Followers

Sunday, January 05, 2014

இந்திய பாகிஸ்தான் கலந்துரையாடல்!



http://www.youtube.com/watch?v=Hap4Wa8emCg

மிகச் சிறந்த விவாதம். நம் நாட்டின் சார்பில் மணி சங்கர் ஐயர், உவைசி, கீர்த்தி ஆசாத் போன்ற பிரபலங்கள் நமது நாட்டு நிலையை வெகு அழகாக எடுத்து வைக்கின்றனர். பாகிஸ்தானிகளிலும் அதிகமான மக்கள் இந்தியாவோடு நட்புறவோடு செல்லவே விரும்புகின்றனர். இந்தியாவையும் இந்திய மக்களையும் அன்புடனேயே பார்க்கின்றனர். நம் நாட்டு இந்துத்வாவாதிகளைப்போல் அங்கும் சில தீவிரவாத போக்கு கொண்ட பாகிஸ்தானியர் மூர்க்கத்தனமாக இந்தியாவை எதிர்ப்பவரும் உள்ளனர்.

இந்த இரண்டு நாடுகளும் நெருங்கி வந்தால் அதனால் பலனடைவது இந்த பிராந்தியம் முழுவதுமே! ஆனால் அதற்கு அமெரிக்காவும், அமெரிக்காவுக்கு துணை போகும் இஸ்ரேலும், இஸ்ரேலின் கை காட்டுதலில் காரியமாற்றும் பிஜேபியும் இரு நாடுகளும் நெருங்கி வருவதை விரும்ப மாட்டார். முன்பு இரண்டு நாடுகளும் உயர் மட்ட பேச்சு வார்த்தைகளை நடத்தி நெருங்கி வரும் சமயம் சம்ஜோதா எக்ஸ்பிரஸில் குண்டு வெடித்து பல அப்பாவிகள் இறந்தனர். வழக்கம் போல் நமது நாடு இஸ்லாமியர்களை முதலில் கைது செய்தது. ஆனால் சில ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டதோ இந்துத்வாவாதியினர். இவர்கள் என்றைக்குமே பாகிஸ்தானோடு நட்புறவை விரும்ப மாட்டார். ஆனால் வல்லரசுகளின் சதுரங்க ஆட்டத்தில் பலியாவது என்னவோ அப்பாவி ஏழைகள் தான்.

11 comments:

suvanappiriyan said...

சகோ சலீம்!

//ஒரு மனிதனுக்கு இஸ்லாமிய அறிவு அரபி மொழி வழி பயிற்றுவிக்கப்பட்டால் தான் அவனால் ஈடுபாட்டுடன் வழிபாடு செய்ய முடியும்.//

தொழுகையில் வழிபாடு செய்வதற்கு அரபி அவசியம். அதனை காலை மதரஸாக்களே பூர்த்தியாக்கி விடும். பள்ளிக்கு செல்வதற்கு முன் காலை ஆறு மணிக்கெல்லாம் நான் குர்ஆன் மதரஸா சென்று விடுவேன். இன்று ஒரு அலுவலகத்தில் அரபியில் கணிணியை கையாளும் அளவுக்கு வளர்ந்துள்ளேன்.

//மார்க்கத்தில் யாராலும் அவனை குழப்ப முடியாது//

குர்ஆனையும் ஹதீஸையும் ஒருவன் அவனது தாய் மொழியில் விளங்கினால்தான் குழப்பமற்ற நிலைக்கு செல்ல முடியும். குர்ஆனின் மொழி பெயர்ப்பு கூட மூலத்தை ஆதாரமாக வைத்தே வழங்கப்படுகிறது. இன்றைய தமிழக இஸ்லாமிய இளைஞர்கள் சினிமா கலாசாரத்திலிருந்து விலகி குர்ஆன் ஹதீஸை கையிலெடுத்ததற்கான முக்கிய காரணம் குர்ஆனும் ஹதீஸூம் தாய் மொழியில் அதிகம் மொழி பெயர்க்கப்பட்டதுதான்.

