முறை அந்த அரண்மனை போன்ற வீடு இடிக்கப்பட்டு கஃபாவின் விரிவாக்கம் நடந்து கொண்டிருந்தது.//
ஹரம் ஒன்றாம் எண் வாசலிலே இருக்கும் அப்ராஜ் அல் பைத் ஹோட்டல் யாருடையது? ஒரு வேலை அதையும் இடிக்க போறார்களா?

suvanappiriyan said...

சகோ கலீல்!

//ஹரம் ஒன்றாம் எண் வாசலிலே இருக்கும் அப்ராஜ் அல் பைத் ஹோட்டல் யாருடையது? ஒரு வேலை அதையும் இடிக்க போறார்களா? //

நீங்கள் குறிப்பிடும் ஹோட்டலைப் பற்றி நான் அறியவில்லை. கஃபா விரிவாக்கத்துக்கு அந்த ஹோட்டல் இடைஞ்சலாக இருந்தால் அதையும் தட்டி விடுவார்கள்.