Followers

Tuesday, May 15, 2012

ஏர் இண்டியா பண்ணும் ரவுசு தாங்க முடியலப்பா!

ஏர் இண்டியா பண்ணும் ரவுசு தாங்க முடியலப்பா!


இரண்டு நாட்கள் முன்பு முஜிபுர் ரஹ்மான் என்ற பெங்களூர் ஆளுக்கு ஏர்இண்டியாவில் புக் செய்து அனுப்பினேன். புக் பண்ணும் போதே 'சவுதியாவில் புக் பண்ணு பாய்! அது தான் வசதி' என்று சொன்னவரிடம் 'நம் நாட்டு ஏர் இந்தியாவை நாம் பயன் படுத்தாமல் வேறு யார் பயன்படுத்துவது' என்று தேசப் பற்றை ஊட்டியவுடன் அவரும் டிக்கெட்டை வாங்கிக் கொண்டு கணக்கையும் முடித்துக் கொண்டு சென்று விட்டார். ஊழியர்களுக்கு விமான டிக்கெட் எடுப்பது மற்றும் அவர்களின் கணக்கு வழக்குகளை சரி பார்ப்பதும் எனது வேலைகளில் ஒன்று.(ஸ்...ஸ்...ஸ் ஒரே ஆள் எத்தனை வேலையை பார்க்கிறது) :-)

மறு நாள் ஏர்போர்டிலிருந்து முஜிபுடைய போன்:

'க்யா பாய்! ஃபஸாதியேனா முஜே! அப் மே கஹா ஜாவும்? மே பைலா சவுதியா ஃபிளைட் ஆப் சே மாங்கா! ஏர்இந்தியா வாலா கொய் ரெஸ்பான்ஸ் நய்கர்ராஹே'

'என்ன பாய்! பிரச்னையிலே மாட்டி விட்டுடீங்களே! நான் அப்பவே சவுதியா பிளைட் கேட்டேன்! இப்போ ஏர் இந்தியா பிளைட் ஸ்ட்ரைக்காம். இத்தனை லக்கேஜீகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது? ஏர் இந்தியா ஆட்கள் எந்த வித உதவியும் செய்யவில்லை".

என்று சற்று கோபத்தோடு கத்தினார். இரண்டு வருடத்துக்கு பிறகு ஊர் செல்லும் போது இது போன்ற தடங்கல் வந்தால் யாருக்குத்தான் கோபம் வராது? பிறகு ஏர்லைன் ஆபிஸூக்கு போன் செய்து ரூம் கொடுத்து சாப்பாடும் கொடுத்து மறுநாள் அனுப்பி வைத்தது ஏர் இந்தியா நிர்வாகம்.

ஸ்ட்ரைக் பண்ணப் போகிறார்கள் என்று தெரிந்தும் இவர்கள் டிக்கெட்டை ஏன் இஸ்யூ பண்ண வேண்டும்? இது எத்தனை பேருக்கு பிரச்னை? முதல் நாளே டிக்கெட்டை நிர்வாகம் கேன்ஸல் செய்திருந்தால் பயணிகள் வேறு விமானத்தை நாடியிருப்பார்கள் அல்லவா? இந்த ஸ்ட்ரைக் எழவை நம் நாட்டில் வைத்துக் கொள்ளக் கூடாதா? எல்லா ஏர்லைன்ஸூகளும் தங்கள் பாஸஞ்சர்களை பிரச்னையில்லாமல் கொண்டு சேர்க்க ஏர் இந்தியா பாசஞ்சர்கள் கவலையோடு ஏர்போட்டில் அமர்ந்திருப்பது எவ்வளவு இழுக்கு? டிக்கெட் ஓகே செய்தவர்களை நாட்டில் இறக்கி விட்டு அதன் பிறகு உங்கள் ஸ்ட்ரைக்கை வைத்துக் கொள்ளக் கூடாதா?

ஏற்கெனவே பல கோடிகள் நஷ்டத்தில் இயங்குகிறது ஏர் இந்தியா நிறுவனம். இதில் இவர்களுக்கு இன்னும் வசதிகளை செய்து கொடுக்க நிர்வாகத்திடம் பணம் ஏது? மற்ற அரசு ஊழியர்களோடு ஒப்பிடும் போது சிறந்த சம்பளத்தையே பெறுகிறார்கள். அப்படி இருக்கையில் இந்த நிறுவனத்துக்கு இந்த ஸ்ட்ரைக்கால் இன்னும் பல கோடி நட்டம். இதை எல்லாம் நானோ நீங்களோதான் வரியாக அரசுக்குக் கட்டித் தொலைக்க வேண்டும். சாமான்யன் வரிப் பணம் எந்த அளவு சீரழிக்கப்படுகிறது என்பதற்கு இது வெல்லாம் ஒரு உதாரணம்.