நீங்கள் சொல்லும் அதே அரபி மொழியில்தான் 'துர்ருல் முக்தார்' என்ற ஆபாச களஞ்சியத்தை இஸ்லாமிய சட்டங்கள் என்ற பெயரால் இத்தனை வருடங்கள் நமது இளைஞர்கள் மதரஸாக்களில் பாடமாக படித்து வந்தனர். அதன் மொழி பெயர்ப்பு தற்போது வந்தவுடன்தான் ஓசைபடாமல் அந்த பாடங்களை தற்போது மதரஸாக்கள் நீக்கி வருகின்றன.

ஐரோப்பியர்களும், ஜப்பானியர்களும், சீனர்களும் அறிவியல் முன்னேற்றம் கண்டது அவர்களின் தாய் மொழியில் கல்வி கற்றதாலேயே!


Dr.Anburaj said...

ஐரோப்பியர்களும், ஜப்பானியர்களும், சீனர்களும் அறிவியல் முன்னேற்றம் கண்டது அவர்களின் தாய் மொழியில் கல்வி கற்றதாலேயே! தாய் நாட்டு மதத்தைப் பின்பற்றியதால்தான் முன்னேற்றம் என்பதையும் சொ்ல்லிவிடுங்கள். வளா்ச்சிக்கு இடம் கொடுக்க வேண்டும். காட்டறபிகளின் கலாச்சாரத்தை இஸ்லாம் என்ற பெயாில் ஏமாற்றி கற்றுக் கொடுத்து நாகரிகத்தை பின்னுக்கு தள்ளிக்கொண்டிருக்கின்றனா் அரேபிய மத காடையா்கள். அரேபிக் கலாச்சார சிந்தனையிருக்கும் வரை பாக்கிஸ்தான் ஒருபோதும் இந்தியாவுடன் நட்போடு இருக்காது. 800 வருட வரலாற்றை படிக்கும்போது சம்யுதா ரயில் விபத்து ஒன்றும் பொியதல்ல. உட்நாட்டு மதம் மற்றும் கலாச்சாரத்தை பின்பற்றாத வரை வெளிநாட்டு மதமான அரேபிய மதத்தைப்பின்பற்றும் வரை பாக்கிஸ்தான் நாடும் நிம்மதியாக இருக்காது.உள்நாட்டு குடச்சல்களுக்குப் பஞ்சமா ? சிந்து பகதி பலுசிஸ்பகுதி, இந்தியாவிலிருந்து சென்ற மக்கள் பஞ்சாப் மக்களின் மேலாதிக்கம் எ காதியானிகள் சிறுபான்மை இந்துக்கள் அழிப்பு என்று பாக்கிஸ்தான் அரசு பின்பற்றும் காட்டறபிக்கலாச்சாரம்தான் காரணம். இதில் இஸரவேல் என்ன செய்தது ? நமக்கு நவீக ஆயுதங்களை அளித்து பாக்கிஸ்தானை வெல்லும் நிலையில் வைத்துள்ளது இஸ்ரவேல். அதற்கு இஸரவேல் நாட்டை பாராட்ட வேண்டும்.

suvanappiriyan said...


திரு ராமா!

//With facts and findings by numerous courts and Commissions proclaiming NaMo’s innocence, he will parrot the tired old lines, knowing fully well that NaMo is innocent.//

புதுடில்லி: டில்லியில் இன்றைய நிருபர்கள் சந்திப்பில் பிரதமர் மன்மோகன்சிங் நரேந்திரமோடியை நேரடியாக தாக்கி பேசுகையில்: மோடி பிரதமரானால் நாட்டில் பேரழிவு ஏற்படும். ஆயிரக்கணக்கானவர்களை கொன்ற மோடிக்கு என்னை பற்றி விமர்சிக்க தகுதியில்லை என்றார். பிரதமராகும் தகுதி ராகுலுக்கு உண்டு என்றும், தான் 3 வது முறை பிரதமராக இருக்க மாட்டேன் என்றும்,தமது ஆட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்துள்ளதாகவும் கூறினார்.

