Followers

Thursday, January 09, 2014

நாலடியார் - பேச்சா ? குரைப்பா?

கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து
நல்லறி வாள ரிடைப்புக்கு - மெல்ல
இருப்பினும் நாயிருந் தற்றே, இராஅது
உரைப்பினும் நாய்குரைத் தற்று.

பொருள்

கல்லாது நீண்ட ஒருவன் = கல்வியறிவு இல்லாது வளர்ந்த ஒருவன்

உலகத்து = இந்த உலகில்

நல்லறி வாள ரிடைப்புக்கு = நல்ல அறிவுள்ளவர்கள் மத்தியில் செல்வது

மெல்ல இருப்பினும் = சுவடு படாமல், மெல்ல போனாலும்

நாயிருந் தற்றே = அது நாய் இருப்பது போலத்தான்

இராஅது = அது சும்மா இருக்காது

உரைப்பினும் = பேசினால் கூட

நாய்குரைத் தற்று = குரைப்பது போலத்தான் இருக்கும்

கற்றறிந்தோர் சபையில் பேசாமல் இருப்பது நல்லது....

அரசியல்வாதிகள், ஆன்மீக வாதிகள் என்று பலரும் உரிய கல்வி இல்லாமலேயே முக்கிய பதவிகளை தங்களது செல்வாக்காலும் பண பலத்தாலும் பெற்று விடுகிறார்கள். அப்படி குறுக்கு வழியில் பெற்ற அந்த இடத்தை அடைந்தும் அவர்களின் கல்வியறிவு குறைவினால் தாங்கள் யார் என்பதை உலகுக்கு தங்களையறிமாலேயே காட்டி விடுவார்கள். எல்லாம் தெரிந்த மேதாவி மாதிரி பேசவும் தொடங்கி விடுவார்கள். இது எப்படி இருக்கிறது என்றால், பெரிய சபையில் நாய் நுழைந்த மாதிரி. அது நுழைந்ததே தப்பு. சரி, நுழைந்து விட்டது. பேசாமலாவது இருக்கலாம் அல்லவா ? அதால் இருக்க முடியாது. அது பேசவும் ஆரம்பித்தால், அது எப்படி இருக்கும். நாயின் குரைப்பாகத்தான் இருக்கும். அதில் ஏதாவது அர்த்தம் இருக்குமா ? இனிமை இருக்குமா ?

------------------------------------------------

''கல்வி கற்பது ஒரு வணக்கமாகும்'' (இப்னு மஸ்ஊத்). ''சிறிது நேரம் கல்வி கற்பது ஓர் இரவு நின்று வணங்குவதை விட மேலானதாகும்'' (அபூதர்தா) ''சிறிது நேரம் இருந்து எனது மார்க்கத்தைப் பற்றிய அறிவைப் பெறுவது ஓர் இரவு முழுவதும் விடியும் வரை நின்று வணங்குவதை விட எனக்கு விருப்பமானதாகும்'' (அபூஹுரைரா)

''கடமையான தொழுகை போன்ற செயல்களை அடுத்து அறிவைத் தேடுவதைவிடச் சிறந்ததோர் அமல் இல்லை'' (இமாம் அஸ்ஸெளரி) ''கடமையில்லாத தொழுகையை விட அறிவைப் பெறுவது சிறந்தது'' (இமாம் அஷ்ஷாபிஈ)

''எமது மூதாதையர் எதில் இருக்கக் கண்டோமோ அதுவே எமக்குப் போதுமானது''. ''நாம் எமது தலைவர்களையும் பெரியோர்களையும் பின்பற்றுபவர்கள்'' என்று கூறிச் செயற்படுவோரை இஸ்லாம் மூடர்கள் என்று கண்டிக்கின்றது.