வேலைக்கு வராத பைலட்டுகள் தங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்ற பொய்யான காரணத்தை வேறு நிர்வாகத்துக்கு சொல்லியிருக்கின்றனர். எந்த பைலட்டுமே வீட்டில் இல்லை. எந்த டாக்டரையும் சென்று சந்திக்கவும் இல்லை. இவர்கள் மேல் இப்போது நடவடிக்கை எடுக்கப் போவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த ஸ்ட்ரைக்கால் நம் நாட்டு தொழிலாளர்களின் எத்தனை விசா கேன்சல் ஆனதோ தெரியவில்லை. பல வருடங்கள் வேலை செய்தவர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்க வேண்டுமே என்று சில கம்பெனிகள் வந்த வரை லாபம் என்று திரும்ப விசாவையும் அனுப்ப மாட்டார்கள். இந்த நஷ்டத்தை எல்லாம யார் ஈடு கட்டுவது?.

இங்கு சவுதியா பிளைட் இதுவரை ஒரு நாள் கூட ஸ்ட்ரைக் ஆனதாகவோ லேட்டானதாகவோ நான் கேள்விப்பட்டதில்லை. ஸ்ட்ரைக் செய்வதும் இங்கு தடை செய்யப்பட்டது. சம்பளப் பிரச்னை என்று எதுவாக இருந்தாலும் கோர்ட்டுக்கும் செல்லலாம். நிர்வாகத்தோடும் பேசலாம். அனைத்தும் வேலை நடந்து கொண்டிருக்கும் போதே செயல்பாட்டுக்கு வரும். இதை ஏன் நம் அரசாங்கம் பின் பற்றக் கூடாது.

இன்னொரு முறையும் உள்ளது. அதாவது ஒரு நிறுவனத்தை தொடங்கும் போதே ஊழியர்களையும் 10 சதவீதம் அல்லது 20 சதவீதம லாபத்தில் பங்கு என்று அவர்களையும் பங்குதாரர்களாக்கி விட்டால் பிரச்னை முடிந்தது. லாபம் நஷ்டம் இந்த இரண்டிலும் நிறுவனமும் ஊழியர்களும் பங்கு கொள்வதால் தேவையற்ற ஸ்ட்ரைக்குகள் தொழிலாளர்களாலேயே முடக்கப்படும். சம்பளத்தையும் தொழிலாளர்கள் தங்கள் இஷ்டத்துக்கு உயர்த்தி கேட்டுவிட முடியாது. ஏனெனில் லாபத்தை அனுசரித்தே சம்பளமும் உயரும். இதை ஏன் ஏர் இந்தியா நிர்வாகம் செயல்படுத்திப் பார்க்கக் கூடாது?. ஊழியர்களை வேலையில் சேர்க்கும் போதே ஸ்ட்ரைக் செய்ய மாட்டோம் என்ற உறுதி மொழியையும் அவர்களை பங்குதாரர்களாக ஆக்கும் ஆவணமும் பெற்றுக் கொண்டால் பிறகு எங்கிருந்து முளைக்கும் ஸ்ட்ரைக்?

தொழிலாளர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட இந்த கம்யூனிஸ சித்தாந்தம் இன்று பல தொழிலாளிகளின் வயிறு காய்வதற்கு உலகம் முழுக்க காரணமாக இருக்கிறது என்றால் மிகையாகாது. எனது கேரள நண்பர் ஜார்ஜ் என்னிடம் 'தமிழகத்தில் சேர்ந்து தொழில் பண்ணலாமா?' என்று முன்பு கேட்டார். 'ஏன் கேரளாவில் காடுகள் அதிகம். அங்கு தொடங்குவதுதானே நல்லது' என்றேன். 'மனுஷன் அங்க தொழில் பண்ண முடியுமா? ஒரு வருடம் நன்றாக நிறுவனம் ஓடினால் மறுவாரமே கம்யூனிஸ்டுகளோடு சேர்ந்து கொண்டு வேலை நிறுத்தம் செய்வார்கள். பணம் போட்ட நானும் நீயும் வயிறு எரிந்து முளையில் உட்கார வேண்டியதுதான்' என்றார். பல மலையாளிகள் நம் தமிழகத்தில் தொழில் தொடங்குவதின் சூட்சுமம் தற்போது விளங்குகிறதல்லவா? கம்யூனிஸ்டுகளான இவர்கள் தாங்களும் வாழ மாட்டார்கள். மற்றவர்களையும் வாழவும் விட மாட்டார்கள்.

தற்போது பள்ளி விடுமுறை நாள். அனைத்து பெற்றோர்களும் குழந்தைகளோடு தாயகத்துக்கு திரும்பும் நேரம். அடுத்து உம்ராவுக்காக மெக்கா வருவதற்கு பல ஆயிரம் பேர் தங்களின் சேமிப்புகளோடு காத்திருப்பர். இவை எதையும் கணக்கில் எடுக்காது சிறு பிள்ளைத்தனமான இந்த ஸ்டிரைக்கினால் இந்திய பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையும். அரசால் சமாளிக்க முடியவில்லை என்றால் உடன் தனியார் வசம் கொடுப்பதே சிறந்தது. இதற்கு வழக்கம்போல் கம்யூனிஸ்டுகளும் எதிர்கட்சிகளும் கிடைக்கும் தேர்தல் கால ஓட்டை கணக்கு செய்து எதிராக திரும்புவர். இதுதான் நடக்கும்.