அடுத்த பிரதமர் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை சேர்ந்தவராகத்தான் இருப்பர் பலவீனமான பிரதமர் என்று பா.ஜ., கூறுகிறது. அப்படியானால் ஆயிரக்கணக்கானவர்களை கொன்றால்தான் பலம் வாய்ந்தவரா? அப்படி பிரதமர் இந்த நாட்டுக்கு தேவையில்லை. மோடி பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறாது.யார் அந்த பா.ஜ., பிரதமர் வேட்பாளர் ? என்றும் கேள்வி எழுப்பினார்.

நன்றி: தின மலர்

கோர்ட் தீர்ப்புக்கு பிறகு நமது பிரதமர் மோடியைப் பற்றி கூறிய வார்த்தைகள் தான் இவை. இதற்கு உங்கள் பதில் என்ன?

suvanappiriyan said...

திரு க்ருஷ்ணகுமார்!

//இஸ்லாம் மதத்தை கபூல் செய்யாத ஹிந்துக்களின் மீது ஜிஸியா வரி விதித்த ஔரங்கஜேப்புக்கு இஸ்லாமிய மதவெறி இல்லை. மாறாக அவருக்கு அனைத்து மக்களின் மீது கருணை இருந்தது என்று எப்படி சொல்கிறீர்கள். இப்படி முழுக்கருத்து சொல்லாது அம்பேல் ஆகலாமா %)//

அம்பேல் ஆகவில்லை! ஏற்கெனவே பதில் சொன்ன கேள்வி என்பதால் அதனை தொடவில்லை. இனி அதையும் பார்ப்போம்.

இஸ்லாமிய ஆட்சியில் வரி எவ்வாறு வசூலிக்கப் படுகிறது?

முஸ்லிம்கள் மீது ஜகாத் எனும் வரியை இஸ்லாம் கடமையாக்கியுள்ளது. முஸ்லிம்கள் தங்களிடமுள்ள் தங்கம், வெள்ளி, பணம், வியாபாரப் பொருட்கள், ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய அனைத்திலிருந்தும் ஜகாத் எனும் வரி செலுத்தக் கடமைபட்டுள்ளனர்.

தங்கம், வெள்ளி, மற்றும் பணத்தில் இரண்டரை சதவீதமும், நீர் பாய்ச்சி விளைவிக்கப் படும் பொருட்களில் அய்ந்து சதவீதமும், இயற்கையாக விளையும் பொருட்களில் பத்து சதவீதமும் முஸ்லிம்கள் ஜகாத் எனும் வரி செலுத்தியாக வேண்டும். இது எவ்வளவு கணிசமான வரி என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு முஸ்லிம்களிடத்திலும் இந்த தொகையை கட்டாயமாக வசூலிக்க இஸ்லாமிய அரசுக்கு குர்ஆன் கட்டளை இடுகிறது.

இப்படி வசூலிக்கும் தொகையை யாருக்கு கொடுக்க வேண்டும்?

ஏழைகள், பரம ஏழைகள், கடன் பட்டிருப்பவர்கன், போரில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ராணுவ வீரர்கள், மற்றும் நாடோடிகள் நலனுக்காக இந்த வரியை அரசாங்கம் செலவு செய்யும். ஒரு அரசாங்கம் மக்களுக்குச் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளும் இந்த ஜகாத் எனும் வரியிலிருந்தே செய்யப் பட்டன.

மொத்த அரசாங்கமும், முஸ்லிம்களிடமிருந்து பெறப்படும் ஜகாத் வரியிலிருந்தே நடந்து வரும் போது, அந்த நாட்டில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்கள் எந்த வரியும் செலுத்தாமலிருப்பது எந்த வகையிலும் நியாயமாகாது. முஸ்லிம் அல்லாதவர்கள் மீதும் ஜகாத் வரியை கடமையாக்கினால் இஸ்லாமிய சட்டத்தை இந்துக்கள் மீது திணிப்பதாக ஆகும். எனவே தான் இது போன்ற நிலையில் முஸ்லிம் அல்லாதவர்கள் மீது ஜிஸ்யா என்ற வரியை (ஜகாத் என்ற வரிக்கு பகரமாக) விதிக்க குர்ஆன் கட்டளையிடுகிறது. இதைத்தான் ஒளரங்கஜேப்பும் செய்தார். இதைத்தான் நமது வரலாற்று ஆசிரியர்கள் குறை கண்டு எழுதி வைத்திருக்கிறார்கள்.

suvanappiriyan said...