மேலும், இஸ்லாம் அறிவியலுக்கு முரணான யுகங்களை மறுத்துரைக்கிறது. அனைத்து நம்பிக்கைகளும், மார்க்க நம்பிக்கைகள் உட்பட உறுதியான அறிவின் அடிப்படையில் அமையவேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றது. முஷ்ரிகீன்களைப் பற்றியும் அவர்களது கற்பனையான தெய்வங்களைப் பற்றியும் கூற வந்த அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.:

''இவைகளெல்லாம் நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்களேயன்றி வேறில்லை. அதற்காக இறைவன் (உங்களுக்கு) எவ்வித ஆதாரத்தையும் இறக்கிவைக்கவில்லை. அவர்கள் சந்தேகத்தையும் மனோ இச்சையையுமே பின்பற்றுகின்றனரேயன்றி வேறில்லை''. (53:23)

நம்பிக்கைகள் அனைத்தும் ஆதாரத்தின் அடிப்படையில் அமையவேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகின்றது. எனவேதான் அல்குர்ஆன் பிழையான நம்பிக்கைகளைக் கொண்ட மனிதர்களை விளித்து, கீழ்வருமாறு கோரும்படி நபியை வேண்டுகின்றது.

''நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால் உங்களது ஆதாரத்தை கொண்டுவாருங்கள் என்று (நபியே) கூறுங்கள்''(2:111)

''எவர்களுக்குக் கல்வியறிவு கொடுக்கப்பட்டிருக்கின்றதோ, அவர்கள் நிச்சயமாக, இது உமது இறைவனிடமிருந்து வந்த உண்மை என்று உறுதியாக அறிந்து, இதை விசுவாசித்து மனப்பூர்வமாகவே அவனுக்கு வழிப்படுகின்றனர்'' (22:54)

4 comments:

Anonymous said...

IIM Ganapathi Raman says:
January 8, 2014 at 2:41 am

இராமன் மனிதனாக இந்துக்களால் பார்க்கப்படவில்லை. அப்படி மனிதனானால், இந்துமதம் தன்னிலை குலைந்துவிடும். மதம் நம்பிக்கைகளால் கட்டப்பட்டது. இப்ப்டி நம்புகிறார். அப்படியே போகட்டும். என விட்டுவிட்டு அந்த நம்பிக்கை வைத்து அவர்களால் தீங்கு செய்யப்படுகிறதா, நன்மையா செய்யப்படுகிறதா என்ற் கேள்வியே எழ வேண்டும்.

கத்தியை வைத்து கயவர்கள் மனித உயிர்களை எடுத்து மகிழ்வார்கள். மருத்துவர்கள் கொடுத்து மகிழ்வார்கள். அதே போல இராம காதையை நம்பி மசூதியை உடைக்கலாம். இந்துகளையும் இசுலாமியரைகள் ஒருவருக்கொருவர் எதிராக நிற்க வைத்து இந்திய அமைதிக்குப் பங்கம் விளைவிக்கலாம்.

இராமனின் பலபல செயல்களைக் கடைபிடித்து – ஏக பத்தினி விரதம், தந்தை தாயை உயிருக்கு மேலாக மதித்து நடத்தல், சொன்ன வாக்குகளைக்காப்பாற்றல், மனிதர்களுக்கிடையே பாகுபாடுபாராமல் அவர்கள் நல்ல உள்ளஙக்ளை வாழ்த்தி, அப்படிச்செய்யாதோரைக்கடிதல் (சப்ரி கதை, இலக்குவணைக்கடிதல்) – இப்படிப்பார்த்து, பிறகதாபாத்திரங்களையும் – தன் அண்ணியைத் தெய்வத்துக்குச் சமமாக வைத்தல் – தன் அண்ணியின் முகத்தைக்கூட பாராமல் காலைப்பார்த்தே பேசுவான் இலக்குவணன் என்கிறார் வால்மீகி- தன் அண்ணனுக்குச்சேரவேண்டியது அநீதியாக தனக்கே வந்தாலும் அதைப்பேணி அண்ணனிடமே கொடுத்துவிடல் – பரதன் கதை – பிறன்மனை நோக்கா பேராண்மை உடைய இராமனின் மனைவியைக்கவர்ந்து தன் அழிவுக்குக் காரணமாதல் – இராவணன் கதை – இப்படி பலபல வாழ்க்கைச்சித்திரங்களைக்கண்டு தங்கள்தங்கள் வாழ்க்கையைச்செம்மைப்படுத்தியோர் உண்டு. செம்மைப்படுத்தலாம். அதே வேளையில் இராமன் மற்றும்ப்ல கதாபாத்திரங்களில் ஏற்கமுடியா செயல்களை விட்டுவிடலாம். உலகில் எதுவும் முழுமையாக வருவதில்லை. நிலவிலும் கலங்கமுண்டு.