யஹ்யா பின் சுல்தான் என்ற அரபி நம் ஏர் இந்தியாவைப் பற்றி சொல்வதைப் பார்ப்போம்.
"This is the worst Airlines. No passenger prefers this airlines, when no other flights are available then only people choose Air India, its punctuality and service both are low and poor standard".-Arab News comment.

ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த அரபுகள் இன்று ஏர் இந்தியாவைப் பார்த்து கமெண்ட் அடிக்கும் நிலைக்கு நமது நாட்டு நிர்வாகம் சென்று விட்டது.

Times of India comments:

gail_dj (kuwait)
14 May, 2012 06:36 PM
When Air India had wet-leased air crafts long ago they were doing well. After is merged it was more misery, who is to be blamed for all this P.P. So many days strike and flights cancelled, see the amount of revenew lost. Wet-lease aircrafts and start operations is a better option. This can't go on for so long. What are you waiting for,There is a limit to everything ,the longer the delay, the worse it will get. People will soon loose faith in Air India and business will be hampered. Show them how nobody is indispensible. Wake up and start a new leaf.

Muskan (Andheri, Mumbai)
14 May, 2012 06:20 PM
what is the prime minister doing?? our flights are being cancelled and they are just sitting cool!!!!! and what is the strike for..... the pm should take a big action against them ....THEY SHOULD FIRE THOSE PILOTS WHO ARE ON ASTRIKE AND HIRE NEW AND GOOD PILOTS... they should sign a contract before hiring pilots that the cant go on a strike or take holidays unless the have a big and major reason............The PM should sew the pilots for taking a strike on such a stupid topic..........

Anna T (Hyderabad)
14 May, 2012 12:38 PM
What a fiasco? Everybody is taking people for ransom. How long should we tolerate this kind of nonsense? what is the Prime Minister doing or thinking on this subject? Can we get some response from him ? What kind of leadership is this? Silence and inaction is not good. It is time to take some responsible action.
.



.
.

15 comments:

Anonymous said...

ஏர் இந்தியா விமானிகளின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக அரசுக்கு ரூ.150 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய உள்நாட்டு விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் அஜ‌ித் சிங் தெரிவித்துள்ளார். மேலும் விமானிகள் எவ்வித நிபந்தனையும் இன்றி பணிக்கு திரும்ப வேண்டும் எனவும், விமானிகளின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அஜித் சிங் தெரிவித்துள்ளார். விமானிகளின் வேலைநிறுத்த போராட்டம் 9வது நாளாக தொடர்ந்த வருவது குறிப்பிடத்தக்கது.

Anonymous said...

புது தில்லி : கடந்த 7 நாட்களாக நடைபெற்று வரும் ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தத்தால் நிறைய விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. மேலும் வேலை நிறுத்தத்தால் ஆட்கள் சும்மா இருந்ததாலும் ஏர் இந்தியாவுக்கு கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று மாத்திரம் ஏர் இந்தியா 14 சர்வதேச விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 4 விமான சேவைகளை ரத்து செய்தது. இது குறித்து கருத்து கூறிய ஏர் இந்தியா மூத்த அதிகாரி விமானங்கள் ரத்தாலும், டிக்கெட் ரத்தானதால் பணம் திருப்பி கொடுக்கப்பட்டதாலும், வேலையின்றி ஆட்கள் இருந்ததாலும் சுமார் 100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதற்கிடையில் பேச்சு வார்த்தைக்கு தயார் என்று விமானிகள் தரப்பு முன் வந்தாலும் பணிக்கு திரும்பி வரும் வரை பேச்சுவார்த்தை கிடையாது என்ற நிலைப்பாட்டில் அரசு உறுதியாக இருப்பதால் பிரச்னை இப்போதைக்கு தீர்வது போல் தெரியவில்லை. -inneram

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,
சரியான பதிவு. சரியான நேரத்தில் வந்திருக்கிறது.
ஏர் இந்தியா போன்று அல்லாமல்..! :-)

நான் இதுவரை பயணித்தது கிடையாது. 'அதிலா பயணம் செய்ய போகிறீர்கள்..?' என்று முன்பு ஒருமுறை நானே உங்களை கேட்டுள்ளேன்.

//ஒரு நிறுவனத்தை தொடங்கும் போதே ஊழியர்களையும் 10 சதவீதம் அல்லது 20 சதவீதம லாபத்தில் பங்கு என்று அவர்களையும் பங்குதாரர்களாக்கி விட்டால் பிரச்னை முடிந்தது.//---மனது வைத்தால் எதுவும் சாத்தியமே..!