சாரங்!

//முதலில் அல்லா இறக்கின மறை ஏன் ஹீப்ரூவில் இருக்கிறது, அடுத்தது லாடினில் அடுத்தது அரபு மொழியில்.//

உலகில் உள்ள மூல மொழிகள் அனைத்திலும் இறை வேதம் வந்துள்ளது. இறைத் தூதரும் வந்துள்ளதாக குர்ஆன் கூறுகிறது. நமது நாட்டுக்கும் தூதர் வந்துள்ளார். அது திருவள்ளுவராகவோ, கண்ணனாகவோ கூட இருக்கலாம்.

//அல்லா ஏன் நபிகளை வேறிடத்தில் பிறக்க வைத்து அந்த இடத்து மொழியில் குரானை இறக்க வில்லை. தூதருக்காக என்றால் அது அவரோடே போகட்டும், மத்தவன ஏன் தொல்லை படுத்துறீங்க.//

'இந்தக் குர்ஆன் ரமலான் மாதத்தில் அருளப்பட்டது. இது மனிதர்களுக்கு நேர் வழிக் காட்டும்'
-குர்ஆன் 2:185

இங்கு குர்ஆன் இஸ்லாமியர்களைப் பார்த்து பேசவில்லை. உலக மக்கள் அனைவரையும் பார்த்து பேசுகிறது.

//தமிழ் மொழியிலேயே குரான சொல்லுவீர்களா? எதுக்கு ஊரெல்லாம் ஸ்பிகர் போட்டு அரபு மொழில கத்துறீங்க.//

தேசிய கீதத்தை ஏன் வங்காள மொழியில் நாட்டுப் பற்றோடு பாடுகிறீர்கள்? அதையும் தமிழில் மொழி பெயர்க்கலாமே!

நாட்டு ஒற்றுமைக்காக ஜன கன மன வை வங்காள மொழியில் பாடுவதைப் போல் உலக ஒற்றுமைக்காக பாங்கு அரபியில் சொல்லப்டுகிறது. அரபு தேவ பாஷை என்றும் குர்ஆன் கூறவில்லை.


suvanappiriyan said...

திரு க்ருஷ்ணகுமார்!

//தேசப்பிரிவினைக்கு உழைத்த கயவன் காயிதேமில்லத் பற்றி ஒன்றும் சொல்ல முடியாது என்பது புரிகிறது//

தமிழகத்தில் கண்ணியத்திற்குரிய என்றாலே அடுத்து காய்தே மில்லத் என்ற பெயர்தான் வரும். பெரியாரும், அண்ணாவும், ராஜாஜியும், கலைஞரும் கொண்டாடிய ஒரு ஒப்பற்ற தலைவரை கயவன் என்று கூற எப்படி ஐயா மனது வந்தது. மோடியை நேசிப்பவரிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

நாடு பிரிவதில் காயிதே மில்லத்துக்கு உடன்பாடு கிடையாது. ஆனால் ராஜாஜி நாடு பிரிவினையை ஆதரித்தார். நாடு பிரிவுற்றபோது முஸ்லிம் லீக்கையும் இரண்டாக பிரித்து இந்திய யூனியனுக்கு தலைவரானவர் இஸ்மாயில் சாகிப். இஸ்மாயில் சாகிப் பாகிஸ்தான் பிரிவினைக்கு ஆதரவான கருத்தை எடுத்தார் என்பதனை எதன் அடிப்படையில் கூறுகிறீர்கள்? என்ன ஆதாரம்? ஜின்னாவுக்கு நேரெதிராக செயல்பட்டவரே காயிதே மில்லத் அவர்கள்.