ஆக, இராம காதை உண்மையா பொய்யா, இராமன் மனிதனா அவதாரமா என்ற கேள்விகளைவிட, அக்கதையை வைத்து பிறம்க்களுக்கும் நுமக்கும் கொடுமைகள் இழைத்தீர்களா, அல்ல நன்கு வாழ்ந்தீர்களா என்ற கேள்வியுடனே இச்சீதாயாணம் முடியவேண்டும்.

Anonymous said...

IIM Ganapathi Raman says:
January 8, 2014 at 2:26 am

//இராமகதை உண்மையாக இந்தியாவில் நிகழ்ந்தது என்பது என் உறுதியான கருத்து.//

இப்படிப்பட்ட எழதா வரலாறு, செவிவழி வந்தது எப்போது என்றே தெளிவில்லாவதவற்றைப்பற்றி தம் உறுதியானக் கருத்து என்று வரலாற்றாய்வாளர்கள் கூட வைத்துக்கொள்வதில்லை.

இராஜாஜி, அப்படி இராமன் அவதாரமில்லையென எழுதவில்லை. அவர் எழுதியது; விஷ்ணு மனிதஅவதாரமெடுத்தபடியாலே, அவ்வவதாரம் மனிதனின் நிறை குறைகளைக்கொண்டு வாழவேண்டியதாயிற்று. அப்படி வாழ்ந்த‌து மனித வர்க்கத்துக்கு பல பாடங்களை எடுத்துக்காட்டவே. அதாவது சீதையை தீக்குளிக்கச்சொன்னால், அப்படி மற்றவன் பேச்சைக்கேட்டு உன் பெண்டாட்டியைச் சந்தேகித்துக்கொள்ளாதே என்று பொருள் எடுத்துக்கொள்ளுங்கள் என்பதுதான்.

இராம காதை ஒரு ஹிதிகாசம். அதை இந்துக்களின் புனித நூல் என்று இந்துக்களில் பலர் ஏற்றுக்கொள்ள, இன்னும் பலர் வெறும் காவியமாகத்தான் ஏற்றுக்கொள்ள, பொது இந்தியர்களுக்கு பொது காவியமாகவும் இருந்துவருகின்றது. எனவே ஒருவர் இராமனை வெறும் மனிதனாகப் பார்த்து எழுதுவது ஒன்றும் தவற்ன்று. அப்படித்தவறென்று சொல்பவர் அனைவரும் ஆஃப்கானிஸ்தான் சென்று தாலிபானின் சேர்ந்து விடலாம். இந்துமதத்திலிருந்து விலக்கிக்கொள்ளுங்கள்.

பல்லாயிரக்கணக்கான நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்தே செவிவழிக்கதையாக கேட்ட இராமகாதையில் இடைச்செருகல்கள் இருக்க் முடியாது என்று கிருஸ்ணகுமாரின் கருத்து கற்றோர் சபையில் சிரிப்போலியை உண்டாக்கும். தரவுகள் கேட்பதும் அப்படித்தான். பகவத்கீதையே இடைச்செருகள் ம்ஹாபாரத்தத்தில் என்பது பலர் கருத்து.

கண்ணகியையும் சீதையையும் ஒப்பிடுகிறார் ஜயபாரதன். தவறு. கண்ணகி கணவனால் கைவிடப்பட்டு அலந்தவள் அன்று. கணவன் கொல்லப்பட்டான். அதற்கு நீதி கேட்டுப்போராடி அப்போராட்டத்தில் வெற்றிபெற்று. அதன் பின்னர் கணவனில்லா வாழ்க்கை பாழ் என்ற நோக்கிலே வான்மேகினாள். சீதை கணவனால் கைவிடப்பட்டவள். எப்படி ஒப்பிட முடியும்?