'நூற்றைம்பது கோடி... இருநூறு கோடி.. ஐநூறு கோடி.. நஷ்டம் எனக்கா வருது... மக்கள் காசுதானே... என நம் தலையில் நஷ்டத்தை கட்டுவார்கள். சம்பள பேச்சு வார்த்தைக்கு விமானிகளை மட்டும் கூப்பிட மாட்டார்கள். ஈகோ மனநிலை. ===இப்படி ஏர் இந்தியா நிர்வாகம்..!

'நான் மட்டும் ஆறு இலக்க சம்பளம் வாங்கி சுபிட்சமாக வாழ வேண்டும். மூன்று இலக்க தொழிலாளியின் விசா செத்து, அவன் வாழ்க்கை நாசமானால் எனக்கென்ன' என்ற மனநிலையில் ====ஏர் இந்தியா விமானிகள்.

எந்த அளவுக்கு ஏர் இந்தியா விமானிகள் பொருப்பற்றவர்களோ...
அதைவிட அதை நிர்வகிப்பவர்கள் பொறுப்பற்றவர்கள்.

நாம் ஏர் இந்தியாவை புறக்கணிப்போம். அப்போதுதான் இந்திய அரசும் அதை புறக்கணிக்கும். இதன் நஷ்டத்திலிருந்து நாடும் மீளும்.

suvanappiriyan said...

சலாம் சகோ ஆஷிக்!


//'நான் மட்டும் ஆறு இலக்க சம்பளம் வாங்கி சுபிட்சமாக வாழ வேண்டும். மூன்று இலக்க தொழிலாளியின் விசா செத்து, அவன் வாழ்க்கை நாசமானால் எனக்கென்ன' என்ற மனநிலையில் ====ஏர் இந்தியா விமானிகள்.//

இந்த சுயநலப் போக்கு அரசு துறையில் உள்ளவர்களால் என்றைக்கு மாற்றப்படுமோ அடுத்த நாளே இந்தியா வல்லரசுதான்.

//எந்த அளவுக்கு ஏர் இந்தியா விமானிகள் பொருப்பற்றவர்களோ...
அதைவிட அதை நிர்வகிப்பவர்கள் பொறுப்பற்றவர்கள்.//

சரியாக சொன்னீர்கள். இந்த குளறுபடிகளுக்கு காரணமே இதன் நிர்வாகிகள்தான். அரசு சொத்து நம் சொத்து என்ற மனநிலை இவர்களுக்கு எப்பொழுது வருமோ தெரியவில்லை.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

Anonymous said...

கஞ்சி குடிப்பதற்கில்லார்-அதன்
காரணம் இவை என்னுன் அறிவுமில்லார்
பஞ்சமோ பஞ்சமென -நிதம்
பதைபதைப்பார் மனம் துடிதுடிப்பார்
நெஞ்சு பொறுக்குதில்லையே-இந்த
நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்

என்னும் சுப்ரமணிய பாரதியாரின் ஆதங்கமான பாடலை கடந்த வாரம் ஒரு பொது நல மனுவில் வணக்கத்துக்குரிய சுப்ரீம் கோர்ட்டின் கருத்து நினைவு படுத்தியது. ‘ப்ளாஸ்டிக் பைகள் அணு குண்டை விட ஆபத்தானவை” என்ற கருத்தை மேதகு நீதிபதிகள் கூறியுள்ளனர். குடி நீருக்கான நன்னீர் வாய்க்கால்கள், குழாய்கள், கழிவு நீர் ஜல தாரைகள், ஏரிகள், குளங்கள் எல்லாமே ப்ளாஸ்டிக் பைகளால் அடைப்பு உண்டாகி குடி நீரைப் பாதுகாத்துப் பயன்படுத்துவது மிகவும் பாதிக்கப் படுகிறது. கழிவு நீர் அடைப்பால் ஆரோக்கியத்துக்கு ஊறு ஏற்படுகிறது. பசு மற்றும் ஆடுகள் மெல்லிய ப்ளாஸ்டிக் பைகளை உண்டு நோய்வாய்ப்பட்டு இறப்பது ஒரு அவலம். அவை தரும் பாலை, ஆட்டிறைச்சியை உண்போருக்கு ப்ளாஸ்டிக்கால் ஊறு ஏற்படுகிறது.
ப்ளாஸ்டிக் பைகளைத் தடை செய்வது பற்றி எந்த அரசாங்கத்துக்கும் உண்மையான அக்கறை கிடையாது. சாயக் கழிவுகளால் திருப்பூர் முதல் ஈரோடு வரை நிலத்தடி நீர் மாசு பட்டு ஏழை எளியோர் உடல் நலம், விவசாயம் ஆகியவை மிகவும் பாதிக்கப் பட்டது எந்த அரசுக்கும் பெரிய பிரச்சனையாகத் தெரியவில்லை. மக்களின் சுகாதாரத் தேவைகள், மருத்துவத் தேவைகள், கல்விக்குத் தேவையான பள்ளிகள் இல்லாமை பற்றியோ, சாலைகள், குடிநீர், மின்சாரம் இவற்றிற்கான பற்றாக்குறை பற்றியோ அக்கறை கிடையாது. பெண் சிசுக் கொலைகள், ‘தலித்’, நலிந்தோர், சிறுபான்மையினர் பிரச்சனைகள், மத நல்லிணக்கமின்மை, வேலை வாய்பின்மை போன்ற சமூகப் பிரச்சனைகள் மீதும் எந்த அரசாங்கத்துக்கும் அக்கறையோ இவற்றின் தீர்வுக்கான திட்டமோ கிடையாது. ஆனால் இந்தப் பிரச்சனைகளால் அரசியல் ஆதாயம் தேடுவதில் எந்தக் கட்சியும் ஏனைய கட்சிகளை விட இளைத்ததாகாது. இந்த ஒரே காரணத்தினால்தான் அரசாங்கம் பொறுப்பெடுத்துச் செய்திருக்க வேண்டிய பல விஷயங்கள் கிடப்பில் போடப்பட்டு, பின்பு பொது நல மனு மூலம் நீதி மன்றங்கள் தலையிட்டு ஓரளவு நிவாரணம் கிடைப்பது வழக்கமாகி விட்டது.