1971 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் ஆக்கிரமிப்பு செய்தபோது அதை எதிர்த்த அரசியல் தலைவர்களுள் காயிதே மில்லத் முக்கியமானவர். நமது அருமைவாய்ந்த தாயகத்தின் மீது பாகிஸ்தானியர் நடத்தும் ஆக்கிரமிப்புக்கு நான் பலத்த கண்டனம் தெரிவிக்கின்றேன். ஐயந்திரிபற்ற எனது கண்டனத்தைத் தெரிவிக்கின்றேன். இந்தியா எங்கணும் உள்ள முஸ்லிம் மக்களும் மற்றுமுள்ள அனைத்து மக்களும் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பை எதிர்த்து இந்திய அரசாங்கத்தின் பின்னாலும் பிரதமரின் பின்னாலும் ஒருமுகமாகவும் உறுதியாகவும் நிற்கிறார்கள் என்றார் காயிதே மில்லத்.

இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராக இருந்தபோது இந்திக்கு எதிராகவும் தமிழுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தவர் காயிதே மில்லத். ”ஒரு உண்மையை இச்சபை முன்பு துணிவோடு கூற விரும்புகிறேன். இந்த நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகவும் பழமையானதும், ஆரம்ப காலத்தில் இருந்து பேசப்பட்டு வரும் மொழியாக இருப்பதும் தமிழ்தான். எனது கூற்றை எந்த வரலாற்று ஆசிரியராலும் மறுக்க முடியாது. எந்தப் புதை பொருள் ஆராய்ச்சியாளராலும் எதிர்க்க முடியாது. உயர்தரமான இலக்கிய வளங்களும், நயங்களும் நிறைந்த மொழி தமிழ். இது எனது தாய் மொழி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அம்மொழியை நான் நேசிக்கிறேன். அம்மொழியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். பழமையான மொழியைத்தான் இந்நாட்டின் தேசிய மொழியாக்க வேண்டுமென்றால் இந்தியாவின் தேசிய மொழியாகத் தமிழைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்று பேசினார் காயிதே மில்லத்.

suvanappiriyan said...

சாரங்!

//ஷாஜஹான் காலத்திலேயே, ஹிந்து கோவில்களை பழுது பார்பதற்கும், புதிய கோவில்களை கட்டுவதருக்கும் தடைகள் விதிக்கப்பட்டன. இது சீப்பு காலத்தில் மிக கொடூரமானது. சீப்பு, கோவில்களை நிர்மூலமாக்கி அதன் மேல் மசூதி கட்ட உத்தரவிட்டதர்கான ஆதாரங்கள் நிறைய இருக்கு.//

ஒளரங்கஜேப் இந்து கோயில்களை இடித்தாரா?

1679 ல் அவருடைய ராணுவத்தில் 'மன்சூதார்கள் ' என்றழைக்கப்படும் உயர் ராணுவ அதிகாரிகளின் எண்ணிக்கை 575. அதாவது பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களுக்கு ஒரு மன்சூதார் என்ற கணக்கில் இருந்தனர். அதில் 182 பேர் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் (நிச்சயமாக இடதுசாரிகள் அல்ல). அதுபோன்று நம்பிக்கைக்குரிய அமைச்சர்களில் முக்கியமானவர்கள் ராஜா ஜெஸ்வத் சிங், ராஜா ஜெய்சிங் ராஜா அவ்ராத்சிங் ஹதா, பீஷம்சிங் கத்வானி ஆகியவர்கள்.
சுவாத்தி என்றரசன் மஹோலியைக் கைப்பற்றுவதற்காக படை எடுத்துச் சென்றபோது அதை காப்பாற்றுவதற்காக ராஜா மனோகர்தாஸ் என்ற மன்சூதார் தலைமையில் ஒரு படையை அனுப்பிவைத்தார் என்று வரலாறு கூறுகிறது.