Anonymous said...

ஷாலி says:
January 7, 2014 at 5:47 pm

 //தேவ மைந்தனாகக் கருதப்படும் ஏசு பெருமான் பூலோகத்தில் ஒரு தாயின் வயிற்றில் ஏதோ ஒரு தந்தைக்குச் சிசுவாய்ப் பிறந்து,//
ஏதோ ஒரு தந்தைக்கு ஏதோ ஒரு தந்தைக்கு ஏதோ ஒரு தந்தைக்கு ஏதோ ஒரு தந்தைக்கு ……….//

திருக்குரானில் உள்ள 6666 வசனங்களில், இஸ்லாத்தை போதித்த நபிகள் நாயகம் அவர்களின் பெயர் நான்கு இடங்களில் மட்டுமே இடம் பெறுகிறது.ஆனால் இவருக்குமுன் 600 வருடங்களுக்கு முன் வாழ்ந்த இயேசு கிறிஸ்து என்னும் ஈஸா நபியின் பெயர் குரானில் 25 இடங்களில் இடம் பெற்றுள்ளது.திருக்குரானில் பெயர் சொல்லப்படும் ஓரே பெண் பெயர் மரியம்.(மேரி) மொத்தம் உள்ள 144 அத்தியாயங்களில் 98 வசனங்கள் அடங்கிய ஒரு அத்தியாயத்திற்கு பெயர் சூரத்துல் மரியம்.(Chapter Mary)
இயேசுவின் பிறப்பை பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது? தெரிந்து கொள்வோம்.

வானவர் தூதுவர் கேப்ரியேல் மரியத்திடம் மனித உருவில் வந்து,
“மரியமே! உனக்கு இறைவன் ஈஸா என்ற மகனை நற்செய்தியாக வழங்குகின்றான் என்றதும் அதற்க்கு மரியம், “ எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?” என்று கேட்டார்.
“இது எனக்கு சுலபமானதே! மனிதர்களுக்கு அத்தாட்சியாகவும்,நம்மிருந்து ஓர் அருளாகவும் நாம் அவரை ஆக்குவோம். இது விதிக்கப்பட்ட விசயமாகும்” என்று உம் இறைவன் கூறுகிறான் என்றார்.”

பிறகு குழந்தை பிறந்ததும் அதை சுமந்துகொண்டு தம் ஜனங்களிடம் சென்றதும், ஜனங்கள் கைக்குழந்தையை இவரிடம் கண்டதும்,” மரியமே! உமது தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை,உம் தாயும் கெட்ட நடத்தை பிசகியவாறு இருக்கவில்லை.” என்று பழித்தனர். இதற்கான காரணத்தை குழந்தையிடம் கேட்கும்படி ஜாடை காட்டினார்.அதற்க்கு மக்கள் கைக்குழந்தையிடம் எப்படி பேசுவோம்? என்றனர். உடனே குழந்தை ஈஸா ,”நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடியானாக இருக்கின்றேன்! அவன் எனக்கு வேதத்தை கொடுத்திருக்கின்றான்; இன்னும் என்னை தூதராக ஆக்கியிருக்கின்றான்.” என்று குழந்தை பேசியது.(குர் ஆன் கூறும் இயேசுவின் முதல் அற்புதம்.) இதைதொடர்ந்து வரும் வசனம்,
“ அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ளவேண்டியதில்லை; அவன் தூயவன். அவன் ஒரு காரியத்தை தீர்மானித்தால், “ஆகுக!” என்றுதான் கூறுவான்; உடனே அது ஆகிவிடுகிறது.”
-திருக்குர்ஆன் அத்தியாயம் சூரா மரியம்.19:19-36.

nat.saravanan said...

சிவபெருமானின் பாடலை தமிழ் மொழியில் அழகாக விளக்கத்துடன் கொடுத்தமைக்கு நன்றி. சரவணன் நடேசன், புத்தனாம்பட்டி.