சேது சமுத்திரத் திட்டம், முல்லைப் பெரியாறு விவகாரம், காவிரிப் பங்கீடு , கூடங்குளம் விவகாரம் போன்ற விஷயங்களில் பொது கருத்து ஏற்படும் வாய்ப்பு குறைவு. ஆனால் மக்களில் உடல் நலம், கல்வி, சுகாதாரம், மருத்துவம் ஆகிய விஷயங்களில் ஏன் பொதுக் கருத்து கட்சிகளிடையே இல்லை? எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஏன் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான வாய்ப்பே ஏன் இல்லை?

-சத்யானந்தன்

Anonymous said...

Kavya says:
May 15, 2012 at 4:50 am

அமார்த்தியா சென் சொல்வது பொதுவாகச் சரிதான். கல்வியறிவு பெற்றவர்களையும் அர்சியல்வாதிகள் கைக்குள் போட முடியும். எப்படி? அக்கல்வியறிவு பெற்றவர்களின் சுயநலத்தைத் தங்களுக்குச் சாதகாகப்பயன்படுத்தி. ஒரு கல்வியறிவு படைத்தோர் நிறைந்த தெரு ஒன்று இருந்தால், அங்கு அரசியல்வாதி அவர்களுக்கு வேண்டியதைச் செய்து த்ன்னலம் காப்பாற்றிக்கொள்வான். நாலைந்து தெரு தள்ளி நான்கு நாட்களாக கெட்ட நீர் தேங்கிக்கிடக்கிறது; அல்லது சாலை சரியில்லையென்றால், கற்றவர் நிறைந்த தெருவினர் அதைபப்ற்றி நினைத்துக்கூட பார்ப்பதில்லை. அதே வேளையில் அத்தெருவில் க்ட்டிய நீரால் நோய்பரவி தம்தெருவுக்கும் வந்து விடுமோ என்றச்சம் வந்தால், இவர்கள் அதைத் தம் பிரச்சினையாக்கித் தீர்வுக்குத் துடிப்பரல்ல்வா? ஆக, கல்விக்கும் பொதுநலம் பேணுவதற்கும் தொடர்பில்லை என்று இந்தியர்கள் நிரூபித்து வருகிறார்கள்.

மதவெறிக்கு எளிதில் வீழ்கிறார் என்று தெரிந்தே வெளிநாடுகளில் வேலைப்பார்க்கும் இந்தியர்களிடையே மதப்பிரச்சாரங்களை இந்திய மதயமைப்புக்கள் தூண்டிவிட்டுவருகின்றன் எனப்து கண்டிபிடிக்கப்பட்டுவருகிறது. இணயதளங்கள் படிக்காப்பாமரர்களால் எழுத்ப்படுவதில்லை. அங்கு எவ்வள்வு வெறி !

பிளாஸ்டிக் கவரின் வைத்து வாங்கி சுற்றுப்புறச்சூழலை மாசுபடவைப்போர் படிப்பில்லா ப்ட்டிக்காட்டானா? படித்தவரும் தெரிந்தே செய்கிறார். ஏன், எங்கோதானே மாசுபடுகிறது. எனக்கு என்ன கவலை?
கல்வியறிவு வேண்டிய இடங்களும் உள்ளன. எ.கா. கூடங்குளம். படிப்பறிவில்லா மக்களுக்கு அதன் விளைவுகள் தெரியாது. ஆதூ வீஞ்ஞானம். அவரகளுக்கும் தெரிய வேண்டும். ஆனால் வெகு சாதாராண விசயங்களுக்கு அவசியமில்லை. பிளாஸ்டி சாக்கடையை அடைத்து தெருவை நாசம் பண்ணுகிறது எனப்து கண்கூடு. பார்த்தே தெரிந்து கொள்ளலாம். தெருவில இரவில் ஒலிபெருக்கிகள் அலறுவதனால் குழந்தைகள் தூங்க முடியவில்லை; மாணவர்கள் படிக்கமுடியவில்லை; இதுபோன்ற சாதாரண விசயஙக்ளுக்கு படிப்பறிவோ, விளக்க்கூட்டங்களோ தேவையே இல்லை. தமிழ்நாட்டு மக்களில் பெரும்பாலோர் தமிழ் நாளிதழ்கள் படிப்பவர்தான். அவை நாள்தோறும் படங்களையும் வெளிவிடுகின்றன.
இருந்தும் மக்களிடம் எழுச்சியில்லை. மக்கள் பொதுநலம் பேணாக்குணப்பாங்கே காரணம். கற்றவனுக்கும் க்ல்லாதவ்னுக்கும் பொதுநலவுணர்வில்லை. தான் வாழ்ந்தால் சரியென்ற நினைப்பு மட்டுமே இருக்கிறது.