திரு P. N. பாண்டே அவர்கள் அலகாபாத்தில் மேயராக இருந்தபோது கோயில் பற்றிய ஒரு பிரச்சினை வந்தது. ஒரு கோயிலுக்கு வழங்கப்பட்டுக்கொண்டிருந்த மானியம் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் அதை மீண்டும் வழங்கக் கோரி அந்த கோயிலின் Trust வழக்குத் தொடர்ந்தது. அதற்கு ஆதாரமாக Royal Farman என்று சொல்லப்படும் அரசு ஆணை ஒன்றை முன் வைத்தது. அந்த அரசு ஆணை மன்னர் அவுரங்கசீப் அவர்களினால் பார்ஸி மொழியில் வழங்கப்பட்டிருந்தது.
மதவெறிப் பிடித்து கோயிலை இடிக்கும் மன்னன் ஒரு கோயிலுக்கு மானியம் எப்படி வழங்கமுடியும் ? அது பொய்யான ஆவணமாகத்தான் இருக்கமுடியும் என்று பாண்டே கருதினார். இருந்தாலும் அதை பரிசீலிக்கக் கருதி பாரஸீக மொழியிலிருக்கும் அரசு ஆணைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்துக்கொண்டிருந்த திரு ராஜா தேவ்பஹ்தூர் பர்மன் அவர்களிடம் கொடுத்து ஆராய்ந்தபோது அது உண்மையானதுதான் என்று ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. தவிர மேலும் ஆரய்ந்தபோது மதுரா கோயில் உள்பட நானூறுக்கும் மேற்பட்ட கோயில்கள், குருதுவாராக்கள், ஜெய்ன மடங்களுக்கு மானியம் வழங்கி அவற்றின் பராமரிப்புக்கு உதவினார் என்பதும் தெரியவந்தது. இதை பற்றி பேராசிரியர் சதீஷ்சந்திரா தன்னுடைய ' 'Essays on Medieval India ' வில் இப்படி கூறுகிறார் :-

Not only did many old Hindu Temples continue to exist in different parts of the country, there is also documentary evidence of Aurangazeb 's renewal of land grants enjoyed by Hindu Temples at Madhura and elsewhere, and of his offering gifts to them. (such as to the Sikh Gurudwara at Dehra Dun, continuation of Madad-i-m 'aash grants to math of Nathpanthi yogis in Pargana Didwana, Sarkar Nagar to Ganesh Bharti...


கோயிலுக்கு மானியம் வழங்கும் மன்னன் காசி விஸ்வநாதர் ஆலயத்தைமட்டும் ஏன் இடிக்கவேண்டும் ? அதை இடித்து பொன்னும் பொருளையும் கொள்ளை அடித்தான் என்று வரலாற்றில் காணப்படவில்லை; இல்லை அணு ஆயுதம் chemical weapon அப்படி இப்படி என்று பொய்யை உலகிற்கு சொல்லி புஷ் மஹாராஜா ஈராக்கைத் தாக்கி அழித்ததைப் போல் அங்கு வைரங்களும் வைடூரியங்களும் நிறைந்து கிடக்கின்றன என்ற பேராசையில் கோயிலை இடித்தான் என்றும் வரலாறு இல்லை. பின் ஏன் இடிக்கவேண்டும் ? தலைமைப் பூசாரி திருவாளர் பண்டிட் மகந்த்ஜி கட்ச் ராணியை வைகுண்டத்துக்கு அழைத்துச் சென்று பரமபதம் ஆடியது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. இதை பூசிமெழுகினால் எப்படி ? ஆனால் ஒரு திருத்தம், பூசாரி சாரின் செயலால் கோயிலின் தூய்மைக் கெட்டுவிட்டது எனவே அங்குள்ள விக்ரகத்தை எடுத்துவிட்டு வேறு இடத்தில் வைக்குமாறு ராஜாக்கள் humbly கேட்டுக்கொண்டதால் அந்த கோயிலை இடித்துவிட்டு இப்போதிருக்கும் இடத்தில் கோயில் கட்டிக்கொடுத்தார் என்பதுதான் வரலாற்று நிகழ்வு. இந்த தகவலை ஆராய்ந்துச் சொன்னவர் மிஸ்டர் பாண்டே .

அவுரங்கசீப் ஆலயத்தை இடித்ததை நம்மால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால் பல கோயில்கள் இந்து மன்னர்களால் இடிக்கப்பட்டு சூரையாடப்பட்டுள்ளதே! அதை ஏன் நாம் கண்டுக்கொள்வதில்லை ? சாசங்கன் என்ற மன்னன் குப்த கோயில்களை இடித்துத்தள்ளியிருக்கிறான் என்பது வரலாற்று உண்மை; ஹர்ஷ்பேறு என்ற மன்னன் கோயில்களை இடித்து அங்குள்ள பொன்னும் பொருளைகளையும் கொள்ளையடிப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தான், அதற்கென்று தனிப்படை அமைத்து தனி மந்திரியும் அமைத்திருந்தான்; பார்மரா நாட்டு மன்னன் குஜராத்திலுள்ள சமணக்கோயில்களை இடித்து தள்ளியுள்ளான்; இப்படி பட்டியல் நீண்டுக்கொண்டு போகிறதே! ஏன் நம்ம காஞ்சி காமாட்சி அம்மன் கோயில்கூட சமணக் கோயிலாக இருந்ததாக வரலாறு கூறுகிறதே!!

suvanappiriyan said...

அன்புராஜ்!

//தாய் நாட்டு மதத்தைப் பின்பற்றியதால்தான் முன்னேற்றம் என்பதையும் சொ்ல்லிவிடுங்கள். //

ஐரோப்பியர்களுக்கும், ஜப்பானியர்களுக்கும், சீனர்களுக்கும் மதமே கிடையாதே! :-)

Anonymous said...

http://www.arabnews.com/news/502136

Anonymous said...

பாம்புக்கு
பால் வார்ப்பதும் பாகிஸ்தானியர்களுடன் உறவு கொள்வதும் ஒன்றுதான். இரண்டுமே
படு ஆபத்தானது. நச்சு விலங்குகளுடன் உறவு வைப்பது நாட்டை குழி தோண்டி
புதைப்பதற்கு சமம், பாகிஸ்தானியர்கள் எவ்வளவு தான் கேவலமாக நடந்து
கொண்டாலும் இந்திய முஸ்லீம்கள் தங்கள் சகோதர பாசத்தை விட்டு கொடுப்பதே
இல்லை. தனது சொந்த நாட்டையே முன்னேற்ற முடியாமல், வன்முறையும் மதவெறியுமே
வாழ்க்கை நெறியாக வைத்திருப்பவர்களால் தான் இந்த பிராந்தியம் முன்னேற
போகிறதாம். மன நோயாளிகளுக்கு தான் இது போன்ற சிறப்பான சிந்தனைகள் வரும்.

Dr.Anburaj said...

அன்புராஜ்!

//தாய் நாட்டு மதத்தைப் பின்பற்றியதால்தான் முன்னேற்றம் என்பதையும் சொ்ல்லிவிடுங்கள். //

ஐரோப்பியர்களுக்கும், ஜப்பானியர்களுக்கும், சீனர்களுக்கும் மதமே கிடையாதே! :-) தங்களது மூளை என்ன கெட்டுப்போய்விட்டதா? சீனா்களுக்கு கன்புசியஸ் மற்றும் கௌமத புத்தா் வழிகாட்டியாக உள்ளாா்.ஜப்பானுக்கு முகம்மதுவுக்கும் குரானுக்கும் 900 ஆண்டுகள் மூத்த கௌதம புத்தா் வழிகாட்டியாக உள்ளாா்.கௌதம புத்தா் வழிபாடு இந்தியாவிற்கு அடிமைகளை உருவாக்க வில்லை.புத்தமதம் சீனா்களின் ஜப்பானிய மக்களின் உள்நாட்டு கலாச்சாரத்தோடு இரண்டறக் கலந்து விட்டது.புத்தனை பின்பற்றும் சீனரும் ஜப்பானியரும் இந்தியாவிற்கு அடிமையாக வாழ்வதில்லை.சுதந்திரமாகவே உள்ளனா்.ஆனால் இஸ்லாமைப்பின்பற்றுகிறவா்கள் காடடறபிகளின் அடிமையாக உள்ளனா். குமுஸ் பெண்களை வைப்பாட்டியாக வைத்திருப்பதை நியாயப்படுத்தும் குரான் ஒரு வேதம் என்ற பட்டம் பெற தகுதியற்றது