இதே அமார்த்திய சென் இன்னொரு இடத்தில் சொன்னதாவது: இந்தியாவில் அரசு எவ்வளவுதான் நன்றாக புதுப்புது பொதுநலத்திட்டங்கள் தீட்டி அதைச்செயல் படுத்த ஆவன் செய்தாலும், மக்களின் அடிப்படை ஊழல் குணம் அவைகளை வெற்றியடையாமல் பண்ணுகின்றன. அவர் அரசியல்வாதிகளை மட்டும் சொலல்வில்லை. ஒட்டுமொத்தமாக இந்தியர்களைச்சொல்கிறார்.

Moral bankruptcy sweeps across the population in public affairs. It has not spared the Anna team: one exploits air concessional fares; the other member was ousted because he acted as a spy. From amoung this population arise the wily politicians to serve the wily people !

Anonymous said...

By Anirban Chowdhury of Dow Jones Newswires

Mumbai – National carrier Air India Ltd. Monday said it will raise 50 billion rupees ($926.7 million) over the next 10 years by either selling or leasing its real-estate properties, as part of its new business plan to turn itself around from losses.

The loss-making state-run carrier made the decision in a board meeting even as it continued to grapple with a work boycott by around 300 of its pilots over career-progression issues. The boycott forced it to cancel 24 mostly overseas flights Monday and several others in the next few days.

Air India has incurred losses for the last five years due to unprofitable flights, an unsuccessful merger and an inflated workforce. The Indian government has over the last few years repeatedly injected funds into the carrier, but has been yet unable to shore up its finances.

In a statement Monday, the carrier said it is looking for “top real estate consultants” for the sale or lease of its assets and will likely appoint one by June 30.

The carrier also said its board has approved issuing government-backed non-convertible debentures of 74 billion rupees for part repayment of its working capital debt from banks.

Air India has a history of industrial unrest by various sections of its 31,000-strong workforce, mostly over salary or career-progression issues.

The carrier was merged with the another national carrier, Indian Airlines, in 2007. Air India operated overseas flights before the merger, while Indian Airlines flew mostly on local routes.

The combined company hasn’t been able to fully merge the two workforces and several protests over the years have stemmed from the disparate salary structures between employees holding the same positions.

The latest protest was started May 7 by a section of pilots whom the airline decided not to train currently for its soon-to-be-acquired Boeing Dreamliner 787 jets.

Air India ordered 27 Dreamliners, the first of which will likely be delivered next month. The planes will be used on overseas routes.

The airline has more than 450 pilots to fly wide-bodied aircraft which operate overseas flights.

Pilots operating overseas flights get higher wages.

Air India in the last week fired 71 of its striking pilots and said it would not longer recognize the Indian Pilots’ Guild, a lobbying group which has been calling for the protests.

The pilots from the group Monday said they were willing to talk to management or the country’s aviation ministry to resolve the issue, but a company spokesman said neither would agree to hold talks until the pilots got back to work.

Anonymous said...

NEW DELHI/MUMBAI: Taking a tough stand, Government today said action will be taken against Air India pilots who have falsely reported sick and not resumed work, as the stir by over 200 pilots entered the eighth day leading to cancellation of 10 international flights.

A medical summary issued by the Civil Aviation ministry said most of the AI pilots, who called in sick, were neither found at home by doctors sent by the airline nor reported to doctors empanelled by the carrier. Their mobile phones were also unreachable.
Indicating that this was suspected all along, Civil Aviation Minister Ajit Singh said the Directorate General of Civil Aviation ( DGCA) will take action against them.

"You and me both know that we didn't need this report to understand what we knew from day one...in fact the Indian Pilots Guild's ( IPG) chief has been openly saying 'kal aur sick ho jayenge'(tomorrow more will fall sick)," Singh said, suggesting that the claims by pilots were bogus.

The airline has already sacked 71 striking pilots, who have been protesting against rescheduling of training programme of Dreamliner and issues related to their career progression.

According to the medical summary, about 48 out of the 53 Delhi-based pilots who reported sick were not found at home or their residences found locked and their mobiles unreachable.

Loose motion, vomiting, body ache were found to be the main reasons in the medical reports of the pilots residing at Hotel Hyatt.

Nine out of 18 outstation pilots, who were staying at the hotel, complained of bad stomach, loose motions, vomitting but none of them was found dehydrated, the summary said. Complaints of lower backache were reported by four outstation pilots but doctors found them medically fit.
-Times of India

khaleel said...

i will narrate my experience with saudi airlines here. its a bit long. please dont edit and publish in full.

i have booked a ticket to travel to jeddah for umrah for me, my wife and my two year old son during the last days of ramandan. if i remember correctly the next night was 27th of ramadan. the flight was at 4.00 pm.

we went to the airport to check in this flight at exactly 2.40 PM. The queue consisted of mostly saudis and few expats. the check in staff took one hard look at me and told me to wait. (i had a confirmed ticket with me and it was not on waiting list.) i waited for around 10 minutes. i can see that all the saudis are checked in and me and another pakistan family are the only two waiting. alarm bell started ringing inside my head and i cursed myself for not doing the online check in. after some time the check in staff told to my horror that the flight has been already closed and directed me to the office downstairs. i tried to put my point to him (that we have a valid ticket and we were on time) but in vain.

at around 3.10 pm i went to the saudi airlines counter in the airport and noticed that fish markets in india would be less noisy. there was no queue system and everybody was jostling to access the counter. after lot of struggle i managed to get near the counter staff who listened patiently to my complaint and assured me that the seat would be given to the next available flight which was at 5.00 pm. i went there again at 4.15 pm. he said that flight was also full and the seats will be given in the next flight which is at 6.00 pm. again i along with my wife and son waited. at 5.30 pm the counter was closed (even though the iftar time was around 6.20 pm).we broke our fast in the airport buying expensive food available in the canteen. the counter opened again at 8.00 pm. and again i enquired there. this time there was a new guy in the counter who didnt care a sh*t about what i was saying and told me to come after 1 hour. however saudis with open tickets (without confirmation) on waiting list were given seats on the next flight. but me with valid tickets were not just taken seriously.



i checked with one of my friend who said that he saw an ad in expatriates website about confirming saudi airlines ticket in black. but he asked for 400sr per ticket to confirm the ticket. i was surprised even such confirmation can be done in black market. anyway the amount he mentioned was way too big for me to pay. we broke our fast in the airport buying expensive food available in the canteen.


from the browsing centre in the airport i sent a mail to ibesupport@saudiairlines.com narrating my experience. i also kept on calling saudi airlines call centre and was put on wait for 15-20 minutes with noone answering. no reply received from that id also.


i ran from pillar to post from 3.10 pm and guess until what time me, my wife and son waited? until 1.00 am in the morning. yes. from arriving at the airport at 2.30 pm in the afternoon we waited till 1.00 am. we were totally fed up with this whole system of partiality and discrimination against expats. they are charging the same amount for saudis and indians but the service is very much discriminating against expats who doesnt have much 'wasta' or 'sufficient money power'.. around 1.00 am we left the airport and i even had thoughts of driving directly to makkah. but good sense prevailed and i decided against driving all the way in the night.

continued in next comment

khaleel said...

i have to give qurbaan for all three of us since we removed ihram without performing umrah. different people had different opinion saying that its not our mistake so we dont have give qurbaan, and since we didnt cross meqaat we dont have to give qurbaan and all. but still we have given qurbaan just to be on the safe side.



when i checked about my ticket with the call centre the next day it was shown as no show!!!. funny, here i am at the airport well ahead of the time to check in and i was shown as a no show??? i also paid some penalty to reuse that ticket again.

i felt frustrated, disappointed and feel cheated for the service done by saudi airlines. the feeling is same as being robbed by some theives at gun point.


after two days i took the risk of travelling in our car and i travelled with my family (alone) for 900 kms to makkah. with allah's grace we reached makkah safely and performed umrah. we took part in the last tharavie inside haram and the day after that was ramadan. we did our ramadan prayers in haram and left for madinah.




So this is the standard of service of saudi airlines. may be they have a different scale of service to saudis and non saudis. atleast air india gives poor service to everybody. airindia doesnt discriminate like saudi airlines did.



in my opinion air india is a lot better than saudi airlines.



recently my pakistani friend travelling from jeddah immediately after hajj had a similar experience from saudi airilnes staff in the airport but since he knew about my experience he postponed his travel by one day and did online check in and then travelled. therefore he was saved from the troubles that i faced.

this is the worst service that can be given by any airline whether air india saudi airlines or otherwise.

continued

khaleel said...

i may not be the only case. there could be thousands like this. i wrote a letter to the editor to arab news and as expected they didnt publish it.

you are able to read comments against air india from times of india bcos toi openly publishes comments against air india so we knew about the service. but this kind of cases will spread only by word of mouth in saudi and not by newspapers since the media here choose not to publish comments against the services done here.

when i checked with my colleagues and friends later most people had some kind of bizaare experiences with the airlines here. one filipino said that another passenger in hiis flight to manila also had the same boarding pass no. that he was having. he said he had to use all his persuasion and interpersonal skills to get his seat.

anyway of my many travels in saudi airlines in domestic and international this was the only time i had a trouble with the airlines. apart from that i had a smooth journey in all the flights. saudia allow atleast 60kgs comfortably when most airlines in the world are restricting to around 40 kgs. almost all the time flight takes off in time and lands in time. food they provide is very hygenic and of good quality.



just for your information please read the comments against saudi airlines in the below link. a flight from riyadh to jeddah was delayed by one hour since the pilot was late to work that day. this is the standard of service of saudi airline.

http://archive.arabnews.com/?page=1&section=0&article=126145&d=7&m=9&y=2009&pix=kingdom.jpg&category=Kingdom

http://saudijeans.org/2009/09/10/saudi-airlines-delay/

UNMAIKAL said...

.
.
CLICK

இஸ்லாத்தில் சாதிகள் இல்லையடி பாப்பா....!!!!
TO READ
.
.

suvanappiriyan said...

சலாம் சகோ கலீல்!

முதலில் உங்களின் நீண்ட பின்னூட்டத்தை அனுப்பியதற்கு நன்றி. எந்த நாட்டிலும் பணத்துக்கு ஆசைப்பட்டு சில காரியங்கள் நடைபெறுவது சகஜம். இதற்கு சவுதியும் விதி விலக்கல்ல. எனக்கும் பல அனுபவங்கள் உண்டு. ஆனால் பெரும்பான்மை சம்பவங்களை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். எனது நாட்டு விமான சர்வீஸ் சிறப்பாக இருந்தால் என்னை விட வேறு யார் அதிகம் சந்தோஷப்பட்டு விட முடியும்? நேரம் தவறாமை, வேலை நிறுத்தம் இல்லாமை இது இரண்டும் ஏர் இந்தியாவை விட சவுதியாவில் குறைவு என்பதே இந்த பதிவில் சொல்லப்பட்டது. ரியாத்திலிருந்து தபூக்கும் சவுதியாவில் சென்றுள்ளேன். சென்னைக்கும் சென்றுள்ளேன். ஏர் இந்தியாவிலும் சென்னைக்கு சென்றுள்ளேன். இரண்டு சர்வீஸ்களையும் ஒப்பிடும் போது எனது அனுபவத்தில் சவுதியாவின் சேவை சிறப்பாக இருந்தது. அதைத்தான் கோடிட்டுக் காட்டினேன்.

இங்கு இவ்வாறு ஒப்பிடக் காரணம் நமது நாட்டு விமான சேவையும் சிறந்த இடத்தைப் பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்திலேயே...

மற்றபடி ஹஜ் சீசன்களில் உலக ஹாஜிகள் லட்சக் கணக்கில் ஒரே இடத்தில் குவிய எத்தனைக்கும் போது சில அசௌகரியங்கள் ஏற்பட்டு விடுவது உண்டு. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையாக நமது குறைபாட்டினை பதிந்தால் உரிய நடவடிக்கை எடுப்பர். எனக்கு எடுத்திருக்கிறார்கள். உங்களுக்கு சில பிரச்னைகள் அதுவும் ஹஜ் நேரத்தில் ஏற்பட்டால் அதற்குரிய பலனை அந்த அதிகாரிகள் இங்கு இல்லா விட்டாலும் மறுமையில் பெற்றுக் கொள்வார்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

ராஜ நடராஜன் said...

சகோ.சுவனம்பிரியன்!நேற்று நீட்டி முழக்கி ஏர் இந்தியா பற்றி பின்னூட்டமிட்டேன்.இணைந்ததா இல்லையா என்றே தெரியவில்லை.

அப்பொழுது சொன்னதை இப்பொழுது
எடுக்கவா?தொடுக்கவா என்ற கர்ணனின் வார்த்தையே நினைவுக்கு வருகிறது:)

suvanappiriyan said...

சகோ ராஜநடராஜன்!

//சகோ.சுவனம்பிரியன்!நேற்று நீட்டி முழக்கி ஏர் இந்தியா பற்றி பின்னூட்டமிட்டேன்.இணைந்ததா இல்லையா என்றே தெரியவில்லை.//

இந்த பதிவுக்கு உங்களின் இந்த பின்னூட்டம் தவிர வேறு எதுவும் வரவில்லை. உங்களின் எந்த பின்னூட்டத்தையும் இதுவரை மட்டுறுத்தியதில்லை. ஸ்பேமிலும் சென்று பார்த்தேன். அங்கும் இல்லை. எனவே இது பிளாக்கரால் ஏற்பட்ட சொதப்பல் என்றே நினைக்கிறேன். சேவ் பண்ணி வைத்திருந்தீர்கள் என்றால் இன்னொரு முறை அனுப்புங்கள்.

நன்றி!